• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
71
கதைப்போமா 18


மனைவி வராமல் தாயும் தந்தையும் மட்டுமே வந்திருக்க. ஆராதியாவை எதிர்பார்த்து இருந்தவனின் புருவம் இடுங்கியது.

முதல் நாள்போல அவனைச் சந்திப்பதற்கு தடை விதிக்கவில்லை. ஆனால் நேரம் குறித்தார்கள்.

“பத்து நிமிஷத்துல பாத்துட்டு வந்துடனும்” என்று கூறி பெற்றவர்களை அனுப்பி வைத்திருக்க.

கொண்டு வந்திருந்த உணவை மகனிடம் கொடுத்து விட்டு, அவன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டார் அம்பிகா.

ஆனால் அவன் சிந்தனை முழுவதும் ஆராதியா ஏன் வரவில்லை என்ற நிலையில் இருந்தது. மகனின் ஞாபகங்களும் முதல் நாள் முழுவதும் அவனை அலைக்கழித்து இருந்தது. ஒருவேளை மகனுக்கு ஏதாவது உடல் நலம் சரியில்லையா??என்று தான் சிந்தித்தானே தவிர. தன் மனைவி தன்னை விட்டுச் செல்வாள் என்று அவன் சிந்திக்கவில்லை.

“அப்பா தியா எங்க??. ஆத்திரேஷுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லல்ல?” என்று கேள்வி எழுப்பினான்.

செந்தாமரை அவள் கூறியதைக் சொல்லி முடித்த நொடி. “ஏம்பா அவளை அனுப்பி வச்சீங்க?? அவள் சரியான பிட்ச் ப்பா. சரியான அரக்கி, தியாவை ஒரு மனுஷியா கூடப் பாக்க மாட்டாள். நேத்தே அவங்க எப்படி பேசினாங்கன்னு பார்த்தீங்கள்ள?? பொய்யான குற்றச்சாட்டை என் மேல திணிச்சிருக்காள். எவ்வளவு திமிரு இருந்திருக்கணும் அவளுக்கு??. அவளை மட்டும் நான் பார்த்தேனா, என் கையாலேயே கொன்னுடுவேன் அப்பா” என்றான்.

“முட்டாள்தனமா பேசாத அபிமன்யு. நேத்தும் அப்படித்தான் எமோஷனலா வெளியே கத்துற. ஏதாவது பேசி அவங்களை காம்ப்பரமைஸ் பண்ணலாம்னு பார்த்தா. நீ இப்படி கத்தும்போது அவங்க எப்படி இறங்கி போவாங்க??. சில நேரங்கள்ல சில விஷயங்களைப் பொறுமையாக தான் ஹேண்டில் பண்ணனும். எடுத்தோம் கவிழ்தோம்னு பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. தப்பு பண்ணாததுனால உனக்குக் கோவம் வருது. என்னால அதைப் புரிஞ்சிக்க முடியுது. ஆனால் இந்த நேரத்தில கோபப்படுறதுனால எதையும் சாதிக்க முடியாது. என்னாலான முயற்சியை நான் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆராதியா ஒரு முயற்சி பண்றேன்னு சொன்னாள். இப்ப மீடியாவுக்கெல்லாம் விஷயம் லீக் ஆகல, லீக் ஆச்சுன்னா நம்ம வீட்டு மானம் போகப் போறது உறுதி. அதைத் தடுப்பதற்கு அவள் ஏதோ முயற்சி பண்றானும்போது எனக்கு அதைத் தடுக்க தோணல” என்றார்.

தந்தை எவ்வளவு தான் கூறினாலும், தன் மனைவி அந்தப் பெண்ணிடம் சென்று பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவன் நினைத்ததை நடத்தும் நிலையில் அவனும் இல்லை.

காலையில் கவிச்சந்திரனிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு செந்தாமரை வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து வர. இப்பொழுது கவிச்சந்திரன் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

“அப்பா அவள் என்ன நம்புறாதானே?” என்று கேட்டான். அந்தக் குரலில் அவ்வளவு பரிதவிப்பு இருந்தது.

“உன்ன நம்புறதுனால தானே, அந்தப் பொண்ணு கிட்ட பேசுறதுக்காகப் போயிருக்காள். உன்ன நம்பலனா அவங்க அண்ணன் நேத்து கூப்பிடும்போது அவன் வீட்டுக்குப் போயிருப்பாள்” என்றார்.

மீண்டும் அவன் புருவம் நெருங்கியது.

“என்னங்க சொல்றீங்க?? குசுகுசுன்னு மூணு பேரும் தனியா போய்ப் பேசுனது இதுக்குதானா?? ஆனா நீங்களும் என் கூடத் தானே இருந்தீங்க?? உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது?” என்று அம்பிகா கேள்வி எழுப்பினார்.

“நமக்குத் தெரிய கூடாதுன்னு தானே தனியா போய்ப் பேசுறாங்க?. இதைத் தான் பேசி இருப்பாங்க. அவங்க பேசறது புரியலனாலும். அவங்க ரெண்டு பேரோட முகத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். கவிச்சந்திரன் முகமே சரியில்ல. இங்கு நடக்கிற சூழ்நிலையில யாரா இருந்தாலும் அப்படித்தான் இருக்கும். நாமும் பொண்ணு பெத்து வச்சிருக்கோம். நமக்கு அந்த நிலைமை வந்தாலும் இப்படித்தான் சிந்திப்போம். அத நான் தப்பு சொல்ல வரல ஆனா ஆராத்யா திடமா போக மாட்டேன்னு சொல்லிட்டாள். அவள் செய்கையில் செஞ்சது எனக்குப் புரியல. ஆனா அவளோட முக பாவனை எனக்கு அதை உணர்த்துச்சு” என்றார் செந்தாமரை.

அபிமன்யுவுக்கு தன் மனைவியின் மீது காதல் பெருக்கெடுத்தது. ஆனால் இந்த நிலையில் மாட்டிக் கொண்டானே தப்பித்து செல்ல முடியுமா??. அப்படியே சென்றாலும் இந்தச் சமூகம் என்னையும், என் குடும்பத்தையும், முன்பு போலப் பார்க்குமா??. நான் தவறு செய்யாதவன் எனும்போது, அதை நிரூபித்தால் மட்டுமே என்னால் தலை நிமிர்ந்து வாழ முடியும். அப்பொழுதும் முதல் போல இருக்க முடியுமா என்று தெரியாது. முதல் நாளிலிருந்து குழம்பிய அதே எண்ணங்கள் இப்பொழுதும் அவனுக்கு வந்து சென்றது.

“அப்பா வக்கீல் என்ன சொன்னாரு? முன்ஜாமின் நேத்தே வாங்கிட்டு வந்துட்டாரு. அப்புறம் ஏன் என்னை ஜாமீன்ல எடுக்கல?” என்று மகன் கேள்வி எழுப்ப.

“அவங்களும் வக்கீல் மூலமாக முன்ஜாமின் கொடுக்கக் கூடாதுன்னு ஃபைல் பண்ணி இருக்காங்க அபிமன்யு. ரொம்ப ஜாக்கிரதையா இதைக் கையாளனும் இல்லனா ரொம்ப கஷ்டமா போயிடும். உன் அப்பன் இன்னும் உயிரோட தான் இருக்கேன். நான் பாத்துக்குறேன். என் பையன் தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு நான் நம்புறேன். எல்லாத்தை விட முக்கியமா உன் மனைவி உன்னை நம்புறாள். அது போதும் அபி. நீ கவலைப்படாத” என்றார்.

“ஆத்ரேஷ் எப்படிப்பா இருக்கான். அவனுக்கு எதுவும் தெரியாதுல்ல?. தெரிஞ்சா ரொம்ப ஒடஞ்சிடுவான்பா” என்று ஒரு தந்தையாகப் பரிதவிக்க.

அதே நிலையில் தான் தந்தையாக அவரும் நின்றுகொண்டிருந்தார். தன் மகனின் நிலையை அவரால் பார்க்க முடியவில்லை. மகன் அவன் மகனை எண்ணி வருந்தினான். அவர் இருவரையுமே எண்ணி வருந்தினார்.

……….

முதல் நாளே கவனித்தவரையில், அந்த மருத்துவமனை, பெண்ணின் பெயர் எல்லாம் அவள் மனதில் பதிந்து இருந்தது. அதை மட்டும் நம்பிக் கொண்டு அந்த மருத்துவமனையைச் சென்றடைந்தாள். வரவேற்பில் கேட்டுக்கொண்டு அந்த வாடிற்கும் சென்று விட்டாள். உள்ளே சென்று பேசுவதற்கு தயக்கம் இருந்தாலும். ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு நெஞ்சை நீவி கொண்டு கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.

சந்திரிகாவின் தாயாருக்கு அவர் யார் என்று தெரிந்தது. ஆனால் அவளுக்குத் தெரியவில்லை. நன்றாகத் தான் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள். கைகளைக் குவித்தபடி உள்ளே நுழைந்தாள்.

“நீ எதுக்குமா இங்க வந்த?. இங்க இருந்து போ” என்று சந்திரிகாவின் தாயார் பேச.

“ஒரு நிமிஷம்மா” என்று செய்கையால் காட்டிவிட்டு, கையில் எழுதி வந்திருந்ததை வேகமாகச் சென்று சந்திரிகாவிடம் நீட்டினாள்.

அவள் பேசாமல் அவளிடம் பேப்பரை கொடுக்கும்போது தான். அவளுக்கு ஏதோ பொறி தட்டியது. புருவம் இடுங்க கையில் இருந்த பேப்பரை பிரித்துப் பார்த்தாள் சந்திரிகா.

“அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்களுக்கு ஒரு பையன் இருக்காங்க. கோர்ட்டு கேஸ்னு போக வேண்டாம். உங்களுடைய கேச வாபஸ் வாங்கிக்கங்க. நீங்க என்ன கேட்கிறீங்களோ அதைச் செய்ய நாங்க தயாரா இருக்கோம். பணம் உங்களுக்குப் பெரிய விஷயம் இல்ல. ஆனா ஒரு குடும்பத்தோட மானம் இதில் அடங்கி இருக்கு. சமூகம் அவரை மட்டும் இல்ல அவர் குடும்பத்தையே ஒதுக்கிடுவாங்க, தவறா பேசுவாங்க. அவருக்கு ஒரு பையன் இருக்கான். அவரையும் நாளைக்கு அதே தப்பான கண்ணோட்டத்தோடு பார்ப்பாங்க” என்று அதில் எழுதி இருந்தது.

சந்திரிகாவின் தாயாருக்கு அந்தப் பேப்பரில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

படித்ததும் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தாள் சந்திரிகா. ‘அழகா தான் இருக்காள். ஆனால் அழகா இருந்து என்ன பிரயோஜனம்?? வாய் பேச முடியாதல்லவா?’ அதனால் அடுத்த நொடி அவள் முகத்தில் ஏளனம் வந்து ஒட்டிக்கொண்டது.

“கேஸ வாபஸ் வாங்கிக்கிறேன் அவர் வாழ்க்கையிலிருந்து நீ விலகிடுறியா?? அவர்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிகுறியா??” என்று கேட்டாள் சந்திரிகா.

அதிர்ந்து விட்டால் ஆராதியா. அந்த வார்த்தையைத் தன் கணவனின் மீது தவறு இல்லை என்பதை நெத்தி பொட்டில் அடித்தார் போல உரைத்திருந்தது.

“சந்திரிகா என்ன பேசுற?” என்று அவருடைய தாய் அவளைக் கண்டிக்க.

“அம்மா அவர் கூட நான் வாழ்ந்திட்டேன்.. இந்த ஜென்மத்துல எனக்குக் கணவன்னா அது அவர்தான். அதனாலதான் அவரை அடைய முடியாமல் தற்கொலை பண்ணிக்கிட்டேன். இப்ப இவங்க விலகிப் போயிட்டா, இந்தக் கேஸ வாபஸ் வாங்கிடலாம்மா. கெட்டவன் கிட்டயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கும் நல்ல பேரு தான் அம்மா வரும்” என்று தாயிடமும் அவள் வாதிட்டாள்.

‘இது என்ன பேச்சு என்று தான் இருந்தது’ ஆராத்யாவிற்கு.

அவள் வேறுசில வார்த்தைகளை எதிர்பார்த்து வந்தாள். கண்டிப்பாகக் கணவனின் மீது தவறு இருக்காது. அப்படி என்றால் இவர்கள் வேறு ஏதோ எதிர்பார்க்கிறார்கள். பணமும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. வேறு என்ன என்று அவளால் கணிக்க முடியவில்லை என்றாலும். வேறு ஏதோ இருக்கிறது என்று நினைத்து வந்தவளுக்கு, சந்திரிகாவின் பேச்சு அதிர்ச்சியை தான் கொடுத்தது.

இருவரும் பேசிக் கொண்டிருக்க. அவள் அதிர்ந்து நின்று இருந்தாள். தாயை எதையோ சொல்லி அடக்கி விட்டுச் சந்திரிகா ஆராதியாவின் புறம் திரும்பினாள்.

“என்ன சொல்ற ஒத்துக்கிறியா??” என்று சந்திரிகா கேட்க.

“எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஆறு நாள் தான் ஆகுது” என்றாள்..

“அதெல்லாம் எனக்குத் தெரியாம ஒன்னும் இல்ல. எனக்கு அவர் வேணும் அவ்வளவுதான். என்ன தொட்டவரை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறதுல தப்பு இல்ல. நீ விலகிக்கிறனா நான் இந்தக் கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன். எங்கப்பா நான் என்ன சொன்னாலும் கேட்பாரு” என்றாள்.

“இவள் தொட்டவள்னா அப்பத் தாலி கட்டின நான்??”.

ஆனால் அவனுக்குத் தெரிந்த அபிமன்யு அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டானே?? இத்தனை வருடங்கள் திருமணம் வேண்டாம் என்று இருந்தவன்.

இப்பொழுதுதான் அவளைப் பார்த்ததும் சம்மதித்திருந்தான். தன்னையும் அவன் விரும்புகிறேன் என்றல்லவா சொன்னான்?? அப்படி இருக்கும் பட்சத்தில், இவளை எப்படி அவன் திருமணம் செய்து கொள்வான்? இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று இருந்தவன் மூன்றாவது திருமணம் செய்து கொள்வானா என்ன?’ என்று சிந்தித்தவள்.

“நான் ஒத்துக்கலாம். ஆனா அவரு ஒத்துக்க மாட்டாரு. அவருக்கு என்னைய கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்ல. அவங்க பையனுக்காகத் தான் என்னைப் பண்ணிக்கிட்டாரு” கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசினாள். உண்மையும் அதுதானே?.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
71
ஆனால் தாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்றெல்லாம் இந்தப் பெண்ணிடம் சொல்லக் கூடாது’ என்று அவளுடைய அனுபவ அறிவுக்கு புரிந்தது.



“அதெல்லாம் எனக்குத் தெரியாது என் வீட்டில் இருக்கிறவங்களை நான் காம்ப்ரமைஸ் பண்றேன். அதே மாதிரி, உன் புருஷனை காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியது உன்னுடைய கடமை. நீ சம்மதிக்கலனா கோர்ட்டு கேஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லா இடத்திலும் கிழித்து நாரடிச்சிடுவேன்” என்றாள்.



‘அவன் கிடைக்கவில்லை என்று சோர்ந்து தற்கொலை செய்து கொண்டாளா?? அல்லது அவனைப் பழி வாங்குவதற்காகவே தற்கொலை செய்து கொண்டாளா?? இவளுக்கு அவனின் மீது இருக்கும் அன்பை விட அவனைத் தன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறி தான் அதிகமாக இருக்கிறது’ என்று அவளுக்குப் புரிந்தது.



‘உண்மையான காதல் என்பது தாங்கள் விரும்பும் ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்களே தவிர அவர்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் பழி வாங்கும் நோக்கில் இறங்கி விடமாட்டார்கள்’.



‘தான் காதலிக்கும் பெண் தன்னை காதலிக்கவில்லை என்று ஆசிட் அடிப்பது. குத்திக் கொலை செய்வது. இப்படிப்பட்ட அரக்கர்கள் இருக்கும் சமூகத்தில். இதுபோலப் பெண்களும் இருக்கிறார்களா??’ என்று தான் அவளுக்கு எண்ண தோன்றியது.



அவ்வளவு நேரம்வரை சந்திரிகாவின் மீது இருந்த பரிதாப உணர்ச்சி கூட, இப்பொழுது மாயமாகக் காற்றில் கரைந்து போயிருந்தது. ஆனால் இப்பொழுது ஆவேசமாகப் பேசுவது சரி கிடையாது. இந்தப் பெண்ணிற்கு கவுன்சிலிங் தேவை என்று தோன்றியது. ஆனால் அதைச் சொன்னாலும் அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இந்தப் பெண் பேசுவதை பார்த்தாலே தன் கணவன் தவறு சொய்யவில்லை என்று தானே அர்த்தமாகிறது?? அது கூடவா இந்தத் தாய்க்கு புரியவில்லை. குழந்தைகளின் அன்பில் சில பெற்றோர்கள் இப்படித்தான் குருடர்களாகவும் செவிடர்களாகவும் அறிவற்றவர்களாகவும் மாறி விடுகிறார்கள் போல.



“நீங்கக் கேஸ் வாபஸ் வாங்கறேன்னு சொல்லுங்க நான் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசுறேன்” என்று டைப் செய்து அந்தப் பெண்ணிடம் காட்டினாள்.



“உனக்கு ஒரு நாள் தான் டைம். நாளைக்கு இதே நேரத்தில் உன் புருஷன் டைவர்ஸ் ஒத்துக்கிட்டார்னா??நான் கேஸ வாபஸ் வாங்கிடுறேன்” என்று கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கூறினாள் சந்திரிகா.



அந்தப் பேச்சே அபத்தமாக இருந்தது. ‘உன் புருஷன்” என்ற வார்த்தைக்கு வார்த்தை கூறுபவள். தன்னைப் பிரித்து, தன் கணவனாக அவனை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். இந்தப் பெண்ணுக்கு அறிவு என்பதே இல்லையா?? என்று தான் தோன்றியது. ஆனாலும் அதைச் சொல்லாமல், அவள் சொன்ன அந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு காவல் நிலையத்தை நோக்கிச் சென்றாள்.



இதற்குள் கல்லூரியில் இருக்கும் சந்திரிகாவின் தோழிகளால் விஷயம் சிறிது சிறிதாகச் சோசியல் மீடியாவில் கசிய தொடங்கியிருந்தது. ஆனால் அது இவர்களின் பார்வைக்கு இன்னும் வரவில்லை.
 
Member
Joined
May 9, 2025
Messages
57
No other way to explain that stupid girl, only virgin test should be done to prove
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top