• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

கானல் - 43

Member
Joined
Sep 12, 2025
Messages
44
கானல் - 43

கார்த்திக்கிடம் பாலா மதுவை தவிர்ப்பதற்கான காரணத்தை சொல்லி முடிக்கவும், கார்த்திக் அவன் சொன்னதை கேட்டு விழித்து நிற்க,

"அடப்பாவி!!.. இந்த மொக்கை காரணத்தை முதல்லேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேடா!!.." என்ற கேள்வியுடன் அவனது தோளில் ஓர் அடி, இடி போல் விழுந்தது..

"யம்மா!!!.." என்ற அலறலுடன் திரும்பிப் பார்த்த பாலா, அங்கே மதுமதி நிற்பதை கண்டு திகைத்தான்..

பின்பு, "நீ இன்னும் போகலையா?!!.." என அதே திகைப்புடன் பாலா அவளிடம் கேட்க,

"ம்ம்.. போயிருந்தா உன்னோட இந்த மொக்கை காரணத்தை எப்படி தெரிஞ்சுக்கிறதாம்!!?.." என்று அவள் உதட்டைச் சுழித்து எதிர்க்கேள்வி கேட்டாள்..

"நானே சூழ்நிலை கைதியாகிட்டேன்னு எவ்ளோ ஃபீலிங்கோட சொல்லிட்டு இருக்கேன்!.. உனக்கு அது விளையாட்டா இருக்கா?!.." பாலா மதுவிடம் கடுப்புடன் கேட்டான்..

"ஆமா ஆமா.. இவரு அப்படியே பத்து கொலையை அனாமத்தா பண்ணிட்டு, ஆன்ட்ராய்டு ஃபோன் சாட்சியினால கைதி ஆகிட்டாரு!.. போடா பொட்டேட்டோ!!.." என்று மது அவனை கலாய்க்க..

"எதேஏஏ!!.." என அதிர்ந்தவன், "உனக்கு எப்படி என்னோட நிலைமை புரியும்..போடி!..குள்ள கத்திரிக்கா!!.." என்று அவளை திட்டுகிறானாம்..

அவர்களின் சண்டையில் இடைபுகுந்த கார்த்திக், "அடேய்!!.. டாம் அன்ட் ஜெர்ரி!.. கொஞ்சம் உங்க சண்டையை நிப்பாட்டுங்கடா!!.." என்று சத்தமிடும் போது, மதுமதிக்கு அவளது அன்னையிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது..

அழைப்பை ஏற்றவள் "சொல்லுங்கம்மா!.." என்றிட,"எங்கே இருக்க மது?!.." என அவளது தாய் கலைச்செல்வி கேட்டார்..

அவரது கேள்விக்கு, "நம்ம கார்த்திக் சார், வீட்டுக்கு இன்வைட் பண்ணி இருந்தாங்க..அதான் அங்க வந்து இருக்கேன்!.." என்று பதில் அளித்தாள்..

"ஏன்டா எதாவது விசேஷமா?!.." என்ற தாயின் கேள்வியில், "விசேஷம் எல்லாம் ஒன்னும் இல்லம்மா!..நான் ஒரு விளங்காதவனை லவ் பண்றதா உங்க கிட்ட சொன்னேன்ல.."

"அவன் கார்த்திக்கோட ஜூனியராம்!.. அவரை பார்க்க வந்திருந்தான்.. அதான் கார்த்திக் சார் ரெண்டு பேரையும் வீட்டுக்கு இன்வைட் பண்ணி இருந்தாங்க.." என்று

அவள் இயல்பாக சொல்லிக் கொண்டு போக, தாய் மகளின் நண்பர்கள் போன்ற உரையாடலை கண்டு, பாலா வாயை பிளந்து நின்று இருந்தான்..

மதுவிற்கும் அவள் தாயிற்குமான பிணைப்பை பற்றி கார்த்திக்கிற்கு தெரியுமாதலால், ஒரு புன்சிரிப்புடன் இருவரையும் பார்த்து இருந்தான்..

"அப்படி எல்லாம் பேசக் கூடாதுனு சொல்லி இருக்கேன்ல மது?!.." என்று கலைச்செல்வி கண்டித்தும்,

"என்னாது!!.. அப்படி சொல்ல கூடாதா?!.. ஆமா நீங்க தான் மெச்சிக்கனும் இவனை!..இந்த லூசுபயலை வேற எப்படி சொல்றதாம்!.."

"உப்பு சப்பில்லாத ஒன்றரை அனா காரணத்தை வச்சுட்டு தான் மூணு வருசத்துக்கு மேல உசுரை வாங்கிட்டு இருந்து இருக்கான்!.. " பாலாவை மேலும் டேமேஜ் செய்து விட்டு..

"இருங்க..அவன் கிட்டயே தர்றேன்!.. நீங்களே பேசிக்கோங்க!.." என்று சட்டென்று பாலாவின் கைகளில் தனது அலைபேசியை அவள் திணிக்க, அவன் மிரண்டு விழித்தான்..

அவன் கார்த்திக்கை திரும்பிப் பார்க்க, 'பேசு!' என்பது போல் கார்த்திக் சொல்லவும், அதை காதில் வைத்தான் பாலா..

தயக்கத்துடன், "ஹல்.. ஹல்லோ!!.." என்று தொண்டையை செருமிக் கொண்டு பேச, மதுமதியின் தாய் கலைச்செல்வி அவனிடம் இயல்பாக பேசினார்..

"நல்லா இருக்கீங்களா பாலா?!.. இவ்ளோ தூரம் வந்துட்டீங்க.. வீட்டுக்கு வரலாமே!?.." என்று அவர் பாலாவை வீட்டிற்கு அழைக்க,

"நல்லா இருக்கேன் ஆன்ட்டி!.. அது வந்து.. ஒரு வேலையா வந்தேன் ஆன்ட்டி!.. நாளைக்கே கிளம்பனும்!.." என்று அவர் வீட்டிற்கு அழைத்ததிற்கு நாசூக்காக மறுத்து விட்டான்..

வேர்க்க விறுவிறுக்க பேசி முடித்து விட்டு, அலைபேசியை அவளிடம் நீட்ட, அவனிடமிருந்து பிடுங்காத குறையாக அதை பெற்றவள் காதில் வைத்து,

"தொரை ரெம்ம்பஅஅ பிஸியாம்!.. நாம கூப்பிட்டா எல்லாம் வர மாட்டாரு!..ஓகேம்மா!.. இதோ..கிளம்பிட்டேன்!.. டென் மினிட்ஸ் ல வந்துடறேன்!.." என்று விட்டு அழைப்பை வைத்தாள் மதுமதி..

அவள் பேசி முடிக்கும் வரை அவளையே 'ஆ' வென்று அவன் வாயை பிளந்து பார்த்திருக்க, "என்னடா!!?.." என்று தோளில் தட்டி அவனை இயல்புக்கு அழைத்து வந்தான் கார்த்திக்..

"எப்புடிண்ணா!!!?.. அவங்கம்மா ஏதோ ரொம்ப பழக்கமானவன் கிட்ட பேசுற மாதிரி பேசுறாங்க!.." என்று பாலா வியப்புடன் கேட்க..

"மேடம் எப்பவுமே அப்படி தான்!.. எல்லார்கிட்டயும் இயல்பா தான் பேசுவாங்க!.. அதுவுமில்லாம மதுவோட விசயம் அவங்களுக்கும் தெரியும்!.." என்று,

கார்த்திக் ஏதோ செய்தி போல சொல்ல, பாலாவினால் தான் நம்ப முடியவில்லை..மகளது காதலை இயல்பாக ஏற்றுக் கொண்ட தாயை கண்ட பிரமிப்பு அவனிடம்!..

அவனது பாவனையை கண்ட மது கடுப்புடன், "என்னவாம் அவனுக்கு!!?.." என மிரட்டலாக கார்த்திக்கிடம் கேட்டாள்..

"ஒன்னுமில்ல மது!.. உங்கம்மா இவ்ளோ ஈஸியா உன்னோட லவ்வை அக்ஸெப்ட் பண்ணிட்டு, அவன் கிட்ட பேசுனாங்க ல அதுல பைய கொஞ்சம் மிரண்டு இருக்கான்!.." கார்த்திக் கூறிய விளக்கத்தில்..

"பின்னே.. எல்லாருமே இவன் அப்பாவை போல இருப்பாங்களா!?.." மது அவனது தந்தையை பற்றி சொன்னதும், சண்டை சேவலாக சிலிர்த்தான் பாலா..

"எங்கப்பாவை பற்றி எதாவது பேசுன அவ்ளோ தான் சொல்லிட்டேன்!.." என அவளை மிரட்டிட, அவளும் பதிலுக்கு ஏதோ பேச வந்தாள்.. அதற்குள்

"டேய்!.. டேய்!.. யப்பா..சாமி!.. ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க சண்டையை நிறுத்துங்கடா!.." என்று கெஞ்சலுடன் சொன்னான் கார்த்திக்..

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நிற்க, குழந்தையுடன் வந்தாள் வித்யா..

"காத்திப்பா!.." என்று பவிக்குட்டி கார்த்திக்கிடம் தாவியதும் தான், பாலாவிற்கு குழந்தையை பற்றி கார்த்திக்கிடம் கேட்க வேண்டும் என்று நினைவு வந்தது..

"என்னடா குட்டிமா!!?.. பால் குடிச்சீங்களா?!.. ஸ்நாக்ஸ் சாப்பிட்டாச்சா?!.." என்று கார்த்திக் மகளிடம் கொஞ்சிக் கொண்டு இருக்க,

"ஓஓ.. சாப்தேனே!.. நீங்க தா இன்னும் ஒன்னும் சாப்பிதல!.."தலையாட்டி பதிலளித்து உதட்டை பிதுக்கிய மகளது பேச்சில்,

அவளது கன்னத்தில் முத்தமிட்ட கார்த்திக், "அப்பா இந்த மாமா கூட பேசிட்டு வந்து சாப்பிடறேன் டா குட்டிமா!.." என்றான்..

அதற்குள் வித்யா, "டின்னர் செய்ய போறேன்.. அதான் கேட்க வந்தேன் கார்த்திக்!.." என்றிட, "நான் கிளம்பறேன் ரூபிணி!.. இந்தா இவனுக்கு வேணும்னா சேர்த்து செய்ங்க!.. பை!..பை!.. " என்று

பாலாவை முறைத்துக் கொண்டே குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு கிளம்பி சென்றாள் மதுமதி..

மதுமதி சென்றதும் ஏதோ புயலடித்து ஓய்ந்தது போல் உணர்ந்த பாலா, ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டு,
கார்த்திக்கிடம் குழந்தையை பற்றி கேட்கலாம் என்றெண்ணினான்..

சிறு தயக்கத்துடன், "அண்ணா!.. பாப்பா?!.." என தொடங்கியவன் 'எப்படி?..யாருடைய குழந்தை?' என்று கேட்க தயங்கி பாதியில் நிறுத்த..

"பாப்பாவை நல்லா பாருடா!.." என்று கார்த்திக் சொன்னதும், குழந்தையை உற்று நோக்கிய பாலா திகைத்து,

"அண்ணா!!!..நம்ம தீபிகா அக்கா!!?.. ஆனா எப்படி?!!..உங்க கிட்ட?!!.." என்று அதிர்ச்சியில் பேச்சு வராமல் திணறினான்..

அவனது அதிர்ச்சியை அவதானித்த கார்த்திக், குழந்தையை வித்யாவிடம் கொடுத்து உள்ளே செல்லுமாறு கூறிவிட்டு, அவனிடம் பேசத் தொடங்கினான்..

"அக்கா காணாம போன வரை தானே உனக்கு தெரியும்.. அதுக்கப்புறம் நடந்தது தெரியாதே!!?.." எனக் கேட்ட கார்த்திக்,

கொடைக்கானலில் நடந்த விபத்தை பற்றியும் அதில் வித்யாவிற்கு ஏற்பட்ட இழப்பை பற்றியும், கூறியவன்,

அக்கா, மாமாவை இழந்து குழந்தையை மட்டும் காணாமல் அலைந்து திரிய, அவள் வித்யாவிடம் வளர்ந்ததை பற்றியும் சொன்னான்..

"அம்மா இப்ப எப்படி இருக்காங்கண்ணா!?எதாவது முன்னேற்றம் தெரியுதா?" கேட்ட பாலாவிற்கு எதிர்மறை பதில் அளித்தான் அவன்..

"ஆனா அக்கா எதுக்காகண்ணா கொடைக்கானல் போனாங்க?!.." என பாலா கேட்க, "அதான்டா எனக்கும் தெரியல!?.." சிந்தனையுடன் பதில் அளித்த கார்த்திக்,

"ஒருவேளை வித்யாவை பற்றி எதாவது விசயம் தெரிஞ்சு இருக்குமோ?!.." என்று யோசனையுடன் கூறி விட்டு,

"அதான் கண்டுபிடிச்சு என்கிட்ட சர்ப்ரைஸ்ஆ சொல்லலாம்னு நினைச்சு இப்படி கிறுக்குத்தனமா பண்ணி இருப்பாளோனு தோணுதுடா!!.." தன் சந்தேகத்தையும் சொன்னான் அவன்..

"ஆனா வித்யாவை பற்றி அக்காவுக்கு எப்படிண்ணா தெரிய வாய்ப்பு இருக்கு?!!..வித்யா சம்பந்தப்பட்ட ரெண்டு பேரை தான் அக்காவுக்கு தெரியும்.. அவங்களும் இறந்துட்டாங்களே?!.." என்று பாலா தனக்கு தோன்றியதை கேட்கவும்..

"இதுவும் யோசிக்க வேண்டிய விசயம் தான்!..எதை தேடி அவ கொடைக்கானல் போனாளோ தெரியல.."

"ஆனா மொத்தமா எங்களை விட்டு போயிட்டாங்க!.." என்று கலங்கிய கண்ணை நாசூக்காக துடைத்துக் கொண்டே கூறினான் கார்த்திக்..

"அக்காவோட ப்ரெண்ட்ஸ் யார் கிட்டயாவது கேட்டு பார்த்தீங்களா?!.. இல்ல.. சோஷியல் மீடியால எதாவது அக்கா அக்கவுண்ட் செக் பண்ணி பார்த்தீங்களா?!.." என்று பாலா எதாவது க்ளூ கிடைக்காதா என்று யோசித்துக் கூற..

"அக்காவோட ப்ரெண்ட்ஸ் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டேன், ஆனா யாருக்கும் தெரியலடா!..சோஷியல் மீடியா.. அக்கா பெருசா எதுவும் யூஸ் பண்ணுனதில்ல.." என்று கார்த்திக் தன் முயற்சியை எடுத்துரைத்தான்..

"பாப்பாவை எப்படிண்ணா கண்டுபிடிச்சீங்க?!.." என்ற பாலாவின் கேள்வியில், "அது மிராக்கிள் மாதிரி நடந்ததுடா!.." என்றான் கார்த்திக்..

"வித்யா இங்க வேலைக்கு வந்தப்ப, என்னால நம்பவே முடியல!.. தெய்வ வாக்கு மாதிரி அக்கா சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு!.."

"அவகிட்ட தனியா பேசலாம்னு போகும் போது குட்டிமாவை பார்த்து ஷாக் அடிச்ச மாதிரி ஆகிடுச்சு!.." அன்று இருந்த தன் மனநிலையை இப்போது கூட உணர்ந்தாற் போல சொன்னான் அவன்..

"அப்றம் வித்யாவோட சர்டிஃபிகேட்ல கொடைக்கானல் பார்த்ததும் இன்னும் ஷாக் ஆகிடுச்சு.. உடனே அங்க போய் பார்த்தா..அது பாப்பாவை தத்து எடுத்துதா அவங்க கொடுத்த அதே வீட்டு அட்ரஸ்!.." தன் பிரமிப்பை விளக்கினான் கார்த்திக்..

"எனக்கு எப்படி சொல்லனு தெரியலடா!.. அதுநாள் வரை குழந்தை எங்க, யாருகிட்ட எப்படி இருக்காளோனு நினைச்சு மறுகாத நாளே இல்ல.."

"அப்போ நான் இருந்த மனநிலையை வார்த்தையில சொல்ல முடியாது!.. அப்றம் நடந்த கதை தான் உனக்கு ரூபேஷ் சொல்லி இருப்பானே!.." என்றவனிடம் ஆமாம் என்று ஆமோதித்தான் பாலா..

"எப்படியோ இப்ப ஓரளவு நிம்மதியா இருக்கு!..அம்மாவும் நார்மலா ஆகிட்டா.. இன்னும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..பார்ப்போம்!.." என்றான் கார்த்திக் எதையோ யோசித்துக் கொண்டே..

"கண்டிப்பா சரி ஆகிடுவாங்கண்ணா!..நீங்க கவலைப்படாதீங்க!.. பாப்பாவை கூட்டிட்டு போய் அம்மா கிட்ட காட்டுங்க.."

"'உங்க பேத்தி வந்துட்டா பாருங்க'னு சொன்னாலே எழுந்திருச்சு உட்கார்ந்துடுவாங்க!.." நம்பிக்கையூட்டும் பாலாவின் வார்த்தைகளில் சற்று இதமாக உணர்ந்தான் கார்த்திக்..

"போகனும்டா!.. வித்யாவும் அம்மாவை பார்க்கனும்னு கேட்டா. அது, அவசரமா போயிட்டு வர்ற மாதிரி இருக்க கூடாது அதான் யோசிட்டு இருக்கேன்!.."

"எப்படியும் இந்த வருசம் முடியும் போது ஒரு மாசம் கிட்ட லீவு கிடைக்கும்ல அப்ப போகனும் னு ப்ளான் வைச்சு இருக்கேன்!.." என்றான் ஒரு திட்டமிடலோடு..

தீபிகா எதற்காக கொடைக்கானல் போனாள் என்ற கேள்விக்கான விடையே அங்கு தான் கிடைக்க போகிறது என்பதை அறியாமலே சொல்லிக் கொண்டிருந்தான் அவன்..

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top