• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கே.கே.மருத்துவமனை

அப்போ என்னை பற்றி நீங்க யோசிக்கலையானு தாமரை அழ,ம்கும் இனிமேல் இந்த வாழ்க்கை எனக்கு எதுக்குடா?.


எனக்காக நீங்க வாழனும் அத்தைனு அழுதாள்.

தாமரை, எனக்காக ஒன்னு செய்ய முடியுமானு வேதா கேட்க, சொல்லுங்கத்தை, நான் என்ன செய்யனும்?.உங்களுக்காக இந்த உசுரையே தருவேன் என்க,என் வாழ்க்கை தான் இப்படி ஆகிட்டுடா.
இன்னொரு வேதாவாக நீயும் ஆகிடக்கூடாது?.

என் மேல அன்பு கொஞ்சமாவது இருந்தால், நான் சொல்லுற பையனை நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, சத்தியம் பண்ணென்று சொல்லும் போதே, அவருக்கு மூச்சு திணறல் வந்தது.

அத்தை அத்தைனு தாமரை பதற, சிஸ்டரும் அவள் குரலை கேட்டு ஓடி வந்தவர்,அவரை செக் பண்ணி பார்த்து விட்டு,அவங்க மனநிலை பாதிக்கிற அளவிற்கு பேசாதீங்களென்று சொன்னால், ஏன் தான் யாரும் கேட்கமாட்டுறீங்கள்னு சத்தம் போட்டு சென்றார்.

கல்யாணம் என்று கேட்டவளுக்கு கதிர் தாலி கட்டியது நினைவில் வர,எப்படி என்னால் வேற ஒருத்தனை மீண்டும் கல்யாணம் செய்து கொள்ள முடியுமென்று, உள்ளுக்குள் புழுவாய் துடித்தவள், நடப்பது நடக்கட்டுமென்று சொல்லிக்கொண்டாள்.

ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவள்,இப்போ நான் என்ன செய்யனும் சொல்லுங்கத்தை? என்க, ஊரறிய கதிரை கல்யாணம் பண்ணிக்கோடா.உன்னை, மாலையும் கழுத்துமாக கதிர் கையில் பிடித்து கொடுத்து விட்டால், என் உயிர் நிம்மதியா போய்விடுமென்று வேதா சொல்லும் போதே, அவர் வாயை தனது கையாள் மூடினாள்.

சரிங்கத்தை நான் கல்யாணம் பண்ணிக்குறேன், அதற்கு முன்பு உங்களுக்கு நல்லபடியாக சர்ஜரி முடியட்டுமென்று தாமரை சொல்ல, நான் பிழைக்க மாட்டோன் டா.உன் கல்யாணத்தை பார்த்தால் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்.

நோ..சர்ஜரி முடிச்சிட்டு வந்து, நீங்களே எனக்கு கல்யாணம் பண்ணி வைத்தால், நான் பண்ணிக்குறேன்.
இல்லையென்றால், இன்னொரு வேதாவா நானும் ஆகுறேனென்று அங்கிருந்து வெளியே சென்றாள்.

போகும் அண்ணன் மகளையே பார்த்துக் கொண்டிருந்த வேதாவின் கடைக்கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.தாமரை சொன்னால் செய்வாள் என்னும் உண்மை புரிந்து, கடவுள் மேல் பாரத்தை போட்டவர், சிஸ்டர்னு என்கவும், சொல்லுங்க மேடமென்க, டாக்டர் எப்போ வருவார்கள்?.

வெளியே பேசிட்டு தான் இருக்காங்க.

"ஓ..கூப்பிடுங்க".

நிகிலேஷிடம் சொல்ல, உள்ளே வந்தவனிடம், டாக்டர் சர்ஜரி பண்ணிக்கொள்ள நான் சம்மதிக்கிறேனென்றார்.ஓகே என்றவன் வெளியே வந்து வேதா சொன்னதை சொல்ல, எல்லாரும் அங்கிருந்த தாமரையை தான் பார்த்தனர்.

அவளோ யாரையும் கண்டு கொள்ளாமல், கண்ணாடி வழியாக வெளியே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

நிக்கி,நாங்க போய் வேதாவை பார்க்கலாமானு வெற்றிவேல் கேட்க, தாராளமாக பார்க்கலாம் என்றவன், கொஞ்சம் மெயில் அனுப்புற வேலை இருக்கு.

நான் ரூம்ல இருக்கேன், அவங்கள் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காமல் பார்த்து பேசிட்டு வாங்களென்று சொல்லி விட்டு நிகிலேஷ் சென்றான்.

உள்ளே வந்தவர்கள் எல்லாரும் வேதாவை சுற்றி நின்றனர்.யாரும் எதுவும் பேசவில்லை.எல்லாரையும் பார்த்து சிரித்தவரின் பார்வை, ஒரு எதிர்பார்ப்போடு வாசல் பக்கம் சென்று திரும்பியது.யாரை எதிர்பார்க்கிறார் என்பது, அங்கு இருப்பவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

பின்னர் பொதுவாக பேசி விட்டு, எல்லாரும் வெளியே வந்தனர்.

தவிப்போடு வாசலில் நின்று கொண்டிருந்த தனது தம்பியிடம் வந்த பெருமாள், போய் பார்த்திட்டு வா.வேதா எதுவும் சொல்லாது.

அண்ணானு முத்து கண் கலங்க, போ முத்து போய் பாருப்பானு அன்பு சொல்ல, மன்னிச்சிடுங்க மாமாயென்று அன்புவின் கையைப்பிடித்து கதறி அழுதார்.

முத்து,இப்போதைக்கு வேதாவுடைய உடம்பு நல்லபடியாக குணமாகனும், அதைப்பற்றி யோசிக்கலாம்..

நடந்ததை விடு நீ போய் பார்த்து விட்டு வாயென முத்துவின் தோளில் தட்டி அனுப்பி வைத்தார்.

மனதில் குற்ற உணர்ச்சியோடும், ஒருவித நடுக்கத்தோடும்,முத்துவும் உள்ளே போனார்.கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்ணை திறந்த வேதாவிற்கு,காலடியில் நிற்கும் உருவத்தை பார்த்து கண்கள் மறைத்தது.

ஒரு நாள்,இரண்டு நாட்கள் இல்லை.
இதோ பதினைந்து வருடங்களுக்கு பிறகு பார்த்த உருவத்தின் அதிர்வில் கண்களில் நீர் திரண்டு பார்வையை மறைத்ததில், கண்ணை மூடி திறக்க, வேதாவின் காலை பிடித்துக்கொண்டு சத்திமின்றி முத்து குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

சிறிது நிமிடம் இருவரிடமும் மௌனமே ஆட்சி செய்தது.இப்போதைக்கு முத்து அழுகையை நிறுத்தமாட்டாரென்று புரிந்து, மாமா என்று வேதா கூப்பிட, 25 வருடங்களுக்கு பிறகு வேதாவின் வாயிலிருந்து கேட்ட அழைப்பில் திகைத்து நிமிர்ந்தார்.

அழாதீங்க என்றவர், அவரை நோக்கி கையை நீட்ட,மனைவியின் கையை எட்டி பிடித்தவர், மன்னிச்சிடு வேதா.உண்மை தெரியாமல் உன்கிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டேனென்று கையை கூப்ப, கதிருக்கும் தாமரைக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணுங்க.

இப்போதைக்கு எனக்கு இதைத்தவிர வேற எந்த எண்ணமும் இல்லையென்க, சரி வேதா நீ ஆசைப்பட்டபோலவே செஞ்சிடலாம்.அதுக்கு முன்பு நீ நல்லபடியாக குணமாகி வா. நீயில்லாமல் தாமரை கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வழியில்லையென்று முத்து சொல்ல,தெரியுமென்றார் .

அப்பொழுது உள்ளே வந்த நர்ஸ், சார் போதும். ரொம்ப பேசிட்டு இருக்காங்க இது அவங்க உடல்நிலைக்கு இப்போதைக்கு நல்லதில்லை என்க, சரிமா என்றவாறே வேதாவை பார்த்துக்கொண்டே வெளியே சென்றார்.

போகும் போதிருந்த இறுக்கமில்லாமல்,கொஞ்சம் தெளிவாய் வரும் முத்துவை பார்த்தனர்.

அண்ணா என்றவர்,வேதா சொன்ன விஷயத்தை சொல்ல,அதைக்கேட்டு கதிர் அதிர்ந்தான்.

இதற்கு நிச்சயமாக தாமரை சம்மதிக்கமாட்டாளென்று நினைக்கும் போது, அவர்களிடம் வந்த தாமரை, மாமா எனக்கு கல்யாணத்தில் சம்மதமென்றாள்.

அதைக்கேட்டவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க,கதிருக்கோ பேரதிர்சியாக இருந்தது.

அன்பு பக்கம் திரும்பியவள் அப்பா, அத்தையோட ஆசை நான் என்று தயங்கியவள், நானும்,கதிர் மாமாவும் ஊரறிய கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்பது தான்.அத்தை ஆப்ரேஷன் முடிந்து வீட்டுக்கு வரும் போது,எங்கள் கல்யாணம் நடக்குற போல, ஏற்பாடு பண்ணுங்க...

அவள் பேசியதையெல்லாம் கேட்ட கதிருக்கு என்னடா நடக்குது இங்கே? என்பது போல இருந்தது.

அவன் சிறிதும் இதை எதிர் பார்க்கவில்லை.

தாமரை என்று வேலு கூப்பிட,அண்ணா நான் முழு மனசோட தான் சொல்லுறேனென்றாள்.

அதற்கு பின்னர்,அவளிடம் இதைப்பற்றி யாரும் எதுவும் கேட்கவில்லை.

சரி நேரம் ஆகிட்டு வாங்க எல்லாரும் ரூமிற்கு போகலாமென்றார் வெற்றிவேல்.

அவர் யாரென்று தெரியாததால், தாமரை யோசனையாக பார்க்க, உன்னோட பெரிய மாமன் என்றவர், இது உன் பெரியம்மா சிந்துவோட ஒரே பையனென்றார் நவீனை காட்டி.

சிந்துவா அது யாருனு யோசித்தவள்,அவர் உரிமையாய் சொல்லிய விதமே, அவர் மேல் நன்மதிப்பு வந்தது.

நான் அத்தை கூட இருக்கேன், நீங்களெல்லாம் போங்களென்க, கவிதாவும் வேதா கூட இருப்பது அவளுக்கு தெரியாது.

தங்கச்சி கூட நானும் இருக்கேனென்றான் வேலுவும். சரி அப்போ இங்கையோ ஒர் ரூம் வாங்கிக்குங்களென்றார் பெருமாள்.

நாங்க பாத்துக்குறோம் மாமா நீங்கள் போய் சாப்பிட்டு படுங்களென்றான்.

அதற்குள் நிகிலேஷ் இரண்டு பையோடு வந்தவன், நாளைக்கு ஆன்டிக்கு சர்ஜரி பண்ண முடிவு பண்ணிருக்கு.

இதில் நீங்க எல்லாரும் போட்டுக்கொள்ள டிரஸ் இருக்கு, நான் கொஞ்சம் லேட்டாகும் ரூமிற்கு வர என்றவன், போய் சாப்டுங்க என்க, கதிரும் இங்கையே இருப்பதாக சொன்னான்.

சரியென்று மற்றவர்கள் ரூமிற்கு சென்று விட,அதே ஃப்ளோரில் இவர்களுக்கும் ரூம் கிடைத்தது.

கீழே போய் நால்வருக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு,மேலே வந்த வேலு, ஒருவழியாக பேசி அவர்களை சாப்பிட வைத்தான்.

நான் போய் அத்தையை பார்த்துட்டு வருகிறேனென்று சொல்லி விட்டு, தாமரை போக,வேதாவோ மருந்தின் தயவால் தூங்கிக் கொண்டிருந்தார். அத்தையின் அருகில் உட்கார்ந்தவளுக்கு, வேதா,தன்னை எப்படி எல்லாம் வளர்த்தாரென்ற நினைவுகள் வந்தது.

இதுவரை கைநீட்டி ஒரு அடி கூட வேதா அடித்ததில்லை. உறவு முறைக்கு அத்தையா இருந்தாலும்,தனக்கு அன்னையாக தான் நடந்து கொண்டிருந்தார்.

இரண்டு முறை அட்டாக் வந்திருக்கும் போது,ஏன் அத்தை என்னிடம் சொல்லவில்லையென்று வருத்தப்பட்டாள்.

சிறிது நேரம் சென்று அங்கு வந்த சிஸ்டர் நேரம் ஆகிட்டு மா, நீங்க கிளம்புங்களென்க,வெளியே வந்தவள், கண்ணாடி வழியாக தெரியும் தூரத்து நிலவை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரூமிற்குளிருந்த கதிர், போனவளை எங்கே இன்னும் ஆளைக்காணுமென்று நினைத்து வெளியே வர,அங்கு தாமரை நிற்பது தெரிந்தது.

அவளருகில் சென்றவன் சில அடி இடைவெளி விட்டு, விருப்பம் இல்லாமல் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கனும்?.ஒரு முறை பட்டதே போதும்,திரும்ப உன்னை காயப்படுத்த விரும்பவில்லை.

வேதா அம்மாவிடம் பேசி இந்த கல்யாணத்தை நிறுத்துகிறேனென்று சொல்ல,இப்பொழுது அவன் பக்கமாய் திரும்பிய தாமரை, கையை கட்டிக்கொண்டு அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.

சிறிது நொடிகள் அமைதியாக இருந்தவள், என்னை கல்யாணம் பண்ண உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், தாராளமாக நிறுத்திடுங்களென்று சொல்லி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றவளின் கையை இறுக்கி பிடித்தான்.

அவனிடமிருந்து அவள் விலக முயலவில்லை.

இது ஹாஸ்பிட்டலென்று அவள் சொல்ல, சுற்றி ஒரு பார்வை பார்த்தவன், வலது பக்கம் இருக்கும் மாடிப்படியினருகே அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனவன், அங்கிருந்த சுவற்றில் அவளை சாய்த்து, அவளோடு நெருங்கி நின்றவன்,நீ சொல்லுறது நிஜமா?.

இந்த சூழலிலும், அவனுடைய நெருக்கம் தாமரைக்கு சிலிர்ப்பை தந்தது. சற்று முன்னர் அவனை பார்த்து பேச முடிந்தவளால், இப்பொழுது பேச முடியாமல் வார்த்தைகள் சண்டித்தனம் செய்தது.

சொல்லு தாமரை?,முழு மனசோட தான் நீ சம்மதிக்கிறியானு இன்னும் நெருங்கி நின்று கேட்கும்போது மனைவியின் ஸ்பரிசங்கள், அவனுக்குள் தீயை பற்ற வைத்தது.

அந்த நேரம் பார்த்து பவர் கட் ஆக, இன்னும் அவளோடு ஒன்றியவன், சற்றும் தாமதிக்காமல்,கண்ணாடி வழியாக தெரியும் நிலவின் ஒளி பட்டு, கண்கள் மருண்டு விரிந்து, அதிர்ச்சியில் இருப்பவளின் முகம் தெரிய,பட்டென்று அவள் இதழை சிறைப்பிடித்தான்.

அவனிடமிருந்து திமிர முற்பட, ஒரு கையால் தனக்குள் அடக்கியவன், முத்த போரை முடித்து விட்டு,என் பொண்டாட்டிக்கு தான் கொடுத்தேன் என்கும் போது பவர் வந்தது.

தன்னோடு ஒட்டி இருப்பவனை விலக்கி தள்ளியவள்,அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அடேய் அறிவுகெட்டவனே,என்னடா பண்ணி வச்சிருக்க?.ஆ ஊ என்றால், அவள் பொட்டிய தூக்கிட்டு கிளம்பிடுவாளே?.

இத்தனை நாளா அவளுக்காக ஏங்கி தவித்தது போதாதானு மனசாட்சி கேட்க, அய்யோ கோவப்பட்டு எங்கையாவது போய்விடப்போறாளென்று பின்னாடியே வந்தவன், ரூமிற்குள் சென்று பார்க்க, அங்கிருந்த பெட்டில் தாமரை படுத்திருப்பது தெரிந்தது.

ஹப்பாடா என்று நெஞ்சில் கை வைத்தவனை கவிதாவும், வேலுவும் கேள்விக்குறியாய் பார்த்தனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கே. கே. மருத்துவமனை...

காலை எட்டு மணிக்கு வேதாவிற்கு சர்ஜரி என்பதால், வழக்கமான ஃபார்மாலிட்டீஸுக்கான ஃபார்மை சிஸ்டர் கொண்டு வந்து கொடுத்தவர், இதில் அவங்க ஹஸ்பண்ட், இல்லை பேரண்ட்ஸ் யாராவது சைன் பண்ணனுமென்றார்.


அவரிடமிருந்து ஃபார்மை வாங்கிய முத்து, பேஷன்ட் பெயர் இருக்கும் இடத்தில்,வேதவள்ளி முத்துயென்று எழுதியவர், கணவரின் இடத்தில் முத்து பிரகாசமென்று கையெழுத்திட்டார்.

மற்றவர்களும் அவர் செயலுக்கு எதுவும் சொல்ல வில்லை.

சொல்லியப்போலவே வேதாவை சர்ஜரிக்கு கூப்பிட்டுச் சென்றனர்.

சர்ஜரி என்று தெரிந்ததும் வீட்டில் இருந்த மற்றவர்களும், அதிகாலையிலே ஹாஸ்பிட்டலுக்கு வந்துவிட்டனர்.

அங்கிருந்த தாமரையை பார்த்த சிந்துக்கு,தனது தங்கை மகள் தன்னுடைய சாயலில்
இருப்பதை கண்டு அதிர்சியாக இருந்தது.

தாமரையும் சிந்துவை பார்த்து திகைத்தாள். பார்வதி தான் அவளிடம் சிந்து யாரென்று சொன்னார்.

சிந்துவும், தாமரையையும் வார்த்தைகளின்றி, இறுக்கமான அணைப்பிலே அன்பை பகிர்ந்து கொண்டனர்.

நேரமும் கடந்து கொண்டே இருந்தது.

எல்லாருடைய மனதிலும் வேதாவிற்கு, நன்கு சர்ஜரி முடிய வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே இருந்தது.

விஸ்வம் தம்பதியினர் மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு பிரசாதத்தோடு உள்ளே வந்தவர்கள், எல்லாருக்கும் கொடுத்து விட்டு, அம்மன் அருளால் நல்லதே நடக்குமென்றனர்.

கிட்ட தட்ட எட்டு மணி நேரங்கள் சென்ற பின்னர், ஆப்ரேஷன் தியேட்டருக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த லைட் ஆஃப் ஆக,அய்யனாரப்பா, நல்ல செய்தியாக சொல்லனுமென்று வேண்டிக்கொண்டனர்.

சிறிது நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த நிகிலேஷ், இனி எந்த பிரச்சனையும் இல்லை.ஆன்ட்டி நல்லா இருக்காங்க.நாளைக்கு வார்டுக்கு மாற்றியதும் நீங்க போய் பார்க்கலாமென்றான்.

அவனருகில் வந்த அன்பு நிகிலேஷின் கையை பிடித்துக்கொண்டு அழ,நவீனை பார்த்தவன், டேய் இவங்களை எப்படிடா நான் கூப்பிடனும் என்க?, மாமா என்றான் நவீன்.

ஹலோ மாமா... இதுவரை நீங்களெல்லாரும் அழுதது போதும்.
கொஞ்சம் கையை விட்டீங்க என்றால், என் வயித்துக்கு எதாவது போடுவேன்.
சிறு குடலும்,பெருகுடலும் எனக்கு எதாவது குடுடானு என்னை படுத்தி வைக்கிறதென்று பாவமாக நிகிலேஷ் சொல்ல,அதைக்கேட்டவர்கள் சிரித்து விட்டனர்.

குட் இப்படிதான் எல்லாரும் சிரித்த முகமாக இருக்கனுமென்றவாறு வெற்றிவேலிடம் வந்தவன், இன்றைக்கு நைட் நான் அசாமிற்கு போகனும் அங்கிள்.

நம்ப ரெகுலர் பேஷன்ட் கொஞ்சம் கிரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்குறதாக, காலையிலே ஹாஸ்பிட்டலிலிருந்து கால் வந்துடிச்சி, நான் டிக்கெட் போட்டுட்டேன்.

ஒன் வீக்ல தையல் பிரித்ததும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க, மெடிசின் ரெகுலரா எடுத்துக்க சொல்லுங்களென்றவன், தாமரை- கதிர் கல்யாணத்தில் பார்க்கலாமென்று, அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

திலகா எல்லாரையும் கூப்பிட்டு வா என்ற வெற்றிவேல், ஆண்களோடு கீழே இருக்கும் கேன்டீனுக்கு சென்றார்.

காலையிலிருந்து யாரும் எதுவும் சாப்பிடவில்லை என்பதால், அங்கிருந்ததை நவீனுக்கு கண்ணை காட்ட, ஜூஸ், டீ, காஃபி என்று அவர்களுக்கு பிடித்தமானதை ஆர்டர் பண்ணினான்.

அங்கிருந்தவர்களுக்கு நிகிலேஷின் திறமையை பற்றி வெற்றிவேல் சொல்ல,சின்ன வயதில் எவ்வளவு பெரிய மனமென்று பாராட்டினார்.

இது அவர்கள் குடும்பத்துக்கே உள்ள பெருந்தன்மை என்றவர், பிறகு அவனது பாட்டி பானுமதி பற்றியும், அசாமில் அவர்களுக்கு இருக்கும் தொழிலை பற்றி சொல்ல, இவ்வளவு பெரிய ஆளாயென்று மலைத்து போயினர்.

தாமரை மட்டும் அவர்களோடு கீழே வரவில்லை. அதை பார்த்த கதிர் அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரியலையேனு யோசித்தவன், பிறகு மாதுளை ஜூஸை வாங்கிக் கொண்டு மேலே சென்றான்.

போகும் அவனை வீட்டினர் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். எப்படியோ இருவரும் நன்றாக இருந்தால் போதுமென்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

மேலே வந்து பார்க்க, அங்கு தாமரை இருப்பது போல் தெரியவில்லை. ஒருவேளை ரூம்ல இருப்பாளோனு நினைத்துக் கொண்டே கதவை திறக்க, சத்தம் கேட்டு பெட்டில் படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்தாள்.

இந்த ஜூஸை குடியென்று அவள் முன்பு நீட்ட, தாமரையோ எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

குடி டி என்று கொஞ்சம் வேகமாக சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தாள்.

அடேய் கதிரு, கொஞ்சம் ஓவரா தாண்ட போற, அடக்கி வாசியென்று சொல்லிக் கொண்டவன், காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலை, இதை குடி என்று தன்மையாக சொன்னான்.

பிறகு வாங்கி பாதி குடித்தவள், நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா? என்றாள்.

அவள் கேட்டதோ,அவனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது

அவன் முகத்தைப் பார்த்தவள் ரொம்ப சந்தோஷப்படாதீங்க?, மனிதாபிமானத்தில் தான் கேட்டேனென்று சொல்லி, ஜூஸை முழுவதுமாக குடித்து முடித்தாள்.

ஆளை பார்த்தால் ஊமச்சி போல இருக்கிறாள். ஆனால், வாய் மட்டும் எட்டு ஊருக்கு இருக்கும் போலனு மனதிற்குள் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

போகுபவனை பார்த்துக் கொண்டிருந்தவள்,ஆள் பார்க்க கரடு முரடாக தெரிந்தாலும், கொஞ்சம் அழகா தான் இருக்கிறானென்று சொல்லும் போது, அவள் இதழோரம் லேசாக சிரிப்பு வந்தது.

நல்லாவே ரசிக்கலாம் உன் புருஷன்டி என்றவனை முறைத்து பார்க்க,அடேய் கதிர்,வாய்ல தான்டா உனக்கு சனினு சொல்லிக்கொண்டே கீழே சென்றான்.

என்ன மாப்பு,பொண்டாட்டி மேல உள்ள கரிசனம் ,நம்ப காவேரி ஆறு கணக்கா வழிஞ்சி ஓடுதேயென்று வேலு கேட்க, ஏண்டா ஏன்?.முறைத்தே கொன்னுடுவாள் போல உன் தங்கச்சி.

ம்ம் நம்ப சுழி சும்மா இருந்திருக்கனுமென்று வேலு சொல்ல, நான் எதுவுமே பண்ணலைடா என்க, யாரு நீயாடி மாப்பு, துப்பு கெட்ட பயலே நேற்று கரன்டை நிறுத்துனது நான் தான்டா.

ஹாஸ்பிட்டலுனு தெரியாமல்,என்னமோ பிக்னிக் வந்த போல கையை புடிச்சிக்கிட்டு நிக்குறனு பல்லை கடிக்க,அட நீதானா அந்தக்குயிலென்று வேலுவின் தோளில் கைப்போட்டு கதிர் அணைக்க,நான் தாமரை இல்லை, அதோட அண்ணன்டா என்றான்.

வேதாவிற்கு இப்பொழு மயக்கம் தெளியாது என்பதால், தாமரையையும், வேலுவையும் விட்டு மற்றவர்கள் கிளம்பலாமென்றனர்.

நானும் இருக்கேனென்று முத்து சொல்ல, எல்லாரும் ராதாவை தான் பார்த்தனர்.ராதா எதுவுமே சொல்லாமல் இருப்பதை பார்த்து, முத்துவும் அவர்களோடு வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

விஸ்வம்- பூரணி இருவரும் தாமரையிடம் சொல்லிக்கொண்டு, பூனேவிற்கு கிளம்பிச்சென்றனர்.

ஐந்து நாட்கள் கண் இமைக்கும் நொடி போல பறந்து போனது.ஒரு குழந்தையைப்போலவே தனது அத்தையை பார்த்துக்கொண்டாள்.

நாளைக்கு தையல் பிரித்ததும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்களென்று, முதல் நாளே சிஸ்டர் இவர்களிடம் சொல்லி விட்டார்.

இருந்த பொருட்களையெல்லாம் வேலுவும், தாமரையும் பேக்கிங் பண்ணி முடிக்க, ராதா, நவீன் அன்பு , முத்து நால்வரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர் தையலை பிரித்தவர், காயம் ஆறிக்கொண்டு வருவதென்றும், என்ன வகையான உணவு சாப்பிட வேண்டும் என்ற பட்டியலையும், மேலும் சில இன்ஸ்டிரக்சனையும் இருவரிடம் சொல்லிய டாக்டர்,அடுத்த மாதம் வரச்சொல்லி விட்டு, போய்ட்டு வாங்களென்றார்.

தேங்க்யூ டாக்டர் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தவர்கள், அங்கிருந்த லிப்டில் ஏறி கீழே உள்ள ரிசப்ஷனிஷ்டிடம் வந்தவர்கள், வேதாவின் பெயரைச்சொல்லி எவ்வளவு ஆனதென்க, பே பண்ணியாச்சு என்றவர், புல் டீட்டைல்ஸ் அடங்கிய ஃபைலை கொடுத்தார்.

யார் பே பண்ணினாங்க என்க?,முத்து பிரகாசம் என்ற பேரில் பே பண்ணிருக்காங்க என்க,ஓகே என்றவள்,வேதாவோடு வெளியே வர, அவர்கள் முன்பு வந்து, நவீன் காரை நிறுத்த,பொறுமையாக வேதாவை உள்ளே உட்கார வைத்தனர்.
மற்றவர்களும் ஏறிக்கொள்ள கார் சீமக்கரையை நோக்கிச்சென்றது.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் ஊருக்குள் நுழைந்த கார் நேராக கதிர் வீட்டின் முன்பு போய் நிற்க, இங்கே எதற்கென்று வேதாவும்,தாமரையும் பார்த்தனர்.

இனி நீங்க இந்த வீட்டு மருமகளா இங்க தான்கா இருக்கனுமென்றபடியே கீழே இறங்கிய ராதா, சீதா என்று வாசலில் நின்று குரல் கொடுக்க, கையில் ஆலத்தட்டோடு வந்தார்.

அண்ணா என்ற வேதாவோ அன்புவை பார்க்க,போம்மா என்றார்.

வேதாவை வேலுவும் நவீனும் கீழே இறக்கி, வீல் சேரில் உட்கார வைக்க, ராதாவும், முத்துவும் வேதாவின் பின்னாடியிருந்து, வாசலை நோக்கி வீல் சேரை தள்ளிக்கொண்டு போனார்கள்.

பின்னர் வேதாவிற்கு ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து, மூன்று பேரும் உள்ளே வாங்களென்று சீதா சொல்ல, இன்னொருத்தர் யாரென்று தனது இடது பக்கமாய் வேதா திரும்பி பார்க்க, அங்கே முத்து நின்று கொண்டிருந்தார்.
இதை சிறிதும் வேதா எதிர்பார்க்கவில்லை.

அக்கா நம்ப வீடு நம் குடும்பமென்று ராதாவோ, மாமா போகலாமென்றதும், ம்ம் என்றவர் ராதோவோடு இணைந்து வீல் சேரை தள்ளிக்கொண்டு
வேதாவிற்காக தயார் பண்ணிய அறைக்குள் அழைத்துச்சென்றனர்.

அக்கா என் கையை பிடிச்சிக்கிட்டு பொறுமையா பெட்டில் உட்காருங்க, இல்லை மாமாவை தூக்க சொல்லட்டுமா?, முயற்சி பண்ணுறேன் ராதா என்றவாறே ராதா கையை பிடித்து எழுந்தவரோ பெட்டில் ஒரு வழியாக வேதா உட்கார்ந்து கொண்டார்.

முதுகிற்கு தலகாணியை வைத்து விட்டு, நான் போய் குடிக்க எதாவது கொண்டு வரேன் என்க,இதோ என்றபடியே கையில் நன்கு ஆற்றிய பாலோடு உள்ளே வந்த சீதா, இதை குடி வேதானு நீட்டினார்

சீதாவையை பார்த்துக்கொண்டிருந்த வேதாவிற்கு, இன்னும் இந்த அக்காவை நீ மன்னிக்கலையானு சீதா கண் கலங்க,என் மேல கோபம் வரலையாக்கா என்றார்.

உன் மேல ஏன் வேதா கோவப்படனுமென்க, ராதாவோட வாழ்க்கைக்கு நடுவில இப்போ நான் வந்துருக்கேனேகா.யாரோட வாழ்க்கையிலும் யாரும் குறுக்கே வரலை.

உன் வாழ்க்கையை நீ வாழுற, ராதா வாழ்க்கையை அவள் வாழுறாள். இதில் நீ எப்படி குறுக்கே வந்தனு சொல்ல முடியும்?.

இனி புள்ளைங்க கல்யாணத்தை பற்றி யோசிக்கலாம் என்க, கண்டிப்பாக்கா என்றார் வேதாவும்.

ஊரில் தெரிந்தவர்களெல்லாரும் வேதாவை வந்து பார்த்துச்சென்றனர்.

சிலர் முத்துவோட பொண்டாட்டி வேதாவாம் என்றனர், சிலரோ அதான் வேதா இத்தனை வருஷமா இந்த பக்கம் வரலையா என்று பேசிக்கொண்டனர்.

காரிலிருந்து வேதாவின் பொருட்களை கதிரும், வேலுவும் எடுத்துக்கொண்டு உள்ளே போக, அப்பா நம்ப வீட்டுக்கு போகலாமென்றாள் தாமரை.

அப்பா நானே கொண்டு வந்து விட்டு வரேனென்று,இருவரையும் கூப்பிட்டுப்போய் வீட்டில் விட்டு விட்டு, நவீன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

தாமரையோடு அன்பு மட்டும் உள்ளே வருவதை பார்த்த வீட்டினர், வேதா எங்கே? என்க, புருஷன் வீட்டில் விட்டுட்டு வரோமென்று சொல்லிய அன்பு, தனதறைக்கு சென்று விட்டார்.

தாமரையை பார்த்த அல்லி, அக்கா என்றபடியே வேகமாய் ஓடி போய் அவளை கட்டிக்கொண்டு அழுதாள்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top