• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
54
கானல் - 52

சரவணன் கூறிய விபரங்களை கேட்டு வார்த்தைகள் அற்று எதுவும் கேட்க தோன்றாமல் அதிர்ச்சியில் இருந்த கார்த்திக்கிற்கு,

அவளது நிலையை எண்ணி கோபம் கொள்வதா?!.. இல்லை பரிதாபப்படுவதா?!.. என்று தெரியவில்லை..

தொடர்ந்து தன் சந்தேகங்களை முன் வைத்த சரவணன், "அப்படி ஓடிப் போன இந்த அம்சவேணி எப்போ இந்த ஊருக்கு வந்தாள்?!.."

"எப்படி நர்ஸா உங்க வீட்டுக்குள் வந்தாள்?! ங்கற எல்லா கேள்விகளுக்கும் விடையை அவங்க கிட்ட தான் விசாரிக்கனும் கார்த்திக்!.." என்று அடுத்து செய்ய வேண்டியதும் உரைத்தார்..

"நாம போலீஸோட ஹெல்ப் கேட்கறது நல்லது னு தோணுது கார்த்திக்!.. அவங்க வந்து விசாரிச்சா தான் அம்சவேணி கிட்ட இருந்து உண்மையை வாங்க முடியும்.." என்று அறிவுரையும் கூறிட,

அதுவரை 'இவளை நம்பி இத்தனை நாட்கள் இருந்தோமே!' என்று எண்ணியவன், "ஆனா இப்படி ஒரு மனநிலைல இருக்கறவ இத்தனை நாளா எந்த சந்தேகமும் வராத மாதிரி எப்படி இருந்தாள்?!.."

"அதுவுமில்லாம தன்னை வெளிப்படுத்தாம இருந்தது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு சார்!!.." என கார்த்திக் அதிர்ச்சியோடு சொன்னவன்..

"நான் ஊரிலிருந்து வரும் போதெல்லாம் எங்கிட்ட ரொம்ப உரிமையோட பேசுவா சார்!..நான் கூட உறவுக்காரன் ங்கற உரிமையில் பேசுறா போல னு நினைச்சேன்!.."

"இப்ப நீங்க சொன்ன அப்றம் தான் தோணுது அவ என்னையும் அவளோட ஆசைக்கு வளைக்க பார்த்திருக்காள் னு!.." என தனக்குள் தோன்றியதை கூறினான்..

"மே பி!..ஆனா அவங்க உங்க கிட்ட பழகினது உறவுக்கார உரிமையா தான் இருக்கும் கார்த்திக்!.. ஏன்னா அவங்களுக்கு உங்க வீடு ஒரு கம்ஃபர்ட்டான இடமாக இருக்கும்!.."

"அதை கெடுத்துக்க விரும்பியிருக்க மாட்டாங்க!..அவங்கள கண்காணிக்க உங்க வீட்ல யாரும் ஆள் இல்ல.. அன்ட் நீங்களும் அடிக்கடி வர்றதில்ல.."

"அதனால அவங்களோட அர்ஜ் தீர்த்துக்க எந்த இடையூறோ இல்ல கேள்வி கேட்கற ஆளோ யாரும் இல்லையே!.." என்று சரவணன் அவரது யூகத்தை முன் வைத்தார்..

கார்த்திக் சற்று படபடப்புடன்," சார்!.. அவ திரும்ப வீட்டுக்கு வந்துட்டதாகவும், அவளோட ரூம்ல போய் கதவடைச்சதாகவும் என் வைஃப் கால் பண்ணுனாங்க!..என்ன பண்ண போறாள்னு தெரியல!.."

"நான் உடனே வீட்டுக்கு கிளம்பறேன் சார்!.. உங்களுக்கு தெரிஞ்ச அல்லது உங்க ஃப்ரெண்ட் யாராவது போலீஸ்ல இருந்தா அவங்க கிட்ட விசயத்தை சொல்லி ஹெல்ப் கேட்க முடியுமா?!.."

"ஏன்னா அவ வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் ஆச்சு!.." என பரபரப்பாக கூறியவனிடம் அவரும் தனக்கு தெரிந்த ஒரு இன்ஸ்பெக்டர் நண்பர் இருப்பதாக சொன்னார்..

"நீங்க சொல்றதும் சரி தான் கார்த்திக்!.. அவங்க இப்போ என்ன மனநிலைல இருக்காங்க னு தெரியல.."என்ற சரவணன்,

"இத்தனை நாள் யாரும் இல்லாம ஃப்ரீயாக இருந்த அவங்களுக்கு, இப்ப நீங்க இங்கேயே இருக்கறது ஒருவேளை டிப்ரஷன் க்கு கொண்டு போய் இருக்கலாம்!.."

"அதனால நீங்க உடனே வீட்டுக்கு கிளம்புங்க!.. நான் அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்!.." அவரிடம் விவரம் கூறி உதவி கேட்பதாக உறுதி அளித்தார்..

கார்த்திக் வீட்டிற்கு விரைந்து வந்து வித்யாவிடம் அவள் வெளியே வந்தாளா என விசாரிக்க," இன்னும் இல்ல பா!.. ஏன் என்னாச்சு?!.. எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்கீங்க?!.." என வினவினாள் அவள்..

அதற்குள், " காத்திப்பா!.." என்று அவனிடம் தாவிய சின்ன குட்டியை, "வாடா குட்டிமா!.." என்று வேகமாக அள்ளி இறுக அணைத்துக் கொண்டான் அவன்..

அவனது மனம் இன்னும் சமநிலைக்கு வரவில்லை.. அம்சவேணிக்கு சிறு வயதில் நேர்ந்ததாக கூறிய சம்பவம் அவனை பதற வைத்து இருந்தது..

சின்னஞ்சிறு பிஞ்சிடம் எப்படி இந்த மாதிரி மிருகங்களுக்கு நடந்து கொள்ள மனம் வருகிறது.. ஆண் இனத்திற்கே மாபெரும் இழுக்கு!.. இம்மாதிரி வெறி பிடித்த மிருகங்கள் என்று அவனது மனம் ஆற மறுத்தது..

அவனது வித்தியாசமான செய்கையை பார்த்து அவனது மனம் ஏதோ பதட்டத்தில் இருப்பதை உணர்ந்து, "என்னாச்சு கார்த்திப்பா?!.. ஏன் உங்க முகம் என்னவோ மாதிரி இருக்கு?!.." என குழப்பமாக வினவினாள் அவள்..

"சொல்றேன் மா!.. அம்சவேணி உள்ள போனவ மறுபடியும் வெளியேவே வரலையா?!.." என மீண்டும் அதே கேள்வியை கேட்டான் அவன்..

"அதான் வரல னு முதல்லேயே சொன்னேனே பா!.. அம்மா தான் மறுபடியும் கண் விழிச்சாங்க!.. பாப்பாவை கூட்டிட்டு போய் காட்டினேன்!.."

"முதல்ல இவ தான் கொஞ்சம் பயந்தாள் அப்றம் அவங்க நார்மலா சிரிச்சு பேசுனதும் ஓரளவுக்கு இவளும் இயல்பாகிட்டா!.." என்று அவன் இல்லாத போது நடந்ததை கூறியவள்,

"சரி இப்ப சொல்லுங்க!..என்ன தான் ஆச்சு?!..நீங்க ஏன் இப்படி வியர்ட்ஆ நடந்துக்குறீங்க?!.." என ஒன்றும் புரியாமல் குழப்பமாக வினவினாள் வித்யா..

வித்யாவின் கேள்விக்கு பதில் அளிக்காமல், குழந்தையை தன்னோடு அணைத்து இருந்தவன் ஓரளவு இயல்புக்கு வர, " குட்டிமா பாட்டி கூட பேசுனீங்களா?!!.. என்ன சொன்னாங்க?!.." என பிள்ளையிடம் வினவினான்..

"ம்ம்!!!.. பாத்தி கூத பேசுனேனே!.. அவங்க எக்கு முத்தா எல்லா கொத்தாங்க!.. இன்னு கொஞ்ச நாள்ல எங் கூத வெளயாத வவ்வாங்காம்!!.." என்று உற்சாகமாக சொன்னவள்,

ஆனா அவங்கே அப்பி சொல்லித்து திம்ப தூங்கித்தாங்க!.." என்று ஒரு ஏமாற்றத்துடன் சின்னவள் முடிக்க,

"எழுந்த அப்றம் உங்ககூட விளையாடுவாங்க சரியா!?.. இப்ப பாப்பா போய் விளையாடிட்டு இருங்க!.." என்று அவளை அனுப்பி விட்டவன்,

"நீ உள்ளே வா டா விதுமா!.. "என்று வித்யாவை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்கு செல்ல, அவனது செயலில் ஒன்றும் புரியாமல் அவன் பின்னாலேயே சென்றாள் வித்யா..

அறைக்குள் நுழைந்ததும், அவளை இழுத்து இறுக அணைக்க, திடீரென ஒரு நொடியில் நடந்த அவனது செயலில் அவளது உடல் நடுக்கம் கண்டது..

இதுவரை இருவருமே மன உணர்வுகளின் கொந்தளிப்பில் அனிச்சையாய் ஒருவரையொருவர் அணைத்து இருக்கிறார்கள். அப்போது அவள் வித்தியாசமாக எதுவும் உணர்ந்ததே இல்லை..

இப்போது அவனது அணைப்பில் நடுங்கும் அவள் தேகத்தைக் கூட உணராமல், அவன் பிடி அப்படியே இருக்கவும், அவன் மனம் எதையோ நினைத்து வேதனை அடைந்துள்ளதை வித்யா உணர்ந்து கொண்டாள்..

அதனால் அவளாகவே அவனை அணைத்து, அவள் தோளில் தலை சாய்த்திருந்த அவனது கேசத்தை தாயின் பரிவுடன் வருடி ஆற்றுப்படுத்தினாள்..

"என்னாச்சு கார்த்திப்பா?!.. ஏன் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஆ இருக்கீங்க?!.. அம்சவேணி விசயமா?!.." என்று ஓரளவு அனுமானித்து கேட்க, அவன் அதே நிலையிலே இருந்து ஆமோதித்து தலையசைத்தான்..

"ஏன் அவ எதாவது ஃபோர்ஜரி பண்ணி இருக்காளா?!.." என வித்யா கேட்டதும், இல்லை என்றவன் அவளிடம் இருந்து விலகி, சரவணன் அவனிடம் சொன்ன விசயத்தை மெதுவாக வித்யாவிடம் உரைக்கவும்,

அதுவரை அவள் ஏதோ தவறிழைத்தவள் என்று எண்ணிக் கொண்டு இருந்த வித்யா, அவளது கதையை கேட்டு அப்படியே உறைந்து நின்றாள்..

வித்யாவின் நிலையை கண்ட கார்த்திக், அவளது தோளை குலுக்கி இயல்புக்கு கொண்டு வந்து என்னவென்று கேட்டான்..

"இல்ல..ஓரளவு விபரம் தெரிஞ்ச பொண்ணா இருக்கும் போது ரெண்டு நாய்ங்களால ஒரு தடவை நான் பட்ட வேதனையே ஆறாத வடு மாதிரி மனசுக்குள்ள இருக்கும் போது.." என்று வழியும் கண்ணீரோடு கூறியவள்,

"ஒன்னுமே புரியாத அந்த சின்ன வயசுல அம்சவேணி எவ்ளோ வேதனைப்பட்டு இருப்பா?!.. அதுவும் எட்டு வருசமா!!!..அவன் எல்லாம் மிருகத்தை விட கேவலமான ஜென்மம்!.."

"ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணோட வாழ்க்கையையே மாற்றி கெடுத்து சீரழிச்சுட்டானே!!.." என்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டே ஆக்ரோஷமாக கூறினாள்..

சில நிமிடங்களில் இயல்புக்கு வந்தவள்," சரி!!.. முடிஞ்சதை பற்றி பேசி என்ன ஆக போகுது!!..இப்போ என்ன பண்றதா இருக்கீங்க பா?!.." என்று கார்த்திக்கின் அடுத்த நடவடிக்கை பற்றி கேட்டாள்..

சரவணன் சொன்னது போல அடுத்த நடவடிக்கை பற்றி கார்த்திக் சொன்னதும், "அவளுக்கு இப்ப தேவைப்படுறது ட்ரீட்மெண்ட் கார்த்திப்பா!.. பனிஷ்மென்ட் இல்ல!.." என்றாள் அவள்..

"புரியுது டா விதுமா!.. ஆனா அவ எப்படி இங்க நர்ஸ்ஆ வந்தாள்?!.. இவ்ளோ நாளா எங்க இருந்தா?!.. இந்த மாதிரி நிறைய விசயங்களை விசாரிக்க தான் போலீஸ்!.."

"அதுக்கு அப்றம் என்ன பண்ணலாம் னு டிசைட் பண்ணுவோம்!..ஆனா அதுவரை அம்மாக்கு எதுவும் தெரிய வேண்டாம்!.. அவங்களே இப்ப தான் ரெகவர் ஆகி இருக்காங்க!.." என்று அவன் சொன்னதும், வித்யாவிற்கும் அது சரியெனப்பட்டது..

வித்யாவிடம் தனது திட்டத்தை கூறிய கார்த்திக், அம்சவேணியின் அறைக்கதவை சென்று தட்ட, சில நொடிகளில் கதவை திறந்து வெளியே வந்தவள் சோர்வுடன் காணப்பட்டாள்..

அவளிடம் விபரம் ஏதும் சொல்லாமல்,"உங்கிட்ட பேசனும் அம்சவேணி!.. கொஞ்சம் எங்கூட வர்றியா?!.." என்று அவன் அழைத்ததும், யோசனையானவள், பின்னர் வர சம்மதித்தாள்..

வீட்டில் வைத்து விசாரித்தால், ராஜேஸ்வரி இப்போது தான் சரியாகி இருப்பதாலும், குழந்தை இருப்பதாலும் தேவையில்லாத பிரச்சனை என்றெண்ணிய கார்த்திக்,

சரவணனது அலுவலகத்தில் விசாரிக்கலாம் என முடிவு செய்து அவரிடம் முதலிலேயே கூறி ஏற்பாடு செய்து இருந்தான்..

அதன்படி அவரது அலுவலகத்தில் சென்று இறங்கியதும், 'என்ன இடம் இது!? இங்கு எதற்கு?! ' என்று குழம்பியவள் ஒன்றும் பேசாமல் அவனுடன் உள்ளே செல்ல, அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்து சற்று பயந்தாள்..

"இங்கு எதுக்கு அத்தான் வந்து இருக்கோம்?!.." என்று கேட்டவள் பின்னர் பதட்டத்துடன், "என்னை நீங்க நம்பலையா?!.." எனக் கேட்டாள்..

"நம்பறது பிரச்சனை இல்ல அம்சவேணி!.. ஆனா நீ சில உண்மைகளை சொல்லி ஆகனும்!..அதுக்கு தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்கு!." என்ற கார்த்திக்..

அவளைப் பற்றி சொன்னதும் முதலில் அவனுக்கு எப்படி தெரிந்தது என்றதில் அதிர்ச்சியானவள், பின்பு 'தான் அப்படிப்பட்டவள் இல்லை!' என்று ஆக்ரோஷமாக கத்தினாள்..

சரவணன் அவளைப் பற்றி சேகரித்த விசயங்களை விளக்கவும், அவர்களுக்கு அவளைப் பற்றி தெரிந்ததில் தன்னை கேவலமாக பார்ப்பார்களே என்று கதறி அழுதாள்..

"இங்க பாரு மா உன்னை குற்றம் சொல்லவோ இல்ல ஜெயில்ல போடவோ நான் இங்க வரல!.. என்னை பார்த்து பயப்படாம அவன் யாரு னு சொன்னா அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம்!.." என்று

இன்ஸ்பெக்டர் சொல்ல விரக்தியாக சிரித்தவள், "செத்தவனுக்கு எப்படி சார் தண்டனை வாங்கி தருவீங்க!?.." என கேள்வி எழுப்பிட, அனைவரும் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்தனர்..

"அவனுக்கு அப்பவே ஒரு ஆக்சிடென்ட்ல ஆண்மை போயிடுச்சு!.. என் வாழ்க்கையையே சீரழிச்ச அந்த நாய் அதனால கொஞ்ச நாள்ல தற்கொலை பண்ணிடுச்சு!.." என்று சொன்னாள்..

"ஆனா நீ ஒருத்தனோட ஓடிப் போனதா சொன்னாங்களே!!.. அப்றம் எப்படி இங்கே திரும்பி வந்தாய்?.. அதுவும் நர்ஸா எங்க வீட்டுக்கே?!.." என்று புரியாமல் கார்த்திக் கேட்கவும்,

அதுவரை கோபம், கொந்தளிப்பு, விரக்தி என்று மாறி மாறி காட்டிய அவளது முகம் மென்மையாக மாறியது.

ஒரு மந்தகாச புன்னகையுடன், "அதுக்கு காரணம் என்னோட ராகுல்! என் வாழ்க்கையில் கடவுள் தப்பி தவறி எனக்கு கொடுத்த வரம் அவன்!." என்று சிலாகித்துக் கூறினாள் அம்சவேணி.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top