Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 56
- Thread Author
- #1
கானல் - 53
அம்சவேணியிடம் அவள் எப்படி கார்த்திக்கின் வீட்டிற்கு வந்தாள் என்று வினவியதும், அவளது முகம் மென்மையுற, ஒரு மந்தகாசத்துடன் அவள் காதலன் ராகுல் பற்றி சொல்ல தொடங்கினாள்..
என்னதான் அம்சவேணி தனது உடல் இச்சைக்காக அவனை நாடினாலும், ஆனால் ராகுல் அவளை தனது துணையாக ஏற்று விரும்பியே அதற்கு சம்மதித்தான்..
அதற்காக அவளது தந்தை அம்சவேணியை அடித்து துவம்சம் செய்ததை அறிந்து மிகுந்த வேதனை கொண்டவன்,
"நாம இந்த ஊரை விட்டு போயிடலாம் வேணி!.. நமக்கான வாழ்க்கையை வாழலாம்!." என்று கூறி அவளோடு ஊரை விட்டு சென்றான்..
அம்சவேணிக்கும் அவனது முடிவு ஏற்பாக இருக்கவும் சரியென்று இருவரும் வேறு ஊருக்கு செல்ல, ராகுல் தனக்கு கிடைத்த வேலையை செய்து கொண்டு, அவர்களது காலம் சென்றது..
அம்சவேணியின் அதீத பாலுறவு ஆர்வத்தை முதலில் வயதின் கோளாறாக நினைத்தவன், பின்னர் தான் அதை கவனிக்க தொடங்கினான்..
அவளது அதீத ஆர்வத்தை பற்றி யாரிடம் கேட்டறிவது என்று தெரியாமல் இருந்தவன் மருத்துவரை அணுக, அவர் 'அவளுக்கு ஒருவேளை மென்டல் டிஸாடர் இருக்கலாம்!' என்று கூறினார்..
"இதை எப்படி சரி செய்றது டாக்டர்!?.." என்ற அவன் கேள்விக்கு, "அவங்கள மென்டலி ரொம்ப ஜென்டிலா தான் ஹேன்டில் பண்ணணும்!.. அதுக்கு சில சைக்கலாஜிக்கல் தெரபி இருக்கு!.. அவங்கள கூட்டிட்டு வாங்க.."
"சில கவுன்சிலிங் செஸன் போனா தான் அவங்களோட மனநிலை என்னனு தெரியும்..அதை பொறுத்து டிப்ரஷன் க்கு சில மெடிகேஷன் கூட எடுத்துக்கலாம்!.."
"மெடிடேஷன் பண்றது அப்றம் அவங்க மைன்ட் டைவர்ட் பண்றது மூலமா கொஞ்ச கொஞ்சமா அவங்கள இயல்புக்கு கொண்டு வந்துடலாம்! "என்ற அவரது அறிவுரைப்படி அனைத்தும் செய்ய தயாரானான் ராகுல்..
அதன்படி அவளுக்கு படிப்பில் ஆர்வமுண்டா என அறிந்து அதை நிறைவேற்ற முனைந்தான்.. சிறு வயதில் இருந்தே மருத்துவ படிப்பின் மீது ஆர்வமுண்டு ஆனால் அது முடியவில்லை என்று அவள் வருந்தவும்,
செவிலியர் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தான்.. அதோடு மருத்துவர் கூறிய அனைத்தையும் முயற்சித்தான்..
அவளது படிப்பு முடியும் போது, ஓரளவு அவளது பிரச்சினையில் இருந்து வெளிவந்தவள், அவனுடன் மகிழ்ச்சியான ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்க, அதற்கும் ஒரு முடிவு வந்தது..
திடீரென ஒருநாள் தீவிரமான வயிற்று வலியில் துடித்த ராகுலை மருத்துவமனையில் அனுமதிக்க, 'மஞ்சள் காமாலை' என்றனர்..
தனது படிப்பின் மூலமும், மருந்துகளாலும் ஓரளவு தன்னை கட்டுபடுத்திக் கொண்ட அம்சவேணி, சிகிச்சை முடிந்து வீடு வந்த ராகுலை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டு தங்களது செலவுகளை சமாளிக்க பணிக்கும் சென்று வந்தாள்..
இருப்பினும் அவனது கல்லீரலின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், மாற்று கல்லீரல் பொருத்த வேண்டுமென்ற நிலை ஏற்படவும், எதுவும் செய்ய இயலாமல் தவித்தவள்,
தன்னால் முடிந்தளவு போராடி அதற்கு ஏற்பாடு செய்வதற்குள் அவன் உயிர் பிரிந்து விட, தன் உலகமே சூன்யமானது போல, பித்து பிடித்தது போலானாள் அம்சவேணி..
அவனது இழப்பிற்கு பிறகு, மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மனஅழுத்தம் அடைந்தவள், அதிலிருந்து மீண்டு வரவும் அவனது நினைவுகளின் கனத்தாலும் அவளது பழைய நிலைக்கே சென்றாள்..
தன் வாழ்வில் நடந்ததை கூறி முடித்த அம்சவேணி, "மருத்துவமனை மாதிரி இடத்துல வேலைக்கு போனா என்னால சுதந்திரமா இருக்க முடியாது.."
"அதனால தான் இந்த மாதிரி வயசானவங்கள முழுநேரமா பார்த்துக்க போற இடம் னா எனக்குனு தங்க இடமும் கிடைக்கும், அதோட எனக்கும் அதிகமா எந்த தொந்தரவும் இருக்காது!.."
"அதான் இந்த மாதிரி ஏஜென்சி ல சேர்ந்தேன்!..அப்படி யாரோ னு நினைச்சு தான் உங்க வீட்டுக்கு வந்தேன் அத்தான்!.. அத்தையோட நிலைமையை பார்த்து கஷ்டமா தான் இருந்துச்சு!.."
"என்னோட உறவான உங்களை திரும்ப பார்த்ததுல சந்தோஷமா இருந்துச்சு!.. அத்தையும் நானும் மட்டும் தானே இருக்கோம்!.. தனிமை அடிக்கடி ராகுலை நினைவூட்டும்!.."
"என்னோட ராகுல் நினைவுகளால் டிப்ரஷன் ஆகும் போது என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியாது.. அந்த நேரம் எனக்கு வேற வழி தெரியல.." என்று அவள் முழுவதும் சொல்லி முடித்தாள்..
அதனை கேட்ட மூவருக்குமே ராகுலால் சரி செய்யப்பட்ட அம்சவேணி மீண்டும் அவளது நிலைக்கே சென்றதை எண்ணி மனம் கனத்துப் போனது..
அவளது பிரச்சனையில் இருந்து அவளை மீட்டு வர விரும்பிய கார்த்திக், அவர்களிடம் கலந்து ஆலோசிக்க, அவளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து இதற்கான தெரபிகளை மீண்டும் தரலாம் என்று கூறினர்..
அவள் எதாவது ஆள் மாறாட்டம் செய்து இப்பணிக்கு வந்து இருப்பாளோ என்றும், மேலும் அவள் உண்மையை உரைப்பதற்கு மறுத்து ஆர்ப்பாட்டம் செய்வாளோ என்ற சரவணனின் சந்தேகமே போலீஸை நாட செய்தது..
ஆனால் 'அம்சவேணி எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை..யாரையும் துன்புறுத்தவும் இல்லை..எந்த பொருளையும் களவாடவும் இல்லை..அதுவுமில்லாமல் அவளை பற்றி எந்தவொரு கம்ப்ளைன்டும் எதுவும் இல்லையே!..'
அதனால் அவளுக்கு இப்போது தேவைப்படுவது சிகிச்சை மட்டுமே என்று அந்த இன்ஸ்பெக்டரும் அதை ஒத்துக் கொண்டார்..
அதன்படி அவளிடமும் பேசி புரிய வைத்து, அதற்கான மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிய கார்த்திக், அவளது காப்பாளராக கையெழுத்திட, அம்சவேணி அவனை பாசத்துடன் பார்த்தாள்..
அவளது தலையை தடவி, "நீ எந்த தப்பும் செய்யல மா!.. சீக்கிரமே சரி ஆகிடுவ!.. உனக்குனு ஒரு நல்ல வாழ்க்கை கண்டிப்பா இருக்கு!.. அது உன் கையில தான் இருக்கு!.." என்று நம்பிக்கையுடன் பேசிவிட்டு வீடு வந்த சேர்ந்தான்..
இரவு போல வீடு வந்தவனை, வேகமாக விரைந்து வந்து வரவேற்ற வித்யா, அம்சவேணியை பற்றி விசாரிக்க, நடந்ததை விவரித்தான்..
"இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு பா!..சீக்கிரமே அவ சரி ஆகனும்!.. நாமும் அவளை அப்பப்ப போய் பார்க்கலாம்!.." என்று சிறு நிம்மதியுடன் உரைத்தாள் வித்யா..
"கண்டிப்பா டா!..ஏற்கனவே அதிலிருந்து வெளிவந்தவள் தானே!.. விதியோட விளையாட்டால திரும்பவும் அந்த நிலைக்கு போயிட்டா!.. அதனால மறுபடியும் மீண்டு வருவாள்!.." என்றவன்,
"சரி.. அலைஞ்சுட்டே இருந்ததுல இப்ப தான் பசியே தெரியுது!.. சாப்பிட எதாவது கொடுப்பியா?!.. இல்ல இப்படியே பட்டினி தானா?!.." கார்த்திக் கேட்க, அவனை முறைத்தவளை,
"இதான் என் பொண்டாட்டி!!.. இந்த பாசமான பார்வை இல்லைனா மனசு நிறைய மாட்டீங்குதுல!.." என்று சிரிப்புடன் கூறியவன், அவளது கன்னத்தை நிமிண்டி விட்டு சென்றான்..
அவன் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள நகர்ந்ததும், அதுவரை அவனை முறைத்தவள் சன்ன சிரிப்புடன் தலையாட்டி விட்டு அவனுக்கான உணவை எடுத்து வைக்க சென்றாள்..
இரவு உணவை முடித்துவிட்டு படுத்த இருவருக்குமே அம்சவேணி தவறானவளோ என்ற பயம் நீங்கியதும், ராஜேஸ்வரி கண் விழித்ததும் என்று அனைத்தும் சரியாக, இப்போது தான் நிம்மதியாக இருந்தது..
***************
அதன்பின்னர் நாட்கள் விரைந்து நகர, ராஜேஸ்வரியும் பிஸியோதெரபி மூலமா இத்தனை மாதங்களாக படுக்கையில் இருந்தவர் எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினார்..
அதற்கு பேத்தியுடன் சீக்கிரமே இயல்பாக விளையாடி கொஞ்சி மகிழ வேண்டும் என்ற உந்துதலும் ஒரு காரணம்!..
இதற்கு முன்பு வரை தாயோடு மட்டும் இருந்தவள், கார்த்திக் தந்தையானதில் ஒரு மகிழ்ச்சி என்றால், இப்போது தன்னோடே எப்போதும் இருக்கும் பாட்டியை கண்டு பவிக்குட்டிக்கு தான் ஏக குஷி!..
கார்த்திக்கும் தன் அன்னை மீண்டும் இயல்பாகி வந்ததில், மகிழ்ச்சி அடைந்தவன் வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் தாயோடும், தன் மகளோடும் களித்தான்..
அதை கவனித்த ராஜேஸ்வரி, "ஏன்டா கார்த்தி!?.. பொழுதன்னிக்கும் எங்களோடவே சுத்திட்டு இருக்கியே?!.. நீ ஒருத்தியை கல்யாணம் பண்ணுனியே ஞாபகம் இருக்கா உனக்கு?!.." என்று கேட்டார்..
"ஏன் இல்லாம?!.. அதெல்லாம் நல்லா திவ்யமா ஞாபகம் இருக்கே!!.." என்றவனிடம், "எது!!?.. திவ்யா வா?!.. உன் பொண்டாட்டி பேர் வித்யா டா!!.. அதை கூட மறந்துட்டியா?!.." என்று ராஜேஸ்வரி விளையாட்டாய் கேட்க..
"சோக்கு!!!.." என்று விட்டு அவரை முறைத்தவன், "நான் நாளைக்கு சிரிக்கிறேன் ராஜி மாதா!.. ஆனா இப்ப எதுக்கு திடீர்னு இதை கேட்டீங்க னு சொல்றீங்களா?!.." எனக் கேட்டான் கார்த்திக்..
அவன் கேட்டதை காற்றில் விட்டவர், வித்யாவையும் அழைத்து, "ஏன்மா வித்யா யாரெல்லாம் சேர்ந்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சது?!.." என்று வினவினார்..
"ஏன் ம்மா திடீர்னு கேட்கறீங்க?!.. என் ப்ரெண்டோட பேரன்ட்ஸூம், அப்றம் தாரிணி அக்காவும் இதோ இவரோட சேர்ந்து தான் ப்ளான் பண்ணி செய்தாங்க!.." என்று கார்த்திக்கை கை காட்டி சொல்ல..
"தாலியை கட்டுனதோட கடமை முடிஞ்சது னு விட்டுட்டாங்களா?!.. இதோ பாரு இவனுக்கு உன் பேர் கூட சரியா ஞாபகம் இல்ல!!.."என்று அவனை காட்டிக் கொடுக்க, கார்த்திக் திருதிருத்தான்..
"காலா காலத்துல நடக்க வேண்டியது எதாவது நடந்து இருந்தா இவனுக்கு உன் பேர் கூட மறந்து போகுமா?!.." என்று கேட்டு முடிக்கவும், வித்யா மனதின் அதிர்வை வெளியில் காட்டாமல் இருக்க பிரயத்தனப்பட்டாள்..
அவளது மனநிலை உணர்ந்த கார்த்திக், "ராஜி மாதா!!!.." என்று சத்தமிட, "என்னடா சவுண்ட் கூட்டுற!..கல்யாணம் ஆனா அடுத்து நடக்கறதை தானே சொன்னேன்!.."என இயல்பாக சொல்லவும்..
இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்தவன், "ஆமா!.. ஆமா!.. கல்யாணம் பண்ணி ஹனி மூன் கொண்டாடுற நிலைமைல தான் இருந்தேன் பாருங்க!.. பேசுறாய்ங்கயா பேச்சு!.." அவன் நொடிக்க..
"பார்ரா!!.. அப்ப கல்யாணம் எதுக்கு பண்ணுனீங்களாம்?!.. ஒருவேளை நான் எழுந்திருக்காமலே போய் இருந்தா என்ன செய்து இருப்பீங்க ஸாரு!!?.. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி னு இருப்பியா?!.." என்றார் காட்டமாக..
"அப்புடி எல்லாம் ஒன்னும் ஆகாது!.." என அவனது குரல் இறங்க, "ஓஹோ!!..அப்ப நான் முழுச்சுடுவேன் னு நம்பிக்கை இருக்கு ங்கற!.. அப்றம் ஏன் கார்த்திகைபாலா அவசரமா கல்யாணம் மட்டும் செய்தீங்க!!?.." என்று நக்கலுடன் வினவினார்..
'அச்சச்சோ இந்த அம்மா வேற இப்படி பாயின்ட் பாயின்ட்ஆ கேட்டு நாக்குல கொக்கி மாட்டுனா..இவளை சரிகட்டி பாப்பாவை பத்தி எப்படி சொல்ல முடியும்!?..'
'அதை எல்லாம் இந்தம்மா கிட்ட நான் எப்படி விளக்க முடியும்?!.. என்னை இப்படி மாட்டி விட்டுட்டியே சொக்கநாதா!..' என மைன்ட் வாய்ஸில் கடவுளிடம் கதறிக் கொண்டு இருந்தான் பையன்..
"என்னடா நான் கேட்டு ரொம்ப நேரமாச்சு!!?.. நீ என்ன இப்படி ஆடு திருடுன கள்ளன் மாதிரி முழிக்கிற?!.. என்ன திருகுதாளம் பண்ணுன?!.." என்று கார்த்திக்கிடம் கேட்டவர்,
"நீ சொல்லு மா?.. இவன் ஏன் இப்படி முழிக்கிறான் உனக்கு எதாவது தெரியுமா?!.."இறுதியாக வித்யாவிடம் கேட்டு முடித்தார்..
"யம்மா தாயே!.. ராஜி மாதா!!..உங்க மகன் நல்லா இருக்கனும் னு உங்களுக்கு ஆசையே இல்லையா?.. அவகிட்ட போய் கேட்கறீங்க!.."
"இனி என்னை என்ன பாடுபடுத்த போறாளோ!!?.." மனதிற்குள் சொல்வதாக நினைத்து சத்தமாக சொல்லி விட,வித்யா அவனை முறைத்துக் கொண்டு இருக்க, ராஜேஸ்வரி சிரித்து விட்டார்..
"சரி..சரி..கேட்டதுக்கு பதில் சொல்லு டா வாயாடி!.. உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் நடந்ததா இல்லையா?!.." என உடைத்து கேட்கவும், இருவரும் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிந்தனர்..
இவ்வளவு சீரியஸ் ஆக ராஜேஸ்வரி பேசிக் கொண்டிருக்க, விளையாடிக் கொண்டிருந்த பவிக்குட்டி ஓடி வந்து, "சாந்தி ஆன்தி வவ்வாங்களா பாத்தி!!?.." ஆர்வமாக கேட்க, ராஜேஸ்வரி விழித்தார்..