• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
71
கதைப்போமா 17

பெண்களுக்காகவும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்காகவும் இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் பல பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்தாலும், சில பெண்கள் அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சந்திரிகாவும் தவறான ஒரு அணுகு முறையைச் செயல்படுத்திருக்கிறாள்.

உண்மையே ஜெயிக்கும், வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் ஏட்டில் தான் இருக்கிறது. பணம் இருக்கும் இடங்கள் ஜெய்ப்பதும், ஆதாரங்கள் இருக்கும் இடங்கள் வெல்வதும் இப்பொழுது வாடிக்கையாக்கிவிட்டது.

பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்றப்பட்ட ஃபோக்சோ சட்டத்தையும்

பெண்கள் மட்டுமல்லாமல், சில நேரங்களில் அவர்கள் குடும்பத்தாரும் அந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிற அவல நிலை இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது.

தவறு செய்யாமல் தவறு செய்தவராகச் சித்தரிக்கப்படுவதும், அதற்கான தண்டனையை அனுபவிப்பதும் எவ்வளவு கொடுமையான விஷயம் என்று அபிமன்யு உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தான். சில நேரங்களில் சிலருக்கு பாவம் பார்ப்பது கூட நமக்குத் தலையிடியாக வந்து விடிந்து விடும். பாவம் அவனுக்கும் அப்படிதான் விடிந்து விட்டது.

இதைப் போல ஒரு மோசமான அனுபவத்தை அவன் தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை. இனிமேல் பார்க்கப் போவதும் இல்லை என்று தோன்றியது. ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால அமர்ந்திருக்கிறான். தன்னை ஆசானாக ஆசிரியராகத் தோழனாக பார்த்த மாணவ சமுதாயம் இப்பொழுது தன்னை கேவலமாகப் பார்க்கும். ஆனால் அவனுக்கு உண்மை ஜெயிக்கும் என்று நம்பிக்கை இருந்தது. வாய்மை எப்பொழுதும் வெல்லும் என்று நம்புபவன் அவன்.

“அம்மா, அப்பா எங்க போனாங்க?? நமக்கு அம்மா வந்துட்டாங்க இனிமேல் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து இருப்பாங்கன்னு ரொம்ப ஹாப்பியா இருந்தேன். இப்ப பார்த்தா அப்பாவ காணோம்?? எனக்கு அப்பா வேணும்மா. அவங்க எப்ப வருவாங்க?” என்று மகன் கேட்ட கேள்விக்கு அவளுக்கு அழுகை தான் வந்தது.

“அழாதீங்க அழாதீங்க, உங்களுக்கும் அப்பா வேணுமா அதனாலதான் அழறீங்களா??, அப்பா சீக்கிரம் வந்துருவாங்க”, என்று மகனே தாயுமானவனாக மாறி அவளை ஆறுதல் படுத்தி இருந்தான்.

சாதாரண நேரமாக இருந்திருந்தால், அதை ரசித்திருப்பாள். ஆனால் இப்பொழுது, இந்த நிலையில் அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவளுடைய கணவன் அவளைப் பார்த்த பார்வை, அவளுடைய மனதின் அடி ஆழம் வரை சென்றது. அவன் தவறு செய்திருப்பான் என்று அவளால் ஒரு சதவீதம் கூட நினைக்க முடியவில்லை. அவன் பார்வையிலும் உண்மைத்தன்மை அப்பட்டமாக வெளிப்பட்டது. அவனிடம் பேசி விட்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் அதற்குக் கூட யாரும் வழி வகுக்க வில்லை.

அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் இன்னும் என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் அவள் அதை நம்ப தயாராக இல்லை.

“என் பொண்ணு யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்டுட்டு, இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு இருக்கான். அவன கல்யாணம் பண்ணிக்க முடியாத விரக்த்தில என் பொண்ணு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டாள். இவனெல்லாம் ஆசிரியர் தொழிலுக்கே இழுக்கானவன். கண்டிப்பா இவன் மேல கேஸ் பைல் பண்ணனும். மத்ததெல்லாம் நான் கோர்ட்ல பாத்துக்கிறேன்” என்று கூறிய சந்திரிகாவின் தந்தை அவள்மீது உயிரையே வைத்திருப்பவர். அடுத்து பெண்ணின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றாலும், மகளுக்காகப் போராடத் துணிந்து விட்டார்.

இந்தச் சமுதாயத்தில் எத்தனையோ பெண்களுக்கு இழுக்கு நடக்கும்போது. பெண்ணின் மானம் போகக் கூடாது என்று மூடி மறைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், மகளுக்காகக் காவல் நிலையத்திற்கும், கோர்ட்டுக்கும் செல்லத் தயாராக இருந்தார் அந்தப் பாசமிகு தந்தை. அந்தத் தந்தையின் பாசத்தை கூட அந்தப் பெண் புரிந்து கொள்ளவில்லை.

இங்கு அபிமன்யுவுக்கு, அவன்மீது சாட்டப்பட்ட குற்றம் இயர்புடையதாக இல்லை. “வாய்க்கு வந்ததை பேசாதீங்க, உங்க பொண்ணு பொய் சொல்றாள். நியாயமா பார்த்தா நான்தான் அவள் மேல கேஸ் கொடுத்து இருக்கணும். என் விதி இப்படி வந்து இங்க உக்காந்துட்டு இருக்கேன். அவளை மட்டும் நான் நேர்ல பார்த்தேன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. எவ்வளவு பொய்யான அலிகேசன் என் மேல கொடுத்திருக்காள். நீங்க என்ன சொல்றது என்னோட கேரக்டர் பத்தி??. நான் சொல்றேன், உங்க பொண்ணு பொண்ணா இருக்கறதுக்கே தகுதி இல்லாதவள்” என்று அவனும் தன் பக்கத்து நியாயத்தை அழுத்தமாக எடுத்துக் கூறினாலும். அவன் ஆண் என்ற ஒரே காரணத்திற்காக அவனுடைய பேச்சுக்கள் அந்த இடத்தில் எடுபடவே இல்லை. போலீசார் கூட அதை நம்ப தயாராக இல்லை.

“ஆராத்யா, இங்க நடக்கிறது எல்லாம் பார்த்தா எனக்கு என்னமோ சரியா படல. நீ எதுக்காகப் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுன்னு அலையனும்?. நீ நம்ம வீட்டுக்கு வந்துரு. ஆத்ரேஷ வேணா கூட்டிட்டு போயிடலாம்” என்றான் கவிச்சந்திரன்.

தன் சகோதரனை நிமிர்ந்து பார்த்தவள். ‘இல்லை’ என்பது போலத் தலையாட்டினாள்.

“இந்தக் கேஸ் ரொம்ப தப்பா போகுதுமா. இப்படியே போனா சரி இருக்காது. நியூஸ் பேப்பர், டிவி சேனல்னு எல்லாத்துலயும் போட்டுக் கிழிக்கிழின்னு கிழிப்பாங்க நாரடிச்சிடுவாங்க. பத்தாததுக்கு உன்னையும் அதுல சேர்த்துப்பாங்க. இதெல்லாம் ஒரு ஆறு நாளைக்கு முன்னாடி நடந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சு போய் நிக்கிறேன்” என்றான் கவி.

“அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணா” வாய் அசைத்தபடி சேய்கையும் சேர்த்து செய்தாள்.

“மாப்பிள்ளை அப்படி பண்ணி இருக்க மாட்டாரு கவி” என்று விசாலாட்சி கூற.

அவனுக்கு அந்த நம்பிக்கை அற்றுவிட்டது. முதலில் அவனுக்கும் இருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணின் பெற்றவர்கள் வந்து பேசப் பேச அவன் மனது தடுமாறியது. அவன் விசாரித்தவரையில் இதுபோல எதையுமே அவன் கேள்விப்படவில்லை. ஆனால் பெண்ணும் பெண்ணைப் பெற்றவர்களும் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்?? பெண்ணிற்கு இழுக்கு வரும் என்று தெரிந்தும் அவர்கள் காவல் நிலையம், நீதிமன்றம் என்று செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்றால், ஏதோ உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தம்?. ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனாக அவனும் அந்தக் கண்ணோட்டத்தில் சிந்தித்தான்.

ஆனால் ஆராதியா இறங்குவதாகவே இல்லை. “கஷ்ட நேரத்துல தான் அண்ணா நமக்கு யார் துணையா இருக்காங்கன்னு பார்க்க முடியும். எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு. இன்னைக்கு நான் அவரைச் சந்தேகப்பட்டு விட்டுட்டு போயிட்டா. ஒருவேளை அவர் தப்பு செய்யாம இருந்திருந்தாலும் அவரை எல்லாரும் தப்பா பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. நான் அவருக்குத் துணையா நின்னா மட்டும் தான் அவர் மேல தப்பு இருக்காதுன்னு ஒரு சிலராவது சிந்திப்பாங்க” என்றால் ஆராத்யா.

“ஒரே மாசத்துல உனக்கு அவர் மேல நம்பிக்கை வந்திருச்சா??, ஆனா ஒரு பொண்ண பெத்தவங்க எதுக்காகப் பொய் சொல்லணும்?? அந்தப் பொண்ணு உயிரை விடப் போயிருக்காள். ஒருவேளை இந்நேரம் அந்தப் பொண்ணு செத்துருந்தா?? அப்ப நிரூபிக்கக் கூட முடியாது. கண்டிப்பா பெரிய தண்டனையா கிடைச்சிருக்கும். அவர் ஜெயில்லயும் நீ அவர் வீட்லயும் வாழ்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையாகியிருக்கும். இப்பயும் நிலைமை மோசமா தான் போயிட்டு இருக்கு. நீ நம்ம வீட்டுக்கு வந்துரு இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்றான்.

“நான் வரமாட்டேன் அண்ணா. அவருக்குத் துணையா பக்க பலமா நிப்பேன். எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு. ஒருவேளை என் நம்பிக்கை பொய்யாச்சுனா?? அப்பயும் அந்த குழந்தைக்குத் தாயாக இருப்பேனே தவிர. உனக்குத் தங்கையா வரமாட்டேன். எனக்குத் திருமணம் ஆகிடுச்சு. நான் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டது அந்த குழந்தைக்காகத் தான். அவருக்காக இல்ல. அதுக்கப்புறம் தான் அவரை எனக்குப் பிடிச்சது” என்று ஆராதியா தன் முடிவில் திடமாக நின்று விட்டாள். அவள் சொல்வதும் விசாலாட்சிக்கு சரி என்று தான் பட்டது.

ஒருவேளை தன் மருமகன் தவறு செய்யவில்லை என்றால், தன் மகனின் இந்த முடிவு தவறாக மாறிவிடும். ஒருவேளை செய்திருந்தால் தன் மகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அவரும் மகளுக்காகப் பேசினார். ‘அவள் சொல்வதுதான் நியாயம்’ என்று கூறினார். அவன் கோபப்படாமல் பொறுமையாக எடுத்துக் கூற முயற்சித்தான். ஆனால் வேலைக்காகவில்லை. தங்கைக்காக அங்கேயே இருந்தான். அபிமன்யுவின் தந்தை ஒரு மூலையில் இருந்தார். இவன் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தான். ஏனோ இதைப் பற்றிப் பேச அவனுக்கு மனம் வரவில்லை. பேசினால் வார்த்தைகளை விட்டு விடுவானோ என்ற பயம் அவனுக்கு. தங்கையிடம் பேசுவது என்பது வேறு, சம்மந்தியிடம் பேசுவது என்பது வேறு. ஒருவேளை தங்கை சொல்வது போல அவளின் நம்பிக்கை பொய்க்காமல் இருந்தால்??. இப்பொழுது தான் அவசரகதியில் ஆத்திரத்தில் வெளியிடும் வார்த்தைகள், பின்னாலில் தவறாக முடிந்து விடும். ஆராதியாவை தாயுடன் அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்க முயன்றான். ஆனால், ‘மகன் தனியாக இருப்பான். அவனுக்குத் துணையாக என் கணவன் வீட்டிலேயே நான் இருந்து கொள்கிறேன்’ என்று கூறிவிட்டாள்.

மகனை உறங்க வைத்தவள் விடிய விடிய விழித்திருந்தாள். கட்டிய கணவன் தவறான குற்றசாட்டில் தனித்திருக்க. அவளுக்கு நிம்மதியாக உறக்கம் வருமா என்ன?? நாளையபொழுது எப்படி மாறுமோ தெரியாது?? ஆனால் எப்படியும் இந்த வாரத்திற்குள்ளாக இது கசிந்து விடும், பேப்பர் நியூஸ் சேனல் என்று வர ஆரம்பித்து விடும். யூடுப் சேனல்களில் தன் பங்கிற்கு கிழி கிழி என்று கிழிப்பார்கள். அதை எப்படியாவது தடுக்க வேண்டும். அவர் உள்ளே இருக்கிறார். அவருக்காக நாம் தான் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.

ஆராதியாவிற்கு அந்தப் பெண்ணைச் சென்று பார்க்கலாமா?? என்று எண்ணம் தோன்றிவிட்டது. சாட்சிக்காரன் கால்களில் விழுவதை விடச் சண்டையிடுபவனின் காலில் சென்று விழலாம் என்று தோன்றி விட்டது.

காலையில் மகனைத் தயார்படுத்தி அவனுடைய தேவைகளை முடித்துவிட்டு, கீழே மகனையும் அழைத்துக் கொண்டு வந்தாள். அபிமன்யுவின் தாய் தந்தையும் கிளம்பி இருந்தார்கள் கையில் கூடையுடன். அவளைப் பார்த்ததும் தடுமாறி நின்றார்கள்.

இவர்களிடம் வாய் பேச முடியாமல் எப்படி பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் எழுதி எடுத்து வந்திருந்தாள். மாமனாரின் முன்பு அந்தப் பேப்பரை நீட்டினாள்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
71
அவர் வாங்கி படித்துப் பார்த்தார். “என்னம்மா சொல்ற?? அந்தப் பொண்ணு கிட்ட போய் என்ன பண்ண போற??“ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவரின் கையில் இருந்த பேப்பரை வாங்கி அவசரமாகக் கிறுக்கினாள். “கேச வாபஸ் வாங்க சொல்லப் போறேன் மாமா” என்று இருந்தது.

“போலீஸ்காரன் சொல்லியே கேட்கலையேமா?? அவங்களுக்கு காம்பன்சேஷன் கொடுக்கிறேன்னு நானும் தனிப்பட்ட முறையில் பேசினேன்மா, அப்பயும் அவங்க கேட்கல. என் பொண்ணோட மானத்தை காசைக் கொடுத்து விலை பேசறீங்களான்னு கேக்குறாரு. ரெண்டு பேருமே காம்ப்ரமைசா போறதுக்கு போலீஸ்காரங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டாங்க. நீயும் பார்த்த தானேமா??. நீ போய்ப் பேசினா மட்டும் அந்தப் பொண்ணு கேட்டுடுமா என்ன??” என்று கேட்டார் செந்தாமரை.

அவளுக்கும் அதெல்லாம் தெரியாமல் ஒன்றும் இல்லை. ஆனால் ஏதாவது முயன்று தானே ஆக வேண்டும்??. முயற்சி திருவினையாக்கும் என்று பழமொழி இருக்கிறது அல்லவா??, மனதில் நினைத்ததை அவள் அப்படியே கூறவில்லை.

“முயற்சி செய்து பார்க்கிறேன்” என்று மட்டும் எழுதினாள். ஆனால் மகனை யாரிடம் விட்டுச் செல்வது என்று தான் அவளுக்குக் குழப்பமாக இருந்தது. செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவனை அழைத்துச் செல்ல முடியாது. சிறுபிள்ளை என்றாலும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நமக்கே பதில் தெரியாது.

தந்தையைப் பற்றிய பேச்சு எனும்போது ஆழமாக அதைக் கவனித்து உள்வாங்கிக் கொள்வான். விஷயம் தெரிந்தால், வெகுவாகப் பாதிக்கப்படுவான். அதனால் அவனை வீட்டில் விட்டுச் செல்வதுதான் முறை என்று பட்டது. அன்றும் வீட்டில் வேலை செய்பவர்களிடமே அவனை விட்டுவிட்டு பெற்றவர்கள் மகனைத் தேடியும் அவள் அந்தப் பெண்ணைத் தேடியும் இரு வேறு திசைகளில் பயணப்பட்டனர்.

அவளுடைய முயற்சி ஜெயிக்குமா, தோக்குமா?? என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் ஏட்டில் நிறைய பழமொழிகளை எழுதி வைத்திருக்கின்றனர். எல்லா பழமொழிகளும் எல்லா நேரத்திலும் உபயோகப்படுமா அல்லது செயல்படுமா என்று நம்மால் சொல்ல முடியாது. இவர்கள் வாழ்க்கையையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top