• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
67
கதைப்போமா 15

ஆத்ரேஷ் உறங்கி விட்டிருந்தான். அவளுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. அவன் பால்கனி சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க. அவளும் எழுந்து அமர்ந்தாள்.

“என்ன தியா தூக்கம் வரலையா?” என்று கேட்டான் அபிமன்யு.

‘ஆமாம்’ என்பது போலத் தலையாட்டினாள். அவன் கைகளை நீட்டி வா என்று அழைக்க. மலர்ந்த முகத்துடன் கட்டிலிலிருந்து இறங்கியவள். அவனை நோக்கி நடந்து வந்தாள். அவனும் எழுந்து கொண்டான்.

தன் வலது கரத்தை அவளை நோக்கி நீட்டினான். அவன் எதற்காக அப்படி நீட்டுகிறான் என்று முதலில் அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும் அவன் கரத்தைத் தனது இடது கைக்கொண்டு பிடித்தாள். அந்தக் கரத்தைத் தன் கரங்கள் கொண்டு அழுந்தப் பிடித்தவன். தன்னருகில் இழுத்து நிறுத்திக் கொண்டான்.

“என்ன ஆச்சு ஏன் இன்னும் தூக்கம் வரல??. நீ வருத்தப்படும்படியா அம்மா ஏதாவது சொன்னாங்களா??” என்று கேட்டான்.

அவசரமாக இல்லை என்பது போலத் தலையாட்டினாள். அதில் மெல்லிய புன்னகை கீற்று வெளிப்படுத்தியவாறு.

“எங்க அம்மாவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவங்களால வாயை மூடிகிட்டு இருக்கவே முடியாது. இந்தத் திருமணத்தில் அவங்களுக்கு அவ்வளவா உடன்பாடில்லை. அதனால கண்டிப்பா புலம்பலாவது இருக்கும்” என்றான்.

அவன் சரியாகத்தான் கணித்து கூறுகிறான். “இந்தா அதை எடு, இந்தா காய்கறி நறுக்கி கொடு. இதை இப்படி பிரட்டு. உங்க மாமாவுக்கு எடுத்துட்டு போய்க் குடு. சாப்பாடு எடுத்துட்டு போய் வை” இப்படி எது பேசினாலும் அதில் கோபம் அப்பட்டமாகவே தெரியும். அசட்டையும் அதிகமாக இருக்கும். அவள் பெயரைச் சொல்லி அழைக்கவும் மாட்டார். அவளிடம் வேலைகளைச் சொல்லிவிட்டு பிறகு புலம்பிக் கொண்டே தான் அவர் வேலையைச் செய்வார். வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமையல் வேலையைப் பொறுத்த வரை அவர் தான். இவளும் ஒத்தாசைக்கு இருந்தாள். மகனும் அவளுடனே இருந்தான்.

“இவன் என்ன உன் கூட இப்படி ஒட்டிகிட்டான்?. என் பையனுக்குப் போட்ட சொக்குப்பொடியில கொஞ்சம் இவனுக்கும் தூவீவிட்டுட்டியா?. அவங்க அம்மா இருந்திருந்தால் கூட இப்படி இருந்திருக்க மாட்டான். எல்லாம் புதுசா வந்த ஜோரு. வருஷம் கடந்தா திரும்பிக் கூட பாக்க மாட்டான். ஏம்மகன் மட்டும் என்ன??. மூணு வருஷம் காஞ்சு போயிருந்தனால, கழனி தண்ணிய பார்த்தவுடனே ஓடிட்டான். மூணு மாசம் கழிஞ்சா எல்லாம் வழிக்கு வந்துருவாங்க” இப்படி பல புலம்பல்கள் அவரிடம் இருந்தது.

முதலில் அவளுக்குப் புரியவில்லை என்றாலும் தன் கணவனை அவர் மாடு என்கிறாரா??. மாடு தானே கழனி தண்ணீரை குடிக்கும்??. அவர் மகனை அவர் மாடு என்கிறார். அதில் நாம் தலையிடக் கூடாது. ஆனால் தன் மகனை தன்னிடமிருந்து பிரிய விடக் கூடாது. குழந்தைகளுக்கு என்ன வேண்டும் அன்பு மட்டும்தானே?? அதுதான் அவளிடம் கொட்டி கிடக்கிறதே?? அதனால் என் மகனும் என்னை விட்டுப் போகமாட்டான்’ என்று நினைத்தவளுக்கு கணவனின் ஞாபகமும் வந்தது. அப்படி என்றால் அவர் உன்னை விட்டுச் சென்று விடுவாரா அல்லது மூன்று மாதங்கள் கழித்தால் மாமியார் சொல்வது போலக் கண்டுகொள்ள மாட்டாரா??. என்று அவள் மனம் அவளிடம் கேள்வி கேட்க. மகனும் என்று தானே கூறினேன் அப்படி என்றால் அதில் மறைப்பொருள் மறைந்து இருக்கிறது அல்லவா??. கணவனும் மகனும் என்று தானே அர்த்தம்??. அவரும் என்னை விட்டு செல்லமாட்டார்?’ என்று நினைத்தவள். இப்பொழுதும் அதை நினைத்துக் கொண்டு அவனையே விழி எடுக்காமல் பார்த்திருந்தாள்.

“என்ன அப்படி பார்க்குற. சரியா சொல்லிட்டேனா??. உனக்கு அவங்க கிட்ட அனுப்பவும் அஞ்சு நாள் தான். மிஞ்சிப்போனால் ஒரு மாசம் இருக்கும். ஆனா கிட்டத்தட்ட எனக்கு முப்பத்தி ஒரு வருஷம். எனக்கும் எங்க அக்காவுக்கு அவங்கள பத்தி நல்லா தெரியும். அப்பாவுக்கும் தெரிஞ்சதனாலதான் இவங்களை திருத்த முடியாதுன்னு அவர் அமைதியாயிட்டாரு. சின்ன வயசுல பிளாஸ்திரி போட்டு அவங்க வாய ஒட்டலாமானு கூட நான் யோசிச்சு இருக்கேன். அந்த அளவுக்கு வாயைத் திறந்தாங்கன்னா மூடமாட்டாங்க” என்று அவன் சிரித்துக் கொண்டே கூறினான்.

அவள் முகத்திலும் மலர்வு வாடி இருக்கவில்லை. அவன் கூறிய தோரணையில் இன்னும் அழகாகப் புன்னகை தான் வந்தது.

“உன்னோட மௌனமே அது உண்மைதான்னு எனக்குப் புரிய வச்சுருச்சு. சரி விடு, என்று அவள் தோள்களில் கரத்தை வைத்துத் தன்னோடு அணைத்தார் போலப் பிடித்துக் கொண்டான். அவளுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டாள்.

“அங்க பாரு” என்று அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் அவள் பார்த்தாள். அங்கு இரண்டு குருவிகள் மரத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தது. முதலில் ஆர்வமாகப் பார்த்தவள். பிறகு வெட்கத்தோடு தலை கவிழ்ந்தாள். அந்த வெட்கம் அவனுக்கு எதையோ புரிய வைக்க. கரத்தை அப்படியே கீழே இறக்கியவன் அவள் இடுப்பை வாகாகப் பிடித்துக் கொண்டான். அவளுக்குக் கூச்சமாக இருந்தது.

அந்த ஸ்பரிசத்தில் தொடுகையில் அவள் நெளிய ஆரம்பிக்க. “ஈசி தியா, நான் ஒன்னும் பண்ண போறது இல்ல. இதுக்கு மேல முன்னேறமாட்டேன் பயப்படாத. ஆனா நாம அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறதுக்கு கொஞ்சம் இதுபோலத் தொடுகைகள் அணைப்புகள் இதெல்லாம் தேவை. புரிதல் அது நமக்கு வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ஆனா நீ சொன்ன காரணங்கள் அப்படியே தான் இருக்கு. அது எனக்கு நல்லாவே புரியுது. நம்மளோட வாழ்க்கையை நாம பொறுமையா ஆரம்பிச்சுக்கலாம் அவசரம் இல்லை. ஆனா கணவன் மனைவியெனும்போது கொஞ்சமே கொஞ்சம் நெருக்கம் இருக்கணும். இல்லன்னா நம்மள சுத்தி இருக்கவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வரும். நமக்குள்ள இந்த இடைவெளி இருக்கிற வரைக்கும் நமக்குள்ள அன்னியோன்யம் லாக் ஆகும். அதனால இதையெல்லாம் ஈஸியா எடுத்துக்கோ” என்றான்.

அவளுக்கும் அவன் சொல்ல வருவது புரிந்தது. அவளுக்குக் கூச்சமாக இருந்த போதும் அருவருப்பாக இல்லை வேண்டாம் என்று தோன்றவும் இல்லை. மனதிற்கு பிடித்த கணவன் தானே, அதனால் பிடித்தும் இருந்தது. மனதிற்குள்ளே ரசித்துக் கொண்டாலும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு அவளுக்குத் தயக்கம் இருந்தது. பெண்களுக்கே உரிதான தயக்கம் தான். குழலி சொன்னது போல மகன் இருக்கும் தயக்கமும் கூடுதலாக இருந்தது. அதை அபிமன்யுவாலும் சரியாகவே புரிந்து கொள்ள முடிந்தது. அவனும் அதற்கு மேல் முன்னேறவில்லை தவறான தொடுதலும் இல்லை சாதாரணமான தொடுகை மட்டும் தான். ஆனால் பெண்ணவளுக்கு அது கூச்சத்தை கொடுத்தது. அவனுக்குமே தயக்கங்கள் இருந்தது. ஆனால் இருவருமே இதையெல்லாம் கடந்து தானே வந்தாக வேண்டும்.

“ உண்மைய சொல்லனும்னா எனக்குமே தயக்கமா இருக்கு. உன்கிட்ட ஃப்ரீயா மூவ் பண்ணும்போது. முதல் வாழ்க்கை என் ஞாபகத்துல வரக்கூடாதுன்றதுல நான் தெளிவா இருக்கேன். அதுக்கு கொஞ்சம் ட்ரையல் வேணும் தான். ஆனா நான் உன்னை விரும்புகிறேன்றதும் உண்மை” என்று அபிமன்யு கூறிய நொடி நிமிர்ந்து அவன் கண்களை ஆழமாகப் பார்த்தாள்.

“என்ன என் கண்ணைப் பாக்குற?? நான் உண்மைய சொல்றேனா? இல்ல பொய் சொல்றேனான்னு பாக்கறியா?“ இதழில் தேங்கிய புன்னகையோடு கேட்டான் அபிமன்யு. அதில் இன்னும் வசீகரிக்கும் விதமாக இருந்தான்.

இல்லை என்று தலையாட்டியவள். அவன் முன்னால் ஒற்றை கையை நீட்டி. பிறகு இரண்டு கைகளையும் சேர்த்து நான்கு விரலால் இதயம் வடிவில் காட்டியவள். ஐ லவ் யூ, என்று உதட்டசைத்து காட்டினாள். அதில் தன்னை மறந்தவன், அவளைக் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் பதித்தான். அவள் கண்களை மூடி அதை ஆத்மார்த்தமாகப் பெற்றுக் கொண்டாள். இருவருமே சிறிது நேரம் களையவில்லை. அந்த மோனநிலையிலிருந்து வெளிவரவில்லை.

………..

மேலும் இரண்டு நாள் சென்று இருக்க. ரிதன்யா குடும்பத்தோடு தன் வீட்டிற்கு கிளம்பி இருக்க. வீடு கல்யாண பரபரப்பிலிருந்து சகஜ நிலைக்கு மாறிக்கொண்டிருந்தது. மாமியாரின் குத்தல் பேச்சுகளைக் கண்டு கொள்ளாமல் அவருக்கு உதவியாக இருந்தாள் ஆராத்யா.

சந்திரிகா அந்த இரண்டு நாளும் கல்லூரிக்கு வராமல் இருக்க. அவனும் கல்லூரியில் நிம்மதியாக இருந்தான் எனலாம்.

ஆராத்யாவும் மகனைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு அவளும் அலுவலகத்திற்கு கிளம்பி இருந்தாள்.

ஒரு வகுப்பறையில் நின்று பாடம் நடத்திக் கொண்டிருந்தான் அபிமன்யு. அப்பொழுது கல்லூரி தாளாளரும் அவருடன் காவல் துறையைச் சேர்ந்தவர்களும் அந்த வகுப்பறையுள் நுழைந்து கொண்டிருக்க. அபிமன்யு மாணவர்கள் உட்பட அனைவரும் திகைத்து விட்டனர்.

அவனுடைய அனுபவத்திற்கு இதுவரை கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ் நுழைந்ததில்லை. அதுவும் வகுப்பறைக்கு வரும் அளவிற்கு என்ன நடந்தது??. என்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்க.

“இங்க அபிமன்யுன்றது யாரு??” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் காவல் அதிகாரி.

“சார் இது கிளாஸ் ரூம் என்னோட ஆபீஸ் கேபினுக்கு வர வச்சு பேசிக்கலாம். நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்க என் பேச்சைக் கேட்காம வரீங்க” என்று கல்லூரியின் தாளாளர் கூறிக் கொண்டிருக்க.

“பொறுமையா பேசறதுக்காக வரல சார் இவர் அரெஸ்ட் பண்றதுக்காக வந்திருக்கோம்” என்று கூறிய நொடி அபிமன்யு திகைத்து நின்று விட்டான். மாணவர்களின் நிலையும் அதுதான்.

“அரெஸ்டா??, என்னையா??, எதுக்காக??” அதிர்ந்தாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கேட்டு நின்றான் அபிமன்யு.

“நீங்க இந்தக் காலேஜ்ல படிக்கிற சந்திரிகான்ற பொண்ணை காதலிச்சு ஏமாத்தி இருக்கீங்க. இப்ப வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. அதனால மனம் உடைஞ்ச அந்தப் பொண்ணு சூசைட் லெட்டர் எழுதி வச்சுட்டு சூசைட் பண்ணிக்கிட்டாள். இப்ப ஹாஸ்பிடல்ல உயிருக்குப் போராடிகிட்டு இருக்காள். அவங்க பேரண்ட்ஸ் உங்க மேல கேஸ் கொடுத்து இருக்காங்க” என்றார்.

அபிமன்யு அதிர்ந்து விட்டான். “என்ன இது?” என்ற ரீதியில் அனைவருமே திகைத்து விழித்தனர்.

அங்கிருந்த மாணவர்கள் பாதி பேருக்கு அது பொய் என்று தெரியும். சந்திரிகா ஆசிரியரின் பின்னோடு திரிவதும், அவர் அதைப் பொருட்படுத்தாமல் செல்வதும் நிறைய பேரின் கண்களில் பட்டுத் தான் இருந்தது. பேராசிரியர்கள் உட்பட.

“ஆனால் சந்திரிகாவிற்கு என்ன ஆனது எதற்காக இந்தப் பெண் இந்த முட்டாள்தனம் செய்தாள்?? அதுவும் பேராசிரியரை எதற்காக இப்படி வசமாக மாட்டி விட்டாள்??” என்ற ரீதியில் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருக்க.

“சார் நீங்க ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அப்படியெல்லாம் எதுவுமே இருக்காது. அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு??. ஆபத்து ஏதும் பெருசா இல்ல இல்லையா?. பொறுமையா விசாரிங்க. எப்பவும் உண்மையை மறைக்க முடியாது” என்று அப்பொழுதும் அபிமன்யு திடமாகவே கூறினான்.

“சார் அபிமன்யு ரொம்ப பொறுப்பான பேராசிரியர். அவர் அதுபோல எல்லாம் பண்ண மாட்டாரு உண்மையிலேயே மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் தான் நடந்திருக்கணும் நானும் உங்ககிட்ட அதான் அப்போதிலிருந்து சொல்லிட்டு இருக்கேன். அவருக்குன்னு இங்க ஒரு ரெபுடேஷன் இருக்கு. இந்தக் காலேஜுக்குன்னும் ஒரு ரெபுடேஷன் இருக்கு. எல்லாத்தையும் நீங்க ஸ்பாயில் பண்றீங்க” என்று தலைமை தாளாளரும் கூற.

“அரெஸ்ட் வாரண்ட் வாங்கிகிட்டுதான் இங்க அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்.

யாருக்கு தெரியும் எல்லார் எதிர்க்கையும் நல்லவர் வேஷம் போடுறாரோ என்னவோ??. இங்குப் பல ஆண்களுக்கு நிறைய முகங்கள் இருக்கும் இவரும் அதுபோல ஒரு மனிதர்போல. அந்தப் பொண்ணு தெளிவா எழுதி வச்சிருக்கு. நம்ம எதிர்க்க நல்லவர் மாதிரி நடிச்சுட்டு. உங்களுக்கெல்லாம் தெரியாம அவளைக் காதலிச்சாரோ என்னவோ??” என்ற ரீதியில் போலீஸ் பேசிக் கொண்டிருக்க.

சில மாணவிகள் அதை நம்பி தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

இவர்களெல்லாம் சலசலத்துக் கொண்டு இருந்தாலும். அந்தக் காவலர் வந்த வேலையைத் திறம்பட செய்தார்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
67
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்ன நடக்கிறது இங்கே??. ஏன் எதற்காக அவள் மாற்றிச் சொல்ல வேண்டும்?, எதற்காக அவள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்??. இல்லை இதில் ஏதோ தவறு இருக்கிறது. இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்?’ என்று நினைத்தவன். மீண்டும் காவல்துறையினருக்கு விளக்கம் கூற முற்பட்டான்.



“சார் நீங்க ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன். அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. அவளோட ஃப்ரெண்ட்ஸ கேட்டுப் பாருங்க. உண்மை என்னன்னு அவங்களே சொல்லுவாங்க. நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்ல. நான் கல்யாணம் ஆனவன். இங்க இருக்க ஸ்டுடென்ட்ஸ் எனக்கு வெறும் ஸ்டுடென்ட்ஸ் மட்டும் தான். நீங்கத் தப்பா மீன் பண்ணிட்டு இருக்கீங்க” அவன் பிதற்றிக் கொண்டிருக்க.



அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை. தலைமை கல்லூரியின் தலைமை நிர்வாகம் எவ்வளவோ எடுத்துக் கூற முயற்சிக்க. காவல்துறை அதைக் கேட்கவும் இல்லை.



அதற்குள் சிறு கூட்டம் கூட ஆரம்பித்தது. அபிமன்யுவின் தோழர்கள் அவனைப் பற்றி நன்றாகத் தெரியும் அவன் அப்படி இல்லை என்று அவனுக்காகப் பரிந்து பேசினார்கள்.



ஆனால் காவல்துறை அரெஸ்ட் வாரண்ட்டுடன் வந்திருக்கும்போது அதற்கு மேல் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. கல்லூரி நிர்வாகத்தைப் பொறுத்தவரை அது அவர்கள் கல்லூரிக்கு இழுக்கு. அதனால் அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தனர். அவன்மீதும் நம்பிக்கை இருந்தது.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top