• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நீலகிரி:

மயிலா...எங்கே மருதுனு வேதா கேட்க, என் பையன் ஆசைய நானே இன்றைக்கு உயிரோட புதைச்சிட்டேனே நர்சம்மா என்று தலையில் அடித்துக்கொண்டு கதறியவர் என்னை மன்னிஞ்சிடுங்கம்மா.அந்த நேரத்தில் உயிர் போகுற நிலமையில் இருந்த ஜீவனுக்கு,"என் மனசாட்சி படி அதை தான் செய்ய தோன்றியதுங்கம்மா".

என் பையனோட ஆசைகள்,விருப்பம், எதுவும் எனக்கு அப்போ பெருசா தெரியலைங்கம்மா.இப்போ தான் நான் செய்தது புரிகிறது.

மயிலா,மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நீ எந்த தப்பையும் பண்ணலை.நீ சொல்லவில்லை என்றாலும்,அந்த சூழலை பார்த்து,"நானும் இதை தான் சொல்லிருப்பேன்" என்றவர்,வா முதல்ல மருதுவை போய் பார்க்கலாம்.

பின்னர் இருவரும் அழுது வடியும் முகத்தோடு வருவதை, அங்கிருப்பவர்கள் பார்த்துக்கொண்டே சென்றனர்.

வெளியே நிற்கின்ற பவி தந்தையோட சொந்தங்களிடம் வந்தவர்,அடுத்து ஆக வேண்டியது என்னவென்று கேட்டார் வேதா?.

தூரத்தில் அமர்ந்திருந்த பவியின் தாத்தாவை கையைக்காட்ட,அவரிடம் சென்ற வேதா,தான் யாரென்று சுருக்கமாக சொல்ல,அதைக்கேட்டவர், தனது கையை தூக்கி கும்பிட்டார்.

அய்யோஓஓ...என்ன காரியம் பண்ணுறீங்கனு பதறிய வேதா,அவரின் கையை பிடித்து கீழே இறக்கியவர், உங்கள் வயது என்ன,என்னை போய் இப்படி என்றார்.

அம்மாடி வேதா...என்று கதறி அழுதவர், உன்னை பற்றி பதினைந்து வருஷத்திற்கு முன்னவே என் மகன் சொல்லிருக்கான் மா.அவன் அம்மாகாரி தான் பணம்,பேராசையால் மகனையும், மருமகளையும் ஏத்துக்கவில்லை.

ஆனால் என் பையனையும், மருமகளையும்,நான் தெரியாம வந்து பார்த்துட்டு தான்மா இருந்தேன்.

ஒரு நாள் நான் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்ததை என் மகன் பார்த்துட்டான்.அப்போ தான் உங்க எல்லாரையும் பற்றி சொன்னான்.

அதற்கு பிறகு நான் நீலகிரிக்கு வரலைமா.என் மகன் குடும்பத்தையும் பார்க்கவில்லை.

காலம் கடந்த பிறகு என் மனைவிக்கு எது வாழ்க்கைக்கு தேவைனு புரிய, இப்போ போய் இந்த ஆண்டவன் இப்படி எம் புள்ளைய பறிச்சிக்கிட்டானேமானு தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதவர்,எம்மாடி மருமவளையாவது காப்பாத்திடலாம் தானே?.

அந்த மகராசியும் போய் சேர்ந்துட்டாங்கைய்யானு மயிலா அழ,அய்யோ என்று இன்னும் கதறி அழுதார்.அவர் அழட்டுமென இருவரும் அமைதியாக இருந்தனர்".

ஓரளவுக்கு அவரின் அழுகை குறைந்திருப்பதை பார்த்து விட்டு, அய்யா,"அடுத்து,ஆக வேண்டியதை பார்க்கனுமென்க,புரியுதுமா என்றவர் பேத்திய நினைச்சா தான் வேதனையா இருக்குமா.

இப்படி ஆத்தாளும்,அப்பனும் ஒரே நாளிலா போகணும்.அம்மாடி, இத்தனை வருஷம் அவங்க வாழ்ந்த இடத்துக்கே கூப்பிட்டு போய்டலாம் மா.

இன்னும் என் பொண்டாட்டிக்கு விஷயம் தெரியாதுனு அழுது கொண்டே சொன்னவர்,இனி பவி என் பொறுப்பு என்க...

அய்யா....இன்றிலிருந்து பவி என் மருமகளென்று மயிலா சொல்லவும், என்னம்மா சொல்லுறனு அதிர,உள்ளே நடந்ததை பற்றி சொல்லவும்,அம்மாடி வயசுல சின்னவங்களா இருந்தாலும், உன் கால்ல விழுறேனென்ற பெரியவர் மயிலா காலில் விழப்போனார்.

அய்யோ....இவ்வளவு பெரிய பாவத்தை என் தலையில சுமக்க வைக்காதீங்கய்யா என மயிலாவும் கண்ணீரோடு சொன்னார்.

டாக்டர் கிட்ட பேசலாம்னு வேதா சொல்ல,ம்ம் என்றவாறு இருவரும் வேதாவோடு ஹாஸ்பிட்டல் உள்ளே சென்றனர்.

ஃபார்மாலிட்டிஸ் முடிந்து இருவரின் பாடியை இவர்களிடம் கொடுக்க மணி மாலை ஆறு ஆனது.

"ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றி விட", அவர்களுக்கு நீலகிரி அட்ரஸை வேதா சொல்லி,பணத்தையும் கொஞ்சம் கொடுத்தார்.அதுவரை தூரமா இருந்து இவர்களை பார்த்துக்கொண்டிருந்த மருதுவோ இவர்களிடம் வந்தான்.

நாமும் கிளம்பலாமென வேதாவிடம் சொல்ல",சரிப்பா என்றவர்,மயிலா பவிய கூப்பிட்டு வா என்றார்.தாய் இறந்த அதிர்ச்சியில் மௌனமானவள் தான்,இதுவரை வாயை திறக்கவில்லை.

சித்த பிரம்மை பிடித்த போல பார்வையை நேராக வைத்துக்கொண்டு, சுற்றம் நினைவு இல்லாமல்,ஹாஸ்பிட்டல் வராண்டாவில் உட்கார்ந்திருந்த பவியிடம் வந்தவர், அவள் கையை பிடித்து எழுப்ப, பொம்மை போல அவரோடு வந்தாள்.

"பேத்தியை பார்த்த தாத்தாவோ சத்தமில்லாமல் அழ",அதிர்ச்சியில் இருக்காள்.சரியாகிடுமென்ற வேதாவோ வேன் கதவை திறந்து உள்ளே சென்று உட்கார,பவியும் அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

மயிலா அவளுக்கு அருகில் அமர, தாத்தா மருதுவின் அருகில் அமர, மற்றவர்கள் தாங்கள் வந்த வண்டியிலே வந்து விடுகிறோம் என்றனர்.

வேனை அங்கிருந்து ஸ்டார்ட் பண்ணியவன்,இரவு ஒன்பது மணிக்கு நீலகிரியில் உள்ள பவியின் வீட்டிற்கு முன்பு வந்து நிறுத்தினான்.

அங்கு மூக்கையனும் அனைத்தையும் தயாராக செய்து வைத்திருக்க, இருவரின் உடலை சுமந்த ஆம்புலன்ஸூம் வந்து சேர்ந்தது.

அங்கிருந்த மலை வாழ்மக்கள், அவர்களோடு எஸ்டேட்டில் வேலை செய்பவர்களெல்லாரும்,இருவரின் உடலை இறக்கி கண்ணாடி பெட்டிக்குள் வைப்பதை பார்த்து கதறி அழுதனர்.

பவியோ இங்குள்ள சூழலுக்கும் எனக்கும்,எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போலவிட்டத்தை பார்த்து உட்கார்ந்திருந்தாள்.

சீமக்கரை..கதிர் வீடு...

நண்பர்களும் தூங்கி எழுவதற்கு காலை எட்டு மணி ஆனது.என்ன இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமென்று இருவரும் பேசிக்கொண்டே ப்ரஷ் ஆகி கீழே வந்தனர்.

இன்றைக்கு மாட்டுக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்பதால்,வீட்டில் வேலைகள் பர பரப்பாக நடந்து கொண்டிருந்தது.

செல்வியோ கீழே வந்த இருவருக்கும் டீயை கொடுத்துச் சென்றாள்.

அப்பு...சாமி வீடு வரைக்கும் போயிருக்கான்னு அப்பாயி சொல்ல, ம்ம் என்றவன்,சரி எத்தனை மணிக்கு படைக்கனும் என்கவும் சமையல் ஆனதும் நேரத்தை பார்த்து ஆரம்பிச்சிட வேண்டியது தானென்றார் வள்ளி அப்பாயி.

சரிடா...நான் போய் பார்வதி அத்தைக்கு வாங்கிட்டு வந்ததை கொடுத்துட்டு வரேன் என்றவாரே அப்பாயின் அறைக்குள் சென்ற ஜான்,அங்கிருந்த கவரை எடுத்துக்கொண்டு,வேலு வீட்டிற்கு சென்றான்.

எங்க அப்பாயி தாத்தா? என்று கதிர் கேட்க,பின்னாடி நல்லவனோடு மாட்டு கொட்டாயில் இருக்கார்பா.அப்படியா என்ற கதிர் தோட்டத்தை நோக்கி சென்றான்.

அங்கே பிரகாசமும், வளவனும் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருக்க, நிலவன் அவைகளுக்கு தீவனம் கலந்து வைத்துக் கொண்டிருந்தான்.

அவர்களிடம் வந்த கதிர், தாத்தா மாடுங்களுக்கு கயிறை மாற்றி விடலாமா? என்க,சொல்லி அனுப்பிருக்கேன் அப்பு.

சரி தாத்தா என்றவன்,வீட்டின் உள்ளே சென்று,மாடுகளுக்காக வாங்கி வந்த புது கயிறுகளையும்,ஐய்யனாரிடம் வைத்து படைத்த சங்கையும் எடுத்து வந்தான்.அப்பொழுது பூசாரியும் வந்து விட,வா ணா என்றான்.

வரேன்டா தம்பினு கதிரிடமிருந்த கயிறுகளை வாங்கியவர்,கழுத்தில் கட்டும் கயிறுகளில் சங்கை கோர்த்து முடிச்சு போட்டார்.காளை மாடு இரண்டிற்கும் சங்கை கோர்த்தவர், கதிரு மாட்ட ஓட்டிட்டு வாடா என்க, இதோணா என்று கவனையின் அருகில் சென்றவன் முதலில் பசுக்களுக்கு கயிற்றை கட்டிக்கலாமாணா என்கவும் சரிடா.ஓட்டிட்டு வா என்றவர்,அங்கிருந்த கயிற்றை எடுத்து,கையால் அளவு எடுத்து மூக்குக்கும்,கழுத்துக்கும் தனியாக எடுத்துக்கொண்டவர், பெரியப்பா என்று குரல் கொடுக்க, வரேன் வரேன் என்றார் பிரகாசம் தாத்தா.

பின்னர் அனைத்து மாடுகளுக்கும், புதுக்கயிறை மாற்றி முடிக்கவே போதும், போதும் என்றானது.

வேலு வீடு...

வாசலின் ஓரமாய் வண்டியை நிறுத்தி விட்டு,அத்தை என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தவனிடம் வாப்பா என்றார்.எங்கே மாமாவையும், இவனையும் காணும்? என்க, பக்கத்து வீட்டு பையன் எதோ மிஷின் வேலையா கூப்பிட்டானு போயிருக்கான் கண்ணா. கை கழுவிட்டு வா சாப்டலாம் என்க, ம்ம் என்றான்.

பின்னர் ஜான் சாப்பிட உட்காரவும், வேலுவும் அங்கு வந்து சேர்ந்தான். இருவருக்கும் சூடான டிபனை பரிமாறானார்.

எத்தனை வருஷம் ஆகிட்டு உன் சமையலை சாப்பிட்டு என்றவாரே ஜான் சாப்பிட,எனக்கு தான் மருமகனே அதுல இருந்து இன்னும் விடுதலை கிடைக்கலை என்றாவாரே உள்ளே வந்தார் செல்வம்.

ம்கூம்...என முகத்தை நொடித்து காட்டியவர்,சாப்பாடு எடுத்து வைக்கட்டுமானு கணவரிடம் கேட்க, அந்த கல்லை( இட்லி? அவனுங்களுக்கே குடு.

எனக்கு ரெண்டு தோசைய மட்டும் சுட்டு குடு என்றவர்,வராண்டாவில் இருந்த தண்ணீரில் கையை கழுவிட்டு வர,சிறிது நிமிடத்தில் சூடான இரண்டு தோசையோடு வந்த பார்வதி, கணவரின் முன்பு தட்டை வைத்து சென்றார்.

இரண்டு நிமிடங்கள் சென்றும் தொட்டுக்கொள்ள எதுவும் எடுத்து வராமலிருக்கும் மனைவியை கண்டு, அடியேய் வெறும் தோசைய எப்படி டி மனுஷன் சாப்டுவான்?.

நீங்க தானே தோசை மட்டும் சுட்டு தானு சொன்னீங்க என்று சமையல் கட்டிலிருந்து குரல் கொடுக்க, உங்கப்பன் மவளே வந்தேன் என்ன நடக்கும்னு தெரியாது என்றார்.

இருவரின் பேச்சுகளை கேட்டு இவனுங்களோ சிரித்துக்கொண்டே சாப்பிட்டனர்.

போதாத குறைக்கு எம்மா...அந்த மல்லி சட்னிய எடுத்தாயேன்னு வேலு தந்தையை பார்த்து சொல்ல, ஆத்தாளும்,மவனும் நக்கல் புடுச்சதுங்கனு முறைத்தார்.

பின்னர் சாம்பாரையும்,மல்லி சட்னியையும் எடுத்து வந்து கணவருக்கு பார்வதி பரிமாறிக்கொண்டே இன்னும் ரெண்டு சுடட்டுமானு பார்வதி கேட்க, போதும் நீ சாப்டு என்றானுங்கள்.

ஏன் டி.... இங்க ஒருத்தன் இருக்கனே என்கவும்,அம்மா.அந்த பழையது மீந்துச்சினு சொன்னியே, எடுத்து வந்து கொடு என்றான்.

ஆமாடி... எடுத்து வந்து உன் மவன் தலையிலே கொட்டு.பெத்துவச்சிருக்கா பாரு புள்ளைய.ச்சை என்றவரை பார்த்த வேலுவோ, என்னப்பா அம்மாவ என்னமோ சொல்ற போல இருக்கே?.

அடேய்.... இந்த நாரதர் வேலையை அவ கிட்ட வச்சிக்க என்றவாறு,பார்வதினு குரல் கொடுக்க, சூடான இரண்டு தோசைகளோடு வந்தவர், இந்தாங்க என்று கணவரின் தட்டில் வைத்து சென்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
அம்மா.... நீங்க ரெண்டு பேரும் எப்போ அங்க வரீங்கனு வேலு கேட்க?,இன்னும் கொஞ்சம் வேலை இருக்குப்பா. முடிச்சிட்டு நான் வரேன்.அப்பா... களத்துமேடு வரை போய்ட்டு,
பூஜை நேரத்துல வரேனு சொல்றார்.

ஏம்பா,இப்போ எதுக்கு களத்துக்கு போறனு தந்தையிடம் கேட்கவும்,இல்லப்பா...இராவுக்கு வண்டி வச்சி அடிச்சிடலாம்னு பாக்குறேன்.

நாளைக்கு கருநாள்னு எவனும் வேலைக்கு வர மாட்டான்.இன்னும் எத்தனை நாளுக்கு நெல்லு கட்டை காவ காக்க?.

ஆமா பா.நீ சொல்றதும் சரி தான். ஆளுங்கள்ட சொல்லி வச்சிட்ட தானே? என்றவனிடம் எல்லாம் காலையிலே பார்த்து சொல்லிட்டேன்.சாக்கு எடுத்துக்கிட்டு போக வேண்டியது தான்.

சரிப்பா,அப்போ நான் போய் சாக்கு ஏத்திட்டு வந்துடுறேன் என்ற வேலுவிற்கு,ம்ம் குமார் கிட்ட சொல்லி பத்து சாக்கு கூடவே வாங்கிக்க என்றவரோ கையை கழுவிட்டு எழுந்தார்.

டேய் நீ மட்டும் போக வேண்டாம். இரு நானும் வரேனென்று ஜான் சொல்ல, சரி வா என்றவன், நாங்க போய்ட்டு வந்துடுறோமென்று, இருவரும் வெளியே வந்தனர்.

அடேய் பனைமரம்,கதிருக்கு ஒரு ஃபோனை போட்டு சொல்லிடு நாம போற விஷயத்தை.நான் போய் பின்னாடி இருக்க கொட்டாயில் கயிறு இருக்கு,சாக்குங்களை கட்ட எடுத்து வரேனென்று சொல்லிச் சென்றான் வேலு.

தன் ஃபோனிலிருந்து கதிருக்கு கால் பண்ண,அட்டென் பண்ணியவன், சொல்லுடா என்றான்.கதிரிடம் நெல் மண்டிக்கு போகப்போற விஷயத்தை சொல்ல, சரிடா.பார்த்து போய்ட்டு சீக்கிரம் வாங்க என்று சொல்ல, வந்துடுறோம்டானு ஃபோனை வைத்தான்.

வேலுவும் வந்து விட, இருவரும் அவரவர் வண்டியில் ஏறி,அங்கிருந்து தேனூரில் இருக்கும் நெல்மண்டிக்கு சென்றனர்.

ஏண்டா...என்ன தான் மனசுல நினைக்கிறான்னு புரியலைடா வேலு??என்று வண்டியில் போய்க்கொண்டே ஜான் கேட்க,எனக்கும் அது விளங்கலைடா பனைமரம்.வேண்டும்னு சொல்ல மாட்றான்.

வேண்டானு விட்டு தொலையவும் மாட்றான் பாதி சாமத்துல ஆளை பாக்குறேன்,பால்கனியில உங்காந்து தூங்கிட்டு இருக்கிறான் டா.பிறகு எழுப்பி உள்ளே படுக்க சொன்னேன்.

ஓஓஓ... காதல் வந்தால் இதுலாம் நடக்குமாடா மச்சான்னு ஜானும் அப்பாவியாக கேட்க,அடேய்...அவன் படுத்துர பாடே முடியலை சாமி.நீயும் சாவடிக்காதடா பனைமரம்.பத்து பதினைந்து ப்ரண்ட கூட வச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.

"ரெண்டு நாதாரி பயலுங்களை 24 வருஷமா நண்பனா கூட வச்சிக்கிட்டு நான் படும் பாடு இருக்கேஏஏஏஏஏ"..., என வேலு சொல்வதைக்கேட்டு ஜானிற்கு சிரிப்பு வந்தது.

சில பல கலாய்ப்புகளோடே தேனூரில் இருக்கும்,குமார் நெல் மண்டிக்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.வண்டியை விட்டு இறங்கிய இருவரும் உள்ளே செல்ல, அங்கங்கே நெல் மூட்டைகள் ஒரு பக்கம் அடிக்கியிருந்தது.

இன்னொரு இடத்தில் ஆட்கள் நெல் மூட்டைகளை எடை போட்டு,லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.ஒரு சிலர் நெல்லு பிடித்து வைக்க,சணல் சாக்குகளை வாங்கி சென்றார்கள்.

அண்ணா என்றபடியே அங்கு வந்த வேலுவை பார்த்த மண்டி ஓனர் குமார், வாப்பா.என்ன வேலு அறுவடையெல்லாம் முடிஞ்சிட்டா என்க, ரெண்டு ஏக்கர் முடிஞ்சிட்டுணா.
மீதம் இருப்பதை கருநாள் முடிஞ்சி அறுத்துக்கலானு இருக்குதுணா என்று வேலு சொல்ல,அதுவும் நல்லது தான் தம்பி.

ஒரு நாள் கிடைச்சாலும் தான் கூட்டம் கூட்டமா ஆலமரத்தடிய புடிச்சிக்கிறானுங்களே என்றவர், சொல்லு வேலு.எத்தனை சாக்கு வேண்டும்?.

வழக்கமாக குடுக்குறதோட இன்னும் பத்து சேர்த்தே அப்பா கேட்டார்ணா,சரி தம்பி.அங்கே அம்பது ,அம்பதா இரண்டு கட்டு இருக்கு,அதோட பக்கத்தில் இருப்பதில் பத்து எடுத்துக்க.

நாளைக்கு நைட் லோடு ஏத்த,லாரி வரும்னு அப்பா கிட்ட சொல்லிடுப்பானு குமார் சொல்ல,சரிணா என்றவன், சாக்கு கட்டை தூக்கி வர, அவனிடமிருந்து ஜான் ஒரு கட்டை வாங்கி போய் வண்டியில் வைத்தான்.

மீதம் இருப்பதை வேலு எடுத்துக்கொண்டு,அவரிடம் சொல்லி விட்டு வண்டியில் ஏறி ஊரை நோக்கி சென்றனர்.

என்னடா இப்படி வெயில் கொளுத்தி எடுக்குது என்றவாரே ஜான் வண்டியை ஓட்ட,அய்யா அப்படியே ஆரஞ்சு கலர்.
இந்த வெயில் பட்டு அடுப்பு கரி கலர்ல ஆகிடுவீங்க பாரேன் என்று வேலு சொல்ல,விடுடா விடுடா என்றான் ஜான்.

ஆனால் உண்மையிலே நீ கொஞ்சம் மாஞ்சிகப்பு தான்டா என்ற நண்பனின் சொல்லை கேட்டு, ஹாஹாஹா என்று சிரித்தவன், ஏண்டா...இவ்வளவு நேரம் மிலிட்ரியும், அவர் பொண்டாட்டியும் வந்துருப்பாங்க இல்லையா?.

கண்டிப்பாகடா பனைமரம்.நம்மளை பற்றி தான் வாய் கிரைண்டர் ஓடிக்கொண்டிருக்கும் என்றான் வேலு.

சீமக்கரை கதிர் வீடு...

அம்மா என கூப்பிட்டுக்கொண்டே, வீட்டின் உள்ளே வந்தார் பார்வதி.
வாத்தா..உள்ளூர்ல இருந்து கிட்டு அப்பன் ஊட்டுக்கு வர,உனக்கு வருஷம் ஒன்னு ஆகுது என்றார் வள்ளி அப்பாயி.

அம்மா, நித்தம் போனா முற்றம் சலிச்சிடும்னு நீ தானே சொல்லுவ என்றபடியே,எங்கம்மா அண்ணிங்களை காணும்னு பார்வதி கேட்க,தோட்டத்துல தான் என்றவர்,எப்படி இருக்கத்தா?என்று மகளிடம் கேட்டார்.எனக்கு என்னம்மா, மாமா நல்லா பார்த்துக்குறாங்க.

ரொம்ப நல்லா இருக்கேன் என்றவர்.நீ எப்படிமா இருக்க?, ஏன் மூஞ்சு ரொம்ப சோடையா இருக்கு?.எம்மா,தாமரை வந்துருக்கே பார்த்தியா?, புள்ளைய பார்த்ததும் அப்படியே பகீர்னு இருந்துச்சிமா.முதல் தட பாக்கும் போது, எக்கா சிந்து தான் நடந்து வருதோனு பேச்சே இல்லை.பொறவு,உன் பேரன் இருந்தானா, நான் எதுவும் காட்டிக்கலைமா என்றார் பார்வதி.

நேற்று தான் ஆத்தா பார்த்தேன்,"உம் மவளை பார்த்தும் உச்சி முடிய கொத்தா இழுத்த போல சுளீர்னு இருந்துச்சி", என்று சொல்லி கண் கலங்கினார் வள்ளி அப்பாயி.

அம்மா..அக்கா எங்கையாவது உசுரோட இருக்கும்மா. னக்கு அந்த நம்பிக்கை இருக்கென்று சொல்லி பார்வதியும் கண்கலங்கினார்.

அப்பொழுது தோட்டத்தில் இருந்து காய்கறிகளோடு வந்த செல்வி, உள்ளே இருக்கும் பார்வதியை பார்த்தவள் அத்தை என்று ஓடி வந்தவள்,வா.. வா...எப்போ வந்தத்தை? என்க,கொஞ்ச நேரம் முன்னாடி தான்டா என்றவருக்கு, இந்த ஊர்ல இருந்து கிட்டு, உனக்கு பொங்கல் வந்தா தான் அப்பா வீடு கண்ணு தெரியும் போல என்றாள்.

இருத்தை அம்மாவ கூப்டுறேன் என்கவும்,இருக்கட்டும் டா.நானே வரேன் என்று சொல்லி எழுந்தவர் பின் பக்க கதவு வழியாக தோட்டத்திற்கு சென்றார்.

அங்கே சமையலுக்கான அசைவ பொருள்களை ராதா சுத்தம் செய்து கொண்டிருக்க,சீதாவோ அம்மியில் மசாலாவை அரைத்துக் கொண்டிருந்தார்.

அண்ணி என்றவாறு அங்கே வந்த பார்வதியை பார்த்த இருவரும் வாங்க அண்ணி என்றார்கள் .

எப்ப வந்தீங்கண்ணி?என்று கேட்க, இப்ப தான் வந்தேன் என்றவாறே ராதா கூட போய் உட்கார்ந்து கொண்டு, வேலையில் உதவி செய்தார்.

அட இருக்கட்டும் நீங்க போய் உட்காருங்கண்ணி என்று அக்கா, தங்கை இருவரும் சொல்ல,வருஷம் முழுவதுமா உங்களுக்கு நான் உதவியா இருக்கேன் என்றவாரே மீனை சுத்தம் செய்து அலசி எடுத்தார்.

மூவரும் பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்க,அப்பொழுது மூவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தாள் செல்வி.

அத்தை, அம்மா, இதை குடிச்சிட்டு வேலை பாருங்க என்றவள், மூவருக்கும் கொண்டு போய் தட்டை நீட்ட, ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டார்கள்.

அம்மா,அடுப்புல உலை வச்சிட்டேன் என்ற செல்விக்கு,அண்ணி வருவாங்க.கூட மாட செஞ்சிட்டு இரு என்றவர்,பாதி அரைத்த மசாலாவையும் எடுத்து போக சொன்னார் சீதா.

அண்ணி நீங்க உள்ளே போய் பாருங்க, நாங்க ரெண்டு பேரும் இதை முடிச்சிட்டு வரோமென்று ராதா சொல்ல, சரிங்கண்ணி என்று எழுந்தவர்,செல்வி தண்ணி கொஞ்சம் மொண்டு ஊத்து என்றார்.

அவளும் கிணற்றிலிருந்து வாளியில் நீரை இரைத்தவள், இந்தாத்தைனு அங்கிருந்த துணி சோப்பை நீட்டினாள்.

அதை வாங்கிய பார்வதி, கையில் இருக்கும் கவுச்சி வாடை போக சோப்பு போட்டு தேய்த்தவர், ம் என்கவும்,செல்வியும் தண்ணியை ஊற்றினாள் .

பின்னர் உள்ளே வந்தவர், இன்னொரு அடுப்பில் மாடுகளுக்கு படைக்க, முதலில் சர்க்கரை சாதம் செய்ய உலையை வைத்தார்.

அதற்குள் செல்வி வைத்த உலை தயாராக,அங்கிருந்த அரிசி பானையிலிருந்து தேவையானதை எடுத்து,நீர் விட்டு கழுவி பானைக்குள் போட்டு மூடி வைத்தார்.

பின்னர்,அடுத்த பானையில் பச்சரிசியை கழுவி போட்டு விட்டு, குழம்புக்கு தேவையானதை அத்தையும், அண்ணன் மகளும் ரெடி பண்ணினர்,

இவர்களோடு ராதா,சீதாவும் வந்து இணைந்து கொள்ள,பேச்சுக்களோடு அனைத்தையும் செய்து முடிக்க மணி இரண்டு ஆனது.

பிரகாசம் தாத்தா, கதிர், வளவன், மற்றும் நிலவன் நால்வரும் ஏரியில் இருந்து மாடுகளை குளிப்பாட்டி ஓட்டி வந்தார்கள்.

மாடுகளை முன் பக்கம் இருக்கும் கவனையில் கட்டி விட்டு உள்ளே வந்தவர்கள், பார்வதியை பார்த்தனர்.

வாம்மா என்றார் பிரகாசம், இவனுங்களும் வாத்தை ,எப்போ வந்த என்க,காலையில வந்தேன் பா என்றார் பார்வதி.

சரிப்பு போய் துணிய மாத்திட்டு வாங்க, மாட்டுக்குலாம் பூசை போடனும் என்றார் வள்ளி அப்பாயி.

தாமரை வீடு...

காலையில் வழக்கம் போல எழுந்து, ஆளுக்கொரு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

இன்றைக்கு நான் பிரியாணி செய்யுறேன்மானு தாமரை சொல்லி விட,அவளுக்கு தேவையான உதவிகளை,கவிதாவும் அல்லியும் செய்து கொண்டிருந்தனர்.

தாமரை வீட்டில் மாடு இருந்தாலும், பெருசா அதற்குனு பொங்கல் தனியாக வைப்பதில்லை.முதல் நாள் பொங்கலிலேயே படைத்து விடுவதால், இன்று பெரிதாக வேலை ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.

வழக்கம் போல அன்பு கம்மங்காட்டுக்கு சென்று விட, சிவா தனது நண்பர்களை பார்க்க சென்று விட்டான்.

அடுப்பில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த தாமரை,என்னம்மா இன்னும் அத்தை ஃபோன் பண்ணலை என்றாள்.

அங்க என்ன சூழல்னு தெரியாமல், என்ன செய்ய தாமரை?.

இன்றைக்கு பாக்கலாம்.இல்லைனா சிவாவை நேர்ல போய் பார்த்துட்டு வரச்சொல்லுறேன்னு மகளிடம் கவிதா சொல்லிக்கொண்டிருந்ததை கேட்ட கலா அப்பாயி,என்னவா இருக்கும்??.

ஏன் நேற்று இருந்து மகள் ஒரு ஃபோன் கூட பண்ணவில்லை என்று உள்ளுக்குள் கவலையானவர் ஆத்தா மாரியாத்தா,அங்க என்ன நிலைனு தெரியலை?,"நீ தான் என் மவளுக்கு துணையா இருக்கனும்" என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top