• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே! - 7

தேவிகா அறிந்து கொண்டாள் நவநீத் செய்வது மிகப்பெரிய தவறு. இதை இனிமேல் தொடர விடக்கூடாது எனக்குத் தெரியாமல் நான் தூங்கும்போது வந்து இரவு முழுவதும் என் அருகில் இருந்து செல்வது என்ன அர்த்தம் .

இதே நதியாகிட்ட ஒருத்தன் இப்படி நடந்துட்டா சும்மா இருப்பானா? இவன போய் காதலித்தேனே .நல்ல வேலை நான் அவன் காதல ஏத்தது அவனுக்கு தெரியாது.

நான் அவனிடம் காதலை சொல்லும் முன்னாலேயே அவன பத்தி தெரிஞ்சுருச்சு வேண்டாம் விலகிக்கலாம் இனிமேல் நாம அவன நேர்கொண்டு பார்க்கவே கூடாது .

அவளுக்கு மனசு ஆறவே இல்லை. இப்படி அவன் வருவதை வேற யாராவது பார்த்து இருந்தால் எங்க அம்மாவையும் என்னையும் தானா தவறா நினைச்சிருப்பாங்க .

படித்தவன் தானே இவன் இவனுக்கே புத்தி இப்படி போச்சு மனதிற்குள் புலுங்கி கொண்டே இருந்தாள்.

அடுத்த நாள் அவனை பார்க்கவே விளையவில்லை. கல்லூரி விடுமுறை என்பதால் அந்த பால்கனி கதவை திறக்கவே இல்லை.

ஆனாலும் நவநீத் அன்று இரவும் அந்த பால்கனி கதவை வந்து திறந்து பார்த்தான். அது உள் பக்கமாக தாள் போட்டு இருந்ததால் இது என்னது நாம வந்து போறது யாருக்கு தெரிஞ்சுருச்சு கதவு தாழ் போட்டிருக்கிறது .

ஒரு வேலை வீட்ல யாருமே இல்லையோ? ஊருக்கு போயிட்டார்களோ? இல்லையே யசோதா ஆண்டியை நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால கூட பார்த்தேன் .அப்ப ஏன் இப்படி பண்ற இவ ஒரு வேலை தெரிஞ்சிருச்சு அவளுக்கு நான் தினமும் வந்து போறது நான் நேத்து யோசிக்காம விட்டுட்டேன்.

அவளை காணோம் அப்படின்னு அது தெரிஞ்சு தான் அவ என்னை அவாய்ட் பண்ணி இருக்கிறாள். எப்படி என்னைய அவாய்ட் பண்ற அவளுக்கு ஒரு எண்ணம் வந்தது .எனக்கு அவ உயிர். நானும் அவளுக்கு உயிர் நீ என்னை விட்டு விலகப்போகும் நினைக்கிறாள்.

நான் வந்தா அவளை பார்த்து ரசிச்சிட்டு போயிடுறேன் இதுல தப்பு என்ன இருக்குது. அவனுடைய மனசாட்சி வந்து அட டேய் ஏன்டா ஒரு பொண்ணு தூங்கிட்டு இருக்கும்போது அவளுக்கு தெரியாம ரொம்ப பார்த்து ரசிச்சிட்டு வர்றதை நீ நியாயப்படுத்தறியே?

வேற யாராச்சு பார்த்தா அவளோட பேருதான கெடும். இதே உன் தங்கச்சி பாக்குறதுக்கு வெளியில் இருந்து ஒருத்தன் வந்தா நீ இப்படி குற்றம் கண்டுபிடித்து இருப்பியா? இல்ல வா வான்னு வரவேற்பயா ?

அது எப்படி விடுவ என்ன மீறி என்ற வீட்டுக்குள்ள வந்துருவானா ஒருத்தன் .அப்ப அதே மாதிரி தான் அவங்களுக்கு இருக்கு என மனசாட்சி சொல்ல எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் நீ போ என்று விரட்டி விட்டான் .ஆமாம் நீ வாய தொறந்து உன்னோட காதல முதல்ல அவ கிட்ட சொல்லவே இல்ல.

காதல் சொல்லாமல் ஒருத்தன் தினமும் வந்து அவளைப் பார்த்து சொல்றத நெனச்சா அவளுக்கு வருத்தமா தான் இருக்கு இதே நான் காதல முதலயே சொல்லி இருந்தா அவ்ளோ என்னை ஏத்துப்பா வரவேற்றுப்பா உன்னை எல்லாம் திருத்தவே முடியாது என்று மனசாட்சி அவனைக் காரித்துப்பி விட்டு சென்று விட்டது.

இப்ப என்ன பண்றது அவளை பார்க்காமல் நம்மால் இருக்கவே முடியாது .சரி அவ செல்போனுக்கு அழைத்து பார்க்கலாம் .

நம்பர் வேணுமே என்ன செய்யலாம் சரி நதியா செல்போன்ல அவன் நம்பர் வச்சிருப்பா போய் தேடலாம் என்று தனது தங்கையின் செல்போனை எடுத்து தேவிகாவின் நம்பரை கண்டுபிடித்து விட்டான்.

உடனடியாக தனது அறைக்கு வந்து தேவையான நம்பருக்கு அழைப்பு விடுத்தான். இது யார் நம்பர் புதுசா இருக்கிறதே அதுவும் இந்த நேரத்துல கூப்பிடுறாங்களே யாரா இருந்தா நமக்கு என்ன நாம எடுக்க வேண்டாம் ..

அதுவும் புது நம்பரா இருக்குது தெரியாத நம்பரில் இருந்து வர போன நாமே ஏன் எடுக்க வேண்டும். என்று விழிப்போடு இருந்து கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் வாய்ஸ் மெசேஜ் வந்தது ஏண்டி போன் பண்ணா எடுக்க மாட்டியா? அப்ப நான் யாரோ வா அன்னைக்கு உன் மேல நான் விழுந்து நம்ம ரெண்டு பேரும் குள்ள அந்த முத்த போராட்டம் நடந்தது.

அதுவும் விருப்பத்தோடு தான் நடந்தது அப்பறம் என்னடி நான் வரக்கூடாது எனை பார்க்க கூடாதுன்னு இருக்குறியா? நீ எதுக்குடி பால்கனி கதவை தாள் போட்டு வச்ச என்று வாய்ஸ் மெசேஜ் வந்து கொண்டே இருந்தது .

அதை அவள் படிப்பதும் அவனுக்கு தெரிந்தது ப்ளூடூத் விழுந்ததைக் கண்டு அவன் கண்டு கொண்டான் .

ஆனாலும் பதில் வராமல் இருக்க காண்டானவன் ஏன் நீ மரியாதையா அந்த கதவை திறந்து விடு இல்லைனு வச்சுக்க கதவை உடைத்து போட்டு உள்ள ஒரு வந்தேன்னு வச்சுக்கோ உன்னை சும்மா விட்டுட்டு வரமாட்டேன் .இன்னைக்கே உன்னை எனக்குச் சொந்தமாக எடுத்துக்குவேன். என்று கோபமாக பேச ஆரம்பித்து விட்டான் .

அதில் பயந்த தேவிகா இங்க பாருங்க நீங்க நினைக்கிற மாதிரி மோசமான பொண்ணு இல்ல. நான் இல்ல அது என்னைக்கு அன்னைக்கு ஒரு ஆக்சிடெண்ட் மாதிரி நடந்தது.

அதைவே நீங்க மனசுல நினைச்சுட்டு உங்க இஷ்டத்துக்கு என்னென்னமோ பேசுறீங்க என்ன நெனச்சிட்டு இருக்கீங்க ஒரு வயசு பொண்ணு தூங்கிட்டு இருக்கும்போது நைட் வந்து பக்கத்துல இருந்து பார்த்துட்டு போறீங்க ?

நல்ல வேலை எத்தனை நாளா இந்த திருட்டுத்தனம் நடக்குதுன்னு எனக்கு தெரியல. ஏதோ நான் நேத்து கண்டுட்டேன் எனக்கே வரவர பயமா இருக்கு திருடனும் கூட நம்பி விடலாம் போல இருக்குது.

பக்கத்து வீட்டில் இருந்துட்டு நீ இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க என்று போனை எடுத்து பயங்கரமாக திட்ட ஆரம்பித்துவிட்டாள்.

அப்ப நான் வர்றது உனக்கு கவலை இல்லை ஏன்டி யாராச்சு பார்த்துருவாங்கோ ?தப்பா நினைச்சுருவாங்கோ. அப்படின்னு தான் பயந்துட்டியா?

யாராச்சுக்கு தெரியிற மாதிரி இந்த மாமா வருவனா? அடியே பொண்டாட்டி நான் உன் மேல உசுரையே வைத்திருக்கிறேன் டி..

அன்னைக்கு ஆக்சிடென்ட்ன்னு சொன்னியே அன்னைக்கி ஆக்சுவலா நான் உங்ககிட்ட என்னோட லவ்வ சொல்றது தாண்டி உன்கூட வம்பு பண்ணுன. ஆனால் ,நீ என்னை பார்த்து பயந்த யா அதனால எனக்கு அந்த உன்னோட பயம் புடிச்சது உங்க கண் விழி பயத்துல கதக்களி ஆடுச்சு நான் அதுல என்னை தொலைச்சிட்டேன் டி .

அதுக்கு தகுந்த மாதிரி அன்னைக்கே வா நீயும் நானும் அது மாதிரி கீழ விழுந்து நீ எனக்குள்ளும் நான் உனக்குள்ளும் அப்பவே பகிர்ந்துட்டோமே என்னை நீ இவ்ளோ கீழ்தரமா நினைச்சுட்டு இருந்தியா ?

நானு யாரோ ஒருத்தியைப் பார்க்க வர்றேன்னு வரல டி என்னோட உயிர் டி நீ உன்னை பார்க்காமல் இருக்க முடியாம தாண்டி வந்த உன்னை ஏதாவது தொந்தரவு பண்ணுனா?

நீ எப்படி தூங்குறியோ அப்படியே தானே காலையில் எழுந்திருக்கிற சரிடி நீயே என்னை சந்தேகப்பட்டில நான் வரல டி ஆனா உன்னை பார்க்காமல் என்னால இருக்க முடியாது.

அதனால் என்ன பண்ற சொல்லு வீடியோ கால் வரியா ?இப்போ நான் வரல உன்ன பாக்கறதுக்கு உன் ரூமுக்கு வரல நீ வீடியோ கால் வா ப்ளீஸ் டி வராம மட்டும் இருந்தரா டி என்னால முடியலடி உன்னை பாக்காம பைத்தியமே பிடித்து விடும் போல இருக்குது..

சும்மா நடிக்காதீங்க உங்களுக்கு என் மேல காதல் இருந்தா இப்படித்தான் நான் தூங்கும்போது வந்து பார்த்துட்டு இருந்திருப்பீங்களா?

ஒருவேளை எங்க அம்மா பார்த்து இருந்தா என்னை எவ்வளவு கேவலமாக நினைத்து இருப்பாங்க .

உங்க அம்மா பார்த்து இருந்தா எவ்வளவு கேவலமா பேசி இருப்பாங்க .நாங்களே ரெண்டு பேருமே பெண்கள் தனியாக வாழ்கிறோம்.

ஒரு பொண்ணு தனியா வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியாது ஏன் என்றால் நீங்க ஒரு ஆண்.

எத்தனை பேர சமாளிச்சு ஒரு கெட்ட பெயர் இல்லாம எங்க அம்மா என்னை வளர்த்துட்டு வர்றாங்கன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.

எங்க அம்மாவ எக்காலத்திலும் தலை குனிய வைக்கிறது நான் அனுமதிக்கவே மாட்டேன். அதனால எனக்கு காதலே வேண்டாம். நான் யாரையுமே காதலிக்கல நீங்க காதலிச்சா உடனே நானும் காதலிக்கிறேன் எனும் உங்ககிட்ட சொல்லுவேன் எதிர்பார்த்தீர்களா?

நெவர் எங்க அம்மா பாக்குற மாப்பிள்ளை நான் கல்யாணம் பண்ணிக்குவேன் .

ஏண்டி என்கிட்ட நடிக்கிற உனக்கு என் மேல ஆசை இல்லைன்னு நீ பொய் சொல்ற நான் தினமும் வந்து உன்னைய பார்த்து ரசிக்கிறதுக்கு இப்படி சொல்றயே அப்ப நீ தினமும் கனவுல நவநீத் ஐ லவ் யூ அப்படின்னு சொல்றியே அது எந்த கணக்குல சேர்த்துக் கொள்வது.

உடனே பொய் சொல்றீங்க பார்த்தீங்களா? நான் இல்ல அப்படி ஒன்னும் கனவில் எல்லாம் சொல்லல.

நான் சொன்னா நம்ப மாட்டீங்க ஆனா என்கிட்ட வீடியோ ஆதாரம் இருக்குது .உங்க செல்லுல இப்ப போய் பாருங்க வந்திருக்கும்..

ஓஹோ என் ரூமுக்குள்ள வர்றதும் இல்லாம என்னைய வீடியோ எடுத்துட்டு போய் ரசிச்சிட்டு வந்து இருக்கீங்களா? நவநீத் உங்க மேல நான் ஒரு நல்ல நம்பிக்கை வைத்திருந்தேன். அதை நீங்க கெடுத்துட்டீங்க நான் சத்தியமா உங்ககிட்ட இந்த மாதிரி எதிர்பார்க்கவே இல்லை.

அப்ப நீங்க என்னை எந்த நிலைமையில் வேண்டுமானாலும் போட்டோ எடுத்துட்டு போய் இருப்பீங்களா? என்று தேவியை இப்போது அழுக ஆரம்பித்தாள்.

இப்போ வாய மூடுரியா? இல்லையா ?

நீ பார்த்து யாடி நான் உன்னை எவ்வளவு கேவலமா போட்டோ எடுத்தது வீடியோ எடுத்தது நீ பார்த்தியா நான் சும்மா ஒரு விளையாட்டுக்கு இப்ப சொன்னேன்.

ஏன் பேபி தேவிகா என்னை தப்பான கண்ணோட்டத்தில் தான் பாப்பையா நான் அது மாற கெட்டவன் இல்லை. என்று சொன்னால் நீ நம்புவ சொல் இப்படி பக்கத்து வீட்டுல இருந்து கூட வா நீ என்னை நம்பல நான் உன்னை தவிர வேற ஏதாவது பெண்ணை பார்க்கிறேனடி நீ இல்லன்னா நான் நிச்சயமா செத்துருவேன் டி நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு எல்லாம் நினைக்காத உண்மையா சொல்றேன் தேவிகா நீ இல்லன்னா எனக்கு வாழ்க்கையில நீதாண்டி எனக்கு உயிர் உனக்கு அப்புறம் தாண்டி எங்க அம்மா என் தங்கச்சி எல்லாமே.

என்று சொன்னவன் இப்போது வசதியாக பெண் அமைந்ததும்
அவனின் அம்மா மூலம் தூது சொல்லி விட்டான். என்ற நினைவலைகள்..


தொடரும்...
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top