• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
57
கானல் - 55

வித்யாவின் மனம் அந்நிகழ்வுகளின் வேதனையில் உழன்று தவிக்கும் சமயத்தில், தாயாக மாறி அவளை தேற்றும் சகோதரியான நித்யாவை, ராஜேஸ்வரி கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிரதிபலிக்க..

அவளிடம் செய்வதைப் போலவே ராஜேஸ்வரியிடமும் சென்று தஞ்சம் அடைந்தவள், அவரது சொற்களை ஆழ்ந்து உள்வாங்கினாள்..

அப்போது தான், வித்யா இல்லாததால் விரைவிலேயே பூங்காவில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக், மாமியாரும் மருமகளும் இருந்த கோலத்தை கண்டு,

"என்னடா நடக்குது இங்க!!!?..நாம வெளியே போன கொஞ்ச நேரத்துல
மாமியாரும் மருமகளும் கம் போட்டு ஒட்டிக்கிட்டாங்க போல!.." என்று மகளிடம் சொல்லி கிண்டலடித்தான்..

அவன் சொன்னது என்னவென்று புரியவில்லை எனினும் அதற்கு சிரித்த சின்னக்குட்டி, அவனிடம் இருந்து இறங்கி, "நானு!!...நானு!.." ஓடிச் சென்று அவர்களுடன் இணைந்தாள்..

அவளது செயலைக் கண்டு,"அப்ப நான் இல்லையா குட்டிமா!!?.." என்று பாவமாக கார்த்திக் கேட்க, உடனே ஓடிவந்தவள் அவனையும் இழுத்துச் சென்று அவர்களோடு இணைத்தாள்..

அவளது அந்த செயலில் அனைவரது முகத்திலும் புன்னகை உதயமாக, அந்த நொடிகளை அழகாக தன் அலைபேசியில் புகைப்படமாக பதிந்தான் கார்த்திக்..

*************

ராஜேஸ்வரியிடம் பேசிய பிறகு, வித்யாவின் மனம் தெளிந்தது.. அதன் பின்னர் இருவருக்குமிடையே இருக்கும் ஒற்றுமை அதிகரிக்க, அதை கண்ட ஒருத்தன் தான் மூக்கில் காற்றடித்துக் கொண்டு இருந்தான்..

"என்ன?!.எப்போ பாரு மாமியாரும் மருமகளும் கூடிக் கூடி பேசி சிரிக்கிறீங்க!.. ராஜி மாதா!.. நீங்க ரொம்ப மோசம்!..பெத்த மகனை டீல் ல விட்டுட்டு இப்ப வந்த மருமகளோட கொஞ்சிட்டு இருக்கீங்க!.."

"அவளை கூட்டிட்டு வந்ததே நான் தான்!..அந்த நினைப்பு கொஞ்சமாவது இருக்கா உங்க ரெண்டு பேருக்கும்?!.." என பொறாமையில் பொங்கி விட்டான் பையன்..

"பொறாமை புடிச்சவனே!.. நாங்க பொம்பளைக எங்களுக்குள் பேசறதுக்கும் சிரிக்கிறதுக்கும் ஆயிரம் விசயம் இருக்கும் ..இதுல உனக்கென்ன டா பிரச்சனை!?.." என்று ராஜேஸ்வரி கேட்க..

"எனக்கு என்டர்டெயின்மெண்ட் இல்லாம போகுதுல மாதா ஜி!.. நீங்க ரெண்டு பேரும் அப்பப்ப சண்டை போட்டா தானே பார்க்கற எனக்கும் குட்டிமா க்கும் பொழுது போகும்!.."

"எவ்ளோஓஓஓ நேரம் நாங்களும் விளையாடிட்டே இருக்கறது!.. என்னடா குட்டிமா!?.." என அவன் தன் தாயிடம் ஆரம்பித்து மகளிடம் கேள்வியோடு முடித்தான்..

"அடப்பாவி!!.. அங்கங்கே மாமியாரும் மருமகளும் சண்டை போட்டு சமாதானப்படுத்த முடியாம முழி பிதுங்குறானுக!..உனக்கு என்டர்டெயின்மெண்ட் கேட்குதா?!.. படவா ராஸ்கல்!.." அவர் திட்டியதும்,

"அச்சச்சோ!.. ராஜி மாதா ஆக்ஷன் மோட் க்கு மாறிட்டாங்க டா கார்த்தி!.. நான் இல்ல..ஆள விடுங்கப்பா!!.. நீங்களே கொஞ்சி குலாவிட்டு இருங்க தாய்குலங்களே!.."

"நான் மில்க் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்!.. வாடா குட்டிமா நாம வெளியே போகலாம்!.." என்று மகளோடு வெளியே ஓடியே விட, இருவரும் சிரித்தனர்..

தன் வீட்டிலிருந்து கிளம்பிய கார்த்திக், பாலாவின் வீட்டிற்கு வர பாலாவின் பெற்றோர் திரும்பி வந்ததன் அடையாளமாக காலணிகள் வெளியே இருக்கவும், 'அப்பாடா!' என்றெண்ணி அழைப்பு மணியை அழுத்தினான்..

சில நொடிகள் கழித்து கதவை திறந்த கனகலட்சுமி, "அடடே!!!.. வாப்பா கார்த்திக்!!..நல்லா இருக்கியா?!.. பார்த்து ரொம்ப வருசமே ஆயிடுச்சுல!!.." என்று வரவேற்றார்..

"இது யாரு உன் பொண்ணா?!.." என்று அவர் கேட்கவும், அவனும் ஆமோதித்தான்..பாலாவின் வீட்டினருக்கு அவனது விசயங்கள் எதுவும் முழுவதுமாக தெரியாததால் அவனது பிள்ளை என்றே நினைத்தார்..

பாலாவின் தந்தை சிவஞானமும் உள்ளே வந்தவனை வரவேற்க, அவர்களிடம் பொதுவாகவும், அவர்களது பயணம் பற்றியும் நலன் விசாரிப்புகள் நடந்தேறின..

பேசிக்கொண்டு இருந்த கனகலட்சுமி, "அடடே!!.. வந்தவங்களுக்கு சாப்பிடக் கூட கொடுக்காம பேசிட்டு இருக்கேன் பாரு!.." என்று தலையில் தட்டிக் கொண்டவர்,

"ஏம்மா!..பாலாவோட ப்ரெண்டு வந்து இருக்காப்ல!..சாப்பிட எதாவது கொண்டு வர்றியா மா?!.." என்று உள் நோக்கி குரல் கொடுக்க, கார்த்திக் குழம்பினான்..

'பாலாவின் வீட்டில் பெண்பிள்ளை இல்லையே!!..அப்படி என்றால் யாரிடம் சொல்கிறார் இவர்?!!.. ஒருவேளை அவர்களது பெரிய மருமகளாக இருக்குமோ!?..' என்று எண்ணிக் கொண்டிருக்க..

"இதோ வர்றேன் அத்தை!.." என்று புதிதாக ஒரு பெண்ணின் குரலை தொடர்ந்து, கையில் பலகாரம் கொண்ட தட்டோடு வந்தாள் மயூரவல்லி!!..

அவளை கண்டவன் யாரென தெரியாமல் பார்க்க, "ஆட்கள் வந்த சத்தம் கேட்டது அத்தை!.. அதான் நானே கொண்டு வந்துட்டேன்!.." என கூறிக் கொண்டே தட்டை அவனிடம் நீட்ட,

கார்த்திக்கின் முகத்தை கண்டு, "என்ன பா யாரு னு பார்க்குறியா?!.. இவ பேர் மயூரவல்லி!..என் அண்ணன் பொண்ணு தான்!.."

"ஏதோ ப்யூட்டிசன் படிக்க போறேன் னு வந்து இருக்காள்!.." என்று அவனுக்கு அறிமுகப்படுத்திய கனகலட்சுமி, அவளிடம் இவன் யாரென்றும் அறிமுகம் செய்தார்..

பாலா சொன்ன அவனது மாமன் மகள் இவள் தான் என்று புரிந்து கொண்டவன், அறிமுக நிமித்தமாக சிறு புன்னகையுடன் தலையசைக்க,

"இவளை தான் நம்ம பாலாவுக்கு கல்யாணம் பண்ண பேசி இருக்கு பா!..எங்க அந்த பைய தான் இந்தா அந்தா னு நாள் தள்ளிட்டே இருக்கான்!?!.." என்று

மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்த கனகலட்சுமி சலிப்புடன் முடிக்க, அதுவரை சிரிப்புடன் இருந்த மயூரவல்லியின் முகம், சட்டென்று இருண்டதை கவனித்தான் கார்த்திக்..

அவளது முக மாற்றத்தில் யோசனையான கார்த்திக் கனகலட்சுமியிடம், "அப்படியா ம்மா!!..ரொம்ப சந்தோஷம்!.. எப்போம்மா கல்யாணம் வைச்சு இருக்கீங்க?!.." என்று

வேண்டுமென்றே கேட்க, அவளோ எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் காட்டி நின்றாள்.. அனைத்தையும் மனதில் குறித்துக் கொண்டிருந்த கார்த்திக்,

மதுமதி விசயமாக எதுவும் பேசாமல், சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு ஒரு யோசனையுடன் கிளம்பினான்..
அவனது மனதில் மயூரவல்லியின் முக மாற்றம் உறுத்தியது..

தனது வீட்டிற்கு வரும்முன் பாலாவின் எண்ணிற்கு அழைத்த கார்த்திக், அவன் அழைப்பை ஏற்காததால் மதுமதிக்கு அழைத்தான்..

"சொல்லுங்க கார்த்திக்!..அம்மா எப்படி இருக்காங்க?!..எல்லாம் ஓகே தானே!?.." என்று நலம் விசாரித்தாள், ராஜேஸ்வரி கண் விழித்த விசயம் அவளுக்கும் பாலாவிற்கும் கார்த்திக் தெரிவித்து இருந்தான்..

"எல்லாரும் நல்லா இருக்கோம் மா!.. நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா?!.." எனக் கேட்டவன், பாலாவின் வீட்டிற்கு வந்ததையும், அங்கே நடந்ததையும் மதுவிடம் தெரிவித்தான்..

"எனக்கென்னமோ அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல போல தோணுது மது!!..அதுவரை நல்லா இருந்த அவங்க முகம் உடனே மாறிடுச்சு!.." தனது சந்தேகத்தை கார்த்திக் சொன்னதும்,

"அப்படினு சொல்ல முடியாது கார்த்திக்!.. ஒருவேளை அந்த கருவாயனோட நடக்க இருக்கற கல்யாணம் டிலே ஆகுதுன்னு நினைச்சு இருந்தா!!?.. அதனால கூட கடுப்பாகலாமே!!.."

"அந்த பொண்ணு கிட்ட பேசுனா தான் தெரியும்..உண்மை என்ன னு தெரியாம நாமளா ஒரு முடிவுக்கு வர முடியாதே!!.." என்று மதுமதி யோசனையுடன் சொன்னாள்..

"சரி இப்ப என்ன பண்ணலாம் னு உனக்கு தோணுது?!.." என்ற கார்த்திக் மனதில் ஒரு யோசனை வைத்திருந்தாலும் அவளது முடிவையும் கேட்க விரும்பினான்..

" நான் எப்படியும் உங்க அம்மாவை பார்க்க வரலாம்னு இருந்தேன் கார்த்திக்!.. இப்ப இன்னொரு வேலையும் இருக்கும் போல இருக்கே!!?.." என்ற அவளது பதிலில் புன்னகைத்த கார்த்திக்,

"அதுசரி!!.." என்றவன், "புரிஞ்சுடுச்சு மது!!.. சீக்கிரமே மாமியார் மாமனாரை பார்க்க போறனு சொல்ற!....ஓகே!..டன்!..ஆல்வேஸ் வெல்கம்!.." என்றான் புன்னகையுடன்..

மதுமதியிடம் பேசி விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, வண்டியை நிறுத்தச் சொன்ன பவிஷ்யா, "காத்திப்பா!!..சூஸ் வேணும்!.." என்று கரும்புச்சாறு கடையை காட்டிக் கேட்டாள்..

"இப்ப தானே டா அங்க ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்ட!.. அதுக்குள்ள ஜூஸ் வேணுமா?!.." என்று அவன் சிறு கடிதலுடன் கேட்டதும்,

முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, "பீஸ் காத்திப்பா!!.. அது நல்லா இக்கும்!.. பாப்பாக்கு தொம்ப பிக்குமே!!.." என்று கெஞ்சலுடன் கேட்டதுமே தாங்குமா அவன் மனம்..

"நிறைய குடிச்சா சளி பிடிக்கும் டா!.. அதனால ஆளுக்கு பாதி!..ஓகே வா?!.." என்று அவளிடம் ஆளுக்கு பாதி என்று பேரம் பேசி ஒரு குவளை வாங்கி குடித்துக் கொண்டிருந்தனர்..

அப்போது அவர்களின் மிக அருகே ஒரு கார் வந்து நிற்க, யாரென தெரியாமல் அதனையே கார்த்திக் பார்த்திருந்தான்..

காரிலிருந்து இறங்கி வந்த ஒருத்தி, "ஹேய்!..கார்த்திக் தானே நீ?!.." என்று உறுதிப்படுத்திக் கொள்ள கேட்க, அவனோ அடையாளம் தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாலும் ஆம் என்று பதிலளித்தவன்..

"நீங்க!!!?.." என்று சிந்தனையுடன் கேட்ட அவனிடம், " நான் ஷோபா!.. சம்முவோட ப்ரெண்ட்!.." தன்னை அறிமுகப்படுத்தியவளை இன்னுமே தெரியாமல் பார்த்திருந்தான் கார்த்திக்..

"சம்மு அதான் சண்முகதீபிகா தம்பி தானே நீ!!?.." என மறுபடியும் அவள் கேள்வியே கேட்க, சகோதரியின் பேரை சொன்னதும் சிறு பரபரப்புடன் கவனமான கார்த்திக் 'ஆம்' என்று ஆமோதித்தான்..

"அவளோட ப்ரோஃபைல் பிக் ல உங்க எல்லாரையும் நான் பார்த்து இருக்கேன்!.. ஆமா.. அவ எப்படி இருக்கா?!.."என்று தீபிகாவை பற்றி நலம் விசாரித்தவள்,

"அவ கூட அன்னிக்கு ஃபோன் ல பேசுனதோட சரி!.. அதுக்கப்புறம் அவளை கான்டாக்ட் பண்ணவே முடியல..அப்றம்..நான் சொன்ன இடத்துக்கு போய் பார்த்தாளா?!.." அவள் ஆர்வமுடன் அடுக்கிக் கொண்டே போக, சுத்தமாய் ஒன்றும் புரியாமல் விழித்தவன்,

"ப்ளீஸ் கொஞ்சம் உங்கள பற்றி டீடெய்ல்ஆ சொல்றீங்களா?!.. எனக்கு நீங்க யாருன்னே தெரியல!!?.." என ஒருவழியா கேட்டு விட்டான் அவன்..

" ஓஓ.." என்று ஸ்ருதி குறைந்த 'ஓ' போட்ட ஷோபா,"சம்முவும் நானும் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்!..டென்த் க்கு அப்றம் பேமிலி சிச்சுவேஷனால நான் வேற ஊருக்கு போக வேண்டியது ஆகிடுச்சு!.."

"அப்றம் படிப்பு, வேலை, குடும்பம் அப்படினு வேற வேற பக்கம் போனாலும் எங்க நட்பு தொடர்ந்துட்டு தான் இருந்துச்சு!..என்னை பற்றி அவ எதுவும் சொன்னதில்லையா!!? " என்று சிறு ஆச்சர்ய புன்னகையுடன் கேட்டாள்..

அவள் சொன்னதும் தன் நினைவடுக்குகளில் சகோதரி இவளது பெயரை சொல்லி இருக்கிறாளா!? என அவன் சிந்தித்துக் கொண்டு இருக்க,

அதற்குள்," சம்முவோட பொண்ணா!!!? அப்படியே அவளை மாதிரியே இருக்காளே!!.." என்று பவிஷ்யாவை கண்டவள் குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்..

அவனுக்கும் ஷோபாவின் பெயர் நினைவிற்கு வர, சகோதரி அவ்வப்போது அவளைப் பற்றி சொன்னதாக நினைவிலாடியது..

"ஆனா அக்காவோட ஃபேஸ்புக்.. அப்றம் எந்த ஐடி லேயும் உங்க பேரை நான் பார்த்தது இல்லையே!!?.." என்று அவன் தேடி சலித்த விசயத்தை அவளிடம் கேட்டான்.

பின்னர் அவளாகவே தொடர்ந்தவள், "அக்ச்வலி நான் சில வருஷமாவே ஃபேஸ்புக் மாதிரி எந்த சோஷியல் மீடியா லேயும் ஆக்டிவ்வா இல்ல..நான் என் பேமிலியோட லண்டன்ல இருக்கேன்."

"டூ இயர்ஸ் முன்னால இங்க வந்தப்ப தான் கொடைக்கானல் ட்ரிப் போய் இருந்தோம்." என்று சொன்னதும் நிமிர்ந்த கார்த்திக், அவளது பேச்சை கவனிக்க தொடங்கினான்.

"சம்மு ரொம்ப நாளா பார்க்கனும்னு ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருந்தவங்களை நான் கொடைக்கானல்ல பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். அப்றம் தான் அவங்கள பார்த்த இடத்தை அவளுக்கு கால் பண்ணி லோகேஷன் சொன்னேன்."

"அவளும் ரொம்ப குஷியாகி உடனே கிளம்ப போறதா சொன்னா. ஆனா அதுக்கப்புறம் அவளை என்னால கான்டாக்ட் பண்ணவே முடியல."

"கொஞ்ச நாள்ல என் ஹஸ்பண்ட்டோட டெபுடேஷன் முடியவே, திரும்பவும் லண்டனுக்கே போயிட்டோம்!.." என்று அவள் சோகமாக சொன்னாள்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top