Member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 71
- Thread Author
- #1
கதைப்போமா 21
மேலும் ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. வீட்டில் யாரிடமும் அவன் சரியாகப் பேசவில்லை. மனைவி மகனிடமிருந்து கூடத் தூரம் நின்றான்.
“அப்பா ஏம்மா ஒரு மாதிரி இருக்காரு?? ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டேங்கறாரு?” என்று மகன் கேட்கும் கேள்விகளுக்கு, ஏதேதோ சமாதானம் கூறி மகனுக்கு ஆறுதலாக இருந்தவள். ராதிகாவின் துணையோடு அபிமன்யுவின் விஷயமாக அலைந்து கொண்டுதான் இருந்தாள்.
என்னதான் மனைவிமீது அவனுக்குக் கோவம் இருந்தாலும், ஆராதியா தனக்காகத் தான் பேசுகிறாள் என்று புரிந்தாலும். அவனால் சகஜமாக முதல் போலப் பழக முடியவில்லை. தன்னை நிரூபித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். தவறில்லாதபோது நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. அவன் தன் பங்கிற்கு அலைந்து கொண்டிருக்க. செந்தாமரையும், வக்கிலும், காவல்துறையும் அவர்கள் பங்கிற்கு ஏதாவது சாட்சிகள் கிட்டுகிறதா என்று ஆராய்ந்து கொண்டுதான் இருந்தார்கள்.
அவனுடைய பாராமுகம் ஆராதியாவை வலிக்கச் செய்து கொண்டிருந்தாலும். தன்னால் தான் அவனுக்கு இந்த நிலையோ?? தன்னுடைய துரதிஷ்டம் அவனைப் பிடித்துக் கொண்டதோ? என்று வெகுவாகக் கலங்கினாள்.
“தெரியுது அமுதவாணன். ஆனா ஏதாவது சி.சி. டிவி ஃபுட்டேஜ் கிடைக்குதான்னு பாருங்க” என்று பேசிக்கொண்டே திரும்ப, மொட்டை மாடியின் கதவைத் திறந்து கொண்டு வந்தாள் அவனுடைய மனையாள்.
“சரி பாருங்க. நான் அப்புறம் பேசுறேன்” என்று அலைபேசியை துண்டித்தவன். அதைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மொட்டை மாடி கைபிடிச்சுவரில் சாய்ந்து நின்றபடி கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே ஆழமாகப் பார்த்தான்.
அவன் அவளைத் தவிர்ப்பது தெரிந்து. அவளும் விலகிச் சென்று கொண்டிருக்க. இன்று தன்னைத்தேடி அவள் வருகிறாள் என்றால் ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்தான்.
“உங்கள ஹர்ட் பண்ணனுன்றதுகாக நான் எதுவும் பண்ணல. சாரி, நான் வேதனையிலும் நிராகரிப்பிலும் துடிச்சுக்கிட்டு இருக்கும்போது, கரம் கொடுத்து என்னைத் தூக்கிப் பிடிச்சது நீங்கதான். அப்பழுக்கில்லாத அன்பை காட்டுனதும் நீங்கதான். ஆனா உங்களை நான் கஷ்டப்படுத்திட்டேன். நான் நினைக்கிற என்னோட துரதிஷ்டம் தான் உங்களை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்துதுன்னு நினைக்கிறேன். நான் ரொம்பவே துரதிர்ஷ்டசாலி. எங்க அப்பாவ காவு வாங்கின மாதிரி, இந்த ரெண்டு வாரத்துல உங்களோட இத்தனை வருஷ நல்ல பேரை அழிச்சிட்டேன்” என்று அவள் அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது.
அவள் ஏற்கனவே அதை டைப் செய்து, வாய்ஸ் கன்வெர்ட்டரில் மாத்தி, அவனுக்கு ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க. தன் ஆணவத்தை கலைந்த ஆண்மகன், அவளை நோக்கித் தன் பாதங்களை எடுத்து வைத்து அருகில் சென்று அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
“தியா படிச்ச பொண்ணு மாதிரியா பேசுற??. விதியை நம்மளால மாத்த முடியாது. உங்க அப்பா இறந்து, உனக்கும் இந்த மாதிரிக் குரல் போகணும்னு விதி இருந்திருக்கு. யாரோ ஒரு பொண்ணு செஞ்ச தப்புக்கு நீயேன் உன் மேல பழியை போட்டுக்குற?. நீ என் வாழ்க்கைக்கு வரதுக்கு முன்னாடியே அந்தச் சனியனோட பார்வை என்னைப் பிடிச்சிருச்சு. இதுல நீ எதுவுமே பண்ணல. நீ எனக்காகத் தான் பேசினேன்னு எனக்குப் புரிஞ்சுது. ஆனாலும் கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடியல, அதுக்கு காரணம் நீ இல்ல. ஒரு சின்னப் பொண்ணு கிட்ட இப்படி ஏமாந்து, பேர கெடுத்துட்டு இருக்கேன் இல்லையா??. அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவதுன்னு தெரியாம, எங்க உன் கிட்ட காட்டிடுவேனோன்னு தான். உன் கிட்ட இருந்தும் ஆத்ரேஷ் கிட்ட இருந்தும் ஒதுங்கி இருக்கேன். அம்மா அப்பா கிட்ட இருந்து விலகி நிற்கிறதும் அதுக்காகத்தான். கண்டிப்பா இது எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்குள்ள உங்க யாரையும் ஹர்ட் பண்ண கூடாதுன்னு தான் நான் ஒதுங்கி இருக்கேன். என் குடும்பம் என்னை நம்புது. அது போதும் எனக்கு. நீ எனக்குக் கிடைச்ச வரம். சாபமில்லை. எதையும் நினைச்சு குழம்பிக்காத. எல்லாத்தையும் சரி பண்ணிட்டு நாம மூணு பேரும் சந்தோஷமா வாழத் தான் போறோம்” என்று கூறியபடியே அவளைப் பிரித்து நிறுத்தியவன். அவள் கண்களைத் துடைத்து விட்டான்.
“ஆனா என்கிட்ட இருந்து பிரிஞ்சு இருக்கிற இந்த நேரத்துல என்கிட்ட பேசுறதுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிச்சிட்ட போல” என்று லகுவாகப் பேசியபடி, சிரிக்க முயன்று அவளையும் சிரிக்க வைக்க முயற்சி செய்தான்.
அவனை அணைத்திற்கும் அந்த ஆறுதலே அவளுக்குப் போதுமானதாக இருந்தது போல. மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு நின்றாள். அவனுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது போலும்.
…………
நீதிமன்ற வளாகத்தில் முன்பு நின்ற அதே இடத்தில் அபிமன்யு நின்று கொண்டிருக்க. மீண்டும் இருதரப்பு வக்கீலும் தங்கள் வாதங்களை முன்னிறுத்தி வாதம் புரிய ஆரம்பித்தனர். காவல் அதிகாரிகளும் தாங்கள் சேகரித்த விஷயங்களைப் பகிர்வதற்காக முன்னாள் வந்து நின்றனர்.
“என்ன அவர் சொன்னதெல்லாம் விசாரிச்சிங்களா?” அதே பெண் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
“காலேஜ பொறுத்த வரைக்கும் அவருக்கு நல்ல பெயர் தான் யூவர் ஆனர். மேனேஜ்மென்ட் அவருக்குத் துணையா தான் வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. மாணவர்களில் சிலர் அவருக்குத் துணையாகவும். சிலர் அவருக்கு எதிராகவும் வாக்குமூலம் கொடுத்து இருக்காங்க” என்று அந்தக் காவல் அதிகாரி கூறும்போது அபிமன்யுவின் புருவம் இடுங்கியது.
“சிலர், பலர் இப்படி எல்லாம் பதில் வேண்டாம். சேகரித்ததை ரெக்கார்ட் பண்ணி இருக்கீங்கல்ல?“ என்று நீதிபதி கேட்க.
“அதை உங்க டேபிள் மேல சப்மிட் பண்ணிட்டேன் மேடம்” என்றதும் அவர் அந்த டேப் ரிக்கார்டரை எடுத்து ஹெட் போனில் மாட்டியபடி கேட்டுக் கொண்டிருக்க. அங்கு அமைதி நிலவியது.
“இந்த மூன்று மாணவிகளும் அந்தப் பெண்ணோட தோழிகளா?” என்று நீதிபதி கேட்க.
அவர் எதைக் கேட்க வருகிறார் என்பதை புரிந்து கொண்டு அந்தக் காவல் அதிகாரியும் அதற்குப் பதில் அளித்தார். “ஆமா மேடம் அவங்க எல்லாரும் சந்திரிகாவோட கிளாஸ்மேட் பிளஸ் பிரண்ட்ஸும் கூட. அவங்க தான் சோசியல் மீடியால இந்த விஷயத்தை பரப்பிச் சென்சேஷனல் ஆக்கியது” என்றார்.
“ம்ம்ம், நீ என்னம்மா சொல்ற?. அவரும் நீயும் க்ளோசா இருந்ததா சொல்றியே?அதுக்கு ஏதாவது ஆதாரங்கள் வச்சிருக்கியா?” என்று நீதிபதி சந்திரிகாவை பார்த்துக் கேட்டார்.
“இதுக்கெல்லாம் யாராவது ஆதாரம் வச்சிருப்பாங்களா மேடம்??, என் பிரண்ட்ஸ்களுக்கு மட்டும்தான் இதெல்லாம் தெரியும். மத்த யார் கிட்டயும் இதையெல்லாம் சொல்ல முடியாது. நான் சொல்லவுமில்லை. யாரா இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட தானே பகிர்ந்துப்பாங்க” என்று கண்ணீருடன் கூறினாள் சந்திரிகா.
“அவர் கல்யாணமானவர்னு தெரிஞ்சு, அவர் கூடப் போனது தப்புன்னு உனக்குத் தெரியலையா?. நீ ஒன்னும் சின்னக் குழந்தை இல்லையே?, காலேஜ் படிக்கிற பொண்ணு. தப்பு எது ரைட் எதுன்னு உனக்குப் பகுத்து ஆராய தெரியாதா?“ என்று நீதிபதி அவளிடமே கேட்டார்.
“காதலுக்கு கண்ணில்ல. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர விரும்பினோம். அதனால இதெல்லாம் எனக்குத் தப்பாவே தெரியல” என்றாள். அந்தப் பதில் நீதிபதிக்கு விட்டேற்றியாகத் தோன்றியது.
“வாய மூடு” என்று அவளைப் பார்த்துக் கர்ஜித்தான் அபிமன்யு.
“மேடம் இவள் திரும்பத் திரும்பப் பொய் சொல்றாள். உண்மையா இருந்தா தானே அதுக்கு ஆதாரங்கள் இருக்கும்? ஆசிரியர் மாணவிவுடைய புனிதமான உறவைக் கொச்சைப்படுத்துறாள்” என்று நீதிபதியைப் பார்த்தும் கத்தினான்.
“ஆடர்” என்று சுத்தியலை தட்டி விட்டு.
“உங்கள கேட்கும்போது நீங்கப் பதில் சொல்லுங்க அபிமன்யு” என்று கூறிய நீதிபதி, கல்லூரி நிர்வாகிகள் சிலரை விசாரித்துவிட்டு. போலீஸ் ஆஜர் படுத்திய சில சாட்சிகளையும் விசாரித்தார்.
கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும். தங்களுக்கு தெரிந்த வரையில் அபிமன்யுவின் மீது குற்றம் சாட்ட முடியாது என்றும். கல்லூரி சி.சி. டிவி பொறுத்த வரை. தவறாக எதுவும் பதிவாகவில்லை என்றும். இதனால் தங்கள் கல்லூரிக்குத் தான் தவறான பெயர் வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்கள்.
“இவங்க அவங்க கல்லூரி பேர் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக ப்ரொபசருக்கு துணையா நிக்கிறாங்க” என்றாள் சந்திரிகா.
“சரி, நீ என்னதான் அவர்கிட்ட இருந்து எதிர்பார்க்கிற? “ என்று நீதிபதி கேட்க.
“அவர என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க” என்றால் சந்திரிகா.
“அவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. உன்னை அவர் ஏமாத்தினாருன்னு நீ ப்ரூப் பண்ணா, அவருக்குத் தண்டனை கிடைக்கலாம். ஆனா நீ எதிர்பார்க்கிறது கிடைக்காது” என்று நீதிபதி திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும் இரண்டு வாரம் கழித்து வழக்கை ஒத்தி போட்டுவிட்டு நீதிமன்றம் கலைந்தது.
……….
“என்ன சார் இழுத்தடிச்சுக்கிட்டே இருக்காங்க??. அதுக்குள்ள சோசியல் மீடியால கிழி கிழின்னு கிழிக்கிறாங்க. கேக்குறதுக்கு கஷ்டமா இருக்கு. என் பையனுக்கு இதெல்லாம் தெரிய வந்துச்சுன்னா நான் உயிரோட இருக்குறதுல அர்த்தமே இல்ல சார்” என்று ஆதங்கமாகக் கூறினான் அபிமன்யு.
“கோர்ட்டு கேஸ்ன்னு வந்துட்டா இப்படித்தான் இழுத்து அடிக்கும் அபிமன்யு. அதுக்காகத் தான் முடிஞ்சளவுக்கு கேசாகாம பாத்துக்க முதல்லயே முயற்சி பண்ணோம். பாக்கலாம், சாட்சிகள் எல்லாம் உங்களுக்குத் தான் துணையா இருக்கு. ஆனா அந்தப் பொண்ணு விடாம நிக்கிறாள். வழக்கு எப்ப எப்படி திரும்பும்னு சொல்ல முடியாது. சாலிடான எவிடன்ஸ் அவளுக்குக் கிடைச்சுட்டா அவள் பக்கம் சாஞ்சிடும், இல்ல நமக்குக் கிடைச்சுட்டா வழக்கு நம்ம பக்கம் சாஞ்சிடும். அதைத் தேட வேண்டியது தான் நம்மளோட பொறுப்பு. ரெண்டு வாரம் தள்ளிப் போயிடுச்சுன்னு நினைக்காம, நிறைய நாள் நம்மல் நிரூபிக்கிறதுக்கு கிடைக்கிற வாய்ப்பா எடுத்துக்க முயற்சி பண்ணலாம்“ என்று அவனுடைய வக்கீல் அவனை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்.
…….