• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
40
கதைப்போமா 11

“நான் திருமணத்தைப் பத்தி யோசிக்கவே இல்ல. அதுக்கு அடுத்த கட்டத்தைப் பத்தி எல்லாம் சுத்தமா யோசிக்கல. எனக்கு உண்மையிலேயே எக்ஸ்பெக்டேஷன் எதுவும் இல்லை. இத சொன்னா வியர்டா இருந்தாலும், அதுதான் உண்மை. என்னோட குரல் எப்ப போச்சோ, அப்பவே எல்லாத்தையும் வெறுத்துட்டேன். வாழ்க்கையே வாழப் பிடிக்கலைன்னு கூடச் சொல்லலாம். திருமணன்ற ஒன்றை நான் எதிர்பார்க்கல. கல்யாணமே பண்ணிக்காம அப்படியே இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா இருக்க முடியாதுன்னு வீட்டு சூழல் எனக்கு உணர்த்திகிட்டே இருந்தது. பத்தாததற்கு வந்த வரன்கள் எல்லாம், பொண்ணுக்கு வாய் பேச முடியாததுனால, நகை அதிகமா போடுறீங்களா, இல்ல வரதட்சனை அதிகமா கொடுக்குறீங்களானு கேட்டுக் கேட்டு என்னோட மனசு மட்டும் உடையல, என்னோட உணர்வுகளையும் சேர்த்து உடைச்சிட்டாங்க. நீங்க என்கிட்ட பேசிட்டு போனதுக்கு அப்புறம் தான் எனக்குள்ள கனவுகள் ஆசைகள் எல்லாம் துளிர் விட ஆரம்பிச்சுது. நீங்க எனக்கு ஒரு நல்ல கணவனா இருப்பீங்கன்ற நம்பிக்கை வந்திருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி இவனுக்கு நான் ஒரு நல்ல அம்மாவா இருக்கணும்னு நினைக்கிறேன். சோ எதுக்கும் அவசரப்பட வேண்டாம். எனக்காக யோசிக்காதீங்க. குழந்தை இருக்கும்போது இதெல்லாம்??. அதுவும் ஒரு சங்கடம் தான். அதுக்காகக் குழந்தையை வேற ரூமுக்கு அனுப்புங்கன்னு சொல்லமாட்டேன். இவன் என்னோட குழந்தை. என் குழந்தை என் கூடத் தான் இருப்பான். குழந்தை பெத்துக்கிட்டவங்க யாரும் தாம்பத்தியம் இல்லாம ஒன்னும் இல்லையே?? அதுக்கான நேரம் காலம் வரும்போது அது நடக்கட்டும்.

இப்ப எதுக்கும் அவசரப்பட வேண்டாம்” என்று அதை டைப் செய்து இருந்தாள்.

இவ்வளவு நேரம் எதையோ டைப் அடிக்கிறாள் என்று ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு. அவள் முடித்த பிறகுதான் அவள் என்ன எழுதி இருக்கிறாள் என்று புரிந்தது.

அதைப் பார்த்ததும். அவன் முகமும் சந்தோஷத்தில் நிரம்பியது. அவன் தனக்கு மட்டும் ஒரு துணையை தேடவில்லை. தன் மகனுக்கும் ஒரு தாயை தேடி இருந்தான். அது நல்லபடியாக அமைந்துவிட்டது என்ற சந்தோஷம் அது.

“சாரி” சற்று முன்னோக்கி அமர்ந்தவன். அவள் கைகளைத் தன் கைகளில் வைத்துக் கொண்டான்.

“உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ஒரு நல்ல துணைவியை தேடுறதை விட, ஒரு நல்ல தாயை கொண்டு வந்து இருக்கேன்னு நிம்மதியா இருக்கு. கண்டிப்பா உன்னோட உணர்வுகளைப் புரிஞ்சுகிட்டு. உனக்கு ஒரு நல்ல கணவனா நானும் இருப்பேன்” என்று வாக்குபோலக் கொடுத்தான். அவள் இதழ் விரித்துச் சிரித்தாள்.

“அப்ப, இப்ப என்ன பண்ணலாம்?? தூங்கலாமா?? இல்ல பேசிட்டு இருக்கலாமா??” என்று அபிமன்யு கேட்க.

அவள் நன்றாகத் தலையாட்டினாள்.

இதழ்களில் புன்னகையுடன் எழுந்தவன். அவள் நெற்றியில் மெல்ல முட்டிவிட்டு. அப்படியே அங்கேயே ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு. கட்டிலுக்கு மறுப்புறம் சென்றான்.

கைகளைக் குலுக்கினாள், அவன் திரும்பிப் பார்த்தான்.

“நான் உடைமாற்றிக் கொள்ளவா?” என்று அவள் செய்கை மொழியாள் கேட்க.

“என்ன இது, என்ன கூப்பிடுறதுக்கு புது வழி கண்டுபிடிச்சிட்டியா?, அப்ப ஆத்ரேஷை எப்படி கூப்பிடுவ?” என்று கேட்டான். அவள் அதற்கும் சிரித்து வைத்தாள். பிறகு மீண்டும் அவள் அதே செய்கையைச் செய்து காட்ட.

முதலில் அவனுக்கு அது புரியவில்லை. பிறகுதான் புரிந்தது.

“சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இது உன் வீடு, உனக்குப் பிடித்தது போல நீ இருக்கலாம்” என்றான். அதற்கும் அவளிடம் மலர்ந்த புன்னகை மட்டுமே.

அந்தப் புன்னகையே வசிகரிக்கும் விதமாகத்தான் இருந்தது. அவளை அப்படி மலர்ந்த முகமாகப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

புது இடம் என்பதால், சிறிது நேரம் புரண்டு புரண்டு படுத்து விட்டுத் தான் அவள் உறக்கத்தை தழுவினாள்.

அவளின் நிலை அவனுக்கும் புரிந்தது. பெண்களே பாவம் தான் என்று தோன்றியது. ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பழகி விட்டு, இன்னொரு இடத்திற்கு வந்து, அதையே பழக்கம் ஆக்கிக் கொள்வது எவ்வளவு சிரமமாக இருக்கும்.

இவர்கள் வாழ்க்கையை ஏன் அப்படி மாற்றி வைத்திருக்க வேண்டும்?? நம் சமூகத்தை எண்ணி வருத்தம் கொண்டான் அபிமன்யு.

“அப்ப அதுக்காக நீ அவங்க வீட்டுக்குப் போவியா??, அவளுக்கே அவங்க வீட்ல இடம் இல்ல. சம்பாதிச்சு போடும்போதும் அவளை உண்டு இல்லன்னு பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்க அண்ணி. நீயும் அவங்க வீட்டுக்குப் போனா அவ்வளவுதான்’ என்று மனசாட்சி குழலியை ஞாபகப்படுத்தியது.

அதை நினைத்துப் பார்த்தவனுக்கு சிரிப்பு வேறு வந்தது. கட்டில் ஆடாமல் இருப்பதே அவள் உறங்கி விட்டாள் என்பதை அவனுக்கு எடுத்துரைக்க. மெல்ல எழுந்து சாய்ந்து அமர்ந்தவன். மனைவி மகன் இருவரையும் பார்வையால் நிரப்பிக்கொண்டிருந்தான். இருவரையும் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.

கிட்டத்தட்ட மூன்று வருடமாகப் பிரம்மச்சரியத்தில் இருக்கிறான். அவளுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு இருந்தது. அதற்காக உடனே அவளை அணுகவும் முடியாது. அவனுக்குமே தயக்கம் இருந்தது. அதே சமயத்தில் அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க எண்ணினான். இத்தனை வருடம் காத்திருந்தவனால், இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்க முடியாதா என்ன?, முடியும்.

அவனால் முடியும் என்று தோன்றியது. இதுனால் வரை திருமணமே வேண்டாம் என்று இருந்தவன் தானே??. காலத்திற்கும் இப்படியே இருக்கலாம் என்று எண்ணி இருந்தவன் தானே??. இப்பொழுதும் இருக்க முடியும் என்று நினைத்தவனுக்கு மனைவியையும் மகனையும் ரசிக்கத் தோன்றியது. அப்படியே அவர்களைப் பார்த்தபடியே உறங்கிப் போனான்.

ஆசையை அடக்கிப் பழகியவனுக்கு. உணர்வுகள் எல்லாம் அடங்கித் தான் இருந்தது. ஆனால் திருமணம், மனைவி என்று முடிவாகிவிட்ட பிறகு. ஆசைகளும் உணர்வுகளும் கிளர்ந்து எழுந்து விட்டது. அதை அடக்குவது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அதை உணர்ந்து ஏற்றுக் கொண்டான்.

……..

விடியலிலேயே விழிப்பு தட்டி விட்டது அவளுக்கு. தன் கைகளை யாரோ பிடித்து இருப்பது போல ஒரு உணர்வு தோன்ற, கண்களை பிரித்துப் பார்த்தாள் ஆராதியா. ஆத்ரேஷின் மேல் அவள் கையை வைத்திருக்க. அவர்கள் இருவரின் கையையும் பிடித்தபடி அவனுடைய பெரிய ஆளுமையான கரங்கள். அதிலிருந்து தன் கையை உருவி கொள்ளத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழுந்தாலும்.

முதல் நாள் தாமதமாக எழுந்து பிறகு பெரியவர்களின் கோபத்தை வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாம் என்று எண்ணம் தோன்ற மெல்ல அவன் கையிலிருந்து தன் கையை எடுக்க முற்பட்டாள். அதில் அவன் தூக்கத்திலேயே புருவத்தைச் சுருக்கி பிறகு, அவள் கையை அழுந்தப் பற்றிக் கொண்டான். அதன் பிறகும் சிறிது நேரம் சென்று தான் அவள் கையை அவன் கரங்களிலிருந்து அவளால் எடுக்க முடிந்திருந்தது. மெல்லிய புன்னகையுடன் எழந்தவள். குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தாள். இப்பொழுது தந்தையும் மகனும் கட்டிப்பிடித்து உறங்கிக் கொண்டிருந்தனர். மீண்டும் அவள் இதழ்களில் புன்னகை.

“இந்த ரெண்டு ஆண்களும் என்ன வசீகரிச்சு அவங்க வலைக்குள்ள விழ வச்சிக்கிட்டே இருப்பாங்க போல, ஆனா எனக்கு அப்படி விழறதும் பிடிச்சிருக்கு’ என்று சிந்தித்துக் கொண்டே கதவின் அருகில் சென்றாள். திறந்து கொண்டு வெளியில் செல்வதா வேண்டாமா என்ற தயக்கம். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள். இருவரின் உறக்கம் கலையாதவாறு கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றாள். மேலே நிசப்தமாகத் தான் இருந்தது. மாடிப்படிகளின் அருகே செல்லச் செல்ல சிறு சலசலப்பு கேட்டது. தயக்கத்தோடு படிகளில் இறங்க ஆரம்பித்தாள். விடியலிலேயே உறக்கம் கலைந்து பழக்கப்பட்ட பெருசுகள் சிலர் வம்பலத்துக் கொண்டிருக்க. அவளைப் பார்த்ததும் நமட்டு சிரிப்புடன் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். எல்லாமே அவள் பார்வைக்கும் கருத்துக்கும் பட்டது. அங்கிருந்த ஒருவர் கூட அவளுக்குத் தெரியவில்லை.. சங்கடத்துடன் தலை கவிழ்ந்த படியே பார்வையால் சமையலறை எது என்று பார்த்துக் கொண்டே நடந்தாள்.

“ஏம்மா மருமகளே, நைட் எல்லா சடங்கு சம்பிரதாயமும் ஒழுங்கா நடந்துச்சா?” என்று ஒரு முதியவள் கேட்க.

‘இவர் எதைக் கேட்கிறார்?’ என்று தெரியாமல். பரிதவித்தவள் நாலாப்புறமும் தலையாட்டிவிட்டு ஒருவாராகச் சமையலறையை கண்டுபிடித்து உள்ளே நுழைந்து விட்டாள். அபிமன்யு தமக்கை ரிதன்யா மட்டும் தான் புன்முறுவலுடன் அவளை வரவேற்றாள். சரஸ்வதி மேலும் கீழும் நக்கலாக அவளைப் பார்த்துவிட்டுத் தாடையில் இடித்துக் கொண்டு திரும்பி விட்டார்.

எச்சிலை உன் கூட்டி விலுங்கியபடி சரஸ்வதியின் அருகில் சென்று நின்றாள். ‘என்ன கேட்பது என்று அவளுக்கும் தெரியவில்லை. கேட்டால் அவருக்குப் புரியுமா என்றும் புரியவில்லை. பரிதவிப்புடன் தான் நின்று இருந்தாள். நிலைமையை ரிதன்யா கையில் எடுத்துக் கொண்டு. “நீ எதுக்கு ஆராதியா இதுக்குள்ள கீழ வந்த??, எல்லாரும் உன்னைக் கிண்டல் செய்வாங்க இல்லையா??” என்று கேட்க.

“ஏதாவது உதவி செய்வதற்கு” என்று டைப் செய்து அவள் முன்னால் காட்டினாள்.

“தம்பி இன்னைக்கும் சமையல் எல்லாம் வெளியே தான் சொல்லி இருக்கான். இருக்கிறவங்களுக்கு காபி டீ மட்டும் தான் நாங்க போட்டுக் கொடுக்குறோம்” என்று கூறும்போதே.

“காலம் முழுக்க இப்படியே ஊம பாஷை பேசிகிட்டு இருப்பாள். அதைக் கேட்கணும்னு எனக்குத் தலையெழுத்து இருக்கு” என்று அம்பிகா குழம்பினார்..

“ அம்மா நீ வேற காலங்காத்தால எதுக்கு ஏழரையை கூட்டுற??, நீ பேசறது மட்டும் அபிமன்யுவுக்கு தெரிஞ்சதுன்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான் தேவையில்லாத பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்காத” என்று தாயை கண்டித்த ரிதன்யா.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
40
“நீ என்கூட வா ஆராதியா” என்று அவள் கையைப் பிடித்தபடி அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

“நான் இந்தத் திருமணம் செய்தது தவறோ??. சின்ன வார்த்தைகளுக்கே தன் மனம் இப்படி வதைக்கிறதே, இன்னும் கடும் சொற்களைத் தன் மனது தாங்குமா??, தேவை இல்லாமல் பெற்றவர்களுக்கும் பிள்ளைக்கும் தன்னால் பிரச்சனை தான் வரும் போல இருக்கிறதே’ என்று மனதின் உள்ளே சிந்தித்தபடி நாத்தனாரின் இலுப்புக்கு நடந்து சென்றவள். தங்கள் அறையின் முன்னாள் வந்து நிற்கும்போது தான் உணர்விற்கே வந்தாள். கண் லேசாகக் கலங்கி தான் இருந்தது. ஆனால் ரிதன்யா பார்ப்பதற்கு முன்பாக அதைத் துடைத்துக் கொண்டாள்.

அப்பொழுது மிகச் சரியாக கதவைத் திறந்து கொண்டு வந்தான் அபிமன்யூ. மனைவி தமக்கை இருவரும் ஒரு சேர நிற்க. தமக்கைக்கு காலை வணக்கம் சொன்னவன். ஆராதியாவின் புறமும் திரும்பிச் சொல்ல. அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து விட்டான்.

சுற்றத்தை மறந்து அவளை நெருங்கியவன் அவள் புஜத்தில் கையை வைத்தவன், மறு கையால் அவள் தாடையை தூக்கி தன்னை பார்க்கச் செய்தான்.

“கண்ணு ஏன் கலங்கி இருக்கு?? யாராவது ஏதாவது சொன்னாங்களா, ஏதும் பிரச்சனையா?“ என்று அழுத்தமாகவே கேட்டான்.

அவள் இல்லை என்று அவனை நேர்பார்வை பார்த்துக் கொண்டு தலையாட்ட. அதையே வாய்மொழியாக ரிதன்யா கூறியிருந்தாள்.

“கீழ உதவி செய்யலாம்னு போனியா?” சரியாகவே கனித்து அபிமன்யு கேட்க.

“ஆமாம்” என்று ஆராதியா தலையை ஆட்டினாள்.

“அம்மா வாயை வச்சுட்டு சும்மா இருந்திருக்க மாட்டாங்க. எனக்கு எங்க அம்மாவைப் பத்தி தெரியும். சொந்தக்காரங்க எல்லாம் வீட்டை விட்டுப் போற வரைக்கும் நீ கீழ போகத் தேவையில்லை. நான் சொல்றது புரியுதா தியா?” என்று கேட்டான்.

“ அக்கா நீங்கக் கீழ மேனேஜ் பண்ணிக்கோங்க. இவள் கீழ போய் அம்மா ஏதாவது பேசி, நான் அதுக்கு ஏதாவது பேசினா வீனா மத்தவங்க எதிர்க்கப் பிரச்சனை தேவையில்லை. இன்னைக்கு கொஞ்ச பேரு நாளைக்கு எல்லாரும்னு கிளம்பிருவாங்க. அதுக்கப்புறம் நீ கீழ போனா போதும்” தமக்கையிடமும் மனைவியிடமும் மாறி மாறிக் கூறி கூறினான்.


ரிதன்யாவிற்கும் அபிமன்யு சொல்வது தான் சரி என்று பட்டது.
 
Member
Joined
May 9, 2025
Messages
45
Happy to know that she got an understanding nathanar . Sothagarangha is the reason for most of the problems in a family household,they should know their limits.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top