New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 19
கலைவாணி என்னது நாம கடைக்கு போகும் போது நின்னுட்டு இந்த கார் இன்னும் நின்னுட்டு இருக்குது.
ஒரு வேலை மாப்பிள்ளை வீட்டிலிருந்து நம்ம குடும்பத்தை பத்தி விசாரிக்க வந்து இருப்பாங்களோ? , என்று சந்தேகமாக காரை பார்த்துக் கொண்டே நின்று இருந்தார்.
நதியா உங்க அம்மா காரையே பார்த்துத்துவிட்டு இருக்காங்க டா.
அது தெரியுது இல்ல அப்புறம் நான் ஏறிய பிறகு ஏன்டா இன்னும் காரை இங்கேயே நிறுத்தி வெச்சுட்டு இருக்க என்று அழுது கொண்டே கூறினால்.
எதுக்குடி அழுகிற உங்க அம்மாக்கு சந்தேகம் வருதோ இல்லையோ? நீ அழுது காட்டிக் கொடுத்துடுவாய் போலவே.
என்ன விலையாரையடா எங்க அம்மாக்கு மட்டும் தெரிஞ்சதுனு வச்சுக்கோ நம்மள பிரிச்சுட்டுத் தான் வேற வேலை வைப்பாங்க நானே அவங்க கடைக்கு போற சமயம் பார்த்து தப்பிச்சு வந்திருக்கிறேன். சீக்கிரம்டா கார் எடுடா உங்க கையில் தாலி வாங்க வரைக்கும் எனக்கு இந்த பதட்டம் இருக்கும்டா எங்க அம்மா பாக்குற மாப்பிள்ளை எல்லாமே சொட்டைத்தலையா இருக்கிறானுங்க என்று அழுது கொண்டு சொன்னால்.
அப்ப மாப்பிள்ளை சொட்ட தல தான் உனக்கு பிரச்சனையா? ஒருவேளை எதிர்காலத்தில் எனக்கு சொட்டு தலையாயிருச்சுனா?
டேய் உனக்கு விளையாட இது தான் நேரமாடா உன்னை நினைச்சு மனசுல என்னால வேற யாரையுமே நினைக்க முடியாதுன்னு நான் இத்தனை நாள் எங்க அம்மா கூட மல்லு கட்டிக்கிட்டு இருக்குறேன். அதையும் இதே காரணத்தை சொல்லி ஆனால் எங்க அம்மா அதை புரிஞ்சுக்காம எப்படியாவது என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துடுவேன்.
அப்படிங்கிறதுல குறியா இருக்குதுடா அது வேணாம் எங்க அண்ணன் கிட்ட சொன்னதுனால இத்தனை அவசரமா நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறான்.
இதெல்லாம் இப்போ உட்கார்ந்து பேசுறதாடா ஏற்கனவே உனக்கு தெரிஞ்சதுதானே.
கலைவாணி காரின் அருகில் வர முயற்சிக்கும் போது கார் நகர்ந்து விட்டது .நாமதான் தெரியாம யாரோ மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துருக்காங்க விசாரிக்கிறது என்று நினைத்துவிட்டோம். இது யாரோ வேற வீட்டுக்கு வந்து இருக்கிறது போல இருக்குது என்று கலைவாணி திரும்பவும் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
எப்படி இருந்தாலும் அவ ரெடி ஆயிட்டு இருப்பா இப்ப போயி தொந்தரவு பண்ண வேண்டாம். நாம வரவங்களுக்கு ஸ்வீட் காரம் பண்ணலாம் என்று கலைவாணி அடுப்பங்கரைக்கு சென்று விட்டார் .
அவர் அறியாதது நதியா இப்போது வீட்டில் இல்லை. என்பது ஏற்கனவே சொல்லி இருந்த காரணத்தினால அவ குளிச்சு ரெடியா இருப்பா நாம மாப்பிள வீட்டுக்காரர் வந்த பின்னால போயி அவள கூப்பிட்டு வந்து நிக்க வச்சுக்கலாம்.
அவ கையால காப்பி கொடுக்க வச்சுக்கலாம் இப்பவே போய் சொன்னமுனா கண்டிப்பா எதிர்த்து பேசுவா சண்டை வரும் அப்புறம் பிளான் பண்ணிக்கொண்டு , வர்ற மாப்பிள்ளைக்கு முன்னால ஏதாவது சிக்கலில் இழுத்து விடுவா என்று அமைதியாக சமையலறையில் வேலையை செய்து கொண்டிருந்தார்.
கலைவாணிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எப்படியோ நதியா ரமேஷ் உடன் காரில் வந்தவள் ரமேஷின் வீட்டின் அருகே இருக்கும் பியூட்டி பார்லர் சென்று மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு சரியாக 9:00 மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலை சென்றடைந்தனர்.
ஒன்பது அரை மணிக்குள் முகூர்த்தம் இருப்பதால் அந்நேரம் நிறைய மணப்பெண்கள் மணமக்கள் நிறைந்திருந்தனர்.
அதனால அந்த கூட்டத்தில் தெரிஞ்சுவங்க இருந்தாலுமே நிறைய பொண்ணு மாப்பிள்ளைக்கு ஒரே நேரத்துல கல்யாணம் ஆகுறதுனால அது அவளுக்கு வசதியாக போய்விட்டது .
ரமேஷின் குடும்பத்தார் மற்றும் நவனீத் அங்கே இருந்தனர். இவர்கள் உள்ளே வந்ததும் மலர்மாலையை கொடுத்து இருவரும் மாற்ற வைத்து ஐயர் சாமி பாதத்தில் வைத்த திருமாங்கல்யத்தை கொண்டு வந்து ரமேஷ் இடம் கொடுக்க ரமேஷ் நதியாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தன் மனைவியாக தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.
ஐயர் சொன்னது போலவே அவளின் நெற்றியில் குங்குமம் வைத்து பிறகு கோவிலை சுற்றி வந்தனர் .
அவ்விடத்தில் கலைவாணி மட்டும்தான் இல்லை ஆனால் ரமேஷின் குடும்பத்தார் அனைவரின் ஆசிர்வாதத்தோடு அம்மனின் அருளால் நதியாவுக்கு திருமணம் நடைபெற்றது.
இருவரையும் அங்கே அலுவலகத்தில் இவர்களது இருவரின் திருமணமும் பதிவு செய்யப்பட்டது.
இங்கே கலைவாணி மாப்பிள்ளை வீட்டார் வந்து விட அனைவரையும் அழைத்து வரவேற்பு அறையில் அமர வைத்திருந்தார்.
வாங்க வாங்க பரவால்ல சொன்ன நேரத்துக்கு கரெக்ட்டா வந்துட்டீங்க ஆமாங்க சம்பந்தி இன்னைக்கு வெள்ளிக்கிழமை பத்தரை டு 12 ராகு நேரம் அதுக்குள்ள பொண்ண புடிச்சிருச்சுனா நிச்சியம் பண்ணிக்கலாம் ,அப்படின்னு தான் எல்லாம் ஏற்பாடு பண்ணி இருந்தோம் எங்களுக்கெல்லாம் புடிச்சுட்டே இருந்தது இருந்தாலும் பையனுக்கு தான் வெளிநாட்டில் இருந்த இன்னைக்கு காலையில் வந்த சரி போய் பேசிட்டு வந்தரலாம் பொண்ணு புடிச்சிருந்ததுனா இன்னைக்கே நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டேன்.
அதுதான் வந்த அம்மா நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க .இதுல தப்பா நினைக்க என்ன இருக்குதுங்க நானும் ரொம்ப நாளா புள்ளைக்கு கல்யாணம் பண்ணனும்னு அப்படிங்கிற ஆசைல மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்த எனக்கு ரொம்ப புடிச்சி இருக்குதுங்க நீங்க பேசுறதுமே இன்னைக்கே நிச்சயம் பண்றதுனால எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைங்கோ இன்னைக்கு நிச்சயம் பண்ணி அடுத்த வாரத்தில் கல்யாணம் வைத்தாலும் கூட ஒன்னும் பிரச்சனை இல்லைங்க.
அதெல்லாம் பண்ணி போடலாம் சரி எல்லாரும் உட்காருங்க..நான் போய் பொண்ணா கூப்பிடுறேன் என்று இப்போதுதான் கலைவாணி நதியாவின் அறைக்குச் சென்றார்.
அங்கே சென்று பார்க்கும் போது நதியா இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
ஒருவேளை பாத்ரூம்ல இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கிறா என்று குளியலறை சென்று பார்த்தார் .அங்கே அவளை காணவில்லை.
எங்க போனான்னு தெரியலையே வீட்டுக்குள் அல்லவா இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஐயோ மாப்பிள்ளை வீட்டுக்காரர் வேற வந்து உள்ள உக்காந்து இருக்காங்களே இவ எங்க போனான்னு தெரியலையே? நாம் இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர் வரச்சொன்னது இவளுக்கு தெரியாதே! இப்படி தப்பிச்சு எங்க போயிருப்பா ஏதாவது பக்கத்து வீட்டுக்கு போய் இருப்பாளோ?
இதோ போய் பார்க்கலாம் என்று வீட்டின் பின்பக்க வழியாக பக்கத்து வீட்டில் சென்று விசாரித்தார். பிரேமா நதியா இங்க வந்தாளா?
இல்லைங்க அக்கா இங்க வரல உங்க வீட்டுக்கு முன்னால தான் நிறைய கார்ல வந்து நிக்குது மறுபடி மாப்பிள்ளை வீட்டுக்காரர் வந்து இருக்காங்களா? சரி சரி பொண்ணு இருந்தா கேட்கத்தானே செய்வாங்க..
ஐயோ இவன் எங்க போனான்னு தெரியலையே அவங்க வேற வந்து உட்கார்ந்துட்டு இருக்காங்க நான் என்ன பதில் சொல்லுவேன். தெரியல சரி ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று இப்போது வீட்டுக்குள் வந்தார் .
வந்து மாப்பிள்ளை வீட்டார்களோடு பேசிக்கொண்டு இருந்தார் .
என்னம்மா? பொண்ணை வரச்சொல்லு எத்தனை நேரம்தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது .நல்ல நேரம் போயிட்டு இருக்குதுல்ல.
பியூட்டி பார்ல போய் இருக்கிறாளுங்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்ச பியூட்டி பார்லர் போய் அழகு பண்ணிட்டு வரேன்னு போன இருந்து இப்ப வந்துருவா இன்னொரு பத்து நிமிஷத்துல என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் மற்றும் ஒரு கார் வந்து நின்றது என்று கலைவாணி வாசலுக்கு சென்றவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் நதியா மாலையும் கழுத்துமாக ரமேஷ் உடன் ஜோடியாக நின்றிருந்தாள். பக்கத்திலேயே நவநீத்தும் இருந்தான்.