• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தேவி வீடு!

"காலையிலிருந்தே தேவி உம்மென்று இருப்பதை வீட்டில் இருக்கும் அவளின் அம்மா வசந்தி,அப்பா கண்ணன், அண்ணன் தேவ்,மூவரும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.ஆனால் யாரும் ஒரு வார்த்தை அவளிடம் காரணம் கேட்கவில்லை.

"மூவரின் எண்ணமோ,திருமணம் பற்றி பேசுவதால் தான் இப்படி இருக்கிறாள் என்று.சாப்ட வாம்மா என மகளை வசந்தி கூப்பிட,நிமிர்ந்து பார்த்தவள், அங்கிருந்து எழுந்து போய், கண்ணன் உட்கார்ந்திருக்கும் சேரின் அருகில் வந்து நின்றாள்.

"மகனிடம் பேசிக்கொண்டிருந்த கண்ணன்,தலையை உயர்த்தி மகளை பார்த்தவர்,சொல்லுமா என்க, அப்பா,எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று வழக்கம் போலவே சொல்ல,அது தான் தெரியுமே என்றார்.

"அதற்கு அவளோ,எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சிருக்குப்பா என பட்டென்று சொல்ல,என்னடி தலையில இடிய போடுற? என்று வசந்தி கேட்க,தங்கையின் அருகில் எழுந்து வந்த தேவ்,என்ன சொன்ன? என கோவமாக கேட்டான்.

"மகனின் கோவ குணம் தெரிந்த கண்ணனோ,கொஞ்சம் இரு பா என்று சொல்லி விட்டு,யார் அவன்? என்க,கதிர் மாமா என்றாள்.அந்த பெயரை கேட்டவருக்கு சந்தோஷம் தாண்டவம் ஆடியது உள்ளுக்குள்.என்ன சொல்ற நீ? என மீண்டும் கேட்ட கண்ணனுக்கு, மாமாவை தான் எனக்கு புடிச்சிருக்கு.

"கல்யாணம் பண்ணுனால் அவர் கூடத்தான் கல்யாணம் பண்ணுவேன். இல்லை என்றால் எனக்கு கடைசி வரைக்கும் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லியவள்,தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

"என்னங்க இது?,கவிதா வீட்ல பொண்ணு இருக்கும் போது, இவ கதிர் மேல ஆசைப்படுவது எப்படி சரி வருமென்று வசந்தி கேட்க,எல்லாம் எனக்கு தெரியும்,உன் வேலையை பார்த்துட்டு போ என்று மனைவியை வழக்கம் போல அதட்டி உள்ளே அனுப்பியவர்,மகனை கண்ணை காட்டி மேலே வரச் சொன்னார்.

"மாடிக்கு வந்தவன்,என்னப்பா விளையாடுறாளா?, இவளோட குணத்துக்கு கதிர் சரி வர மாட்டான்.பொறுமை எந்த கடையில விக்குதுனு கேக்குறவள் உங்க பொண்ணு என்ற மகனுக்கு,நீயே உன் தங்கச்சிய பற்றி இப்படி பேசிறியே பா என்றவர்,செல்லமா வளர்ந்திட்ட புள்ளை,அதனால் தான் இப்படி.

"யாரோ,தெரியாத ஒருத்தனுக்கு கட்டி கொடுத்து என்ன ஆகுமோனு கவலை படுறதை விட,நம்ப கண் முன் வளர்ந்த பையன்,நல்ல குடும்பம்.அவனுக்கு கட்டி கொடுத்தா உன் தங்கச்சி நல்லா இருப்பா பா.

"என்னமோ சொல்றீங்க,இவளை கதிருக்கு கட்டி வைக்க,எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லைப்பா என சொல்லி விட்டு கீழே சென்று விட்டான் தேவ்.கண்ணனோ மனதிற்குள் பல கணக்கு போட்டார்.

"மகள் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்குமென்று அவர் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.பொண்ணை குடுத்து சம்பந்தி ஆகிட்டால் நம்ப கை ஓங்கி விடுமென்று சந்தோஷப்பட்டவரின் நினைவுக்குள் கடந்த காலம் வந்து சென்றது.

"தலையசைத்து அந்த நினைவை கலைத்து விட்டு,இனி ஆக வேண்டிய வேலையை உடனே பார்க்கனும், நேரத்தை வளர்க்க கூடாதென்று சொல்லிக்கொண்டே கீழே வந்தவர், வசந்தி,ஏய் வசந்தி...எங்கே போய் தொலைஞ்சா இவ? என்று வீட்டின் உள்ளே மனைவியை தேட,மகள் அறையில் அவர் பேசும் குரல் கேட்டது.

கதவை திறந்து உள்ளே வந்தவரோ, ஏண்டி, தொண்டை கிழிய கூப்புடுறனே மகாராணி காதில விழலையோ?

கதவு சாத்திருக்கும் போது எப்படி காதில் விழுங்க என்கும் வசந்தியின் மேல் கோவப்பார்வை ஒன்றை வீசி விட்டு,போய் சாப்பாடு எடுத்து வை டி.

"அப்புறம்,காலையில் பெருமாள் வீட்டுக்கு தேவி விஷயமாக பேச போகணும் என்றவரின் வார்த்தையை கேட்ட தேவியோ,அப்பாஆஆஆ என்று எழுந்து போய் அவர் தோளில் சாய,உன் சந்தோஷமே எனக்கு பெருசு மா.

"இருவரையும் பார்த்த வசந்தி, இரண்டு பேர் குணமும் அப்படியே ஒன்னா இருக்கே கடவுளே, இந்த சம்பந்தம் கூடி வரக்கூடாது என மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.

மனைவியின் முகத்தை பார்த்த கண்ணன்,என்ன வேடிக்கை பாக்குற, சொன்னது காதுல விழுந்துச்சா?, இல்லையா? என்க, ம்ம் போறேங்க என சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார்.

"அப்பா எங்க நீங்க இதுக்கு ஒத்துக்க மாட்டீங்களோனு தான் இத்தனை வருஷமும் மனசுக்குள்ளேயே வச்சுட்டு பயந்துட்டே இருந்தேன்பா, மாமாவை நினைச்சிக்கிட்டு,எப்படி பா வேற கல்யாணம் பண்ணிக்க மனசு வரும்?,அதனால தான் கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டே இருந்தேன் என்று தேவி சொல்ல,அட கிறுக்கு பயபுள்ளயே, கதிர் வேண்டும்னு முன்னாடியே சொல்லி இருந்தாக்க இவ்வளவு நேரம் பேரப்பிள்ளை தூக்கி இருப்பேன்.

"சரி...அதனால்,இப்பயும் ஒன்னு கெட்டு போகலை,இந்த அப்பா உசுரோட இருக்குற வரைக்கும் உன் ஆசையை நிறைவேற்ற வேண்டியது என்னோட கடமை என்று சொல்லி, மகளின் தலையை வாஞ்சையாக தடவி விட்டவர்,வா,அம்மா சாப்பாடு எடுத்து வச்சிருப்பா, சாப்பிட்டு நிம்மதியா தூங்கு. காலையில் நான் போய் நல்லபடியா பேசிட்டு வரேன் என்று சொல்லி,மகளை கையோடு அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றார்.

"கணவர் பிள்ளைகளுக்கு வசந்தி பரிமாற,எதிரே அமர்ந்திருக்கும் மகனிடம், நாளை காலை கதிர் வீட்டுக்கு போகணும் ரெடியாகுப்பா என்று கண்ணன் சொல்ல,தந்தையை நிமிர்ந்து பார்த்தவன் ஏதும் பதில் சொல்லாமல் கீழே குனிந்து கொண்டான்.

கதிர் வீடு..

மறுநாள் நடவுக்கு தேவையான அத்தனை நாற்றுக்கட்டுகளையும் வயலில் இறக்கி வைக்கவே சாயந்திரம் ஆனது.வேலையாட்கள் கலைந்து செல்லவும், தாத்தாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான் வளவன்.

வந்த இருவரிடமும் நிலவன் பற்றி கதிர் சொல்ல அவர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.

சம்பளம் வாங்குவதற்காக,வயலில் வேலை செய்தவர்கள் திண்ணையில் வந்து அமர்வது தெரிந்து,அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கதிர் சென்றான்.

நீங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் என்றார் வள்ளி பாட்டி.ம்ம்,மகாராணி சொல்லிட்டா அதை கேளுடா பேரான்டி என்று பிரகாசம் சொல்லி சிரிக்க,கிழவனுக்கு குசும்போ என்றார் வள்ளி பாட்டி.

இவ இன்னும் கட்டிக்கிட்டு வந்ததில் இருந்து பன்னிரெண்டு வயசு குமரியாவே இருக்காள்,நான் தான் கிழவனாகிட்டேன்னு சொல்லிக்கொண்டே கிணற்றடியை நோக்கி குளிக்க சென்றார்.

வளவனோ,அப்பாயி,உன் வாய் இருக்கே வாய்.... அய்யோஓஓஓஓ,எப்படி தான் என் தாத்தா உங்கூட காலத்தை தள்ளுனாரோ என்று சொல்லி விட்டு படியில் ஏறி தனது ரூமிற்கு சென்றான்.

ஆமாடா....ஊர் உலகத்துல இருக்கவளுங்க எல்லாம் ஊமச்சிங்க, எனக்கு மட்டும் தான் வாய் இருக்கு பாரென்று சொல்லி,தனது வலது பக்க தோள் பட்டையில், தன் தாவங்கட்டையை இடித்துக் காட்டினார்.

"தினமும் இப்படி நடப்பது அந்த வீட்டில் வழக்கம் என்பதால்,என்றைக்கு தான் இதுங்க திருந்த போகுதோ என்றாள் அங்கிருந்த செல்வி.அடியேய் சீமை சிங்காரி என்ன குறுக்கு சாலு ஓட்டுரியாக்கும், பிராக்கு பாக்காம புஸ்தகத்தை படிக்கிற வேலைய பாருடி என்று சொல்லியபடியே வெத்தலை வாயில் போட்டு மெல்ல தொடங்கினார்.

தன் செங்கதிரை உலகிற்கு காட்டிக்கொண்டு கிழக்கே உதயமானான் ஆதவன்.இன்னுமா கிளம்புறீங்க? என பெருமாள் கேட்க, இதோ வந்துட்டோம்ப்பானு சொல்லிக்கொண்டே பூஜைக்கான பொருட்கள் இருக்கும் பிரம்பு கூடையோடு செல்வி வர,அவளுக்கு பின்னாடி,சீதாவும்,ராதாவும் வந்தார்கள்.

"நேரம் போகுதும்மா,எவ்வளவு நேரம் தான் சீவி சிங்காரிப்பிங்களோ என்றவர்,வெளியே சென்று கூண்டு வண்டியின் முன் பக்கம் அமர,மூவரும் வண்டியில் ஏறி உள்ளே அமர்ந்து கொண்டு போகலாம் என்றார்கள்.

"முதல் நடவு நாளில்,முதல் நாற்று முடியை வள்ளி பாட்டியும், அவரது இரண்டு மருமகளுங்களும் ஆதவனை வணங்கி விட்டு நடவை தொடங்கி வைப்பார்கள்.காலம் காலமாக இந்த வழக்கத்தை கைப்பிடித்து வருகின்றனர்.

அரைமணி நேர பயணத்தில்,வயலுக்கு செல்லும் வழியில் வந்து கூண்டு வண்டி நிற்க,மூவரும் இறங்கி அங்கிருந்த கவனையை தாண்டி வரப்பில் நடந்து சென்றனர்.பெருமாளும் மாடுகளை அவிழ்த்து, அங்கிருந்த மரத்தில் கட்டி விட்டு அவரும் நடவு வயலை நோக்கி சென்றார்.

"நடவு வயலின் வரப்பின் மேலே இவர்களுக்காக அனைவரும் காத்திருப்பது தெரிந்து,வேகமாக எட்டி நடையை போடு செல்வி என்றார் ராதா. இரும்மா,சறுக்கி விழுந்தா என் புது துணிலாம் சேறாகிடும் என்றவள், கொஞ்சம் வேகமாக நடக்க,மூவரும் சிறிது நிமிடத்தில் அவர்களிடம் வந்து சேர்ந்தனர்.

"பேத்தியிடமிருந்து கூடையை வாங்கிய பாட்டியோ,வழக்கமாக படைக்கும் வரப்பின் மேலே,வாழை இலையை விரித்து வைத்து,அதன் மேல் வீட்டில் செய்து எடுத்து வந்த சக்கரை பொங்கல், தேங்கா வாழைப்பழத்தையும் வைத்து விட்டு தாம்பூலத்தட்டில் சூடத்தை பிரித்து வைத்து தீக்குச்சியால் நெருப்பை மூட்டி சூடத்தில் காட்ட,அதும் பற்றிக்கொண்டு எரிய தொடங்க, தாம்பூலத்தட்டை உயர்த்தி சூரியனுக்கு காட்டி விட்டு,பின் வயலுக்கும் காட்டி விட்டு,மற்றவர்களுக்கு காட்ட அவர்கள் ஆரத்தி எடுத்து கொண்டனர்.

"நடவு வயலில் இறங்கியவர் கையில் நாற்று முடியை எடுத்து, இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி,சூரிய பகவானே எல்லாரையும் காப்பாத்துப்பானு சொல்லி விட்டு,நடவை தொடங்கி வைக்க,அவர் கூடவே சீதாவும் ராதாவும் வயலில் இறங்கியவர்களேம் ,சூரியனிடம் வேண்டி விட்டு,மாமியாரோடு சேர்ந்து நட ஆரம்பித்தனர்,மூவரும் ஆளுக்கு ஒரு முடியை நட்டு விட்டு கரையில் ஏற, வேலையாட்களும் வயலில் இறங்கி அவர்கள் வேலையை தொடர்ந்தார்கள்.

"பின்னர்,வயலில் இறங்கிய கதிரவன்,முத்து,பெருமாள் மூவரும் நடவாளுக்கு தேவையான நாற்றை எடுத்து போட்டுக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு வளவனோடு பெண்கள் மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.பாட்டியோ நடவு முடிந்த பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.

"வேலையாட்களில் ஒருவர் வள்ளியத்தை ஒரு பாட்டு பாடுங்கள் என்று சொல்ல,பாடுற காலம் போய்விட்டு டி ஆத்தா என்றார்.அட பாடுங்க சும்மா,களைப்பு தெரியாம இருக்குறதுக்கு தானே என்றார் இன்னொரு பெண்மணி.

"இப்படி சும்மா உக்காந்துகிட்டு பாட மனசு வரல டி ஆத்தா என்றவர்,வரப்பிலிருந்து சேற்றில் இறங்கி ஆட்களோடு நாற்று நட்டுக்கொண்டே கிராமத்து பாட்டை பாடத் தொடங்கினார்.பாட்டியின் பாடலை கேட்டுக்கொண்டே உற்சாகமாக வேலை செய்தனர் அவர்களும்.

"வீட்டிற்கு வந்த பெண்களோ வேலை ஆட்களுக்கும் சேர்த்து உணவை சமைக்க தொடங்கினார்கள். எப்பொழுதும் முதல் நாள் நடவு ஆரம்பித்தால்,அத்தனை பேருக்கும் அவர்கள் வீட்டில் தான் மதிய சாப்பாடு. செல்வியும் கூட மாட இருவருக்கும் உதவி செய்து கொண்டிருந்தாள்.

"அப்பொழுது மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக் கொண்டே கண்ணன் உள்ளே வந்தார் மனைவியோடு. அவரின் குரல் கேட்டு,வெளியே வந்தவர்கள் இருவரையும் பார்த்து வாங்கண்ணா,வாங்க அண்ணி என்றனர் சீதாவும் ராதாவும்.

வரோம்மா என்றபடி அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டு,எங்கம்மா மாப்பிள்ளை இல்லையா? என்று கண்ணன் கேட்க, இன்னைக்குதான் நடவு ஆரம்பிச்சிருக்கு வயல்ல என்று ராதா சொல்ல,ஓ அப்படியா என்றவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார், அப்போ பெருமாள் வீட்டுக்கு வர. சாயந்திரம் ஆயிடுமே என்று.

"மாப்பிள்ளை கிட்ட விஷயம் ஒன்று பேசிட்டு போலாம்னு தான் ரெண்டு பேரும் வந்தோம் மா என்றவர் சிறிது நேரம் அவர்களோடு பேசியிருந்து விட்டு ஏமாற்றத்தை வெளியே காட்டிக்காமல் வரோம் மா என்று அங்கிருந்து தன் மனைவியோடு வெளியே சென்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நீலகிரி.


"ஆன்ட்டி...ஆன்ட்டிஈஈஈ....என கூப்பிட்டுக் கொண்டே,வீட்டின் உள்ளே வந்தாள் தாமரையின் ஆருயிர் தோழி பவிதா. அவளின் குரலை கேட்டு,தனது அறையில் இருந்து வெளியே வந்தார் வேதவள்ளி.எப்படி இருக்கீங்க ஆன்ட்டி? என்றவள்,எங்கே தாமரையை காணும் என்க,ஊருக்கு போயிருக்காள் பவி என்றார் வேதா(வேதவள்ளி).

"என்ன...ஊருக்கு போயிருக்காளா!,ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே? அவளெல்லாம் ஒரு ப்ரண்டா?என்று திட்டுபவளிடம்,ஏய்...நீ முதல்ல எங்கடி போயிருந்த ரெண்டு நாளாக?.

"அச்சோ ஆன்ட்டி....அந்த கதைய என்னத்தை சொல்ல,கோயம்புத்தூர்ல இருந்து பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு திடீர்னு போன் வந்துச்சு.அதான் நானும் அம்மாவும் கிளம்பி போயிட்டோம் என்றாள் பவி.

"ஓ அப்படியா, இப்ப பாட்டி எப்படி இருக்காங்க பவிமா? என்று வேதா கேட்க,பாட்டி நல்லா இருக்காங்க ஆன்ட்டி.ஹாஸ்பிட்டலில் இருந்ததால் போன் கூட பண்ண முடியலை.சரி நேர்ல பாத்து சொல்லிக்கலாம்னு அம்மா சொன்னாங்க.

" சரி ஆன்ட்டி, அவ எந்த ஊருக்கு போயிருக்காளென்றவளுக்கு,மேடம் சீமக்கரைக்கு போயிருக்காங்க என்று சொல்லிய வேதா,இருடா பவி ஆன்ட்டி உனக்கு காஃபி எடுத்து வரேன் என்றவாறு உள்ளே செல்ல, என்னாஆஆஆ அவளோட ஊருக்கு போயிருக்காளா என்று அதிர்ந்தாள்!!.

"ஆமாம் ஆமாம் என்றவர், கிச்சனின் உள்ளே சென்று, இருவருக்கும் காஃபி தயாரிக்க,உள்ளே வந்தவள் என்கிட்ட சொல்லாமலே போய்டாளே என மீண்டும் வருத்தப்பட்டாள்.அதற்கு வேதாவோ,சொல்லாமல் போகலை, போய் ரூம்ல பாரு என்று சிரிக்க, தாமரையின் ரூமிற்குள் சென்றவளை பெட்டின் மேல் இருந்த டெடிபியரும், அதன் கையில் இருந்த லட்டரும் வரவேற்றது.

"அதை எடுத்து படிக்கும் போதே கண்கள் ஆனந்த அதிர்ச்சியில் விரிந்தது,டெடிக்கு முத்தம் கொடுத்தவள்,அது இருக்கும் இடத்தில் வைத்து விட்டு,ஆன்ட்டிஈஈஈ என கத்திக்கொண்டே போய் வேதாவை கட்டிக்கொண்டாள்.

"லட்டர் எப்போ வந்துச்சி? என்க, 2 நாள் ஆகுது.ம்ம் சூப்பர் சூப்பர் என்றவள், எனக்கு தாமரைய பாக்கனும் போல இருக்கு என வருத்தமாக சொல்ல, வேதாவிற்கும் அப்படி தான் இருந்தது.ஆனால் வயதின் முதிர்ச்சி அவரை பக்குவப்படுத்தியிருந்தது.

"ஆன்ட்டி அப்போ டூ டேஸா நீங்க தனியா தான் இருக்கீங்களா என்றவளுக்கு, இல்லைடா, இரவில் பசங்களாம் இங்க தான் தூங்குறாங்க.ஆஹான் இப்போ எங்கே எந்த குட்டீஸையும் காணலையே என்று ஜன்னல் வழியாக பார்க்க, கண்ணுக்கெட்டும் தொலைவில் சின்னதும்,பெருசுமான மலைவாழ் மக்களின் குடில்கள் இருந்தது.

"அங்கே பார்த்தவளுக்கு பெரியவர்கள் மட்டுமே கண்ணில் பட்டனர். சிறுவர்கள் யாரும் இருப்பது போல தெரியவில்லை. எங்கே ஆன்ட்டி யாரையுமே காணுமே என்று திரும்பியவளிடம் இன்றைக்கு சன்டேவாச்சே பவி.

" இருவருக்கும் காஃபியை போட்டவர், அவள் கையில் ஒன்றை தந்து விட்டு, தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு, ஹாலில் வந்து பேசிக்கொண்டே குடித்தனர்.

சரிடா பவி,என்ன சாப்டுற?,ம்ம்...என்று யோசித்தவள், ஒன்னும் வேண்டாம், நானே உங்களுக்கு சமைக்கிறேன் என்றாள்.அதைக்கேட்டவர் அய்யோஓஓஓஓ என அதிர!, ம்கும் ம்கும் ஏன் ஆன்ட்டி இப்படி? என்று சிணுங்கினாள்.

அப்பொழுது," மேடம்... மேடம் என்னும் குரல் கேட்க,மருதையன் கூப்புடுறான் போய் கதவை திறந்து விடு பவி. ஹம் என்றவள்,அங்கிருந்து சென்று முன் கதவை திறக்க,மலை வாழ் மக்களுக்கே உரிய தோரணையில் நின்றிருந்தான் மருதையன்.

" அவனை பார்த்தவளோ,முகத்தை முறுக்கி காட்ட, தள்ளுடி என சொல்லி உள்ளே சென்றவன்,மேடம்..அம்மா இதை கொடுத்துச்சி உங்களுக்கு என, தன் கையில் எடுத்து வந்த மண் பாண்டத்தை வேதாவின் முன்பு நீட்ட, உதடு பிரியாமல் சிரித்தவரோ, அதை வாங்கி மேலே உள்ள மூடியை திறந்ததும்,உள்ளே இருந்த உணவின் வாசனை அவர் நாசியை தீண்டியது.

"வேக வைத்த கிழங்கும்,திணை சோறும்,அதற்கு தொட்டுக்கொள்ள, முயல் கறியும் உள்ளே இருந்தது. ஏது இவ்வளவு காலையிலே என்றவருக்கு, அப்பா இரவைக்கு வேட்டைக்கு போனாக,அப்போ முசலு கிடைச்சிது, அதான் அம்மையும் வெள்ளானமே செஞ்சி குடுத்துச்சி.

"பேச்சு அவரிடமிருந்தாலும் அவன் மனமோ, தன்னை மயங்க வச்சிருக்கும் மந்திரக்காரியை காணாமல் தவித்தது.
வேலை எப்படி போகுதுப்பா என்ற வேதாவிற்கு, நல்லா போகுதுங்க மேடம் என்றான்.

இன்றைக்கு லீவ் தான் என்றவன், உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு? என விசாரித்தான்.நான் நல்லா இருக்கேன் மருது என்றவர்,பவி,போய் மருதுக்கு காஃபி கொண்டு வா என்க,ம்கும், இந்த மலை மாடுக்கு காஃபி ஒன்னுதான் கொறைச்சல் என முணவிக்கொண்டே உள்ளே சென்றாள் பவி.

சீமக்கரை...

அக்கா தங்கை இருவரும் கோயில் திடலுக்கு செல்லவும்,பொம்மலாட்டம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.சீக்கிரம் வாக்கா என்றவள் கண்ணை சுழற்றி உட்கார இடம் தேட, அவளுடைய வகுப்பு தோழி அங்கே இருப்பது தெரிந்தது.

" வாக்கா என தாமரையின் கையை பிடித்துக்கொண்டு கூட்டத்தின் உள்ளே நுழைந்து தோழியின் அருகே சென்றவள்,அடியேய் என்க,அல்லியின் குரல் கேட்டு தோழியும் திரும்பி,ஏய் வா புள்ள என்றாள்.

" பின் தோழியிடம் தனது அக்காவை பற்றி புராணம் வாசித்தாள் அல்லி. ஏய் போதும் விடுடி என்றவள், ஆரம்பிச்சிட்டாங்க அங்க பாரு என்றாள் தாமரை.அங்கே திரையின் பின்னாலிருந்து கோவலன் கண்ணகி கதையை பொம்மைகளின் வழியே சொல்லிக்கொண்டிருந்தனர்.

" ஒரு மணி நேரம் கடந்து சென்றது, பொம்மலாட்டமும் தனது கலையை சிறப்பாக செய்து முடிக்க,அனைவரும் கையை தட்டினர். பிறகு தங்களிடமிருந்த காசுகளை,அங்கிருந்த உண்டியலில் போட்டு கலைந்து சென்றனர்.

" தோழியிடம் பாய் சொல்லிய அல்லி, பொம்மலாட்டத்தை பற்றி தனது அக்காவிடம் பேசிக்கொண்டே நடந்தவள்,கையை வைத்துக்கொண்டு சும்மா வராமல்,கீழே கிடந்த கல்லை எடுத்து விளையாண்டு கொண்டே வந்தவள்,சற்று தூரத்தில் துங்கி கொண்டிருந்த நாயின் மீது எறிந்து விட்டாள்.

" நாய்க்கோ கல் பட்டு கோவம் வந்து இருவரையும் பார்த்து குறைத்து விட்டு, எழுந்து விரட்ட தொடங்க, அய்யோஓஓஓஓ என்று சொல்லி இருவரும் ஓட தொடங்கினார்கள் அக்காவும் தங்கையும்.

" அல்லிக்கு அந்த தெரு பரிச்சையமானது என்பதால் வேகமாக ஓட,பின்னால் நாய் வருதா என திரும்பி பார்த்துக்கொண்டே ஓடி வந்த தாமரை, அங்கிருந்த சந்தில் திரும்பவும்,எதிரில் போன் பேசிக்கொண்டே வந்த கதிரின் மீது மோதி கீழே விழவும்,அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகவும் சரியாக இருந்தது.

" ஒரு நிமிடம் கீழே விழுந்த இருவருக்கும் எந்த நிலையென்று விளக்க முடியவில்லை.தன் மேல் இருக்கும் பெண்ணின் ஸ்பரிசத்தில், மின்சாரம் தாக்கியதை போல உணர்ந்தான் கதிர்.அவளின் முகமோ அவன் கழுத்தில் பதிந்திருக்க,கதிரின் கையோ,அவள் இடையில் இருந்தது.

" முன்னே ஓடிய அல்லியோ, தன்னிடமிருந்த போனின் டார்ச் லைட்டை ஆன் பண்ணியவள் பின்னால் திரும்பி பாரக்க,அங்கே தாமரை இல்லாததால்,அக்காஆஆஆ அக்கா என கூப்பிட்டுக்கொண்டே வந்தாள்.

" சில அடி தொலைவில் அல்லியின் குரல் கேட்ட தாமரைக்கு,தான் இருக்கும் நிலை நினைவு வர,அய்யோஓஓஓ என அதிர்ந்து எழுந்தவள்,சாரி என்று சொல்லி விட்டு இருட்டில் தங்கையின் குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள்.

" தன் மேலிருந்து எழுந்தவளின் தீண்டலில் சுதாரித்தவனுக்கு,யாரா இருக்கும் இவளென்று யோசிக்க? கரண்ட்டும் வந்தது,ரொம்ப தூரம் அவள் போயிருக்க வழியில்லை என்பதால் சந்திலிருந்து வேகமாக சென்று பார்த்தவனுக்கு,அல்லி கூட ஒருவள் போவது தெரிந்தது.

" அதும் அந்த நேரத்தில் அல்லி திரும்பி பார்த்து நடந்ததால் தான் அதுவும் தெரிந்தது.யாரா இருக்கும் இவள் கூட போவது என யோசித்துக்கொண்டே நடந்தவன்,தன் தோள் பட்டையின் சட்டையில் மேலே ஒட்டிருக்கும் மண்ணை தட்டிக்கொண்டு முன்னாடி பார்க்க,அவன் சட்டை பட்டனில் ஒரு செயின் தொங்கி கொண்டு இருந்தது.

" அதை பார்த்தவுடன் அவனுக்கு புரிந்து விட்டது,சற்று முன்பு தன் மேல் விழுந்தவளுடையது என்று,பட்டனை திறந்து அதை கையில் எடுத்தவன் கண்ணில், தாமரை உருவம் வரைந்த டாலரோடு இணைந்த செயின் தெரிந்தது.

" சரி நாளைக்கு அல்லியிடம் கேட்டு கொடுத்து விடலாமென்று பாக்கெட்டில் போட்டுக்கொண்டு,வீட்டிற்கு சென்றான்.

" மகள்களுக்காக காத்திருந்தனர் அன்பழகன் தம்பதியர், இருவரும் கதவை திறந்து உள்ளே வர, என்னடா பார்த்தாச்சா என்க,நல்லா இருந்ததுப்பா என்ற மகள்களுக்கு,நேரம் ஆகிட்டு போய் தூங்குங்க என்க,அவரவர் அறைக்கு தூங்க சென்றனர்.

" ரூமிற்குள் வந்த தாமரைக்கு சற்று முன்பு நடந்தது நினைவில் வந்தது.அது அவளுக்குள் சிலிர்ப்பை கொடுக்க, என்னடி இது புது பீலிங்ஸ்சா இருக்கே என கண்ணாடியை பார்த்து பேசும் பொழுது, கழுத்தில் செயின் இல்லாதது தெரிந்தது.

" அய்யோ என அதிர்ந்தவளுக்கு, அவன் மீது விழுந்த போது தான் விழுந்திருக்கும் என புரிய,இருட்டில் எங்கு விழுந்திருக்குமோ என்று தெரியாததால் கவலையானவள்,பின் லைட்டை ஆப் பண்ணி கட்டிலில் படுக்க,புது இடமென்பதால் தாமரைக்கு தூக்கம் வரவில்லை, சரியென்று, தனது டிராயிங் நோட்டை எடுத்து அடுத்த உடைக்கான தீமை வரைய தொடங்கியவள்,அதிலே லயித்து போக, ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கி விட்டாள்.

நேரம் சென்று தூங்கினாலும், அதிகாலையில் எந்திரிக்கும் பழக்கம் இருந்ததால்,எழுந்தவள் வழக்கமாக செய்யும் யோகாவை செய்து முடித்து, ரெஸ்ட் ரூமுக்கு சென்று தன்னை பிரஷ்ஷாக்கி கொண்டவள் கதவை திறந்து வெளியே வர, அங்கே கவிதாவும் அன்பழகனும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.மகளின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க,தாமரை வந்தாள்.

மகளிடம்,டீயா, இல்லை காஃபியா என்று கவிதா கேட்க,எனக்கு இஞ்சி டீ வேண்டும் மா? அதை நானே போட்டுக்கிறேன் என்று சொல்லி, சமையலறைக்கு சென்றவள்,தனக்கு தேவையான டீ யை தயாரித்து எடுத்துக் கொண்டு வந்து,அங்கு இருக்கும் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டே ரசித்து குடித்தாள் .

சிறிது நேரத்தில் அல்லியும் சிவாவும் எழுந்து வர, அவர்களுக்கு டீ யை கொடுத்த கவிதா, காலை உணவை செய்ய சமையலறைக்குள் சென்றுவிட்டார்.

அப்பொழுது,அப்பா சிவாவை கூப்பிட்டு நான் ஒரு 11 மணிக்கு மேல் டவுனுக்கு போறேன் என்று சொல்லிய தாமரைக்கு, பார்த்து போடா.பணம் அம்மாகிட்ட வாங்கிக்க என்று சொன்னார். இல்லப்பா, பணம் என்கிட்ட இருக்கு என்று சொல்ல, ஏண்டா?,இந்த அப்பா காசுல வாங்கிக்க கூடாதா என்று கேட்டவருக்கு அப்படி இல்லப்பா என்று சிரித்தாள்.

தம்பி, அக்காவுக்கு ஏதோ தையல் மெஷின் வாங்கணுமா கூட்டிட்டு போயிட்டு நல்ல கடையில பார்த்து வாங்குங்க என்று சொல்லியவர், தனது பட்டன் ஃபோனில் இருந்து வளவனுக்கு அழைத்தார்.


கதிர் வீடு....

"நன்கு தூக்கத்தில் இருந்தவனை செல்போன் சத்தம் எழுப்பி விட , கண்ணை திறக்காமலே, கையை நீட்டி டேபிள் மீது இருந்த போனை எடுத்தவன்,அரைகுறை விழியில் டிஸ்பிளேயில் பேரை பார்த்து அட்டென்ட் பண்ணி ஹலோ என்று சொல்ல, மாப்பிள்ளை மாமா தான் பேசுறேன் என்கவும் அன்பழகன் குரல் கேட்டு எழுந்த அமர்ந்தவன் சொல்லுங்க மாமா.

"தாமரைக்கு ஏதோ மெஷின் வாங்கணுமாம், சிவாவும் கூட வருவான் கொஞ்சம் பார்த்து நல்லதா வாங்கிட்டு வந்துருங்க என்று சொல்ல, நீங்க கவலைப்படாதீங்க மாமா,நான் பாத்துக்குறேன் என்று சொல்லி விட்டு அழைப்பை கட் பண்ணியவன்,மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தான்.

" சில நிமிடம் சென்று மீண்டும் கால் வர, அட்டென் பண்ணி ஹலோ சொல்ல, யோவ் மாமா என்று சிவா அழைக்கும் குரல் கேட்டது.என்னடா என்றான் வளவன், இன்னுமாயா தூங்குர? என கேட்டவன், மணி பாரு யா, அக்கா கிளம்பிருச்சு என சொல்ல, இதோடா என்று எழுந்தவன், போனை கட் பண்ணி விட்டு குளிக்கச்சென்றான்.

" வேக வேகமாக குளித்து, தயாராகி கீழே வந்த வளவனை வீட்டில் இருப்பவர்கள் வித்யாசமாக பார்க்க, என்ன அப்பாயி, என்னமோ இப்பதான் என்னை புதுசா பாக்குற போலவே பாக்குறியே என்றவனை, மேலிருந்து கீழாக பேரனை ஒரு பார்வை பார்த்து விட்டு இவ்வளவு சீக்கிரம் கிளம்பி தொரை எங்க போறீங்க?.

எதேஏஏ சீக்கிரமா கிளம்பிட்டேனா என்றவன், திரும்பி வீட்டு சுவற்றில் இருக்கும் கடிகாரத்தை பார்க்க மணி எட்டு ஆக இன்னும் பத்து நிமிடம் இருப்பதாக காட்ட சிவாவின் மேல் கொலை வெறி வந்தது. .

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top