Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 4
"ஹலோ!.. இருக்கீங்களா?" என்று பாலா சத்தமிடவும், "யாரைடா தேடுற? " ரூபேஷ் குழப்பமாக அவனை பார்த்தான்.
"ஓஓ.. வந்துட்டீங்களா சார்? உங்கள தான் தேடுனேன். உங்க பொம்மை இறங்கி ரொம்ப நேரமாச்சு. இப்பயாவது நான் பேசலாமா?" என்றான் பாலா கிண்டலாக.
"பொம்மையை!!? அது யாரு?" கேட்ட ரூபேஷிடம், "நீ தானே பா, எப்ப பாரு ரசிச்சு பார்த்துட்டு இருப்பியே! அந்த பொண்ணை தான் சொன்னேன்." என்றான் பாலா.
"அது ஏன் பொம்மை னு சொல்ற?" என்று குழப்பமாக கேட்ட ரூபேஷிடம், "பின்னே!உன் ஆளு னு உண்மையை நான் சொன்னா உடனே அடியாள் மாதிரி என்னை மிரட்டுற."
"'அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் அழகை தான் ரசிச்சேன், அவரைக்காயை ரசிச்சேன்' னு கதை உட்டுட்டு இருக்க, வேற என்ன தான் சொல்றது?" நீட்டி முழக்கிய அவன் முதுகில் அடி வைத்தான் ரூபேஷ்.
"பிரசங்கம் பண்ணாம விசயத்தை சொல்லுடா எரும! ஆ ஊ னா உடனே நீட்டி முழக்க ஆரம்பிச்சுடுறான்." அலுத்துக் கொண்ட அவனிடம்,
" ஆமா ஆமா.. எனக்கு வேற வேலை இல்ல பாரு. நீ தான் டா அந்த பொம்மை பஸ் ல ஏறுனாலே காணாம போயிடுற. உன்னை மீட்டுட்டு வர, நீட்டி முழக்கினா தான் கூட்டிட்டு வர முடியும். வேறென்ன செய்ய!" என்றான் பாலா.
"சரி விஷயம் என்னன்னு சொல்றியா? நீ சொல்றதுக்குள்ள காலேஜே வந்துரும் போல." என்று ரூபேஷ் கூறியதும்,
"அதான் டா நான் அன்னிக்கே கேட்டேன் இல்ல. நீ இன்டர் காலேஜ் மீட்டுக்கு போறதுக்கு டிசைட் பண்ணிட்டியா?இல்லையா?" எனக் கேட்டான் பாலா.
"போகலாம் னு தான் இருக்கேன் டா. காம்படிஷன் மார்ச்லதானே வருது. ஓகே.. விடு!.. பாத்துக்கலாம்." என்று ரூபேஷ் கூறவும்..
"சூப்பரு போ! அப்போ கண்டிப்பா கப் அடிச்சிட்டு தான் வரணும். சரியா?" என்று குதூகளித்து ஊக்குவித்தான் பாலா. "கண்டிப்பா நட்பு!." என்று அவனும் உறுதி அளித்தான்.
பள்ளியில் வந்து இறங்கிய தோழிகள் இருவரும் மிகவும் சந்தோஷமாக பேசிக்கொண்டே சென்றனர்.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தியா! இத்தனை வருஷத்துல இப்பதான் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து ஒரு டூர் போக போறோம்." என்று ஈஸ்வரி மிகவும் மகிழ்வுடன் கூறிக் கொண்டிருந்தாள்.
"ஆமாடி ஈஷ்! ஒவ்வொரு வருசமும் நீங்க எல்லாம் ஒன்னா போகும் போது எனக்கு கஷ்டமா இருக்கும்."
"ஆனா இந்த வருசம் தான் லாஸ்ட் னு சொல்லி அப்பா கிட்ட பேசவும், அவர் அம்மாவை எப்படியோ சம்மதிக்க வைச்சு, ஃபீஸ் கூட கொடுத்து விட்டுட்டார்." என்று நடந்ததை கூறினாள் வித்யா.
"சரி.. சரி.. இன்னிக்கே போய் டீச்சர் கிட்ட உன் பேர் கொடுத்துட்டு, ஃபீஸையும் கொடுத்துடு." கூறிய ஈஸ்வரி, பின் சோகமாக,
"நீ சந்தோஷமான விசயம் சொன்ன. ஆனா நான் வருத்தமான விசயம் சொல்ல போறேன்." என்ற பீடிகையுடன் தொடங்கினாள். வித்யா புரியாமல் முழிக்கவும்,
"அதான் தியா, அப்பா ட்ரான்ஸ்பர் விசயமா சொன்னேன்ல, நெக்ஸ்ட் மன்த் ல இருந்து அவருக்கு சேலத்துல போட்டு இருக்காங்க." என்றாள் ஈஸ்வரி.
"என்ன ஈஷ் இப்படி சொல்ற? இன்னும் 2 மந்த்ஸ் ல பப்ளிக் எக்ஸாம் வருதே! அதுக்குள்ள எப்படி? அப்போ நீ எக்ஸாம் எழுத இருக்க மாட்டியா?" என்று அதிர்ச்சியாய் வித்யா கேட்க,
"அப்பா மட்டும் இப்ப அங்க போய் இருப்பார்டி அப்புறம் எனக்கு எக்ஸாம் முடிஞ்ச உடனே அங்க போயிடனும்."என்றாள் ஈஸ்வரி.
"எக்ஸாம் முடிச்சிட்டு தானே போவ." வித்யா உறுதிப்படுத்தும் விதமாக கேட்டாள்.
"ஆமா!" என்ற ஈஸ்வரி, "நான் எக்ஸாம் முடிச்சிட்டு எப்படியும் ஒரு ரெண்டு மாசம் லீவு இருக்குல, அதுவரைக்கும் இங்க உன் கூட இருக்கலாம் னு நினைச்சேன்."
"ஆனா இப்போ எக்ஸாம் முடிச்ச மறுநாளே போகணும்னு சொன்னாங்க. நான் தான் எக்ஸாம் முடிச்ச உடனே ட்ரிப் இருக்கு, அதை முடிச்சிட்டு அப்புறம் போலாம் அப்படின்னு சொல்லி இருக்கேன்."
"அதனால அப்பா மட்டும் இப்ப அங்க போய் தங்கி இருப்பாங்க. நாம ட்ரிப் முடிச்சுட்டு வந்த மறுநாளே நான் ஊருக்கு கிளம்பனும்."
"அப்படி தான் பிளான் போட்டு இருக்காங்க.ஷிஃப்டிங் க்கு எல்லாமே புக் பண்ணியாச்சு." என்று சோகமாக ஈஸ்வரி சொல்லவும்,
வித்யாவிற்கு மனதை தேற்ற சற்று கடினமாக இருந்தாலும், தோழியின் முக வாட்டத்தை கண்டு தன் மனதை தேற்றிக் கொண்டு,
"பரவால்ல விடு ஈஷ்! தெரிஞ்சது தானே, இப்ப மட்டும் என்ன லீவுல எல்லாம் நாம ரெண்டு பேரும் அடிக்கடி பார்த்துகிட்டேவா இருக்கோம்."
"எங்க அம்மா தான் எங்கேயும் விட மாட்டீன்றாங்களே!ஏதோ ஸ்கூலுக்கு வர்றதுக்காக பஸ் ஸ்டாப் வரை என்னை தனியா வர விட்டதே அதிசயம் தான்."
"என்ன.. அப்பப்ப நீ என் வீட்டுக்கு வருவ, இனிமே அது நடக்காது. நாம போன்ல பேசிட்டு தானே இருக்கோம். இனிமே அது மட்டும் தான் இருக்கும்." என்று தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டாள் வித்யா.
"அங்க போய் செட்டில் ஆன அப்றம் நான் உன் வீட்டுக்கு கால் பண்ணுவேன் சரியா, நாம பேசிக்கலாம்." என்று ஈஸ்வரி சற்று தன்னை தேற்றிக் கொண்டு பதில் அளித்தாள்.
அதன் பின்னர் இருவரும் சந்திக்கவே போவதில்லை என்பதை அறியாமலே இருவரும் ஆளுக்கு ஒன்றை கூறி அவர்களை தேற்றிக் கொண்டனர்.
நாட்களும் வேகமாக செல்ல, பொதுத் தேர்வு அட்டவணையும் வந்து, தோழிகள் இருவரும் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினர்.
படிப்பதற்கான விடுமுறை விடப்பட்டதால் அவளை பேருந்தில் காணாமல் ரூபேஷின் மனம் ஏதோ ஒன்றை இழந்ததை போலானது.
இருப்பினும் அதை வெளியே காட்டாமல் இயல்பு போல அவன் நடிக்கவும், அதை அறிந்தே இருந்தாலும், தெரியாத மாதிரி பாலாவும் இருந்தான்.
அவனிடம் அதை பற்றி மேலும் மேலும் பேசி அதனை வேறு எண்ணமாக மாற்ற விருப்பம் இல்லாமல்,
ரூபேஷை, கல்லூரிகளுக்கு இடையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ள, சொல்லி ஊக்கப்படுத்திக் கொண்டு இருந்தான்.
ரூபேஷும் அவளை பற்றிய நினைவுகளை ஒதுக்கி விட்டு, தனது போட்டியிலும், படிப்பிலும் கவனத்தை திசை திருப்பி, அதில் வெற்றியும் கண்டான்.

" இதுக்கு ஏங்க இவ்ளோ டென்ஸன் ஆகுறீங்க? ஜஸ்ட் ஜெனரல் ஆ தானே கேட்டேன். ஏன் உங்க கிட்ட யாருமே இதுவரை கேட்டது இல்லையா என்ன?" என
இயல்பாக கார்த்திக் சொன்ன பின்பு தான், தான் அதிகப்படியாக நடந்து கொண்டோமோ என்று எண்ணிய ரூபிணி, "ஸாரி!.." என்று மன்னிப்பு கேட்டாள்.
"பரவால்ல விடுங்க ரூபிணி. ஆனா எனக்கு புரியல. இதுவரை யாருமே உங்க கிட்ட உங்க ஹஸ்பண்ட் பற்றி கேட்டதே இல்லையா?" என்றான் அவன்.
கார்த்திக்கின் கேள்வி முடியும் போது அவர்களை நெருங்கி வந்திருந்தாள் அமுதா.
"நீ இன்னுமா கிளம்பல? பாப்பாவ கூப்பிட டைம் ஆச்சுன்னு சொல்லிட்டு வந்த, நானே வேலை முடிச்சுட்டு வந்துட்டேன். நீ இன்னும் இங்கேயே நின்னு பேசிட்டு இருக்க?" என்று கேட்கவும்,
"கிளம்பனும் அமுதா. அதுக்குள்ள இந்த சார் தான் பேசிட்டு இருக்காரு." என்று ரூபணி அவனை காட்டவும்,
"நீங்களும் இன்னும் கிளம்பலையா கார்த்திக்? என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்று அமுதா இருவரிடமும் வினவினாள்.
"நீங்களே நியாயத்தை சொல்லுங்க அமுதா. இவங்களுக்கு பாப்பா இருக்கிறதே எனக்கு சமீபத்தில் தான் தெரியும். அதான் அவங்க ஹஸ்பண்ட் எங்க இருக்காரு, என்ன பண்றாருன்னு பொதுவா கேட்டேன்."
"அதுக்கு என்னவோ நான் இவங்க சொத்தை பிரிச்சு கேட்க வந்த, சொந்தகாரங்க மாதிரி அவ்வளவு கோவமா பேசுறாங்க." என்று அமுதாவிடம் வழக்காடினான் கார்த்திக்.
அவனை சற்று கூர்மையாக பார்த்த அமுதா, "அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க கார்த்திக்?" என்று ரூபிணி கேட்ட அதே கேள்வியை இவளும் கேட்கவும்,
" ஷ்ஷ்ஷப்பா!!.. பொதுவா கேட்டது ஒரு குத்தமா? இப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி கண்ணுல ஈட்டிய வைச்சு குத்துற மாதிரி பார்க்கறீங்க?" அலுத்துக் கொண்ட அவன்,
"அது என்ன அவ்வளவு பெரிய தங்கமலை ரகசியமா என்ன!அவர் எங்க இருக்காரு, என்ன பண்றாரு என்று தானே கேட்டேன்."
"அதுக்கு போய் ரெண்டு பேரும் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க?"என்று அவர்களை ஆராய்ச்சிப் பார்வையுடன் கேட்டான் கார்த்திக்.
"அவர் துபாய் ல இருக்கார். கன்ஸ்ட்ரக்ஷன் ஃபீல்டு ல வொர்க் பண்றார். இந்த விவரம் போதுமா?" என்று அமுதா உடனே வேகமாக உரைக்கவும், அவளை அதிர்வுடன் பார்த்திருந்தாள் ரூபிணி.
ரூபிணியை கவனித்த கார்த்திக், "என்னங்க இது? உங்க ஹஸ்பண்ட் பற்றி அவங்க சொல்றாங்க. இதை நீங்க சொல்ல அவ்ளோஓஓ தயங்குனீங்க?" மீண்டும் ரூபிணியையே பார்த்துக் கேட்டான் அவன்.
"நீங்க கேட்ட டீடெய்ல் கிடைச்சுடுச்சு ல அப்றம் என்ன கிளம்புங்க." என்று அவனை பார்த்து கூறிவிட்டு,
ரூபிணியிடம் திரும்பிய அமுதா, "நீ இன்னும் இங்கேயே நின்னு பார்த்துட்டு இருக்க போறியா?"
"பாப்பா அங்க உன்ன தேடிட்டு இருப்பா. குழந்தை பசி தாங்க மாட்டாளே. நீ கிளம்பு!சீக்கிரம்." என்று ரூபிணியை விரட்ட, விட்டால் போதுமென்று அவள் ஓடியே விட்டாள்.
"என்னங்க அமுதா இது? நான் என்னமோ அவங்க கிட்ட ஃப்ளர்ட் பண்ணுன மாதிரி பிகேவ் பண்றீங்க. பொதுவா தானே பேசிட்டு இருந்தேன்."
"ஏதோ அவங்கள என்கிட்ட இருந்து காப்பாத்துற மாதிரி இப்படி விரட்டி விடுறீங்க?" என்று கார்த்திக் ஒருவிதமாக கேட்கவும்,
"உங்களுக்கு என்ன கார்த்திக் சார்! குடும்பமா, குழந்தையா? ஆனா, அவளை நம்பி ஒரு குட்டி குழந்தை இருக்குல அவ அதை பார்க்க வேண்டாமா?"
"உங்க கூட நின்னு வெட்டியா அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தா, பாப்பா பசியில அழாதா? போய் வேலையை பாருங்க சார்!" என்று விட்டு, அமுதா திரும்பி நடக்க தொடங்கவும்,
அப்போது, "இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இன்னும் எத்தனை நாள் தான் நீங்க பாதுகாத்துட்டு இருப்பீங்கன்னு நானும் பார்க்குறேன்." என்று அவன் சொல்லவும், புரியாமல் அவனை யோசனையுடன் திரும்பி பார்த்த அமுதா,
"இல்ல, எனக்கு புரியல. இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க? அப்ப அவகிட்ட பர்பஸா தான் நீங்க பேசிட்டு இருந்தீங்களா?" சந்தேகத்துடன் வினவினாள் அமுதா.
"அப்படியும் இருக்கலாம்." என்று விட்டேற்றியாக சொல்லி விட்டு அவன் அந்த இடத்தை விட்டு அகன்று விட, இப்போது புரியாமல் விழித்துக் கொண்டு நின்றது என்னவோ அமுதா தான்.