Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
தாமரை வீடு!
தாமரைக்கு சிலது மட்டும் நினைவில் இருக்கின்றது. நிலா வெளிச்சத்தில் வீட்டினர் ஒன்றாக அமர்ந்து கொள்ளும் போது,பாட்டி பிடித்து கொடுக்கும் உணவு உருண்டை சாப்பிட்டது,சிவா இரண்டு வயது பையனாக இருக்க,அவனை தூக்கி கொண்டே சுற்றுவதும்,மழையில் முற்றத்தில் நின்று கப்பல் விட்டது, இப்படி சில விஷயங்களை மட்டும் அவள் மறக்காமல் இருக்கின்றாள்
"அதே வீடு தான்,ஆனாலும் வீட்டினுள்ளே சில மாற்றங்கள் நடந்திருக்கிறதை பற்றி ஏற்கெனவே அவளது அப்பாவும் அம்மாவும் ஊருக்கு வரும் போது சொல்லியிருக்கின்றனர்.
"போய் குளிச்சிட்டு வா தாமரை சாப்டலாம் என்ற கவிதாவிடம், கொஞ்ச நேரம் போகட்டும்மானு சொல்லும் போது,அவளின் மொபைல் ரிங்டோன் சத்தம் கேட்க, அச்சோ என தலையில் தட்டிக்கொண்டவள்,ஓடிப்போய் போனை எடுப்பதற்குள் கட் ஆனது, பின்னர்,மீண்டும் வந்த அழைப்பை ஏற்று சாரி சாரி வேதுமா.
"அந்த பக்கத்தில் இருந்த வேதவள்ளியோ, மருமகளை திட்டி விட்டு,கவிதாவிடம் போனை கொடுக்க சொல்ல,அம்மாவிடம் செல்லை நீட்டினாள்,அதை வாங்கியவர் நாத்தனாரிடம் பேசிக்கொண்டே தனது வேலையை தொடர்ந்தார் கவிதா.
"அப்பொழுது,வீட்டு வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டு வெளியே வந்து பார்த்தாள் தாமரை.அங்கு நின்ற வளவனை பார்த்தவளுக்கு அவன் யாரென்று தெரியவில்லை என்பதால்,சொல்லுங்க யார் வேண்டும்?..
"அவளை பார்த்தவனோ யார் இந்த பொண்ணு புதுசா இருக்கு?,அதும் நம்ப அத்தை வீட்டில்? என்று யோசனையானான்.ஹலோ உங்களை தான் யாருங்க நீங்க? என மீண்டும் தாமரை கேட்கும் போதே கவிதாவும் வெளியே வந்தார்.
"அங்கிருந்த அண்ணன் மகனை பார்த்தவர்,வாப்பா வளவா,ஏன் வாசல்லையே நிக்குற?என்றவருக்கு,ம்கும் உரிமையா உள்ளே வர போலவா எல்லாம் செஞ்சிருக்குங்க பெருசுங்க என்று ஆதங்கப்பட்டவன்,கையிலிருந்த பையை அவர் முன் நீட்டி,சீதாம்மா கொடுத்துச்சி.
"அதை வாங்கியவர்,நீ வேலைக்கு போகலையா வளவா? என்க, இன்றைக்கு வார நாள் லீவ். அதான் உன்னை பாக்கலான்னு வந்தேன் என்றவன்,இது யார் என கேள்விக்குறியாக தாமரையை பார்த்து கண்ணசைக்க,அப்பொழு தான் கவிதாவிற்கு நினைவு வந்தது,தனது பெரிய மகளைப் பற்றி இன்னும் அண்ணன் மகனிடம் சொல்லவில்லை என்பது.
யாருன்னு தெரியலையா அப்பு? என கேட்க,ம்கும் தெரிஞ்சிருந்தால் நான் ஏன் இப்படி யோசனையோடு இருக்க போறேன்.மருமகனின் பேச்சை கேட்டு சிரித்தவர்,நம்ப தாமரை பா.
"தனது அத்தை சொன்னதை கேட்டவன்,என்ன தாமரையா என்று அதிர்ந்தவன்!,அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு, நிஜமாகத்தான் சொல்றியா? என்றவனுக்கு,என் பொண்ண பத்தி நான் ஏன் பொய் சொல்ல போறேன்? என்றவர், நிஜமாலே தாமரையேதான்.
"பிறகு,மகளிடம் என்னுடைய இரண்டாவது அண்ணன் பையன் வளவன்டா, உன் மாமா பையன் தானென்று கவிதா சொல்ல. அவளுக்கு மாமாக்கள் இருவர் பற்றி தெரியும்,ஆனால் அவர்களுக்கு இப்பொழுது எத்தனை பிள்ளைகள் என்று தெரியாது?.
அவள் சிறு வயதாய் இருக்கும் போது வளவனும்,கதிரும் அவளை விட கொஞ்சம் பெரியவர்கள் அதனால்,அவர்கள் இருவர் இருப்பது மட்டும் தெரியும்,சிறுவயதில் பார்த்ததால் அவளுக்கு அந்த முகமும் மறந்து விட்டது.
என்ன கவிதாஆஆஆ,இத்தனை வருஷமும் மகளை பொத்தி பொத்தி அண்ணன் மகன்களிடம் காட்டாமல் வளர்த்திருக்க போல?? என்று வளவன் சொல்ல, பின்ன இல்லையா அப்பு என்று சிரித்தவர்,தாமரை அடுப்புல வர காப்பி இருக்கு, போய் எடுத்து வந்து கொடுடா என்க,அதை கேட்டவளோ, சரிம்மா என்று உள்ளே சென்றவள், சிறிது நிமிடத்தில்,ஒரு டம்ளரில் வரகாப்பியை எடுத்து வந்து வளவனின் முன்பு நீட்டினாள்.
"அதை வாங்கி குடித்து முடித்தவனோ,இந்த விஷயம் தாத்தா பாட்டிக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க என்றவன், நல்லாயிருக்கியா தாமரை?என்கவும்,அவனை பார்த்து லேசாக சிரித்து தலையசைத்தவள், தாத்தா, பாட்டி,மாமாக்கள், அத்தைங்களெல்லாம் நல்லா இருக்காங்களா? என்றாள் .
எல்லாரும் நல்லா இருக்காங்க, உன்னை பார்த்து தான் ரொம்ப வருஷம் ஆகிட்டு.வேதவள்ளி சித்தி நல்லா இருக்காங்களா?
"ம்ம்,அத்தையும் நல்லா இருக்காங்க".
அதற்கு ஹம் என்றவன், என்ன படிச்சிருக்க?என்க, தன் படிப்பை பற்றியும், கனவை பற்றியும் அவள் சொல்ல, அதையெல்லாம் கேட்டவன்,ஆல் த பெஸ்ட் தாமரை என்றான்.
மேலும் சிறிது நேரம் அங்கு பேசியிருந்து விட்டு,அத்தையிடமும், அத்தை மகளிடமும் சொல்லிக்கொண்டு,அங்கிருந்து தனது வீட்டுக்கு கிளம்பினான்.
இரண்டு குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை சுத்தமாக இல்லை என்றாலும்,வளவன் மட்டும் அத்தை வீட்டோடு பேச்சு வார்த்தையில் தான் இருக்கிறான்.
வீட்டில் இருப்பவர்களுக்கு அரசல் புரசலாக தெரிந்து,வளவனை கண்டிக்க,என் அத்தை என் ரத்தம் நான் இப்படிதான்,உங்களுக்கு புடிக்கலைனா பேசாதீங்க என்று வீட்டில் சத்தம் போட்டான்.
"கதிரும் அவன் இஷ்டம் விடுங்கப்பா என்று சொல்லி விட்டு தம்பியை பார்க்க, அண்ணனின் பார்வையை கண்டவன், என்னண்ணா என்க,கதிரோ ஒன்னும் இல்லைடா என்றான்.
"சீதாவும்,ராதாவும் வீட்டில் எந்த தின்பண்டங்கள் செய்தாலும், அதைப்போலவே வயலில் விளையும் தானியங்களையும்,தங்கள் மரத்தில் காய்க்கும் மாங்காய்கள் என்று, கிடைப்பவைகளையெல்லாம் வளவனிடம் கொடுத்து அனுப்புவார்கள் இருவரின் கணவருக்கு தெரியாமல் கவிதாவிற்கு.
முதலில் அதை வாங்க மறுத்து விட்டார் கவிதா.வளவன் தான் பேசி ஒரு வழியாக பிறந்த வீட்டிலிருந்து வரும் பொருட்களை வாங்கி கொள்ள தொடங்கினார். அன்பழகனுக்கு இதை பற்றி தெரிந்தாலும் கண்டு கொள்ளவில்லை.
அம்மா நான் குளிச்சிட்டு வரேனென்று சொல்லிய மகளிடம் அவளுக்கான அறையை கவிதா காட்ட, ம்ம் என்றவாறு ரூம் கதவை திறந்து உள்ளே வந்தவள், அங்கிருந்த மேஜையில் லக்கேஜை வைத்து விட்டு, மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு, உள்ளே இருக்கும் குளியலறைக்கு சென்றாள்.
அரை மணி நேரத்தில் குளித்து முடித்து,வேறு உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவள், அங்கிருந்த சாமி அறைக்கு சென்று வணங்கி விட்டு, முற்றத்திற்கு வந்தவள் தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து முடியை காய வைத்தாள்.
"அப்பொழுது, கவிதா என கூப்பிட்டுக்கொண்டு இரண்டு பாட்டிகள் உள்ளே வந்தனர். அவர்கள் சத்தத்தில் சமையல் அறையிலிருந்து வெளியே வந்த கவிதா,இருவரையும் பார்த்து வாங்கம்மா என்க,கலா இன்னும் வரலையா ஆத்தா என கேட்டுக்கொண்டே அங்கிருந்த முற்றத்தில் உட்கார்ந்தனர் பாட்டிகள் இருவரும்.
"அத்தை இன்றைக்கு இரவு தான் வருவாங்கம்மா என சொல்லிக்கொண்டே, இருவருக்கும் வரகாபியை எடுத்துக்கொண்டு வந்த கவிதா,இந்தாங்கம்மா என்று கொடுக்க,குடுத்தா என வாங்கி குடித்த இருவரும், யாரு ஆத்தா இந்த புள்ள?,புதுசா இருக்கேனு பார்த்துட்டு போகலானு வந்தோம் என்றனர்.
"யாருனு தெரியலையாங்கம்மா? என்றவர்,பெரிய புள்ள தாமரை தான் என்க.அதைக்கேட்ட பாட்டிகள், என்னாஆஆ வேதாகிட்ட இருக்குற புள்ளையா? என்க, ஆமாம் மா என்றவர், தாமரை என்று கூப்பிட, முற்றத்து வெயிலில் தனது நீண்ட முடியை உலர்த்தி கொண்டிருந்தவளோ அம்மாவிடம் வந்தாள்.
இவங்க உனக்கு பாட்டி தான் என்று சொல்ல,இருவரையும் பார்த்து இதழ் பிரியாமல் சிரித்தவளை, எம்புட்டு பெரிய புள்ளையா வளர்ந்துட்ட என்று சொல்லி நெட்டி முறித்தனர்.
வேதா நல்லா இருக்காளாம்மா? என பாட்டிகள் தாமரையிடம் கேட்க, அத்தம்மா நல்லா இருக்காங்க பாட்டி என்றாள்.ம்ம்... வருஷமும் ஓடி போய்ட்டு வேதாவை பார்த்து என வருத்தப்பட்டனர் இருவரும்.
பின்னர்,அம்மா வாங்க சாப்டலாம் என்றவர், சமையலறைக்கு சென்று உணவோடு வந்தவர்,மூன்று தட்டில் கேழ்வரகு களியையும், நாட்டுக்கோழி குழம்பையும் ஊற்றி, மூவருக்கும் கொடுத்தார்.
நீயும் வாயேம்மா சாப்ட என்ற தாமரைக்கு,உங்க அம்மாகாரி என்னைக்கு ஆத்தா ஊட்ல எல்லாரும் சாப்டாம சாப்டுறுக்கா? என்றார் பாட்டிகளில் ஒருவர்.
நீ சாப்டுமா, அங்க வயல்ல இருப்பவங்களுக்கு சாப்பாடு எடுத்து போக சிவா வந்துருவான், பிறகு நான் சாப்டுறேனென்று அவர் சொல்லும் போதே,அம்மாஆஆஆ என கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்த சிவா,அங்கிருந்த அக்காவை பார்த்து, தாமரை என அதிர்ந்தான்!.
நானே தான்டா என்றவள், எப்படி இருக்கடா?, செமஸ்டர் நல்லா எழுதியிருக்கியா?. ம்ம், வரேன்னு சொல்லவே இல்லையே என்றவன், அத்தை நல்லா இருக்காங்களா?
என கேட்டுக்கொண்டே அக்காவின் அருகில் அமர்ந்தான்.
நர்ஸம்மா நல்லா இருக்காங்கடா என்று சிரித்தவள், நானும் உங்கூட வயலுக்கு வரேன் என்று சொல்ல, இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலை முடிஞ்சிருமே என்றான்
ஓஓ... என்றவள், நீயும் சாப்டேன் என்க, இருக்கட்டும் நான் மல்லாட்டை திடல்லயே சாப்டுக்குறேன் என்றவன், அம்மா இன்னும் என்ன பண்ணுற?என்க, இதோப்பா என்றார் கவிதா.
ஆமா... இந்த ரெண்டு ஜிகிடிங்களும் எங்கே வந்தாளுங்க என பாட்டிகளை பார்த்து சிவா கேட்க,எடுபட்ட பயலுக்கு எங்களை வம்பு பண்ணுறதே வேலை என்றனர் பாட்டிகள் இருவரும்.
ஆமா ஆமா....என்றவன், கடிக்க பல்லு இல்லை இதுல கோழி எலும்பு கேட்க்குதோ என சொல்லிக்கொண்டே, பாட்டி ஒருவரின் கன்னத்தில் குத்த,அவர் வாயில் இருந்த கோழிக்கறி துண்டு வெளியே தெரித்து விழ, ஹாஹாஹா என சத்தமிட்டு சிரித்தான்.
"அதை பார்த்த தாமரைக்கும் சிரிப்பு வந்துவிட்டது. இருவரும் சிரிப்பதை பார்த்த பாட்டி, அங்கிருந்த தண்ணி சொம்பால் அவன் தலையில் தட்ட, போடி ஜிகிடி என்றான்.
அப்பொழுது... தம்பீ... என கண்டன குரலோடு வந்த கவிதா, எத்தனை தடவ சொல்ல, பெரியவங்களை இப்படி பேசக்கூடாதுனு?என மகனை கண்டிக்க, விடுத்தா...விடுத்தா, சின்ன பயல், எங்க கிட்ட தானே பேசுறான் என்றார் பாட்டியில் ஒருவர்.
ஆமாம்மா.... நீங்க தான் இவனை இந்த அளவுக்கு கெடுத்து வச்சிருக்கீங்க..அதற்கு, அவர்களோ, எங்க பஞ்சாயத்துல உன்னை யாரு தலையிட சொல்லுறா? அப்படி தானே பேரான்டி என்க,அதே தான் ஜிகிடி என்றான்.
எப்படியோ போங்கள் என்றவர், உணவு இருந்த பிரம்பு கூடையை கொண்டு வந்து மகனிடம் கொடுக்க,சரிக்கா மதியத்துக்குள்ளே வந்துருவோம், இப்ப நான் அவங்களுக்கு இதை எடுத்து போறேனென்று சிவாவும் அங்கிருந்து சென்றான்.
கண்மணி வருவாள்..