New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே!
நவநீத் நதியாவுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டு பெங்களூரு விரைந்தான்.
அவன் வேலை செய்யும் கம்பெனியில் தேவிகா அவளது தோழிகள் மூவரும் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி சேர்த்திருந்தனர் .
நவநீத் தான் அங்கே டீம் மேனேஜராக இருந்தான். அவனுக்குத் தெரியாது தனக்கு கீழே தான் தேவிகா வேலைக்கு வரவிருக்கிறாள் .என்பது அவன் இரண்டு நாட்களுக்கு முன்னரே மதுரை போயிருந்ததால் இவர்கள் வருவது அவனுக்கு தெரியாது .
அவன் எப்பொழுதும் போல் வேலைக்குச் சென்றிருந்தான்.
தேவிகா ,உமா, சங்கரி, சங்கவி நால்வரும் கலகல என்று அனைவரிடமும் எளிதாக பழகிக் கொண்டனர்.
ப்ராஜெக்ட் பற்றி விளக்கவுரை கூறும் போது தான் நவநீத் எங்கேயோ? கேட்ட குரலா இருக்குதே என்று உற்று கவனித்தான். அப்போதுதான் தேவிகா இதே கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளது தெரிந்தது இருந்தாலும் தனக்குத் தெரியும் என்பதைப் போல் காட்டிக்கொள்ளவில்லை.
நவநீத் மட்டும் தான் பார்த்திருந்தான் தேவிகா பார்க்கவில்லை நவநீத்தை.
இப்படியே நாட்கள் நகர்ந்தது இருவரும் வேறு வேறு தளத்தில் இருப்பதால் கவனிக்கவில்லை.
ஒரு பத்து நாட்கள் கடந்த நிலையில் கேண்டினில் மதிய உணவின் போது ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.
முதலில் தேவிகாவுக்கு நவநீத்தை பார்த்ததும் திகைப்பாக இருந்தது. யாரை நாம வாழ்நாளில் பார்க்கவே கூடாதுனு நினைச்சமோ அவன பாத்துட்டோமே இதே அவனுக்கு கல்யாணம் ஆகி அவன் மனைவியோட இங்க பெங்களூர்ல இருக்கிறான்னு நினைத்துக் கொண்டாள்.
அவளுக்கு தெரியாதே நவநீத் இன்னும் திருமணம் ஆகவில்லை. என்று யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ,என்று அவள் யோசனையோடு இருந்தாள்.
என்னடா மச்சான் அதுக்குள்ள இவ்வளவு சோகமாயிட்ட என்று சங்கவி கேட்கவும் ஆமாண்டா தேவிகா ரெண்டு வாரமா தேவிகா நல்லா இருந்தா இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.
ஆமா நாளைக்கு அமாவாசை வருதுல்ல அதை முன் எச்சரிக்கையை இன்னைக்கு மெண்டல் ஆயிட்டா அப்படித்தான் தேவிகா ?
அவளோ அதற்கும் பதில் சொல்லவில்லை. அன்றிலிருந்து நவநீத்தை நேருக்கு நேரா பார்த்து வேலை செய்வது தர்ம சங்கடத்தையே அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது.
நவனீத்தும் தேவிகாவை பார்ப்பதும் பார்க்காத மாதிரியே சென்றான் பாரு கொஞ்சம் கூட என்னை பார்த்து கூட பேசணும்னு இவனுக்கு தோணல பாரு ஆமா நான் தான் பணம் இல்லாதவளாச்சே பணக்கார பொண்டாட்டி கட்டினதுனால அவனுக்கு என்ன எல்லாம் கண்ணுக்கு தெரியாது அவனுக்கே குற்றம் இல்லாத போது நானே குற்றவாளி மாறி தயங்கிட்டு இருக்கணும் .
இருடா உன்ற முன்னாலேயே எல்லாரோடயும் கூட பேசறேன்.
சரவணன் தேவிகாவின் அமைதியும் அழகும் அவனை ஈர்த்தது அவன் நவநீத்திடம் சென்று இந்த பொண்ண பாருடா ரொம்ப க்யூட்டா அழகா இருக்குதுல்ல நான் அந்த பொண்ணுக்கு ரூட் போட்டுப் பார்க்க போறேன் அப்படின்னு சொல்லவும் .
நவநீதிக்கு கோபத்தில் பற்களை நரநரவென்று கடித்தான் .நீ ஏண்டா கோபப்படுற நான் தாண்டா கரெக்ட் பண்றேன்னு சொன்ன உங்க அத்தை புள்ளயே நான் லவ் பண்றேன் சொல்ற மாதிரி நடந்துக்கிற.
டேய் அவ என்னோட ஆள் டா என்ற சொல்ற உன்னோட ஆளா எப்படிடா வந்து பத்து நாள் தான் ஆச்சு அதுக்குள்ள எப்படி கரெக்ட் பண்ண .
டேய் நான் அவ ஸ்கூல் படிக்கும்போது இருந்து அவளை லவ் பண்ணிட்டு இருக்கேன் டா.
பார்த்தா அப்படி தெரியலையே அது உன்னை முறைச்சு முறைச்சு பார்த்துட்டு போகுது இன்னும் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லையே.
அது நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்.
அப்புறம் உனக்கு என்ன வந்தது இப்ப இடம் காலியாதான் இருக்குது நான் போய் பட்டா போட்டுக்குறேன் டா.
என் ஆள் பக்கத்தில் எவனாச்சும் போனீங்கன்னா நடக்கிறது வேற.
டேய் பாருடா மச்சான் நீ இப்படி டெரரா பேசுற பாரு அந்த பொண்ணு கிட்ட வந்து பேசினா நான் போட்டு விடுவேன் பட்டா.
நீ அவ என்னைத் தவிர யாரை கல்யாணம் பண்ண மாட்டாள்.
அது எப்படி டா அவ்வளவு உறுதியா சொல்ற.
ஆமாண்டா நான் உறுதியா சொல்றேன் .
அப்ப நீங்க இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே மூடிட்டு நீக்க போறீங்க இப்பவே அவளுக்கு பின்னால எத்தனை பேர் சுத்திட்டு இருக்காங்கன்னு தெரியுமா நம்ம ஆபீஸ்ல.
என்றா சொல்ற ஆமா நீ மதுரை போயிட்டு வருவதற்குள் அவிங்கள ஜாயின் பண்ணிட்டாங்க வந்தனைக்கே குமரேசன் அவர்களோட க்ளோஸ் ஆயிட்டான்.
நான் இந்த வாரத்துல அவ கூட பேசலாம் ,பேசி பழகு போறியா? "டேய் கடுப்பு கேளப்பாம போடா" கம்முனு அதேபோல் தேவிகா வேலையை விட்டு கிளம்பும்போது நவநீத் வந்து தேவிகா நானும் உன் கூட பேசணும் என் கேபினுக்கு வா இல்லாட்டி கேண்டின்கு வா.
சார் உங்க கூட பேசறதுக்கு எனக்கு எதுவும் இல்லை. உங்களை யாருன்னே தெரியாது?
நான் எப்படி வந்து உங்க கூட தனியா உக்காந்து பேச முடியும் எதுவா இருந்தாலும் ஆபீஸ்க்குள்ள ஆபீஸ் டைம் தவிர மத்த டைம் எங்கேயும் எந்த ஆண்கள் கூட எனக்கு பேசி பழக்கமில்லை என்று முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டு சென்றாள்.
ஏய் நில்லுடி சொல்லிட்டே இருக்கிறேன் கொஞ்சம் கூட மதியாமல் போயிட்டே இருக்குற அவ்வளவு தானா நம்ம ரெண்டு பேரும் அவ்வளவு தானா?
என்ன பேச்சு பேசுறீங்க நீங்க கோழையாட்டம் உங்க அம்மா கிட்ட சொல்லிவிட்டு என்னை கேவலப்படுத்தினீங்க. அவ்வளவு தான் வந்து கேக்குறீங்க?
அதை நான் கேட்கணும் ஏண்டி நீ படிச்சவ தானே அறிவு இருக்கிறது தானே உனக்கு நான் சொல்லிவிட்டேன் நீ நம்பினாயாடி எங்க அம்மா என்ன வேணும்னா வந்து சொல்லு அதை எப்படி டி நீ நம்பிட்டே நீ விட்டுட்டு வரல நீ நான் ஊர்ல இல்ல உனக்காக தாண்டி நான் இத்தனை அவசரமா வேலையில் சேர்ந்த நான் ஊர்ல இல்லைன்னு தெரிஞ்சது எங்க அம்மா வந்து உன்னை பேசியிருக்கிறது.
என்ன வேண்டும் சொல்வார்கள் அதை நீ நம்பலாமா? அவ்வளவுதானா நீ என் மேல நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
என் காதல் அவ்வளவுதானா?
நீங்க தான் போன் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கீங்க.
புரியாம பேசாத தேவிகா நான் இந்த வேலை கிடைக்கறதுக்கு எவ்வளவு ரிஸ்க் எடுத்து இருந்தேன் தெரியுமா? அப்ப வந்து போன் வந்து சார்ஜ் இல்லாம ஆப் ஆயிடுச்சு.
நான் உனக்கு கூப்பிட்டா நீ சுவிட்ச் ஆப் பண்ணி வச்சுட்ட நான் என்னடி பண்ணிட்டு எனக்கு ஒண்ணுமே புரியல உடனே வேலையில் ஜாயின் பண்ணனும்னு சொல்லிட்டாங்க இருந்தாலும் எக்ஸ்கியூஸ் கேட்டு அங்க வந்து பார்த்தால் உன்னை காணும் உங்க வீடு பூட்டி கிடக்குது எங்க போய் நின்னாலும் ஒருத்தருக்கு ஒன்னும் தெரியல அது எப்படி ஒரே நாளில் என்னைய எங்க அம்மா சொன்னா யாரு என்ன சொன்னாலும் நீ நம்பிடுவியா?
அவ்வளவு தானே நம்ம காதல் நீ என்னை சின்ன புள்ளையிலிருந்து பாத்துட்டு இருக்கிற தானே..என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?
அப்படி என்னடி நான் உன்னை விட்டுட்டு பணம் ஆசைப்பட்டு வேறு ஒருத்தியை கட்டுகிறேன். என்று நீ நம்பலாம் இந்த பதில் நான் எதிர்பார்க்கல தேவிகா.
நவநீத் நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல..
விளக்கெண்ணெய் சொன்னேன்.
விளையாடாதீங்க உண்மையை சொல்லுங்க உங்களுக்கு கல்யாணம் ஆகலையா?
அது எப்படி உயிர் உருக உயிருக்கு உயிரா உன்னை காதலிச்சிட்டு வேறொரு ஒருத்தி கழுத்துல கழுத்தில் தாலி கட்டுவனா என் உயிரே நீ தானே அது எப்படி ஈஸியா பொண்ணுங்க காதலை பெருசுன்னு சொல்லிட்டு ஆம்பளைங்கனா ஏமாத்துறீங்க அப்படிங்கற லிஸ்ட்ல வச்சிருப்பீங்களா? அவ்வளவு ஈஸியா தூக்கி போட்டு போயிட்ட திக்கு தெரியாம திசையும் தெரியாம நான் எத்தன கஷ்டப்பட்டேன்.
உடனே வேலை ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க ஒவ்வொரு வீக்கெண்டும் நீ எந்த ஊர்ல இருக்கிற ஒவ்வொரு ஊரா பைத்தியக்காரனாட்டம் சுற்றிலும் தேடிட்டு இருந்தேன்.
என்னதான் சொல்றீங்க? இது சத்தியமா எனக்கு தெரியாது உங்க அம்மா எங்களை எவ்வளவு கேவலப்படுத்தினாங்க தெரியுமா? எங்க அம்மாவை என்னையே எல்லாம் எனக்கு வாய் கூசுது தெரியுமா? அதை திருப்பி சொல்றதுக்கு உங்க அம்மா என்னை மிகவும் அம்மாவையும் அந்த மாதிரி தொழில் பண்ற பொம்பளைங்கோ அப்படின்னு பழி போட்டாங்க என்னால அதுக்கு மேல காதலா அப்படின்னு போராட முடியல ஏன்னா எங்க அம்மா சின்ன வயசிலிருந்து என்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்க அதே எங்க அம்மாவுக்கு என்னால ஒரு தலை குனிவு வரக்கூடாது உங்க வீட்லயும் தான பொண்ணு இருக்குது ஆனா உங்க அம்மா என்னை எவ்வளவு கேவலமா பேசினாங்க தெரியுமா?
நான் ரொம்ப மனசு உடைஞ்சு போயி சூசைட் பண்ணிக்கலாம்னு கூட நினைச்சேன். ஆனா எங்க அம்மா பாவம் என்னை ஒருத்தி மட்டும் தான் வாழ்க்கை நெனச்சு வாழ்ந்துட்டு இருக்காங்க.
அவங்கள விட்டுட்டு எனக்கு இறந்து போகும் மனசு வரல.
கோயம்புத்தூர் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய மாற்றம் என் தோழிகள் மட்டும் தான் நான் இவ்வளவு தூரம் வெளியில் சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ள உங்களை நினைக்காத நாளில்ல நவநீத்.
ஆனா நெஜமா எப்பவுமே நான் இங்க வேலை செய்றாங்க கம்பெனியில் எங்களுக்கு தெரியாது நான் கேம்பஸ் ல செலக்ட் இங்க வந்தோம் அப்புறம் உங்கள பார்த்த பொண்ணு எனக்கு பழைய காதல் ஞாபகம் வந்தது இருந்தாலும் உங்களுக்கு திருமணம் ஆகி இருக்கு அடுத்தவங்க புருஷனுக்கு நாம் ஆசைப்படக்கூடாதுன்னு தான் நான் ஒதுங்கி ஒதுங்கி போயிட்டு இருந்தேன் .
ஆனா நீங்க இப்ப சொல்றது பார்த்தா எனக்கு அவ்வளவு அதிர்ச்சியா இருக்குத,
பேசி முடிச்சிட்டியா சொல்லு நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?
என்னங்க இப்படி சொல்றீங்க?
என்ன இருந்தாலும் உங்க அம்மாவை நான் எப்படி அவங்க முகத்தை எதிர்கொள்றது .
உனக்கு ஒன்னும் தெரியுமா? எங்க அம்மா இனி என் லைஃப்ல இல்ல .
ஏன் என்னாச்சு நீங்க இறந்துட்டாங்களா?
அவிங்களுக்கு இறந்ததுக்கு சமமாக அவங்களை மீறி நான் நதியாக்கு என் பிரண்டு ரமேஷ் கூட திருமணம் பண்ணி வச்சிருக்கேன் .நான் இப்ப போயிருந்தேன் சரியா அப்பவே சொல்லிட்டு வந்துட்டேன் நீ என்னை என்கிட்ட சொல்லாம போயிருந்தாலும் நான் எப்படியோ உன்ன கண்டுபிடித்து ஒவ்வொரு சாட்டர்டே சண்டே கோயம்புத்தூர் வந்து உன்னை தூரமா நின்னு பார்த்துட்டு போய்டுவேன். தெரியுமா ?திருப்பி வேலைக்கு வந்துருவேன் உன்னோட முகத்தை பார்த்து நீ எப்படி இருக்கிற அப்படிங்கறது தெரிஞ்சுதுனால தான் என்னால கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட்டாவது இருக்க முடிஞ்சது.
நீ ஏன் இப்போ கேம்பஸ் ல செலக்ட் ஆகி வேலைக்கு வரலைன்னா நான் கண்டிப்பா வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்டு இருப்பேன் டி நான்.
நிஜமாவா சொல்றீங்க நவநீத் நிஜமாவா சொல்றீங்க நானே நம்மளோட காதல் உண்மையான காதல் அதனால் தான் இவ்வளவு இடைல போராட்டம் நடந்தாலும் நம்ம ஜெயிச்சிட்டோம் தேவிகா.