Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 39
நடந்து முடிந்ததை கார்த்திக் கனத்த மனதுடன் சொல்லி முடிக்க, வித்யா அவனது நிலையை எண்ணி கண்ணீர் வழிய நின்றாள்.
"எதுவுமே இல்லாம நடைபிணமா சுத்திட்டு இருந்தேன். செலவுகளை சமாளிக்க எப்படியும் சம்பாத்தியம் வேணுமே."
"அதான் வேலை கிடைச்சதும் அவங்களை கவனிக்க நம்பிக்கையான ஒரு ஆளை அரேன்ஜ் பண்ணிட்டு இங்க வந்தேன். எனக்குள்ள ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் வெளியே காட்டிக்க மாட்டேன்."
"இப்படி வாழ்க்கையே வெறுமையா போயிட்டு இருந்தப்ப, உன்னை நான் இங்க பார்ப்பேன் னு சத்தியமா எதிர்பார்க்கல விதுமா. உன்னை முதன்முதலா இங்க பார்த்ததும்,"
"அவ உனக்கு தான்னு எழுதி இருந்தா கண்டிப்பா உன்னை தேடி வருவா'னு அக்கா சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு." என்று கண் கலங்க கூறியவனிடம்,
"குழந்தை எங்க இருக்காள்னு உங்களுக்கு தெரியவே இல்லையா?" என்று தன் சந்தேகத்தை கேட்டாள் வித்யா.
"தெரியாது. அன்னிக்கு உன்னை குழந்தையோட பார்த்ததும் எனக்கு பயங்கர ஷாக்! எனக்கு ஒரு சந்தேகம் வந்தது அதான் உன்னை பற்றி தெரிஞ்சுக்க ட்ரை பண்ணினேன்."
"அப்ப தான் நீ படிச்சது கொடைக்கானல்னு இருந்ததை பார்த்து டவுட்டு வந்துச்சு." என்று அவன் நிறுத்தவும், அவனை புரியாமல் பார்த்தாள்.
"ஆமா. உங்கிட்ட முதன்முதலா என் மனசை சொல்ல வந்தப்ப தானே பாப்பாவை பார்த்தேன். அதுக்கப்புறம் ஒரு வாரம் சிக் லீவு போட்டுட்டு கொடைக்கானல் போய் உன்னோட காலேஜ்ல போய் விசாரிச்சேன்."
"நீ இருந்த வீட்டு அட்ரஸ்க்கு போய் பார்த்தப்ப எனக்கு அதிர்ச்சி ஆகிடுச்சு." என்றவன், அதன்பின்னர் நடந்தவற்றை கூறலானான்.
************
"ஏங்க யாராவது இருக்கீங்களா?" என்று வித்யா தங்கியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியும் யாரும் வராததால், சத்தமிட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.
சில நொடிகளில் உள்ளே ஆள் நடமாடும் அரவம் கேட்கவே, கதவை திறக்கும் சத்தம் கேட்டது. "யார் நீங்க? என்ன வேணும்?" என்று கேட்டுக் கொண்டே எட்டிப் பார்த்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.
"பக்கத்துல இருக்கே இந்த வீட்ல இருக்கறவங்கள தேடி வந்தேன். வீடு பூட்டி இருக்கே. அதான் எங்க போனாங்க னு கேட்கலாம்னுட்டு, " என்று இழுத்து அவன் நிறுத்த,
"அந்த வீட்லயா? இருந்தாங்களே? எங்கயாவது வெளியே போய் இருப்பாங்க." என்று அவர் பதிலளிக்கவும் குழம்பியவன்,
"இல்ல அங்க வித்யரூபிணினு யாரும் இருக்காங்களா?!" என்று அவன் கேட்டதும், சிறிது யோசித்த அவர்," அப்படி யாரும், " இல்லை என்று சொல்ல வந்தவர்,
"ஓஓ, அந்த பொண்ணா? ஆமா நீங்க யாரு? எதுக்கு அந்த பொண்ணை கேட்குறீங்க?" கார்த்திக்கிடம் விசாரணை கமிஷன் தொடங்கினார்.
"இல்லக்கா, நான் அந்த பொண்ணு கூட படிச்சவன். வீட்ல விசேஷம் வைச்சு இருக்கு. அதான் அவங்களுக்கு பத்திரிகை வைக்க வந்தேன்." என்று வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்.
"அப்படியா தம்பி! அந்த பொண்ணு இங்க தான் இருந்துச்சு. அதோட அக்காவும் மாமாவும் ஆக்சிடென்ட்ல இறந்து போனதும் ஆளே ரொம்ப ஒடுங்கிடுச்சு. பாவம்!" என்று அவளுக்காக பரிதாபப்பட்டார் அந்த பெண்மணி.
அதை கேட்ட கார்த்திக்கிற்கும் அதிர்ச்சி! அப்படியென்றால் அவள் தாய், தகப்பன் இறந்த பிறகு இவர்களோடு தான் வந்து இருப்பாள் போல என யூகித்தான்.
குழந்தையை பற்றி தெரிய வேண்டுமே! அதனால் அந்த பெண்மணியிடம் இயல்பாக பேசி பேச்சை வளர்க்க,
அவருக்கு அவனையும் அவனது பேச்சையும் கண்டு அவன் பார்க்க தப்பானவன் போல் இல்லாததால் வீட்டினுள் அழைத்து அமர வைத்தார்.
பேசிக் கொண்டு இருந்தவன், "அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சாக்கா?" என்று ஆரம்பித்தான்.
"இல்லயே! ஆனா அவ அக்கா, மாமா ஆக்சிடென்ட் க்கு அப்றம் ஒரு குழந்தையோட வீட்டுக்கு வந்தாங்க. கொஞ்ச நாள் இங்க தான் இருந்தாங்க."
"அப்றம் அவ கூட இருந்தவங்களோட எல்லாத்தையும் காலி பண்ணிட்டு போயிட்டாளே." என்று தெளிவில்லாமல் அந்த பெண்மணி கூறினார்.
அவர் கூறியதை வைத்து, அவனுக்கு ஒரு அனுமானம் கிடைக்கவே,
"அந்த குழந்தை யாரோடதுனு எதுவும் தெரியுமாக்கா? ஒருவேளை அவ கூட வந்தாங்கனு சொன்னீங்களே அவங்களோடதா இருக்குமோ?" என அவன் தன் யூகத்தையும் சேர்த்துக் கேட்க,
"இருக்காதுப்பா. ஏன்னா அவங்க அவளோட அக்கா வளைகாப்புக்கு வந்த அப்ப பார்த்தேனே! ஒரு சின்ன பையன் மட்டும் தான் வந்தான்." என்று அவர் ஆணித்தரமாக சொல்லவும்,
'அப்படினா அந்த குழந்தை வித்யாவிற்கு ஹாஸ்பிடல்ல தான் கிடைச்சு இருக்கனும்.'என்றும் அங்கு சென்று விசாரிக்க வேண்டும் என்றும் தனக்குள் முடிவெடுத்தவன்,
"இத்தனை வருசம் ஆகியும் எப்படிக்கா இவ்ளோ ஞாபகமா சொல்றீங்க?" என்று இதுவரை தனக்குள் எழுந்த கேள்வியை கேட்டான்.
"அந்த பொண்ணு நித்யா எனக்கு ரொம்ப பழக்கம்பா. நல்ல பொண்ணு. பாவம் ரொம்ப வருசம் கழிச்சு குழந்தை உண்டாச்சு, அதை பெத்து எடுக்க கூட அதிர்ஷ்டம் இல்லாம போயிடுச்சு." என்று அவளை எண்ணி வருந்தினார்.
அவர்களது புகைப்படம் எதுவும் இருக்குமா என கேட்டவன் தனக்கு தோன்றிய சந்தேகத்தையும் கேட்டான்
"ரெண்டு வருசம் முன்னே நான் இங்க வந்தேனேக்கா. அப்ப உங்க வீடு பூட்டி இருந்துச்சே?" அன்று குழந்தையை தத்து எடுத்தவர் முகவரி என்று அவன் இங்கு வந்ததை கேட்கவும்,
"ரெண்டு வருஷம் முன்னேயா?" என யோசித்தவர், "எங்கம்மாக்கு உடம்பு முடியலனுட்டு சில மாசம் ஊர்ல இருந்தேன்பா. ஒருவேளை நீ அப்ப வந்து இருப்பியோ?" என்று கேள்வியோடு கூறினார்.
கார்த்திக்கிற்குமே இருக்குமோ என்று தோன்ற அதற்கு மேல் விளக்கம் கேட்காமல் விட்டு விட்டான்.
அவன் கேட்ட புகைப்படத்திற்காக, அவரும் என்றோ அவர்கள் மகளது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை காட்ட தன் அலைபேசியில் அதை எடுத்துக் கொண்டு,
அவரிடம் எந்த மருத்துவமனை என்று கேட்க, அவர் சொன்ன பெயரில் அவனுக்கு குழப்ப மேகங்கள் விலக, கொஞ்சம் கொஞ்சமாக விடை தெரிய தொடங்கியது.
அந்த மருத்துவமனையில் அந்த புகைப்படத்தை காட்டி கார்த்திக் கேட்க, அங்கிருந்த பலருக்கு தெரியவில்லை.
அதில் ஒருவர் அங்கு பல வருடங்களாக பணி புரிபவர் என்று ஒரு செவிலியை பற்றி கூறி, அவரிடம் கேட்க சொன்னதும், அவரை கண்டறிந்து அந்த புகைப்படத்தை காட்டி கேட்டான்.
அந்த புகைப்படத்தை பார்த்த அந்த செவிலியும் சிறிது நேரம் யோசித்து விட்டு, "இந்த பொண்ணா!!?" என்று வித்யாவை அடையாளம் கண்டு கொண்டார்.
அவருக்கு அவளை தெரிகிறது என்றதும், அந்த குழந்தையை பற்றி அவன் விசாரிக்க, நடந்த அந்த விபத்தில் தாய், தகப்பனை இழந்த குழந்தை என்று அவர் சொன்னதுமே அவனுக்கு விளங்கி விட்டது.
அவன் அந்த விபத்து நடந்த வருடமும் மாதமும் சொல்லவும் அவரும் சிறிது யோசித்து விட்டு ஆமோதிக்க, அந்த குழந்தை தங்கள் குட்டிமா என்று அறிந்து ஆனந்த கண்ணீர் வந்தது.
"பாவம் அந்த பாப்பா அழுது அழுது சிவந்து போய், எப்படி சமாளிக்கனுட்டு நான் திணறிட்டு இருந்தப்ப தான் அந்த பொண்ணு வந்து தூக்குனதும் மந்திரம் போட்ட மாதிரி நிப்பாட்டுச்சு."
"இங்க இருந்த வரை அந்த பொண்ணுகிட்ட தான் பா அந்த பாப்பா அழுகையையே நிறுத்துச்சு. அந்த பாப்பாவை தேடி யாரும் வராததால ஆசிரமத்துல விட சொன்னாங்க."
"ஆனா அந்த பொண்ணு தான், அதுவே பார்த்துக்கறேன்னுட்டு பெரிய டாக்டர்கிட்ட எல்லாம் பேசிட்டு இருந்துச்சு."
"அப்றம் என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியாதுப்பா."என்று நடந்ததை விவரித்ததும் கார்த்திக் எவ்வாறு உணர்ந்தான் என்று அவனுக்கே விளங்கவில்லை.
எத்தனை மாத தேடல்! எங்கு இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? என்றெல்லாம் அவன் ஏங்கி தேடிக் கொண்டிருக்க, குழந்தை தன்னவளிடம் தான் பத்திரமாக இருந்து இருக்கிறாள் என்பதில் நிம்மதி அடைந்தான்.
கொடைக்கானலில் நடந்து முடிந்ததை கார்த்திக் கூறியதும் பவிஷ்யா அவன் சகோதரியின் குழந்தை என்பதை உணர்ந்து அதிர்ந்தாள் வித்யா.
அதிர்ச்சியில் சிலையென நின்ற அவளை கண்டு பதறியவன், "சத்தியமா பாப்பாவை உங்கிட்ட இருந்து பிரிச்சுட்டு போக நான் வரலைடா விதுமா. நீ சொன்னியே உன்னோட தனிமையின் தாகத்தை தீர்க்க வந்தவன் நான்னு, "
"உண்மையிலேயே இத்தனை வருசமா சுத்தி எத்தனை பேர் இருந்தாலும், மனசுக்கு நெருக்கமான ஓர் உறவு இல்லாம தவிச்சுட்டு இருந்த நான், நீ கானலாக போனதா நினைச்சுட்டு இருந்தேன்."
"ஆனா என்னோட தனிமை தாகத்தை தீர்த்த கானல் நீ தான்!" என்று கூறி அவளை இறுக அணைத்துக் கொண்டான். அதில் உன்னை எப்போதுமே பிரிய மாட்டேன் என்ற உறுதி மட்டுமே இருந்தது.
அந்த நேரம் அவளுக்கும் அந்த அணைப்பு தேவைப்படவே, சிறிது நேரம் நிசப்தமான அந்த சூழலில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலடைந்து அப்படியே நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு அவனது அலைபேசி அடிக்க, பதறியவள் அவனிடம் இருந்து பிரிய, நிதானமாக அவளை தன் கைவளைவிலேயே வைத்துக் கொண்டு அதை ஏற்றான்.
"கொழுந்தனாரே! நாங்க பாப்பாவை கூட்டிட்டு எங்க ரூமுக்கு வந்துட்டோம். அவ சாப்பிட்டுட்டு தூங்குறா."
"நீங்க நிதானமா பேசி முடிச்சுட்டு, இல்லனா சண்டை போட்டு முடிச்சுட்டு, நாளைக்கு யார் மீதி இருக்கீங்களோ, அவங்க வந்து பிள்ளைய கூட்டிட்டு போங்கப்பா." என்று நக்கலுடன் விசயத்தை கூறி முடித்தாள் தாரிணி.
"ஏன் அண்ணி? என்னைய எப்படியாவது இவ கிட்ட அடி வாங்க வைச்சு, அதுல ஆனந்தமாகனும் உங்களுக்கு அதானே? வெஷம்! வெஷம்!" என்று அவன் பொய் கோபத்துடன் பேசவும்,
"ஆமா!ஆமா! அவ அப்படியே அடிச்சுட்டாலும்!" தாரிணி இழுத்து நிறுத்த, "அதுல மேடம் க்கு ரொம்ப வருத்தம் போல." என்று அதன் பொருள் புரிந்து கேட்டான் அவன்.
"நான் எதுவும் சொல்லலைபா. எனக்கு தூக்கம் வருது. காலைல நீ முழுசா இருந்தா பேசறேன். அப்றம் சோறு சோறுனு ஒரு விசயம் இருக்குது. ரெண்டு பேரும் சண்டை முடிச்சிட்டு போய் சாப்பிடுங்க. டேபிள் மேல வைச்சு இருக்கேன்." என்று கூற
"அட! ஆமா அண்ணி! நீங்க சொன்ன அப்றம் தான் சாப்பாடு..சாப்பாடுனு என் வயிறு கூப்பாடு போட்றது என் காதுக்கு கேட்குது." என்றான் கார்த்திக் வயிற்றை தடவிக் கொண்டே,
"அப்படினா போய் ரெண்டு பேரும் கொட்டிக்கிட்டு, அப்புறமா யூ கன்ட்டினியூனு திரும்ப ஆரம்பிங்க. குட் நைட்!" என்ற தாரிணி அழைப்பை வைத்தாள்.
"அப்ப தாரிணி அக்காவுக்கு எல்லா விசயமும் தெரியுமா?" என்று வித்யா ஆச்சர்யமாக வினவிட, கார்த்திக் அதை ஆமோதித்தான்.
"பாப்பா அவங்க கிட்ட காத்திப்பா சொன்னா போல, எனக்கு ஒரு நாள் கால் பண்ணினாங்க. நான் உன்னை விரும்பறதை சொன்னதும் அவங்க நம்பலை."
"நிறைய கேள்வி குடைஞ்சு குடைஞ்சு கேட்டாங்க. அப்றம் நான் உன்னை எப்போ இருந்து லவ் பண்ணுறேன்னு சொன்னதில் இருந்து தான் நம்புனாங்க." என்றவன்
"அவங்களுக்கு மட்டும் தான் அம்மாவோட நிலைமையும், அக்கா விசயமும் பாப்பாவை பற்றியும் தெரியும்." எனக் கூறி முடித்தான்.
அப்போது ஏதோ ஒன்று அவளுக்கு சிந்தனையில் வரவே, அவள் தீவிரமாக யோசித்து கொண்டிருக்க, அவன் உணவை எடுத்து வர சென்றான்.