New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 17
அன்றைய பொழுது அப்படியே நகர்ந்தது.
அடுத்த நாள் காலையில் தோழிகள் மூவரும் தேவியாவின் வீட்டுக்கு சென்றனர் .
அப்போது உள் வேலையாக இருந்த யசோதா தேவிகா காலிங் பெல் அடிக்குது பொய் யாருன்னு பாருமா.
தோமா போற அவங்களா தான் இருக்கு டிபன் ரெடியா மா?.
இதோ எல்லா ரெடி பாப்பா தேவிகா கதவை திறக்கவும் உள்ளே வந்த தோழிகள் மூவரும் நீ இன்னும் ரெடி ஆகலையா?
அட எந்நேரமாகப் போகுது சீக்கிரம் ரெடி ஆயிடலாம் நான் குளிச்சாச்சு நீங்க வந்த பின்னால சாப்பிட்ட பிறகு டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கலாம்னு இருந்தேன்.
ஆமாண்டி ஐயோ வீட்டிலிருந்து இங்க வர்றதுக்குள்ள சிறுகுடல் பெருங்குடல் எல்லாம் உள்ள விழுந்து எல்லா உறுப்பையும் முழுங்கிட்டு இருக்குதுடி பயங்கர பசியா இருக்குது முதல்ல உங்க வீட்டு டைனிங் டேபிள் எங்க இருக்குதுன்னு சொல்லுடி.
ஆன்ட்டி எனக்கு ரொம்ப பசிக்குதுங்க ஆன்ட்டி .
ஆமா பாம்பு வந்திருச்சு படையல் போட்டா பூரா முழுங்கிட்டு தான் மத்த வேலை பார்க்கும்.
அதுவரைக்கும் நாம எதிர்க்க இருந்தால் கண்ணு தெரியாது.
ஏண்டி நீங்க எல்லாம் பசிக்கலைன்னா சாப்பிடாம விட்டுடுங்க உங்களுக்கு இருக்குறதையும் சேர்ந்து நானே சாப்பிடுகிறேன் .
ஆசை தோசை அப்பளம் வடை எங்களுக்கு பசிக்காதா?
அப்புறம் என்னடி நான் தான் சாப்பிடறேன் சாப்பிடுறேன் சொல்ற நீங்களே என்ன பண்றீங்க ?
அட டேய் பொண்ணுங்களே வாங்க சாப்பிட்ட அப்புறம் பேசலாம்.
செம செம ஆன்ட்டி நீங்கதான் என்னைப் பற்றி புரிஞ்சு வச்சிருக்கீங்க ..என்னன்னு ஐட்டம் பண்ணி இருக்கிறீங்க?
ஆமா எல்லாம் அப்படியே பச்சையா வச்சிருக்காங்க..காய்கறிகள் நீ எப்படி வாய்க்குள்ள போட்டு மென்னு முழுங்கிட்டு கொஞ்சம் சுடுதண்ணி ஊத்திக்கோ அதுவே வெந்துரும்.
பாருங்க ஆண்ட்டி எல்லாரும் எனக்கு என்ன கிண்டல் பண்றாங்க ..
அவங்க கிடக்கிறாங்க நீ உட்கார்ந்து சாப்பிடு ,
சாப்பாட்டு விஷயத்தில் எல்லாம் ஈகோ காமிச்சுட்டு பந்தா பண்ணிட்டு இருக்க மாட்டேன்.
எனக்கு பஸ்ட் சாப்பாடு தான் யார் என்று தெரியாதவர் வீடு நாம் எப்படி அங்கே சாப்பாடுவது என்ன பண்றதுன்னு கூச்ச நாச்சம் எல்லாம் பாக்கிறதில்லை.
பாப்பா நீங்க கலகலன்னு பேசுவீங்களா நீங்களா நேத்து தேவிகா காலேஜ்ல இருந்து வந்ததுல இருந்து உங்க புராணம் பாடிட்டு இருந்தா .எல்லாம் இங்கு கடைக்கு போறீங்களா?.
ஆமாங்க ஆன்ட்டி கடைக்காரர் ஈ யோட்டிட்டு இருக்கேன்னு போன் பண்ணாங்களா ?சரி நாம அப்பா சம்பாதித்து வைக்கிற பணத்தை எல்லாம் போய் அவங்களுக்கு கொடுத்துட்டு வரலாம்.
அப்படின்னு தான் ஏண்டி இத்தனை வட்டி கட்டுறோம் என்ன யார்கிட்டயும் நீ வட்டி கட்டுற?
அடியே அப்பப்ப டங்கு வேற ஸ்லிப் ஆயிடுது வரி கட்றம்ல அதை சொல்ல வந்தேன்.
ன்னடி திடீர்னு அரசியலுக்கு போயிட்ட அதெல்லாம் வர்றது சகஜம் தாண்டி எல்லா டாபிக்கும் தெரிஞ்சு வச்சுக்கோணும் .
ஒரு வாய் சாப்பிடுவதற்கு நீ என்ன ஓட்டு போடுற..ஆன்ட்டி இவ பேசுறத பாத்து நீங்களும் வெள்ளந்தியா? இருந்தீங்க சமையல் ரூம்ல இருக்கிறதெல்லாம் கொண்டு வந்து வைத்தீர்கள் என்றால் உங்களுக்கு பாத்திரமே மிஞ்சாது அதையும் முழுங்கி போடுவா?
கலாமுல்லா என்று பேசிக்கொண்டே அனைவரும் உணவருந்தி விட்டு ஆண்டி நாங்க கிளம்புறோம் .உங்க புள்ளை மறந்துடுங்கோ? என்று சங்கரி சொல்லவும்,
அடி பைத்தியமே அவிங்கள ஊர் புதுசு இப்படி சொன்னேனா நம்ம கூட தேவிகாவை அனுப்புவாங்களா?
ஆன்ட்டி நீங்க அவஅப்படி சொல்கிறாள் என்று தப்பா நினைச்சுக்காதீங்க? அவ சும்மா ஜோக் அப்படி பேசறா..
பரவால்லம்மா என்ன அவளை நீங்க என்ன அவ பையனா மறந்துட்டேன் அவளும் உங்கள மாதிரி புள்ள தான் போயிட்டு வாங்க பணம் பத்தலைன்னா எனக்கு போன் பண்ணுங்க நான் செல்லுல எப்படி அனுப்பிச்சு விடுறேன் .
ஆன்ட்டி உங்களுக்கு தங்கமான மனசுங்க ஆன்ட்டி கிளம்பி வாடி ஆன்ட்டி நாங்க போயிட்டு வரோம் இன்னைக்கு கடைக்கு போறோமா அதோட முடிச்சுக்கோ நினைக்காதீங்க நாளைக்கு மருதமலை போகிறோம்.
நீங்களும் வர்றீங்களா ஆன்ட்டி மருதமலை கோயில் தானே அப்படியே புளிச்சோறு தக்காளி சோறு எல்லாம் செஞ்சு எடுத்துட்டு போயிடலாம்.
அப்ப நீ புளிச்சோறு தக்காளி சோறு சாப்பிட மருதமலை கோவிலுக்கு போலாம்னு சொல்றியேடி முருகன பாக்குறதுக்கு இல்லையா என்று தேவிகா கேட்கவும் .
பார்ரா புள்ள பூச்சி எல்லாம் பேச ஆரம்பிச்சிருச்சு..
ஆமா நீ இந்த பேச்சு பேசுற அப்புறம் உங்க தோழியாக அவ பேசுறதுல என்ன தப்பு?
ஆன்ட்டி பாத்தீங்களா எங்க கூட சேர்ந்து கொஞ்ச நேரத்துல உங்க
பொண்ணு நையாண்டி பேச்சேலெல்லாம் தெரிய ஆரம்பிச்சிருச்சு. நீங்க கவலையே படாதீங்க நாங்க எல்லா லாங்குவேஜ் சொல்லிக் கொடுத்துடறேன்.
உனக்கு எத்தனை மொழிமா தெரியும் .என்னது? யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டீங்க எனக்கு இந்தியாவிலிருக்கிற எல்லா மொழியையும் தெரியும் ஆன்ட்டி.
எப்படிம்மா இந்த சின்ன வயசுல எல்லாம் மொழியுமே கத்துட்ட.
ஐயோ ஐயோ மொக்க போட ஆரம்பிச்சிட்டா..ஆண்ட்டி உங்களுக்கு காதில் ரத்தம் வராமல் இவ இன்னைக்கு விட மாட்டாள்.
ஏன் அப்படி சொல்ற அவ எத்தனை மொழிகத்துவைத்து இருக்கிறாள். அதனால தான் தேவிகா நீயும் அவ கூட பழகி வேற ஸ்டேட் மொழிகளை தெரிஞ்சுக்கமா..
உமா சங்கவி இருவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். சும்மா சொல்றாங்க ஆன்ட்டி இப்போ தமிழ்ல தமிழுமா மலையாளம் தெலுங்கு கன்னடா குஜராத்தி மராத்தி என்று இப்படி அவங்க மாநிலத்துல பேசுற மொழி இது சொல்லுவாங்க ஆன்ட்டி நீங்களே வெள்ளந்தியா நம்புறீங்களே என்று சங்கவி சொல்லவும்.
அப்ப இவங்க சொல்றது நிஜமா?
ஆமாங்க ஆண்ட்டி அது மொழிக்கு தானே அதனால தான் எல்லா மொழி தெரியும் சொன்னேன்.
அம்மாடியோ? உன்ற வாய் லேஸ் பட்ட வாய் இல்லை நீ எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வந்துருவ மா எது தெரியாட்டியும் தெரியும் என்று சொல்ற பார்த்தையா இதுதான் சாமத்திரியம் இப்படித்தான் இருக்கணும்.
சரிமா போயிட்டு வரேன் அனைவரும் துணி எடுக்க சென்றனர் .
என்னப்பா உப்புக்கிணறு சந்துன்னு சொல்லி கூப்பிட்டு போற அங்க என்ன கிணறு இருக்குமா?
ஆமாண்டி கிணறு இருக்கு பாதாளத்தில் கிணத்துக்குள்ள படி போகுமா அதுக்குள்ள நாம போனோம்னா அங்க பெரிய துணி கடை இருக்கும்.
எப்படி நீ தண்ணிக்குள்ள இறங்கி போறது?
அட லைஃப் ஜாக்கெட் குடுத்துருவாங்க அப்புறம் என்ன அதை போட்டு அப்படியே தண்ணில மிதந்து போனோம்னா போய் துணி எடுத்துட்டு வந்துக்கலாம்.
நம்ம துணி எல்லாம் நனைஞ்சிருமே ?
தேவிகா இப்படி டியூப் லைட்டாக இருக்கிற அவள் சும்மா ஒரு பேரு உப்பு கிணறு சந்து அப்படிங்கறது ரொம்ப சீப் ரேட் கிடைக்கும் நம்மளுக்கு துணி கிடைக்கும்.
என்னப்பா சொல்ற நெஜமாவா சொல்ற ?
ஆமா இப்போ நீ சென்னை சில்க்ஸ் இந்த போத்தீஸ் இதுகளுக்குள் போய் ஒரு ஆயிரம் ரூபா குடுத்து ஒரு சுடிதார் எடுக்கிறேனா அங்க போனோம்னா நம்ம ரூ. 300 ரூபாய்க்கு எடுக்கலாம்டி குவிஞ்சி கிடக்கு..நீ வேணா வந்து பாரு.
நெஜமாவா சொல்ற ஆமாம் பா எல்லாம் ஊர்லையுமே இது மாதிரி ஒன்னு இருக்கு சென்னையில டி நகர் எல்லாம் போய் எடுக்குறாங்களா அது மாதிரி தாண்டி ஒரு பொருள் சீப்பா வாங்கணும்னா கூட்டமா இருக்குங்க நாம போய் நம்ம திறமை பொறுத்து வாங்கி நல்ல பேரம் பேசி வாங்கிட்டு வந்துடுவோம்.
நாங்க எல்லாம் எப்பவுமே கடைக்கு போறோமோ இல்லையோ இங்கே வந்து விடுவோம்.துணிகள்லேடிஸ் தேவையான நெயில்பாலிஷ் கிளிப் எல்லாமே இங்கதான் நாங்க வாங்குவோம் .
ஏண்டி இன்னொன்னு விட்டுவிட்டாய்? லிப்ஸ்டிக்..
லிப்ஸ்டிக்கலா நான் போடறது இல்லடி அது போட்டோ சாப்பிடும் போது வாயில் எல்லாம் உள்ளே வயித்தில் போயிரும்..
இல்ல நீங்க வேணும் என்றால் வாங்குங்க நாம்
அப்படியே சாப்பிட்டு வந்துரலாம்.
ஏண்டி இப்பதாண்டி கொஞ்ச நேரம் ஆச்சு நீ சாப்பிட்டு அதுக்குள்ள அடுத்த சாப்பாட்டு வேலையை பத்தி இப்பவே பேசுற.
முதல்யே எல்லா பிளான் பண்ணி வச்சுக்கோணும் டி பிளான் பண்ணலன்னு வச்சுக்கோ வடிவேல் மாதிரி ஆயிடும் அதனால எந்தெந்த இடத்தில் என்ன அயிட்டம் இருக்குமோ நாம ரெகுலரா சாப்பிடுறோம். சுத்தறோம், ஆனா தேவிகாக்கு எதுவும் தெரியாது அதனால சொல்றேன் .
தோழிகள் இடையே பேசிக்கொண்டே அந்த கடையில் இருக்கும் துணி எடுத்து போடுபவர்கள் இவர்களோடு பேச்சில் கவரப்பட்டு சிரித்துக்கொண்டே இவிங்க எத்தனை துணிகள் களைத்து போட்டாலும் சலிக்காம எடுத்து கொடுத்துட்டே இருந்தாங்க.
துணி எல்லாம் வாங்கியாச்சு இவங்களுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டாங்க.
நாளைக்கு எல்லாரும் கோயிலுக்கு போறோம் அப்படின்னு சொல்லிட்டு அன்றைக்கு விடைபெற்றாங்க. அதே மாதிரி அடுத்தடுத்து நாட்கள் அவர்கள் எங்கெங்கெல்லாம் தேவிகா கூப்பிட்டு போக முடியுமா? அப்படி கூப்பிட்டு போயிட்டு வந்தாங்க.
திங்கட்கிழமை காலேஜ் போய்ட்டாங்க எல்லாரும் நாட்கள் அப்படியே வேகமாக ஓட பைனல் செமஸ்டருக்கு முன்னால கேம்பஸ்க்கு எழுதிக் கொடுக்குறீங்க எழுதி கொடுங்க என்று பேராசிரியர் தெரிவிக்கவும்.
அனைவருமே எழுதிக் கொடுத்தனர். தேவிகா முதலில் தயக்கமாக இருந்தால் பிறகு அவளும் எழுதி கொடுத்து விட்டாள். அவள் அறியாதது ஒன்று உள்ளது ஆம் அவள் எதை இத்தனை நாட்கள் மனதிற்குள் வைத்து புலுங்கி கொண்டு இருந்தாலோ? அது திரும்பவும் தன் கண்முன்னே காணும் பொழுது அவளது மனதில் என்ன பாடுபடுமோ தெரியவில்லை.
அவளோடவே அவளது மூன்று தோழிகளும் தேர்வாகி ஒரே கம்பெனிக்கு போவார்களா? என்பதும் தெரியவில்லை!!
இனி வரும் அடுத்தடுத்த பதிவுகளில் தேவிகாவின் காதல் நவநீத் அவர்களே தொடர்வார்கள்.
அம்மா ஏன் தேவிகா இன்னைக்கி காலேஜ் எப்படி இருந்தது. கேம்பஸ் எழுதி கொடுத்துட்டியா?
ஆமாமா இந்த வாரத்துல இன்டர்வீவ் பண்றதுக்கு வருவாங்கலாமா? நான் முதல்ல வேண்டான்னு தான் யோசிச்சமா!!உன்னை விட்டுட்டு போனா நீ தனியா இருப்பியான்னு அப்புறம் வேலை படிக்கும்போது கிடைக்கிறது அம்மா பெஸ்ட் அதுக்கு பின்னால நான் மட்டும் தேடுனா கிடைக்காது மா.
மேற்கொண்டு படிக்கிறதுன்னா படி தேவிகா இல்லம்மா நான் ஜாப் போறேன் நல்ல கம்பெனி கிடைச்சுருச்சுன்னா கண்டிப்பா நான் ஜாப் போகணுமா நான் கண்டிப்பா வேலை கிடைச்சிருந்தா போவண்மா
அதுதான் நாங்க பிரண்ட்ஸ்க்கு எல்லாம் ஒரே கம்பெனிக்கு தேர்வானா அதைவிட பெஸ்ட் சாய்ஸ் வேற எதுவுமே இல்லம்மா சரி தேவிகா உன் மனசு போல ஏன் அமையட்டும்.
தொடரும்...