Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 42
பாலாவை வெளியே கார்த்திக் அழைத்துச் சென்று விட, குழந்தை டிவியில் கார்ட்டூனில் ஆழ்ந்து விட, வித்யா மதுமதியின் அருகே வந்து அமர்ந்தாள்..
"நீங்க சொன்ன உங்க லவ்வர் பாலா தானா?!!.." என்று ஆச்சரியமாக வினவிட, "ஆமா ரூபிணி!.. இவன் தான் அந்த கருவாயன்!.." என்று அவள் கடுப்புடன் கூறினாள்..
"ச்சே!..ஏங்க இப்படி சொல்றீங்க?!.. பாடி ஷேமிங் பண்றது தப்பு!.." பாடம் நடந்தினாள் வித்யா..
"அட!..நான் எங்கேங்க அப்படி பண்ணுனேன்!..அவனை ரசிச்சு தான் சொன்னேன்!.." என்று ரசனையுடன் பதில் அளித்தவள்..
"ஆனா இப்ப வரை அந்த மொகரைகட்டை ல என்னத்த கண்டு லவ்வுல தொபுக்கடீர் னு விழுந்தேன் எனக்கு தெரியல பா!!!.." என்று பாவமாக மதுமதி சொன்ன விதத்தில் வித்யா சிரித்து விட்டாள்..
வெளியே சென்ற கார்த்திக், பாலாவிடம் 'ஏன் மதுமதியை தவிர்க்கிறாய்? ' எனக் கேட்டதும், என்ன சொல்வது என்று விழித்தான் பாலா..
"என்னடா!!.. பேய் முழி முழிக்கிற?!.. அதான் உன் முட்டக்கண்ணு காட்டிக் கொடுக்குதே!.. என்ன விசயம்?!.. என்னடா பிரச்னை?.." கார்த்திக் வினவினான்..
"ஒன்..ஒன்னுமில்ல ண்ணா!.." என்று தயங்கியவனிடம், "ஓகே!.. உனக்கு சொல்ல இஷ்டம் இல்லை னா விடு!.." கார்த்திக் அந்த விசயத்தை வேண்டாமென விட்டு விட..
பாலா தான் சொல்வதா வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டு இருந்தான்..
அவனது தடுமாற்றத்தை கண்ட கார்த்திக், "பரவால்ல விடு டா!.. ஆனா மதுமதி நல்ல பொண்ணு டா மில்க்!.. உன் மேல உண்மையான அன்பு வைச்சு இருக்கா!.." கார்த்திக் அவளை பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
"அதான் எனக்கே தெரியுமே ண்ணா!!.."என்ற அவனது உடனடியான பதிலில் அவனை ஆச்சர்யமாக திரும்பி பார்த்தான் கார்த்திக்..
"உனக்கே தெரியுதுல டா அப்றம் என்ன பிரச்சனை?!.. எனக்கு புரியல!.. இத்தனை வருசமா உனக்காக தான் அவ காத்திருக்கா!.. நான் இங்க வந்தப்ப அவ ரொம்ப கலகலப்பா இருப்பா!.." என்றவன்,
"ஆனா திடீர்னு சைலன்ட் மோட் க்கு போயிடுவா!.. நான் கேட்டா கூட சொல்லவே இல்ல.. அவளுக்கு யார் கிட்டயாவது மனம் விட்டுப் பேசனும்னு தோணுச்சு போல.. அவளா ஒருநாள் ஒருத்தனை விரும்பறதா என் கிட்ட சொன்னா!.."
"நானும் விளையாட்டா சொல்றா போலனு நினைச்சேன்.. ஆனா மது தன்னோட காதல் கதையை முழுசா சொன்ன அப்றம் தான் அவளோட லவ்வுல அவள் எவ்ளோ சீரியஸ்ஆ இருக்காள்னு எனக்கு புரிஞ்சது!.."
"உனக்கு உண்மையிலேயே அவளை பிடிக்கலைனா அவளே உன்னை விட்டு விலகி இருப்பா!.. ஆனா உன் மனசும் அவளுக்கு தெரிஞ்சு இருக்கனும்!.."
"அதான் இன்னும் நீயா சொல்லுவ னு எதிர்பார்த்துட்டு இருக்கா போல.." என்று கார்த்திக் நீளமாக பேசி முடித்ததும், மனதில் சாரல் வீச அதில் சுகமாக நனைந்த பாலா, வெளியே எதுவும் காட்டிக் கொள்ளவில்லை..
"ஏன்டா டேய்!!.. நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்!?.. ஏதோ ஃபேன்டஸி ஸ்டோரி கேட்கற மாதிரி ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்க!!.."என்று அவனது தோளில் ஓங்கி தட்டி கேட்டான் கார்த்திக்..
அவனது அடியில் "யம்மே!!.."என அலறிய பாலா, "ஏன் ண்ணா இப்படி?!.. விட்டா அவளுக்காக பிரம்பெடுத்து கூட அடிப்பீங்க போல!!?.." பாலா புலம்பினான்..
"அப்புறம் என்ன னு கேட்டா சொல்ல மாட்டீன்ற?!..ஆனா மனசுல மட்டும் ஆசையை வைச்சு இருக்க!!.." என்ற கார்த்திக்கிடம், பாலா காரணத்தை சொல்ல தொடங்க..
"அப்ப நான் கிளம்பறேன் கார்த்திக்!.. பாப்பாவையும், ரூபிணியையும் கூட்டிட்டு ஒருநாள் கண்டிப்பா வீட்டுக்கு வரனும்!.." என்ற கோரிக்கையுடன் விடைபெற வந்தாள் மதுமதி..
பாலாவை பார்க்காமல் கார்த்திக்கிடம் மட்டுமே பேசிய மது, அப்படியே கிளம்பிச் செல்ல, பாலாவின் மனம் அடி வாங்கியது.. இருப்பினும் வெளியே காட்டிக் கொள்ளாமல் செல்லும் அவளையே பார்த்து இருந்தான்..
அவனது தோளில் தட்டிய கார்த்திக் "என்னடா?!." என்றிட, ஒன்றுமில்லை என்று விட்டு இயல்புக்கு வந்தான் பாலா..
"சரி சொல்லு என்னாச்சு உனக்கு?!.. உன் மனசு அவளை விரும்பறது அப்பட்டமா தெரியுது!.. ஆனா ஏன் அவளை அவாய்ட் பண்ற!?.." கார்த்திக் மீண்டும் கேட்டான்..
சில நொடிகள் மௌனம் சாதித்தவன் மெதுவாக, "உங்களுக்கு என் அண்ணனை பற்றி தெரியும்ல ண்ணா!.." என்று கேட்க, கார்த்திக்கும் தெரியும் என்றான்..
"அண்ணன் வேலைக்கு போன இடத்துல ஒரு பொண்ணை லவ் பண்ணி இருக்கான்!.." என்று பாலா தொடங்க, கார்த்திக் "அவனா டா??!!.." என்று ஆச்சர்யமாக கேட்டான்..
ஆமாம் என்று அதை ஆமோதித்தவன், அதன் பின் நடந்தவற்றை சொல்லத் தொடங்கினான்..
பாலாவின் தந்தை சிவஞானம், வியாபாரத்தில் நொடிந்த போது அவருக்கு தக்க சமயத்தில் உதவியது அவரது மனைவி கனகலட்சுமியின் சகோதரன் கருணாகரன் தான்..
அவருக்கு ஒரே மகள் மயூரவல்லி.. படிப்பில் பெரிதாக நாட்டம் இல்லாமல் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்து விட்டு வீட்டில் இருந்தாள்..
அவளுக்கு எந்த நல்ல வரனும் அமையாமல் இருக்கவே, தன் தங்கையின் மகனான சக்திவேலுவிற்கு கட்டிக் கொடுக்க எண்ணினார்..
தக்க சமயத்தில் கருணாகரன் உதவவில்லை என்றால் இன்று எதுவுமே இல்லை என்று எண்ணிய சிவஞானமும், தனது நன்றிகடனை தீர்க்க, அவரது மகளுக்கு தன் மகன் சக்திவேலை கொடுப்பதாக வாக்களித்தார்..
அதன்படி சக்திவேலுவிற்கே தெரியாமல் உறுதியும் செய்துவிட, திருமணத்தின் போது நிச்சயத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்து இருந்தனர்..
விசயம் தெரிந்த பின்னர் அதிர்ச்சி அடைந்த சக்திவேல், திடீரென ஒரு நாள் மாலையும் கழுத்துமாக வந்து நிற்க, சிவஞானம் திகைத்தார்..
"என்னை மன்னிச்சுடுங்க ப்பா!.. நான் இந்த பொண்ணை தான் விரும்பறேன்!.. நீங்க மாமா கிட்ட பேசும் முன்ன என்கிட்ட சொல்லி இருந்தா கண்டிப்பா நான் வேண்டாம் னுட்டு இருப்பேன்!.." என்று விளக்கம் சொன்னவன்..
"எனக்கு வேற ஊர்ல வேலை கிடைச்சு இருக்கு.. நாங்க அங்க போயிடுவோம்.. தனியா ஒரு வீடு பார்த்துட்டோம்!..நாங்க கிளம்புறோம்!.." என்று விட்டு வீட்டை விட்டு சென்று விட்டான்..
மகனது செயலில் இடிந்து போய் அமர்ந்த சிவஞானம் மைத்துனருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து நிற்கும் போதே..
விசயம் அறிந்து வந்த கருணாகரன்
"என்ன மாப்ள!.. பையன் இப்படி பண்ணிட்டான்!.. உங்க மான மரியாதையை காப்பாத்துன எனக்கு சிறப்பா திருப்பி கொடுத்துட்டீங்க!.." என்று கோபமாக நக்கலுடன் கூறிக் கொண்டிருந்தார்..
"என்னை மன்னிச்சுடுங்க!.. நான் இவனை ரொம்ப நம்பிட்டு இருந்தேன்.. ஆனா இப்படி என் தலைல கல்லை தூக்கி போடுவான் னு நினைக்கல.." என்று அவமானத்தில் கூனிக் குறுகி நின்றார்..
பின்பு மனதில் தீர்க்கமாக ஓர் முடிவு எடுத்தவர்," நீங்க கவலைப்படாதீங்க மச்சான்!.. உங்க பொண்ணு தான் இந்த வீட்டு மருமக!.."
என் இரண்டாவது பையன் படிப்பை முடிச்சதும் அவனுக்கு தான் உங்க பொண்ணு!.."என்று ஏதோ மங்கம்மா சபதம் போல சொல்ல..அதில் சிக்கிக் கொண்டது இந்த பலியாடு பாலமித்ரன்!..
அங்கே இவனுக்கு தயாராக அவனது தந்தை ஆப்பை சீவி வைத்திருக்க, பாலா முதுகலையில் முதலாமாண்டில் இருந்த போது மதுமதி வந்து இவனிடம் காதலை கூறினாள்..
பையனும் அவள் சொன்னதும் முதலில் திகைத்தான்!.. பின்னர் அவளது செயலில் சுவாரஸ்யம் பிறக்க, அது காதலாக மலர்ந்து மாறுவதற்குள் தன் சகோதரனின் விசயம் கேள்விப்பட்டு பதறியடித்து கொண்டு வந்தவனிடம் தந்தை தன் சபதத்தை கூறினார்..
மயூரவல்லியை என்றுமே அந்த கோணத்தில் பார்த்ததில்லை என்று பாலா எவ்வளவோ எடுத்து கூறியும், "நீயும் அவனை மாதிரி யாரையாவது விரும்புறியா டா?!..அதான் இப்படி சொல்றியா?!.." என்று சந்தேகத்துடன் கேட்க, இவன் விழித்தான்..
"ஏன் ப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க?!. அவளை நான் அந்த மாதிரி எண்ணத்துல பார்த்ததும் இல்ல பழகுனதும் இல்ல.. அவளைப் போய் எப்படி ப்பா கல்யாணம் பண்ண முடியும்?!.." என பாலா தன் மனதை உரைத்தான்..
"இல்ல இல்ல..நீயும் என்னை ஏமாத்த போற!!..அவனை மாதிரியே செய்ய போற!..போங்க!..போய் எல்லாரும் நல்லா இருங்க. நானும் உங்கம்மாவும் எங்களுக்கு ஒரு முடிவை தேடிக்கிறோம்." என சிவஞானத்தின் தற்கொலை மிரட்டல் வேறு.
தந்தையிடம் பேசி புரிய வைக்க முடியாமல் அவன் தவித்து நிற்க, "பார்த்தியா இப்போ கூட உன்னால எங்களுக்காக சரினு சொல்ல முடியல."
"நீயும் ஏதோ பொண்ணை விரும்புற அதானே. அதனால தான் தாய் தகப்பன் செத்தா கூட பரவால்ல னுட்டு அமைதியா இருக்க." என்று நீட்டி முழக்கிய உரையில் அதெல்லாம் இல்லை என்ற பாலாவின் மறுப்பு செல்லுபடியாகவில்லை.
"அப்டினா நீ சத்தியம் பண்ணு நான் பார்த்து இருக்கற பொண்ணை தான் கட்டுவேன் னு என் மேல சத்தியம் பண்ணு." அவனது கையை எடுத்து அவரது தலை மேல் வைத்து கேட்க,
வேறு வழியின்றி அதையும் செய்து விட்டான் இவன்..மீண்டும் கல்லூரி திரும்பிய பின் மதுமதி அவனிடம் வந்து தன் காதலை வெளிப்படுத்த,
சூழ்நிலை கைதியான பாலா அவளை எப்படி மாற்றுவது என தெரியாமல் விழித்தவன், காதலில் விழுந்தான் அவளது இடைவிடாத முயற்சியில்.
கல்லூரி படிப்பை முடியும் தருவாயில் வந்து பேசிய அவளிடம் எரிந்து விழுந்தாலும் அவனுக்கும் மனம் வலிக்க தான் செய்தது.
இருப்பினும் தன்னையே எண்ணி அவள் வாழ்க்கையை வீணாக்கி விட போகிறாள் என்று தான் 'தனக்கு அவள் மேல் நாட்டம் இல்லை' என்றுரைக்க,அவளும் சரியென்று சென்று விட்டாள்.
அவளிடம் மனதை தொலைத்து விட்டு, வீடு திரும்பிய பாலாவிடம் எப்போது திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று அனத்த ஆரம்பித்தார் சிவஞானம்.
"இப்போ தானே ப்பா படிப்பு முடிஞ்சு இருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம் அதுவும் இந்த வயசுலேயே, முதல்ல நான் வேலையில என்னை ஸ்டடி பண்ணிக்கிறேன்."
"அப்புறமா அதை பற்றி பேசிக்கலாம்."என்ற பாலாவின் கூற்றில் அவனை குறுகுறுவென பார்த்தார் சிவஞானம்.
"உண்மையை சொல்லுடா. நீயும் எதாவது ப்ளான் பண்ணி இருக்கியா?" எனக் கேட்டு தொல்லை செய்ய, காண்டான பாலா,"ஆமா, அப்படிதான்." என்று விட்டான்.
மறுநாளே துளியூண்டு விஷத்தை முழுங்கிய சிவஞானத்தை மருத்துவமனையில் அனுமதித்து, குடம் குடமாய் குடலே வெளிவரும் அளவிற்கு கக்கி எடுக்கச் செய்து காப்பாற்றி கூட்டி வந்தனர்.
வீடு வந்தவரிடம் பொறுமையாக பேச எண்ணிய பாலா, "நான் சொல்றத புரிஞ்சுக்குங்க..உங்க பையன் ஒரு உருப்படியான வேலையில இல்லனா மாமா வீட்ல உங்கள யாராவது மதிப்பாங்களா? நல்லா யோசிங்க."
"அதனால தான் நல்ல நிலைமைக்கு நான் வந்த அப்றம் அதெல்லாம் பார்த்துக்கலாம் னு சொல்றேன்."
நயமாக பேசிய மகனின் பேச்சில் நியாயம் இருப்பதாக தோன்றவே சிவஞானமும் அமைதியாகி விட்டார்.
இப்படியொரு சூழ்நிலையில் மதுமதியிடமும் நம்பிக்கை தருவது போல் பேசி அவளது மனசையும் கலைக்க வேண்டாம் என முடிவெடுத்தவன்,
அவளை மீண்டும் பெங்களூரூவில் பார்த்த போது, வேண்டுமென்றே வார்த்தைகளால் காயப்படுத்தி அனுப்பினான்.
அவளை தவிர்ப்பதான காரணத்தை பாலா சொல்லிக் கொண்டிருக்க, கார்த்திக் ஏதோ எண்பதுகளின் படம், கதை வசனம் கேட்பது போல வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
"அடப்பாவி! இந்த காரணத்தை முதல்லேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேடா." என்ற கேள்வியுடன் அவனது தோளில் ஓர் இடி விழுந்தது.