• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
63
கானல் - 61

வாழைமரங்கள் அழகிய நுழைவுவாயில் போல் கட்டப்பட்டு இருக்க, அதற்கு துணையாக தென்னம்பாலைகளும் தோரணமாக, மின் விளக்குகளில் ஒளிர்ந்தது அந்த மண்டபம்..

அங்கே வாயெல்லாம் பற்களாக புன்னகையுடன் வலம் வந்து கொண்டிருந்த கனகலட்சுமி, ஒரு அறையில் நுழைந்தவர்,

"நாளைக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைச்சாச்சா டா!.. அப்றம் காலைல எதையாவது காணோம்னு காரணம் சொல்லாதே!.." என்று மகனிடம் கட்டளையிட்டார்..

"அம்மா!..சொன்னா கேளுங்கம்மா!.. எதுக்கு இவ்ளோ அவசரம்!?.. இன்னும் ரெண்டு வருசம் போகட்டுமே!..அதுக்குள்ள நானும் என்னோட சம்பாத்தியத்துல ஸ்டெடி ஆகிடுவேன்!.." என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான் பாலா..

"டேய் இதையே இன்னும் எத்தனை வருசம் சொல்லுவ?!..அதான் எங்கண்ணன் அதெல்லாம் பெரிய விசயமே இல்லைனு சொல்லிட்டாரே!..அப்றம் என்ன?!.."

"ஒழுங்கு மரியாதையா நாளைக்கு தாலி கட்ட ரெடி ஆகிக்கோ!.. எதாவது தகிடுதத்தம் பண்ணலாம் னு நினைச்ச..அப்றம் எங்கள உயிரோடவே பார்க்க மாட்ட நீ!.."என்று மிரட்டலாக சொன்னவர்,

"பெரியவன் தான் எங்கள நம்ப வைச்சு ஏமாத்திட்டான்!..எங்க மானத்தை காப்பாத்துவ னு உன்னை தான் மலை போல நம்பி இருக்கோம் சாமி!.. ஏமாத்திடாதே டா தங்கம்!.." என்று சென்டிமெண்டில் அவனை லாக் செய்தார்..

அவரது கலங்கிய கண்களை கண்டவன், தப்பிக்க இயலாது என்பதை உணர்ந்து செய்வதறியாது தவித்தான்..

சில பல திருப்பங்களை கொண்ட அந்த இனிய நாளும் வேகமாய் தொடங்க..

பட்டு வேஷ்டி சட்டையில் தயாராகி மணவறைக்கு வந்த பாலாவை முன்னிருக்கையில் தன் தாயுடன் அமர்ந்து முறைத்துக் கொண்டு இருந்தாள் மதுமதி..

மணவறை நோக்கி வந்து அமர்ந்தவன், மதுவை ஒரு இயலாமையுடன் பார்க்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

"பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ!!.." என்று ஐயர் பணிக்க, மயூரவல்லி இருந்த அறைக்கு சென்ற அவளது தாய் சிந்தாமணி, வேகமாக ஓடி வந்து..

"என்னங்க மயூரியை காணோம்ங்க!.." என்று பதட்டமாக கையை பிசைந்து கொண்டு கருணாகரனிடம் சொல்லவும், "என்னடி உளர்றே?!.." என்று இரைந்தவர் வேகமாக அவளது அறை நோக்கி விரைந்தார்..

சில நொடிகளில் அந்த மண்டபமே தீப்பற்றியது போல பரபரப்பாக, அங்காங்கே சிலர் மணமகள் காணாமல் போனது பற்றி சலசலத்து கொண்டிருந்தனர்..

நடப்பதை பார்த்து, "என்ன மச்சான் பழி வாங்குறீங்களா?!.." என்று சற்று கோபத்துடன் சிவஞானம் கேட்க, கருணாகரனோ,

"அதெல்லாம் இல்ல மாப்ள!.. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல.. எனக்கே ஒன்னும் புரியல!.." என பதட்டத்துடன் பதில் அளித்தார்..

"ஏன் மச்சான் பெரியவன் கூட நடத்த இருந்தது நிச்சயம் தான்!.. அது நின்னா கூட பெருசா பாதிப்பு இருக்காது!.. ஆனா கல்யாணம் பண்ண மணமேடை வந்தவனை இப்படி தான் கழுத்தறுப்பீங்களா?!.." என அவர் குரலை உயர்த்த..

"அப்படி எல்லாம் இல்ல மாப்ள!.. இங்க தான் எங்கேயாவது இருப்பா!.. கண்டுபிடிச்சுடலாம்!.." என்று அவர் பரபரப்பாக தேடுவதற்கு செல்ல முனைய, அவரோடு சேர்ந்து அவரது மனைவியும் சென்றார்..

அதற்குள் கூட்டத்தில் உள்ள சிலர், ஆளுக்கொன்று அவதூறு பேச, மணமேடையில் இருந்து எழுந்த பாலா," இதுக்கு தான் அவசரமா எல்லாம் செய்தீங்களா?!.." என்று சத்தமிட்டான்..

"உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்தீங்க!.. இப்ப என்ன ஆச்சு!?.." என்று கோபமாக பேசியவன் பின்னர், "இனிமே கல்யாணம் னு எதாவது பேசி பாருங்க!.. அவ்ளோ தான்!.." பாலா முறுக்கிக் கொள்ள,

"ராசா!!!.." என்று அலறிய கனகலட்சுமி, "அப்படி எல்லா சொல்லாதே கண்ணு!.. எங்களோட பிடிவாதத்தால உன்னோட வாழ்க்கையை அழிச்சிட்டோமே!!.." கதறி கண்ணீர் வடித்தார்..

ரூபேஷ் மற்றும் கார்த்திக்கும் அவனது அருகில் வந்து அவனுக்கு ஆதரவாக கையை பிடித்து, "கோபப்படாத டா!.." என்றான் கார்த்திக்..

"பின்னே என்ன அண்ணா!!?.. இவங்க மனசு வேதனைப்பட கூடாது னு தானே என்னோட ஆசையை கூட மனசுக்குள்ளேயே புதைச்சுட்டு இதுக்கு சம்மதிச்சேன்!.." என அவன் மனக்குமறலோடு உண்மையை உளறிவிட்டான்..

"என்ன தம்பி சொல்ற?!.. அப்படினா நீயும் யாரையாவது மனசுல நினைச்சு இருந்தியா?!.." என்று கனகலட்சுமி அதிர்ச்சியாகி கேட்க,

"ஆமா!!.." என்று அழுத்தமாக சொன்னவன்," இதோ இங்க உட்கார்ந்து இருக்காளே.. இவளை தான் நான் மனசார நேசிச்சேன்!.." எதிரே இருந்த மதுமதியை கை நீட்டி காட்டியவன்,

"ஆனா உங்க மானம், மரியாதை, ஆசை னு எல்லாம் பேசுனதுல, என் மனசுலேயே அந்த நேசத்தை புதைச்சுட்டு மனசை கல்லாக்கிட்டு தான் இருந்தேன்!.." என வலியோடு தன் மனதை வெளிப்படுத்தினான்..

பாலாவின் பெற்றோர் குற்ற உணர்வுடன் இருக்க, தன் கண்களை துடைத்து கொண்டு ஒரு முடிவோடு மதுமதியிடம் வந்த கனகலட்சுமி, அவளது தாயிடம் கைகளை கூப்பி வேண்டினார்..

சில மறுப்புகள்.. சில கெஞ்சல்கள்.. சில கண்ணீர்துளிகள்.. அதன் பிறகு சிறிது நேரத்தில் மணமகளாக அலங்கரிக்கப்பட்டு மணவறை ஏறினாள் மதுமதி..

அழகுச்சிலையென வந்த மது, பாலாவை முறைத்துக் கொண்டு அமைதியாக அவனருகே அமர, மனதில் நிறைந்த நிம்மதியுடன் அவளது கழுத்தில் மங்கலநாணை பூட்டி தன்னவள் ஆக்கினான் பாலா..

மணம் முடிந்ததும், கார்த்திக்கிடம் மது சமிக்ஞை செய்ய, மயூரவல்லி இருந்த அறையை நோக்கி சென்றவன் அதிர, அதே வேளையில் மகளை தேடிச் சென்ற கருணாகரனும் திரும்பி இருந்தார்..

மணமேடையில் பாலாவின் மணம் முடிந்ததில் அவருக்கு சிறு நிம்மதி உணர்வு வந்தாலும், மகளை காணவில்லை என்ற கவலை அதை துடைத்தெறிய கோபமாக மணமேடை நோக்கி செல்லும் போது,

"என்ன மாமா சௌக்யமா?!.." என்று அவரின் பின்னே கேட்ட குரலில் அவர் திரும்பிப் பார்க்க, கழுத்தில் தாலியுடனும் கலங்கிய முகத்துடனும் அவனருகே நின்றிருந்தாள் மயூரவல்லி..

அவனைக் கண்ட கருணாகரன், அதிர்ந்து கோபமாக, "டேய்!!.. ஆதிகேசவா!!.." என்று கத்த, அவரது மனைவி சிந்தாமணியோ, "ஆதி!!!.." என்று அதிர்வுடன் கூறினார்..

"ஆமா மாமா!!..நானே தான்.. மறந்துட்டியா?!.. நாலு வருஷம் முன்னால உன் பொண்ணு மேல ஆசைப்பட்டு கட்டிக்க கேட்டேனே..அதே ஆதிகேசவன் தான்!.." என்றவன்,

"அதுக்கு என்னா பேச்சு பேசுன!!?.. என் அம்மாவை பற்றி தப்பா பேசுன ல.. அப்ப முடிவு பண்ணினேன்!.. கட்டினா உன் பொண்ணைத் தான் கட்டனும் னு.."என்றவன்,

"ஏன்யா என் அப்பா வேற ஜாதி பொண்ணை கட்டுனா உனக்கென்ன யா?!.. உன் பொண்ணை கட்டுறவன் ஒழுக்கமானவனா இருக்கானா னு தானே பார்க்கனும்!.."

"அதை விட்டுட்டு அவங்க ஜாதியை வைச்சு கீழ்தரமா பேசி சாவடிச்சுட்ட ல.. அதான் இவளை தான் அவங்க மருமகள் ஆக்கனும்னு முடிவு பண்ணுனேன்.."என கண்களில் பழிவெறியோடு கூறியவன்,

"இவளை கல்யாணம் பண்ண நீ மறுக்கறதுக்கு அவளோட படிப்பையோ, இல்லை வயசையோ சொல்லி இருந்தே னா நானே அதை ஏத்துக்கிட்டு போய் இருப்பேன்!.."

"இப்ப பாரு நான் தான் உனக்கு மருமகன்!.. உனக்கு வேற வழியே இல்லையே மாமா!.." என்று சிறு வெற்றிச் சிரிப்புடன் கூறினான்..

நடப்பது எதுவும் புரியாமல் அனைவரும் குழம்பி இருக்க, கருணாகரனோ பேச முடியாமல் நிற்க, சிந்தாமணியோ அண்ணன் மகனின் செயலில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார்..

கார்த்திக்கும், மதுவும் 'நீ யார் டா நடுவுல கோமாளி?!' என்று அவன் யாரென தெரியாமலும், இவர்கள் மறைத்து வைத்திருந்த மயூரவல்லி, அவனிடம் எப்படி சிக்கினாள்!? என்றும் புரியாமல் முழித்தனர்..

*************

அன்று..

மயூரவல்லியின் திட்டத்தை கேட்ட மது, "இந்த திட்டத்தையே ஃபாலோ பண்றோம் கார்த்திக்!.. சூப்பர் டா மயூ!.." என்று குதூகளிக்க, கார்த்திக் தான் அவளை அடக்கினான்..

"கொஞ்சம் பொறு மது!.. ஏன் மா நீ உன்னோட ப்ளான் படி காணாம போகனும்னா எப்படி காணாம போவ?!.. கல்யாண மண்டபத்துல இருந்து எல்லாம் அப்படி ஈஸியா வெளியே வர முடியாது!.."

"அதுவும் கல்யாணப்பொண்ணு வர்றது ரொம்ப கஷ்டம்!.." என்று கார்த்திக் சொன்னதும், மதுமதி அதுவும் சரிதானே என்ற யோசனையுடன் மயூவை பார்க்க,

"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கே!.. மண்டபத்தை விட்டு வெளியே தானே போக முடியாது!.. எதாவது சந்தர்ப்பத்துல நானே எஸ்கேப் ஆகி அங்கயே ஒரு ரூம்ல ஒளிஞ்சுக்கிறேன்!.." என்றாள் மயூரவல்லி..

"அப்படி ஒளிஞ்சு இருக்கிறதை யாராவது பார்த்துட்டா?!." கார்த்திக் மீண்டும் கேள்வி எழுப்ப சில நொடிகள் யோசித்த பிறகு,

"அப்படினா நான் ஒரு ரூம்ல போய் ஒளிஞ்சுக்கிறேன்!.. நீங்க வெளியே பூட்டு போட்டுடுங்க!.. அப்ப யாருக்கும் தெரியாதில்ல!.." என்றாள் அவள்..

'இதெல்லாம் நடப்பில் சாத்தியமாகுமா!!?' என்ற யோசனையில் கார்த்திக் மூழ்க, மதுமதி தான் அதுவே சரியென்று அனைத்தையும் திட்டமிட்டாள்..

அதன்படி பள்ளியில் அடுத்து, அதிக விடுமுறை வரும் நாட்களை தேர்ந்தெடுத்து அப்போது திருமணம் வைக்கும்படி பாலாவின் பெற்றோரை மாற்றுவது மயூரவல்லியின் பொறுப்பு எனவும்,

மதுவின் பக்கம் அனைத்தையும் சரியாக திட்டமிட வேண்டியது இவர்களின் பொறுப்பு எனவும் முடித்து விட்டு அவர்கள் கிளம்ப,

அவர்களின் பின்னிருக்கையில் இருந்து அனைத்தையும் கேட்டவன் வெற்றிப் புன்னகையுடன் தனக்கான திட்டத்தைத் தீட்டினான்..

அவன் தான் ஆதிகேசவன்!.. மயூரவல்லியின் தாய்மாமன் மகன்!.. அவனது கண்களில் பழிவெறி மின்ன, நினைவுகள் பின்னோக்கி சென்றன..

சிந்தாமணியின் சகோதரன் ஒரு கீழ்ஜாதிக்கார பெண்ணை மணந்து கொண்டதால் கோபமுற்ற கருணாகரன், அவரோடு பெரிதாக உறவாடுவதில்லை.. அவ்வப்போது வந்து செல்லும் அவர்களை சிந்தாமணிக்காக பொறுத்துக் கொண்டிருந்தார்..

இந்நிலையில் மயூரவல்லி பிறந்த பிறகு, அங்கு வந்து செல்லும் ஆதிக்கு பொம்மை போல இருந்த அவளை மிகவும் பிடித்துப் போனது.. அதனால் அடிக்கடி அங்கு போக வேண்டுமென அடம் பிடிப்பான்...

ஆதிகேசவனின் தந்தை அவனது பதினோரு வயதிலேயே இறந்து விட, நாத்தனார் வீட்டிற்கு செல்ல தயங்கினார் அவனது தாய் மாரீஸ்வரி..

மயூரவல்லியை காண ஆவல் கொண்டு ஆதி மட்டும் அவனது மாமா இல்லாத வேளைகளில் தன் அத்தை வீட்டிற்கு சென்று உறவாட, ஒரு கட்டத்தில் அது நேசமாக மாறியது..

ஆதிகேசவனுக்கு அவள் தனக்கு உரிமையானவள் என்ற எண்ணம் மனதில் வலுக்க, தாயிடம் கூறி அவர்களிடம் பெண் கேட்டு செல்ல வற்புறுத்தினான்..

ஆனால் அவர்களது எண்ணம் புரிந்த மாரீஸ்வரி, வேண்டாமென கூறி தயங்க, அவனது பிடிவாதத்தால் கருணாகரனிடம் பெண் கேட்டுச் சென்றனர்..

அதுவரை ஜாடைமாடையாய் அவரது ஜாதியை பற்றி குத்திப் பேசியவர்,இப்போது மாரீஸ்வரியின் முகத்திற்கு நேராகவே அதை சொல்லி நிராகரிக்க,

அதுவரை மாமாவிற்கு ஏதோ காரணத்தால் தான் தங்களை பிடிக்கவில்லை என்று நினைத்திருந்தவனுக்கு, காரணம் விளங்கியதில் மிகவும் அதிர்ந்தான்..

தாயை தரக்குறைவாக பேசியவரை கண்டு கோபமேற, மாரீஸ்வரியை அழைத்துக் கொண்டு அவன் வீடு திரும்பிய மறுநாளே, அவர் தூக்கத்திலேயே மரணித்து விட்டார்..

தாயின் மரணத்திற்கு தானே காரணம் ஆகி விட்டோமே என்று அவன் தாங்க இயலாமல் கதறி கண்ணீர் விட, மனம் உடைந்து போனவனின் கோபம் தன் மாமாவின் மீது திரும்பியது..

பின்னர் தன் தாயை தரக்குறைவாக பேசிய தன் மாமாவின் பேச்சை எண்ணி வெறியேற, மயூரவல்லியை தான் மணக்க வேண்டும் என மனதில் உறுதி பூண்டான்..

அதனால் அவளை கண்காணித்து கொண்டிருந்தவன், முதலில் பாலாவின் சகோதரனோடு நிச்சயம் நடக்கவிருந்ததை அறிந்து தடுத்து நிறுத்த யோசிக்கும் போது அதுவே நின்றதில் நிம்மதியானவன்..

மீண்டும் பாலாவோடு பேசியதை அறிந்து பதறிட, அதுவும் இழுத்துக் கொண்டு போக சரியான சந்தர்ப்பத்தை எண்ணி காத்திருந்தான்.

இந்நிலையில் கருணாகரன் தன் மகளை பாலாவின் வீட்டிலேயே தங்குமாறு செய்தால், பாலா வந்து போக இருக்கும் போது அவளை கண்டு திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்புண்டு என்றெண்ணி அவர்கள் வீட்டிற்கு அனுப்பியதை அறிந்தான்..

அதிலிருந்து அவளை பின்தொடர்ந்தவன், அந்த பழச்சாறு கடையில் அவர்கள் போட்ட திட்டத்தை கேட்டு, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top