Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 40
"மேடம்! எல்லா டவுட்டும் முடிஞ்சதா?!இல்லயே! நீங்க யோசிக்கிறதை பார்த்தா இன்னும் ஏதோ இருக்கு போலவே." என்று,
கார்த்திக் கேட்டுக் கொண்டே எடுத்து வந்த சப்பாத்தி, குருமாவை தட்டில் வைத்து ஒரு விள்ளலை அவளுக்கு ஊட்டி விட்டான்.
சிந்தனையில் இருந்தவள், அதனோடே வாய்திறந்து அதை வாங்கி விட்டாள். அதன்பின் தான் அவன் ஊட்டியதை உணர்ந்து கண்கள் கலங்கிட அவன் என்னவென்று வினவினான்.
"ரொம்ப வருசம் ஆச்சு கார்த்திப்பா! இப்படி யாராவது ஊட்டி விட்டு சாப்பிட்றது." என்று மனம் நெகிழ அவள் உரைக்க, அவனது கண்களும் லேசாக கலங்கியது ஏனெனில் அவனும் அந்நிலையை அறிந்தவன் தானே.
தன்னை உடனே சரி செய்து கொண்டு, "ரொம்ப சென்டி ஸீன் ஓட்டாம வாயை தொறங்க மேடாம்." என்று சொன்னதும் அவளது அக்மார்க் முறைப்பை தர, அவனும் சிரிப்புடன் அதை பெற்றுக் கொண்டான்.
அதற்குள் யோசித்தது என்னவென்று கண்டுபிடித்த வித்யா, "ஆமா யார்கிட்டயும் உங்கள பற்றி சொன்னது இல்லைனு சொன்னீங்களே!?"
"ஆனா மதுமதி எப்படி அன்னைக்கு பாப்பாவை பார்த்து அப்படி சொன்னா?" தன் சந்தேகத்தை வித்யா முன் வைத்தாள்.
"நான் இங்க வந்த அப்றம் தான் மதுமதி எனக்கு நட்பானாள். அவளுக்கு மட்டும் நான் ஒருத்தியை விரும்பறேன் னு தெரியும். அதுவும் ரீசன்ட்ஆ ஒரு சிச்சுவேஷன்ல தான் சொன்னேன். ஆனா அது நீ தான்னு தெரியாது."
"அதான் நமக்கு மேரேஜ் ஆனதை சொன்னதும் அவ அதிர்ச்சி ஆகிட்டா. அப்றம் அன்னிக்கு ஈவினிங் அவ கிட்ட நீ தான் அந்த பொண்ணு என்றும் என்னோட ஃபேமிலி விசயமும் சொன்னேன்."
"நீ அன்னிக்கு அவ அழுதாள்னு சொன்னல அதனால தான் நான் சொன்னதை கேட்டு கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டா." என்று அவன் சொன்னதும்,
"ஆனா அவங்க வேற ரீசன் சொன்னாங்களே?" என்று வித்யா யோசனையுடன் கேட்டு, அவள் சொன்ன காரணத்தையும் சொல்ல, அதுவும் உண்மை தான் என்று கூறினான்.
"உனக்கு எந்த விசயமும் தெரியாதுனு அவ கிட்ட நான் சொன்னதால அவ விசயம் மட்டும் சொல்லி இருப்பா." என்று அவன் விளக்கி முடித்ததும்,
"அப்ப அன்னிக்கு பாப்பாவை பார்த்து அம்மா மாதிரி இருக்காள்னு சொன்னது!?" என்று அவள் மீண்டும் சந்தேகத்துடன் கேட்க,
"ஒரு முறை என்னோட ஃபோன்ல இருந்த டிபில என் குடும்பத்தை பார்த்து இருக்கா. அதான் அன்னிக்கு பாப்பாவை பார்க்க அம்மா மாதிரியே இருக்காள்னுட்டு சொன்னாள்." என
அன்று மதுமதி சொன்னதற்கான விளக்கம் கூறிய கார்த்திக்கை, கொலைவெறியுடன் முறைத்தாள் வித்யா.
"இப்ப எதுக்கு இந்த பாசப் பார்வை!!?" என்று புரியாமல் வினவினான் கார்த்திக்.
"ஏய்யா யோவ்!! என்னை லவ் பண்றேன்.லவ் பண்றேன் னு ஊர்ல இருக்க எல்லாருக்கும் சொல்ல வேண்டியது. ஆனா சம்பந்தப்பட்ட எனக்கு மட்டும், பாடா படுத்தியெடுத்து சொல்றது."
"நானா கத்தி கூப்பாடு போட்டா தான் சொல்லுவீங்க. அப்படி தானே. போடா கரடி!" என்று கோபத்தில் பொங்கி அவனை வசவு மழையில் நனைத்து, அவனது புஜத்தில் அடிக்க,
"எதேஏஏ!! டாவா?! என்னமா மரியாதை எல்லாம் குறையுது." அதிர்ச்சியுடன் வாயை பிளந்து கேட்டான் கார்த்திக்.
"பின்னே, இந்த சாருக்கு மாலை மரியாதை எல்லாம் பண்ணனுமோ? எவனாவது லவ் பண்ற பொண்ணு கிட்ட இப்படி பண்ணுவானா?"
"எங்கிட்ட தானே முதல்ல சொல்லி இருக்கனும்." என்று இடுப்பில் கை வைத்து, மூக்கில் காற்றடிக்க அவள் சட்டம் பேச,
"ஆஆ! வலிக்குதுடி. ஆமா அப்படியே நான் வந்து சொல்லிட்டா மட்டும் இவ ஓடி வந்து கட்டி பிடிச்சு 'கார்த்தி ஐ டூ லவ் யூ' னு சொல்லிட போறா. போடி போண்டாடீ!" என்று அவனும் எகிறினான்.
அவனது பேச்சில் இப்போது வாயை பிளந்து நிற்பது வித்யாவின் முறையானது.. தலையை உலுக்கி இயல்புக்கு வந்தவள்," என்ன டினு எல்லாம் சொல்றீங்க?" என்றாள் பாவமாக.
"வேற என்ன சொல்றதாம்!? நீ மட்டும் வக்கனையா வாய்ல வாங்கி தின்னுட்டு தொப்பை நெறைஞ்சதும், 'தூக்கி போட்டு மிதிச்சுறுவேன் பார்த்துக்க!'னு கேப்டன் மாதிரி பேசுவ."
"மனுசன் இவ்ளோஓஓஓ நேரமா பேசி சிறுகுடல் பெருங்குடலை முழுங்கற நிலைல இருக்கேன். அதை கண்டுக்காம சும்மா, எகிறுறாள்." என்று அவன் பொரிந்து தள்ளி கொண்டிருக்க
அப்போது தான் அவன் உண்ணாததை உணர்ந்தவள் சட்டென்று அவனது வாயில் ஒரு விள்ளலை வைத்து அடைந்தாள்.
அவனது வாயை அடைத்து விட்டு, "ஸாரி! கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். நீங்களும் சாப்பிடுங்க." பப்பி ஃபேஸ் வைத்து கூறிக் கொண்டே அவள் அடுத்த வாய் ஊட்ட, அமைதியாக பெற்றுக் கொண்டான்.
இருவரும் உணவை மாறி மாறி ஊட்டிக் கொண்டு, உண்டு முடித்த பின்னர், வித்யா மெதுவாக, "அம்மாவை பார்க்க போகலாமா?" என்று கேட்டாள், அங்கு ஏற்படப் போகும் அதிர்ச்சியை பற்றி தெரியாமல்.
அவளது கேள்வியில் மனம் மகிழ்ந்தவன்,"அடுத்து நான் போகும் போது கூட்டிட்டு போறேன்." என்றிட, அவளும் சரியென்று விட்டாள்.
அதன் பிறகு, "வேற எதாவது விசயம் தெரியனுமா? அப்றம், இன்னொரு நாளைக்கு இதே மாதிரி சந்திரமுகி மாதிரி கத்தக்கூடாது. பாவம் பிள்ளை பயந்துடும்." என்றான் கார்த்திக் பாவமாக.
"பாப்பா தான் இப்ப இங்க இல்லையே!" என்று அவள் விழித்துக் கொண்டு கேட்க,
"நான் என்னை சொன்னேன்மா." என்று விட்டு பாத்திரத்தோடு ஓடி விட, வேகமாக வெளியேறும் அவனை முறைத்தவள், பின்பு சிரித்து விட்டாள்.
அனைத்தையும் முடித்து விட்டு, தனது இடத்திற்கு கார்த்திக் உறங்க செல்ல, வித்யா," வந்து," என்று சொல்லாமல் நிறுத்த.
"அதான் வரலையே." என்று வாய்க்குள் அவன் முணங்க, அவள் என்னவென்று கேட்டதும் ஒன்றுமில்லை என்று விட்டான்.
"ஓகே! நான் போய் தூங்க போறேன். இப்பவே நடுராத்திரி ஆகிடுச்சு." என்று விட்டு அவன் நகரவும், அவள் மீண்டும் அவனை தொண்டையை செருமி சத்தமிட்டு அழைத்தாள்.
அவளை திரும்பிப் பார்த்தவன், "அதான் என் பேர் தெரியும்ல பேர் சொல்லி கூப்பிட வேண்டியது தானே. இல்லனா மாமா, அத்தான் இப்படி எதாவது சொல்ல வேண்டியது தானே."
"அதுவுமில்லைனா உங்க பாஷைல சொல்ற மாதிரி ஏண்ணானு கூப்டறது. அதை விட்டுட்டு, நான் என்ன ஆடா, மாடா, சத்தம் கொடுத்து கூப்பிடுற?" என்றவன்,
"ஓஓ, மேடம்க்கு எமோஷனல் ஆனா தான் எல்லாம் ஞாபகம் வரும் போல" என தனக்குள் சொல்லிக் கொள்ள, அவனை முறைத்தவள், "கார்த்திக்!" என்றாள்.
"சொல்லுங்க மேடம்!"என்று அவன் பணிவாக கூறவும்,
"இல்ல, பாப்பாவும் இங்க இல்லை." என்று அவள் இடைவெளி விட்டு நிறுத்தவும், பையன் கண்களில் பல்பு ஒளிர்ந்தது.
'இவன் எதுக்காக இப்படி கண்ணுல பல்பு எரிய விடறான்!'என யோசித்தவள்,
தான் சொன்னதை திரும்ப ரீவைண்ட் செய்யும் போது அதன் பொருள் உணர்ந்து மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள் வித்யா.
"யப்பா ராசா! எதாவது ஏடாகூடமாக கற்பனை பண்ணிக்காதீங்க தெய்வமே! நான் சொல்ல வந்ததை முழுசா சொல்லிடுறேன்." என்று விட்டு, சிறிது தயக்கத்துடன்
"எனக்கு தனியா படுக்க பயமா இருக்கும். எப்பவும் பாப்பா கையை பிடிச்சுட்டு தான் தூங்குவேன். அதான்," என்று அவள் முழுதாய் சொல்லி முடிக்கவும் பையன் கண்களின் பல்பு ஃபூஸ் போனது.
"அதுக்கு!?" என்று அவன் புரியாத மாதிரி கேட்க, காண்டான அவள், "ஒன்னுமில்ல. நீங்க போய் நல்லா குறட்டை விட்டுத் தூங்குங்க. குட் நைட்!" என்று கடுப்புடன் அவனை விரட்டினாள்.
அவள் கோபமாக சொன்னதும் அவனும் வெளியேறி விட்டான். 'என்ன சொன்ன உடனே போய்ட்டான்!?' என்று அவள் தலையை சொறிந்து குழம்பி நிற்க,
அவனது தலையணை, போர்வையுடன் வந்தவன், கட்டிலின் ஒரு பாதியில் விரித்து படுத்துக் கொண்டான். அவளும் புன்னகையுடன் படுக்கையை விரித்து படுத்துக் கொண்டாள்.
அவள் படுத்ததும், தன் கையை அவளை நோக்கி நீட்டி விட்டு அவன் படுத்துக் கொள்ள, சற்று தயங்கியவள், அவனது கையை பற்றிக் கொண்டாள்.
என்றும் தன் கைக்குள் குழந்தையின் கையை பத்திரமாக பிடித்துக் கொண்டு படுப்பவள்.
இன்று தன்னை பத்திரமாக பிடித்த கரத்தின் கதகதப்பில் பாதுகாப்பை உணர்ந்து, நிம்மதியாக உறங்கினாள்.
°°°°°°°°°°°°°°°°°
இருளும் அல்லாத, ஒளியும் அல்லாத, அந்த புலராத காலை வேளையில்.. பறவைகளின் கீச் கீச் என்ற அலாரத்தில், கண் விழித்த கார்த்திக்,
'இன்னிக்கு நாள் நல்ல நாளா இருக்கனும் கடவுளே!' என்று மனதில் வேண்டிக் கொண்டு, கையை கூப்ப முயல, அவனால் அசைக்க முடியவில்லை.
திரும்பிப் பார்க்க, இரவு அசந்து தூங்கிய வித்யா, தலையணை என நினைத்து அவனது கை வளைவில் தலை வைத்து உறங்க, அருகே தெரிந்த தன்னவள் முகத்தை கண்டு ரசனையில் ஆழ்ந்தான்.
'பார்க்க நல்லா தான் இருக்கா. பார்த்துட்டே இருக்கலாம் தான். ஆனா வேலையை பார்க்கனுமே! இவளை எப்படி எழுப்பறது!?' என தனக்குள் சிந்தனையில் இருக்க,
அவள் வைத்த அலாரம் அவனை காப்பாற்றியது.. உடனே அவன் உறங்குவது போல் பாசாங்கு செய்ய, அதன் சத்தத்தில் கண் விழித்தவள்,
அவன் கையில் உறங்கியதை கண்டு திகைத்து மெதுவாக அவனை கவனிக்க, அவன் அசந்து உறங்குவதாக நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டு எழுந்தாள்.
அவள் சென்றதும், கண் விழித்தவன் ஊஃப் என்று மூச்சை இழுத்து விட்டு, புன்சிரிப்புடன் எழுந்து தன் வேலைகளை கவனிக்க சென்றான்.
அப்போது காலையிலேயே குழந்தையுடன் வந்த தாரிணியை கண்ட வித்யா, பவிக்குட்டியை நோக்கி கைகளை நீட்ட, "அம்மா!" என்று தாவினாள் சின்னக்குட்டி.
குழந்தையை கைகளில் வாங்கி வித்யா முத்தமிட," இந்தாம்மா உன் பொண்ணு. காலைலேயே அனத்த ஆரம்பிச்சுட்டா." என்று போலி சலிப்புடன் கொடுத்தாள் தாரிணி.
வித்யாவின் கைகளுக்கு வந்த பவிஷ்யா, "உங்களுக்கு ஒம்பு செய்யி ஆகிச்சாம்மா!?" என்று அக்கறையுடன் வினவ, அவளை முத்தமிட்டு தன் பதிலை கூறினாள் அவள்.
அப்போது அங்கு வந்த கார்த்திக், "என்ன அண்ணியாரே!? காலைல வந்து பாப்பாவை கூட்டிட்டு போங்கனு சொன்னீங்க. ஆனா நீங்களே வந்துட்டீங்க." என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டான்.
"என்ன பண்றது!!? எல்லாம் சகவாசதோஷம் போல, இவளோட வாயை அடக்க முடியல." அவனை குத்தலான பார்வை பார்த்து சொன்னதற்கு அவளை பொய்யாக முறைத்தான் அவன்.
பின்பு, "அண்ணாவும், ஜுனியரும் வரலையா அண்ணி?"என்று கேட்க, அவர்கள் அறையில் இருப்பதாகவும், பாப்பாவை விடுவதற்காக அவள் மட்டும் வந்ததாக பதில் உரைத்தாள் தாரிணி.
" நாங்களும் இன்னிக்கு ஊரை பார்க்க கிளம்புறோம்டா ரூபிக்குட்டி. எவ்ளோ நாள் தான் அவரும் அடிக்கடி லீவு போட்றது?" என்ற தாரிணியிடம்,
"ஏன்க்கா? வீக் என்டு தானே இன்னிக்கு இருந்துட்டு அப்றம் கிளம்பலாமே."எனக் கேட்ட வித்யா, "அப்றம் மாமி எப்படி இருக்காங்க? அவங்க ஏன் வரவே இல்லக்கா?" என தன் சந்தேகத்தை கேட்டாள்.
"அவங்களுக்கு மூட்டு வலி அதிகமாயிடுச்சுடா. அதனால ட்ராவல் பண்ண முடியறதில்ல. ஆப்ரேஷன் பண்ணனும் போல, பார்ப்போம்." தாரிணி பதிலளித்தாள்.
தங்கள் அறைக்கு திரும்பிய தாரிணி, பின்னர் ஹரியும், பையனும் தயாரானதும் வித்யாவின் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் அளவளாவி விட்டு ஊருக்கு பயணப்பட்டனர்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக் கொண்டிருக்க, வித்யாவும் கார்த்திக்கிடம் இயல்பாக உரையாட தொடங்கி விட்டாள். அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் உண்டு.
அன்றும் வழக்கம் போல கிளம்பிய மூவரும், கார்த்திக்கின் பைக்கில் சென்று குழந்தையை அவளது பள்ளியில் இறக்கி விட்டு தங்களது பள்ளிக்கு சென்றனர்.
அன்றைய தினம் பணி முடிந்து இருவரும் பள்ளியில் இருந்து வெளியே வரும் போது வாசலிலேயே அவர்களை எதிர்கொண்டான் பாலா.