• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 4

கேண்டின்கு எதுக்கு வந்தோம் சாப்பிடுவதற்கு அதை விட்டுட்டு என்னவோ சட்டமன்றத்தில் விவாதிக்கிற மாதிரி பேசிட்டு இருக்கீங்க சீக்கிரம் சாப்பிட்டு வாங்கடி கிளாஸ் போலாம்.

ஆமாண்டி அவ என்ற வாயில கம்பி கட்டி இருக்கிறேன்னு சொல்றா அந்த கம்பி கட்டு இல்லன்னா எங்க அம்மா என் பல்லில் தேங்காய் துருவுர மாதிரி இருக்கு அதனால் ஒரு முடி தேங்காய் செதரித்தா என்று சொல்லிடுவாங்க அதனால தாண்டி பல்லு கம்பி கட்டி இருக்கிறேன் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.

ஆனாலும் உன்னோட சாப்பாட்டு திறமை வந்து இந்த பல்ல வச்சுட்டு எத்தனை சாப்பிடுறியே இன்னும் எங்களை மாதிரி எல்லாம் இருந்தா இந்த காலேஜ் கேட்டுள்ள பாதி உருவம் நடந்து வர தாண்டி அளவா இருக்கும்.

ஏண்டி என்னை இப்படி கேவலமா பேசறிங்கறதுக்காக நான் ரோசப்பட்டுட்டு சாப்பிடாமல் இருக்க மாட்டேன். அப்படி ஏதாவது கனவு இருந்ததுனா ரப்பர் வச்சு அழிச்சுக்கோங்க..

அதுதான் அதெல்லாம் ரோசம் இருக்கிறவங்கள்கிட்ட சொல்லனும் டி உன் கிட்ட எல்லாம் போய் சூடு சொரணை பத்தி பேசறேன். எனக்கு தான் மூக்கடையும்.

தேவிகா இவங்க பேசுறது எல்லாம் கேட்டு சிரிக்க ஆரம்பிச்சேன் வச்சுக்கோ.

உனக்கு தனியா அவங்க தனியா சீரியல் கிரியேட் பண்ணிடுவாங்க சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்..

போதுமா எம்ஜிஆர் லெவல் பாடுவாங்க எம்ஜிஆர் படம் எல்லாம் பார்த்து இருக்கீங்களா? அவர் பாட்டுல எப்பவுமே அந்த ரெண்டு கையை வெச்சத வித்தை காண்பித்து இருப்பாரு அவராவது பாக்குறதுக்கு ஹீரோ மாதிரி இருப்பாரு.

இவளுக்கு அந்த டிரஸ்ல நீ நினைச்சு பாரு எதிரி அந்த அண்டர் வேர் துணி சுத்திட்டு உன்னை துரத்தி அடிப்பார்களே அதனால இவளைகளை வெறும் சாப்பாட்டு ராணி மட்டும் நினைச்சுக்காத சண்டிராணிகளும் கூட .

ஒரே நாள்ல நம்மளோட லீலைகள் எல்லாம் சொல்லி தேவிகாவை பயந்தோட வச்சிராதீங்கடி நம்மளுக்கும் ஒரு ரசிகை இருக்கிறார்கள் எவ்வளவு கெத்து தெரியுமா?

ஆமாண்டி வா உன்னோட கெத்து எவ்வளவு தூரம் வருது சங்கர் சார் சங்கரி வாயில சிங்கி அடிக்கு வரைக்கும்.

இந்தா வாங்கடி கிளாஸ் உள்ள போலாம் சார் போர்டில் எழுதிட்டு இருக்கிறார் .அழுங்காமல் பூனை மாதிரி பதுங்கி போய் உட்கார்ந்து கொள்ளலாம் .
இந்த சலங்கை கட்டின போன என்னடி பண்றது ஜல் ஜல் சத்தம் வேற கேக்குது.

அப்ப நீ மட்டும் நின்னுக்கோ நாங்கள் அழுங்காமல் போய் உட்கார்ந்து கொள்கிறேன். அப்படி மாட்டிக்கிட்டாலும் உனக்கு எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று குசு குசு என்று பேசிக்கொண்டு அனைவரும் சென்று அமர்ந்து விட்டனர்.

ஆனால் சங்கரி கடைசியா அவள் கொலுசு ஒளி சங்கர் சார் காதுல கேட்டுருச்சு அவர் அப்படியே திரும்பி பார்க்கவும் சங்கரி பிதுங்கி பிதுங்கி விழிக்க

என்னமா இத்தனை நேரம் எங்க போன கிளாஸ் ஆரம்பிச்சு எத்தனை நேரம் ஆச்சு இதுதான் நீ காலேஜ்க்கு வரும் லட்சனமா?

சார் சார் எனக்கு உடம்புக்கு சரியில்லை சார் அதுதான் சார் கேண்டின்ல போய் கொஞ்சமே கொஞ்சம் டீ குடிச்சிட்டு வந்தேங்க சார் .

ஆனா உங்க கிட்ட டீ தவிர மத்த வாசம் அடிக்குதே மா .உன்னை பார்த்த உடம்பு சரியில்லாத இருக்க பொண்ணு மாதிரியே தெரியலையே ?ஏதோ காலையிலேயே கேண்டின்ல போயி இன்டர்வல் டைம்ல சாப்பிட வேண்டியது பூரா சாப்பிட்டு வந்த மாதிரியே தெரியுது என் காய்ஸ் உங்களுக்கு தெரியுது தானே சங்கரி பாத்தா உடம்பு சரியில்லாத மாதிரியா இருக்குது.

ஒருவேளை என் கண்ணுக்கு அப்படி தெரியுதோ? உங்க கண்ணுக்கு எப்படி தெரியுது? சொல்லுங்க.

சார் நீங்க சொல்ற மாதிரி தாங்க சார் அவிங்கள பாத்தா உடம்பு சரியில்லாத மாதிரி இல்லை சார் நல்லா கேண்டீன் போய் மணக்க மணக்க ருசிக்க ருசிக்கு சாப்பிட்டு வந்த மாதிரி தான் இருக்குது .

பக்கி பயபுள்ள என்று தன் அருகிலேயே உட்கார்ந்து இருக்கும் கல்பனாவை முறைத்தாள் .பாவி அந்த ஆள் கேட்டா ஆமா உடம்பு சரியில்லாத மாதிரி இருக்குது முக பூரா சொங்கி போய் இருக்குதுன்னு சொல்ல வேண்டியது தானே பெரிய உண்மை விளம்பி வா அப்படியே இருடி உன் லஞ்ச் பேக் இன்னைக்கு வெறும் காலிபாக்ஸ் பண்ணி வைக்கல என் பேரு சங்கரி இல்லை.....

அப்ப வாத்தியார் கிட்ட மாட்டுது உனக்கு தப்பில்லை சங்கரி என்று மனசாட்சி வந்து அவள் முகத்தைப் பார்த்து காரித் துப்பியது.

உன் வேலை உள்ள இருந்து பார்த்துக்கொள்வது மட்டும் தான் இந்த வேலையில் வந்து எனக்கு அட்வைஸ் பண்ற வேலை வச்சுக்காத மனசாட்சி ஓடிப்போய் தூரம் என்று மனச பேசியவள் இப்போது முகத்தை மிகவும் சோர்வமாக வைத்துக் கொண்டே சங்கர் சாரை பார்த்தாள் விட்டால் அழுது விடுவாள் என்று நினைத்தவர் போ போய் உட்காரு.

ஆனால் பீரியட் முடிஞ்சு என்னை வந்து நீ பார் அவள் மனசுக்குள் இப்பவே நான் உங்கள பார்த்துட்டு தான் இருக்கிறேன் சார் இதுல தனியா வேற வந்து பாத்துக்கணுமா சார் பார்த்துட்டா போச்சு என்று மனசுக்குள் பேசிக்கொண்டு விட்டா அப்பா வாத்தி இப்ப போய் உட்கார்ந்து சேத்தி படிப்போமே மாத்தி யோசி என்ன ஒரே கவிதையா போட்டது சங்கரி காதல் வியாதி வந்திருச்சோ என்று கண்ணை சிமிட்டி கொண்டு அவளது டெஸ்கில் போய் தனது தோழிகளை நெறுக்கி அடித்து உட்கார்ந்தால் ஏன்டி எருமைகளா அந்த ஆளு எனக்கு கிண்டல் பேசுறான் நீங்க எல்லாம் எந்திரிச்சு எனக்கு சப்போர்ட் பேசுவீங்கன்னு பார்த்தா எதுவுமே தெரியாத மாதிரி இருக்கிறீங்க.

இந்த கல்ப்பி குல்பி என்னை எச்ச கோர்த்து விடுகிறது அவளுக்கு நான் ஆறுங்குறத நிரூபிச்செய்திருவேண்டி .

என்னடி செய்ய போற அவளே நம்ம கேங்குல சேர்த்துக்க போறியா ?

அந்த மாதிரி நல்ல பழக்கமெல்லாம் நான் என்னைக்குமே செய்ய மாட்டேன் எனக்கு தெரிஞ்ச ரூட் அவர் டிபன் பாக்ஸ காலி பண்ணி வைக்கிறது அதுதான் அப்படியே பசிக்கும் பாரு வயித்துல ஈயத்தை காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கும். அப்போ சாப்பிடறதுக்கு டிபன் பாக்ஸ் மட்டும் தான் இருக்கு அப்ப தெரியும் இந்த சங்கரி யாருன்னு இப்ப புரிஞ்சுதா இப்படி சூடு மை பாலிசி வெரி நைஸ் பாலிசி.

எது டிப்பன காலி பண்ணி வைக்கிறாங்க நீ சாப்பாட்டு ராமலி உனக்கு சங்கரின் பெயர் வச்சிருக்க கூடாது சாப்பாட்டு ராமன் இல்லாட்டி ஏதாவது சாப்பாடு இப்படித்தான் பெயர் வைத்திருக்கும்.

அங்க என்ன சத்தம் எல்லா கிளாஸ கவனிங்க என்ற வார்த்தியார் மாமா சொல்லிட்டாரு கவனிடி நல்லா பாடத்த கவனிடி.

இல்லடி அவர் என்னை பார்க்கச் சொல்லி இருக்கிறார். உன்னை திட்டாதடி தனியாக கூப்பிட்டு போய் திட்ட போறாரு வச்சு செய்ய போறாரு அது தனியா தானடி திட்ட போறாரு அந்த அளவுக்கு சந்தோசம் டி என்ன நாம் அந்த கிரவுண்ட் வேலை பார்த்திட வேண்டியதுதான் அப்படி என்ன பண்ணுவ சங்கர் என்று தேவிகா கேட்டாள்.

எதுக்கு நம்ம எல்லாம் சேஃப்டி பின் வைத்திருக்கிறோம் சாரோட புல்லட்டில் சொருகி விட்டுவிடுவேன். அதுல தப்பு பா அவரு என்ன பண்ணுவாரு பக்கத்துல மெக்கானிக் ஷாப் கூட இல்லை.

அதை எல்லாம் நம்மள திட்டுறதுக்கு முன்னால யோசிக்கணும் அப்புறம் பின் விளைவுகளை எப்படி இருக்குன்னு தெரியாம பேசினா அப்புறம் இப்படித்தான் இருக்கும்.

இருந்தால் இது டூ மச்...

டூ மச்சும் இல்ல த்ரீ மச்சும் இல்ல எல்லாமே ஃபுல் ஃபார்ம் ஆச்சு உனக்கு ஏதோ கிறுக்கு பிடிச்சிருக்கா காலையில இருந்து லூசு மாதிரி பேசிட்டு இருக்கேன் ஆமா நட் பூரா பார்த்து பார்த்து நிக்குது ஸ்பேனர் வாங்கிட்டு வந்து கொஞ்சம் டைட் பண்ணி விடு சங்கரி சொல்லவும்.

தேவிகா அப்பா எப்படித்தான் இப்படி உடனுக்குடனா பதில் சொல்ற அது காமெடியா இருக்குது மேலும் எனக்கு வீட்டுக்கு இந்த நாலு நாள் இப்படித்தான் உங்கள எல்லாம் விட்டு இருப்பேன்னு இருக்குது அதுக்குத்தானே நாங்க எதுக்கு உன்னை சும்மா விட்டுருவோமா நாலு நாள் நாலு பிளான் வச்சிருப்போம் ஒரு நாளைக்கு ஷாப்பிங் போவோம்.

ஒரு நாளைக்கு சாப்பிடறதுக்கு மட்டும் போதும்.

ஒரு நாளைக்கு கோயிலுக்கு போவோம்

ஒரு நாளைக்கு என்ன பண்ணுவீங்க குப்பிறப் படுத்து தூங்குவோம் ..

அடப்பாவி நானும் கூட அடுத்த ஏதாவது இன்ட்ரஸ்டா சொல்லுவேன் பாத்தா தூங்குவோம்னு ஈசியா சொல்லிட்டேன் மத்தநாள் என்ன பராக்கா பாத்துட்டு இருப்பே இல்ல எல்லாரும் பாராக்கு பாத்துட்டு இருக்காங்களா?

மூணு நாள் சுற்றுனா டயர்டாக இருக்கும் தானே அது தான் ஒரு நாள் ரெஸ்ட் மாமே.

இப்படியே அன்றும் முழுவதும் பொழுது நகர்ந்தது. அடுத்த நாள் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் தேவிகாவிடம் சொல்லியே அனுப்பினர் நாங்கள் அனைவரும் உங்கள் வீட்டுக்கு வருகிறோம்.

அப்புறம் அங்கிருந்து நாம் நால்வரும் ஒன்று சேர்ந்து டவுன்ஹால் உப்புக் கிணறுச் சந்து அங்க போன எல்லா துணியுமே ரொம்ப சீப்பா கிடைக்கும்.

கோயம்புத்தூர்ல உப்பு கிணறு சந்துன்னு சொல்லுவாங்க நாங்க எல்லாம் அங்கதான் போய் சீப்பா எடுத்துட்டு வருவோம் கிராண்ட் லுக்கா இருக்கு பாக்குறதுக்கு.

நீ இந்த ஊருக்கு புதுசு தானே வா எங்கங்க என்ன நல்லா ஃப்ரீயா கிடைக்கும் சாரி சாரி விலைக்குறைவா கிடைக்குங்குறத நாங்கள் உனக்கு கூப்பிட்டு போய் காமிக்கிறேன்டி .

முதல் நாள் ஃபுல்லா துணி செப்பல் இப்படி நம்மளுக்கு தேவையான ஐட்டம் எல்லாம் வாங்கிக்கலாம் .

அடுத்த நாள் மருதமலை போலாமா ஆமாண்டி இப்ப புதுசா அங்க சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் கூட நடந்து முடிந்தது. அதனால செமையா இருக்குன்னு மருதமலை முருகன் கோயிலுக்கு போனதில்லை நாங்க கூப்பிட்டு போகிறோம்.

நாமெல்லாம் படிக்கட்டிலேயே நடந்து போலாம் சூப்பரா இருக்கு அப்படியே மலையும் செமையா இருக்கும்.

ஆமாம் ப்ரண்ட்ஸ் எனக்கு முருகர் சாமி ரொம்ப பிடிக்கும். அங்கே மதுரையிலே அழகுமலைக்கு போவோம். பழனிமலைக்கு சிறுவயதில் காவடி எடுத்து சென்றது.

தேவிகா அனைவரிடமும் விடைபெற்று வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

யசோதாவிற்கு மகளின் முகத்தில் இருந்த மலர்ச்சி அவருக்கும் மனதிற்கு இதம் அளித்தது.


தொடரும்..
 
Last edited by a moderator:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top