• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
67
கதைப்போமா 14


அவள் பெயர் சந்திரிகா. அந்தக் கல்லூரியில் தான் நான்காம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். முதல் வருடத்தில் அவனைப் பார்க்கும்போதே அவள் மனதில் இடம் பிடித்து விட்டான். ஆனாலும் பேராசிரியர் என்று அவள் அடங்கிப் போக அவள் மனம் அடங்க மறுத்தது.

அவனுக்கும் அத்தனை வயது போலத் தெரியவில்லை. அவள் பார்க்கும்போது கல்லூரி படிக்கும் மாணவன்போல தான் இருந்தான். முதலில் அவனை ஆசிரியர் என்றே அவள் நினைக்கவில்லை. பிறகு தான் தெரிந்தது.

அவளைப் போல இன்னும் பலரும் அவன்மீது மையலாக இருக்க. அனைவரையும் அவளே அடக்கி அமைதி படுத்தினாள். அதற்குள் ஒரு சிலர் அவருக்குத் திருமணமாகி விட்டது. அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். வெளியில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்து இருக்கிறோம் என்று கூறி இருந்தனர். அப்பொழுதும் அவன்மீது வைத்த காதலை திரும்பி எடுக்காமல் முயற்சி செய்து கொண்டே இருந்தாள். அவளால் அது முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவள் மனம் சோர்ந்து விட்டது. ஆனாலும் அவனைவிட மனமில்லை.

அவள் அழகின் மீது இருக்கும் கர்வத்தினால் அபிமன்யுவை எப்படியும் தன் வலைக்குள் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தாள்.

காலமும் நேரமும் அவளுக்கு உறுதுணை செய்வது போல. அபிமன்யுவின் மனைவியும் இறந்துவிட. அவன் தனிமரம் ஆகினான். அதில் சந்தோஷப்பட்ட பலரில் அவளும் ஒருத்தி. இரண்டாம் தாரம் என்றெல்லாம் நினைக்கவில்லை. பரவாயில்லை என்று நினைத்து அவன் பின்னோடு இன்னும் சுற்ற ஆரம்பித்தாள்.

“உங்க பையன நான் என் பையன் போலப் பார்த்துப்பேன் சார். என்னோட காதல் உண்மையானது. அதனாலதான் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று கூறிய நொடி நின்று திரும்பி அவளை முறைத்து பார்த்தான்.

“மை லைஃப் இஸ் நாட் எ கேம். நான் ஒன்னும் பிளே கிரவுண்ட் இல்ல. யார் வேணா வந்து விளையாடிட்டு போகலாம்னு, நான் ஒன்னும் நேம் போட மாட்டல. ஸ்டே அவே ஃப்ரம் மி. இல்லனா மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லி உன் மேல ஆக்ஷன் எடுக்க வேண்டியது இருக்கும்” என்று அவனும் பல முறை அவளை மிரட்டி இருக்கிறான். ஆனால் சந்திரிகா அடங்க மறுத்துக் கொண்டே இருக்கிறாள்.

அவனைப் பொறுத்தவரை அவள் ஒரு பொருட்டே இல்லை. அவன் அந்த கல்லூரிக்குப் பேராசிரியராக வந்த நாளிலிருந்து அவளைப் போலப் பலரைக் கடந்து வந்து விட்டான். பத்தில் ஒன்றாகத் தான் அவளை அவன் நினைத்தான். பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்யும்போதே மாணவர்களை மாணவர்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று மனதளவில் சங்கல்பம் எடுத்துக்கொண்டு. உன்னதமான ஆசிரியர் தொழிலுக்கு வந்தவன் அவன். வயது கோளாறில் பிதற்றும் இதுபோல மாணவிகளை எச்சரிக்கையோடு கடந்து விடுவானே தவிர அவர்களை ஒரு பெரிய பொருட்டாக அவன் நினைக்கவில்லை.

ஆனால் அதேபோல அவளையும் நினைத்தது அவனுடைய தவறுதான். எல்லா விரல்களும் ஒன்று போல இருப்பதில்லை. அதேபோல எல்லா மாணவ மாணவிகளும் ஒன்று போல அமைவதில்லை. அவர்களின் செயல்பாடுகளும் ஒன்று போல இருப்பதில்லை. அவளும் மற்றவர்களைப் போல் அல்ல. தான் ஒன்று நினைத்து விட்டால். எப்படியாவது அது நடந்தே ஆக வேண்டும் என்று நினைப்பவள். அவளைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட நான்கு வருட காதல். முதல் மனைவியும் இறந்து இரண்டாவது வாய்ப்பு அவளுக்கு இருக்கிறது என்று நினைக்கும்போது. அவளை விடக் குறைவான(குறையுள்ள) ஒரு பெண்ணை அதுவும் ஊமையான ஒரு பெண்ணை அவளுக்கு போட்டியாகத் திருமணம் செய்து கொண்டு வந்ததை அவளால் சுத்தமாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சிறுத்தையின் சீற்றத்தோடு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய தோழிகள் அவளை ஆற்ற நினைத்தார்கள்.

ஆனாலும் எதுவும் பயனளிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“ உனக்கு எதுக்குடி இரண்டாம் தாரம் எல்லாம்? நீ இருக்குற அழகுக்கும் அறிவுக்கும் பணத்துக்கும் நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வருவாங்கடி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு. இந்த ஆளை விட்டுத் தள்ளு. இதையே பிடிச்சிட்டு தொங்காத. இந்த ஆள் எல்லாம் ஒரு ஆளா?? பாக்குறதுக்கு வயசு தெரியலன்னா அதுக்குன்னு வயசு இல்லன்னு ஆயிடுமா?? அவர் வயசு என்ன? உன் வயசு என்ன?? நீ இன்னும் ஸ்வீட் சிக்ஸ்டீன் போலத் தான் இருக்க. அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தைக்குத் தாயாக போறியா?? உன்ன அறிவாளின்னு நினைச்சேன் முட்டாள்தனமா யோசிக்கிற” என்று ஏதேதோ மாறி மாறிக் கூறினாலும். யார் பேச்சும் அவள் காதில் விழவே இல்லை.

தன் நிலை இலவு காத்த கிளிபோல ஆகிவிட்டது. தன் காதலனை நேற்று வந்தவள் பறித்துக் கொண்டு செல்வதா??. தான் காத்திருக்கிறேன் என்று தெரிந்தும் இன்னொருத்தியை திருமணம் செய்த இவனைச் சும்மா விடுவதா?? என்று மனது வன்மத்தை தேக்கி நிறுத்தி வைத்துக் கொண்டது.

தோழிகள் கூறிய அறிவுரைகள் எல்லாம் அவள் காதில் கூட ஏறவில்லை என்றால், எப்படி அது மூளையை சென்று அடையும்??. அவள் ஒரு தனி உலகத்தில் அவன்மீது காதலை சுமந்து கொண்டு இருந்தவள். இப்பொழுது வன்மத்தை சுமக்க ஆரம்பித்தாள். சம்பந்தமே இல்லாமல் அபிமன்யுவை திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணின் மீதும் அவளுடைய வன்மம் திரும்பியது. தன்னை கஷ்டப்படுத்தி விட்டு இவர்கள் சந்தோஷமாக இருப்பதா??. இல்லை இவர்களை ஏதாவது செய்தாக வேண்டும். தன்னை அவமானப்படுத்தி புறக்கணித்தவனை பழி வாங்க வேண்டும். அது மட்டுமே அவள் மனதில் ரீங்காரமாக ஓடிக்கொண்டிருக்க. மாலை அவனை தனியாகச் சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ மற்ற ஆசிரியர்களோடு சேர்ந்து வாகனம் எடுக்கச் செல்ல. காலை உதறி கொண்டவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அவனைப் பின் தொடர ஆரம்பித்தாள்.

வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு அலைபேசி வர அது தன் மகனிடமிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டவனின் முகத்தில் மகனின் நினைவில் புன்னகை அரும்பியது. மகனிடம் கதைப்பது என்பது அவனுக்கு எப்போதுமே பிடித்த ஒன்று. அமைதியாக வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு. அதை ஏற்றான். “அப்பா வரும்போது எனக்கும் அம்மாவுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரீங்களா?” என்று கேட்டான் ஆத்ரேஷ்.

“இத அம்மா கேட்டாங்களா, இல்ல ஆத்ரேச் குட்டி கேக்குறீங்களா??, எங்க உங்க போன அம்மா பக்கம் திருப்புங்க” என்று அபிமன்யு கூற . குழந்தை தாயின் பக்கம் திருப்பிக் காட்டினான்.

அவள் முகத்தில் கலவையான உணர்வுகள். அதில் வெட்கமும் சேர்த்து இருந்தது. “நான் சொல்லல. ஆத்ரேஷுக்கு தான் தேவை” என்று உதட்டசைத்து காட்டினாள்.

“அப்பா எனக்குத் தான் தேவை. ஆனா அம்மாவை விட்டுட்டு நான் சாப்பிட மாட்டேன் சோ அம்மாவுக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க. அம்மாவுக்கு என்ன ப்லேபர் பிடிக்கும்னு கேட்டு அது வாங்கிட்டு வாங்க” என்று கூறிய மகனைக் கர்வமாக அபிமன்யு பார்க்க. அன்பாக ஆராதியா பார்த்தாள்.

அதற்குள் தன் வாகனத்தை யாரோ தட்டுவது தெரிய. அவன் கவனம் அலைபேசியிலிருந்து வாகனத்தின் வெளியே பார்த்தது. சந்திரிகாவை பார்த்ததும் புருவம் இடுங்கியது
 
Member
Joined
Dec 23, 2024
Messages
67
“அப்பா வந்து, உங்க ரெண்டு பேரையும் சேர்த்து கூட்டிட்டு போய் உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிறேன். இன்னும் பைவ் மினிட்ஸ்ல வந்துருவேன். கால கட் பண்றேன் ஆத்ரேஷ்” என்று கூறியபடியே, மகனின் பதிலுக்குக் காத்திருக்காமல் அலைபேசியை கட் செய்திருந்தான். அவள் இன்னும் ஓங்கி தட்டிக் கொண்டிருக்க. காரை எடுக்க முடியாமல் அவளுடைய இருசக்கர வாகனம் அவன் காருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தது. அவன் காரின் ஜன்னலைக் கீழே இறக்காமல், கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான்.



“எதுக்காகக் காரை இப்படி தட்டிக்கிட்டு இருக்க??, என்ன வேணும்?? எதுனாலும் காலேஜ் கேம்பஸ் குள்ள கேக்கணும். இப்படி ரோட்ல அங்க இங்கனு வந்து பேசக் கூடாது. உனக்கு முன்னவே நான் இதைப் பத்தி வார்ன் பண்ணி இருக்கேன்” என்று அழுத்தமாகக் கூறினான் அபிமன்யு.



"ஹொவ் டேர் யு??. சின்னப் பொண்ணு தானே, இவளால என்ன செய்ய முடியும்னு நினைச்சிட்டீங்களா??. ஒரு பொண்ணு நினைச்சா என்ன வேணாலும் பண்ணுவாள். கோட்டையும் கட்டுவாள், அந்தக் கோட்டையை அழிக்கவும் செய்வாள்” என்று சந்திரிகா வீர வசனம் பேசிக் கொண்டிருக்க.



“ஹும்ஹும்”, என்று அவன் அசட்டையாகக் கேட்டு வைத்தான். அதில் அவளுக்கு இன்னும் கோபம் எட்டிப் பார்த்தது.



“ நாலு வருஷமா நான் உங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கேன். என்ன ரொம்ப ஈஸியா ஒதுக்கித் தள்ளிட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்குறீங்க. நான் உங்களுக்காகக் காத்துட்டு இருக்கேன்னு கொஞ்சம் கூட உங்களுக்குத் தோணலையா? “ என்று அவள் காட்டமாகக் கேட்டு வைக்க.



“டூ யூ ஹவ் எனி சென்ஸ்??. கல்யாணம் ஆணவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க? உனக்கு அறிவு இல்லையா??. அதுவும் நான் ஒரு ஆசிரியர். குருவ, குருவா மட்டும் பார்க்கத் தெரிஞ்சுக்கோ??. உன்னை சொல்லிக் குத்தமில்ல உன் வயசை சொல்லணும். ஏதோ வயசு கோளாறு உளறிட்டு இருக்க சரியாயிடும்னு பார்த்தா?? இப்பயும் அதையே பிடிச்சிட்டு இருக்குற???. கல்யாணம் பண்ணிக்கிறேன்னா போய் உங்க வீட்ல கேளு. அவங்க நல்ல பையனா பார்த்துப் பண்ணி வைப்பாங்க. கல்யாணம் ஆணவன் பின்னாடி இப்படி சுத்தாத. என் பையன் கிட்ட வேற பைவ் மினிட்ஸ்ல வரேன்னு சொல்லி இருக்கேன். முதல்ல உன் வண்டிய எடு” என்றான்.



“நான் இவ்வளவு உருக்கமா பேசிக்கிட்டு இருக்கேன். காதலுக்காக நீதி கேட்டுப் போராடிகிட்டு இருக்கேன். நீங்க என்னனா உங்க பையன பத்தி பேசிட்டு இருக்கீங்க?” என்று அவள் கத்திக் கொண்டிருக்க.



“ வாட் காதலா??. நீ பண்றதுக்கு பேரு காதல் கிடையாது அதுக்கு பேரு கள்ள காதல். அது எப்படி உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனவனை காதலிக்க தோணுதுன்னு எனக்குத் தெரியல??. ப்ரொபசரை ப்ரொபசரா மட்டும் பாருங்க. நான் உனக்கு முன்னமே இதைச் சொல்லிட்டேன். திரும்பவும் சொல்றேன். நான் இந்த ஆசிரியர் தொழில, தொழிலா பார்க்கல. சேவையா பாக்குறேன். ரொம்ப விருப்பப்பட்டு எங்களோட ஃபேமிலி பிசினஸை கூடப் பாக்காம இந்தக் காலேஜுக்கு வந்துட்டு இருக்கேன். தேவை இல்லாம நீ ரொம்ப அதிகமா என் லைஃப்குள்ள மூக்க நுழைக்கிற. ஒழுங்கா வண்டியை எடு, இல்லனா இடிச்சு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. என்னோட மாணவர்கள் என்னோட குழந்தைங்க போல, அதனால தான் அமைதியா கடந்து போயிட்டு இருக்கேன். ஏதோ சின்னப் புள்ள தெரியாம பேசுறேன்னு பார்த்தா??. திரும்பத் திரும்ப வந்து டார்ச்சர் பண்ற. அவ்வளவுதான் இதுக்கு மேல ஏதாவது பேசின?? நான் நானா இருக்க மாட்டேன். இப்பயும் உன்னை என்னோட ஸ்டூடண்டா நினைக்கிறதுனால தான் வார்னிங்கோட விட்டுட்டு போறேன்” என்று கூறியவன். அவளுடைய பதிலுக்கு கூடக் காத்திருக்காமல், சென்று வாகனத்தில் ஏறிவிட்டான்.



அவளுக்கு இன்னும் அவமானப்பட்ட உணர்வு. அவன் வாகனத்தில் ஏறியபிறகு தான் சுற்றத்தை பார்த்தாள். ஆங்காங்கே நின்று ஒரு சிலர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆரன் அடித்துக் கொண்டே இருந்தான்.



அவள் வாகனத்தை எடுப்பதாகத் தெரியாமல் போக அவன் பின்னால் வாகனத்தை எடுத்துச் சற்று ஒடித்து வளைத்துத் தன் வாகனத்தை எடுத்திருந்தான்.



“நல்ல மூடுல வந்தேன். எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டாள். எனக்குன்னு எங்க இருந்து தான் வராங்கன்னு தெரியல?? காலேஜுக்கு பெத்தவங்க படிக்க அனுப்புனா இவங்களுக்கு காதல் ஒரு கேடு. கூடப் படிக்கிற பசங்கள காதலிக்கிறதே தப்பு. இதுல ப்ரொபஸரை காதலிக்கிறாளுங்க. அதுவும் கல்யாணமானவனை. அவன் பிதற்றிக் கொண்டு போனது போலவே, அங்கிருந்த ஒரு சிலரும் தங்களுக்குள் புலம்பிக்கொண்டே தான் சென்றார்கள்.



வீடு செல்லும் வரை தான் சந்திரிகாவை வறுத்து எடுத்துக்கொண்டிருந்தான். வீட்டின் உள்ளே அவன் வாகனம் நுழையும் போதே. மகன் காரை நோக்கி ஓடி வர. மனைவி வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அவன் வாழ்க்கையே பூர்த்தியான நிம்மதி அவனுக்கு. அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் சந்திரிகா காணாமல் பறந்து போயிருந்தாள். அந்த இடத்தை ஆராதியாவும் ஆத்ரேஷும் பிடித்திருந்தார்கள்.



மகனைத் தூக்கிக் கொண்டு மனைவியைப் பார்த்தான். அவள் வாசலிலேயே சாய்ந்து முகம் மலர்ந்து நின்றுகொண்டிருந்தாள்.



அன்று அவள் அலுவலகத்தில் பார்த்தது போல, எந்த வித ஒப்பனையும் இல்லாமல் அழகோவியமாக நின்றிருந்தாள் ஆராத்யா. அவன் வாக்கு கொடுத்தது போல இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான். மகனுக்கு வாக்கு கொடுத்தது போல ஐஸ்கிரீமையும் வாங்கி கொடுத்தான்.



திருமணத்திற்கு முன்னே அவர்களுக்குள் புரிதல் இருந்தது. இப்பொழுது திருமணத்திற்கு பிறகு அந்தப் புரிதல் பன்மடங்கு ஆகியிருந்தது. அவனுடைய பிடித்தம் பிடித்தமிண்மை எல்லாம் அவள் ரிதன்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள. அவன் அவளிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு தன் மனதிலும் அதை நிறுத்திக் கொண்டான்.



ஆனால் இவர்கள் வாழ்க்கையை புயலெனப் புரட்டி போட ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள்.
 
Member
Joined
May 9, 2025
Messages
55
Better inform Chandrikas parents through college. Bad behavior. Who is the new villi or villain entering. Pavam ethana hurdles they have to face in life
 
Member
Joined
Dec 23, 2024
Messages
67
Better inform Chandrikas parents through college. Bad behavior. Who is the new villi or villain entering. Pavam ethana hurdles they have to face in life
Something the face on our society that is the content of the story I am also the teacher some bad teachers are there but some student abusing teachers life
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top