Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதாரா!
பதறி எழுந்தவளை பார்த்த மாறன் ஹேய் ரிலாக்ஸ்,ரிலாக்ஸ்.நான் தான்.எதுக்கு இவ்வளவு பதற்றம்?.
இல்ல படிக்க ஆரம்பிச்சதும் புக்கில் ஆழ்ந்து போயிட்டேன். திடீர்னு குரல் கேட்டதும் அதிர்ந்துட்டேன் என்றவள், கீழே விழுந்த புக்கை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்தவள், டேபிளின் மேலஇருந்த ஃபைலையும், ஹேண்ட் பேகையும் எடுத்துக்கொண்டு, போகலாம் என்றாள்.
ஓகே என்றவன் முன்னாடி நடக்க, வெளியே வந்தவள் அங்கும் இங்கும் சுற்றி பார்க்க யாருமே அங்கு இருக்கிற சுவடில்லை.அப்பொழுது தான் ரொம்ப நேரம் ஆகி விட்டது என்பது புரிந்தது.
பின்னர் காரில் ஏறி இருவரும் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சிறிது நிமிடம் வரையில் இருவரும் மௌனமாகவே காரில் சென்று கொண்டிருக்கும் போது, உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் என்றாள்?
ம்ம் கேளுங்க தாமரைனு மாறன் சொல்ல, நீங்க தான் எம். டி. என்பதை ஏன் சொல்லவில்லை?.
எதற்கு சொல்லனும்? என்று மாறன் கேட்க,வாஸ்தவம் தான் என்றாள்.
ஹம் என்றவன்... அடுத்து எதாவது கேள்வி இருக்கா? என்க, நத்திங் என்றவள் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள்.
முன்னாடி இருக்கும் கண்ணாடி வழியாக பின்னாடி இருப்பவளை, கார் ஓட்டிக்கொண்டே பார்த்தவனுக்கு அந்த பயணம் புதுவிதமான அனுபவமாக இருந்தது.
எத்தனையோ வருடங்களாக இதே வழியில் தனியாக காரை ஓட்டிக்கொண்டு,இரவு நேரத்தில் பயணம் செய்திருக்கின்றான்.ஆனால் எந்த பெண்ணையும் அவனோடு இதுவரை கூப்பிட்டு போனதில்லை.ஏன் தனது தங்கையான லீனாவையுமே அழைத்து சென்றதில்லை.
தனது கம்பெனி இருக்கும் ஏரியாவில் இருந்து,வீட்டிற்கு செல்லும் வழிகளின் இரண்டு புறமும் காடுகளும்,மலைகளும் சூழ்ந்திருப்பதே அதற்கு காரணம்.
எந்த நேரத்தில் என்ன அசம்பாவிதம் நடக்குமென்று யாருக்கும் தெரியாது.தான் ஆண்மகனாக இருப்பதால்,ஏதோ ஒரு விதத்தில் போராடி தப்பித்துக்கொள்ளலாம்.
அதே பெண் பிள்ளைகளென்றால் நாட்டில் நடப்பதை வைத்து எதையும் சொல்ல வழியில்லை என்பதால், முடிந்த அளவிற்கு, லீனாவை கம்பெனிக்கு வர அனுமதிக்க மாட்டான்.
அப்படி வந்தாலும் மாலை ஆரம்பிப்பதற்குள்ளே வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டே மற்ற வேலையை பார்ப்பது.இன்று யாரென்று தெரியாத ஒரு பெண்ணை, தங்கை சொன்னாள் என்ற ஒரு வார்த்தைக்கா, அவளை வீட்டில் தங்க வைத்திருக்கின்றான்.
இப்படி பலவிதமான யோசனைகளோடு வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்தியவன், அவள் இறங்குவாளென்று பார்க்க, அதற்கான எந்த அறிகுறியும் இருப்பது போல தெரியவில்லை.
காரை ஆப் பண்ணி விட்டு பின்னாடி திரும்பி பார்க்க, தாமாரை நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.
இவ என்ன இப்படி தூங்குறாளென மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், தாமரை, தாமரை என்று கூப்பிட அவளோ கண்விழிக்கவில்லை.
ம்கும்...முழிச்சிட்டு இருக்கும் போது கூப்பிட்டாலே காது கேட்காத ரகம், இப்போ தூங்கிட்டு இருக்காள். நல்லா விழுமென்று முணுமுணுத்தவன், கார் ஷெட்டின் கதவை திறந்து விட வெளியே வந்த பூரணியை பார்த்தவன், என்னை காக்க வந்த மாதாஜியே நீ வாழ்க.
மகனின் வார்த்தைகளை கேட்டு என்னடா படுவா கிண்டலா என்க,அய்யோ அம்மா சீக்கிரமா இங்கே வா .
இதோ கண்ணா என்றவறே கார் ஷெட்டின் கதவை திறந்து விட்டவர் மகனின் அருகில் வந்து சொல்லு கண்ணா,என்ன விஷயம்?.
பின் சீட்டை போய் பாரும்மா என்றான்.
என்ன கண்ணா விளையாட்டு?, தாமரை எங்கேப்பா?. ஆளை காணும், நீ மட்டும் வந்திருக்கனு யோசனையாய் கேட்டுக்கொண்டே, மாறன் சொல்லியது போல, காரின் பின் கதவை திறந்து பார்க்க, உள்ளே தாமரை தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
பாவம் புள்ளை... ரொம்ப சோர்வாகிட்டாள் போல,அதான் தூங்கிட்டாளென்றவர்,தாமரை தாமரையென்று அவளின் தோளை தட்டி எழுப்பவும் பட்டென்று கண் விழித்தாள்..
வாம்மா வீடு வந்து விட்டதென்று பூரணி சொல்ல,சும்மா கண்ணை மூடினேன் மா அப்படியே தூங்கிட்டேன் போலனு காரில் இருந்து கீழே இறங்கியவள்,அவரோடு வீட்டிற்குள் சென்றாள்.
இருவரும் பேசிக்கொண்டே போவதை பார்த்தவன், இவளுக்கு நம்ப கிட்ட தான் பேச்சு வராது போலனு காரை ஷெட்டுக்குள் நிறுத்தி விட்டு, கதவையெல்லாம் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.
அம்மா மேல என்னோட ரூமிற்குள் போய்க்கிறேன்னு பூரணியிடம் சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.
நீ மட்டும் மேலே தனியா ஏன்மா தங்கனும், அதான் லீனாவோட ரூம் இருக்கிறதே என்கவும்,இல்லைங்கம்மா, வொர்க் விஷயமா தூங்க நள்ளிரவுக்கு மேல ஆகும்.அதனால் நான் மேலேயே இருக்கேன்னு ஒருவழியாக பூரணியை சம்மதிக்க வைத்தாள்.
பின்னர் தனது டிராலி பேகை எடுத்தவள், ரூம் சாவிமா?,அப்போ சாப்பாடு இங்கே தான் அதுக்கு சம்மதம் சொல்லென்றார்.அவர் டீலிங்கில் சிரித்தவள், நிச்சயமா வீட்டில் இருக்கும் போதெல்லாம் நானே உங்களுக்கு சமைத்து தரேன்.மற்ற நேரமெல்லாம் சேர்ந்தே சமைக்கலாம்மா என்றாள்.
தாமரையின் சொல்லை கேட்டவர், போய்ட்டு ஃப்ரஷ் ஆகி சீக்கிரமா வா, டிபன் எடுத்து வைக்குறேன்.
சரிங்கம்மானு படியில் ஏறி மேலே இருக்கும் ரூமிற்கு வந்தவள், தன்னிடமிருந்த சாவியைக்கொண்டு கதவை திறந்து உள்ளே வந்தவளை, எங்கும் இருந்த இருட்டே வரவேற்றது.
பின்னர் தனது ஃபோனில் இருந்த லைட்டை ஆன் பண்ணியவள், சுவிட்ச் பாக்ஸை தேடி உள்ளே இருக்கும் லைட்டை போட்டு அறையை பார்க்க, திகைத்து நின்றாள்.
கலை நயத்தோடு அவ்வளவு அழகாக இருந்தது. பின்னர் அங்கிருந்த கபோர்டில் தனது பேகை வைத்து விட்டு, முன் கதவை தாழிட்டவள்,ரெஸ்ட் ரூம் உள்ளே சென்று, ஃப்ரஷ் ஆகி வேறு உடையை மாற்றிக்கொண்டு, ஃபோனை சார்ஜிங்கில் போட்டு விட்டு கீழே வந்தாள்.
தாமரை உள்ளே வரும் போது தான் மாறனும் வெளியே வந்தான். இருவரும் வந்து உட்கார பூரணியும் பரிமாறினார்.
நீங்க சாப்டீங்களா என்க,ஆச்சு தாமரை நீ சாப்பிடுமா.
பின்னர் சாப்பிட்டு முடித்ததும் அந்த பாத்திரங்களையெல்லாம் சிங்கில் வாஷ் பண்ணி வைத்தவள், காலையில் என்ன சமைக்கணும்னு பூரணியிடம் கேட்கும் போது, பீட்ரூட் சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா என்று சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் வந்தான் மாறன்.
அவன் சொன்னதை கேட்டவள்,ஓகே சார் செய்து விட்டால் போச்சு என்றவள்,ஏங்கமா இதை அங்கிள் சாப்பிடுவாங்களா?.
அதெல்லாம் எது செய்து கொடுத்தாலும் அவர் சாப்பிடுவார் என்கவும்,இருவரிடம் குட் நைட் சொல்லிக்கொண்டு மேலே இருக்கும் தனது அறைக்கு வந்தவள், லேப்டாப்பை ஆன் பண்ணி வி.விக்கு மெயில் பண்ணினாள்.
நல்லபடியாக சதாராவில் இருக்கும் லீனா வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், மாறனின் கம்பெனியில் டிசைனிங் செக்க்ஷனில் வேலை கிடைத்ததையும் அனுப்பினாள்.
சிறிது நிமிடங்கள் சென்று கங்கிராஜுலேசன் ஏஞ்ஜல்னு வி.வி.யிடம் இருந்து மெயில் வந்தது .
எனக்கு ஒரு டவுட் என்று தாமரை பதில் மெயில் அனுப்ப, என்ன சந்தேகம் ஏஞ்சல்?.உனக்கு என்ன தெரியனும் கேளு?.
ஓகே என்றவள்,மாறனின் கம்பெனியில் இதே போல் மனிதர்கள் உருவத்தை தானே வரைய சொல்லி கேட்கிறார்கள். இது நம்ம ப்ராஜெக்ட் விஷயத்தில் எதாவது இடைஞ்சலாக வருமானு கேட்க, அதற்கு ஒரு ஸ்மைலி இமோஜியை அனுப்பி இருந்தார்.
இதுக்கு என்ன அர்த்தமென்று? தாமரை கேட்க, எம் டி டெக்ஸ்டைல்ஸில் நார்த் இந்தியன் பெண்கள் கட்டும் புடவை தான் தயாரிக்கிறார்கள்.அதும் எம்பிராய்டரி மற்றும் ஸ்டோன் வைத்த மாடல்களில் மட்டுமே.
ஆனால்,நாம ரெடி பண்ண போற ப்ராஜெக்ட் பட்டுப்புடவையில், தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கோயில் சிற்பங்கள்.அதனால் கவலைப்படாமல் கிடைத்த வேலையில் முழு ஈடுபாட்டை காட்டு.நேரம் கிடைக்கும் போது நான் சொன்ன ப்ராஜெக்டை கம்ப்ளீட் பண்ணு ஏஞ்சல்.
அப்புறம் ஒரு விஷயம், வேதா கால் பண்ணி உன்னை பத்தி விசாரித்தார். எனக்கு தெரியாதென்று சொல்லிவிட்டேன்.
உடம்பை பார்த்துக்கொள். பாய் ஏஞ்சலென்று தாமரைக்கு மெயில் அனுப்பிவிட்டு, ஆப் லைனுக்கு சென்று விட்டார் வி. வி.
மெயிலை படித்தவளுக்கு வேதா எப்படி இருக்கின்றாரோ என்று நினைக்க கண்கள் கலங்கியது.
சீமக்கரை...
பெருமாள் பண்ணியதை பற்றி தான் நீ பேசுறியா வளவானு திரும்பவும் கேட்க, ஆமாம் மாமா என்றவன், போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து பார்க்கலாமா என்றான்.
அதைக்கேட்ட கலா அப்பாயி, அய்யோஓஓஓ , வேண்டாம் அப்பு. போலிஸுகாரனுங்க வரைக்கும் எம் பேத்தி காணாம போனது தெரிந்தால், ஊர்ல இருக்கவளுங்க நாக்கு மேல பல்லை போட்டு பேசிடுவாங்கப்பு.
கோவத்தில போனவள் திரும்பி வருவாள். அதுவரை வெளியே தெரியாமல் தேடுங்க.
அம்மா சொல்றதும் சரி தான் வளவா என்கவும்,சரி மாமா தெரிஞ்சவங்க எல்லார்கிட்டையும் விசாரிச்சிடலாம்.நான் வீட்டுக்கு கிளம்புறேன்.தாமரை பற்றி எதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்க என்றபடி அங்கிருந்து சென்றான்.
அத்தை பசிக்கிதுனு சொன்னேனென்று வேலு சொல்ல, இதோ சாமி என்றவர் சமையல் கட்டுக்குள் சென்று விட்டார்.
சீதாவின் கேள்வியில் மூவரும் தலை குனிந்து நிற்பதை பார்த்த பிரகாசம் தாத்தா, உப்பை திண்ணால் தண்ணீர் குடிச்சி தான் ஆகனும்.இப்போதைக்கு ஏதோ நம்ப குடும்பத்துக்கு கஷ்ட காலம்னு நினைச்சிப்போம்.நடக்குறதை எல்லாம் அந்த அய்யனார் பாத்துட்டு தான் இருக்கார். இந்த விஷயத்தை இதோட விடுங்களென்றார்.
அப்பொழுது வீட்டிற்கு வந்த வளவன் வேதா வந்திருக்கும் விஷயத்தை சொல்லியதை கேட்டு, அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.
என்னப்பா சொல்ற?,வேதா வந்திருக்காளானு வள்ளி அப்பாயி கேட்க,ஆமா அப்பாயி. இப்பதான் பார்த்து பேசிட்டு வரேன்.தாமரையை காணவில்லைனு ஃபோன் பண்ணி சொல்லிருக்காங்க போல..
அடேய் அது என்ன யாரோ போல அவங்க? இவங்கனு?, ஏன் வேதாவை அம்மானு சொல்ல முடியலையானு பிரகாசம் தாத்தா கோவமாக கேட்க,வளவனோ தனது மனதுக்குள் குதூகலித்தான்.
நான் போய் வேதாவை பார்த்துட்டு வரேனென்று சொல்லிக்கொண்டு வள்ளி அப்பாயி அங்கிருந்து கிளம்ப, அம்மா நானும் வரேனென்றார் பார்வதி சொல்ல,சரி வாம்மா என்கவும்,அத்தை கொஞ்ச நேரம் இருங்களேன், சமையலை முடிச்சிட்டு நாங்களும் வரோமென்று சமையலறை வாசலில் நின்று சீதா சொல்ல, ம்ம் முடிச்சிட்டு வாங்கம்மா என்றார்.
முத்துவிற்கோ, வேதாவை பார்க்க வேண்டுமென்று உள்ளம் துடித்தது.
என்னை மறந்திருப்பாளா?, இல்லை ஞாபகம் வச்சிருப்பாளா?, கழுத்துல இன்னும் நான் கட்டிய தாலிய போட்டுக்கிட்டு, என்னோட பொண்டாட்டியா தான் இருக்காளானு பல கேள்விகள் முத்துவின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.