• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 13

நீ வாய தொறந்தாயா? அப்படியே பூரி கிழங்கு மசாலா எட்டி பார்த்ததடி.

ஏண்டி என்னை இப்படி கலாய்க்கிற நான் என்ன அப்படி யானை மாதிரியா இருக்கிறேன்.

ஆமா அதை நீ வேற சொல்லனுமா அப்படியே நீ தும்பிக்கு தூக்கி விட்டனா உள்ளுக்கு எல்லாம் இருக்கிறது வெளியில் வந்து விழுந்திருமோனு நான் அங்கதான் தள்ளி ஓடி நிக்கணும்.

அப்பவே நினைச்சேன் கண்டிப்பா நீ அடுத்தது காலையில் சாப்பிட்ட பூரி செரிக்கிறது டீ சாப்பிட கூப்பிடுவேன் என்று சங்கரி சங்கவியை பார்த்து சொல்ல.

அவள் சொன்னவளை துரத்தினால் இவர்களின் அட்டகாசங்களை பார்த்து தேவிகா மனம் விட்டு சிரித்தாள்.

இப்பதான் ஆரம்பிச்சிருக்கு இதுக்கே இப்படி சிரிச்சனா இன்னும் இருக்குது தேவிகா கொஞ்சம் மிச்சம் வை.

இல்லை அப்பா சத்தியமா என்னால முடியல அவளைப் பார்த்தால் யானை மாதிரியே இருக்குது என்று உமா சொல்ல. ஏண்டி நீயே வாய் வச்சுட்டு கம்முனு இருக்க மாட்டியா பாரு இப்ப பூறா அவளுக்கு சீரணுமாய் போகும் உன்னை துரத்தியோடு நான் மறுபடியும் கேண்டின்ல போயி அங்கு இருக்கிற உளுந்து வடை பூரா வயிற்றுக்குள் இறக்காம விட மாட்டா யாருடி காசு குடுப்பா நீ தான் அவளுக்கு கலாய்ச்ச அதனால் நீயே காசு கொடுத்து வாங்கி கொடு.

ஆமாண்டி நல்லவேளை எனக்கு ஞாபகப்படுத்தின டி நான் ஏன்டா வயிறு ரொம்ப லேசாகி உள்ள கடமுடா சத்தம் கேட்டது என்று பார்த்தேன் அப்புறம்தான் தெரிஞ்சது நான் சாப்பிட்டேன். பூரி ஜீரணமாயிருச்சுடி அதனால் நான் இப்ப என்னால கேண்டின் கூட நடந்து வர முடியாது கூப்பிட்டு போறீங்களா .

அடிங்க மவளே இருந்தாலும் உனக்கு இன்புட் கொழுப்பாகுது ஏன்டி என்ன பார்த்த கொழுப்பு பிடிச்சவளா தெரியுது.ஏதோ காய்ஞ்சு போன கருவாடு மாதிரி இருக்கிறேன்.

நீங்க ரெண்டு பேரும் பண்ற குறும்பிலிருந்து பச்ச புள்ள பாரு கண்ணுல தண்ணி வர மாதிரி அழுதுட்டு இருக்கிறா. சாரி சிரிச்சுட்டு இருக்கிறா.

தேவிகாவை உமா சொல்லவும் , எப்பவுமே ஒரு சோகமா சுத்திட்டு இருக்குற தேவிகாவை சிரிக்க வைத்திருக்கிறோம். அதனால இன்றைய செலவு பூரா தேவிகா உன்னோட ட்ரீட் உனக்கு சிரிப்பு மறந்த மாதிரி உட்கார்ந்து இருப்ப இல்ல உனக்கு கண்ணுல தண்ணி வருதுன்னா.

அப்ப நாங்க பெரிய எண்டர்டெய்னர் தான் எதுக்கு விஜய் டிவியில் வருமே கலக்கு போவது யாருல கலந்துக்கலாமா?

சங்கரி சொல்லுடி என்று சங்கவி கேட்கவும் இருடி என்னை வைத்து நீ கலாய்ச்சிட்டு இருக்கீங்களா?

உன்னைய சும்மா விடமாட்டேன் டி அடியே விடுடி என்ற ஜடை விற்றுடி அதுவே நானும் இருக்கணுமா? உன்கிட்ட என் ரேன்ஜில் ஒரு பத்து முடி ஒட்டுக்கா சேர்ந்து நிக்குதடி அதை பிச்சு வீசி எனை மொட்டையாண்டியா திரிய விட்டுவிடாதேடி..

ஏண்டி இவ்ளோ முடி வெச்சிட்டு மூணு முடின்னு சொல்கிறாய்.

தான் ஒரு பேச்சுக்கு அப்புறம் தலைல மூணு முடி மட்டும் மத்தபடி எல்லாம் குரங்கு கையில பூ மால சிக்கன எப்படி இருக்கு பியர்த்து விட்டுவிடட்டா.

ஏன்டி இப்ப கேண்டின் போலாமா இல்லையா? திருப்பி திருப்பி பேசாதீங்க நான் ரொம்ப சோர்வாகிவிடுவேன்.

வா வா இல்லாட்டி நீ பசியில எங்களையும் முழுங்கினால் முழுங்கிருவ .

சங்கவி முறைத்து பார்க்கிறாள்.

ஏண்டி உண்மை சொன்னால் நீயே இப்படி திருட்டு முழி முழிக்கிறத பாத்தா ஏதாவது ஐடியா பண்ணிட்டியா சீக்கிரம் வாங்கடி போய் சாப்பிட்டு வந்தரலாம்.

அப்புறம் சார் வந்துட்டாருனா நமக்கு சங்கூதிருவார் .

ஏய் நீ சங்கர் சார் சவுண்ட் அடிக்கிறது தானே.

என்ன சவுண்டா ஐ மீன் சைட் அடிக்கிறதானே.

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா அவர் எனக்கு புடிச்ச பைக் வச்சிருக்காரா அதுதாண்டி எனக்கா அவர் மேல ஒரு கண்ணு.

ஏண்டி எருமை எது எதுக்கு ஆசைப்பட வேண்டும் என்கிற ஒரு அறிவே இல்லையேடி. அப்ப ஏதாவது ஒரு சொட்டை தலையை கிழவன் உனக்கு புடிச்ச வண்டி வச்சிருந்தான்னா அவனை உன்னோட கிரஷ் அப்படி சொல்லுவியா டி ?

ஏய் வாங்கடி கேண்டீன் வந்துருச்சு போய் ஆளாளுக்கு என்ன வேணுமோ வாங்கி சாப்பிடுங்க .

ஆமா அம்பானி புள்ள சொல்லிட்டா அப்புறம் என்ன புடிச்சத வாங்கி சாப்பிட வேண்டியது கழுத்தில் போட்ட தங்க செயின வித்தாவது கடன் தீர்த்திருவா அதுக்கு தாண்டி இது மாற பெஸ்ட் ஃபிரண்ட் வேணும்கிறது .

பேசியே சாகடிக்கிற டி இப்படி நீ பேசிட்டு இருக்கறதுனால தாண்டி நீ எத்தனை சாப்பிட்டாலும் உனக்கு ஜீரணம் ஆகிறது.

பேசலனா தான் பா பிரச்சனை காலேஜுக்கு வர்றதே நல்லா பேசி ஜாலியா என்ஜாய் பண்றதிற்கு தான்.

அப்ப நீ படிக்கவில்லை அதுதான் நம்ம ஸ்கூல்ல இருந்து படிச்சிட்டு தான் இருக்கிறோம். புதுசா என்ன படிக்க போறோம்.

அதுவா இப்ப தெரியாது செமஸ்டர் வரும் இல்ல அப்ப கொஸ்டின் பேப்பர் கையில் கொடுப்பாங்க? அப்ப தாண்டி தெரியும் நாம என்ன படிச்சோம் எத்தனை கிழிச்சோம் அப்படிங்கறதெல்லாம் அந்த பேப்பரை திருத்தி சார் நம்ம கையில கொடுப்பார் அப்ப எல்லாத்துக்கும் வெட்ட வெளிச்சமா தெரியும்.

காலேஜுக்கு நாம எதுக்கு வந்தோம் படிக்க வந்தமா? அரட்டை அடிச்சிட்டு வயிறு பசிக்கும்போதெல்லாம் கேண்டில் போய் உழுந்து வடையும் போண்டாவும் சாப்பிட்டதையா? அதை வாடி எழுத முடி பக்கம் பக்கமா ..

ஆல்ரெடி நாமும் பிரன்ட்ல கொஞ்சம் பேக்ல கொஞ்சம் மட்டும் தான் புக்குல இருக்கிறது எழுதுவோம். மத்தபடி பூராமே கப்ஸாதே எழுதுவோம் .

நல்ல வேலை அதுல படிச்சு பார்த்தா சார் மெண்டல் ஆகாம இருந்தார். அதே பெரிய விஷயம்!! தான்,

ஏன் என்னப்பா இப்படி எல்லாம் சொல்றீங்க இப்படித்தான் எழுதுவீங்களா? எப்பவுமே என்று தேவிகா கேட்கவும் .

அடே நீ சரியான படிப்ஸா இருக்கிறியே உனக்கு காலேஜ் லைப்பே வேஸ்ட் பாப்பா நீ பேசாம ஸ்கூல் படிச்சிட்டு இருந்திருக்கலாம். ரொம்ப சூடேறி இரு தலையில் இருக்கிற மூளை பூரா படிப்புக்கே செலவு பண்ண கூடாது.

ஏன் என்ன ஆயிரும்?

ரொம்ப மூளை சூடாகிவிடும் அப்புறம் பைத்தியம் பிடிச்சுரும். அப்புறம் காது ஓட்டை வழியா கசிந்து விடும்.உனக்குத் தெரியாதா? அது தான் பைத்தியம் பிடித்தவர்கள் மூளை இல்லாததால் அப்படி இருக்கிறாங்க.

ஆல்ரெடி உனக்கு பைத்தியம் தாண்டி புடிச்சிருக்கு .

ஏண்டி எப்ப பார்த்தாலும் எருமை எருமை என்று சொல்லிட்டு இருக்கிறாய்.

எருமையை எருமை தாண்டி சொல்லணும்.

அப்ப எருமையோட ஃப்ரெண்ட் எல்லாம் எருமை தானே .

வேற டாபிக் மாத்துங்கடி எருமையை விட்டு தொலையுங்கடி ..

பார்த்தாயா? எருமையே எருமை விட்டு தொலையச் சொல்லுது.

அப்பா என்னால முடியல சங்கர் சார் உங்க ஆளு வாய்க்கு ஏதாவது பெரிய பெவிகால் வாங்கி ஊட்டி விடுங்க.

ஏண்டி அவர் அப்படி சொல்ற..

பின்ன எப்படி சொல்லுவாங்க? உன்னோட அலப்பரியைத் தாங்க முடியல.

யாருக்குமே என்னோட லிப்ஸ் பார்த்தா கிஸ் கொடுக்கணும்னு தோணும் ஆனா நீ இருக்கிறியே ரொம்ப மோசம் ஃபெவிக்கால் ஊத்த சொல்ற நான் பேசவில்லை என்றால் உன்னால் சிரிக்க முடியாது .

வேண்டாண்டி சிரிச்சு மெண்டலாக இருக்கிறதுக்கு சிரிக்காமயே விட்ரலாம்.

அப்படி சொல்லாதடி பெரியவர்களே சொல்லி இருக்காங்க வாய் வீட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.

சொன்னாங்களே அந்தப் பழமொழி எல்லாம் நீ பாலோ பண்றியா அளவா சாப்பிடணும் பலமா இருக்கணும்.

அது சாப்பிட விஷயத்துல எல்லாம் கண்டுபிடிக்க கூடாது நம்மளுக்கு என்ன சாப்பிடணும்னு தோணுதோ அதை வஞ்சனை இல்லாம சாப்பிட்டுக்கோணும் சரியான பஞ்சத்தில் பிறந்தவள் ஆட்டாவே பேசிட்டு இருக்க எனக்கும் பசிக்கும் இல்ல.

இந்த ஒரு டயலாக்குடி உங்கள் எல்லாருக்கும் கண்டுபிடிச்சிட்டீங்க புதுசா ஒருத்தன் மட்டும் ரீலீஸ் போட்டுட்டா அது வா போரடிச்சு போற வரைக்கும் விடமாட்டீங்க.

அதெல்லாம் எதுக்கு போடுறாங்க நாமெல்லாம் ஃபாலோ பண்ண தான் சரி நாலு நாள் லீவு வருது எல்லாம் எங்க எங்க போற பிளான் பண்ணி இருக்கீங்க.

நம்ம ரொம்ப நாளாச்சு ஷாப்பிங் போயி நாளைக்கு போலாமா? தேவிகா நீ வருகிறாயா செமையா இருக்கும் கோயம்புத்தூர் சுத்தி பாக்கலாம்.

அப்படியே இல்லப்பா நான் வரலப்பா .

ஏன் அப்பா தங்களுக்கு என்ன வேலை உள்ளது சமைக்க வேண்டுமா இல்லை சமைத்ததை புசித்து ருசிக்க வேண்டுமா சாரி சாரி ரசித்து ருசித்து புசிக்க வேண்டுமா?

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சி பேச ஆரம்பிச்சிட்டா ..

பேசுவது ஒரு குற்றமா அயகோ எங்கிருக்கிறீர்கள் என்னை இவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள். எல்லாம் ஏலியன் குட்டிய களாக சுற்றிக் கொண்டிருக்கிறது.

எல்லாம் நம்மளையே பாக்குறாங்க வாய மூடிட்டு சாப்பிடுறியா இல்லையா கேண்டில் இருக்கிறவங்க எல்லாம் நம்மளைவே பாக்கறாங்கடி எருமை.

ஏன்டி அவளை போட்டு எருமை எருமைன்னு சொல்ற இப்பத்தானே சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.

அப்புறம் நீ ஏண்டி சொல்ற கேண்டின் எல்லாம் வருகிறவங்களா பாக்குற அளவுக்கு நான் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கிறேன்.

ஸ்பா தாங்க முடியல நான் போறேன் எப்பவோ எந்திரிச்சு வாங்கடி.

ஏய் நம்ம பைனான்ஸ் மினிஸ்டர் போறாங்கடி அப்புறம் நம்மள மாவட்ட சொல்லிருவாங்கடி நம்ம கையெல்லாம் பார்த்தால் மாவாட்ர மாதிரியே இருக்குது.

அப்படியே பளிங்குமாதிரி இருக்குது. எவ்வளவு சாப்டா அந்த ஆட்டாங்கல்லில் குச்சி கூட இல்ல அப்புறம் புடிச்சு ஆட்ட வச்சுட்டாங்கனா நம்ம கை எல்லாம் கொப்பளம் வந்திரும்டி அப்புறம் எப்படி டி எக்ஸாம் எழுதுறது.

ஏன் நிஜமாவா சொல்றடி கைல கொப்பளம் இருந்தா எக்ஸாம் எழுத வேண்டியது இல்லையா?

அட படிப்பாளி நீயா இப்படி சொல்ற.

நான் எப்ப டி படிப்பாளின்னு உன் கிட்ட சொன்னேன் நான் எப்பவுமே படிப்பாளி இல்ல .

அப்ப இங்க இருக்கிற எவளுக்குமே கிளாஸ் போற ஐடியா இல்ல இப்படியே மத்தியானம் வரைக்கும் இங்கேயே இருந்து லைனா கேண்டின்ல அடுத்தடுத்து என்ன வருமோ அதை முழுங்கிட்டே இருக்கலாம்னு பிளான் எடுக்குறீங்க..

சங்கர் வாத்திக்கு மட்டும் இங்கதான் இருக்கிறீங்கன்னு தெரிஞ்சது அவர் வைத்திருக்கிறார் இல்ல பெரம்பு அதை தூக்கிட்டு வந்துருவாரு. உனக்கெல்லாம் நாக்கிலேயே தாண்டி கோடு போடுவாரு.

நெஜமாவா சொல்றே என் லிப் பை ஓப்பன் பண்ணி நாக்கை பார்க்கும் தைரியம் அவருக்கு உள்ளதா ?

நீ எத்தனை பட்டாலும் அடங்க மாட்டாய்..

ஏண்டி உன்ன வாயிலுக்குற பல் கேவலமாக இருக்கிறது. ஏண்டி கட்டடத்துக்கு கம்பி கட்டுற மாதிரி வாயில பல்லு பூரா கம்பி கட்டி வைத்திருக்கிறாயே அப்புறம் என்ன உனக்கு கிஸ் பண்ணும் போது அவருக்கு உதடு எல்லாம் புண்ணா ஆகிவிடும்.

தொடரும்..
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top