• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
40
கதைப்போமா 10


பெரிதாக அவளுக்குப் பசிக்கவில்லை. ஆனால் மகனுக்குப் பசிக்குமே என்று தோன்றியது. ஆம் மகன்தான். அவனைப் புகைப்படத்தில் பார்க்கும்போதே பிடித்து விட்டது. அப்பொழுதே மகனாக நினைத்து விட்டாள். அவனைப் பிடித்தபிறகு தான் அபிமன்யுவின் முகத்தையே பார்த்தாள்.

‘இந்த பிஞ்சுக் குழந்தைக்கு தாய் இல்லையா??’ என்று தவித்தது அவளுடைய மனது. ஏன் தான் அவனுக்குத் தாயாக இருக்கக் கூடாது??’ என்று நினைத்துத் தான் அண்ணனின் பேச்சையும் மீறி அந்தத் திருமணத்திற்கு அவள் சம்மதித்தது.

“அம்மா நம்ம ரூம்ல எதுக்காக இவ்வளவு ஃப்ரூட்ஸ் இவ்ளோ பிளவர்ஸ் வச்சிருக்காங்க?” என்று மகன் கேட்க.

“நீ சாப்பிடுறதுக்கு தான்” என்று எழுதிக் காட்டினாள்.

“அப்ப ஃபிளவர்ஸ்?” மகன் கேள்வியாக நிறுத்தினான். குழந்தைகளின் கேள்வி என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒன்று. மேதாவிகளால் கூட அதற்குப் பதில் அளிக்க முடியாது. அவள் சாமானியவள் தானே??.

“அது, இந்த ரூம் வாசனையா இருக்குறதுக்காக” என்று அதையும் டைப் செய்து காட்டினாள். நல்ல வேலையாகக் கையில் அலைபேசி இருந்தது அவளுக்கு வசதியாகப் போனது.

“தூங்குறதுக்கு எதுக்கும்மா வாசனை வேணும்?” என்று மகன் விடாது கேள்வி எழுப்பினான்.

“ஆமால்ல” என்று உதட்டசைத்து அவள் கன்னத்தில் ஒரு விரலை வைத்துக் கேட்ட விதம் அந்த மழலைக்கும் புரிந்தது. இருவரும் ஒரு சேர மனம் விட்டுச் சிரித்தனர்.

அவன் பேசிக் கொண்டிருக்க அவள் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். அண்ணனின் குழந்தையிடம் இப்படி அளவளாவ அவளுக்கும் ஆசைதான். ஆனால் குழலி அதற்கு அனுமதிக்க மாட்டாள். அவளுடன் பேசினால், தன் பெண்ணும் ஊமையாகிவிடுவாள் என்று மனம் நோக பேசி விடுவாள். அதனால் அண்ணன் மகளைத் தூரத்திலிருந்து மட்டும்தான் ரசிப்பாள். அவளுமே ஆராதியாவிடம் வரமாட்டாள். தாய் இல்லாதபோது அழைத்தால் கூட ‘ஹும்ஹும்’ என்று மறுப்பாள்.

ஆனால் இவன் தன்னுடைய மகன். பெறாமல் பெற்ற மகன். அவனும் தாயாக ஏற்றுக் கொண்டானே. இவன் தன்னிடம் பேசுவதற்கு யாரும் தடை விதிக்க போவதில்லை முக்கியமாகத் தன் கணவன் தடை விதிக்க போவதில்லை. அதைவிட முக்கியமாக அவன் தன்னிடம் பேச விரும்புகிறான். இதைவிட சந்தோஷம் அவளுக்கு வேறு என்ன இருக்கிறது. அவன் தான் பேசிக்கொண்டிருந்தான் அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள். கேட்கக் கேட்க சலிக்கவில்லை அந்த மழலையின் மொழி. அதில் தன்னையே தொலைத்தால் என்று சொல்லலாம்.

இவர்கள் இப்படியே எதையோ பேசிக் கொண்டிருக்க. சற்று நேரத்தில் உணவு அவர்கள் அறைக்கே வந்தது. அது கணவனுடைய ஏற்பாடு தான் என்பது புரிந்தது. ‘கணவன்” மெல்ல உதட்டசைவில் கூறியவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை.

அதன் பிறகு கவிச்சந்திரனும் குழலியும் அவளிடம் சொல்லிக் கொண்டு செல்ல மேலே வந்தார்கள். அப்பொழுது அபிமன்யு அவர்களின் துணைக்காக அவர்களுடன் மேலே வந்தான்.. ஆனால் அண்ணனும் தங்கையும் தனியாகப் பேசட்டும் என்று அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். அவன் மட்டும் தான் அகன்று சென்றான். ஆத்ரேஷ் செல்லவில்லை. அவள் விரல்களைப் பற்றியபடி உரிமை உணர்வுடன் நின்று இருந்தான். இனி இவள் என்னுடைய தாய். நான் ஏன் என் தாயை விட்டுச் செல்ல வேண்டும்?? என்று நின்றான்.

தங்கையிடம் கவிச்சந்திரன் எதையோ பேசிக் கொண்டிருக்க. குழலி அந்த அறையை பார்வையிட்டுக்கொண்டிருந்தாள்.

“போகலாமா” என்று கவிச்சந்திரன் கேட்கும்போது.

“புடிச்சாலும் புடிச்சீங்க அண்ணனும் தங்கச்சியும் புளியங்கொம்பா தான் புடிச்சிருக்கீங்க. அழகுக்கு அழகு, பணத்துக்கு பணம். ஸ்டேட்டஸ்க்கு ஸ்டேட்டஸ். என்ன, ஒரு பையன் இருக்கான்.அது மட்டும் தான் குறை. அது குறைன்னு பார்த்தால் தான் குறை. அதை நிறைவா ஆக்குற டேலண்ட் உங்க தங்கச்சிக்கு பத்தாது. அதை நான் சொல்லிக் கொடுத்துட்டு வரேன்” என்றாள்.

அவள் பேச்சு பூடகமாக இருக்க. இவள் ஏதோ ஏடாகூடமாகத்தான் கூறப்போகிறாள் என்று கவிச்சந்திரனுக்கு புரிந்தது.

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம் எல்லாத்தையும் அவளே பார்த்துப்பாள்” என்றான் கவிச்சந்திரன்.

“இவன பாரு, என்னமோ சொந்த அம்மாவ பிடிச்சுக்கிட்டு நிக்குற மாதிரி தான் நிக்குறான். உங்க தங்கச்சி சொந்த அம்மா இல்லன்னு எப்ப தெரியுதோ, அப்பக் கையை உதறி விட்டுடுவான். சரி அத விடுங்க இன்னைக்கு இவளுக்கு முதல் ராத்திரி, உங்க மாப்பிள்ளைக்கு இல்ல தான். அதை நான் ஒத்துக்கிறேன். அதுக்காக இந்த ரூம்ல பையன வெச்சிட்டு இருப்பாங்களா?? இந்த வீட்டு பெரியவங்க கொஞ்சம் கூட இங்கீதம் இல்லாதவங்களா இருக்காங்க. ஒரு அண்ணங்காரனா இத கேக்க மாட்டீங்களா??. இதுக்கு தான் இந்த வரன் வேணான்னு சொன்னேன்” என்று அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டிருக்க.

“நம்ம ரூம்ல நம்ம குழந்தை நம்ம கூடத் தானே இருக்கிறாள்??.

அப்ப அவங்க ரூம்ல அவங்க குழந்தை அவள் கூடத் தானே இருப்பாள். அவள் குழந்தையை அவள் பார்த்துப்பாள். நீ அவளுக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை” என்று அழுத்தமாகக் கூறினான் கவிச்சந்திரன்.

“என்னங்க புத்தி கெட்ட தனமா பேசுறீங்க?? நான் உங்க தங்கச்சி நல்லதுக்காகத் தானே சொல்றேன்??. உங்களுக்கு அது புரியலையா??. நமக்கு ஏற்கனவே காதல் கல்யாணம். நாம பேசிப் பழகி இருந்தோம். நமக்குக் கல்யாணம் ஆகி பக்குவம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தானே வரும். குழந்தைக்கு முன்னாடியே எப்படிங்க?“ என்று கேட்டாள்.

“இதெல்லாம் தெரியாம ஒன்னும் அவள் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அவங்க பிரச்சனையைப் புருஷன் பொண்டாட்டி அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துப்பாங்க, சரி பண்ணிப்பாங்க. நீ அதைப் பத்தி கவலைப்படாத. நீ உன் வயிற்றில் இருக்கும் குழந்தை பத்தியும், பெத்து வச்சிருக்க குழந்தை பத்தியும் யோசிச்சா போதும். அவங்க குழந்தைய பத்தி பேச வேண்டாம் என் தங்கச்சி மேல ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி நடிக்க வேண்டாம்” என்றான்.

“நல்லதுக்கே காலம் இல்ல” என்று அவள் தோள்களில் தாடையை வைத்து இடித்துக்கொள்ள.

இதற்கு மேல் இவளை இங்கே வைத்திருப்பது சரி இருக்காது என்று தங்கையிடம் தலையசைத்துவிட்டு மனைவியைக் கையில் பிடித்துக் கொண்டு கிளம்பினான் கவிச்சந்திரன். இந்த அம்மாவ என் கூட வரச் சொன்னேன் கேட்டாங்களா அவங்க??. கணவன் மனைவியா தான் போகணும், நல்ல காரியத்துக்குப் போகக்கூடாது அது இதுன்னு சொல்லி ஏழரையை என்கூட அனுப்பி வச்சு இருக்காங்க” என்று மனதிற்குள்ளே புலம்பிக்கொண்டே வெளியில் வந்தான்.

அவன் வரவிற்காகவே காத்திருந்தவன் போல அவன் வந்ததும் கீழே அழைத்துச் சென்று அவர்கள் வாகனத்திலேயே வீட்டுக்கு வழியும் அனுப்பி வைத்துவிட்டு தான் உள்ளே வந்தான் அபிமன்யு.

பெரும்பாலான உறவினர்கள் எல்லாம் சென்றிருக்க. இன்னும் சிலர் அங்கேதான் இருந்தனர்.

படிகளில் ஏறப்போனவனை அம்பிகாவின் குரல் தடுத்து நிறுத்தியது. “கொஞ்சம் நில்லுடா. நீ உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்க?? திருமணமே வேணாம்னு சொன்னவன் ஏதோ ஆசைப்படுறியேன்னு அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணி வச்சா??? நீ உன் இஷ்டத்துக்கு நடந்துக்குற??? அம்மானு ஒரு மரியாதை வேணாமா?? அதுவும் அடுத்தவங்க முன்னாடி அம்மாவ என்ன பேசுறோம்னு யோசிக்காமலே பேசுவியா? பொண்டாட்டிக்கு கூஜா தூக்கலாம், ஆனா அநியாயத்துக்கு இப்பவே தூக்கக் கூடாது” என்று அங்கலாய்த்தார் அம்பிகா.

“எப்போதிலிருந்து தூக்கணுன்னு நான் அப்பாகிட்ட கிளாஸ் எடுத்துக்கிறேன்மா” என்று முகத்தில் அடித்தார் போலப் பேசி, அவரின் கடுப்பை பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

“என்னடா ஒரு அம்மானு மரியாதை இல்லாம உன் இஷ்டத்துக்கு பேசிகிட்டு இருக்க?? என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க?” என்று அம்பிகாவும் சண்டையிட தயாராக இருக்க.

செந்தாமரை தான் அவர்கள் இருவருக்கும் இடையே வந்து தடுத்து நிறுத்தினார்.

“ஏம்மா முதல் ராத்திரிக்கு போற பையன நிறுத்தி வைச்சு சண்டை போட்டுக்கிட்டு இருக்க?? கம்முனு விடுமா அப்புறம் பேசிக்கலாம்” என்றார்.

“உங்க பையன் என்ன அசிங்க படுத்திட்டு இருக்கான். அதைக் கேட்கிறதுக்கு துப்பு இல்லை. என்னைச் சமாதானம் படுத்திட்டு இருக்கீங்க??” என்று அப்போதும் அம்பிகா சண்டையிட காத்திருக்க.

ஒரு கையால் அவர் தோள்களை வளைத்துப் பிடித்துக் கொண்டவர். மகனுக்குப் போகும் படி கண் ஜாடை காட்டிவிட்டு அம்பிகாவை சற்று ஓரமாக அழைத்துச் சென்றார்.

இதுதான் சாக்கென்று அவனும் அமைதியாக மாடிப்படிகளில் ஏறிவிட்டான்.

கதவைத் தட்டி விட்டுத்தான் உள்ளே நுழைந்தான் அபிமன்யு. அங்குக் கட்டிலில் குழந்தை படுத்திருக்க. அவன் தலையை வருடி கொடுத்துக்கொண்டிருந்தாள் ஆராத்யா. அதைப் பார்க்கும் போதே, தன் மகனுக்கு நல்ல தாய் கிடைத்து விட்டாள் என்று தோன்றியது.

“சாரி லேட் ஆயிடுச்சு” என்றான்.

அவனைப் பார்த்ததும் எழுந்த முயற்சித்தவள். இதழ் பிரித்துச் சிரித்தபடியே, “தமையன் சென்று விட்டானா?” என்று செய்கை மொழியில் கேட்டாள். அவன் புரியாமல் புருவத்தை இடுக்கினான்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
40
மீசையை முறுக்குவது போலப் பாவனை செய்தவள். தன்னுடைய என்பதற்கு, தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு கேட்டாள். தன்னுடைய அண்ணன் என்று அவளை விடவும் உயரம் அதிகமாகவே கையை வைத்துக் காட்டினாள். அப்படி அவள் காட்டவும், அவனுக்குப் புரிந்தது.



“உங்க அண்ணன் போயிட்டான். அவனை அனுப்பி வச்சிட்டு தான் வரேன். நடுவுல எங்க அம்மா கொஞ்சம் என்ன பிரேக் போட்டு நிறுத்தி வச்சுட்டாங்க. ஒரு சின்னப் பஞ்சாயத்து. அதை முடிச்சுட்டு வரதுக்கு லேட்டாயிடுச்சு” என்றான்.



இப்பொழுது அவள் புருவம் இடிங்கியது. “என்ன??’ என்று கேள்வியாகக் கையை ஆட்டிக் கேட்டாள்.



“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இனிமே தினமும் பஞ்சாயத்து தான் நடக்கும். அப்பப் பாத்துக்கலாம். எனக்கு இதெல்லாம் பழகிடுச்சு. இப்ப பேசி நேரத்தை வீண்ணாக்க வேண்டாம்” என்றான்.



அவள் மிடறு விலுங்கிக் கொண்டு, அவனைச் சற்று அதிர்வுடன் பார்த்தாள். குழலி கிண்டல் தோனியில் கேட்டாலும், அவளுக்குமே அந்தச் சங்கடம் இருந்தது. புது இடம், புது சூழல், அங்கிருந்த அனைவருமே அவளுக்கு அன்னியர்கள். அதை ஸ்ரீகரிக்க அவளுக்கு நேரம் தேவைப்பட்டது. கணவன் மகனும் அன்னியர்கள் இல்லைதான். பழகியும் விட்டால்தான். ஆனாலும் சொல்ல முடியாத ஏதோ ஒரு பயம் அவளை ஆட்கொண்டிருந்தது. அதைப் பயம் என்பதை விடத் தயக்கம் என்று கூடச் சொல்லலாம்.



“பயந்துட்டியா?” என்று சிரித்துக் கொண்டே அவளை நெருங்கியவன். சேரை இழுத்து போட்டு, அவள் எதிரில் அமர்ந்தான்.



“என்ன பண்ணலாம்?” என்று அவளிடமே கேட்டான்.



அவள் எப்படி அதற்குப் பதில் சொல்வாள்??. மீண்டும் அதே அதிர்வுடன் அவனைப் பார்த்தாள்.



“கல்யாணம்னா அடுத்து என்னனு தெரியாத சின்னக் குழந்தை நீ இல்ல. நான் வெர்ஜினும் இல்லை, ஒரு பையனைக் கண் முன்னாடியே அதுக்கான எவிடென்ஸா வச்சிருக்கேன். பட் உன்னுடைய எதிர்பார்ப்பு என்னன்னு எனக்குத் தெரியல. ஐ மீண் இந்த விஷயத்துல. இதைக் கல்யாணத்துக்கு முன்னாடி பேச முடியாது. அது தப்பான அர்த்தமாயிடும். அதனால பொறுமையா கல்யாணமான பிறகு பேசிக்கலாம்னு விட்டுட்டேன். நீ என்ன எக்ஸ்பெக்ட் பண்ற?? ஆற அமரப் பொறுமையா லைஃபை தொடங்கலாமா??, இல்ல இன்னைக்கேவா??” என்றவன் கேள்வியாக நிறுத்தினான்.



“பொறுமையா தொடங்கலாம். அவசரம் வேண்டாம்” என்று அவள் அவசரமாக வாயசைத்தாள்.



அவளின் படபடப்பும் செய்கையும் அவனுக்குப் புன்னகையை தான் வர வைத்தது. அதை ரசிக்கும் ஆவலையும் தூண்டியது.



“ம்ம்ம், என்று ஆழ்ந்த பெருமூச்சை இழுந்து விட்டவன்.



“எனக்கு இது செகண்ட் மேரேஜா இருக்கலாம். பட் உனக்கு இது ஃபர்ஸ்ட் மேரேஜ். நிறைய எக்ஸ்பெக்டேஷன் இருக்கலாம். ஐ மீண் நான் வேற அர்த்தத்துல சொல்லல. சாதாரண எக்ஸ்பெக்டேஷன் இருக்கும் தானே அதைச் சொல்றேன்” என்றான் அவசரமாக. அவள் அலைபேசியில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருக்க. அவன் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
 
Member
Joined
May 9, 2025
Messages
45
Porammai is so natural if a girl get married a rich person.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top