• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
59
கானல் - 57

"வாம்மா!..வந்து சாமி கிட்ட போய் விளக்கேத்து மா!.." என்று ஞானாம்பிகை பணிக்க, பூஜையறை அலமாரியில் இருந்த விளக்கை ஏற்றினாள் ராஜேஸ்வரி..

அவளது கைகளில், மொட்டு மொட்டென்று விழித்துக் கொண்டிருந்த குழந்தையை திணித்து, "இனிமே இவனை நீ தான் மா உன் புள்ளையாட்டம் பார்த்துக்கனும்!.." என்றார் அவர்..

ராஜேஸ்வரியும் தலையசைத்து, குழந்தையை பார்க்க, பொக்கை வாய் சிரிப்போடு அவளை கண்ட ஷக்திபாலனை கண்டு சிரித்தவள்,

"என்னடா கண்ணா!?.. இந்த புது அம்மாவை பிடிச்சு இருக்கா?!.." எனக் கேட்டதும், அவனுக்கும் என்ன புரிந்ததோ மீண்டும் சிரிக்க ராஜேஸ்வரி குழந்தையை முத்தமிட்டாள்..

ராஜேஸ்வரிவை மணம் முடித்து வீட்டிற்கு வந்ததோடு தன் கடமை முடிந்தது என்று சிவசங்கரன் தன் அறையினுள் அடைந்திட, அதனை கண்டவள், பெருமூச்சுடன் நின்றாள்..

"நீ ஒன்னும் கவலைப்படாதே மா!.. கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருப்பான்.. அப்றம் போக போக சரி ஆகிடும்!.." என்று ராஜேஸ்வரிக்கு தைரியம் சொன்னார் ஞானாம்பிகை..

ராஜேஸ்வரியும் தலையசைத்து விட்டு செல்ல, அறைக்குள் சென்ற மகனை நினைத்து எல்லாம் விரைவிலேயே சரி ஆகிவிடும் என்று தனக்குள்ளே நம்பிக்கை சொல்லி கொண்டார்..

சங்கரனின் மனைவி பிரசவத்திற்கு பிறகு நோய்வாய்ப்பட, குழந்தையை முழுவதும் அவரும் அவரது பெரியம்மாவும் தான் கவனித்துக் கொண்டனர்..

நோய் முற்றி திடீரென அவரது மனைவி மரணித்து விட, மனைவியின் இழப்பில் சங்கரன் மனமுடைந்து அப்படியே இடிந்து போய் இருக்கவும், அவரது பெரியம்மாவால் தனியாக பிள்ளையை பார்க்க முடியவில்லை..

அதுவுமில்லாமல் குழந்தையை பராமரிக்க ஒரு தாய் அவசியம் என சங்கரனை பேசியே கரைத்து, ராஜேஸ்வரியை மணம் முடித்து வைத்தார்..

'குழந்தைக்காக தான் இந்த மணம்!' என்று சொல்லாமல் சொல்லியது சங்கரனின் செய்கை!.. ஞானாம்பிகையும் இவர்களது திருமணம் முடிந்த பின் தன் ஊருக்கே சென்று விட்டார்..

ராஜேஸ்வரியும் எதையும் மனதில் கொள்ளாமல், குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து வர, நாட்கள் செல்லச் செல்ல சங்கரனுக்கு தன் குழந்தையை பேணும் ராஜேஸ்வரியின் மீது ஒரு நல்லெண்ணம் பிறந்தது..

அது காதலாக மாறி, ராஜேஸ்வரியை அவர் ஏற்றுக் கொள்ள, அவர் மீது உண்டான காதலின் அடையாளமாக இரு பிள்ளைகளை பெற்றெடுத்தார் ராஜேஸ்வரி..

ஷக்தி வளர வளர பிடிவாதமும் செல்லமும் அதிகமாக, 'மாற்றாந்தாய் தானே அதான் பிள்ளையை செல்லம் கொடுத்து கெடுத்து விட்டாள்' என்று சொல்லி விடக்கூடாது என்பதற்காக ஷக்தியிடம் சற்று கண்டிப்பைக் காட்டினார்..

சங்கரனின் வீட்டிற்கு வந்த அவரது அத்தை, தன் மகளை அவருக்கு கட்டி வைக்க எண்ணியிருக்க, ராஜேஸ்வரியை கட்டி வந்தது பொறுக்கவில்லை..

அதனால் ஷக்தியிடம் அவர் காட்டிய கண்டிப்பை, "பார்த்தியா டா ஷக்தி!.. அவ புள்ளைங்கள மட்டும் எப்படி செல்லம் கொஞ்சுறா!.. ம்ம்ம்ம்!.. இதுவே பெத்த தாயா இருந்தா இப்படி பண்ணுவாளா?!.." என்று விசனமுடன் கேட்க,

அதுவரை ராஜேஸ்வரியை தான், தன் தாயென எண்ணியிருந்த ஷக்தியின் பிஞ்சு இதயத்தில் அவர் சிற்றன்னை என்ற நஞ்சை விதைத்து விட்டாள் அந்த அத்தைக்காரி..

அது அவனின் மனதில் 'நான்கைந்து வருடமாக தன்னிடம் பாசமாக இருந்த தாய்க்கு, தங்கையும் தம்பியும் பிறந்த பின்னர் தன்னிடம் பாசம் குறைந்து விட்டது' என்ற எண்ணத்தை வலுக்க செய்தது..

அதனால் வீட்டில் அனைவரிடமும் சிறிது சிறிதாக விலகலை காட்ட தொடங்கினான், தன் தங்கை மற்றும் தம்பியிடமும் அளவான பேச்சுக்களோடே அவன் இருந்ததை கவனித்த ராஜேஸ்வரி,

பொதுவாகவே பெரிதாக கலகலப்பாக இல்லாத அவனது குணம் என்றெண்ணி அதை கவனிக்காமல் விட்டார்..

கடைக்குட்டி கார்த்திக், தன் கலகலப்பான குணத்தால் அனைவரது மனதையும் கவர, ஷக்தி கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் தன் இருப்பை குறைத்துக் கொண்டான்..

இந்நிலையில் தான் ஓர்முறை ராஜேஸ்வரியின் ஒரே சொந்தமென்று இருக்கும் சகோதரனின் வீட்டிற்கு விடுமுறைக்கு சென்றனர்..

அம்சவேணியின் மனநிலை மாற்றம் பெற்றோரே அறியாத அந்நிலையில்.. வீட்டில் இவர்கள் இருப்பதால் அவளும் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தது..

அதனால் தன்னை கட்டுப்படுத்த முடியாத பத்து வயது சிறுமி, களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த ஷக்தியின் அருகே நெருங்கி இருந்தாள்..

இதனை அவ்வழியே சென்ற ராஜேஸ்வரி கண்டு திகைத்து சத்தமிட, அதில் கண் விழித்த ஷக்தி தன்னருகே இருந்த அவளை கண்டு அதிர்ந்து எழுந்தான்..

உண்மை என்னவென்று தெரியாத ராஜேஸ்வரி, ஷக்தி தான் பெண் பிள்ளையிடம் தவறாக நடந்ததாக எண்ணி அவனை சரமாரியாக அடித்து விட, 'தனக்கு ஒன்றும் தெரியாது' என்று பலமுறை அவன் சொல்லியும், அவர் நம்பவில்லை..

'இவர் தனது சிற்றன்னை தானே அதனால தான் தன்னை நம்பவில்லை' என்றெண்ணிய பருவ வயது ஷக்தி இதனால் வெறுப்படைந்து, தந்தையிடம் கூறி வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கிக் கொண்டான்..

அதன்பின் வீட்டிற்கு அவன் அவ்வப்போது வருவதோடு சரி.. எப்பொழுதாவது அவனாகவே அழைத்து ரெண்டொரு வார்த்தைகள் பேசுவான்..

பொதுவாகவே எதற்கும் அதிக கவலை கொள்ளாத பனிரெண்டு வயது கார்த்திக்கிற்கு தன் சகோதரன் படிக்கச் சென்றுள்ளதாக கூறவும் ஒன்றும் தெரியவில்லை..

ஆனால் தீபிகா, எப்போதும் அவளிடம் சிரித்து பேசி விளையாடாவிடினும் ஷக்தி வீட்டில் இருந்த போது அவளாகவே அவனிடம் சென்று பேசுவாள்..

ஆனால் இப்போது ஏனென்று தெரியாமல் அவன் திடுமென வீட்டை விட்டு வெளியேறியது பதினான்கு வயது சிறுமியின் மனதை உடைக்க..

அவன் மீது இருந்த பாசத்தால் தன் அண்ணனின் பிரிவை தாளாமல் கவலை கொண்டவள், அதை வெளியே காட்டாமலும் இருந்தாள்..

அதை உணர்ந்த ராஜேஸ்வரியும் 'தான் கவலை கொண்டு அவனைப் பற்றி அதிகம் பேசாமல் இருந்தால், மகள் சரியாகி விடுவாள்' என்றெண்ணி தனது ஏக்கத்தையும் மறைத்தார்..

இந்நிலையில் சங்கரனும் மாரடைப்பால் இறந்து விட, ஷக்தி வீட்டிற்கு வருவதை அறவே நிறுத்தினான்..

இவர்களே அழைத்தாலும் அவர் மீது கொண்ட வெறுப்பால் கடமைக்கு பேசிவிட்டு வைக்கும் ஷக்திக்கு, தன் மீது நம்பிக்கை இல்லாமல் தண்டித்த சிற்றன்னையின் மீது கொண்ட வெறுப்பு அவரது பிள்ளைகள் என்று தங்கை, தம்பியிடமும் விலகலை உண்டு பண்ணியது..

இந்நிலையில் திடீரென ஒரு நாள் அவன் தங்கியிருந்த அறையில் இருந்து, சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனதால், தாயும் மகளும் உண்டான வருத்தத்தை மனதிற்குள் வைத்து பூட்டினர்..

சில வருடங்களில் அம்சவேணி ஒருவனுடன் சல்லாபித்ததும், அதற்கு அவளது தந்தை அடித்ததும், அவனுடனே அவள் ஓடிப் போனதும் என்று ஊரெல்லாம் தெரிய,

அதன் பின்னர் தான் 'ஒருவேளை அம்சவேணி தான் அன்று தவறிழைத்து இருப்பாளோ தேவையில்லாமல் ஷக்தியை தண்டித்து விட்டோமே' என்று ராஜேஸ்வரியை வருந்தச் செய்தது..

இவர்களின் மனநிலை புரிந்த கார்த்திக்கும் தன் சகோதரனை தேடி அலைந்து அலுப்புற்று, அவனே அவர்களை தொடர்பு கொள்வான் என்று எண்ணி விட்டு விட்டான்..

************

ராஜேஸ்வரி நடந்த கதையை முழுவதும் சொல்லி முடித்து விட்டு, "நானும் அவங்கிட்ட மன்னிப்பு கேட்கனும் னு நினைச்சு இருந்தேன்!.. அதுக்குள்ள எங்கே போனான் னு தெரியவே இல்லை!!.." கண்ணீர் வடித்தார்..

நடந்த கதை முழுவதையும் கேட்ட வித்யா, ஒன்றும் சொல்ல முடியாமல் பிரமை பிடித்தது போல் இருந்தவள், தங்களது அறைக்கு சென்று விட்டாள்..

ராஜேஸ்வரியும் பழைய கதையை பேசியதில் அந்த காயங்கள் கீறப்பட்டு மனவேதனையில் இருந்ததால் அவளது மாற்றம் பற்றி கவனிக்கவில்லை..

தங்களது அறைக்கு வந்த வித்யா பதுமை போல் அமர்ந்திருக்க, அப்போது தான் இயந்திரத்தனமாக கார்த்திக் வீட்டினுள் நுழைந்தான்..

வீட்டிற்கு வந்ததும் பவிக்குட்டி இவ்வளவு நேரம் பிரிந்திருந்த தன் பாட்டியை காண்பதற்காக அவரது அறைக்குள் ஓடினாள்..

அங்கே தன் சோகத்தில் மூழ்கி கண்ணீர் வடித்த ராஜேஸ்வரி, "பாத்தி!!.. நான் சூஸ் குச்சேனே!!.." என்று குதூகளித்துக் கொண்டு வந்த பேத்தியை கண்டு கண்களை துடைத்துக் கொண்டார்..

"அப்படியா டா குட்டிமா!!.. எனக்கு இல்லையா?!!.." என்று அவர் பாவமாக கேட்கவும், "காத்திப்பா வாங்கி தவ்வாங்க!.. நான் அவங்க கித்த சொல்தேன்!.." என்று கண்கள் விரிய கதை பேச, அவரது மனமும் சோகத்தில் இருந்து மாறியது..

தங்களது அறைக்குள் நுழைந்த கார்த்திக், தனது சிந்தனையிலேயே இருந்ததில் கட்டிலின் மறுபுறம் அசையாமல் அமர்ந்திருந்த வித்யாவின் நிலையை கவனிக்க தவறினான்..

சிறிது நேரம் கழித்து சூழலை புரிந்தவன், தான் வந்து இவ்வளவு நேரமாகியும் எதுவும் கேட்காமல், பிள்ளையை கூட பார்க்காத அவளின் நிலை கண்டு அவளருகே நெருங்கினான்..

"என்ன ஆச்சுடா விதுமா!!?.. ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க??!.." என கேட்டது தான் தாமதம், "கார்த்திப்பா!!." என்று வேகமாக எழுந்து அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்..

"ஏன் டா அழற!!?.. என்னாச்சு?!.. அம்மா எதாவது சத்தம் போட்டாங்களா??!.. உடம்புக்கு முடியலையா?!!.." என தான் யூகித்த விசயங்களை கேட்க, அதற்கு மறுப்பாக தலையசைத்தவள்,

ராஜேஸ்வரி அவளிடம் சொன்ன கதையை சொல்லவும், கார்த்திக் இவளிடம் மறைத்ததிற்காக அழுகிறாளோ என்றெண்ணினான்..

"நான் மறைக்கனும் னு நினைக்கல டா!!..எனக்கே முழுசா தெரியாத விசயத்தை என்ன னு சொல்றது!?.. அதான் என் அண்ணனை பற்றி உங்கிட்ட சொல்லலை!.. ஸாரி!.." என்று மன்னிப்பை வேண்டினான்..

அவள் மேலும் அழுது கொண்டே இருக்கவும், "எனக்கே இன்னிக்கு தான் தீபிகா ஏன் கொடைக்கானல் போனாள் ங்கற உண்மை தெரிஞ்சது!.. என்னால நம்பவே முடியல!.." என்றவன் தொடர்ந்து..

"அண்ணன் மேல அவளுக்கு எவ்ளோ பாசம் இருந்தா இத்தனை வருசம் கழிச்சும் அவன் இருக்கற இடம் தெரிஞ்ச உடனே அவனை பார்க்க கிளம்பி இருப்பா!!.." என்று அவன் தன் சகோதரியை எண்ணி பேசிக் கொண்டிருக்க,

அவனை புரியாமல் நிமிர்ந்து பார்த்த வித்யாவிடம், இன்று ஷோபாவை சந்தித்ததில் இருந்து நடந்தவற்றை விளக்கி கூறினான் கார்த்திக்..

அதை முழுவதும் கேட்டவள் சில நொடிகளுக்கு பிறகு, "கடவுளே!!!!!..உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லையா!!!??.." என்று பெருங்குரல் எடுத்து கதற, அவன் ஒன்றும் விளங்காமல் விழித்தவன்..

"என்னடா விதுமா!!?.. எதுக்கு இப்படி கதறி அழுகுற மா?!.. நீ அழறதை என்னால தாங்க முடியல!.. ப்ளீஸ்!!.. என்ன னு சொல்லு டா!!.." என்று வழிந்தோடும் கண்ணீரோடு பரபரப்பாகக் கேட்டான் கார்த்திக்..

"கார்த்திப்பா!!..கார்த்திப்பா!!.." என்றவள், தேம்பிக் கொண்டே, "அத்திம்பேர்!!.. இறந்துட்டாரே!.." என்றிட, திடுமென இப்போது எதற்கு அதை நினைத்து அழுகிறாள் என்று யோசித்தவன்,

"என்னமா சொல்ல வர்ற!!?.. ஒன்னுமே புரியல!!.. அவங்க இறந்து தான் ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சே!!.." என புரியாமல் சொன்னான்..

"உங்க அண்ணா ஷக்தி தான் என்னோட அத்திம்பேர்!.. கார்த்திப்பா!!.." என்றவள் மீண்டும் அழுகையோடு,

"இப்படி ஒரே விபத்துல ஒரு தாயோட ரெண்டு பிள்ளைகளையும் பறிச்சுட்டாரே!!.. இந்த கடவுளுக்கு கருணையே இல்லையா?!..இதை எப்படி நான் அந்த தாய் கிட்ட சொல்லுவேன்!.. தாங்க மாட்டாரே!!.."

"கல்லுல செய்ததால் உன்னோட மனமும் கல்லா போனதா பெருமாளே!!..ஒரு குடும்பத்துக்கு எத்தனை இன்னலை தான் கொடுப்பாய்!!?.." என்று அவள் பாட்டிற்கு அழுது அரற்றிக் கொண்டு இருக்க,

அவள் சொன்ன சேதியில் இடிந்து போனவன்,தன் அண்ணன் தான் அவளது அக்காவின் கணவன் என்றும்,தன் உடன்பிறப்புகள் இருவரும் ஒரே விபத்தில் இறந்ததையும் உணர்ந்து அதிர்ச்சியில் சிலையென அமர்ந்தான் கார்த்திக்..

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top