• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 5


யசோதாக்கு கோயம்புத்தூருக்கு மாற்றலாகியது .அவரும் தேவிகா என்னடி பண்றது ?உனக்கு படிப்பு இங்கே இருக்கிறது .

ஆனால் எனக்கு கோயம்புத்தூரில் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாகிவிட்டது .நாம் அங்கு போகலாமா ?இல்ல நீ இங்கேயே ஹாஸ்டல்ல தங்கி படிப்ப முடிச்சுட்டு வர்றியா?

அம்மா எனக்கு ஒரே ஊர்ல இருந்து போர் அடிக்குது அம்மா எத்தனை நாளைக்கு ஒரே ஊர்ல இருக்கிறது .நாம கோயம்புத்தூர் போலாமா. எனக்கு டபுள் ஓகே.

நிஜமாவா சொல்ற?

ஆமாம்மா நான் இன்னைக்கே கல்லூரிக்கு போயிட்டு டி. சி க்கு எழுதிக் கொடுக்கிறேன்.

ஏண்டி அதுக்குள்ள அவசரப்படுறாய்?

இல்லம்மா முடிவு தள்ளி போட வேண்டாம் .அப்புறம் மனசு மாறிவிடும். நாம அங்க போலாமா சூப்பரா இருக்கும்.

அந்த ஏரியா மேற்கு தொடர்ச்சி மலை பக்கத்திலேயே மருதமலை முருகன் இருக்கிறார் .நினைச்ச நேரத்துக்கு போய் பார்த்துக்கலாம் .போலாமா மாம்...கோயம்புத்தூர் அழகான ஊர் அங்க பேசறது தமிழும் அழகாக இருக்கும்.

ஆமா ஆமா சரி என் ஃப்ரெண்ட் அங்க தான் இருக்கிறா ள். அவள் கிட்ட சொல்லி அங்க பக்கத்திலேயே வீடு பார்க்கச் சொல்லலாம்.

அப்போ நாளைக்கு கிளம்பி போயிடலாம் மா.

ஏண்டி இவ்வளவு அவசர படுற.

சும்மாதாம்மா நாம வேணா உங்க பிரண்டோட வீட்டுல போயி இருந்துட்டு அங்கிருந்து கூட வீடு தேடிக்கலாமா?நான் வேணா காலேஜ் இப்பவே ப்ரோசீடு டிசிய குடுக்கறதுக்கு ஏற்ப சைன் செய்து விடுகிறேன். அவுங்கள
அந்த காலேஜ் அட்ரஸ் அனுப்பி வைக்கச்
சொல்றோமா !!

எல்லாம் சைன் பண்ணி கொடுத்துட்டோம்னா அவங்க போஸ்டுல அனுப்பிச்சு விட்டுருவாங்கமா நமக்கு இந்த ஊரு வேண்டாமா நாம போயிடலாமா?

ஏண்டி இப்படி பேசுற இருந்திருந்தாப்ல நீ நேத்து இருந்தே சரியில்லை .உன்னை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்த அதனால் இப்படி இருக்கிறாயா?

இல்லம்மா அதெல்லாம் இல்ல சும்மாதான் அம்மா எனக்கென்ன மனசு ஒரு மாதிரி கவலையா இருக்குதும்மா.

என் தங்கத்துக்கு என்ன கவலை அம்மா நான் இருக்கிற நீ என்ன ஆசைப்பட்டாலும் நிறைவேற்றி வைக்கிறேன். யாரையாவது விரும்புகிறாயா?

அம்மா ஏம்மா காமெடி பண்ற நான் எல்லாம் யாரையுமே விரும்பவில்லை எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலம்மா நம்ம ரெண்டு பேரும் மட்டும் இருக்கிறோமா இங்கு நம்ம ஊரு மாதிரி இல்லம்மா.

இத்தனை நாள் இருந்த இப்ப வேண்டாம் என்கிறாய்? ஜாலிய சுத்திட்டு இப்ப இந்த ஊர் திடீர்னு வேண்டாங்கிற என்ன ரீசன் முதல் எனக்கு சொல்லுமா .

அம்மா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ஒன்னும் இல்லம்மா நீங்களே வந்து ஊர் மாத்துலன்னாலும் நானும் கூட வேற காலேஜ் போய் படிக்கலாங்கற மாதிரி நினைச்சிருந்தம்மா. அது என் பிரண்டு வேதா இருக்குறா இல்லமா அவளுக்கு வேற காலேஜ்ல போறேன்னு சொல்றா அவள் விட்டா எனக்கு யாரையுமே தெரியாதுங்க .அதனால தான் நானும் வேற காலேஜ் போகலாம் அப்படின்னு முடிவு பண்ண. நேத்து அது தான் மூட் அவுட்டா இருந்தேன் நீங்க அதை தப்பா புரிஞ்சுட்டு எத்தனை கேள்வி மேல கேள்வி கேட்டா நான் இப்படித்தான் பதில் சொல்லுவேன். போ மம்மி நான்
பாவமுல்ல இன்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

என்ன சொன்னாலும் ஏதாவது ஒரு பதில் சொல்லி சமாளிக்கிறபாரு அது தாண்டி உன் திறமை கடைசி வரைக்கும் உண்மை என்னன்னு சொல்லவே மாட்டேன்.

அம்மா நான் தான் சொல்றேன் இல்லம்மா இதெல்லாம் ஒரு ரீசன் சொல்லாத அப்படி ஒன்று கேட்டால் இப்ப சொல்றதுக்கு விருப்பம் இல்லை என்னால என்னைக்கு இருந்தாலும் அம்மா கிட்ட சொல்லு உன் மனசுல அதை தேக்கி வெச்சு அதையே ஒரு அழுத்தமா அழுக்கா நீ வச்சுக் கூடாது நான் உன் கிட்ட அம்மாவா பழகுறத விட ஒரு தோழியாக பழகிட்டு இருக்குற என்னிடம் சொல்லு சாமி.

யசோதா எப்படி கேட்டும் தேவிகா சொல்லவில்லை. ஏனென்றால் கலைவாணியை இப்போதே நேரடியாக சென்று கேட்டு விடுவார், தேவையில்லாமல் பக்கத்து வீட்டில் எல்லாம் தெரிந்து விடும் .நான் ஆசைப்பட்டது நிராசையா போச்சு அதுதான் நவநீத் சொல்லி இருக்கிறானே அவன் சொல்லாமையா அவங்க அம்மா வந்து பேசுவாங்க ?

என்னை அவாய்ட் பண்ணனும்னு தான் அவனும் நேத்து இருந்து போனும் பண்ணல .நான் உண்மையா தான் காதலிச்ச ஆனா அவ என எந்த நோக்கத்தில் காதலிச்சானு தெரியல .

இங்க இருந்தா திருப்பி திருப்பி அதே ஞாபகம் தான் வரும். எங்க கண முன்னாலயே அவன் வேறொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுறது பார்த்துட்டு என்னால் நிச்சயமாக தாங்கிக்க முடியாது.

அதனால என் உயிரைக்கூட மாய்ச்சுக்குவேன். ஆனா எனக்காகவே வாழ்ந்துட்டு வரும் எங்க அம்மா பாவம் நான் எங்க அம்மாவுக்காக வாழனும்.

கண்டிப்பா இங்க இருந்தா ஏதாவது தவறான முடிவுகள் எடுக்கவேன். அதனால முதல்ல இந்த ஊரை விட்டு போகணும்.

நான் ஒன்னும் கலைவாணி ஆன்ட்டி சொன்னாங்கன்னு போகல ஆனாலும் நிஜம் காதலிச்ச ஒருத்தரு உயிருக்கு உயிரா நேசித்தவன் தன் கண்ணு முன்னாலேயே தனக்கு இல்லை அப்படிங்கும் போது அந்த வலி ரொம்ப கொடுமையானது அது வேண்டாம்.

நான் இன்னும் நிறைய படிக்க போற நல்ல வேலையில் சேர்ந்து எங்க அம்மா உட்கார வச்சு பார்த்துட்டு போகிறேன். இதையெல்லாம் மனதில் நினைத்தவள் தன் தாயிடம் எதுவுமே எப்போதும் கூறக்கூடாது.

என் மனசோட ஆழத்தில் கொண்டுபோய் வைத்துவிடுகிறேன் ஏன்னா அது என்னுடைய புதைந்து போகட்டும்.

சரி எந்திரிச்சு குளிச்சு காலேஜ் போயி எழுதி கொடு நானும் இப்பவே என் பிரண்டுக்கு போன் பண்ணி எல்லா ரெடி பண்ண சொல்ற வீடு எல்லாம் பாத்து சரியா?

சரிமா நம்மளுக்கு தேவையான திங்ஸ் மட்டும் கையில் எடுத்துட்டு போலாம் மத்ததெல்லாம் பார்சல் போட்டுவிட்டு போயிறலாம். நான் காலேஜ் போயிட்டு வந்ததும் வந்ததெல்லாம் எடுத்து வைக்கிறோம் இன்னைக்கு நைட்டு ட்ரெயின் ஏறிடுகிறோம் ஓகே டீல்.

இங்கே இவள் இப்படி ஆயுத்தமாகிக் கொண்டிருக்க அங்கே நவனித்தோ உடனடியாக கிளம்பி வர முடியாத மாதிரி இருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் அதே பெங்களூரில் தங்கியிருந்து அடுத்தடுத்து தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

அதை தேவிகாவுக்கு தெரிவிப்பதற்காக அவனும் அவளோட செல்லுக்கு அழைத்துப் பார்த்தான் ஆனால் அவளுடைய செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

திரும்பத் திரும்ப அழைத்தும் அதே பதிலை வந்தது அவனுக்கு குழப்பமாக இருந்தது. காலையில போன் ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு என்ன தான் செய்கிறாள்.

ஒருவேளை கல்லூரி சென்று இருப்பாளோ ?என்ன எட்டு மணிக்கே கல்லூரிக்கு போறவளா ?இவ தெரியலையே சரி மதியத்துக்கு மேல் கூப்பிடு பார்ப்போம் .என்று அவனும் செல் பேசி வைத்துவிட்டு இப்போது காலை உணவை முடித்துவிட்டு தேர்வு நடக்கும் இடத்துக்குச் சென்றான்.

நேற்றைப் போலவே எழுத்துத் தேர்வு மற்றும் வேலை திறன் பற்றிய வகுப்புகள் நடந்ததால் அவனால் மதியமும் தேவிகாவுடன் பேசும் வாய்ப்பை இழந்தான்.

அவன் அவ்வாறு தான் நினைத்திருந்தான். ஆனால் உண்மை அதுவல்லவே அவனே முயற்சி செய்திருந்தாலும் தேவியாவுடன் பேசி இருக்க முடியாது.

அவள்தான் அவனுடைய நம்பரை பிளாக் போட்டு வைத்திருக்கிறாலே தேவிகளுக்கு திரும்பத் திரும்ப நவனீதன் அவனுடன் பேசிய வார்த்தைகள் அவளது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த பார்க்கை கடந்து வரும்போது இத்தனை நாட்கள் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு கண்ணீராக விட்டுவிட்டு இப்போது அவசரமாக வீட்டுக்கு கிளம்பி வந்தாள்.

வந்தவள் அவளுக்கு தேவையான உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டால் மற்ற அனைத்து பொருட்களையும் பார்சல் செய்து அந்த முகவரிக்கு அனுப்புமாறு அந்த கம்பெனிக்கு அனுப்பி வைத்தாள்.

கலைவாணி கூட பரவா இல்லையே நான் பேசுனத மனசுல வச்சுட்டு இப்பவே துண்ட காணும் துணி கானம் ஓடுறா நல்லவேளை நவநீத்து வரக் இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகு து.

அதுக்குள்ள இந்த சனியன் போய் தொலைஞ்சிடுவா அப்புறம் நம்ம ஆசைப்பட்ட வீடு நம்ம சொந்தக்காரர் பொண்ணு மாப்பிள்ளை தான் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற மாதிரி கல்யாணம் பண்ணிக்கலாம் . அவளைப் பற்றி ஏதாவது அவன் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும்.

அப்பதான் அவளை மறந்து நான் சொல்றத கேட்டு நடப்பான் இவ்வளவு முடித்து விட்டாச்சு அவன் நடக்கிறதா பெரிய விஷயம் பாத்திரலாம். சும்மாவா கலைவாணின்னா கொக்கா என்று மனதில் மமதையோடு உன்னை விரட்டி விட்டுட்டேன் பாத்தியா ?அதுபோல் வெற்றி புன்னகை இதழோரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் தேவிகா நீ என்ன என்னை இவ்வளவு கேவலமா பேசுனீங்க உன் வீட்டுக்கு மட்டும் நான் மருமகளா வராம இருந்தேனே அதுவே போதும் உன் பையன் ஒருத்தன் தானா பிள்ளை ஊர் உலகத்துல வேற யாருமே இல்லையா?

உன் பையனுக்கே ஒரு பொண்ணு கிடைக்கும்போது எனக்கு ஒரு ஆண் கிடைக்க மாட்டானா? ஆனாலும் நான் அது மாற பொண்ணு கிடையாது.

என்று மனதில் நினைத்தவள் அதுக்காக உயிரை விடுற அளவுக்கு நம் முட்டாளும் இல்லை வாழ்ந்து காட்டுவேன் என்றும் மனதில் சூழுரைத்தவள்
கால் டாக்ஸியில் தன் அன்னையும் அழைத்துக் கொண்டு இருவரும் புது வாழ்க்கை பயணத்தை வாழ்வதற்காக சென்றனர்.

ஏண்டி இத்தனை நாள் பக்கத்து வீடா இருந்தா அந்த கலைவாணி கிட்ட கூட சொல்லாம வந்துட்டோமே எனக்கும் வர்ற அவசரத்தில் இது தோணவே இல்ல நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம்.

தேவிகா விடுமா அவங்க பக்கத்து வீடா தான் இருந்தாங்க நாம கெளம்புறது பார்த்துட்டு தான் இருந்தாங்க ஒரு வார்த்தை வந்து பேசல.

இல்ல நீயே மா இப்படி இருக்கிற நம்மள மதிக்காதவங்க வாசல்ல நாம மிதிக்கலாமா? விடுமா நம்மள மதிக்கறவங்க வீட்டுக்கு நாம போனா போதும் அவங்க கூட பேசினா போதும் இவங்க எல்லாம் யாருமா நம்ம நிலைமை இப்படி எல்லாம் போயிரு மா நான் மாத்தி காட்டுவேன் பாரு.

என்னவோ சொல்ற தேவிகா எனக்கு எதுவுமே புரியல சில விஷயங்களை புரியாமல் இருக்க வரைக்கும் நல்லது தான் மா.



தொடரும்..
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top