New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே -12
என்னடி வாய் கொழுப்பா உனக்கு என்னென்னமோ பேசுற நான் போய் கல்யாணம் பண்றதா எனக்கு கல்யாணம் பண்ண வேண்டும் ஆசை இருந்துச்சுன்னா உங்கப்பன் செத்தான் பாரு அப்பவே பண்ணி இருப்பேன்.
உங்க நல்லதுக்கு நான் பேசுனா உங்க வாயால கெடுத்துட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்ற அப்போ நான் உங்களுக்கு முக்கியமா தெரியலை. அதனாலதான் நான் உயிரோட இருக்கும்போதே நீங்க ரெண்டு பேரும் அனாதையா இருந்துக்குறேங்கறீங்க..
என்னைக்கு அவ்வளவு ஆசையா நீ கூட என்னை புரிஞ்சுக்கல நம்ம சொந்த பந்தத்தை முன்னால நாமளும் கௌரவத்தோட வாழலாம் என்று அந்த ஆசையில தாண்டி நல்ல இடம் வந்ததும் நான் அப்படி பேசிட்டேன் .நான் மட்டும்தான் வரதட்சனை பத்தி பேசறனா ஊர் உலகத்துல யாருமே பேசறது இல்லையா?
என்னென்னமோ பேசுற நான் கல்யாணம் பண்ணிக்கிறதா என்று திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்ப தெரியுதா அம்மா உனக்கு வலிக்குது அப்படித்தான்மா இருக்கு எல்லாத்துக்குமே அண்ணன் நெனச்சு பாத்தியா அவனோட சந்தோசத்தை நினைத்து பார்த்து இருந்தா நீ போய் தேவிகாவை பேசறதுக்கு முன்னால கொஞ்சமாவது யோசித்து பார்த்திருப்பமா.
உண்மை சொல்லு என்ன பொய் பேசின தேவிகா கிட்ட சொன்னனா தான் மறுபடியும் நான் என் மனசு மாற்ற முடியும் அதுக்காக நீ சொல்றவனல்ல கல்யாணம் கட்டிக்குவேன் கனவிலும் நினைக்காதே..
ஏன்னா நானும் வீட்ல இருப்பேன் அப்படின்னு உங்க கிட்ட சொல்றேன் நீ உண்மை இப்ப சொல்லல நான் போய் லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கிக்குவ எப்படி வசதி உண்மை சொல்லு..
சரிடி என்னை குற்றவாளியாக்குற இல்ல சொல்றேன் ஆமா நான் தேவிகா மேல பழியைப் போட்டேன் இனி நீயே போய் சொன்னாலும் இல்ல உங்க அண்ணனையே போய் சொன்னாலும் அவ வரமாட்டா என்ன நான் அந்த அளவுக்கு அவளை பேசிகிட்டு இருக்கேன்.
நீங்க எப்போ நான் சொல்றத கேட்கலையோ உங்க விருப்பத்தை நான் நிறைவேற்ற விடமாட்டேன் எப்ப இருந்தாலும் அவள் என் வீட்டுக்கு மருமகளா வர்றத நான் விரும்பல ஏன்னா நான் ஒதுக்கி வெச்சிட்டேன்.
அவனுக்கு கல்யாணமே ஆகாட்டியும் பரவால்ல ஆனா அவள் மட்டும் இந்த வீட்டு படியேற கூடாது அவ வந்தா நான் இந்த வீட்டை விட்டு வெளியில போயிருவேன் .
அம்மா நீ இப்படியே நினைச்சுட்டு அண்ணன் மட்டும் இங்க வருவான்னு நீ நினைக்கிறாயா? வரவே மாட்டாங்க..
அது எப்படி நீ பேசுற அவனோட சொன்னானா இல்ல அந்த தேவிகா ஆள் மயக்கி அவ சொல்லிக் கொடுத்த ரெண்டு பேரு ஆடிட்டு இருக்கீங்களா?
அம்மா உண்மையை சொல்ற அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல தேவையில்லாம அவங்க மேல பழி போடாத தேவிகா மனசில் எவ்வளவு கஷ்டப்பட்டாங்களோ? தெரியாது நீ பாட்டுக்கு என்னென்னமோ பேசி மேலும் ஒரு பொண்ணோட பாவத்தை வாங்கி சம்பாதிச்சுக்காதம்மா..நீ ஒரு பிள்ளை பெத்து வச்சிருக்கற என் வாழ்க்கை நல்லா இருக்கணும்.
உன்னோட பாவம் உன்னுடோயே போகட்டும் இப்படியே நீ ஏதாவது பேசிட்டே இருந்தா நல்லா இருக்காது அது தெரிஞ்சுக்கமா ஆமாண்டி நீ எல்லாம் இப்படி என்னை பேசுவ மிரட்டுவ இதை எல்லாம் நான் பாத்துட்டு வாய் வச்சுட்டு கம்முனு இருக்கனும்.
எனக்கு இப்ப ரொம்ப உறுதியாக தெரிஞ்சிருச்சுடி அந்த ஆள் மயக்கி சொல்லிக் கொடுத்துட்டா ஆடுற நீ இப்போ அவ சொன்னாளா நான் அவளை போய் பேசினேன் இல்ல நீ வந்து என்னை எனக்கு பின்னால வேது பார்த்தையா?
அம்மா தயவு செய்து உன் கூட வாதிடுவதற்கு என்னால முடியாது .
விட்டுமா நான் வீட்டில் இருக்கிறது உனக்கு சுமையா இருக்குதுன்னு சொல்லு நான் போறேன் வெளியில்..
என்னடி கால ஒடச்சு வீட்டுக்குள்ளேயே கெடனு தள்ளிவிடுவேன், தெரிஞ்சுக்கோ ரொம்ப ஓவரா போற எனக்கு என்னமோ உன் மேலேயும் சந்தேகமா இருக்குது நீயும் எவனாச்சே காதலிச்சுட்டு இருக்கிறாயோ? அது தான் வாய் இவ்வளவு தூரம் நீளுது உன் கொஞ்சம் கூட உனக்காகத்தான் அம்மா அப்படி அவங்க மாப்பிள்ளை வீட்டு கிட்ட அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்று பேசிட்டு இருக்குற நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம என்னம்மோ அவங்க பெரிய இவங்களாட்டா எங்க அம்மாவ செஞ்ச தப்பு மன்னிச்சு விட்ருங்க அப்படின்னு கேக்குற நிஜமாலுமே நீ என் வயித்தில தான் பொறந்தையா எனக்கு சந்தேகமா இருக்குது.
பெத்த தாயை யாரோ எங்கிருந்தோ வந்த மூன்றாவது மனிதர்கள் அந்த பேச்சு பேசறதுக்கு நீ வேடிக்கை பார்த்து நிக்கிறதும் இல்லாம எனக்கு புத்தி சொல்ற நீ ஏன்டி உனக்கு எல்லாம் வேலைக்கு போகணும் டி பத்து பாத்திரம் தேய்ச்சு உன்னை காலேஜ் படிக்க வச்சேன்லோ நீ எதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ என்னமோ பண்ணுங்கடி காலம் போன கடைசியில எனக்கு கஞ்சி ஊத்தறதுக்கு நீங்க கணக்கு பார்த்தாலும் பாப்பீங்க அதனால் நான் எப்பவும் போல இன்னும் வேலைக்கே போய்க்கிறேன்.
உங்ககிட்ட ஒத்த பைசா வாங்க மாட்டேன்டி என்னவோ உங்க இஷ்டத்துக்கு ஆடுவோம் நான் இந்த வீட்டில் இருக்கலாமா இல்லையான்னு நீயே சொல்லிரு நீயே ஹாஸ்டல் போயிருவ அவன் ஏற்கனவே என்ற பேச்சு மதியாமல் போயிட்டான்.
அப்புறம் நான் எதுக்குடி உயிரோடு இருக்கும்னு நான் போய் இப்பவே சாகுறேன்.
அம்மா தயவு செய்து எதுவும் முடிவு எடுக்காத அவசரப்பட்டு சரியா நான் ஹாஸ்டல் எல்லாம் போகல இங்க தான் இருக்கிறேன். நீ உன் வேலையை பாரு நான் என் வேலை பார்க்கிறேன் .
ஆமாண்டி என்ற வேலை பார்க்கிறது நானும் உன்னை கஷ்டப்பட்டு வளத்தி நீ இந்த வார்த்தை சொல்றதுக்கு காத்துட்டு இருக்கேன்.
இவங்க போனா போயிட்டு போறாங்க இன்னொரு மாப்பிள்ளை பார்க்க த்தான் போறேன் பார்த்து உன்னை கல்யாணம் பண்ணி கொடுப்பேன். இல்லையா? என்று பார்...
இதற்கு மேல் தன் அம்மாவிடம் வாதிட விரும்பாத நதியா நாம் இப்போது என்ன பேசினாலும் அம்மா அதற்கு தடை விதித்து கொண்டே தான் இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டால் எதுவும் பேசாமல் உள்ளறைக்குள் சென்று தனது உடையை மாற்றி விட்டு கல்லூரி பேக் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
எதுக்குடி இந்த நேரத்தில் கல்லூரிக்கு போற அதுதான் லீவு போட்டாச்சு .
அதாம்மா எதுவும் நடக்கலைன்னு ஆயிடுச்சு இல்ல நான் ஆப்டே போயிருக்கிறேன்.
எங்க ஏமாத்திட்டு ஓடி போற என்னவோ எங்க பேக் கொண்ட செக் பண்ணி பார்க்கலாம் என்று துணி ஏதாவது வச்சிருக்கியா? ஏன்னா இந்த காலத்துல நம்பவே முடியாது .
அவளையும் ஆமாமா என்ற புத்தி அது மாதிரி இருந்தா அதுக்கு ஆறு எதுவும் பண்ண முடியாது. நீ என்னை வீட்டுக்குள்ளே போட்டு அடைச்சு வச்சாலும் நான் போகும் நினைச்சா போயிருவ ஆனா நாங்க நல்லா இருந்தாலும் நீங்க விட மாட்டீங்க சந்தேகப் பட்டுட்டே இருப்பீங்க ஏன்மா இப்படி இருக்கிற என்னை விட்ருமா தயவுசெய்து நான் எங்கேயுமே போகல என்று பேக்கை வீசி எறிந்து விட்டு மறுபடியும் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.
நான் ஒன்னை நினைச்சா வேற ஒன்னும் நடக்குது .ரமேஷ் டேய் என் கூட வாழ்க்கையில் எங்க அம்மாவை மீறி எப்படி வர்றதுன்னு எனக்கு தெரியல ஆனா எங்க அம்மாவா நீயா அப்படின்னு வரும்போது நான் வெறும் கட்டுன துணியோட வருவேன் நீ என்னை ஏத்துக்குவியா டா உங்க வீட்ல என்ன ஏத்துக்குவாங்களா? காதலிக்கும் போது தெரியறது இல்ல அது கை சேருமா இல்ல பாதியிலும் முடியுமா அப்படிங்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குது .
ஏண்டா பெண்ணா பிறந்தவ னு ரொம்ப கவலையா இருக்குது.
கோயம்புத்தூரில் கல்லூரிக்கு சென்ற தேவிகா அங்கே தோழிகளோடு பேசி மகிழ்ந்து தனது துக்கத்தை மறந்து இருந்தாள்.
அவர்கள் பேசும் மொழி கொங்குத் தமிழில் பேசி பேசி அவளை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தனர்.
அவளுடைய தோழிகளின் பெயர் உமா,சங்கரி, சங்கவி மூவரும் அவர்களுக்கிடையே பேசுவதை பார்த்து இவள் சிரித்துக் கொண்டிருந்தாள் .
அப்போது ஏ உமா என்னடி கொண்டு வந்திருக்கிற டிபன் பாக்ஸில் ஒரே பசியா இருக்குது.
ஏன்டி காலையில் எதுவும் முழுங்கிட்டு வரலையா நீ ?
அதை ஏண்டி கேக்குற எங்க அம்மா பழைய சோத்தை கரைச்சு வச்சுட்டு வெங்காயத்தைக் கொடுத்து இந்த இது முழுங்கிப்போனு சொல்லுதுடி. காலைல எந்திரிச்சது ஏதாவது டிபன் சூடா செஞ்சு கொடுத்தாங்கன்னா முழுங்கிட்டு வந்து இருப்பேன் டி அது பழையசோறா கொஞ்சமா குடிச்சிட்டு வந்துட்டேன் டி அதுதான் பசிக்குது .
சங்கவி ஆனாலும் சங்கரி நீ பண்ற அலப்பறை இருக்குது எனக்குத்தான் தெரியும் காலையிலேயே ஒரு டசன் பூரி அடக்கிட்டு வந்திருப்பேன்கிறது.
ஆனால் நீ சொல்றதையும் நம்பி ஏன்னு கேட்டிருக்கிற தேவிகா..
தேவிகா நீ இவங்க சொல்றதெல்லாம் நம்பாதே எங்கம்மா எல்லாம் ஒரு டஜன் பூரி எல்லாம் செஞ்சு குடுக்கலடி வெறி எட்டே எட்டு பூரி தான் சாப்பிட்டு வந்தேன்.
ஆனாலும் என்ற குட்டி வயிறு சீக்கிரம் நிரம்பி போச்சு கையை கழுவிட்டு வந்துவிட்டேன். இப்ப ரொம்ப பசிக்குது டி அதுதாண்டி அவ டிபன் பாக்ஸ் எடுத்துப் சின்ன வயிற்றை நிரப்பலாம் தவறு ஒன்றும் இல்லை.
எப்போ ரெண்டு டிபன் பாக்ஸ் கொண்டு வருவா ஏன்னா நானும் வந்து ஃபர்ஸ்ட் இன்டெர்வெல் டைம்மிலேயே ஒரு டிபன் பாக்ஸ் காலி பண்ணுவேன். அப்புறம் மத்தியானம் கேண்டின்ல போய் வாங்கி சாப்பிடற அளவுக்கு எல்லாம் நம்ம கிட்ட வசதி இல்லை.
ஆமா நீ முழு கேண்டினீமே உன்ற வயிற்றில் கொட்டோன்னு நினைப்பே, ஆனால் அவ்வளவு காசு கொடுக்கிறது ஆன்ட்டி எங்க போவாங்க ?
ஏண்டி எங்க அம்மா கொடுத்துட்டால் நீ விட மாட்ட போல இருக்குது.
கேண்டீன் இருக்கிற பூராவும் நீயே சாப்பிட்டு போனேனா? சங்கரி மத்தவிங்களுக்கெல்லாம் என்ன பண்றது ..எல்லாம் ஈரத் துணியை வைத்துள்ள கட்டனும்.
ஏ வாடி போயி டீயாவது குடிச்சிட்டு வரலாம்டி, ஏன் நெஞ்சுக்கு வரை கொட்டுயிருப்ப நீ எப்பயா வாய் திறந்து பேசும்போது உருளைக்கிழங்கு மசால் கொஞ்சம் வெளியில எட்டி பார்த்ததடி நான் அப்பவே நினைச்சேன் டி நீ அடுத்தது டீ குடிக்க கூப்பிடுவாய்.
குப்பாத்தா தீர்ப்பு சொல்லிட்டா.. என்ற சங்கரி சங்கவியைத் துரத்த தேவிகா வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
தொடரும்..