• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே! - 6


தேவிகா தனது அம்மா யசோதாவிடம் சில விடயங்கள் புரியாமல் இருப்பதே நல்லது தான் மா என்று கூறினாள்.

அவளுக்கு மனதிற்குள் ஆயிரம் வலிகள் இருந்தாலும். நான் என்ன குற்றம் செய்தேன் நவநீத் அவனாகத் தான் முதலில் காதலைச் சொன்னது. என்று அன்றைய காலகட்டத்தில் நடந்தவைகளை அசை போடச்
சென்றது மனது.

விஜயதசமி நாளில் அனைவரும் அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் தான் ஒன்றாக பூசை வைத்து வழிபடுவது. அந்தத் தெருவில் அது ஒரு பழக்கம். தேவிகா நன்றாகப் பக்தி பாடல்கள் பாடுவாள் அப்படித் தான் அந்தத் தெரு வாசிகளுக்கு அவளைத் தெரியும்.

அது வரைக்கும் ஏதோ வெளியூரில் இருந்த வந்த குடும்பம் அம்மா மகள் இருவர் மட்டும் தான் எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று தான் கடந்தது வாழ்க்கை.

அவளின் காந்தக் குரலில்

கலைவாணி நின் கருணை தேன் மழையே..
விளையாடும் என் நாவில் செந்தமிழே..

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழச் சொல்லெடுத்து பாட வந்தோம்..
அம்மா பாட வந்தோம்...

அருள்வாய் நீ இசை தரவா நீ
இங்கு வருவாய் நீ நலம் தரவே நீ
அம்மா- ( மாணிக்க)

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூ மணக்கப் பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் ( மாணிக்க)

வெள்ளத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்..
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ
வாணி சரஸ்வதி மாதவி பாரதி
பாகதீஸ்வரி மாலினி..

காணும் பொருளில் தோன்றும் கலைமணி..
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகினி ரூபிணி..
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர் அமுதே தேனருள் சிந்தும்..
ஞான மனோகரி கல்யாணி
அருள்வாய் நீ இசை தரவா நீ இங்கு வருவாய் நீ நலம் தரவே நீ அம்மா (மாணிக்க)

என்று பக்திமனம் கமழும் வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருக்கும் கலைவாணிக்கு ஒரு பாடலை பக்திப் பரவசத்தோடு பாட அன்றிலிருந்து தேவிகா வை அனைவருக்கும் பிடித்து விட்டது.

இப்போது மனதைக் காயப்படுத்தி அனுப்பி வைத்த கலைவாணி தான் அன்றைக்கு அவளுக்கு தன் கையில் திருஷ்டி கழித்து நெற்றியில் முத்தம்வைத்துக் கொஞ்சியவர்.

நதியாவிற்கு தேவிகாவிடம் நட்பு பாராட்டிக் கொள்வதில் அத்தனை ஆனந்தம் அப்படித் தான் அவர்கள் வீட்டிற்குச் சென்று வருவதுமாக இருந்தாள்.

நவநீத் அவள் பாடிய தருணத்தில் இருந்தே அந்தக் காந்தக் குரலில் இவன் தன் மனதை அவளின் காதலில் தொலைத்து விட்டான்.

அவளோடு மனதிற்குள்ளே காதலை வைத்து தினமும் பேசிக் கொள்வான். அவனுடைய சிநேகிதரானார்கள் தான் டேய் நீ இப்படியே மனதுக்குள் வைத்துக் கொண்டு இருந்தால் அவளுக்கு எப்படி தெரியும். வேறு யாராவது வந்து காதலைச் சொன்னால் அவளும் ஏற்றுக் கொண்டால் என்ன செய்வாய்?

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் அள்ளிச் சென்று விடுவான். என்று பயத்தைப் போட்டு விட ஒரு நாள் மாலை நேரம் கலைவாணி நதியா இருவரும் கோவிலுக்குச் சென்று விட்டது தெரியாமல் தேவிகா வந்து விட்டால் அப்போது தனியாக நவநீத் இது தான் சரியான சந்தர்பம் இதை விட்டால் அவளிடம் நம் காதலைச் சொல்ல முடியாது என்று அவள் தன் வீட்டிற்குள் வந்து நதியா என்று அழைக்கவும் தான் அவளுக்குப் பின்புறமாகச் சென்றவன் அவள் வீட்டில் இல்லை கோவிலுக்குப் போய் இருக்கிறார்கள். இன்று ஏதோ விளக்குப் பூஜை இருக்கிறது என்று போனார்கள் உன்னிடம் சொல்லவில்லையா?

வருவதற்கு நேரமாகும் ஏன்? ஏதாவது உதவி வேண்டுமா? படிப்பில் ஏதாவது சந்தேகமா? என்று அவன் பாட்டிற்கு மடமடவென்று பேச.

இவளுக்குத் தான் அவனின் நெருக்கம் ஒருவித அச்சத்தைக் கொடுக்க.. நான்.. இ.. ல்.. லை
ந. தி.. யா.. என்று வார்த்தைகள் ஒன்று சேர்ந்து வராமல் தந்தி அடித்தது.

அவளின் பதட்டத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும். ஆமா நான்
ஒன்றும் மனிதர்களைத் திங்கும் காட்டுவாசி இல்லை ஏண்டி இப்படி பயந்து நடுங்குகிறாய்?

ஒழுக்கமா பேசாமல் இந்த தந்தி அடிக்கிற வாயை அப்படியே இழுத்துப் பிடிச்சு ஒரு உம்மா வைக்க வேண்டும் போல் மூடாகுது.

ஆமா உனக்கு இந்த காதல் பற்றி ஏதாவது தெரியுமா?

தலையை இடவலமாக ஆட்டினாள். ஆனால் மனதிற்குள் வளர்ந்த கெட்ட மாடு அது தான் நான் பயக்கிறேன் என்று தெரிகிறது தானே வழியை விட வேண்டியதது தானே இப்படி ரோடுரோலர் மாதிரி முன்னாடி நிற்கிறான் என்று கரித்துக் கட்டிக் கொண்டு நின்று இருந்தாள்.

அவளின் கருமணிகள் இரண்டும் அசைவதைப் பார்த்தே கண்டுகொண்டான்.

ஏய் குட்டச்சி இப்போது என்னைத் திட்டிக் கொண்டு தானே இருக்கிறாய்? இதற்கு ஒரு தண்டனை இருக்கிறது. அதை இப்போது நிறைவேற்ற வேண்டும் நீ இதில் ஏதாவது இடையூறு செய்தாய் தினமும் உனக்கான தண்டனை தொடரும்.

வாடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொள் என்று நவநீத் சொல்வும் பயத்தில் எச்சிலை முழுங்கியவளைப் பார்த்து இரசித்தவன் அவளின் தொண்டைக்குழியை பார்த்தான்
அவளோ? இவனிடம் சிக்காமல் பின்பக்கமாக நகர்ந்து சென்றால் எத்தனை நேரம் பின்னுக்குச் செல்லமுடியும் பின்னால் இருந்த சோபாவில் பொத்தென்று கால் இடறி கீழே விழும் முன் நவநீத் இடுப்பைப் பிடித்தால் அவனுமே எதிர்பார்க்கவில்லை சும்மா அவளைப் பயப்பட வைக்கத்தான் இவ்வாறு செய்தது. ஆனால் நிலைமையே வேறு மாதிரி ஆகி விட்டது. அவள் கீழே விழுக் அவள் மேல் இவன் விழுக அவளின் தலை தரையில் விழுந்து அடிப் படக்கூடாது என்று இவன் தனது கையைவைக்க என்று ஒரு நிமிடத்தில் அவள் கீழேயும் அவன் அவளின் மொத்த உடலையும் அழுத்தியவாறு கீழே விழுந்து அவளின் அதரத்தில் இவன் அதரம் பள்ளி கொண்டுவிட்டது.

இது எதிர்பாராமல் நடந்தாலும் இருவருமே அந்தப் புது உணர்வில் தங்களுக்குள் நடந்த இராசயன மாற்றத்தால் அவர்கள் தன்னிலை மறந்து புதுசா மனசு இறக்கை கட்டிப் பறந்து எங்கோ சென்று விட்டது.

அவனின் செல்போன் அலறலில் தான் இருவரும் தாங்கள் இருக்கும் நிலை அறிந்து சுயத்திற்கு வந்தனர்.

தேவிகா அவனைப் பிடித்து தள்ளியவள் எருமை மாடு எவ்வளவு கனமாக இருக்கிறான் என்று திட்டியவள் தன்னையே பார்க்கும் நவநீத் பார்வை போன திசையில் பார்த்தவள் அடித்துப் பிடித்து விலகிய டாப்பை நேராக இழுத்து விட்டவள்.

கண்ணை நோண்டி விடுவேன் என்று அவனிடம் சைகையில் பேசியவள் எழுந்து ஓடி விட்டாள். ஆனால் அவளுக்குள் வந்த உணர்வு அவனின் அனைப்பு வேண்டும் என்று அடம்பிடித்தது.

அவர்கள் இருவரும் வாயைத் திறந்து முதலில் காதலைத் தெரியப்படுத்துவதற்குள் உடல் அவர்களுக்குள் இருந்த உணர்வை வெளிப்படுத்தி விட்டது.

இதழ் ஒற்றல் நடக்கும் போது இவளும் அவனுக்கு இணையாக தெடர்ந்தாலே நாவை வைத்து உள்ளே விளையாடி தேன்னெடுத்துக் கொண்டு இருந்தான். அவனின் செயலில் தன்னை மறந்து தன்னைக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

நவநீத்துக்கு பஞ்சுப் பொதிகை போல் அவள் உடல் இப்போதும் தன் மீது தீண்டிக் கொண்டு இருப்பதைப் போலவும் அந்தப் பட்டு இதழ்கள் மீண்டும் மீண்டும் சுவைக்க வேண்டும் என்றே அவன் மனது அவளை தேடியது. இரவு தூக்கம் வராமல் மொட்டை மாடியில் அவன் உலாத்திக் கொண்டு இருந்தான். இருவர் வீடும் அருகில் இருப்பதால் அவனால் இப்போதே அவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிய ஆவலை அடக்க முடியாமல் அவளின் அறைக்குள் செல்ல அவளது அறையின் பால்கனி கதவை திறந்து உள்ளே சென்று விட்டான். முதல் வேலை அவளின் அறைக்கதவை தாழிட்டவன் சத்தம் செய்யாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

தூக்கத்தில் பிரண்டு படுத்தவள் அவன் தன் பக்கத்தில் தான் இருக்கிறான் என்று உணராமலே கனவில் நவநீத் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொண்டே தூக்கத்தைத் தொடர்ந்தால் விடியும் வரை அவளையே இரசித்துக் கொண்டு இருந்தவன் அவளைத் தொந்தரவு செய்யாமல் அவனது அறைக்குச் சென்று விட்டான்.

இது போலவே அவன் அனுதினமும் செய்ய ஆரம்பித்தான். அதிகாலையில் எழுந்து பார்த்தால் தேவிகா அவனுடைய அந்த வாசத்தை உணர்கிறாள். இது என்ன தினமும் என்னவனின் வாசம் உணர்கிறேன் என்று யோசித்தவள் அன்று இரவு நவநீத் வருவதைக் கண்டு திகைப்புற்றாள்.

தினமும் ஒரு ஆண்மகன் தன் அறைக்குள் வந்து சென்று இருக்கிறான். அது கூடத் தெரியாமல் இப்படி தூங்கி இருக்கிறேனே. வேறு யாராவது பார்த்து இருந்தால் தன்னைப் பற்றி என்ன நினைத்து இருப்பார்கள் என்று அன்று அவன் வரும் போது குளியலறைக்குள் சென்று விட்டாள்.

அவளுக்கோ மனதில் திக் திக் என்று பயம் இருந்தாலும் நாம் உள்ளே இருப்பது அவனுக்குத் தெரியக் கூடாது. இனிமேல் சொல்லி விட வேண்டும்.

வெளியே சந்தித்துக் கொள்ளலாம். வீட்டிற்கு இரவில் வருவது ஆகாது. இருவரும் இளவயது ஹார்மோன் மாற்றத்தால் இருவருக்கும் இடையே தவறு நடந்து விட்டாள். அது மிகப் பெரிய வில்லங்கத்தை உண்டு செய்து விடும். அவனுக்கு என்ன ஆண் பெண் தான் சூதானமாக இருக்க வேண்டும். எத்தனை செய்திகள் ஊடகங்களில் வரப் பார்த்து இருக்கிறோம்.

சிறிது நேரம் பார்த்து இருந்தவன் அவளைக் காணதாதால் ஒரு வேளை அவள் அம்மா அறையில் தூங்கிறாளோ? சரி நாளைக்கு வந்து இன்றைக்கும் சேர்த்து இரசித்துக் கொள்ளலாம் இராட்சசியை ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும் பைத்தியம் பிடித்து விடும் போலவே என்று வாய்விட்டே புலம்பி விட்டு வந்தவழியே திரும்பிச் சென்றான்.

அவன் சென்று விட்டான் என்று உறுதிப் படுத்தியவள் முதல் வேளையாக பால்கனி கதவை தாழிடாமல் இருப்பதை பார்த்தவள். நாம் காற்று வரட்டும் என்று திறந்து வைப்பதில் தான் தினமும் வந்து செல்கிறானா? என்று பயத்தில் அந்தக் கதவை தாழிட்டவள் உண்மையில் பயந்து அழுதாள்.

நவநீத் மீது காதலுக்குப் பதில் முதலில் ஒரு அருவருப்பு தான் வந்தது. அவன் முதலில் ஒரு நாள் வந்ததோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவனுள் தோன்றிய ஆர்வத்தை அடக்கத் தெரியாமல் தினமும் வந்து இப்போது அவனை இனிப் பார்க்கவே கூடாது என்று அவளை முடிவு எடுக்க வைத்து விட்டாள்.

தொடரும்...
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top