• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நீலகிரி....

இதுவரை தன் அம்மா சொன்னதையெல்லாம் கேட்டவனுக்கு தன்னை மறுப்பதற்கு இனத்தை தவிர வேறு எதுவும் பெரிதாக காரணங்கள் இருக்காதென்பது புரிந்தது.

தம்பி.....என்ன நடக்கும்னு இருக்கோ அந்த மலையம்மன் புண்ணியத்தில் அது தான் பா நடக்கும்.வீணா மனச போட்டு குழப்பிக்காதப்பா என்றவர், மதியத்துக்கான உணவை சமைக்க தொடங்கினார்.

" மேய்சலுக்கு ஆடு,மாடுகளை கூப்பிட்டு போயிருந்த மருதுவின் தந்தை மூக்கையனோ சாப்பிட வந்தவர் ஏட்டி...சோறு ஆக்கிட்டியா?

செத்த இருங்களென்றவர், சமைத்தவைகளை வேதாவிற்கு எடுத்து வைத்து விட்டு,மருதுவையும் கூப்பிட, காலையில் சாப்பிட்டதே செரிக்காத போல இருக்குமா,பிறகு சாப்டுறேன் என்றவன் மரத்து நிழலில் இருக்கும் கட்டிலில் படுத்து விட்டான்.

கணவருக்கு உணவை பரிமாறியவர், நடந்த விஷயத்தை சொல்ல,கல்யாணத்திற்காவது ஆத்தாளும் மவனும் கூப்பிடுவீங்களா?, இல்லையா?.

ஏஞ்சாமி....இப்படி என்று மயிலா பதற, அட சும்மா கேட்டேன்டி.தாமரையோ, இல்லை பவியோ இரண்டு பேர்ல யாரு நம்ம ஊட்டுக்கு மருமவளா வந்தாலும், இல்லை இரண்டு பேருமே வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் புள்ளனு தனது மனதில் இருப்பதை சொன்னார்.

ஏதேஏஏஏஏ...ரெண்டு பேருமா!

ஆஹான் அய்யா மனசுல இப்படி வேற எண்ணமிருக்கோனு கோவமாக கேட்க, ஏட்டி...சும்மா சொன்னேன் டி.இனி தான் எனக்கு மருமவள் புதுசா பொறக்க போறது இல்லை.

"அதனால்....பாரத்தை ஆத்தா மேல போடு.அவளுக்கு எதை குடுக்கனும்னு தெரியும்"என்றவர்,நான் போய்டு வரேன் புள்ளனு அங்கிருந்து சென்றார்.

வேதாவுக்கு எடுத்து வைத்த உணவு கூடையோடு வெளியே வந்தவருக்கு, மருத்துவமனையின் வாசலில் வண்டி நிற்பது தெரிய,அப்போ வேதாம்மா அங்க தான் இருப்பாங்க என நினைத்துக்கொண்டு அங்கே செல்ல, வேதாவும் இன்னொரு செவிலியரும் வந்திருந்த மருந்துகள் சரியாக இருக்கா என்று லிஸ்டில் செக் பண்ணி கொண்டிருந்தனர்.

"நர்சம்மா என்று ஜன்னல் வழியாக மயிலா கூப்பிட,வேலையில் கவனமாக இருந்தவர் குரல் வந்த திசையில் திரும்பி பார்க்க,அங்கே மயிலா நிற்பது தெரிந்து,உள்ளே வா என்று சைகை காட்ட,ம்ம் என்று தலையசைத்து அங்கிருந்து முன் பக்க வாசல் வழியாக உள்ளே வந்தவர்,சாப்பாடு கொண்டு வந்தேன்.

தனது பேகில் இருந்த வீட்டு சாவியை எடுத்து மயிலாவிடம் கொடுத்து தலையசைத்தார்.

வேலையில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் எந்த பேச்சையும் வேதா வைத்துக்கொள்ள மாட்டார் கவனம் சிதறும் என்ற எண்ணம் தான்.சாவியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வேதா வீட்டிற்கு சென்றவர்,எடுத்து வந்த உணவுகளை ஹாட் பேக்கில் மாற்றி வைத்து விட்டு,அந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் அங்கே போய் சாவியை கொடுத்து விட்டு தனது வீட்டிற்கு சென்றார்.

"மகனின் அருகில் வந்தவருக்கு அவன் தூங்க வில்லை என்பது தெரிய,உள்ளே சென்றவர்,மகனுக்கு பிடித்த மல்லி டீயை போட்டு எடுத்து வந்தவர்,அய்யா மருது என்க,கண்ணை திறந்தவனிடம் இதை குடிப்பா.

"கட்டில் மேலிருந்து எழுந்து அமர்ந்தவன் தாயின் கையிலிருந்த டம்ளரை வாங்கி குடிக்க,அதன் சுவை வழக்கம் போல அவன் மனநிலையை இயல்பாக்கியது. அம்மா...அங்கேயும் இந்த பொடி தீர்ந்துடிச்சிமா.அதுக்கு என்னப்பா, அரைச்சிட்டா போகுது.

" தம்பி... என்க,சொல்லும்மா.பின் மூக்கையனிடம் சொன்னதையும், அதற்கு அவர் சொன்ன பதிலையும் கேட்டவன் ஹாஹாஹா...என மனம் விட்டு சிரித்தவன்,உன் புருஷனுக்கு குசும்பு பாறேன் மா.

ஒருத்திக்கே வழியில்லையாம்,இந்த லட்சணத்தில் ரெண்டா... அய்யோஓஓ அய்யோ என்றவன்,ம்மா...உன் புருஷற் சொன்னதை மறந்தும் அந்த சண்டகோழி கிட்ட சொல்லிடாதே, அவ்வளவு தான் சாமியாடிடுவாள்.

மகன் சொன்னதை கேட்டு மயிலாவிற்கும் சிரிப்பு வந்தது.காலையில் விளையாட போன சின்ன மகன் இப்பொழுது தான் வீட்டிற்கு வருவதை பார்த்தவர் எழுந்து வீட்டிற்குள் சென்று, தட்டில் சாப்பாடு போட,அம்மா பசிக்குது என்று சின்னவனும் வீட்டிற்குள் வந்தான்.

" ஏம்பா...எப்போ போனவன் நீ, இவ்வளவு நேரம் இல்லாமல் இப்போ தான் பசி கண்டுது போலனு சொல்லிக்கொண்டே அவனுக்கான சாப்பாட்டு தட்டை கொடுக்க, வாங்கியவன் வேக வேகமாக அள்ளி சாப்பிட புரையேறியது.

"பார்த்துடா என்றபடியே உள்ளே வந்தவன் தம்பி தலையில் ஓங்கி தட்ட, படுபாவி பயலே,இதான் சாக்குனு எப்படி அடிக்கிறான் பாரென்று உள்ளுக்குள் அண்ணனை திட்டிக்கொண்டான்.

தாமரை வீடு....

கணவர் சாப்பிட்டு முடித்த பிறகு கவிதாவும் அமர்ந்து சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்தவர்,பூப்பறிக்கும் கூடையோடு தோட்டத்திற்குள் சென்று,அங்கே பந்தலில் பூத்துக்குலுங்கும் மல்லிகை பூவை பறித்து எடுத்து வந்து பூ கட்டிக்கொண்டே டீவி பார்த்தார்.

நேரம் ஐந்து ஆகி விட்டது என்பது கடிகாரத்தில் உள்ள மணி சத்தத்தில் தெரிய,கட்டிய பூக்களை கவரில் போட்டு முடிந்தவர்,அதை ஃப்ரிஜ் மேல் வைத்து விட்டு,டீ போட, தாமரையும் தூங்கி எழுந்து வெளியே வந்தாள்.

அதைப்போல கடலை மேட்டில் இருந்த நால்வரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும் சேர்த்தே டீ வைத்ததால் அனைவருக்கும் டம்ளரில் ஊற்றியவர், எடுத்து வந்து கொடுத்தார்.

அப்பொழுது... அத்தை...என கவிதா கூப்பிட சொல்லுத்தா என்றார் கலா அப்பாயி.நம்ப தாமரைக்கு ஒரு வரன் வந்துருக்குனு வேதா சொல்லுச்சி.

அதைக்கேட்ட நால்வருக்கும் மகிழ்ச்சியாக,என்னத்தா சொல்லுற?

தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள், அம்மாஆஆ என்க,நம்ப மருதுக்கு தான் பொண்ணு கேட்டுறுக்காங்க.என்னா மருதுக்கா என்று மீண்டும் அதிர்ந்தவள், என்னம்மா சொல்லுற நீ?.

பின்னர் வேதா போன் பண்ணியதை பற்றி சொல்லி முடிக்க,நல்ல பையன் தான்.நீங்களாம் சொன்னதை வைத்து குடும்பமும் நல்லதாக தான் தெரியுது என்று சிவசாமியும்,கலாவும் தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.

சிவாவிற்கும்,அல்லிக்கும் மருதுவை தெரியும் என்பதால் எங்களுக்கும் ஓகே என்று சொல்ல,நீ என்னம்மா சொல்லுற என்றார் அன்பு?.தந்தை அப்படி கேட்டதும் அவளுக்கு சற்று முன்பு ஏரியில் நடந்ததும்,அன்று இரவு மோதி விழுந்தது நினைவு வந்தது.

உனக்கு புடிக்கலைனா நீ தாராளமாக சொல்லுடா என கவிதா கேட்க,அத்தை என்ன சொன்னாங்கம்மா?

வேதாக்கும் சம்மதம் தானாம் உன் விருப்பமே இறுதினு சொல்லிடுச்சிமா என்றார் அன்பு.

மகள் முகத்தில் உள்ள குழப்பத்தை கண்டவர்,எதா இருந்தாலும் சொல்லுமானு அன்பு கேட்க, உங்களுக்குப்பா?

எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு தாமரை,இருந்தாலும் உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது.
உடனே பதில் சொல்லனும் என அவசியம் இல்லை,யோசித்தே சொல்லுத்தா என்றார் கலா அப்பாயி.

மீண்டும் முகம் தெரியாதவனை பற்றி யோசித்தவளுக்கு பெரிதாக எந்த எண்ணமும் தோன்றவில்லை.பின்னர் வீட்டில் இருப்பவர்களின் முகத்தை பார்க்க,அவர்கள் இவள் என்ன சொல்ல போகிறாளோ என ஆர்வமாக பார்ப்பது தெரிய,அத்தை கிட்ட பேசிட்டு வரேன் என்று உள்ளே சென்றாள்.

"தனது போனை எடுத்தவள் வேதாவிற்கு கால் பண்ண,அட்டென்ட் பண்ணியவர் சொல்லுடா என்க, அத்தம்மா என்றாள்.எப்போது அவள் குழப்ப நிலையில் இருந்தாளும் அவள் வாயிலிருந்து வரும் அழைப்பு அத்தம்மா என்பதால்,என்ன விஷயம் என்பது வேதாவிற்கு புரிந்து விட்டது.

"தாமரை உன் மனசுக்கு என்ன தோணுதோ நீ அதை தாராளமா சொல்லலாம்.உன்னை யாரும் இங்கே பிடிவாதம் பண்ணலை என்று நேரடியாக விஷயத்திற்கு வர,உங்களுக்கும் விருப்பமா என தயக்கத்தோடு தாமரை கேட்க எனக்கு விருப்பம் இருக்கிறது பிறகு இருக்கட்டும்,வாழப் போறது நீ. உன் விருப்பம் தான் எங்களுக்கு பெருசு வேண்டாம் என்றால் நேரடியா நீ சொல்லிடுடா.

"அத்தை.... இதுவரை என் விருப்பம் தான் உங்களுக்கும் என்பது எனக்கு நல்லா தெரியும்.உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடித்து இருக்கு என நீங்க சொல்லாமலே எனக்கு புரியுது உங்கள் குரலிலே என்ற தாமரைக்கு,சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வேதா.அதை விடு நீ யோசித்தே சொல்லு என்றார்.

ஒரு நொடி கண்ணை மூடி தனது இஷ்ட தெய்வத்தை நினைத்தவள் எனக்கு சம்மதம் அத்தை என்க,குட்டி... நிஜமாகவா என்று ஆச்சர்யபட்டார் வேதா.ஆமாம் என்று தாமரை சொல்ல, இதில் மாற்றமில்லையே? என்க, நிச்சயமாக இல்லைங்கத்தை.

எனக்கு எது நல்லது கெட்டது என்று பார்த்து பார்த்து செய்தவங்க நீங்க. உங்களுக்கு தெரியும் இது எனக்கு சரி வருமா வராதா என்பது.அதுவும் இல்லாமல் என் விஷயத்தில் நீங்க எந்த ரிஸ்கையும் எடுக்க மாட்டீங்க.

மருமகள் சொல்வதைக் கேட்டு சிரித்தவர்,ஆஹான்...அப்படியா என்க, ஏன் உங்களுக்கு தெரியாதா?என அவள் கேட்டதுக்கு சிரித்தவர். பின்,சரிங்கத்தை நான் போனை வைக்கிறேன் என்று சொல்லி கட் பண்ண,இவ்வளவு நேரம் அக்கா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அல்லியோ ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

"அக்கா எங்க நீ சம்மதிக்க மாட்டியோனு எனக்கு கவலையா இருந்துட்டு தெரியுமா?,மருது அண்ணா ரொம்ப நல்லவங்க அவங்க அம்மாவும் தான். நம்ம அங்க போய் இருக்கும் போது எவ்வளவு பாசமா பழகுவாங்க இல்லை என்று சொல்ல ஆமா என்றாள் தாமரை.

பிறகு தனது தந்தையிடம் வந்த தாமரையோ அப்பா இந்த சம்பந்தத்தில் எனக்கு சம்மதம் தான்.ஆனால்,இப்பொழுது என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது என் கனவு நிறைவேறிய பிறகு தான் அடுத்தது பற்றி நான் யோசிக்க முடியும்.

"இதை நீங்க தெளிவாக அவங்க வீட்டுல பேசிடுங்கள் என்று சொல்ல, கண்டிப்பாகம்மா,உன் கனவை கலைப்பதற்கு அந்த தம்பியும் விரும்பாது அது எனக்கு நல்லா தெரியும்.நீ அதை பற்றி கவலைப்படாத நான் பேசுறேன்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு...

யோவ் மாமா....நீயும்,அண்ணனும் தானேயா இவனுக்கு சின்ன வயசுல இருந்து கோச்சிங் குடுக்குறீங்க. இப்போ என்ன இவங்க ரெண்டு பேர்கிட்டயும் இப்படி கோர்த்து விடுற? நியாயமாயா என்று வளவன் முறைத்தான்.

"அதற்கு வேலுவே....மணிக்கு ஒரு தரம் படித்த முட்டா பயல்னு நிரூபிக்கிறடா என்க, என்னய்யா நக்கலா?என்க,ஏண்டா..... இது புரிஞ்சிருந்தால் எங்களை போல புத்திசாலி தனமாகா விவசாயம் பண்ணி நீயும் முதலாளியாக இருப்பியேடா.

ஏன் மாமா... அண்ணன் என்ன கேட்குது, நீ என்னைய்யா ஒளரிட்டு இருக்குறனு நிலவன் கேட்க,அட அரைவேக்காட்டு பயலுங்களா,அவங்க வழியில போய் தான்டா இதை சாதிக்கனும்.

நாங்க தான் நினைத்ததை அடைய எந்த முயற்சியும் பண்ணலை,எங்களுக்கு உறுதுணையா ஒரு பயலும் இல்லை. அப்படி யாராவது இருந்திருந்தால் எங்க ஆசையும் நிறைவேறிருக்கும் டா என வருத்தமாக வேலு சொல்ல,மாப்பு என்னவாம் பீலிங்கோஓஓஓ என்றான் கதிர்.

"நிலவா...உன்னோட கால் புண்ணு ஆறட்டும்,அடுத்து உனக்கு பிராக்டிகல் எக்ஸாம் வர போகுது.நீ நல்லா படிக்கிற தான் நான் இல்லைனு சொல்லலை. இனி எக்ஸாம் முடியுற வரை இந்த விளையாட்டையெல்லாம் மூட்டை கட்டி வை டா என்றான் வேலு".

"வேலு சொல்றது தான் சரி புரிஞ்சிதா??என கதிர் கேட்க,சரிணா என்றான் நிலவன்.ஆமா...எங்கே இந்த வீட்ல ஒரு டேப்ரிக்கார்டு லொட லொடனு கத்தி கிட்டே இருக்குமே,அதை ரொம்ப நேரமா ஆளைக்காணும்?என வேலு கேட்க,செல்வி நம்ப செட்டியார் வீட்டுக்கு போயிருக்குது என்றான் நிலவன்.

"சரிடா...உண்ட மயக்கம் வேற தொண்டைய அடைக்குது கொஞ்சம் படுக்கலாம் என்றவன்,எழுந்து போய் தலகாணியை எடுத்து வந்து டீவிக்கு முன்னே போட்டு படுக்க,வேலுவின் பக்கத்திலே அண்ணன் தம்பி மூன்று பேரும் வந்து படுத்துக்கொள்ள,பின் நான்கு பேரும் அரட்டையோடே டீவியை பார்த்தனர்".

"ஏன் சீதா.....அவங்க உசுரோட இருக்காங்களா இல்லையானே தெரியாமல் இப்படி மாமா பண்றது நல்லாவா இருக்கு?என வழக்கமாக கேட்கும் கேள்வியை தனது அக்காவிடம் ராதா கேட்க,நமக்கு தெரியாத விஷயத்தை பேசி என்ன பண்ணடி?

"ம்ம்...என்றவர் என்ன இன்னும் செல்விய காணுமே?,எதுக்கும் ஒரு எட்டு வளவனை பாக்க சொல்லட்டுமா என ராதா கேட்க,சொல்லிட்டு தானே போனாள் உன் மவ.அப்புறம் தாம் தூம்னு குதிப்பாள்.நீ அத்தைக்கு டீயை போடு,நான் போய் மாடியில் காய வச்ச மிளகாய் மல்லிய அள்ளிட்டு வரேன் என்று அங்கிருந்து மேலே சென்றார் சீதா.

"வராண்டாவிற்கு வந்த ராதா,தம்பி உங்களுக்கும் டீ வைக்கட்டுமா என்க,எனக்கு காஃபி என்றான் நிலவன், எங்களுக்கு டீயே இருக்கட்டும் அத்தைனு வேலு சொல்ல சரிப்பா என்று உள்ளே சென்று டீயை போட செல்வியும் வீட்டிற்கு வந்தாள்.

"அம்மா...பசிக்குது என்றபடியே சமையலறைக்குள் வந்தவளுக்கு, எல்லாம் இங்க தான் இருக்கு பாரு என்க,ம்ம் என்றவள் தனக்கு தேவையானதை போட்டு சாப்பிட அமர்ந்தாள்.

போன வேலை என்னாச்சி செல்வி?

சொல்லிருக்கேன் மா.நாளைக்கு சாய்ந்திரத்திற்குள் தரேன்னு சொல்லிருக்காங்க என்றவள்,எங்கேமா உன் உடன் பிறப்பை காணும்?என்க, மாடிக்கு என்றார் ராதா.

மாமியாருக்கு டீ யை எடுத்து கொண்டு அவர் அறைக்கு சென்ற ராதாவோ கதவை தட்ட, அழுது ஓய்ந்திருந்த வள்ளி அப்பாயி வந்து கதவை திறக்க,அத்தை டீ.மருமகளிடமிருந்து வாங்கியவர் அங்கிருந்து முற்றத்திற்கு சென்று,சோபாவில் உட்கார்ந்து டீயை குடித்தார்.

பேரன்கள் நால்வரும் சிறு பிள்ளைகள் போல சண்டை போட்டுக்கொண்டு டீவி பார்ப்பதை பார்த்தவருக்கு,அவளுக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கும் என யோசனையானவரை,செல்வியின் குரல் கலைத்தது.

"அப்பாயி.... அப்பாயி என்க,தனது யோசனையிலிருந்து வெளியே வந்தவர் சொல்லுத்தா என்க,அவர் குரலை கேட்டு திரும்பிய வேலு... செல்லம் எங்கே போன?,உன்னை பார்க்காமல் மாமன் மனசு எப்படி தவிச்சிது தெரியுமானு எழுந்து வந்து அவர் அருகில் அமர்ந்தான்".

இப்போ குழந்தைக்கு எப்படி இருக்கு செல்லம்?.

நல்லா இருக்கான் சாமி.குழந்தைக்கு என்னனு தெரியாம கண்டதை வைத்தியம் பண்ணி ஒரு வழி பண்ணிட்டாளுங்க.

அதான் பாரேன் இந்த கூறுகெட்ட மக்களை..என் டாக்டர் செல்லம் ஊருக்குள்ள இருக்கும் போது இப்படி செஞ்சிருக்குங்களே என்னத்தை சொல்லனு வேலு சொல்வதை கேட்டு வள்ளி பாட்டிக்கு சிரிப்பு வந்து விட்டது.

போடா போக்கிரி பயலே என அவன் தோளில் தட்டி சிரித்தவர்,ஆமாம்...உன் தங்கச்சிகாரி வந்துருக்காளாமே?

அப்படியா செல்லம்?ஒரு பயலும் நமக்கு தகவல் தரலையே என்றான்.அடேய் போதும் உன் நாடகம்.ஆமா செல்லம். எனக்கும் சுத்தமா அடையாளமே தெரியலை.என்னை பார்த்து நல்லாயிருக்கியாணானு?தங்கச்சி பாசமா கேட்குது,யாருனு தெரியாத புள்ளைக்கு என்னத்தை பதில் சொல்ல?...

சரினு குத்து மதிப்பா பேசுனேன். பொறவு தான் சித்தி சொல்லுச்சி என்று கவிதா வீட்டிற்கு சென்றதிலிருந்து நடந்தவைகளை வள்ளி அப்பாயிடம் சொன்னான்.

யார போல இருக்கா சாமி உன் தங்கச்சிகாரி?.

வாயேன் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம் என வேலு கூப்பிட,ம்கும்... வந்தவளுக்கு எங்களை கண்ணு தெரியலை...

அந்த மகாராணிய பாக்க நான் போவனுமாக்கும் போடா என அவன் கன்னத்தில் குத்த,செல்லம்... தங்கச்சி இங்க வரேனு சொல்லுச்சி தெரியுமா. நான் தான் வயல் வேலை நடக்குது வேண்டாம்னு சொன்னேன்.

"நீ நம்பலை தானே என்றவன்,சரி வா என்று தோட்டத்து பக்கம் அழைத்து சென்று கவிதாவிற்கு போன் பண்ணினான்.

போன் ரிங் சத்தம் கேட்டு கையிலிருந்ததில் பார்க்க,வேலு என்ற பெயர் வந்தது.அழைப்பை ஏற்றவர், தம்பி எங்க இருக்க?என்று கவிதா கேட்க, சொல்லு சித்தி எதாவது அவசர செய்தியா என்றான்.

"அவசரம் இல்ல தம்பி அவசியமான செய்தி தான்.அம்மா கிட்ட பேசணும் என்று கவிதா சொல்ல,அப்படியா இரு வீட்டுக்கு போய் கொடுக்குறேன் என்றவனுக்கு,சரி தம்பி.நம்ம தாமரை விஷயமா அம்மாகிட்ட பேசி ஆகணும்.

"என்னாச்சு சித்தி தாமரைக்கு எதாச்சும் முடியலையா?".

"அச்சோ..இல்லப்பா தாமரைக்கு நல்ல வரன் வந்திருக்கு.அதான் நம்ம குப்புசாமி ஜோசியர் கிட்ட போகணும். அம்மாவை கூப்பிட்டு போகலாம்னு இங்க சித்தப்பா சொல்லிட்டு இருக்காங்க.இன்னைக்கு அமாவாசை,நாளைக்கு பாட்டி முகம். பொங்கல் முடிஞ்சு போயிட்டு வரலாமா, இல்லை இன்றைக்கே போகலாமானு கேட்க தானென்று சொல்ல,இவ்வளவு நேரம் கவிதா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் அதிர்ச்சியானது",

"சரி சித்தி நான் வீட்டுக்கு போய்ட்டு போன் பண்றேன் என்றவன் தங்கச்சி துணி தைக்குதா?,மெஷின்ல எதுவும் பிரச்சினை இல்லையேனு கேக்குறதுக்காக தான் போன் பண்ணுனேன்னு வேலு சொல்ல, தாமரை இங்க வா மகளிடம் கொடுத்தார்".

"ஏண்டா...மெஷினை ஓட்டி பார்த்தியா?

இன்னும் இல்லைணா என்றவளுக்கு,சரிடா நீ ஓட்டி பார்த்துட்டு ஏதாச்சும் பிரச்சனை என்றால் சொல்லுடா சரி பண்ணிடலாம். ஓகேணா என்றவள்,அண்ணா இன்னுமா அம்மாச்சி வீட்ல வயல் வேலை முடியலை என்க,ஆமாடா என்றான்.சரிணா என்று சொல்லி அழைப்பை கட் பண்ணினாள்".

"கேட்டியா செல்லம் பேத்தி குரல் எப்படி இருக்குன்னு?,தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாம் என்றவனுக்கு,நம்ம வீட்டுக்கு மருமகளா வருவானு நான் வேண்டாத சாமி இல்லையேடா என்று வள்ளி அப்பாயி சொல்ல,நீ ஆசைப்பட்டால் போதுமா?ஆண்டவன் என்ன வச்சிருக்கான்னு தெரியலையே?

நம்ம வீட்டுக்கு மருமகளா உன் தங்கச்சி வருவானு நான் கண்ட கனவெல்லாம் பகல் கனவா போயிட்டே என்று சொல்லிக்கொண்டே வீட்டின் உள்ளே போய் சோகமாக திண்ணையில் அமர்ந்தார்".

அவர் அருகில் வந்து வளவனும் அமர்ந்தான்.சின்ன பேரனை பார்த்தவர் ஆமா,நம்ம சாகித் பாய் கடையில் உன்னை பார்த்ததா மேல தெரு ரங்கநாதன் சொன்னாரே?,உனக்கு என்ன அப்பு அங்க வேலை?

தாமரைக்கு தையல் மிஷின் வேண்டும்னு சொல்லுச்சி அப்பாயி.மாமா போன் பண்ணி கூட போக சொன்னாங்க.அதான் நானும் சிவாவும் அவளை கூப்பிட்டு போனோம்.

"துணி தைக்குற மிசினா?,அது எதுக்கு அவளுக்கு?,சாம்பிராணி போட தான் என்றபடி வேலு வந்தான்.அவன் சொன்னதை கேட்டு அப்பாயி முறைக்க, பின்ன என்ன செல்லம் கேள்வி?

"தங்கிச்சி தான் துணி தைக்க வாங்கிருக்கு.அதை நான் தான் பிட்டிங் பண்ணி கொடுத்தேன் செல்லம்.

என்னாது....துணி தைக்க தான் அந்த மன்னார்குடி மயிலு காலேசில போய் படிச்சாளோ ம்கும்...நம்ப செட்டியார் பொண்டாட்டி எந்த காலேசில போய் படிச்சிது?

"எதேஏஏஏஏ....அவள் படிப்பை பற்றி நீ என்ன நினைச்சிகிட்டு இருக்க அப்பாயி என்றவன்,நீ கட்டி இருக்கியே புடவை இது எப்படி வந்துச்சி சொல்லு என வளவன் கேட்க,தறியில நெய்தாங்க என்றார் அப்பாயி.

"சரி....அரிசி எப்படி வருது சொல்லு என்க,என்னப்பு கிறுக்கு எதாவது புடிச்சிட்டா என்றவரை முறைக்க,அது வந்து....விதை நெல்லை ஊற வச்சி வடிகட்டி,அதை சேத்துல விதைத்து, நாற்றாக வளர்ந்த பருவம் வந்ததும் அத புடுங்கி நட்டு,அது பழுத்து,அதை அறுத்து,அதை தனியா பிரிச்சி எடுத்து, திரும்ப வேக வைத்து,நெல்லை காய வச்சி,அதை மெசுனுல அரைத்து பிறகு தான் அரிசி வருது.

"சூப்பர்....அது போல தான்...ஒரு துணி எப்படி இருக்கணும்னு அவ வடிவமைக்கிறாள்.அதுக்கு தான் படிச்சிருக்கா.பச்சை கலர்ல ரோஸ் கலந்தா தான் பாக்க நல்லா இருக்கும்னு சொல்லுவியே,அப்படி எது கூட எதை கலந்தா அந்த துணி பார்வைக்கு நல்லா இருக்கும்,டீவில பாக்குறியே,அவளுங்க போட்டுருக்க துணிலாம் எப்படி இருக்கு, அதை தயாரிக்க தான் இந்த படிப்பு என்றான் வளவன்".

"இந்த வேலைக்காக தான் வெளிநாட்டுக்கு போகப் போறாள் தாமரை என்க,அப்படியா அப்பு என்று பேத்தியை எண்ணி ஆச்சர்யப்பட்டவரின் முகம் வாட, என்னாச்சு என்றான் வளவன்.

"என்னத்தை சொல்ல?கேட்டியா சங்கதிய,தன் மவளுக்கு ஒத்தக்காரி மாப்பிள்ளை பார்த்து இருக்காலாம் என்க,என்னாஆஆஆ!! என்று வளவன் அதிர்ந்தான்.அவன் அதிர்ச்சியை பார்த்து வேலுவும்,அப்பாயியும் வித்யாசமாக பார்க்க,உனக்கு எப்படி தெரியும் இந்த விஷயங்கள்?.

"கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் கேள்விப்பட்டேன் என்றார் அப்பாயி. ஓஓ...என்றவன்,ஏன் ஒரு வார்த்தை கூட இந்த விஷயத்தை பற்றி கவிதா சொல்லவேயில்லை என மனதிற்குள் கேட்டுக்கொண்டான் வளவன்.

அவன் யோசனையை பார்த்து,என்னடா இது?என அப்பாயி கண்ணால் வேலுவிடம் சைகையில் கேட்க, தெரியலையே?? என்று அவனும் கையால் சைகை செய்து சொல்ல ம்ம் என்றவர்,அப்பு... அப்பு... அடேய் சின்னப்பு என்று வளவனின் தோள் பட்டையில் அடித்தார் வள்ளி அப்பாயி.

கண்மணி வருவாள்.....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top