• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
நீலகிரி!

அதிகாலையிலே எழுந்த மயிலாவோ வீட்டு வேலையை முடித்தவர், வேக வேகமாக மிலனுக்கு பள்ளிக்கூடத்திற்கு எடுத்துப்போவதற்காக சமைத்து முடிக்கவும், ஐந்தரைக்கு வழக்கமாக ஒலிக்கும் சங்கும் தூரத்தில் ஒலித்தது.


பின்னர், மிலனை எழுப்பி விட்டு, அங்கிருந்து பவியின் வீட்டை நோக்கிச்சென்றார்.சிறிது நிமிட நடையில் பவியின் வீட்டுக்கு வந்தவர், திண்ணையில் சுருண்டு படுத்திருந்த கணவரை தட்டி எழுப்ப,ம்ம் என்றவாறே மூக்கையன் எழுந்து உட்கார்ந்தார்.

அவரிடமிருந்த சாவியை வாங்கி முன் கதவை திறந்து உள்ளே போனவர், அறைக்குள் சென்று பவியை பார்க்க, அவளோ தூங்கிக்கொண்டிருந்தாள்.

சத்தமில்லாமல் சமையலறைக்குள் சென்று டீயை போட்டு,இரண்டு டம்ளரில் ஊற்றி, அதை எடுத்து வந்து, வெளியே உட்கார்ந்திருந்த கணவருக்கு ஒன்றை கொடுத்து விட்டு,மயிலாவும் குடித்தார்.

ஏம் புள்ள,நான் வீட்டுக்கு போகட்டுமானு மூக்கையன் கேட்க, ம்ம் போயா, சின்னவனுக்கு ஆக்கி வச்சிட்டேன்.மறக்காமல் அவனை சாப்பிட்டு போகச்சொல்லுயா.

ஏன்யா,வேதாம்மா வீட்டுக்கு போய் சேர்ந்திருப்பாங்களானு கேட்க, போயிருக்கும்.அங்க போய் சேர்ந்து ஃபோன் பண்ணுறேனு சொல்லிட்டு தான் புள்ள வேதா போச்சு என்றவர், மேலே போட்டிருந்த சால்வையை எடுத்து உதறி, தலையோடு சேர்த்து முக்காடு போட்டுக்கொண்டு, வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

கணவர் போனதும் உள்ளே வந்த மயிலா, சமயலறைக்குள் சென்று,காலை உணவாக,சேமியா கிச்சடியும், தேங்காய் சட்னியையும் செய்து முடிக்க,பவியும் எழுந்து வந்தாள்.

பவிக்கு இஞ்சி டீ பிடிக்கும் என்பதால், இருவருக்கும் போட்ட டீயிலே இஞ்சியை போட்டு கொதிக்க வைத்தவர், அதை பிளாஸ்கில் ஊத்தி வைத்திருந்தார்.

பவி டீ எடுத்துட்டு வரட்டுமா? தலையசைத்து,வேண்டுமென்றாள்.

என்றைக்கு தான் வாயைத் திறந்து இந்த புள்ள பேச போகிறாளோ, அது மலையம்மனுக்கே வெளிச்சமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், பிளாஸ்கில் இருந்த டீயை, ஒரு கோப்பையில் ஊற்றி எடுத்துட்டு வந்து அவளிடம் நீட்ட, வாங்கி குடித்தவளிடம், போய் குளிச்சிட்டு வாம்மா.

அதற்கும் தலையசைத்து தனது அறைக்குள் பவி குளிக்க போக,வெளியே இருக்கும் இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

யாரென்று வாசலுக்கு வந்து பார்க்க, அங்கே வந்தவனை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவர், பின்னர் வாப்பா என்க,மருதுவோ எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக உள்ளே சென்றான்.

மயிலாவோ இவ்வளவு காலையிலே மகனின் வருகையை எதிர் பார்க்கவில்லை.அம்மா மலையம்மா நீ தான் என் புள்ளைங்கள பார்த்துக்கனும்னு மானசீகமாக வேண்டிக்கொண்டவர், உள்ளே வந்தவனிடம் டீ எடுத்துட்டு வரட்டுமா தம்பி?.

கொடும்மானு மருது சொல்ல, மகன் தன்னிடம் பேசியதை கேட்டு,மயிலாவிற்கு கண்கள் கலங்கியது.முந்தானையால் கண்ணை துடைத்தவர்,பிளாஸ்கிலிருந்த மீதி டீயை எடுத்து வந்து மகனுக்கு கொடுக்க,அதை வாங்கியவன், எங்கே அவளென்றான்.

எவளை கேட்குறப்பானு மகனிடமே திருப்பி கேட்டார்.

ம்ம் பவிய தான்.

குளிக்க போயிருக்காள் என்ற மயிலாவிற்கு, சரி நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்றவன்,கையில் எடுத்து வந்த பேகை, அங்கு இருந்த டேபிளின் மேல் வைத்து விட்டு வெளியே சென்றான்.

மருது பேகை இங்கு வைத்து விட்டு போனதிலே ,ஏதோ ஒரு நல்ல முடிவை எடுத்த பிறகு தான், மகன் இங்கு வந்திருக்கிறான் என்பது,மயிலாவிற்கு நன்கு புரிந்து விட்டது.

இருவரின் வாழ்க்கை இனி நல்ல படியாக இருக்கனுமென்று, பவியின் தாய் தந்தையின் புகைப்படத்தை பார்த்து வேண்டியவர், சமைத்தவைகளை எடுத்து வைக்கவும், குளித்து வேறு உடையை மாற்றிக்கொண்டு பவியும் வந்தாள்.

தட்டில் போட்டு அவளுக்கு கொடுக்க, வழக்கம் போல அமைதியாகவே சாப்பிட்டாள்.

சீமக்கரை...

இரவு முழுவதும் பயணம் செய்த பேருந்தோ காலை ஆறு முப்பதுக்கு தேனூர் பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றது.இது தான் கடைசி ஸ்டாப்., இறங்குங்க, இறங்குங்கனு சொல்லிக்கொண்டே நடத்துனர் கீழே இறங்கிச்சென்றார் .

இத்தனை நேரம் தனது கடந்த கால வாழ்க்கையில் மூழ்கியிருந்த வேதா, அவர் சத்தத்தில் நிகழ்வுலகிற்கு வந்தவர், தனது கழுத்தோர சட்டைக்குள் மறைந்திருக்கும் தாலியை இரண்டு விரல்களால் பிடித்து கண்ணை மூட, தாலியை அறுத்து குடுடினு முத்து கேட்டது காதில் ஒலித்தது.இத்தனை வருடம் ஆகியும் அந்த கேள்வியை நினைக்க,கண்களில் நீர் தளும்பியது.

கையிலிருந்த கர்சிப்பால்,கண்ணை துடைத்தவர்,காலுக்கடியில் இருந்த பேகை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்த மண் என்னை வர வைத்திருக்கே?.

இன்னும் என்னென்ன எனக்கு காத்திருக்கோ என்று நினைத்தவர், பார்வையை சுழற்றி சுற்றியும் பார்க்க, அந்த பேருந்து நிலையத்திலும், சுற்றி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் பல வந்திருந்தது.பேகோடு சில அடி தூரம் நடக்க, இரண்டு ஆட்டோக்கள் அங்கு நின்று கொண்டிருந்தது.

முதல் ஆட்டோவிடம் சென்றவர் தம்பி சீமக்கரைக்கு போகனும் என்க, உட்காருங்கம்மா என்றான் அதிலிருந்த இளைஞன்.பேகோடு பின் சீட்டில் போய் உட்கார்ந்து விட்டு,போலாம் தம்பி என்க, ஆட்டோவை உயிர்ப்பித்தவன் தேனூரிலிருந்து சீமக்கரை நோக்கிச் சென்றான்.செல்லும் வழியெங்கும், வேதாவிற்கு பல நினைவுகள் கண் முன் வந்து சென்றது.

இந்த ரோட்டில் எத்தனை முறை முத்துவின் பின்னால் அமர்ந்து, வண்டியில் சென்றிருப்போம்.யாரும் பார்த்து விடக்கூடாதென்று, எத்தனை வேண்டுதல்கள் கடவுளுக்கு வைத்திருப்போம் என்பதெல்லாம் வேதாவின் நினைவிற்கு வந்தது.

மெயின் ரோட்டை தாண்டி சீமக்கரையின் செம் மண் ரோட்டில் ஆட்டோ திரும்பிச்செல்ல, அங்கிருக்கும் மரங்களெல்லாம் அவர்களின் காதல் கதையை சொல்லிச்சென்றது.

வேலைக்கு போய்விட்டு ஒத்தையில் வரும் போதெல்லாம், வழி மறைத்து வம்பு பண்ணும் முத்துவும், அவனுக்கு பயந்து கொண்டே பத்து மணிக்கு மேலே வரும் பஸ்ஸில் வந்து சென்ற வலியுடனான நாட்கள் மறக்கவில்லை.

ஒரு மணி நேரம் ஆட்டோ பயணத்தில் தெரு ஆரம்பிக்கும் முனைக்கு வந்தவன், எந்த தெருக்கு போகனும்மா?.

கீழ தெருக்கு போப்பா.

காலையிலே ஊருக்குள் ஆட்டோ வருவதை சிலர் கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டே, தனது வேலையில் கவனத்தை செலுத்தினர்.மூன்று நிமிடம் கடக்க,அந்த புளிய மரத்துக்கு இடது பக்கம் திரும்புப்பா என்கவும்,வேதா சொல்லியது போலவே ஆட்டோவை திருப்பி ஓட்டியவனிடம்,அந்த கடைசி வீடுபா.

வேதா சொல்லிய வீட்டின் முன்பு போய் ஆட்டோவை நிறுத்தினான்.

பேகோடு கீழே இறங்கியவர், பர்சிலிருந்து ஆட்டோக்கான பணத்தையும்,மேலும் இருபது ரூபாயை டீ குடிச்சிட்டு போப்பானு சொல்லி கொடுக்க, நன்றிங்கம்மா என்றவன், ஆட்டோவை திருப்பி வந்த வழியிலே சென்றான்.

கண்ணை மூடி மனசை ஒரு நிலை படுத்தியவர், படலை திறந்து உள்ளே சென்றார்.

கவிதா வீட்டுக்கு யாரோ நடுத்தர வயது பெண்மணி வந்துருக்காங்கனு, அதற்குள் செய்தி பரவியது.

மீண்டும் இந்த வீட்டு வாசற் படியை மிதிக்க கூடாதென்ற வைராக்கியத்தோடு வீட்டை விட்டு செல்ல, திரும்பவும் மனிதனின் சதியால் இங்கு வந்து விட்டோமேயென்று கோவம் துளிர்த்தது.

திறந்திருந்த கதவு வழியாக உள்ளே செல்ல,அங்கு தன் வீட்டினரோ ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருப்பது தெரிந்து,அண்ணா என்று கூப்பிட, வேதாவின் குரலில் அனைவரும் வாசல் பக்கம் திரும்பி பார்க்க, கையில் பேகோடு வேதா நின்று கொண்டிருந்தார்.

அத்தை என்று ஒடிப்போய் அவரை கட்டிக்கொண்டு, அக்காவை காணுங்கத்தை என்று சொல்லி அல்லி அழுதாள்.சின்ன மருமகளின் முதுகில் தட்டி தேற்றியவர், கண்டுபிடிச்சிடலாம்னு சொல்லும் போதே அவருக்கும் தொண்டை அடைத்தது.

நான் பெத்த மவளே, வந்துட்டியாத்தானு கலா அப்பாயி வேதாவிடம் வேகமாக வர, தாயின் முகத்தை பார்க்க விருப்பமில்லாமல் வேறு பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டு, கிட்டே வராதேனு தனது செயல்களின் மூலமாய் கையை நீட்டி தடுத்தார்.

இத்தனை வருடங்களுக்கு பிறகும் மகளின் பாரா முகம், கலாவிற்கு எரிமலையாய் நெஞ்சத்தை சுட்டெரித்தது.

கையிலிருந்த பேகை கீழே வைத்தவர், தன்னை கட்டிக்கொண்டு அழும் மருமகளை பிரித்து தள்ளி நிற்க வைத்தவர், அன்புவின் அருகில் சென்றவர் என்னணா நடந்துச்சி?.

வேதாவை பார்த்து கவிதாவும் அவரிடம் வர,அங்கையே நில்லுங்கண்ணி.

முதல்ல என் பொண்ணை பற்றி எங்க அண்ணன் கிட்ட தெரிஞ்சிக்கிறேன் என்று கோவமாக சொல்லிய வேதா, நீ சொல்லுணா.

தங்கையிடம் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் விழாவில் நடந்ததையும், லட்டர் எழுதி வைத்து விட்டு தாமரை சென்றதையும், பின்னர் பெருமாள் வீட்டினர் மன்னிப்பு கேட்டு வந்தையும், அன்புவும் சொல்லி முடித்தார்.

எல்லாத்தையும் கேட்ட வேதா, கவிதா பக்கம் திரும்பியவர், எத்தனை முறை நானும், எங்க அண்ணனும் உங்க வீட்டால் வந்த பிரச்சினையை பற்றி தாமரை கிட்ட சொல்லலானு சொன்னோம்.எதுக்காவது ஒத்து வந்தீங்களா?.

என்னோமோ உங்க அண்ணனுங்க யோக்கிய சிகாமணிங்க போல, இல்லாத காரணம் வச்சா என் அண்ணன் அத்தனை பேருக்கு முன்பு அடிச்சாரு?அந்த இடத்தில் நானா இருந்தேனென்றால், தப்பா பேசுன உங்க அண்ணனை வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன்.

அப்படி கேடு கெட்ட பேச்சு பேசுன ஆளுங்களின் யோக்கியதை தாமரைக்கு தெரியக்கூடாது .
தெரிஞ்சால் குடியா மூழ்கியிருக்கும்?.
சொல்லுங்க என்க, கவிதாவாள் நாத்தனாருக்கு பதில் சொல்ல முடியவில்லை.

ஏன் ணா உங்களை நம்பி தானே அனுப்பி வச்சேன்.பெத்தவங்க நீங்களா இருந்தாலும், ஒரு துரும்பு படாமல் இத்தனை வருஷம் கண்ணுக்குள்ள வச்சி வளர்த்தேன் ணா.ஒரு நாள் கூட அவளுக்கு அத்தையா நடந்துக்கவில்லை.இப்போ என் பொண்ணை எங்கே போய் தேட?.

உங்க குடும்ப பிரச்சினையில் கண்டவன் என் பொண்ணு வாழ்க்கையில் விளையாண்டுட்டானே?.
அய்யோ... தாமரை...நீ எங்கடி போனயென்று கதறி அழுதார்.

வீட்டில் இருந்தவர்களுக்கும் வேதாவை பார்த்து அழுகை வந்தது.

அப்பொழுது வேதாம்மா என்ற குரல் கேட்டது.அழுகையோடே யாரென்று திரும்பி பார்த்தவர், நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்றார்.

எந்த முகம் தன் வாழ்கையில் காதலென்ற பேரில் விளையாடியதோ அதே இளமையான தோற்றத்தில் அச்சில் வார்த்தாற் போல நின்றான்.

வேதாவின் அருகில் வந்தவன், அவர் கையை பிடித்து,தெரியாமல் பெருமாலப்பாவும், தெரிஞ்சே என்னை பெத்த அப்பாவும் உங்களுக்கு பெரிய பாவம் பண்ணிட்டாங்கம்மா.

அவங்க சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேனென்று வளவன் அழுது கொண்டே கையை கூப்பி சொல்ல, கலாவை தவிர மற்றவர்களுக்கு அவன் சொல்வது புரியவில்லை.

சின்னப்பு,என்னப்பா சொல்லுறனு கவிதா கேட்க,அங்கிருந்தே தனது பழைய அறை இருக்கா என்று பார்த்தவர்,பின்னர் வேகமாக சென்ற வேதாவோ,உள் பக்கமாய் தாழிட்டுக்கொண்டார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சரி போனது போய் தொலையட்டும்.

இனி அதைப்பற்றி பேசினாலும், நடந்தது எதுவும் மாற போறதில்லை.
எனக்கு ஒரு விஷயம் புரியலை டா?.

இதுல தேவி ஏன் சம்பந்தப்பட்டிருக்கிறாளென்று ஜான் கேட்க,உன் பங்காளி மேல உள்ள காதல் தானென்றான் வேலு.

என்னடா சொல்லுறனு ஜான் கேட்க, ஆமாடா, கடந்த அஞ்சு வருஷமா அந்த புள்ளை, உன் பங்காளிய தான் ஒன் சைடா காதலிச்சிட்டிருக்கு.விருப்பம் இல்லன்னு எவ்வளவோ சொல்லிட்டான்
அந்த புள்ளை புரிந்துக்கொள்ளாமல் தொந்தரவு பண்ணிட்டு தானிருக்கு.

இப்ப ஒரு படி மேலேப்போய்,இந்த வேலையை பார்த்து வச்சிருக்கு பாரேன்.

ஓஓஓ என்ற ஜான், அவளுக்குள் இப்படி ஒரு கொடூர குணம் இருக்குன்னு தெரியாம போயிடுச்சுடானு சொல்லிக்கொண்டு, தனது தலையில் அடித்துக் கொண்டான்.

டேய், கதிர் விஷயத்துல மட்டும் தாண்டா அந்த புள்ளை இப்படி.மற்றபடி ஒரு குறை தேவிய பற்றி சொல்ல முடியாது.

அவசரப்பட்டு நீயே எதாவது நினைக்காதேனு வேலுவும் நண்பனிடம் பேச, இல்லைடா, சங்கை என்ன தான் நெருப்புல சுட்டாலும் அதோட வெண்மை மாறாதுனு வள்ளி அப்பாயி சொல்லும்டா.

அதைப்போல, இவ இந்த விஷயத்திற்கே இவ்வளவு தரம் தாழ்ந்து இறங்குனவள், இன்னும் என்னன்னெல்லாம் பண்ணுவாள்னு சொல்ல முடியாது.முடிவு பண்ணிட்டேன் டா, இனி அவள் எனக்கு வேண்டாமென்றான்.

ஜானின் பேச்சைக்கேட்ட கதிரோ, ஏன்டா இப்படி?,கோவத்தில் எடுக்குற முடிவுகள் சரியா வராது.இதை இப்படியே விடு, பிறகு பேசிக்கலாம் என்றவன், இப்போ தாமரைய தேடுறது தான் முதல் வேலை. அதை தவிர வேற எதுவும் என் மண்டைக்குள்ள ஓடுலைடா.

மச்சான் சொல்லுறதும் சரி தான்டா. நீ அவசரப்படுறியோனு எனக்கும் தோனுது.நாம தாமைரை தேடுவதற்கான வழியப்பாக்கலாம் என்ற வேலு, சரிடா, வாங்க வீட்டிற்கு போகலாம் என்க, பின்னர் மூவரும் வீட்டை நோக்கிச்சென்றனர்.

என்ன தான் நண்பர்கள் இருவரும் சமாதானமாக பேசினாலும், தேவியின் செயலைக்கேட்டு அவள் மேலிருந்த எண்ணம் இப்போது துளியளவும் ஜானிற்கு இல்லை.உலகத்தில் காதலிக்குற எல்லாரும் வாழ்க்கையில் ஒன்னு சேர்வது இல்லையே.

ஒரு நாள் பார்த்தவளை நினைத்து நான் ஏன் வருத்தப்படனுமென்று தனக்குத்தானே பேசிக்கொண்டவன், இனி நம்ப வாழ்க்கையில் தேவிக்கு இடமில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்துக்கொண்டு, நண்பர்களோடு பழைய ஜானாக நடந்தான்.

மூவரின் சிந்தனையும் தாமரை பற்றி தான் இருந்தது.

எங்கே போயிருப்பாள்?, யாரிடம் விசாரித்தால் அவள் இருக்குமிடம் தெரியுமென்று யோசனை வந்தது.

தன் நினைவிலிருந்து வெளியே வந்த வேலு,நடந்து கொண்டிருந்த கதிரின் கையை பிடித்தவன்,மச்சான் எனக்கு ஒரு விஷயம் தெரியனுமென்றான்.

அதற்கு கதிர்,சொல்லுடா மாப்பு, என் கிட்ட உனக்கு என்ன தெரிஞ்சிக்கனும், கேளு என்றான்.

தாமரையை நீ எதுக்கு தேடுற?. சொல்லு?, கண்டு பிடிச்ச பிறகு என்ன பண்ணலானு இருக்க?.இதுக்கு முதல்ல எனக்கு பதில் தெரியனும்.

மாப்பு உன் தங்கச்சிய ஊரறிய என் பொண்டாட்டியா வாழ வைக்க போறேன் டா.அவளுக்கு என் மேல கோபம் கண்டிப்பா இருக்கும்டா.அவள் மனசு மாறும் வரை நான் காத்திட்டு இருப்பேன்டா மச்சான்.இது நம்ப அய்யனார் மேல சத்தியம் என்னை நம்புடானு கதிர் சொல்ல, நண்பனை அணைத்துக்கொண்ட வேலு, இது போதும்டா மாப்பு.ஒரு காலமும் நம்ப அய்யனார் மேல, யாரும் பொய் சத்தியம் பண்ண முடியாதுனு தெரியும்.

உலகத்துல எந்த மூலையில் என் தங்கச்சி ஒளிஞ்சிருந்தாலும் கண்டு பிடிச்சிடலாம்டா என்றான்.

மூவரும் வீட்டிற்குள் வர வீடே இரண்டு நாட்களாக கலையிழந்து காணப்பட்டது.

இப்படியே விட்டால் சரி வராதென மனதிற்குள் நினைத்தவன், அத்தை, அத்தை என்று வேலு கூப்பிட, தோட்டத்து வாசலில் உட்கார்ந்திருந்த சீதா எழுந்து உள்ளே வந்தவர் அங்கிருந்த வேலுவை பார்த்து சொல்லுப்பா என்க, பசிக்குது என்றான்.

சீதாவிடம் பசிக்குது என்று சொல்லி விட்டால் போதும். எந்த சூழலில் இருந்தாலும் அதிலிருந்து வெளியே வந்து விடுவார்.

இதோ சாமி கொஞ்ச நேரத்தில் ஆக்கிடுறேன் என்றவர், ராதா, ராதா என்று குரல் கொடுத்துக்கொண்டே கிச்சனிற்குள் சென்றார்.

அக்காவின் குரலில் ராதாவும் சமயலறைக்குள் செல்ல, அந்த அடுப்புல பருப்பை போடு.அதிலே காய்கறிய வெட்டி போடு.புள்ளைங்க பசியோட இருக்குதுங்க. முதல்ல டீயும், டின்னுல இருக்க பிஸ்கட்டையும் குடுப்போம் என்க, சரிக்கா என்றபடியே சீதா சொன்ன வேலையை ராதாவும் செய்தார்.

வள்ளியின் அருகில் சென்றவன், செல்லம் குடி ஒன்னும் மூழ்கிடலை.
முடிஞ்சதை பற்றி இனி பேச வேண்டாம்.
இனிமேல் ஆக வேண்டியதை பாப்போம்.

தங்கை மகனின் வார்த்தையை கேட்ட பெருமாள், வேலு, இங்க வாய்யா என்றார்.இதோ வரேன் மாமா என்றவன்,அவர் அருகில் செல்ல, மாமா வேண்டும்னு எதுவும் பண்ணலை சாமி.

ஆயிரம் பேரு என்னை குற்றவாளியா நினைச்சாலும், என் குடும்பம் அப்படி நினைச்சிட்டா நான் உசுரோட என்று பெருமாள் சொல்ல வர, எட்டி தனது மாமனின் வாயை மூடியவன் மாமா, எல்லாருக்கும் அடி சருக்கும்.

இனி என் தங்கச்சிய இந்த வீட்டு மருமவளா வாழ வைக்குறது தான் வேலை என்றவன், நீங்க வழக்கம் போல சிங்கமா இருங்க மாமா.அது தான் என் மாமனுக்கு கெத்து.

உன் அத்தைக்காரி 15 வருஷமா என்னை மன்னிக்கலை சாமி என்று கண் கலங்கினார்.

அதற்கு ஒரு நேரம் வரும் மாமா என்றவன், மனசை விட்டுறாத மாமா.

சித்தப்பா கிட்ட பேசுவோமென்று வேலு சொல்ல, மகன் இவ்வளவு நேரம் பேசியதையெல்லாம் கேட்ட செல்வத்திற்கு பெருமையாக இருந்தது.

அப்பொழுது அனைவருக்கும் டீயோடு அங்கு வந்த ராதா, ஆளுக்கொரு டம்ளரை எடுத்துக் கொடுத்தார்.

கதிரிடம் வந்தவர் அவன் முன்பு டீயை நீட்ட, மன்னிச்சிடுமா என்றான்.

வேலு சொன்னதை போல தான் ராதாவும் சொன்னார்.போனது போகட்டும் அப்பு,இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றார்.

சதாரா...

அம்மா என்று குரல் கொடுத்துக்கொண்டே,பார்மல் டிரஸில் தயாராகி டைனிங் ஹாலிற்கு வந்தவன், அங்கிருந்த சேரை இழுத்துப்போட்டு உட்கார,விஸ்வமும் தனது அறையிலிருந்து வந்தார்.

"குட்மார்னிங் பா".

மார்னிங் மாறா, பூரணி இன்னும் என்ன பண்ணுற? என்று குரல் கொடுக்க, இதோங்க என்றவாறே ஹாட் பாக்ஸ்களோடு வந்தவர், இருவருக்கும் டிபனை பரிமாறினார்.

சாப்பிடுவதற்கு முன் தனது அம்மாவை பார்த்த மாறன், தாமரை எங்கேம்மா என்க, பின்னாடி தோட்டத்தை பார்க்க போயிருக்காள்.நீங்க சாப்டுங்க.

கூப்டுங்க என்றபடியே சாப்பிட்டான்.

தோட்டத்தில் இருந்த தாமரையை சத்தம் போட்டு கூப்பிட, இதோ வரேன்மானு அங்கு வந்தவளிடம் மாறன் கூப்பிடுறான் மா.

சரிங்கம்மா என்றவள் உள்ளே வர, அங்கு இருவரும் சாப்பிடுவதை பார்த்து தயங்கி நின்றாள்.

கால் கொலுசு சத்தத்தில் அவள் வந்து விட்டாள் என்பதை புரிந்து கொண்டவன், தாமரை காலை பத்து மணிக்கு எம். வி. டெக்ஸ்டைல்ஸில் உங்களுக்கு இன்டர்வியூ இருக்கின்றது.

சீக்கிரம் சாப்பிட்டு ரெடியாகுங்க என்றவன் அம்மா என குரல் கொடுக்க, சூடான தோசையை கொண்டு வந்து மகன் தட்டில் வைத்தவர், அங்கு நின்ற தாமரையை வாம்மா என்றார்.

டைனிங் டேபிளின் அருகில் வந்தவள், நான் கிச்சனில் சாப்டுக்குறேன்மா என்க, இவ்வளவு நேரம் கீழே குனிந்து கொண்டே பேசியப்படி சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், அவள் சொன்னதை கேட்டு நிமிர, அவன் பார்வையில் எதைக்கண்டாளோ தெரியவில்லை.விஸ்வத்தின் எதிரில் உள்ள சேரை பொறுமையாக இழுத்து, அதன் மேல் உட்கார்ந்து கொண்டாள். அவள் செய்கை மூவருக்கும் சிரிப்பை தந்தது.

அவள் முன்பு தட்டை வைத்த பூரணி, அதில் டிபனை பரிமாற, நீங்களும் வாங்கம்மா சேர்ந்தே சாப்பிடலாமென்க,
இருக்கட்டும் டா நான் பிறகு சாப்டுக்குறேன்.நீங்க சாப்பிட்டு கிளம்புங்க.

பின்னர் மூவரும் சாப்பிட்டு எழ, பாத்திரங்களை எடுத்து போய் கிச்சனிற்குள் வைத்தவளை நீ போய் ரெடியாகுடா.நான் பார்த்துக்குறேனென்று தாமரையை அங்கிருந்து அனுப்பி வைத்தார்...

அறைக்குள் வந்தவள், டிராலி பேகின் ஜிப்பை திறந்து, உள்ளே இருந்த ஃபைலை எடுத்தவள், வேறு டிரஸை மாற்றிக்கொண்டு, வெளியே வந்தவள், சாமி அறைக்கு முன்பு சென்று கண்ணை மூடி வணங்கினாள்.

போகலாமா என்று மாறனின் குரல் மிக அருகாமையில் கேட்க, திடுக்கிட்டு கண்விழித்தவளின் முன்பு,சாமியை கும்பிட்ட படி நின்று கொண்டிருந்தான்.

விஸ்வத்திடமும், பூரணியிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு ஹாலிற்கு வர, நான் போய்ட்டு வரேனென்று பெற்றோர்களிடம் சொல்லியவன், தாமரையை பார்த்து வா என்றான்.

வெளியே வந்தவன், கார் ஷெட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வாசலின் முன்பு வந்து நிற்க, படியில் இறங்கி வாசலுக்கு வந்தவள்,பின் பக்க கதவை திறந்து உட்கார்ந்தாள்.

கண்ணாடி வழியாக அவளை ஒரு பார்வை பார்க்க, இந்த மனுஷன் எதுக்கு நம்மை இப்படி பாக்குறார்?என்று யோசித்தாள்.

காரை அங்கிருந்து மூவ் பண்ணியவன், இவளுக்கு நான் என்ன டிரைவரா?.ஏன், முன்னாடி வந்து உட்கார்ந்தாள் கடிச்சா தின்னுடுவேனென்று, மனதிற்குள் தாமரை திட்டிக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

ஒரு மணி நேரம் பயணம் செய்த கார்,அந்த ஏழடுக்கு பில்டிங்கின் கார் பார்க்கிங்கில் போய் நின்றது.ஏழாவது ஃப்ளோரில் இன்டர்வியூ, ஆல் த பெஸ்ட் என்றான்.

தேங்க்யூ என்றவள், கதவை திறந்து இறங்க,அங்க லிப்ட் இருக்கு, அது வழியா போங்க என்றவன், தனது ஃபோனில் இருந்து யாருக்கோ கால் பண்ண போனான்.

மாறன் சொன்ன வழியாக சென்றவள், அங்கிருந்த லிப்டில் ஏறி ஏழாவது மாடிக்கு வர ஏற்கெனவே சிலர் அங்கிருந்தனர்.அவர்களும் இன்டர்வியூக்கு தான் வந்திருக்கின்றனர் என்று தெரிந்தது.

அங்கு இருந்த யுவதிகளெல்லாம் மார்டன் உடையில் இருக்க, தாமரையே அனார்கலி சுடிதாரில், நீண்ட பின்னல்களோடு, இருந்தாள்.

ஒரு முறை அவளை பார்த்த யுவதிகள், எந்த ஊர் பட்டிக்காடோனு முணு முணுத்தனர்.

சரியாக பத்து மணிக்கு இர்டர்வியூ ஆரம்பித்தது.ஒவ்வொருவராக சென்று வந்துக்கொண்டு இருந்தனர்.சிலர் முகத்தில் திருப்தியும், சிலர் முகத்தில் அதிருப்தியும் தெரிந்தது.

தாமரைக்கான நேரமும் வந்தது.கதவை தட்டி உள்ளே வந்தவள், அங்கிருப்பவர்களில் நடுவில் உட்கார்ந்திருப்பவனை பார்த்து அதிர்ந்தாலும், சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டவள், அனைவருக்கும் குட்மார்னிங் என்றாள்.

அவர்களும் தலையசைத்து ஏற்றுக்கொண்டு, அங்கிருந்த சீட்டை காட்டி உட்காரச்சொல்ல, அதில் உட்கார்ந்தவளிடம், ஃபைலை கேட்க, தன்னிடமிருந்ததை எடுத்து நீட்டினாள்.

கண்மணி வருவாள்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top