New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 8
நீதான் எனக்கு உயிர் உனக்கு அடுத்தது தான் எங்க அம்மாவும் தங்கச்சியும் என்று சொன்னவன் இன்று தன்னை வேண்டாம் என்று வசதியான பெண் வந்ததும் அவன் அம்மாவின் மூலம் என்னிடம் சொல்லிவிட்டான்.
அவனின் எண்ணம் சிறிது காலம் என்னையும் என் மனதையும் வைத்து விளையாண்டு விட்டான். என்று ரயிலில் செல்ல செல்ல அவளின் நினை அலைகள் வந்து சென்றது.
ஆனால் அவளும் அறியாதது ஒன்று உள்ளது அல்லவோ? நவனீத் அறிவானா தன் தேவதை தன்னை விட்டு வெகு தூரம் சென்று கொண்டிருக்கிறாள்.
அவன் அறிவானா அவள் தன் தேவதை அவன் ஒரு மூலையில் இருக்க இருவரையும் பிரிக்கும் நோக்கில் கலைவாணி தன் மகனை முன் நிறுத்தி ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு தூரம் காயப்படுத்த முடியுமோ? அத்தனை தூரம் காயப்படுத்தி செல்ல வைத்திருக்கிறார்.
பெண்ணின் பாவம் சும்மா விடுமா? அவர்களை நதியா வாழ்க்கை முக்கியம் என்று தனது தனது பையனின் கனவை காதலை சிதைத்து இருக்கிறார். நவநீத் வந்து அவளை தேடும்போது என்ன பதிலை சொல்வார்.
தேவிகாதான் கலைவாணி சொன்னதை உண்மை என்று நம்பி உன்னதமான காதலை சந்தேகக் கண் கொண்டு அவள் வெளியேறி விட்டாள் .
அதை உண்மையில்லை என்று அறியும்போது அவளுக்கு அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்குமா? பார்ப்போம் நவனீத் இப்பொழுதும் தேவிகாவின் எண்ணுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தான்.
ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவள் செல்போனை ஆன் செய்ய மாட்டாளா? என்ற ஒரு ஆதங்கத்தில் அவனுக்கு வேலை கிடைத்து விட்டது. அதை அவளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். என்று பேராவல் கொண்டிருந்தான் .
அவன் அறியாததல்லவா? அவனின் அலைபேசி எண்ணை இவள் பிளாக் செய்து இருக்கிறாள். என்று சரி எப்படியோ? உன்னை நேரில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அவன் வந்தான்.
வரும்போது மதுரையே விழாக்கோலம் பூண்டு இருந்தது. சித்திரை திருவிழா வீதியெங்கும் மக்கள் வெள்ளமாக இருந்தது.
தனது தேவதை இங்கேதான் கோவிலில் இருப்பாலோ ஒருவேளை மீனாட்சிக்கு பாட்டு பாடி கொண்டிருப்பாலோ என்ற ஒரு ஆவலில் ஒரு நிமிடம் கோவிலை பார்த்தான் .
ஆம் மதுரையில் இருந்து தான் கோவைக்கு சென்று இருக்கிறார்கள். யசோதா தேவிகா இருவரும் அவன் அறிவானா தன்னவள் இங்கில்லை தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டாள்.
அவனுடைய வீட்டுக்கு சென்றான் அப்போதே எதிர்வீட்டை பார்த்தான் பூட்டி இருந்தது. ஒருவேளை கோவிலுக்கு போய் இருப்பார்கள் என்று நினைத்து எப்படி இருந்தாலும் வீட்டுக்கு வருவாள அப்ப பார்த்துக் கொள்ளலாம் போய் இப்போது ஓய்வெடுப்போம் என்று சென்று அவனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
அவன் தூங்கி எழுந்து பார்க்கும் போதும் எதிர் வீட்டில் ஆள் இருப்பதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை. அப்போது தான் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது வெளியூர் போயிட்டாங்களா? வெளியூருக்கு போனா என்ன போன் எதுக்கு சுவிட்ச் ஆப் பண்றா? என்ன ஆச்சு அவளுக்கு எதாவது ஆபத்தா அவங்க அம்மா உடம்பு சரியில்லாமல் இருக்கா?
யாருகிட்ட கேட்டா உண்மை தெரியும் எதுக்கும் நதியா கிட்ட கேட்டு பார்க்கலாம். நதியா இங்க வா?
ஏன்னா எதை கூப்பிட்டீங்க?
ஆமா எங்க உன்னோட பிரண்டு வீடு பூட்டி இருக்குது.
ஆமா உங்களுக்கு விஷயம் தெரியவில்லை அவங்க இந்த ஊர்ல இல்லை ன்னு கிளம்பி போயிட்டாங்க.
எந்த ஊருக்கு போயிருக்காங்க உனக்கு ஏதாவது தெரியுமா?
தெரியலன்னா நான் காலேஜ் போயிட்டு வரும்போது நானும் கூட அம்மா கிட்ட கேட்டேன் அவங்க போகும்போது ஒண்ணுமே சொல்லலை.
அவ காலேஜுக்கு இங்க தாண்டி படிக்கிறா ?
ஆமா டிசி வாங்கிட்டு போயிட்டா ஆமா இதெல்லாம் நீயே கேக்குறாய்?
அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மாதான் கேட்டேன் அதனால எதிர்க்க நம்ம வீட்லதான் இருந்தாங்க நானும் வந்ததுல இருந்து பார்த்த வீடு பூட்டி இருந்ததா அதுதான் உடம்பு சரியில்லை என்னவோ? அப்படின்னு கேட்டேன் சரி சரி..
அதெல்லாம் நல்லாவே இருக்காங்க எந்த ஊரு போயிருக்காங்க எல்லா தெரியல அண்ணா நீ அம்மாகிட்ட கேட்டுக்கோ.
என்ன அம்மாதான் நீ ஊருக்கு போனாயே வெளியூரு அந்த அன்னைக்கு அந்த தேவிகாவை பார்த்து எதுவும் பேசிட்டு வந்தாங்க.
என்ன பேசினாலும் உனக்கு தெரியுமா ?
இல்லன்னா எனக்கு தெரியாது. அப்புறம் எப்படி சொல்ற அம்மா தேவியை பார்த்து பேசினாங்க அப்படின்னு .
அதுவா? அந்த பக்கத்து வீட்ல ஒரு குட்டி வாண்டு இருக்கு தல ரூபா அவங்க அம்மாவோட பார்க்கு போய் இருக்காங்க.
அப்போ நம்ம அம்மா தேவிகா கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தது பார்த்துட்டு வந்து அவங்க என்கிட்ட சொன்னாங்க.
ஆனாலும் நானும் அம்மா கிட்ட கேக்கல எதுக்கு அவங்க கிட்ட நீ கேட்டனா தெரியும். நீங்க என்ன அவங்களை கேட்டு பார்த்துக்கலாம்.
எப்போ தேவிகா என்கூட நல்லா பேசுவா ஏனோ இந்த ரெண்டு நாளா என்னை முகத்தை கூட பார்க்கவில்லை. சரி நானும் ஏதோ அவிங்களுக்கு உடம்பு சரியில்லையோ? அவங்க சொந்தக்காரருக்கு உடம்பு சரியில்லை என நினைச்சேன் னா..
அப்புறம் காலேஜ்ல தான் அவங்களோட ஃப்ரெண்ட் வேதா சொன்னாங்க அவ டிசி எழுதிக் கொடுத்துட்டா ஆனா எந்த ஊரு நல்லா நான் கேட்டுக்கலை நீ வேணா இவங்க ரெண்டு பேருட்ட கேட்டனா உனக்கு உண்மை தெரியும் அண்ணா என்று அவன் கேட்காத தகவலையும் சேர்த்து சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
இப்போது நவநீத்துக்கு தன் அம்மா எதற்கு தேவிகாவிடம் சென்று பேசினார்கள் .என்று தெரியாமல் எப்படி அம்மாவிடம் போய் இதை கேட்பது ஒருவேளை நானும் தேவிகாவும் பழகிக் கொண்டிருந்தது அம்மா கவனித்து விட்டார்களோ?
நாம் பண்ணுனது தான் தப்போ தங்கச்சி இருக்கும்போதே நாம காதல தேடிட்டோமே காதல் இதெல்லாம் பார்த்தா வருது நான் காதலிச்சுட்டு தான் இருந்தேன். தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி முடிக்காமல் நான் கல்யாணம் பண்ண மாட்டேன்.
இல்ல ஆனா அம்மா என்ன போய் தேவிகா மனச காயப்படுத்தினாங்கன்னு தெரியலையே ஓ அதனாலதான் அவ போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டா சுவிட்ச் ஆப் பண்ண சரி ஆனா இங்கேயே இருக்க வேண்டியதுதானே .
எந்த ஊருக்கு போனாங்கன்னு தெரியலையே நான் எப்படித்தான் கண்டுபிடிப்பன்னு தெரியலையே யாருகிட்ட கேட்டா உண்மை தெரியனும் தெரியல நான் வேற வேலையில் இந்த வாரத்திலேயே போய் ஜாயின் பண்ணனும்.
பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குது எனக்கு எங்கடி இருக்கிற என்று மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தவன் எங்கேயும் செல்லவில்லை.
வீட்டோடு இருந்து கொண்டான் அப்போது கலைவாணி வீட்டுக்குள் வந்தவர் நவனீத் வாடா சாப்பிடலாம் என்று அழைத்தார்கள்.
அப்படியே எனக்கு பசி இல்லம்மா நீங்க சாப்பிட்டு படுங்க .
எப்படி தம்பி பசிக்காம போயிரு ரெண்டு நாளா வெளியூரிலிருந்து வந்திருக்கிற வீட்டு சாப்பாடு இல்லாம வந்த அளுப்பில தூங்கிட்டு இருக்கேன் ..நெனச்சா நீ சாப்பாடு வேண்டாம்னு சொல்ற வா வந்து சாப்பிட்டு தூங்கு..
இல்லம்மா எனக்கு வேண்டாம் என்னடா பேச்சு ஒரு மாறி போகுது அதெல்லாம் ஒன்னும் இல்ல ஓஹோ நீ பேசி ஒன்றும் இல்லை என்று சொல்வதிலேயே தெரியுது எதையோ மனசுல வச்சு குழம்பிட்டு இருக்கிறே.
சரி சரி வா சாப்பிட வா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.
அம்மா எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி நம்ம நதியாக்கு ஒரு நல்ல இடம் வந்து இருக்குது .அதுதான் பேசி முடிச்சிடலாம் அதுக்கு தான் நீ ஊருக்கு போனதும் தான் இடம் வந்தது மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார்.
மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சியும் இருக்குதுடா அவங்க ஒரு கண்டிஷன் போடுறாங்க..பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துக்க சொல்றாங்கடா ..
நீ வேலைக்கு எல்லாம் போவேண்டா ராஜா வாட்டம் இங்கையே இருந்துக்கலாம் பிசினஸ் வச்சு தர்றாங்கலாமா?
அப்புறம் என்னடா உனக்கு குறைச்சல் அது தான்டா நானும் சரின்னு சொல்லிட்டேன். மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்தாலும் பிசினஸ் தான் பண்றாராம்
அப்புறம் என்ன அவங்க பிசினஸ்ல உன்னையும் பார்ட்னரா சேர்த்துக்கிவாங்கோ? அப்படி விருப்பம் இல்லை னா உனக்கு தனியா பிசினஸ் வச்சு தரேன்னு சொல்றாங்க நூறு பவுனுக்கு கார் வாங்கி போடுறாங்களாமா நானும் அதுதான் எனக்கு நாம வந்து நம்ம நதியாக்கு அவ்வளவு பணம் போடணும்னு நகை குடுக்கணும் இல்ல அவங்களே போட்டு கட்டிக்கு போறேன்னு சொல்றாங்கடா.
பாருடா எப்படி உங்கப்பா இல்லாத போ நான் எப்படி உங்க ரெண்டு பேத்தையும் கரை சேர்க்க போறானோ நெனச்ச நீ கூட ஆம்பள பையன் பரவால்ல அப்படின்னு நினைக்கலாம்.
ஆனா உன் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும்னு நானும் மதுர மீனாட்சி வேண்டாத நாள் இல்ல அதுதாண்டா மீனாட்சி கொடுத்து இருக்கிறா. அவங்க இந்த வாரத்துல வரேன்னு சொன்னாங்க நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் ஜம்முனு ராஜா பிசினஸ் பண்ணலாம் டா ..
நாமும் பெரிய மாளிகை கட்டிக்கலாம் இது குருவிக்கூடு மாதிரி இருக்குது இந்த வீட்டுல நாமளும் பெரிய படகு மாற கார்ல போகலாம் என்று வாயோ ஓயாமல் பேசிக் கொண்டிருந்தார்.
அம்மா தயவு செய்து நிறுத்து நீ நதியாக்கு திருமணம் பண்றயா அதோட நிறுத்திக்கோ? எனக்கு எல்லாம் திருமணமே வேண்டாம்.
ஏன்டா இப்படி பேசுற ஏன் அந்த சிறுக்கி மனசுல நினைச்சுட்டு வேற யாரையுமே கண்ணால கட்டிக்க மாட்டியோ? ஆனா அவ அப்படி இல்லடா நீ ஊர்ல இல்லாத நேரம் பார்த்து பெரிய கொம்பனா புடிச்சிட்டா..
ஆத்தாளும் மகளும் அவங்க வீட்டுக்கே போயிட்டாங்க...
கண்ணால கட்டிக்கிட்டு போகாம அதுக்கு முன்னாலேயே அவன் கூட போயிட்டாங்க.
நீதான் அவளை நினைச்சுட்டு உருகிட்டு இருக்க ஆனா அவ நீ இ நீ அந்த பக்கம் போனதும் இந்த பக்கம் வேற ஒருத்தனை தேடிகிட்டா அவளுக்கு தாண்டா காலம் நானும் உண்மை பேசுனா நீ நம்ப மாட்டேங்குற ஆமாண்டா எனக்கு ஒன்னும் நல்லா புரிஞ்சு போச்சு உனக்கு தங்கச்சியோ உங்க அம்மாவும் முக்கியமே இல்ல எவளோ முண்டச்சி பெத்தவள அவ உனக்கு பெருசா போயிட்டாலும்?
அப்படி என்ன சொக்கு பொடி போட்டாலும் உனக்கு என்னடா நெனச்சிட்டு இருக்க நீ உங்கப்பன் போயிட்டா குடிச்சு குடிச்சு இருக்கிற சொத்தை வச்சிட்டு நானும் உங்க ரெண்டு பேருக்கு பத்து பாத்திரம் தேய்த்து காப்பாத்தலையா ?
அதுக்கு நீ இதுதான் பிராய்ச்சத்தமா தரப் போறியோ? நாமளும் எத்தனை நாளைக்கு தான் சொந்தக்காரன் முன்னாலே நல்லா வாழலாமே இருக்கிற சொத்தை பூரா இழந்து இந்த மதுரை மண்ணுல இருக்கிறமே நம்மளுக்கு ஒரு நல்ல வழி வருதே அதை பயன்படுத்திக்கலாம் என எண்ணம் உனக்கு இருக்குதா? என்று வாயோயாமல் பேச ஆரம்பித்து விட்டார்.
தொடரும்...