New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 18
தேவிகா தனது தோழிகள் அனைவரும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்தால் அதை விட பெஸ்ட் வேறு ஏது மா என்று சொல்லவும்.
யசோதா உன் விருப்பம் போலவே அமையட்டும். நானும் ஒத்த பெண் எங்கோ பாசை தெரியாது ஊரில் தனியாக இருக்கிறாள் என்று பயப்பட மாட்டேன்.
சரி போய் ரெஸ்ட் எடுமா?
சரிங்க அம்மா என்று சொன்னவள் தனதறைக்குச் சென்றவள். எனக்கு வேலை கிடைத்து விட்டால் போதும் இனிப் பார்ப்பது எல்லாம் புது மனிதர்கள். ஒரு பெண்ணுக்கு
வேலை என்பது எவ்வளவு முக்கியம்.
அதே நேரத்தில் கலைவாணி தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அடுத்துடுத்து மாப்பிள்ளை பார்ப்பதில் மும்முரமாக இருந்தார்.
நதியாவிற்கு பயமாக இருந்தது. இதற்கு மேல் தாமதித்தால் நம் காதலுக்கும் அம்மா சமாதி கட்டி விடுவார் என்று நவநீதிற்கு அழைத்து தனது பேசினாள்.
அண்ணா..
சொல்லு நதி..
அம்மா மறுபடியும் மாப்பிள்ளை வேட்டை ஆரம்பித்து விட்டாங்க எனக்குப் பயமாக இருக்கிறது.
அம்மாவிடம் நேரடியாக உன் காதல் விவகாரத்தைச் சொல்ல வேண்டியது தானே.
ஏனுங்க அண்ணா அம்மாவைப் பற்றி தெரிந்தும் நீங்கள் சொல்வது தான் வியப்பு அளிக்கிறது. உங்கள் காதலை பிரிக்கத் தெரிந்த அம்மா என் காதலைச் சொன்னால் முதல் வேளை என்னை வீட்டோடு வைத்து பூட்டி விடுவார்கள் என்று சொல்லி அழுதாள்.
நதியா கொஞ்சம் கூட தைரியம் இல்லாதவங்க காதலிக்கக் கூடாது.
அண்ணா நீங்க என்று பேச்சைப் பாதியில் நிறுத்தினால் நதியா.
நதியா நீ கேட்க வருவது எனக்குப் புரிகிறது ஏன் உங்களுக்கு அந்தத் தைரியம் இல்லையா? இந்த ஆறுமாதகாலமாக உங்கள் காதலியைத் தேடவில்லையா?
அதைத் தானே கேட்க வருகிறாய்? அதற்குள் உனக்கு என்ன தயக்கம். நான் தேவிகா எங்கு இருக்கிறாள் என்று கண்டுபிடித்து விட்டேன். அவுங்க
இங்கே இருந்து போன பத்து நாட்களில்..
அப்புறம் நீங்க அண்ணி கூட பேசுனீர்களா? அவுங்க என்ன சொன்னாங்க? உங்கள் காதல் தொடர்கிறதா?
ஒவ்வொரு கேள்வியா கேளு நதியா? ஆனால் எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை.
ஏன்? அண்ணா..
அது நான் அவள் இருப்பிடம் தெரிந்ததும் சென்றேனா? அவள் முகத்தில் இருக்கும் வேதனையைப் பார்த்து அத்தனை துயரம் எனக்கு தினமும் அவள் ஒரு கோவிலுக்குப் போவாள். நான் அப்படி ஒரு நாள் அவள் போகும் போது என் முகத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டு அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தேன் டா அங்கு கோவிலில் இருக்கும் சாமியோடு தன் கவலைகளை எல்லாம் சொல்லி அழுது கொண்டு இருந்தாள்.
என்ன அண்ணா சொல்கிறீங்க?
நீங்கள் உடனடியாகப் போய் அவுங்க அழுகையை நிறுத்தி இருக்க வேண்டியது தானே.
அவள் சாமிகிட்ட சொன்னதைக் கேட்ட பிறகு என்னால் அவள் முன் போக முடியவில்லை. நம் அம்மா அவள் மனதை அவ்வளவு தூரம் காயப்படுத்தி இருக்கிறார்கள்.
அவள் இனி வாழ்நாளில் நவநீத் பார்க்கவே கூடாது. இனி அவன் என் வாழ்க்கையில் இல்லை என்று அழுது கொண்டு இருந்தாள். நானும் வாரவாரம் வீக் எண்ட் அவளைப் போய் பார்த்துக் கொண்டே தான் இருந்தேன்.
முதலில் சோகமாக இருந்தவள் அவளது தோழிகளால் கொஞ்சம் கவலை மறந்து இருக்கிறாள். நான் திரும்பவும் அவள் வாழ்க்கைக்குள் போவதிற்கு எனக்குத் துணிவில்லை.
அண்ணா நீங்க பேசுவது உங்களுக்கே நியாயமா படுதா? நீங்கள் இரண்டு பேரும் உயிருக்கு உயிரா பழகிட்டு இருந்தீங்களே.
தேவிகா நம் அம்மா சொன்னதை இவ்வளவு தூரம் நம்பிக் கொண்டு என்னிடம் தொடர்பு கொண்டு பேசிவில்லை. ஒரு வேளை அவள் நான் விடயம் தெரிந்து அழைப்பு விடுக்கும் போது என் நம்பரை பிளாக் செய்து வைக்காமல் இருந்து இருந்தால் நான் அவளிடம் உண்மையைச் சொல்லி இருப்பேன். சரி விடு மா என் வாழ்க்கை பற்றி இப்போது பிரச்சினை இல்லை. நான் உன் காதலை சேர்த்து வைக்கிறேன்.
நான் இந்த வாரம் ஊருக்கு வருகிறேன். உன் திருமணத்தை எப்படியாவது முடித்து விட்டு பிறகு தான் நான் என்னைப் பற்றி யோசிக்க வேண்டும்.
நீ எப்ப வருவேனு இருக்கிறது அண்ணா நம் இந்த வாரமே ஒரு மாப்பிள்ளை அழைத்துக் கொண்டு வருகிறேன் பொண்ணு பிடித்து இருந்தால் நிச்சயம் செய்து விடலாம் என்று பேசிக் கொண்டு இருந்தாங்க.. ஏதாவது தவறாக நடந்தால் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.
பாப்பா அவசரப்பட்டு தவறான முடிவு எடுத்து விடாதே. நான் உனக்கு எப்போதும் துனையாக இருப்பேன் என்று முதலிலேயே அவளுக்கு சொல்லி இருந்தான்.
அதன்படி மதுரை சென்றவன் தனது நண்பன் வீட்டில் தங்கிக் கொண்டு நதியா ரமேஷ் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட எண்ணி முதலில் ரமேஷ் வீட்டில் நவநீத் சென்று பேசி சம்மதம் வாங்கி விட்டான்.
தம்பி உங்கள் அம்மா ஏதாவது ரகளை செய்தா என்ன செய்வது தம்பி.. எங்களுக்கு சாதி பணக்காரர் ஏழை என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. என் பெரிய பையனுக்கும் அவன் விருப்பப்படி தான் திருமணம் செய்து வைத்தோம். எங்கள் தரப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை.
அதே போல் உன் தங்கையும் முதலில் சம்மதித்து விட்டு பிறகு
கடைசியில் உங்கள் அம்மா ஏதாவது உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சொன்னால் மனசு மாறி விடக் கூடாது சரியா?
நதியா அது போல் எல்லாம் மாற மாட்டாள். அவளே என்னிடம் தெரிவித்ததால் தான் நானே இவ்வளவு தூரம் அவளுக்காக பெங்களூரிலிருந்து வந்து இருந்தாலும் வீட்டிற்குச் செல்லாமல் நண்பன் வீட்டில் தங்கி இருக்கிறேன்.
நாளைக்கு வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் கோவிலில் முகூர்த்தம் முடித்து விட்டு கோவிலேயே திருமணத்தை பதிவும் செய்து விடலாம். பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து கொஞ்சம் கிரேண்டா ரிசப்பசன் வைத்துக் கொள்ளலாம்.
சரிங்க சார் நீங்கள் என்ன சொன்னாலும் ஓகே.. நான் இப்போதைக்கு நதியாவிற்கு பத்து பவுன் தான் போட முடியும் என்னிடம் அவாவளவு தான் பணம் இருக்கிறது. இனி மேல் வரும் காலங்களில் அவளுக்கு செய்து போட்டு விடுகிறேன்.
நவநீத் நீ தவறாக எடுத்துக் கொள்ளாதே நீ வரதட்சிணை கொடுக்காதே எங்கள் வீட்டிற்கு வாழ வருப்போகும் மகாலட்சுமி அவளுக்கு என்ன தேவையோ? அது என் மகன் அவன் பொண்டாட்டி ற்கு வேணுமாகிறதை வாங்கிப் போட்டுக் கொள்வான்.
அதனால் நீ தயங்கித் தயங்கி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
எங்கள் வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு நாங்களே நகை போட்டுக் கட்டிக் கொள்வோம். அதெல்லாம் மூத்த மருமகளுக்கு எடுக்கும் போதே சின்னமருமகளுக்கும் எடுத்து வைத்து இருக்கிறாள் என் மனைவி.. நீங்கள் நதியாவை நாளைக்கு கட்டின சேலையோடு
அனுப்பி வைத்தாள் போதும்
இதை நாங்கள் ஒரு கோட்பாடாகவே வைத்து உள்ளோம்.
தம்பி இதில் உங்களுக்கு சம்மதம் என்றால் மேற்கொண்டு பேசலாம். நான் எனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் இப்போதே கோவிலில் பேசுகிறேன்.
ரொம்ப சந்தோஷம் சார் உண்மையில் நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையா? இருக்கிறீர்கள். உண்மையில் என் தங்கச்சி தான் கொடுத்து வைத்தவள் இவ்வளவு நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப் படுவதற்கு.
தம்பி இன்னும் சார் என்று மூன்றாவது மனுசன் கூடப் பேசுவது போல் பேசாமல் மாமா என்று உரிமையோடு பேசுங்கள்
உண்மையில் நான் தான் உங்களைப் பார்த்து பெருமைப் பட வேண்டும்.
ஏனுங்க மாமா? என்னைப் பார்த்து பெருமைப் படும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன்.
நவநீத் இந்தக் காலத்தில் தன் தங்கை வேறு சாதிப் பையனை காதலிக்கிறாள் என்று தெரிந்தாலே ஒன்னு பெண்ணைக் கௌரவக் கொலை செய்து விடுகிறாங்க இல்லாட்டி காதலிக்கிற பையனைக் கொன்று போடுகிறாங்க இப்போது கூட செய்தியில் ஓடிக் கொண்டு இருக்கிறது.
மாமா நான் அந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டேன். ஏன்னா உயிர் என்பது விலை மதிப்பில்லாத ஒன்று.. நம்ம உயிரே நமக்குச் சொந்தமில்லாத போது அடுத்தவங்க உயிரை பறிக்கும் உரிமை நமக்கு இல்லைங்க.
மனிதர்கள் அனைவரின் உடலிலும் சிவப்பு கலரில் தான் இரத்தம் ஓடுகிறது. அதில் எல்லாம் ஆண்டவன் ஒரே மாதிரி தான் படைத்தார். இடையில் இருக்கும் மனிதர்கள் தான் சாதி வெறி கொண்டு திரிகிறார்கள்.
ரொம்ப சந்தோஷம் நவநீத் சின்ன வயதாக இருந்தாலும் பக்குவமாக பெரிய மனிதர்கள் போல் பேசுகிறாய்? சரிப்பா
நாளைக்கு எப்படியாவது உங்க அம்மாவின் அனுமதி வாங்குவது வாங்காதது உன் விருப்பம் நாங்க சந்தோசமாக சம்மதிக்கிறோம்.
சரிங்க நான் கிளம்புகிறேன். அதே போல் நவநீத் நதியாவிற்கு போனில் அழைத்து விவரம் சொல்கிறான்.
கலைவாணி நாளைக்கு மாப்பிள்ளை வீட்டார் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று பயத்தை போட்டு இருந்தார்.
நதியாவிற்கு விடிய விடிய தூங்கா இரவாகிப் போனது. தனது அம்மாவிடம் என்ன சொல்லி இங்கே இருந்து தப்பித்துச் செல்வது என்று விடிய விடிய சிந்தித்துக் கொண்டே இருந்தாள்.
நவநீத் எப்படியாவது நீ தெரு முனைக்கு வந்து விடு உனக்காக ரமேஷ் காரில் காத்திருப்பான். நான் வந்தா தெரிந்து விடும் என்று கூறி இருந்தான்.
அதே போல் கலைவாணி கடைக்கு சென்ற நேரம் பார்த்து நதியா தன்னுடைய சர்பிக்கெட்
தனக்கு தேவையான பொருட்கள் யாருக்குமீ சந்தேகம் வராத மாதிரி ஒரு சின்ன ஹேண்ட் பேக்கில் எடுத்துகீ கொண்டு நார்மலாக ஒரு சுடிதார் மட்டும் போட்டுக் கொண்டு மனது பூராவும் திக் திக் என்று பயத்தோட வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
நல்லவேளை வேறு யாரும் பார்க்குமீ முன் தெருமுனையை அடைந்து விட்டாள். காரிலும் ஏறி அமர்ந்து விட்டாள். அவள் ஏறிய சில நிமிடங்களில் தனது தாய் வருவதைப் பார்த்தவள் நெஞ்சமீ பதைபதைக்க இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கார்
சீட்டிற்கு கீழே அமர்ந்து விட்டாள்.
என்ன இருந்தாலும் பெத்த தாய்க்குத் தெரியாமல் தவறு
செய்கிறோமே என்று ஒரு வித பதட்டம் தான் காரணமாக இருந்தது.
ஏய் ஏண்டா இப்போது கார் சீட்டிற்கு கீழே அமர்ந்து விட்டாய்.
ரமேஷ் என் அம்மாடா அது தான் என்று கூறியவள் அவுங்க போனதும் சொல்லுடா என்று மூச்சை அடக்கிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
கலைவாணி இது என்ன நாம் கடைக்குப் போகும் போது நின்று இருந்த கார் இன்னமும் நிற்கிறது. ஒரு வேளை மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாராவது விசாரிக்கா வந்து இருப்பார்களோ? என்று காரேவையே உத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
நதி உங்கள் அம்மா சந்தேகமா நம் காரையே பார்க்கிறார்கள்.
நான் தான் வந்து ஏறிட்டேன் ல
சீக்கிரம் காரைக் கிளப்பு ரமேஷ் எனக்கு உன் கையால் தாலி வாங்க வேண்டும் இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு போக வேண்டும் என்று நதியா அழுது கொண்டு செல்லவும்.
கலைவாணி கார் அருகில் வரும் முன்னே கார் அவ்விடம் விட்டு நகர்ந்தது..
தொடரும்..