Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கோவை மருத்துவமனை!
அழுது கொண்டிருக்கும் வேதாவிடம் வந்த நர்ஸ்,மேடம் டாக்டர் வந்துருவாங்க என்கவும்,திரும்பி பார்த்தவர்,அவர் எங்கே இருக்கார்?,அவங்க உடல் மார்ச்சுவரியில் இருக்கு.ஹாஸ்பிடலுக்கு வரும் போது இவங்க மட்டும் தான் சீரியஸா இருந்தாங்க.
"அவரோட உயிர் ஸ்பாட்லே போயிடுச்சாம்' என்று நர்ஸ் சொல்ல, அதைக் கேட்டு மயிலாவும், வேதாவும் சத்தமில்லாமல் குலுங்கி அழுதனர்."ப்ரொசூஜர் முடிச்ச பிறகு நீங்க பாடி எடுத்துட்டு போகலாம்".
ப்ளீஸ் மேடம்,வெளியில வாங்க.
டாக்டர்க்கு நான் இன்பார்ம் பண்ணனும் என்கவும்,அப்பொழுது இருவரும் பவி என்க,நான் பார்த்துக்குறேன் என்றார்.
மருது அங்கு இல்லாததை பார்த்த வேதா,எங்க மருது என்இ?,அவன் வெளியே போயிட்டான்மா.
ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்த மருது,வண்டியில் ஏறியவன் கண்களை மூடி,ஸ்டேரிங் மேல் சாய்ந்து கொண்டான்."கற்பனையிலும் நடக்காத ஒரு விஷயம் இப்பொழுது தன் வாழ்க்கையில் நடந்ததை,அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை".
தன் மன ஆசைகள் தெரிந்தும்,தாயே தன்னை இந்த நிலைமையில் தள்ளிவிட்டாரே,"மூன்று வருடக்காதல், ஒரே நிமிடத்தில் மண்ணா போய்விட்டதேயென்று குலுங்கி அழுதான் அந்த ஆண்மகன்".
தாமரை கூட எப்படியெல்லாம் வாழனும் என்று நினைத்தேன்,"என் ஆசையெல்லாம் கானல் நீராய் போய்விட்டதே...."
அதும்..,"பவியை மனைவியாக தன்னால் ஜீரனிக்க முடியவில்லையே??",என்று வாய்விட்டு சொல்லி அழுது கொண்டிருந்தான்.
அப்பொழுது, அவன் செல்லிற்கு கால் வந்தது.தற்பொழுது அழைப்பை ஏற்கும் மனநிலையில் அவனில்லை.
அதனால் அதை கண்டுகொள்ளாமல் தன் வேதனையிலே மூழ்கியிருந்தவன் செல்லிற்கு,மீண்டும் கால் வந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் கோவமானவன், யாரென்று திட்ட ஃபோனை எடுத்து பார்க்க,அதில் வரும் பெயரை பார்த்து கதறினான்.
சீமக்கரை-கதிர் வீடு
ஜான் சொன்னதை கேட்ட வேலு, பைத்தியம் எதாச்சு பிடிச்சிருக்கா?.
அறிவு கெட்ட பயலே,உனக்குலாம் வெட்க்கமா இல்லையானு வாய்க்கு வந்தபடி கதிரை திட்டிக் கொண்டிருந்தான்.
"அப்பொழுது,அவளை நான் பார்த்துட்டேன் டா மச்சான் என்றான் கதிர்".
எவளை?என்று ஜான் கேட்க,அது வந்துடா பங்காளி...,என கதிர் சொல்ல ஆரம்பித்தான்.ஹப்பாஆஆஆஆ... அன்னம் போல நடந்து வரும்"அழகு இருக்கே...நெஞ்சுலாம் அப்படியே ஆட்டம் கண்டுடிச்சிடா".
அதும் காத்துல அவ வச்சிருந்த பூவோட வாசனை,அப்படியே வந்து கும்முனு வீசுச்சி பாரு ஆஹா...அதோட, அலங்காரம் பண்ணுன அம்மன் சிலை போல,கிட்ட வந்தவளை பார்த்ததும்னு கதிர் சொல்ல போக...அடேய்.... நிப்பாட்டுடா மானம் கெட்டவனே.
அண்ணன்காரன் டா நானென்று வேலு முறைக்க,அவளுக்கு அண்ணன்,ஆனால் எனக்கு நீ மச்சான் தானேடா என்றான்" .
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஜான்,ஒழுங்கு மரியாதை இரண்டு பேரில் யாராச்சு ஒருவர், விஷமத்தை சொல்லி தொலைங்கடா..
கொரியன் படம் பார்க்கிற போலவே இருக்கு.
"வேலு,ம்ம்...உன் பங்காளி காதல் கடல்ல விழுந்துட்டான்".
என்னாஆஆஆஆ நீயுமாடா என்க, அவன் சொன்னதை கேட்ட வேலுவோ,எதேஏஏஏ நீயுமாவா?.
டேய்...உனக்கு ஒரு கதை இருக்காடா?
"யாருடா?அர டவுசரா,இல்ல முக்கா பனியனா?என்கவும்,ச்சி ச்சி...பரதேசி பயலே...".ஏன் டா இப்படி?என்றவன், எல்லாம் நம்ப ஊர் புள்ளை தான். நேற்று தான் டா பார்த்தேன்.சும்மா..." கும்முனு பார்பிடால் போல இருந்தாள்"
என்னடா சொல்ற?
நேத்து ஒரு நாள் பார்த்ததே உனக்கு காதல் வந்துடுச்சானு வேலு கேட்க, ஆமாடா என்று ஜான் வெட்கப்பட்டான்.
டேய்...டேய்...தயவு செய்து நாலு அடி வேண்டுமானாலும் அடிச்சிக்க.இப்படி வெட்கப்படாதடா?இதெல்லாம் என்னால தாங்க முடியலைடா.
என் கதையை அப்புறம் சொல்றேன்.என் பங்காளி கதை என்ன சமாச்சாரம்?,அதை சொல்லு.
குத்து கல்லு போல உன் எதிரில் தான இருக்கான்?அங்கையே கேட்டு தெரிஞ்சுக்க.திரும்பவும் அதை பற்றி பேசி,என்னால சாக முடியாதென்றான்.
கதிரு....அடேய் கதிரு....என்க,கண்ணை மூடி தாமரையின் நினைவில் இருந்தவன்,ம்ம் என்றான்.
என்ன சங்கதி என்று ஜான் கேட்க?, தாமரையை இருட்டில் இடித்ததிலிருந்து, இன்று நடந்த வரை அனைத்தையும் சொல்லி முடிக்க,ச்சூஊஊஊஊஊ....
இவ்வளவு அக்கப்போறாடா?என்றபடியே சேரில் சாய்ந்து அமர்ந்தவன் இரு ராசா முதல்ல அம்மா குடுத்த சுடு தண்ணிங்களே குடிச்சிக்கலாம் என்றவாறே கதிர் கையில் ஒன்றை கொடுத்து விட்டு, டேய் இந்தாடா என வேலுவிடம் நீட்ட,குடுடா என்று வாங்கிக்கொண்டான்.
பின்ரர் தனக்கான காஃபியை குடித்தவன்,சரி.. என்ன முடிவு பண்ணிருக்க என்க,எதைப்பற்றி? என்றான் கதிர்.
எதேஏஏஏஏ....என நெஞ்சை பிடித்தவன், இவ்வளவு நேரம் சொன்னியே, அதைப்பற்றி தான்டா என்று ஜான் சொல்ல,அதற்கு கதிரோ இதுல முடிவெடுக்க என்ன இருக்கென்றான்.
நண்பனின் வார்த்தையைக் கேட்டு வேலுவை பார்க்க,என்ன பார்த்து ஒன்னும் புண்ணியம் இல்லை பனைமரம்.நீ தானே ஆசைப்பட்ட தெரிஞ்சுகிறதுக்கு,அப்போ,அனுபவி.
அப்பொழுது கதவை தட்டி விட்டு உள்ளே வந்த நிலவன்,மூணு பேரையும் சாப்பிட கூப்பிடுறாங்க என்கவும் இதோ வரோம்டா என்று சொல்லி விட்டு, மூவரும் எழுந்து நிலவனோடு கீழே சென்றனர்.
வீட்டில் எல்லாரும் இருப்பதை பார்த்த ஜான்,அப்பாயி,காலைல ஒரு பேக் கொடுத்தனே என்க?,அந்த ரூம்ல தான் இருக்கு.போய் எடுத்துக்க அப்பு.
பேக்கை எடுத்துட்டு வந்தவன், அவர்,அவர்களுக்கு வாங்கிய பொருட்களை எடுத்து கொடுத்தான்.
மீதமிருந்ததை பார்த்து, இது பாரு அத்தைக்கும்,மாமாவுக்கும் என்க,சரிடா காலையில கொடுத்துக்கலாம் என்றனர்.
ம்ம்..என்று சொல்லி விட்டு,இருடா மிலிட்டரிக்கு ஒரு போன் பண்ணிக்கிறேன்.வந்ததுல இருந்து போனே பண்ணல என்க,எல்லாம் பேசியாச்சு,இப்ப தான் உங்க சித்தப்பன் பேசிச்சு.மாட்டுப் பொங்கலுக்கு ஜூலியும்,லாரன்ஸும் வந்துடுவாங்கப்பு போய் சாப்டுங்க.நாளைக்கு வேலை அதிகமா இருக்கு என்றவர்,எம்மாடி, வந்துட்டானுங்க பாரு மூணு பேரும் என்று மருமகளுங்களுக்கு குரல் கொடுத்தார் வள்ளி அப்பாயி.
பின்னர் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு,நண்பர்கள் மூவரும் கதிரின் ரூமிற்கு வந்தனர்.வேலுவின் பாதி துணிகள், கதிரின் கபோர்டில் இருக்கும்.
சரிடா பனைமரம்... இப்போ உன் விஷயத்தை சொல்லென்று தரையில் படுத்துக்கொண்டே வேலு கேட்க, "அதுவாடா என்று சிரித்தான்".
அப்படி என்னடா ஜோக் சொல்லிட்டேன், உன் பங்காளி இப்படி சிரிக்கிறானென்று கதிரிடம் கேட்க, கொஞ்சம் பொறுமைடா,பொறுமை என்றான்.
டேய்....சொல்லிட்டு சிரிடா தடிமாடுனு வேலு திட்ட,ம்ம் என்றவாறே...தன் காதல் பற்றி நண்பர்கள் இருவரிடமும் சொல்லத் தொடங்கினான் ஜான்
நான்,மிலிட்ரி, ராமன் அங்கிள் மூன்று பேரும் தான் இன்டர்வியூ பண்ணிட்டு இருந்தோம் டா.திடீர்னு ஃபோன் வர, மிலிட்ரி எஸ் ஆகிட்டார்.மத்தவங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் ரெடி பண்ண, அங்கிளும் போயிட்டார் டா.நான் தான் மீதம் இருந்தவங்களை இன்டர்வியூ பண்ண வேண்டிய சூழல் டா.
கதவை திறந்து ஒருத்தி வந்தாள்.அவ மேல சூரிய ஒளி பட்டு அவ்வளவு பள பளனு மச்சான்.....
ஏண்டா...வார்னிஷ் அடிச்சிட்டு வந்துருப்பாளோனு வேலு கேட்க,ஏன் பக்கினு ஜான் முறைக்க,கதிருக்கு சிரிப்பு வந்தது.
சரி ஆரம்பிடா..ப்படியே...நம்ப கடலை மாவு கலர்ல,பொம்மை போல வந்தவள பார்த்ததும் உள்ளுக்குள் என்னென்னமோ பண்ணுச்சிடா...
கொழுப்பு நிண்டிருக்கும் என்று மீண்டும் வேலு கவுண்டர் கொடுக்க,செருப்பு பிஞ்சிடுமென்று ஜான் முறைக்க,ஓகே... நீ தொடங்கு என்று வேலு கையை அசைக்க, அவ கிட்ட என்ன கேள்வி கேட்கனு தெரியலை.
சரினு...சின்ன புள்ளைங்கள் கிட்ட கேட்கும் கேள்வி போல,முதலமைச்சர் யாரு?, தேசிய விலங்கு எது,கொடில எத்தனை கலர் இருக்குனு பேச்சை வளர்த்தேன் என்கவும்,வேலுவோ த்தூஊஊஊ என்று துப்பினான்
அவ பைலை படிச்சி ஊர் பேரு தெரிஞ்சதும் உள்ளுக்குள்ள குத்தாட்டம் டா என்க,அப்படியா???,எந்த ஊர்காரிடா?
நம்ப ஊர் தான் டா.
நம்ப ஊரா???, யார்டானு கதிர் கேட்க, நம்ப ஸ்கூல் சீனியர் தேவோட தங்கச்சி தேவி என்க,எதேஏஏஏஏஏ என்று படுத்திருந்த வேலு எழுந்து அமர்ந்தான்.
என்னடா சொல்றனு கதிர் கேட்க, ஆமாடா.தேவி தான் நேற்று வேலைக்கு வந்தாள் என்கவும் அதற்கு கதிரோ ஓஓஓ என்றான்.
ஆமா... நீ பார்த்தது சரி.அந்த புள்ளை உன்னை பாக்கனுமேனு வேலு கேட்க, ஏண்டா அவளுக்கு மாலைக்கண் வியாதியா?.
அட துப்புகெட்டவனே....உன்னை அந்த புள்ளை கண்டுகிட்டாளா???என்கவும், எங்கேடா?,ஹேண்ட்சமா ஒருத்தன் எதிர்ல இருக்கேன்,என்னமோ கல்லு, மண்ண பாக்குற போல இருக்காடா.
எப்படிடா உன்னை பார்க்கும்?.அந்த புள்ளை கவனம் எங்கே?,யார் மேல இருக்கோனு வேலு சொல்ல,எதிர் புறமாக சேரில் உட்கார்ந்திருந்த கதிர், வேலுவின் இடுப்பில் ஓங்கி ஒரு உதை விட்டான்.
ஏண்டா மாப்புனு வேலு கேட்க, கால்ல சுளுக்குடா, அதான் நீட்டி பார்த்தேன்.
ஆஹான்...,நம்பிட்டேன்டா நம்பிட்டேன் என்றவன், இன்னும் எதாவது இருக்காடா பனைமரம்? ம்ம் இருக்குடா. ஒரேடியா சொல்லி தொலைடா. பிட்டுபிட்டா சொல்லி சாவடிக்காதடா.
அந்த பிள்ளையவே கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்டா என்று நண்பர்களிடம் ஜான் சொல்ல, நல்ல விஷயம் தான்டா.
நல்ல பொண்ணு தான்.பெருசா வெளியேலாம் வராது.வீட்டில் தான் இருக்கும்.கோவிலுக்கு கூட அவங்க அம்மா கூட வரும்.மற்றபடி வெளியில பார்க்க முடியாது.
அப்படிப்பட்ட பிள்ளை,இப்போ திடீர்னு வேலைக்கு வந்து இருக்கே இது ஆச்சரியமான விஷயம் தான்டா என்றான் கதிர்.
எல்லாம் எனக்காக தான் போலடானு ஜான் சொல்ல,ஆமாடா ஆமாம் என்ற வேலு,போதும் ராசா...இனி தூங்கலாம்டா.ம்ம் என்றபடியே லைட்டை ஆப் பண்ணி விட்டு,நண்பர்கள் மூவரும், சில வருடங்களுக்கு பிறகு ஒன்றாய்,ஒரே இடத்தில்,படுத்து தூங்கத் தொடங்கினர்.