• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
53
கானல் - 51

கார்த்திக், வித்யாவை மணம் முடித்தது பற்றி சொன்னதும், கோபம் கொள்வாரோ என்று எண்ணி வாசலிலேயே தயக்கத்துடன் நின்றிருந்தாள் வித்யா..

கார்த்திக் சொன்னதை கேட்ட ராஜேஸ்வரி, கதவோடு ஒட்டி நின்றவளை, எட்டிப் பார்த்து 'வா' என கையை காட்டி அழைத்ததும், ஓடி வந்தவள் அவரின் காலை தொட்டு வணங்கிட, அவரும் ஆசிர்வதித்தார்..

"பார்ரா!!.. ஒரு நாளாவது என் காலை தொட்டு கும்பிட்டு இருக்கியா?!.. மாமியார் ன்னே உடனே சோப் போடுறீங்களா மேடம்?!.." என கார்த்திக் சன்ன சிரிப்புடன் கேலி செய்தான்..

"போடா படவா!!..நீ தான் என் கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணுன!.. ஆனா உனக்கு எங்கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும் னு தோணுச்சா?!.."

"பாரு என் மருமகளை!!.. அவளுக்கு தெரியற மரியாதை கூட உனக்கு தெரியல!.. நீ செய்த விசயத்துலேயே உருப்படியான காரியம் இவளை கட்டுனது ஒன்னு தான்!!.." என்று மகனை வாரினார் தாய்..

"ராஜி மாதா!!..என்ன மருமக வந்ததும் மகனை கலாய்க்குறீங்க!!?.. இவள சரி கட்டுறதுக்குள்ள நான்பட்ட பாடு எனக்கு தானே தெரியும்!.." என அதிர்ச்சியோடு ஆரம்பித்தவன் சலிப்புடன் முடித்தான்..

"ஆமா ம்மா!!.. இவர் ரொம்ப தான் பாடுபட்டாரு!.. கோவில்ல பெருமாளே னு சாமி கும்பிட்டுட்டு இருந்தவ கழுத்துல தாலியை கட்டிட்டு பேச்சைப் பாரு!!.." என்று

பதிலடி கொடுக்கும் வேகத்தில் வித்யாவும் பேசி விட்ட பின்பு தான், ராஜேஸ்வரி எதுவும் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்றெண்ணி அவரை பார்த்தாள்..

அவரோ மெல்ல சிரித்துக் கொண்டு,"இந்த பைய இப்படி தான் மா!.. எதாவது கிறுக்குத்தனமா செய்வான்!.. பாவம் நீ இனிமே இவனை எப்படி சமாளிக்கப் போறியோ?!!.." என்று

அவர் அவனை கிண்டல் செய்து அவளுக்காக பரிதாபப்பட்டு பேசவும் வித்யாவிற்கு அவர் தவறாக எடுக்காததை எண்ணி 'அப்பாடா' என்று இருந்தது..

பின்னர் தான் இருந்த அறையை சுற்றி நோட்டமிட்ட ராஜேஸ்வரி,"நீங்க ரெண்டு பேரும் சேலத்துல வேலை செய்றீங்க னு சொன்னீங்க.."

"அப்ப இவ்ளோ நாளா நான் மட்டும் தனியா இங்கே இருந்தேனா?!..அப்படி இல்லனா என் கூட யார் இவ்ளோ நாளா இருந்தா?!.." என்று அவர் கேட்டதில்..

"என்ன ராஜி மாதா பேசறீங்க?!!..சின்ன புள்ள தனமா!.. நீங்க மட்டும் எப்படி தனியா இருக்க முடியும்!..உங்களுக்கு முழுநேர நர்ஸ் அரேன்ஜ் பண்ணி இருந்தேன்!.."

"நான் தனியா அங்க இருந்துட்டு லேடி நர்ஸ் ம் என் கூடவே இருந்தால் பார்க்கறவங்க தப்பா பேசுனா பிரச்சனை ல, அதான் உங்கள சேலத்துக்கு கூட்டிட்டு போக முடியல!.." என்ற கார்த்திக்கின் விளக்கத்தில்..

அதில் யோசனையான ராஜேஸ்வரி, "நர்ஸ்ஆ!!?.. ஆனா யார் அது?!..இப்ப எங்கே?!.. உங்கள தவிர யாரும் இங்க இல்லயே?!.." என்று சந்தேகமாக கேட்டார்..

அவர் அவ்வாறு கேட்டதும் கார்த்திக்கும் வித்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள," என்னடா?!..எதுக்கு முழிக்கிறீங்க?!..எதாவது பிரச்னையா டா?!.." என்றார்..

"இல்ல ம்மா!.. இதுவரை உங்களுக்கு கேர் டேக்கரா இருந்தது உங்கண்ணன் பொண்ணு அம்சவேணி!.." என்றான் கார்த்திக்..

"அண்ணனா?!..எந்த அண்ணன்?!.. யாரை டா சொல்ற?!.." என்று அவர் குழப்பமாக வினவ, அம்சவேணியை பற்றி சொன்னான் கார்த்திக்..

"அவளா??!!.. அவ எப்படி டா இங்க?!.. அதுவும் நர்ஸ் னு வேற சொல்ற?!.." என்று குழப்பத்துடனே ராஜேஸ்வரி கேட்க, அவள் சொன்ன கதையை கூறினான் அவன்..

இவ்வளவு நேரமும் சோர்வுடன் பேசிக் கொண்டு இருந்த ராஜேஸ்வரி, "முதல்ல அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பு!!.. என் குடும்பத்தை பிரிச்சதே அந்த சண்டாளி தான்!!.." என்றார் ஆவேசத்துடன்!..

அவரது கோபம் கண்டு ஒன்றும் புரியாமல் கார்த்திக்கும், வித்யாவும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொள்ள, அவர் உணர்ச்சிவசப்படுவதை அறிந்து..

"சரி அனுப்பிடலாம்!..நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க ம்மா!.. நான் டாக்டருக்கு ஃபோன் பண்ணி வர சொல்றேன்!.." என்று கார்த்திக் அவரை சமாதானப்படுத்தினான்..

இதுவரை பேசியதே அதிகம் என்பதால் அவரது உடலும் மீண்டும் ஓய்விற்குச் சென்றது..

கார்த்திக் மருத்துவருக்கு அழைத்து விசயத்தை சொல்ல, சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த அவரும் ராஜேஸ்வரியை சோதனை செய்து விட்டு சில மருத்துவ உபகரணங்களை நீக்கியவர்,

அவருக்கான சிகிச்சை முறைகளையும், உணவு வகைகளையும் அதை எப்போது தொடங்க வேண்டும் என்பதையும் விளக்கி கூறினார்..

வீட்டில் இத்தனை நடந்துக் கொண்டிருக்க, காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அம்சவேணி, மாலையில் வீடு வந்து சேர்ந்தாள்..

மருத்துவர் சொன்னதை செய்வதற்காக கார்த்திக் வெளியே சென்றிருக்க, வீட்டிற்கு திரும்பி வந்த அம்சவேணியை கண்ட வித்யா,

'அப்படி என்ன இவ பண்ணி இருப்பா!?. அம்மா அவ்ளோ கோபப்படுறாங்க!!..' என்ற சிந்தனையுடன் பார்த்தாள்..

வீட்டிற்கு வந்த அம்சவேணியோ, ராஜேஸ்வரியின் அறைக்கு அவரது நிலையை சோதனை செய்ய கூட செல்லவில்லை, நேராக தனது அறையில் சென்று அடைந்து கொண்டாள்..

அவளது செயலையும் அவளையும் விசித்திரமாக பார்த்த வித்யா, கார்த்திக்கிற்கு அழைத்து அவள் வந்த விபரத்தையும், அவளது நடவடிக்கையும் கூறினாள்..

அதுவரை தாயின் சிகிச்சைக்காக அலைந்து ஓரளவு அனைத்தையும் முடித்தவன், அந்த டிடெக்டிவ்வை அழைத்து, சந்திப்பதற்கு அனுமதி கேட்டு அங்கு சென்றான்..

அவரிடம் சென்றவன், தன் தாய் கண் விழித்ததையும் அதனால் தான் காலையில் வர இயலவில்லை என்பதையும் உரைக்க, அவருக்கும் மகிழ்ச்சி தான்..

"அம்மா ரெகவரி ஆனது ரொம்ப சந்தோஷமான விசயம் கார்த்திக்!..அப்றம் நீங்க விசாரிக்க சொன்ன பொண்ணு பற்றி அல்மோஸ்ட் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கேன்!.."

"கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!.." என்று அந்த டிடெக்டிவ் சரவணன் சொன்னதும், கார்த்திக் அப்படியென்ன விசயமாக இருக்கும் என புரியாமல் பார்த்து இருந்தான்..

"நீங்க சொன்ன ஊர் பேர், அவங்க ஃபோட்டோ எல்லாமும் ரொம்ப ஹெல்ப்ஃபுல்ஆ இருந்துச்சு.. அதனால சீக்கிரமே அவங்கள பற்றிய டீடெய்ல் கலெக்ட் பண்ண முடிஞ்சது!.."

"அதை வைச்சு அவங்களோட அந்த ஊருக்கு போய் விசாரிச்சேன்!.." என தொடங்கியவர் அங்கு கிடைத்த விசயங்களை விளக்கினார்..

ராஜேஸ்வரியின் பிறந்து வளர்ந்த ஊரான கோவிலூரில் தான் அவரது அண்ணன் சண்முகசுந்தரத்தின் வீடும் இருந்தது.. கார்த்திக் தன் சிறு வயது நினைவுகளை வைத்து அந்த ஊர் பெயரை சொல்லி இருந்தான்..

ராஜேஸ்வரியின் குடும்பம் ஒன்றும் அவ்வளவு வசதியானவர்கள் அல்ல.. கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் தான் அவர் பிறந்து வளர்ந்தார்..

ராஜேஸ்வரியின் வாலிப வயதில் அவர்களது பெற்றோர் ஒரு விபத்தில் இறந்திட, ராஜேஸ்வரியின் பொறுப்பு அப்போது தான் திருமணம் முடித்திருந்த சண்முகசுந்தரத்தின் மீது வந்தது..

ராஜேஸ்வரியின் கல்யாண வயதில், என்ன தான் வரதட்சணை வேண்டாம் என்று கேட்டு வந்த வரனுக்கு மணம் முடித்தாலும் திருமணத்திற்கான செலவுகள் அதிகம் ஆனதில்,

அந்த கடனை அடைக்க சண்முகசுந்தரமும், அவரது மனைவி வசந்தாவும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம்..

சில வருடங்களில் கடனை அடைத்து, அவரிடம் இருந்த சேமிப்பில் சிறு தொழிலையும் தொடங்கினார் சண்முகசுந்தரம்.. அந்த சமயத்தில் தான் அம்சவேணி பிறந்தாள்..

அவளுக்கு ஆறு வயது இருக்கும் போது, சண்முகசுந்தரத்தின் தொழிலில் நஷ்டம் ஏற்பட, அவர்களது வாழ்க்கை மீண்டும் வறுமைக்கு தள்ளப்பட்டது..

இதனால் அன்றாட செலவுகளுக்கே, அம்சவேணியின் பெற்றோர் இருவரும் மீண்டும் பணிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை!..

இருவரது பணி முடிந்து வீடு சேர இரவானதால், அம்சவேணியை பார்த்துக் கொள்ள யாருமில்லாமல் திண்டாடிய வசந்தாவிற்கு,

பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதாவும் அவளது கணவனும் அம்சவேணியை பார்த்துக் கொள்வதாக சொல்லி உதவி செய்ய முன்வந்தனர்..

அம்சவேணி அருகிலிருந்த ஆரம்பப்பள்ளியில் இருந்து வந்ததும், அவர்களது வீட்டிற்குச் சென்று பெற்றோர் வரும்வரை அங்கிருப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்..

அங்கு தான் அவளது விதி விளையாடியது..கீதாவும் சில நாட்கள் அம்சவேணி வரும் வேளைகளில் வெளியில் சென்று விட,

அவளது கணவன் அந்த சிறு பெண்ணிற்கு உணவு தருவது போல அதில் உணர்ச்சியை தூண்டும் மாத்திரையை கலந்து கொடுத்து அவளை உண்ண செய்து வந்தான்..

அவள் அதை உண்ட பின், எதுவும் புரியாமல் இருந்த, எட்டு வயதேயான அந்த சின்னஞ்சிறு குழந்தையை, தன் இச்சைக்கு பலியாக்கி உள்ளான்..

அவனது செயலில் பயந்த அவளிடம், இதை வீட்டில் சொன்னால் அவளது பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளான்.. அதில் பயந்த அம்சவேணியோ தனது வீட்டில் எதுவும் உரைக்காமல் இருக்க,

நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி எடுத்துக் கொண்ட அந்த மருந்தின் வீரியத்தில் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட, அவளது எதிர்ப்புகள் குறைந்தன..

இப்படியாக அவளுக்கு அந்த மாத்திரைகளை கொடுத்து தன் காம இச்சையை தீர்த்த அந்த மிருகம், சில வருடங்களாக தொடர்ந்து செய்து வந்தது..

அவளும் அந்த கொடுமைக்கு அடிமையாக, மாலை வந்ததும் அவளாகவே அவனை தேடி செல்ல தொடங்கினாள்..

அவள் உண்ட அந்த மருந்தால் அவளது உடலிலும் மாற்றம் ஏற்பட தொடங்கியது.. சிறு பெண்ணை போல் இல்லாமல் அவளது மேனி அதீத வளர்ச்சி அடைய,

ஏன் என்று புரியாமல் இருந்த வசந்தாவிடம், 'அது அவளது உடல்வாகு போல' என்று சிலர் கூறியதில், அப்படியும் இருக்குமோ என்றெண்ணி கண்டு கொள்ளாமல் இருந்தார்..

நாட்கள் செல்ல செல்ல மருந்தின் வீரியம் குறையும் வேளையில் 'தான் செய்வது தவறோ!?' என்று அம்சவேணிக்கு தோன்றிட, தன் தாயிடம் மெதுவாக உரைத்தாள்..

முதலில் அதிர்ச்சி அடைந்த வசந்தா, கணவனிடம் இதை சொன்னால் இருவரையும் கொலையே செய்து விடுவார் என்று பயந்து அவரிடமும் மறைத்திருக்க,

அந்த மாத்திரைகளால் ஹார்மோன் தூண்டப்பட்ட அம்சவேணியால் அந்த பழக்கம் இல்லாமல், மிகவும் வெறி பிடித்தாற் போல நடந்து கொள்ளவே, அவள் அவனை தேடிப் போவதை தடுக்க இயலாமல் இருந்தாள் வசந்தா..

எட்டு வருடங்களாக அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்து சுகம் கண்ட அந்த நாயின் செயலுக்கு அவனது மனைவியும் உடந்தை..

அவனது காமப்பசியை தீர்க்க இயலாமல் திண்டாடியவள், இந்த சிறு பெண்ணை அவன் நாடுவதால் தனக்கு விடுதலை என்றெண்ணி, அவனது செயலை வெளியே சொல்லாமல் மறைத்து காத்து வந்தாள்..

பல வருடங்கள் சாப்பிட்ட அந்த மாத்திரையின் வீரியத்தால் நிம்போமேனியாக்(பாலுறவு மிகை வேட்கை கொண்ட பெண்) ஆன அம்சவேணியை அவனால் திருப்தியாக்க இயலாமல் போக, வேறு ஆளை அவள் தேடி தேர்ந்தெடுத்தாள்..

பள்ளிப்படிப்பை முடித்த போது, பள்ளியின் அருகில் இருந்த செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடைப் பையனை தனக்கான ஆளாக மாற்றி அவனுடன் யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது சல்லாபித்தாள் அவள்..

சண்முகசுந்தரத்திற்கு இந்த விசயம் தெரிய வந்த போது அதிர்ச்சி அடைந்து அவளை அடித்தே துவம்சம் செய்யும் போதும், அவளது நிலையை பற்றி மூச்சு காட்டாமல் இருந்தாள், தாய் என்ற பேரில் இருந்த வசந்தா..

ஊரில் உள்ள அனைவருக்கும் அவளது விசயம் தெரியவர, அனைவரும் அவளை இழிவாக பேசவும், ஒரு நாள் அவனுடன் ஊரை விட்டே சென்று விட்டாள்..

மகளது செயலால் மனமுடைந்த சண்முகசுந்தரமும், அவளைப் பற்றி தெரிந்தும் கணவனிடம் சொல்லாமல் மறைத்த வசந்தாவும்.. அதன் பின்னர்

ஊரின் பேச்சுக்களை தாங்க இயலாமல் வட மாநிலத்திற்கு சென்று விட்டனர் என்று அங்கு இருந்த சிலர் தகவல் சொன்னதாக டிடெக்டிவ் சரவணன் முடித்த போது,

கார்த்திக் விவரிக்க முடியாத அதிர்ச்சியில் உறைந்து இருந்தான்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top