• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு:

"அப்பாயி... அப்பாயிஈஈ..." என கூப்பிட்டுக்கொண்டே தோட்டத்திற்கு வந்தவன்,அங்கே,தென்ன மட்டை சீவிக்கொண்டிருந்த அப்பாயிடம் சென்றவன், "உன் பேத்தி வந்துட்டாள்" என்றான்.

"பேரனின் சொல்லை கேட்டவர், 'என்னப்பா சொல்லுற?', 'ஆமா அப்பாயி, இப்பதான் பார்த்துட்டு வரேன்,எவ்வளவு பெரிய பொண்ணா இருக்கா தெரியுமா?', 'நிசமாதான் சொல்லுறியா நீ?' என்றார் பாட்டி.

"அட நெசமா தான் சொல்றேன். அம்மா கத்தரிக்காய் கொடுத்துச்சு அத்தை கிட்ட கொடுக்க சொல்லி, அதை எடுத்துட்டு போனேனா, வெளியிலிருந்தே அத்தையை கூப்பிடும்போது ஒரு பொண்ணு வந்து யாருன்னு கேட்டா.'யார்ரா இவள்?' அதும் நம்ப அத்தை வீட்ல புதுசா இருக்கேனு நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேனா, அப்போ தான் அத்தை வந்துச்சு. பிறகு, அது சொல்லி தான் தெரியும், நம்ம தாமரைதான் அவளென்று சொன்னான்.

"அதைக்கேட்டவர், மாரியாத்தா... எம் பேத்திய பார்த்து எம்புட்டு வருஷம் ஆச்சு?, உசுரு போகறதுக்குள்ள அவளை கண்ணால பாக்கணும்னு இந்த சிறுக்கி மனசு அடிச்சுக்கிட்டே இருந்துச்சு உள்ளுக்குள்ளயே," எனத் தனது பேரனிடம் சொல்லி கண்கலங்கினார்.

"அவளுக்கு உங்க எல்லாரையும் ஞாபகம் இருக்கு.எல்லாரையும் விசாரிச்சா.ஆனால், நம்ம ரெண்டு குடும்பத்து பிரச்சினை பற்றி அவளுக்கு தெரியாதுனு நினைக்கிறேன்".

"அப்படியா அப்பு!,நம்மள எல்லாம் ஞாபகம் இருக்கா அவளுக்கு?" என ஆச்சரியப்பட்டார்.

அப்பு... மனசு கடந்து இத்தனை வருஷமா அடிச்சுக்கிட்டு, என் பொண்ணோட தலைமகளை கடைசி வரைக்கும் பார்க்காமலே போயிடுமோ இந்த கட்டைனு. அதுக்கு அந்த ஆத்தா தான் வழி காட்டிருக்கா போலப்பு.

"வரியா போய் ஒரு எட்டு பார்த்து வரலாம்" என்றவர், பின் சுதாரித்து, "நாம ஏன் போகணும்? அவளுக்கு நம்ப மேல பாசம் இருந்தா, தானே தேடி வரட்டும்" என சொல்லி, தனது வேலையை தொடர்ந்தார்.

அப்பொழுது, அங்கு வந்த ராதா, "அத்தை...இந்தாங்க" என சொம்பை நீட்ட, அதை வாங்கி குடித்து பக்கத்தில் வைத்தவரிடம், "மதியம் என்னத்தை சமைக்கனும்?" என்க, "உங்களுக்கு புடிச்சதை ஆக்குங்கம்மா" என்றார் அப்பாயி.

"அட சொல்லுங்கத்தை" என ராதா மீண்டும் கேட்க, "ஏம்மா, எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து ரெண்டு பேரும் இந்த கிழவி கிட்ட கேட்டே சாப்பாடு பண்றிங்களே, இதுக்கு ஒரு முடிவே இல்லையா?" என்று கேட்டவனுக்கு, "உன் பொண்டாட்டி வந்தாலும் இந்த பழக்கம் மாறக்கூடாது அப்பு" என்று சொல்லி சிரித்தார் அப்பாயி.

"பின் மருமகளிடம், உறியில் மொச்சை ஊற வச்சிருக்கேன், அதுல கருவாடு போட்டு வச்சிருங்க ஆத்தா" என்றவர், "வயல்ல இருக்கவங்களுக்கு காலை சோறு அனுப்பிட்டீங்களா?" எனக் கேட்க, "எல்லாம் தயாரா தான் இருக்குங்கத்தை" என்றவர், "தம்பி அங்க திண்ணையில வச்சிருக்கேன் எடுத்து போப்பா" என்றார் மகனிடம் ராதா.

"அதற்கு, சரிம்மா" என்றவனிடம், "உனக்கும் அதுலே இருக்கு அப்பு" என்க, "ம்ம் நான் பாத்துக்குறேன்" என சொல்லி விட்டு அங்கிருந்து வீட்டின் உள்ளே சென்றவன், அம்மா சொன்ன போல திண்ணையில் இருக்கும் சாப்பாட்டு கூடையோடு, தனது பைக்கில் ஏறி வயலை நோக்கி சென்றான்.

"ஏம்மா... சீதாவையும் கொஞ்சம் கூப்பிடு," என்றார் வள்ளி.

"சரிங்கத்தை," என சொல்லிக்கொண்டு உள்ளே வந்த ராதா, "சீதா, சீதா" என்று கூப்பிட, "இதோ வரேன்" என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தவரிடம், "உன்னை அத்தை கூப்பிடுறாங்க, வா," என்று சீதாவோடு தோட்டத்திற்கு வந்தார்.

"அங்கே வந்தவரோ, அத்தை கூப்பிட்டீங்களா?" என்ற சீதாவிற்கு, "ஆமாம்மா, கேட்டியா சங்கதி? உங்க மருமக வந்திருக்கலாம்" என்று சொல்ல, "என்னங்கத்தை சொல்றீங்க? போன வாரம் கூட கோயில்ல கவிதாவை பார்த்தோமே, எதுவுமே சொல்லலையே?" என்றார் ராதா.

"இப்ப தான் சின்னப்பு சொல்லிட்டு போனான்.உன் பேத்தி வந்துருக்கான்னு என்க, எத்தனை வருஷம் ஆகுது அவளைப் பார்த்து என்று இருவரும் சொல்ல, வயசான நாங்கள் கண்ணை மூடுறதுக்குள்ளே, இந்த வீட்டு மருமகளா என் பேத்தி வரணும்னு பாவி மனசு கடந்து தவிச்சுக்கிட்டு இருக்கு.

"ஆத்தா அப்பன் உசுரோடு இருக்கும் போதே எம்மவளுக்கு பிறந்த வீடு இல்லாம போய்ட்டே? ஒரே ஊருக்குள்ள இருந்து கிட்டு, ஒட்டும் இல்லை உறவும் இல்லாமல் ஆகிட்டே எம்மவளுக்கு," என அழுது கொண்டே அப்பாயி சொல்ல, மாமியாரின் வேதனை கண்டு இருவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது.

"எப்படி இருந்த குடும்பம் இன்றைக்கு இப்படி ஆகிவிட்டது? யார் பக்கம் தப்புன்னு சொல்ல முடியும்?" என சீதாவும் ராதாவும் மனதிற்குள் சொல்லிக்கொண்டனர்.

"என்ன பண்ணுவீங்களோ தெரியாது, என் மவளோட மவ தான் என் வீட்டுக்கு மருமகளா வரணும்?" என்று மருமகள்களிடம் தன் மனதில் உள்ளதை சொன்னார் பாட்டி. "அதுக்கு என்னங்கத்தை, கால நேரம் கூடி வரும் போது எல்லாம் நல்லதே நடக்கும்" என்றார் சீதா.

சிறிது நேரம் பேத்தியை பற்றி பேசியவர், "சரி, நீங்க போய் வீட்டு வேலையை பாருங்க" என்றதும் இருவரும் உள்ளே சென்று மதிய உணவை சமைக்க தொடங்கினார்கள்.

"ஏன் சீதா இந்த மொச்ச கொழம்பு மட்டும் ஏண்டி எனக்கு சரியாவே வரமாட்டுது? நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்ணுறேன், உன்னப்போலயும், அத்தை போலயும் வைக்க முடியலையே," என்றார் ராதா.

"தங்கை சொன்னதை கேட்டு சிரித்தவர், சாதாரண சமையல் தான்டி, நீயும் தானே பாக்குற செய்யும் போதெல்லாம் என்க, ம்கும் நான் வச்சா யாரு வாய்ல வைக்கிறாங்க? என சொல்லிக்கொண்டே, உறியில் இருந்த மொச்சையை எடுத்து, அலசி அடுப்பில் வேக வைத்து விட்டு, அங்கிருந்த மோரை ஆளுக்கு ஒரு சொம்பில் ஊற்றியவர், திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து, மாமியார் சொன்னதை பற்றி யோசிக்கலானார் ராதா.

தாமரை வீட்டு கடலைத் தோட்டம்.

"ஏப்பா, உன் மகன் வீட்டுக்கு போனானே, அங்கேயே தங்கிட்டானோ?" என்று கலா பாட்டி தனது மகன் அன்பழகனிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போது, "வந்துட்டேன்" என சொல்லிக் கொண்டு அங்கே வந்த சிவா, "அப்பா, அக்கா வந்திருக்கா" என்றான்.

அதைக்கேட்ட அனைவரும், "என்ன சொல்ற, தாமரையா வந்துருக்குா?" எனக் கேட்க, "ஆமா ஆமா" என்றான்.

"ஆத்தாஆஆ...என் பேத்திய பாத்து எத்தனை வருஷம் ஆகுது," என்றார் ஆற்றாமையில் கலா பாட்டி.

"ஆமா ஒவ்வொரு வாட்டியும் கூப்பிடும் போது நீ தான் வர மாட்டேங்குற, நாங்க என்ன பண்றது?" என்றாள் அல்லி. "அண்ணா என்னை உடனே வீட்டுக்கு கூப்பிட்டு போணா? அக்காவை பார்க்கணும்" என்று அல்லி சொல்ல, "இன்னும் கொஞ்ச நேரம் தான்டாமா, வேலை முடிச்சுட்டு நாம எல்லாரும் ஒரேடியா வீட்டுக்கு போகலாம்" என்றார் அன்பழகன்.

"சரி சரி வாங்க சாப்பிடலாம்" என்று சிவா சொல்ல, அனைவரும் அங்கிருந்த போர் கொட்டைக்கு சென்று,வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் கை கால்களை சுத்தம் செய்து கொண்டு வர, அல்லி தன் வீட்டில் உள்ளவர்களுக்கு அம்மா செய்து கொடுத்த களியையும், கோழி குழம்பையும் ஊத்தி அவரவருக்கு தட்டில் கொடுக்க, இவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், வேலை ஆட்களும் சாப்பிட்டு வந்தனர்.

"பின்னர்...மீண்டும் வேலை தொடங்கியது. உச்சி வெயில் மண்டையைப் பிளந்தாலும், வேலையில் அவரவர் கண்ணாகத்தான் இருந்தனர். அதற்கு காரணமோ கலா பாட்டியின் கிராமத்துப் பாட்டுதான்.

"கலா பாட்டியின் குரலில் மண்மணத்தை பற்றி நாளெல்லாம் கேட்டு ரசிக்கலாம். இளம் வயது பெண்களெல்லாரும் அவரை கிண்டல் பண்ணுவார்கள். பாட்டு பாடியே தாத்தாவை மயக்கிட்டியா அழகி என்று.

மதியம் மூன்று மணிக்கு சங்கு பக்கத்து ஊரிலிருந்து ஒலிப்பதை கேட்டு, வேலையாட்கள் அனைவரும் வேலையை முடித்துக்கொண்டு வீட்டை நோக்கி சென்றனர்.

"இரவு காவலுக்கு வந்தால் போதுமென்பதால், தாத்தா, பாட்டியும் பேத்தியை பார்க்க வீட்டிற்கு கிளம்ப. அன்பழகன் வண்டியில் அவரது தந்தையும், சிவாவின் பைக்கில் அல்லியும் ஏறிக்கொள்ள, நான் மற்றவர்களோடு நடந்து வரேனென்று கலா பாட்டி சொல்லி விட, சரி என்று அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

"அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்தவர்கள் தாமரையைத் தேட, அவளோ தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். அக்கா தூங்கிட்டு இருக்காப்பா என அல்லி சொல்ல, சரி என்று குளிக்கச் சென்றார்கள்.

மாலை ஐந்து மணி ஆனது. அனைவருக்கும் டீ வைத்துக் கொண்டிருந்தார் கவிதா.

தாமரையும் தூங்கி எழுந்து வெளியே வர, அங்கிருந்த தனது வீட்டாரைப் பார்த்தவள், பின் அப்பாயி என்று ஓடிப்போய் பாட்டியைக் கட்டிக் கொண்டாள்.

"ஏத்தா வந்துட்டியா...இந்த கிழவி மண்ணுக்குள்ள போறதுக்குள்ளார வந்து முகத்தை காட்டிட்டியா?" என்று பேத்தியின் முகத்தை வருடி கண்கலங்கினார் கலாப்பாட்டி.

பின் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவளை நலம் விசாரிக்க, தனது தம்பி, தங்கை, அப்பா, தாத்தா, பாட்டி என அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் தாமரை.

"பின்னர், அனைவருக்கும் டீயை கொண்டு வந்து கொடுத்தார் கவிதா. அதை வாங்கி குடித்தனர். 'அம்மா, நைட்டுக்கு என்ன சமையல் பண்ணனும்னு சொல்லுங்க, நானே பண்ணுறேன்' என்று தாமரை சொல்ல, மகள் சொன்னதில் மகிழ்ச்சி ஆனது கவிதாவிற்கு.

"இருக்கட்டும் தாமரை, இதுல என்ன இருக்கு, நானே பண்ணுறேன், நீ தம்பி தங்கச்சி கிட்ட பேசிகிட்டு இரு, அது போதும்," என்று சொன்னார் கவிதா. அதற்கு தாமரையோ, "அம்மா, இத்தனை வருஷமும் நீங்க தானே செஞ்சிங்க, கொஞ்ச நாள் தானேம்மா, நான் செய்கிறேன்" என்றாள்.

"ஏத்தாஆஆஆ...கவிதா, அதான் எம் பேத்தி ஆசப்படுதே, செய்யட்டும்," என்றார் தாத்தாவும்.

ஹப்பாடாஆஆஆ...கொஞ்ச நாளைக்கு இந்த கவிதா சமையலில் இருந்து விடுதலை என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே ஓடினாள் அல்லி.

"வாடி...வா...அம்மாஆஆ, அது செய், இது செய்னு வருவே தான, அப்போ இருக்குடி உனக்கு," என்ற கவிதாவிடம். "அது சின்ன புள்ளைடி" என்று சொல்லிய அன்பழகனை முறைத்து விட்டு கவிதா உள்ளே செல்ல, ஹாஹாஹா என்று சிரித்தான் சிவா.

பின்னர், ஞாபகம் வந்தவளாய், அச்சோ...என தலையில் தட்டிக்கொண்டு அங்கிருந்து உள்ளே சென்ற தாமரை, அறையில் இருந்த டிராலி சூட்கேஸை இழுத்துக்கொண்டு வந்து, திண்ணையில் அமர்ந்தாள்.

"அதைப்பார்த்த கலா பாட்டி, என்ன ஆத்தா புட்டி தூக்கிட்டு வந்துருக்கே?" என கேட்க, "அய்யோஓஓஓ அப்பாயிஈஈஈ. அது புட்டி இல்லை, டிராவல் பேக்" என சிவா சொல்ல, "ம்கும், இப்ப தான் பாடம் எடுக்க வாத்தியாரு வந்துருக்கான்" என்றார் பேரனிடம்.

"ஆமா...ஒன்னாங்கிளாஸே ஒழுங்கா போகாதவ உன் அப்பாயி, அவகிட்ட போய் இதெல்லாம் சொல்லுறியே நல்லவனே," என்று தாத்தா சிரிக்க, அதற்கு பாட்டியோ, "ஆஹான் அய்யா காலேசி படிச்சு கலைக்டரு பாரேன்" என்க, இருவர் பேச்சை கேட்டு சிரித்தான்.

டிராலி பேகை திறந்தவள், அவரவருக்கு வாங்கி வந்ததை எடுத்து, வீட்டினுள் உள்ளவர்களிடம் கொடுக்க, "ஏத்தா இதெல்லாமென" அன்பழகன் கேட்டதற்கு, "என் முதல் மாத சம்பளத்தில் வாங்குனதுப்பா" என சொல்லிக்கொண்டே அம்மாவை தேடி செல்ல, கவிதாவோ வீட்டுக்கு பின்னாடி இருக்கும் தோட்டத்தில், மாடுகளுக்கு தொட்டியில் தண்ணி காட்டிக்கொண்டிருந்தார்.

"அம்மாஆஆஆ" என கூப்பிட்டுக்கொண்டே அங்கு வந்தவளை கண்டவர், "என்ன தாமரை என்க, உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன், அதை காட்ட தான் தேடுறேன்".

மகள் சொன்னதை கேட்டவர், "எனக்கு எதுக்கு வாங்கி கிட்டு, உங்க அப்பாக்கு, அப்பாயி & தாத்தாக்கு வாங்கி குடு".

"எல்லாருக்கும் தான் வாங்குனேன்" என்றவளிடம், "ஏது உனக்கு அவ்வளவு பணம்?" என்றார் கவிதா.

ம்ம்... நான் வேலைக்கு போறது தெரியும் தானே உனக்கு? அதுல வந்த பணத்தில் தான் வாங்கினேம்மா என்றவள், கண்ணை மூடு என்று சொல்ல, என்ன சின்ன புள்ள விளையாட்டு என சொல்லிக்கொண்டே மாடுகளை அங்கிருந்த கவனையில் கட்டி விட்டு, கண்ணை மூடி நிற்க, கையை நீட்டுமா என்றாள்.

அட என்னத்தா விளையாட்டு என்று சிரித்து விட்டு கண்ணை மூடி வலது கையை நீட்ட, தான் வாங்கி வந்ததை அவரின் உள்ளங்கையில் வைத்தவள், கண்ணை திறம்மா என்று சொல்ல, ம்ம் என்றவரே திறந்து பார்க்க, சிறு நகை பாக்ஸ் ஒன்று இருந்தது.

"என்னம்மா இது?" என்று பாக்ஸை திறந்து பார்த்த கவிதா அதிர்ந்தார்!!

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top