Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 6
ஒரு நாள் சுற்றுலா என்றாலும் அதற்கான பொருட்களை பையில் வைத்து காலையில் கிளம்பி நின்ற மகளிடம்,
"எப்பவும் கவனமா இரு டா அம்மு!.. தெரியாதவங்க கிட்ட பேசாத!..நீங்க இங்க திரும்பி வந்துட்டீங்க னு எனக்கு எப்படி தெரியும்?!.." என்று அலமேலு அறிவுரைகளோடு தனது சந்தேகத்தையும் கேட்க..
"அங்க இருந்து வந்தப்புறம் மெசேஜ் பண்ணி சொல்லுவா ம்மா!.. நீங்க பயப்படாதேள்!.. நான் பத்திரமா போயிட்டு வருவேன்!.." என்று உறுதி அளித்தாள் வித்யா..
"நீ தேவையில்லாம பயப்படாத அலமு!.. முதன்முதலா பொண்ணை தனியா அனுப்பறயோன்னோ அதான் நோக்கு இப்படி இருக்கு!.."
"அவா திரும்பி வந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணுவா.. நான் அவளை கூட்டிண்டு வந்துடுவேன் னு சொன்னேன் இல்லயோ!.."
"அப்றம் ஏன் பயப்படற அலமு!?.." என்று அவரை சமாதானப்படுத்த, அவரும் சிறிது சமாதானம் அடைந்தார்..
*****************
பயணம் தொடங்கியது முதல், ஆட்டம் பாட்டு என்று குதூகளித்த மாணவிகள் மலையரசியை கண்டதும் அதன் அழகில் சொக்கி அமைதியாக, சிலர் இயற்கையை ரசிக்க தொடங்கினர்..
சிலர் மலையின் கொண்டை ஊசி பயணத்தில் ஏற்படும் உபாதைக்கு பயந்து அமர்ந்து இருந்தனர்..
ஊட்டியில் பிரசித்தி பெற்ற அந்த தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளியில் முயல்களாய் துள்ளி விளையாடினர்.. அங்குள்ள பழமையான மரத்தை பற்றிய தகவல்களை ஆர்வமாக அறிந்தனர்..
தொட்டபெட்டா சிகரத்தின் மேலிருந்து மலையரசியை முழுமையாக கண்டு ரசித்தனர்..
சில்லென்ற அந்த சீதோஷணத்தை அனுபவித்துக் கொண்டே, "நீ மட்டும் வராம இருந்தா இதெல்லாம் மிஸ் பண்ணி இருப்ப தியா!.." என்றாள் ஈஸ்வரி..
"உண்மை தான் ஈஷ்!.. இந்த மலைகள் தான் எவ்ளோ அழகு!!.. ஏதோ இப்பவாவது எனக்கு பார்க்கனும் னு கொடுத்து வைச்சு இருக்கே!.." சிலாகித்து கூறினாள் வித்யா..
"எல்லா இடத்திலேயும் நாம ஒன்னா நின்னு ஃபோட்டோ எடுத்துக்கனும்!.. வா.. வா.." ஈஸ்வரி துரிதப்படுத்த, தோழிகள் இருவரும் ஆர்வமாகினர்..
பைகாரா ஏரியில் படகு சவாரியில் குழந்தைகளாய் குதூகளித்தனர்..
நயன்த் ஹில்ஸ் பார்த்து 'ஏய் இங்க தானே த்ரிஷா 'இது தானா' னு பாட்டு பாட்டிட்டு இருப்பாங்க!!' என்று அங்கு இடம்பெற்ற திரைப்பட பாடல்கள் பற்றி பேசி அதிசயித்தனர்..
ஒவ்வொரு நிமிடங்களையும் ஆனந்தமாக களித்து விட்டு, மாலை தொடங்கியதும் மலையிறங்க ஆரம்பித்தனர்..
அவர்கள் ஊட்டியில் இருந்து கிளம்பிய நேரத்தை பெற்றோர்களுக்கு மெசேஜ் ம் செய்தனர்.. பள்ளி வந்ததும் மீண்டும் தகவல் தெரிவிப்பதாக சொல்லி இருந்தனர்..
ஒருமுறை சீனிவாசனை வேலைக்கு இடையே அலமேலு அழைத்த போது, அவரும் பள்ளியில் இருந்து வந்த மெசேஜை கூறி, வரும் நேரத்தை கணக்கிட்டு கூறினார்..
அவர்கள் சென்ற அந்த சுற்றுலா பேருந்து, பள்ளியை அடைந்ததும், மாணவர்கள் வருகையை பெற்றோருக்கு குறுந்தகவலும் அனுப்பினர்..
ஆனால் வங்கியில் ஆடிட்டிங் கில் இருந்த சீனிவாசனின் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலை பார்க்காமல் வேலையின் தீவிரத்தில் மூழ்கி இருந்தார்..
சில மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் வந்து காத்திருக்க, பேருந்து நுழைந்ததும் ஒவ்வொருவராய் பெற்றோரோடு அனுப்பி வைக்கப்பட்டனர்..
ஈஸ்வரியை அழைத்து செல்ல அவளது அப்பா வந்து இருக்க, "உன்னை கூப்பிட யாரும் வரலையே தியா!?.." என்றாள் அவள் குழப்பமாக..
"தெரியல ஈஷ்!!.. அப்பா வர்றேன் னு சொன்னாரு.. பேங்க் ல எதுவும் வேலை அதிகமோ என்னவோ.. வருவார்!.." என்று பதிலளித்து வாசலையே பார்த்து இருந்தாள் வித்யா..
"உங்கப்பா நம்பர் என்ன மா?!.. நான் வேணும்னா கால் பண்ணி பார்க்கவா?.." என்று கேட்ட ஈஸ்வரியின் தந்தையிடம் எண்களை வித்யா உரைக்க,
முழு அழைப்பும் ஏற்படாமல் இருக்கவும், "அநேகமா வந்துட்டு இருப்பார் னு நினைக்கிறேன்.. அதான் ஃபோன் எடுக்கல.. அவர் வந்ததும் கிளம்பு மா!.. நாம போகலாமா ஈஸ்வரி!.." என்று விட்டு
"காலைல சாமான் எல்லாம் எடுக்கனும், நீ வந்து உன்னோட திங்க்ஸ் ஒருக்கா செக் பண்ணிட்டா சரி.. இல்லனா எதாவது மிஸ் ஆகிட போகுது!.." எனக் கூறி ஈஸ்வரியை அழைத்தார் அவள் தந்தை..
அவளும், வித்யாவிடம் அவளது தந்தை வந்ததும் கிளம்பு என்று விட்டு, ஒருமுறை அவளை கட்டியணைத்து, "நான் ஊருக்கு போய் செட்டில் ஆனதும் கால் பண்றேன் டா தியா!.." என பிரியாவிடை கொடுத்துச் சென்றாள் ஈஸ்வரி..
சிறிது நேரத்தில் அனைத்து மாணவிகளும் சென்றிருக்க, இவள் மட்டுமே எஞ்சியிருந்தாள்.. அதை கவனித்த ஆசிரியை, அவளது தந்தையின் எண்ணுக்கு அழைக்க,
இம்முறையும் எடுக்கப்படாமல் இருக்கவே, ஈஸ்வரியின் தந்தை கூறியதையே சொல்லி விட்டு, வாட்ச்மேனிடம் அவளது தந்தை வந்ததும் அனுப்புமாறு கூறிவிட்டு சென்றார்..
யாருமற்ற அந்த பள்ளியில் தனி ஒருத்தியாக வித்யா நிற்க, அவளுக்குள் பயரேகை ஓடியது.. சற்று நேரத்தில் வாட்ச்மேனும்,
"பாப்பா!.. நான் சாப்பாடு வாங்க போறேன்.. உங்கப்பா வந்தா வெயிட் பண்ணி என்கிட்ட சொல்லிட்டு தான் கிளம்பனும் சரியா!?.." என்று விட்டு அவரும் வெளியேறினார்..
ஆள் அரவமற்ற அந்த பள்ளியின் வாயிலில் நின்ற வித்யா, பயத்துடன் வாசலையே பார்த்திருக்க, தனது தந்தைக்கு மீண்டும் அழைக்க எண்ணிய அவள்,
அவ்வழியே பேசிக்கொண்டே சென்றவர்களிடம்," அண்ணா!.. உங்க கிட்ட ஃபோன் இருந்தா கொஞ்சம் தர முடியுமா?!.."
"அப்பாவுக்கு ஒரு கால் பேசிட்டு தர்றேன்!.." என்ற வித்யாவிற்கு தெரியவில்லை.. அவர்கள் முழு குடிமகன்கள் என்று!..
கண்களில் ஆர்வம் மின்ன, "இருக்கே பாப்பா!.." என்று ஃபோனை எடுத்து காட்டி, "நீ நம்பர் சொல்லு!.." என்று கூறினான் ஒருவன்..
வித்யாவும் எண்களை கூறவும் அதை அழுத்தி காதில் வைத்த சில நொடிகளில் அவன் அவள் நிற்கும் விவரம் கூறி பேச தொடங்கவும், அதை பெற்று பேசுவதற்காக வித்யா ஆர்வமாய் கையை நீட்ட..
அதற்குள் அவன், "அப்படியா சார்!!.. ஓகே சார்!.. ஓகே!.." என்று விட்டு வைத்து விட்டான். புரியாமல் முழித்த வித்யா "என்னாச்சு அண்ணா!?.." என்று கேட்க..
"உங்க அப்பா உன்ன கூப்பிட தான் வந்துட்டு இருந்தாராம்.. வழில ஒரு பஸ் ஸ்டாப் இருக்குல்ல, அவர் வண்டி அங்க பஞ்சர் ஆகி நிக்குதாம்.."
"உனக்கு கூப்பிட்டு சொல்ல வழியில்லையே னு நினைச்சுட்டு இருந்தாராம்.. அதனால உன்ன கூட்டிட்டு வந்து அங்க விட சொன்னாரு!.." என அவள் நம்பும்படி கூறினான்..
அவனது பாவனையில் அதை நம்பிய வித்யா, "அப்படியா அண்ணா!.. ரொம்ப தேங்க்ஸ்.. ஓகே.. நானே போய்க்கிறேன் ண்ணா.." என்று விட்டு பேருந்து நிறுத்தம் இருக்கும் திசையை பார்க்க நடக்க துவங்கவும்..
அந்த குடிமகன்கள் சற்று இடைவெளி விட்டு அவளை பின்தொடர, அவர்கள் வருவதை பார்த்து, தனது நடையை விரைவுப்படுத்தினாள் அவள்..
இருப்பினும் மதுபோதையோடு, காம போதையும் தலைக்கேறிய அந்த காமுகர்கள் அவளை விரட்டி பிடித்து, வாயைப் பொத்தி, சாலையின் ஓரமாக இருந்த பதரில் இழுத்துக் கொண்டு சென்றனர்..
போதை தலைக்கேறிய அந்த மிருகங்களிடம் சிக்கிய பேதை, கண்களில் பீதியேற மிரண்ட விழிகளுடன், சத்தமிட வழியில்லாமலும், அவர்களை எதிர்க்க முடியாமலும் போராடினாள்..
இருப்பினும் தன் சக்தி எல்லாம் திரட்டி, ஒருவனை தள்ளிவிட, மற்றவன் விட்ட அறையில் கண்களில் பொறி பறக்க, மயக்கத்தில் ஆழ்ந்தாள்..
அந்த அரை மயக்கத்திலும் அவர்களிடம் போராட அவளது மனம் உந்த, உடலோ அவர்களின் பிடிக்குள் சிக்கி இருக்க, வலியுடன் கூடிய மௌன கண்ணீர் மட்டுமே வழிந்தது..
******************
வெகு நேரமாகியும் இருவரும் வராததால், சீனிவாசனுக்கு அழைத்த அலமேலு, அழைப்பு ஏற்கப்பட்டதும், "எங்க இருக்கேள் ணா?!.. ரெண்டு பேரும் எப்ப வர்றேள்?!.. எனக்கு மனசு கிடந்து அடிச்சுக்குது!!!.." என்று பதட்டமாக சொல்லவும்..
அப்போது தான் தனது கைப்பேசியை சைலன்ட் மோடிலிருந்து மாற்றிய சீனிவாசனுக்கு, வேலை பளுவில் மகளது வரவை மறந்து கைப்பேசியை சைலன்டில் போட்டது நினைவிற்கு வந்தது..
" நீ பதட்டப்படாத அலமு!.. நான் பாப்பாவை கூட்டிண்டு வர்றேன்!.." என்ற அவரது பதிலில், அதிர்ச்சியான அலமேலு, "என்ன!!.. நீங்க இன்னும் பொண்ணை கூப்பிடவே போகலையா!!!?.." என்றார்..
"ஆடிட்டிங் நடந்தது ல அலமு, அப்ப ஃபோனை சைலன்ட் ல போட்டேன்.. அதை மறந்துட்டேன்.. இதோ இப்ப போறேன்.. நீ காலை கட் பண்ணு!.." என்று விட்டு பள்ளிக்கு விரைந்தார்..
யாருமற்ற பூட்டிய பள்ளிக் கதவே அவரை வரவேற்க, 'மகள் எங்கே?!' என்று பதறிய சீனிவாசன், மகள் பேருந்து நிறுத்தம் எதுவும் சென்றிருக்க கூடுமோ என்றெண்ணி அந்த வழியே செல்லவும்..
பாதி வழியில் காலையில் மகள் கொண்டு சென்ற பையை சாலையோரம் கண்டதும் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது..
உடனே வண்டியை அப்படியே போட்டு விட்டு, அந்த சாலையோரமாக இறங்கி தேடிக் கொண்டே சென்று பார்க்க, அவருக்கு நெஞ்சமெல்லாம் ஈட்டி கொண்டு அறைந்தது போலானது..
குரங்கு கையில் சிக்கிய பூமாலையின் பிய்த்து எறியப்பட்டு எஞ்சிய நாராக, அந்த காமுகர்கள் கையில் சிக்கி கசக்கி முகரப்பட்டு வாடி வதங்கிய மலராய் அவள் கிடக்க..
"பெருமாளே!.. நாராயணா!!!!.." என்று பதறியவர், "என் அழகு கண்ணாட்டி!.. என் பொண்ணுக்கா இந்த நிலைமை!.. கடவுளே!!.." என்று ஓலமிட்டு கண்ணீர் மல்க அரற்றினார்..
"கண்ணை திறந்து பாரு டி செல்லம்!.. இந்த அப்பாவை பாரு மா!.." என்று அவளது கன்னங்களை தட்ட, "ஸ்ஸ்!.. ஆஹ்!!.." என்ற வலியுடனான முனகலுடன் அவள் அரைக்கண் விழித்தாள்..
"ஏழ்ந்திரு டி கண்ணம்மா!!.. பகவானே!.. நான் என்ன செய்வேன்!!.." என்று கண்ணீருடன் கரைந்த சீனிவாசன், உதவிக்கு யாரும் வருகிறார்களா எனக் காண மீண்டும் சாலைக்கு விரைந்தார்..
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவனை கண்டு கையை காட்டி நிறுத்த, அந்த வேளையில் அவசரமாக கை நீட்டி நிற்கும் பெரியவரை கண்டு வண்டியை நிறுத்தினான் அவன்!..
"தம்பி ஒரு அவசர உதவி!.. சித்த அங்க வர்றேளா!!?.." என்று பதட்டத்துடன் கூறிய அவருடன் சேர்ந்து, அந்த இடத்திற்கு சென்று பார்த்த அவன் வெகுவாக அதிர்ந்தான்..
"ப்ளீஸ் தம்பி ஹெல்ப் பண்ணுங்கோ. என் பொண்ணு தான் இவ..ஹாஸ்பிடல் கூட்டிண்டு போகனும். ப்ளீஸ் தம்பி. ப்ளீஸ்." என்று கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு கேட்டவரிடம்...
"என்ன சார் நீங்க? இதுக்கு போய் இப்படி கெஞ்சிட்டு இருக்கீங்க. வாங்க போகலாம்."
"ஆனா ஹாஸ்பிடல்னா அவங்க நிறைய கேள்வி கேட்பாங்களே!!.. அதுவுமில்லாம அது ரொம்ப தூரமால இருக்கு" என்று யோசித்தவன்.
"என் ப்ரெண்டு சிஸ்டர் பக்கத்துல தான் கிளினிக் வைச்சு இருக்காங்க!.. வெயிட் பண்ணுங்க.. அவங்க அவைலபல் ஆ னு கேட்கிறேன்" என்று விட்டு, தனது கைப்பேசியில் அவளுக்கு அழைத்து அவளிடம் விவரத்தை சுருக்கமாக சொல்லி, அவளது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டான்.
பின்னர் சீனிவாசன் , வேகமாக அவளை கையிலேந்திக் கொள்ள, அவன் வண்டி ஓட்ட, இருவரும் அவனது வண்டியில் அந்த கிளினிக் விரைந்தனர்.
அந்த சிறிய கிளினிக், மூடும் நேரம் என்பதால் செவிலியர் கூட சென்றிருக்க, மருத்துவரான அவளும் கிளம்பும் தருவாயில்,
இவன் அழைத்து விசயம் சொன்னதால், துரிதமாக அனைத்தையும் தயாராகவே வைத்து இருந்தாள் அவள்.