New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே.. அத்தியாயம்-4
நவநீத் அம்மா கலைவாணி இன்று எப்படியாவது தேவிகாவைப் பார்த்து பேசி விட வேண்டும். நவநீத் வெளியூர் சென்று இருக்கும் நேரத்தில் தான் இவளிடம் பேச முடியும்.
நவநீத் வெளியூர் சென்றது தெரியாமல் தேவிகா பார்க் வந்து அவன் வருகிறானா? என்று எதிர்பார்த்து காத்திருந்தாள்.
நேரம் தான் கடந்ததோ தவிர அவன் வந்தபாடில்லை சரி இனிக் கிளம்பலாம் என்று தேவிகா எழுந்து கொள்ள அதை வரை மரத்தின் பின்னால் இருந்து அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்துக் கொண்டு இருந்த கலைவாணி தேவிகா முன்பாக வரவும். முதலில் அவரை இங்கே எதிர்பார்க்காமல் வந்த அதிர்ச்சியை முகத்தில் காட்டினாலும். பிறகு அதிலிருந்து சுதாரித்தவள் ஆண்ட்டி வாக்கிங் வந்தீங்களா?
நீங்க மட்டுமா தனியாக வந்தீர்களா? இல்லை நதியா வந்து இருக்கிறார்களா?
தேவிகா மட்டுமே பேசிக் கொண்டு இருக்க கலைவாணி பதில் எதுவும் பேசாமல் தேவிகாவைப் பார்த்தவர். ஆமா நீ இங்கே என்ன? செய்து கொண்டு இருக்கிறாய்?
இது போல் அவர் கேள்வி கேட்பார் என்று எதிர்பார்க்காதவள் ஆண்ட்டி அது
ப்ரண்ட் வருகிறேனு சொன்னால் அது தான் வந்தேன். இப்போது தான் போன் செய்தாள் அவசர வேலை வந்து விட்டது. அதனால் தான் நான் கிளம்புகிறேன்.
ப்ரண்ட் என்று சொன்னாயே பையனா? இல்லை பொண்ணா?
இந்தக் காலத்தில் முனுக்முனுக்குனு இருக்கிறவங்களைத் தான் நம்பவே முடியாது. பெண் பிள்ளைகள் எல்லாம் அமுக்குனி மாதிரி இருந்து விட்டு கடைசியில் காதல் என்று எவனோடவோ ஓடிப் போய் விடுவது.
அது தாண்டி மா ஒரு அக்கறையில் தான் கேட்டேன். அப்புறம் நான் உன்கிட்ட பேசத்தான் வந்தேன். வாக்கிங் எல்லாம் வரவில்லை. அதென்ன
நல்லா படிச்சு வாட்டசாட்டமா எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையனைப் பார்த்து அப்படியே எதைக் காட்டி வளைச்சி போடுவீங்க.
ஆண்ட்டி நீங்க என்ன சொல்ல வருகிறீங்க என்று எனக்குப் புரியவில்லை.
ஆமாண்டி அம்மா நான் சொல்வது உனக்கு எப்படி புரியும். நீ தான் என் பையனை அல்லவா? உன் வலையில் விழ வைத்து இருக்கிறாய்? பெத்தவ நான் பேசுவது உனக்குப் புரியாது.
நீ அவனுக்கு கண்ணில் சிக்னல் காண்பிக்கிறதும் அவன் அப்படியே மகுடிக்கு கட்டுபட்ட பாம்பு போல் உன் பின்னால் வருவதும் என்ன இரண்டு பேருக்கும் நடுவில் எல்லாமே முடிந்து விட்டது? இல்லை வயித்தை ..
ஆண்ட்டி நீங்க ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு இப்படி பேசுகிறீர்கள் என்று தேவிகா சொல்லவும்.
அப்படின்னா நவநீத் நீ அண்ணனா தான் நினைக்கிறாயா?
அதில் தலையை நிமிர்த்திய தேவிகா ஆண்ட்டி ப்ளீஸ் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது போல் நானும் அவரும் உயிருக்குயிரா விரும்புகிறோமே தவிர அவர் சுண்டுவிரல் கூட என் மேல் படலை.
ஆமாண்டி நீ எதைக் காட்டி மயக்கினாலும் அவன் அப்படி ஒன்றும் மயங்கி விட மாட்டான். அவன் என் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். நான் சொல்லும் பெண் கழுத்தில் தான் தாலி கட்டுவான்.
தேவிகா அழுதுகொண்டே தலையைக் குனிந்து கொண்டாள்.
அத்தோடு விட்டாங்களா? கலைவாணி ஆமா நீ என்ன அடங்கிப் போவதற்கு உனக்கு அப்பாவா இருக்கிறார். ஆம்பளை இல்லாத வீடு அது தான் சுகம் தேடி அலைகிறாயோ? உன் அம்மா தான் சொல்லி விட்டார்களோ? நல்ல குடும்பத்துப் பையனை வளைச்சிப் போட்டுக்கோ என்று அது தான் பக்கத்து வீடு செலவே இல்லாமல் ஆத்தாளும் மகளும் மாப்பிள்ளை தேடிக் கொண்டு விட்டீங்களா?
அது தானே உங்க அம்மாவும்
சொல்லிக் கொடுத்து இருப்பா
நான் ஒத்தையிலே இருக்கேன் நீ நல்ல பவிசா பக்கத்து வீட்டுப் பையனை அமுக்கிக்கோ ஏண்டி என்னைய என்ன கேணச் சிறுக்கி என்று நினைத்தாயா?
நான் வந்து உன்னிடம் பேசியதை எங்கேயாவது அவனுக்கு போன் செய்து சொன்னாய்? இத்தனை நேரம் உன்னிடம் பேசியதை உன் ஆத்தா முன்னாடி சொல்வேன். ஊரைக் கூட்டி சொல்வேன். எப்படி தெரியுமா? அம்மாகாரியே
மகளை ஆம்பளை தேடச் சொன்னால் என்று அவர் பேசப் பேச.
ஆண்ட்டி தயவுசெய்து என் அம்மாகிட்ட சொல்லி விடாதீங்க
ப்ளீஸ்.
அப்படீனா நீ நவநீத் கிட்ட இருந்து விலகி விடவேண்டும். அவனுக்கு
நதியா இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் நீ அவனைக் காதலித்தது உண்மையா இருந்தா என் பையனை விட்டும் இந்த ஊரை விட்டும் போய் விடுங்க. எனக்கு என் பெண் பையன் வாழ்க்கை தான் முக்கியம் என்று கறாராக
சொன்னார்.
உன்னைக் காதலித்தை அவனிடம் கேட்டதிற்கு அவன் தான் நான் வெளியூர் போன பிறகு அவளிடம் நீங்களே பேசி விடுங்கள் என்று சொன்னான். அவனுக்கு தொழில் செய்வதற்கு அவர்கள் பெண் வீட்டில் தொகை கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். அதனால் அவனும் மனசு மாறிவிட்டான். ஆனாலும் உன்னை நேருக்கு நேராக பார்த்து பேசுவதற்கு அவனுக்கு தயக்கமமாம் அது தான் நான் வந்தேன்.
நவநீத் சொல்லி பேச வந்தது போல் தேவிகாவிடம் இல்லாத பழியைப் போட்டு விட்டார். ஆனால் பாவம் தேவிகா தன்நிலையில் அவர் நவநீத் சொல்வதாக சொல்வது பொய் என்று அவர் முகத்தைப் பார்த்து இருந்தால் தெரிந்து இருக்குமோ? என்னவோ? அவள் அழுதுகொண்டு குனிந்து இருந்தது கலைவாணிக்கு வசதியாகப் போய் விட்டது.
இங்கே நான் பேசியதை அவனிடம் சொல்லி ஏதாவது ஆதாயம் தேட நினைத்தால் உன்னையும் உன் ஆத்தாளையும்
பலான தொழில் செய்கிறீங்க என்று கதை கட்டி விடுவேன். ஏன் என்றால் நான் தான் பக்கத்து வீடு அது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இது உங்களுக்கு வாடகை வீடு தானே அவன் வெளியூரில் இருந்து வருவதற்குள் வேறு எங்கேயாவது போய்த் தொலையுங்கள்.
கலைவாணி பேசி முடித்து விட்டு இப்போது வெடுக்கென்று சென்று விட்டார். ஆனால் அழுது கொண்டே இருந்தவள் எத்தனை நேரம் இருந்தாலோ? தன் மேல் மழைத்துளி விழுந்ததும் தான் சுற்றிலும் பார்த்தாள். இருட்டு கவ்வி இருந்தது.
தன் தாயை நினைத்தவள் இப்போது வீட்டிற்கு செல்ல முடிவு எடுத்தாள். காதல் தோல்வி என்று தன் வாழ்வை முடித்துக் கொள்ள நான் ஒன்றும் முட்டாள் இல்லை. என் அப்பாவோடு போராடி என் தாய் என்னை வளர்க்க தன் ஆசைகளை எல்லாம் துறந்து
எனக்காகவே வாழ்ந்தவர். இனி நான் என் அம்மாவிற்காக வாழ்வேன்.
எங்களிடமும் பணமும் தொகையும் பரம்பரை சொத்தும் இருந்து இருந்தால் என் காதல் வாழ்க்கை கிட்டி இருக்குமோ? என்னவோ? சரி பூக்கின்ற பூக்கள் அனைத்துமே பூஜைக்கா போகிறது. அது போல் தான் வாழ்க்கையும் என்று நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
மனது முழுக்க கவலை இருந்தாலும் எப்படி தான் வீடு வந்தாலோ? அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும்.
கலைவாணி வெளியே வந்து பார்த்தவர். பொட்டச்சி வீடு வந்து சேரும் நேரம் பார் என்று சாடை போட்டுக் கொண்டு போனார்.
தேவிகா நின்று அவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு
அவளின் வீட்டிற்குள் சென்றவள். சீரியல் பார்த்துக் கொண்டு இருந்த தன் தாய் யசோதா மடியில் படுத்துக் கொண்டாள்.
தனக்கு ஆறுதல் தாய் மடி தான் என்பதை உணர்ந்து படுத்து இருந்தவள். உள்ளம் குமுறிக் கொண்டு இருந்தது. தான் அழுதா தன் தாய் பதறி விடுவாங்க என்று படுத்து இருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.
யசோதா தான் சாப்பிடாமல் தூங்கும் மகளை எழுப்பி பால் மட்டும் குடிக்க வைத்து அவளது அறையில் போய் படுக்க வைத்தார்.
மகளின் முகத்தைப் பார்த்து எதுவோ சரி இல்லை என்று நினைத்தவர். அவளாக சொல்லும் வரை நாம் கேட்கக் கூடாது என்று ஒருவேளை நாம் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஏதாவது கவலையில் இருக்கிறாளோ? இல்லை யாரையாவது காதலிக்கிறாளோ? என்று பயந்து கொண்டு இருந்தார்.
இந்தக் காலத்தில் காதல் என்றாலே திருமணம் வரையிலும் காத்திருக்காமல்
அதற்கு முன்பே எல்லாத் தவறும் செய்து விடுகிறார்களே. ஆனாலும் நான் வளர்த்த தேவிகா என் வயிற்றில் பிறந்தவள் இது போல தவறு செய்து இருக்க மாட்டாள். என்று மனதை பலவாறாக தேற்றிக் கொண்டு அவரும் தூக்கத்தை தொலைத்து வெகு நேரம் கழித்து தான் தூக்கத்தை தழுவினார்.
நவநீத் காலையில் சென்றது இன்டர்வியூ தொடர்ந்து பலமுகத் தேர்வுகளை முடித்து தான் தங்கி இருக்கும் ஹோட்டல் வந்தவன்.
தேவிகாவிற்கு அழைக்கலாம் என்று நினைத்து செல்போனை எடுத்துப் பார்த்தால் ஜார்ஜ் இல்லை. சரி என்று அதை ஜார்ஜ் போட்டு விட்டு அசதியில் அவனும் தூங்கி விட்டான்.
திடீரென தேவிகா தன்னைவிட்டு விலகிச் செல்வது போல் அவள் இறந்து விட்டால் ஒரு விபத்தில் என்பது போல் கனவு வர பயந்து விட்டான்.
தூக்கத்தில் இருந்து எழுந்தவன் அப்போது தான் அது கனவு என்பதை உணர்ந்து போனை எடுத்துப் பார்த்தால் மணி இரண்டு இந்த நேரத்தில் அவள் தூங்கிக் கொண்டு இரூப்பா காலையில் அழைத்துப் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து அவளின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டு அப்படியே கண்ணயர்ந்தான்.
காலைக் கனவில் காதல் கொண்டதும் அது கண்விழித்ததும் கலைந்ததும்
மாதிரி ஆகி விட்டது. தேவிகாவின் நிலை..
நவநீத் போன் நம்பர் ப்ளாக் செய்து விட்டாள். அவனுக்கும் இவளுக்கும் இடையில் ஒரு பெண் தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். அதை உணராமல் இரண்டு காதல் நெஞ்சங்களும் தவிக்கிறது பார்ப்போம் என்னவென்றே தெரியாமல் நவநீத் ஒருபுறமும் தேவிகா நாம் இனி எந்த ஊருக்குப் போவது தனது படிப்பும் பாதியில் இருக்கிறது என்று நினைத்து இருக்க.
அதற்கு தீர்வாக யசோதா வேலை செய்வது அரசு வேலை அதனால் அவருக்கு கோயம்புத்தூர் மாற்றலாகியது. அதுவும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்
வடவள்ளி அருகில் வேளாண்மை
அறிவியல் ஆராய்ச்சி மையத்தில்
அதனால் இப்போது யசோதா தனது மகளான தேவிகாவிடம்
இந்த விடயத்தை சொல்ல வருகிறார்.
தேவிகா எனக்கு கோயம்புத்தூர் மாற்றலாகி இருக்கிறது. உனக்காகத் தான் யோசிக்க வேண்டி இருக்கிறது. நாம் போகலாமா? இல்லை இங்கேயே இருக்கலாமா?
அம்மா எனக்கும் ஒரே ஊரில் இருந்து போர் அடிக்கிறது மா என்று எப்படியோ? இங்கே இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து தன் தாயைக் கட்டி அனைத்துக் கொண்டாள்.
தொடரும்...