• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
"நிஜமாக தானா என்றாள் தாமரை?".

இதுல என்ன சந்தேகம்?அய்யா மப்டில இருக்காரு, அதான்,மும்பை சிட்டி கமிஷ்னர் மிஸ்டர் ருத்ர சிம்மன் இந்த கொய்யா தானென்று மேலும் இடியை தூக்கி தாமரையின் தலையில் போட்டாள்.

அய்யையோனு தாமரை பதற, தங்கச்சி இவ கடக்கா,நீ பயப்படாதடா.ஏய் வாலு வாய மூடுடி என்றவன், சீக்கிரம் சாப்டுங்க என்று சொல்லி விட்டு, தனது ஃபோனில் எதையோ செக் பண்ணிக்கொண்டிருந்தான்.

மூவரும் ஆர்டர் செய்த உணவுகள் மேஜைக்கு வந்தது.பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க,யோவ் மீசை, பில் பே பண்ணு என்றாள் ஜெனி.

ஏன், நீ பண்ணினால் ஆகாதாடி?.

இருவரும் மாற்றி,மாற்றி பேசுவதை பார்த்து, அய்யா சாமிங்களா, நானே பே பண்றேன் என்று சொல்லிக்கொண்டு தாமரை செல்ல, ஹேய் லோட்டஸ் சும்மா ஃபன் தான் என்றவள், நாங்க வெளியே இருக்கோம்னு சொல்லிக்கொண்டு, தாமரையோடு வெளியே வந்தாள்.

உன் நொண்ணன், என் மேல கோவமா இருக்காரு.அவரை கூல் பண்ண தான் இப்படினு ஜெனியும் சிரித்தாள்.

போலிஸ் வேலை பற்றி உனக்கு தெரியும் தானே?, எங்களுக்கு மேரேஜ் ஆகி பைவ் இயர்ஸ் ஆகுது லோட்டஸ்.
அம்மா, அப்பா ரெண்டு பேரும்,குழந்தைய கேட்டு இம்சை பண்ணுறாங்க.

இந்த கேஸ் முடிஞ்சதும் வேலைய விட்டு விட்டு, ஃபுல் டைம் ஹவுஸ் வொய்பா இருக்கேனு சொல்றேன், உன் நொண்ணன் வெலங்காதவன் கேட்க மாட்றான்.ஆசைப்பட்டு சேர்ந்த வேலையைப்போய், எதுக்குடி விடுறனு? கேட்க்குறார்.

அவர் ஆம்பிளை வெளியே போய்டுறார்.

நான் அப்படியா?, எதாவது நல்லது கெட்டதுக்கு போனால், குழந்தை இல்லையானு கேட்குறது, எனக்கு எவ்வளவு வலியா இருக்குமென்று, அந்த மனுஷனுக்கு புரியமாட்டேங்குது? என்று சொல்லி ஜெனி கண் கலங்கினாள்.

பில் பே பண்ணிட்டு வந்தவனோ, மனைவி சொல்வதையெல்லாம் சில அடி தொலைவிலிருந்து கேட்டான்.

உடனே தன் ஃபோனில் இருந்து மேலிடத்திற்கு கால் பண்ணிய ருத்ரன்,ஜெனி எடுக்க போகும் கேஸை வேறு யாரிடமாவது கொடுக்க சொல்லியவன், மனைவி அவளோட வேலையை ராஜினாமா பண்ணுவதாக சொன்னான்.

அவனுக்கு உயரதிகாரியானவரோ, என்ன மேன் விளையாடுறியா?, இரு, அவசரப்பட வேண்டாம்.

ஜெனிய இந்த ஆப்ரேஷன்ல செலக்ட் பண்ணியது நீ தானே மேன்?, பிறகு என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு?.

அதுவும் இல்லாமல் ஜெனி போல, இன்டலிஜென்ட் போலிஸை நம்ப அரசாங்கம் இழக்க விரும்பலை என்றார்.

சார்... கொஞ்சம் பர்சனல்.. எனக்கும் திரீ மந்த் லீவ் வேண்டும் என்று கேட்க,ஓஹோ, பிளான் பண்ணிட்டு தான் பேசுறியா??என்றார்.

குடும்பம் தழைக்கனுமே என்று ருத்ரன் சொல்லி சிரிக்க, ஓகே புரிஞ்சிட்டு என்றவர், சென்னையில் நீங்க ரிப்போர்ட் பண்ணிடுங்க ருத்ரன், நான் லீவ் கொடுத்துடுறேன்.

ஆல் த பெஸ்ட் யங் மேன், அப்பாவா புரமோட் ஆகிட்டு, சந்தோஷமா திரும்பி வந்து வேலையில் ஜாயின் பண்ணுங்க.
தேங்க்யூ சார் என்று கட் பண்ணிய ருத்ரன், அடியேய் சண்ட கோழி என்றபடியே அவர்களிடம் வந்தான்.

கிளம்பலாமா என்க, அண்ணா ஒன்னு கேட்கனும் என்றாள்.

எதுவாக இருந்தாலும் காரில் போகும் போது கேளுடானு சொல்லிக்கொண்டே, கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான். ருத்ரனின் பின்னால் இருவரும் நடந்து சென்றனர்.

நீங்க ரெண்டு பேரும் காரில் இருங்க, 5 மினிட்ஸ்ல நான் வந்துடுறேன் என்றவன், டிக்கியில் இருந்த பேகை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றான்.

நாம சென்னை போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமென்று? தாமரை கேட்க, எப்படியும் நாலிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும்.

பின்னர் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்தவனை ஒருத்தி ரசித்து பார்க்க, இன்னொருத்தியோ அதிர்ந்தாள்.

கதவை திறந்து உள்ளே உட்கார்ந்தவனை பேயறைந்தது போல பார்த்துக்கொண்டிருந்த தாமரையை தட்டியவள், என்ன தாமரை ஷாக்கா இருக்கா?.

இவ்வளவு நேரம் ஏதோ நாற்பது வயதுக்கு மேல உள்ள ஆள் போல இருந்த மனுஷன், இப்போ ஜம்முனு வந்துருக்காரே என்றுதானே..

உன் அண்ணனோட நிஜ தோற்றம் இது தானென்றவள் எதுக்கு இந்த வேஷமென்று? கணவனை ரசித்துக்கொண்டே கேட்டாள்.

சும்மா என்றவன், உன் சந்தேகம் தீர்ந்துட்டா டா?என்க.ம்ம் என தஞ்சாவூர் பொம்மை போல தாமரையும் தலையசைக்க, அதை பார்த்த கணவன் மனைவி இருவருக்கும் சிரிப்பு வந்தது. இனி வண்டி எங்கும் நிக்காது.நேராக மீனம்பாக்கம் ஏர்போர்டிற்கு போய் தான் நிப்பாட்டுவேன் சொல்லிட்டேன்.

ரெண்டு பேரும் சீட் பெல்டை போடுங்கள் என்று சொல்லிக்கொண்டே, காரை ஸ்டார்ட் பண்ணினான்.

சில அடி தொலைவு பொறுமையாக சென்ற கார், பின்னர் அசுர வேகத்தில், ருத்ரனின் கட்டுப்பாட்டில் பறக்க ஆரம்பித்தது.அண்ணா, ஏன் இவ்வளவு வேகம், பொறுமையா போங்களென்றாள்.

அவளுக்கு நேர்மறையாக, கமான் மாமா கமான், உங்களால் முடியுமென்று ஜெனி என்கரேஜ் பண்ணிக்கொண்டிருந்தாள்.

என்ன போலிஸு, சார் ரொம்ப குஷி மூடுல இருக்கீங்க போல?.

ஏன்டி ரொம்ப நாளைக்கு பிறகு கார் டிரைவிங், அதும் நம்ப சென்னையில், அதனால் மனுஷன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்.அது பொறுக்கலையாடி உனக்கு?.

உங்க அப்பாயி ஒரு பழமொழி சொல்லும். "சோழியும் குடுமியும் சும்மா ஆடாதுனு" என்றாள் ஜெனி.

மனைவியின் சாதூர்ய பேச்சை கேட்டவன், கண்ணாடியில் தெரியும், மனைவியின் உருவத்தை பார்த்துக் கொண்டுஅய்யாக்கு மூனு மாசம் லீவ் கிடைச்சிருக்குடி.இனி முக்கியமான வேலை எல்லாம் இருக்கு.அதை எல்லாம் முடிக்கணும்டி.

அதற்கு ஜெனியோ,ஓ என்றாள் சுரத்தே இல்லாமல்.எஸ்சுடி எஸ் என்றவன், மேலும் சில விஷயங்களை சொல்லி, மனைவியை வெறுப்பேத்திக்கொண்டே வந்தான்.

அசுர வேகத்தில் வந்த காரும், மீனம்பாக்கம் ஏர்போர்டினுள் நுழைந்து, வாயில் புறம் போய் நின்றது.

தாமரை, நான் கார்லே இருக்கேன் டா.
மும்பை கமிஷ்னர் சென்னை ஏர்போர்டில் இரண்டு பெண்களோடு ஜாலி டிரிப், அது இதுனு பத்திரிக்கையில் இஷ்டத்திற்கு எழுதி தள்ளுவாங்கடா.அதுக்கு இடம் கொடுக்க எனக்கு இஷ்டம் இல்லை.

ஜெனி உன்கிட்ட நம்பர் தருவாள்.
உனக்கு எப்போ, என்னவா இருந்தாலும் உடனே கால் பண்ணு.அண்ணன் எங்கிருந்தாலும் வந்துடுவேன்.

வெறும் எட்டு மணி நேர பழக்கத்தில், இவ்வளவு அன்பாக நடந்து கொள்ளும் அண்ணனை சந்தித்ததில்,அவளுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது.

கவனத்தை வேலையில் மட்டும் போகஸ் பண்ணுடா.பார்த்து பத்ரமா போய்ட்டு வா.

சரிணா என்றவள், காரிலிருந்து கீழே இறங்கிப்போய், டிக்கியில் இருந்த டிராலியை எடுத்துக்கொண்டு, ஜெனியோடு உள்ளே செல்ல,ருத்ரனோ தனது முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு, கார் பார்க்கிங்கிற்கு சென்றான்.

ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்து விட்டு, பெண்கள் இருவரும் பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது, தாமரை செல்வதற்கான பிளைட்டின் அறிவிப்பு வந்தது.

ஜெனியை கட்டி அணைத்தவள், இதுவரை செய்ததற்கு நன்றியேன்க,அவளோ முறைத்து பார்த்தவள் அந்த மீசக்காரனை மட்டும் அண்ணனா ஏத்துக்கிட்ட,என்ன இல்லை போல என்க.அச்சோ, அண்ணனின் சரி பாதி அண்ணியார் தானே என்றவள், நேரம் கிடைக்கும் போது பேசு ஜெனி.

கண்டிப்பா தாமரை, விரைவில் நாம சந்திக்கலாம் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தவள், வெளியே வந்து, ருத்ரனுக்கு கால் பண்ண,சிறிது நிமிடத்தில் ருத்ரனின் காரும் அவள் முன்பு வந்து நின்றது.

பின் கதவை திறந்து ஏறப்போனவளை பார்த்தவன், ஏய் நான் என்ன உனக்கு டிரைவரா?.வந்து முன்னாடி உட்காருடி சண்டக்கோழி.

ஏன்,வரும் போது பின்னடி தானே உக்காந்துட்டு வந்தேன்.அப்போ கண்ணு தெரியலையா?.

அடியேய், கூறுகெட்டவளே, கூட தங்கச்சி இருக்கும் போது எப்படி நாம ஒன்னா உட்கார?.கீர் மாத்தும் போதுலாம், உன் மேல என் கையப்படும்.அப்போலாம் சில பல ரொமான்ஸ் எல்லாம் நடக்கும்.
இதெல்லாம் தங்கச்சி பார்த்தால் நல்லாவா இருக்கும்?.அதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு உனக்கு எங்கே அறிவு இருக்க போகுது,மரியாதையா முன்னாடி உட்கார்டி என்று கர்ஜித்தான்.

" கணவனின் குரலில் எதுவும் பேசாமல்,முன் கதவை திறந்து, சீட்டில் உட்காந்து விட்டு, கதவை சாத்த, ஜெனியின் நம்பருக்கு கால் வந்தது".

எடுத்து யார் என்று பார்க்க, அவளின் அம்மா தான் பண்ணியிருந்தார்கள்.

சில பல வழக்கமான நல விசாரிப்புகள், முடிந்த பின் அவர் போனை வைக்க, கிளம்பலாமா என்றான்.ம்ம் போலாம் என்றவள், கண்ணை மூடி சீட்டில் சாய,சிறிது நிமிடத்தில் உறங்கி விட்டாள்.

தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க, மனைவியோடு நீண்ட பயணத்தை தொடங்கினான் ருத்ர வீர சிம்மன்.

சீமக்கரை கண்ணன் வீடு...

தந்தை போனதிலிருந்து வாசலையே எட்டி, எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.எப்படியும் அவர்களிடம் சம்மதம் வாங்கிட்டு தான் வருவாரென்று, மலை அளவு நம்பி இருந்தவன் பார்வதி என்று சொல்லி கண்ணை மூட, அவளின் அழகு முகம் வந்து சென்றது.

இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மாமா உன் கழுத்துல மூணு முடிச்சு போட்டு ஊரறியே என் பொண்டாட்டியாக்கிப்பேன்டி என்று மனதிற்குள் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொண்டான்.

வாசலில் கேட்டு திறக்கும் சத்தம் கேட்க, உள்ளேயிருந்த மரச்சேரில் உட்கார்ந்திருந்தவன்,எழுந்து வந்து பார்க்க,வேலுச்சாமி வந்து கொண்டிருந்தார்.

உள்ளே வந்தவர், அங்கிருந்து பெஞ்சில் உட்கார்ந்து கண்ணை மூட, அப்பாவே வாயை திறக்கட்டும் என்று, கண்ணனும்
அமைதியாக அவரை பார்த்து நின்றான்.

இந்தாங்க தண்ணியென்று மனைவியின் குரல் கேட்டு கண்ணை திறந்தவர்,அவர் கையில் இருந்த சொம்பை தட்டி விட்டு,இது ஒன்னு தான் இப்போ குறைச்சல்.

என்னாச்சுங்க?, எதுக்கு இவ்வளவு கோவமென்றார் சரோஜா.

வேற என்னடி பண்ண சொல்லுற?.

தன்னோட ரெண்டு மகளுக்கும், உள்ளூரிலே மாப்பிள்ளைய பேசி முடிச்சிட்டோம்னு, அந்த வள்ளி பொண்ணு ஆணித்தரமா சொல்லுது.
நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன், ஒரு புண்ணியமும் இல்லை.

பொண்ண கட்டி உள்ள பூந்து நாம உசரத்துல இருக்கலானு நான் கனவு கண்டா, அந்த வள்ளி பொண்ணு எல்லாத்தையும் தரமட்டமாக்கிட்டு என்றார் வேலுச்சாமி.

அப்பா, நெஜமா நீ சொல்றது? என்று கண்ணன் கேட்க, ஆமாடா.பார்வதிக்கு பொன்னுரங்கன் மகன் செல்வத்தையும், கவிதாவுக்கு தம்புசாமி மகன் அன்பழகனையும் பேசிட்டாங்க. அதுவுமில்லாமல், ஏனாதில பொண்ணு அமைஞ்சிருக்கு பெருமாளுக்கு.

எப்படியும் மூன்று கல்யாணமும் ஒன்னா தான் நடக்குமென்று சொல்லியவர், எதுக்கும் லாயக்கு இல்லாத புள்ளைய பெத்து வச்சிருக்கியேடி.

ஆசப்பட்டவனுக்கு அந்த பொண்ணையே வளைக்க துப்பு இல்லையென்று, தன் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், மகனையும் வேலுச்சாமி கடிந்து கொண்டார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அண்ணா, நான் பேசினது ஏதாச்சும் தப்பா இருந்தால், மன்னிச்சிடுங்கனு வள்ளி சொல்ல,அதற்கு பொன்னுரங்கனும், சிவசாமியும் உண்மைய தானேமா சொல்லிருக்குற, இதில் என்ன மன்னிப்பு வேண்டி கிடக்கு என்றனர்.

ஆனால், எனக்கு ஒன்னு புரிஞ்சுக்க முடியல மச்சான்?.

திடீர்னு என்ன வேலுசாமி மச்சானுக்கு, நம்ம குடும்பத்தில் பொண்ணு எடுக்குற ஆச வந்துருக்கு?,என்றார் பிரகாசம்.

அதுதான் எனக்கும் புரிஞ்சிக்க முடியலை? என்றார் சிவசாமி.

அண்ணா, மூணு பேரு கல்யாணத்தையும் ஒன்னா முடிச்சிடுறது நல்லதுன்னு என் மனசுக்கு தோன்றிக்கிட்டு இருக்கு.நீங்க என்ன சொல்றீங்க?.

நல்ல விஷயத்தை எதுக்கு தள்ளி போடணும்.ஆனால் கவிதா சின்ன புள்ளையா இருக்குத்தா. அன்பு கல்யாணத்தை ரெண்டு, மூனு, வருஷம் தள்ளி பண்ணிக்கலாம்.

மச்சான் பொண்ணுங்க தான் எங்க வீட்டுக்கு மருமகள்னு முடிவு பண்ணிட்டோம்.முதல்ல இவங்களுக்கு நல்லபடியாவே முடிச்சிடலாமே என்று சொல்லியவர்கள்,சரி நாங்க வீட்டுக்கு கிளம்புறோம் என்று சிவசாமியும், பொன்னுரங்கமும் ,பிரகாசம் தம்பதியிடம் சொல்லிக் கொண்டு, தங்கள் வீட்டை நோக்கி சென்றனர்.

வள்ளி, அந்த கேலண்டரை கொஞ்சம் எடுத்துட்டு வா என்றார் பிரகாசம்.

வள்ளியும் எழுந்து போய், சுவற்றில் மாட்டி இருந்ததை எடுத்து வந்து கணவரிடம் கொடுக்க ,அதை வாங்கி பின்பக்கம் திருப்பியவர், முகூர்த்த நாட்களை பார்க்க தொடங்கினார்.

இந்த மாசம் கடைசியில் இரண்டு முகூர்த்தம் வருது, அதுக்கு முடிச்சிடலாமா? இல்லை, அடுத்ததை பார்க்கலாமானு மனைவியிடம் கேட்க, முதல்ல ஏனாதில இருந்து, அவங்க சொந்த பந்தங்கள் வந்து நம்ம வீட்ட பார்க்கட்டும்.பிறகு நாளு வச்சிடலாம் மாமா.

நீ சொல்றதும் சரி தான் என்றவர், சரி நான் போய் உன் ரெண்டு அண்ணனுங்க கிட்ட இத சொல்லிட்டு வரேன்னு சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

அதைப்போல மாப்பிள்ளை வீடு பார்க்க ஏனாதிலிருந்து, பத்து பேர் வந்திருந்தனர்.

சொன்ன போலவே கடைசி முகூர்த்தத்தில் செல்வம்- பார்வதிக்கும், பெருமாள்-சீதாவுக்கும், உள்ளூரில் உள்ள குலதெய்வ கோயிலில் கல்யாணத்தை சிறப்பாக முடித்தனர்.

சிறிது நாட்கள் கடந்து செல்ல, திடிரென்று லாரன்ஸின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குணமாகுவது போல தெரியவில்லை.
சீதா தான் பெற்ற மகளைப்போல அவர் அருகில் இருந்து கவனித்துக்கொண்டார்.

தம்பி உன்னை மாலையும் கழுத்துமா பார்த்துட்டா,என் ஆத்துமா நிம்மதியா போகுமென்று திக்கி திணறி லாரன்ஸின் அம்மா மேரி சொல்லி கண் கலங்க, சரிமா என்றதும் அவர்கள் சொந்தத்தில் இருந்த ஜூலியை லாரன்ஸிற்கு பேசி முடித்தனர்.

லாரன்ஸுக்கு தாய் தகப்பனாக பிரகாசமும், வள்ளியும் இருந்து கல்யாணத்தை நல்ல படியாக முடித்து வைத்தார்கள்.

மாதங்கள் மூன்று கடந்து சென்றது.

லாரன்ஸின் தாயும் ஓர் நாள் நள்ளிரவிலே இறைவனடி சேர்ந்து விட்டார்.லாரன்ஸிற்கு பக்க பலமாக இருந்து, நண்பர்கள் மூவரும் தேற்றினர்.

ஒரு நாள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சீதா வாந்தி எடுத்தார்.

ஊரில் இருக்கும் மருத்துவச்சியிடம் மருமகளை கூட்டிட்டு போய் காட்ட, குலம் விருத்தியாயிருக்கென்றார்.

அதே போல் பார்வதியும், ஜூலியும் கர்ப்பமானார்கள். மூவரையும் நல்ல முறையில் வள்ளியும் கலாவும் பார்த்துக் கொண்டனர்.நல்லபடியாக மூவருக்கும், அவர்கள் தகப்பன் போலவே முதல் குழந்தை ஆண் குழந்தையாகவே பிறந்தது.மூன்று குழந்தைகளுக்கும் ஒன்றாகவே பெயர் சூட்டு விழா நடத்தினர்.

ஊரில் உள்ளோர் அவர்கள் குடும்பத்தை பார்த்து கண்ணும் வைத்தனர், பெருமையாகவும் பேசிக்கொண்டனர்.

பெருமாள்-சீதா தம்பதியின் முதல் மகனுக்கு, கதிர் என்றும்,பார்வதி-செல்வம் தம்பதியின் மகனுக்கு,வேலு என்றும்,லாரன்ஸ் தியோல்-ஜீலி தம்பதியின் மகனுக்கு, ஜான் தியோல் என்று பெயர் வைத்தனர்.

குழந்தை கொஞ்சம் வளரும் வரை சீமக்கரையிலே இருக்கட்டும் என்று லாரன்ஸிடம் சொல்லி விட்டனர்.
அவரும் எந்த கவலையும் இல்லாமல் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
குழந்தைகளுக்கும் மூன்று வயது ஆரம்பம் ஆகியது.

வேதாவும் நல்லபடியாக தனது நர்சிங் படிப்பை முடித்து விட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்று வயலில் அறுவடை என்பதால்,நேரத்தோடே எல்லாருமே வயலுக்கு சென்று விட்டனர்.

சீதாவும், ஜூலியும் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு சமைத்துக்கொண்டிருக்கும் போது, சீதா, சீதா என்ற குரல் கேட்டது.

யாரு?,என்றவாறே வாசலுக்கு சென்று பார்க்க, ஏனாதியில் உள்ள சீதாவின் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் வந்திருந்தார்.

உள்ளே வாங்கண்ணா என்க,அம்மாடி சீதா....என்று கண்கலங்கினார்.

அவர் முகத்தை பார்த்து, யாருக்கு என்னாச்சிணா? என்று பதற சித்தப்பா, சித்தப்பா செத்து போய்ட்டுத்தா என்றார்.

என்னாஆஆஆஆ அப்பா இறந்துட்டா என்று அதிர்ந்தவர்,அய்யோ அப்பா என தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதாள்.

சீதாவின் அழுகுரலை கேட்டு அக்கம் பக்கத்தினரும்,வீட்டு தோட்டத்தில் சமைத்துக் கொண்டிருந்த ஜூலியும் ஓடி வந்து என்ன ஆச்சு என்க, சேதி கொண்டு வந்தவர் விஷயத்தை சொன்னார்.

உடனே பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஏரிக்கரையில் இருக்கும் வயலுக்கு சென்று, சீதாவின் அப்பா இறந்ததை சொன்னார்.

விஷயத்தை கேள்விப்பட்டு செய்த வேலையை நிறுத்தி விட்டு, எல்லாரும் வீட்டிற்கு வந்தனர்.

அழுது கொண்டிருந்த சீதாவை பார்த்து எம்மாடி சீதா, எந்திரிமா நாம போகலாமென்ற கலா, பார்வதியும், ஜூலியும் நாளைக்கு ஊர் ஜனத்தை கூப்பிட்டு வரச்சொல்லி விட்டு, மற்றவர்கள் எல்லாரும் ஏனாதிக்கு சென்றனர்.

காளியின் உடல் திண்ணையில் கிடத்தியிருக்க,ராதாவோ அவர் தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.

பஸ்ஸில் வந்து ஏனாதியில் இறங்கினர்.இவ்வளவு நேரம் மௌனமாக அழுது கொண்டு வந்த சீதா, தெருவிற்குள் வந்ததும் அப்பா என்று கத்திக்கொண்டே ஓடினாள்.

சில அடி தூரத்திலே சீதாவின் அழகுரல் கேட்க, தந்தையின் தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த ராதா நிமிர்ந்து பார்த்தாள்.

அப்பா என்று ஓடி வந்து அவர் காலை கட்டிக் கொண்டு கதறி அழுதாள் சீதா.

அழுது கொண்டிருக்கும் அக்காவை எழுந்து போய் கட்டிக்கொண்டு ராதாகவும் அழ,இரண்டு பெண்களும் தந்தைக்காக கதறி அழுத்ததை பார்த்து, சுற்றி இருந்த மக்கள் கண்ணிலும் கண்ணீர் சுரந்தது.

மறுநாள் மதியம் பாடி எடுப்பது என்று,ஊர் முக்கியஸ்தர்கள், தூரத்தில் இருக்கும் காளியின் சொந்த பந்தங்களுக்கு சாவு செய்தியை அனுப்பினர்.

பூனே...

இன்டிகோ ஏர்லைன்ஸ் மீனம்பாக்கத்திலிருந்து, மகாராஸ்டிரா மாநிலம் பூனேவை நோக்கி வானில் பறந்து கொண்டிருந்தது.

தாமரைக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. அவள் அருகிலிருந்த முதிய தம்பதியினர் பேச்சு கொடுத்தனர்.

நாங்கள் சென்னை என்றும், பூனாவில் இருக்கும் மருமகளையும், பேரப்பிள்ளையை பார்க்க போவதாக சொல்ல,நான் நீலகிரி என்றாள்.

அப்போ கோயம்புத்தூரில் இருந்தே பூனேக்கு போயிருக்கலாமே?.

இங்கே அண்ணா இருக்காங்க, அவங்களை பார்த்துட்டு போகலானு வந்தேனென்றாள்.

ஓஓ என்றவர்கள், என்ன பண்ணுற என்க, இப்போதைக்கு இவங்க கேள்வி ஓயாது போலனு மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், ஹேண்ட் பேகில் இருந்த டிராயிங் நோட்டை எடுத்து, வரைய தொடங்கி விட்டாள்.

தம்பதியினரும், அவள் வேலையை முடிப்பாள், பேச்சை வளர்கலாம்னு காத்திருக்க, தாமரையோ அதற்கு வாய்ப்பே தரவில்லை.

இன்னும் ஐந்து நிமிடத்தில் பூனே இன்டர்நேஷனல் ஏர்போர்டில் பிளைட் லேண்ட் ஆகுமென்று அலோன்ஸ்மென்ட் வரவும்,வரைந்த நோட்டை பேகில் வைத்து விட்டு, சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டாள்.

சொன்னப்போலவே வானில் பறந்து வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ், ஒரு மணி நேரம் நாற்பது நிமிடத்தில் சென்னையிலிருந்து பூனேவிற்கு வந்து சேர்ந்தது.

லேண்ட் ஆனதும் தனது ஹேன்ட்பேகோடு வெளியே வந்து, லக்கேஜிற்காக காத்திருந்தாள்.

சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல அவளுடைய டிராலியை பெற்றுக்கொண்டு வெளியே வரும் போது தான், தாமரை என்ற நேம் போர்டை பார்த்து,அவனிடம் போய் பேசியது....

தாமரை, தாமரை, ஹலோ செவுட்டு தாமரை என்று சத்தமாய் மாறன் கூப்பிட, நினைவில் மூழ்கி இருந்தவள், நிகழ் உலகிற்கு வந்தாள்.

என்ன கண்ணை திறந்து கிட்டே கனவா?, டீ வேண்டுமா இல்லை காஃபி?.

அவன் கேட்ட பின்னர் தான் கார் ஓரமாய் நிற்பதை பார்த்தாள்.நாம வீட்டுக்கு போக இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்.

இப்போவே இரவு ஏழு மணி ஆகி விட்டது,வாங்கனு கதவை திறந்து வெளியே இறங்கினான்.

அவனை தொடர்ந்து பின் கதவை திறந்து கீழே இறங்கியவள் ரெஸ்டாரன்ட் உள்ளே சென்று, மாறன் உட்கார்ந்திருந்த டேபிளின் இன்னொரு சேரில் உட்கார்ந்து கொண்டாள்.

அவர்களிடம் வந்த பேரர், மராட்டியில் கேட்க, தனக்கு டீ என்றவன், உங்களுக்கு?.

காஃபி.

ஓகே என்றவன் அவரிடம் சொல்ல, சிறிது நிமிடத்தில் அவர்கள் கேட்டதை கொண்டு வந்து கொடுத்துச்சென்றார்.

டிரைவர் வரலையா?.

அவள் கேட்டதில் லேசாக புன்னகை வந்தது மாறனுக்கு.

அங்க பாருங்க என்று காட்ட, டிரைவரோ தனது டேபிளின் மேல், சினாக்ஸ் கடையையே பரப்பியிருந்தார் .

அவன் என் ஃப்ரண்ட் தான், இப்போதைக்கு என் மேல கோவமா இருக்கான்னு சொல்லி விட்டு சிரித்தான்.பின்னர் அங்கிருந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

இவர்களை சுமந்து வந்த காரோ,இரண்டு மணி நேர பயணத்தில் , அந்த வீட்டின் முன்பு வந்து நின்றது.

இதான் நம்ப வீடு என்றவாறே மாறன் இறங்க, தாமரையும் கதவை திறந்து கீழே இறங்கியவள், டிக்கி கிட்ட போக, அது ஓப்பன் ஆனது.

பின்னர் உள்ளே இருந்த டிராலி பேகை எடுத்தவளிடம் பார்த்து வாங்களென கேட்டை திறந்து சென்றவன் காலிங் பெல்லை அழுத்த, கதவை திறந்து வெளியே வந்தார் மாறனின் அம்மா பூரணி.

தாமரையை பார்த்தவர்,வாம்மா என்க, வணக்கம் மா.

உள்ளே வாம்மா என்றவர், சாகர் எங்கேப்பா என்க, இதோ வந்துட்டேன் மாமி என்றபடியே வந்தான் மாறனின் நண்பன் சாகர்.

சரி சரி, போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்டலாம் என்றவர், மூவருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க சென்றார்.

தாமரை முழித்துக்கொண்டிருப்பதை பார்த்தவன், உங்களுக்கு மாடில ரூம் அரேஞ் பண்ணிருக்கு.

இப்போதைக்கு லீனாவோட ரூம்ல இருங்க,காலையில் உங்க ரூமிற்கு போகலாம் என்றவன், தங்கையின் அறையை காட்டி விட்டு, தனது ரூமிற்குள் சென்று விட்டான்.

மூவரும் ஃபரஷ் ஆகி வர,சூடான சப்பாத்தியும், அதற்கு குருமாவையும் பூரணி பரிமாறினார் .

நீங்க சாப்டீங்களாமானு தாமரை கேட்க, நான் இவனோடோ அப்பா சாப்பிடும் போதே சாப்டேன் மா.அவர் டேப்லட் போடனும் அதான் சீக்கிரம் சாப்ட்டு போய் படுத்துட்டார்.

பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை பூரணியின் பேச்சை கேட்காமல் கழுவி வைத்தவள், காலையில் பார்க்கலாமென்று அறைக்குள் சென்று,வேறு உடையை மாற்றி விட்டு,பெட்டில் வந்து படுத்ததும் உறக்கம் வந்து விட்டது.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top