Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 38
இரவு உணவிற்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருந்த ராஜேஸ்வரியிடம் வந்த சித்தார்த், "அத்தை! உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும். இப்ப பேசலாமா?" என்று கேட்டான்.
"இதென்ன கேள்வி மாப்பிள்ளை? பேசுங்க. என்ன பேசனும் னாலும் நார்மலா பேச வேண்டியது தானேபா. இதுக்கு எதுக்கு பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு?" என்று அவர் சிறு கண்டிப்புடன் அனுமதித்தார்.
"அது வந்து, எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் ஒன்னு வெளியூர்ல இருக்கு. ரொம்ப இம்பார்ட்டென்ட் ஆன கான்ஃப்ரன்ஸ் அது" என்று சித்தார்த் தொடங்கியதும்,
'இதை ஏன் என்னிடம் சொல்கிறார்?' என்ற புரியாத பார்வை பார்த்து இருந்தார் ராஜேஸ்வரி.
"அதுக்கு தீபுவையும் கூட்டிட்டு போகலாம் னு இருக்கேன். அதான் உங்க கிட்ட கேட்டுடலாம்னுட்டு" என்று சித்தார்த் முழு விவரம் எதுவும் சொல்லாமல் இழுத்து நிறுத்த,
"உங்க மீட்டிங்கிற்கு அவ எதுக்கு? எனக்கு புரியல? அதுவுமில்லாம அவ கைப்பிள்ளைகாரி. குழந்தைக்கு வேற ஃபீட் பண்ணனுமே." என்று அவரும் தயங்க,
"அதில்ல அத்தை! என்னோட ஃபீல்ட் மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்சன் தானே. அதுக்கு தீபுவும் கூட இருந்தா கொஞ்சம் ஹெல்ப் ஃபுல்ஆ இருக்கும்." தன் பணியை பற்றி அவன் கூற,
ராஜேஸ்வரி சிறிது தயக்கத்துடன், "நீங்க சொல்றது சரி தான், ஆனா அவ வரனும்னா குழந்தையும்ல கூட்டிட்டு போகனும்." என்று யோசித்தவர், "ஆமா, மீட்டிங் எத்தனை நாள்? எங்க நடக்குது?" என வினவினார்.
"அது," என்று தயங்கியவன், "கொடைக்கானல்அத்தை.ரெண்டு இல்ல மூணு நாள்ல வந்துடுவோம்." என்று அவன் பதிலளித்ததும் ராஜேஸ்வரி அறவே மறுத்தார்.
அந்த சீதோஷணம் அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளாது என்று வேண்டவே வேண்டாம் என மறுத்துக் கூற,
"ப்ளீஸ் அத்தை! அவளே டாக்டர் தானே. அதுக்கான ப்ரிக்காஷன்ஸ் அவளுக்கே தெரியுமே. அவங்க எங்கூட இருந்தா எனக்கு ஒரு மாரல் சப்போர்டிவ்ஆ இருக்கும்." என்றவன்,
"நாங்க கார்ல தானே போறோம்த்தை. அங்க போய் ரூம்ல இருக்க போறோம். வெளியே அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதனால ஒன்னும் ஆகாது." விளக்கினான் சித்தார்த்.
"அதெல்லாம் சரி தான்பா. ஆனாலும்?" என தயங்கிய ராஜேஸ்வரியை வெகு நேரம் போராடி அரைகுறையாக சம்மதிக்க வைத்து, மனைவியை தேடி வந்தான்.
அறைக்குள் வந்து "மிஷன் சக்சஸ்!" என்று கட்டை விரலை உயர்த்தி காட்டி குதூகளிப்பில் கூறி மனைவியை முத்தமிட்டு அணைத்தவன்
"எப்படியோ அத்தையை சம்மதிக்க வைச்சாச்சு.சரி, இதுக்கு மேடம் எனக்கு என்ன தருவீங்க?" என்று மனைவியிடம் சரசமாக சித்தார்த் கேட்க,
அவனது கன்னத்தில் முத்தமிட்டவளை, "ஐய்யேய்ய! இதென்ன சின்ன புள்ள மாதிரி! எனக்கு வேற வேணும்." என்று கண் சிமிட்டி கேட்டவனை கண்டு, அவள் நாணினாள்.
"அதெல்லாம் இப்ப கிடையாது." என்று கறாராக கூறியவள், அதன் பின் திடீரென,
"சித்து! நாம கொடைக்கானல் போறது தம்பிக்கு தெரிய வேணாம்." என்று தீவிரமாக சொன்ன மனையாளை புரியாமல் பார்த்தான் சித்தார்த்.
"ஏன் தீபு அவனுக்கு தெரியக் கூடாதுனு சொல்ற?" என்று வினவியவனுக்கு,"அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ்ஆ இருக்கட்டுமே." என்ற தீபிகாவின் பதில் போதுமானதாக இருந்தது.
குழந்தைக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொண்டு, தம்பதியினர் மறுநாளே கொடைக்கானலுக்கு பயணப்பட்டனர்.
ராஜேஸ்வரிக்கு மனம் நிலையில்லாமல் தவித்தது. சில வருடங்களுக்கு முன்பு உணர்ந்த அதே உணர்வு அவரை ஆட்கொள்ள,
கார்த்திக்கும் அரசுப் பணிக்கான நேர்காணலுக்காக சென்னை சென்று விட, அவனிடமும் எதுவும் சொல்ல முடியாமல் அதை புறக்கணிக்க முயன்றார்.
தீபிகாவும், சித்தார்த்தும் கொடைக்கானலை நோக்கி பயணப்பட்டனர், கார்த்திக் நேர்காணலுக்கு உள்ளே செல்லும் முன் தன் தாயை அழைக்க, அது எடுக்கப்படாமல் இருக்கவே தன் சகோதரியை அழைத்தான்.
அதுவும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாய் உரைக்கவும் குழம்பியவன், சித்தார்த்திற்கு அழைக்க, அதே பதில் வரவே என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டு இருந்தான்..
அதற்குள் நேர்காணலுக்கு தாமதம் ஆகவும், 'சரி, இன்டர்வியூ முடித்து விட்டு வந்து அழைப்போம்' என்றெண்ணி தன் கைபேசியை அணைத்து வைத்திருந்தான்.
தீபிகாவும் சித்தார்த்தும், மரக்கிளை விழுந்து கீழே கிடந்த அந்த எச்சரிக்கை பலகை தெரியாமல் போனதால், ஒரு வழிப்பாதையாக மாறிய கொடைக்கானல் மலைப்பாதைகளில் ஏறத் தொடங்கியதும்,
"என்னடா தீபு நாம மட்டும் தான் கொடைக்கானலுக்கு போறோமா என்ன? நமக்கு முன்னாடியோ, இல்ல பின்னாலேயோ ஒரு வண்டியும் வரலையே!?" என்று தன் சந்தேகத்தை கேட்டான்..
"ஒருவேளை இது ஆஃப் சீசனா இருக்குமோ என்னவோ சித்து! சரி, பாப்பா தூங்கிட்டா, நீங்க வண்டியை ஓரமா நிறுத்துங்க.. பின்னாடி அவளை பேபி சீட்ல படுக்க வைச்சுடுறேன்." என்று கூறினாள் தீபிகா.
காரை ஒரு ஓரமாக நிறுத்தி குழந்தையை பின்பக்கம் பாதுகாப்பாக படுக்க வைத்து விட்டு இருவரும் முன்புறம் அமர்ந்து பயணிக்க,
"இங்க நீ நினைச்சது நடந்ததும் ஐயாவை செமத்தியா கவனிக்கனும் சரியா?" என்று பேசி அவளை சிவக்க செய்தவனிடம் பேச்சை மாற்றுவதற்காக,
"அதான் ரோட்ல ஒரு வண்டியும் வரலையே சித்து. கொஞ்சம் வேகமா தான் போங்களேன். எப்போ அங்க போக போறோம்னு எனக்கு ஒரே எக்ஸ்சைட்டிங்ஆ இருக்கு." என்று மனம் முழுவதும் மகிழ்ச்சிப் பொங்க கூறினாள் தீபிகா.
அவளது மகிழ்வை கண்டு மனம் நிறைந்த சித்தார்த் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். சிறிது நேரத்தில் வந்த ஒரு திருப்பத்தில் எதிரே ஒரு கார் இறக்கத்தில் வேகமாக வர,
இருவரது வாகனமும் கட்டுப்பாட்டை இழந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதி, முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தீபிகாவும், சித்தார்த்தும் இறந்ததாக அறிவிக்கப்படவும், குழந்தை மட்டும் பாதுகாப்பாக பின்பக்கம் பொருத்தப்பட்ட சீட்டில் இருந்ததால் உயிர் பிழைத்தாள்.
ஏற்பட்ட விபத்தில் சித்தார்த்தின் கைப்பேசி எங்கேயோ தூக்கி எறியப்பட்டு காணாமல் போக, தீபிகாவின் கைபேசி மட்டும் நசுங்கிய நிலையில் கிடைத்தது.
***********
நேர்காணல் முடிந்து மறுநாள் வீடு வந்த கார்த்திக், தன் தாயிடம் 'ஏன் அழைப்பை ஏற்கவில்லை?' என்று வினவ,
"தெரியலடா. நான் நேத்து கோவிலுக்கு போய் இருந்தப்ப கூப்டுட்டு இருப்ப போல, அப்றம் நான் ட்ரை பண்ணுன அப்ப உன்னோடது எடுக்கல." என்ற தாயின் விளக்கத்திற்கு பதில் அளித்தவன்,
"அக்கா, மாமா, குட்டிமா எல்லாம் எங்க காணோம்மா? சத்தமே இல்லாம இருக்கே!?" எனக் கேட்டான் கார்த்திக்.
"மாப்பிள்ளைக்கு ஏதோ மீட்டிங் இருக்குனு அவளையும் பாப்பாவையும் கூட்டிட்டு கொடைக்கானல் வரை போய் இருக்காங்க." என்று தாய் கூறியதும்,
"அவரோட மீட்டிங் க்கு இவங்க எதுக்கு?" என கேட்டவன், அதன் விவரங்களை ராஜேஸ்வரி சொல்லவும் சரியென்று விட்டான்.
"அதான் நான் கூப்பிட்ட அப்போ ஃபோன் எடுக்கலையா? சிக்னல் இருக்காதோ என்னவோ!?" என்றவன் தன் அடுத்த வேலையை பார்க்க சென்றான்.
அடுத்து வந்த மூன்று தினங்களும் தாய், மகன் இருவருக்குமே குழந்தையும் அவர்களும் வீட்டில் இல்லாமல் வெறிச்சென்று இருந்தது.
அவர்களாக அழைப்பார்கள் என்றிருந்தவர்கள் எந்த அழைப்பும் வராமல் போகவே நான்காம் நாள் ஆன பின்பும் அவர்களை காணாமல்,
சித்தார்த்தின் அலுவலகத்தில் மீட்டிங் எப்போது முடியும் என்பதை அறிவதற்காக தொடர்பு கொண்ட கார்த்திக், அப்படி எதுவும் நடக்கவில்லை என்ற தகவலில் திகைத்தான்.
தாயிடம் அவர்கள் அங்கு தான் சென்றார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட கார்த்திக்கிற்கு,
'இப்படி ஒரு காரணத்தை கூறி எங்கு சென்றார்கள்?!' என்ற பெரும்வினா எழும்பியது. வேறு வலியில்லாமல் தாயிடம் விசயத்தை பொறுமையாக எடுத்துரைக்க, ராஜேஸ்வரி இடிந்து போனார்.
பின்பு இருவரும் என்ன செய்ய என்று தெரியாமல் போலீஸில் கம்ப்ளைன்ட் செய்ய முடிவு செய்தனர்.
அவர்களது நேரமோ என்னவோ? கார்த்திக்கின் கைபேசி களவு போனதால் அவனது எண் முடக்கி வைக்கப்பட்டு இருக்க,
கொடைக்கானலில் இருந்து அழைத்த போது, ராஜேஸ்வரியின் கைபேசியோ அணைந்து போய் இருக்க,தொடர்பு கொள்ள முடியாமல் போனது விதியே.
காவல்துறையிடம் அனைத்து விவரங்களையும் கூறி புகார் அளித்து இருக்கவும் ஓரிரு மாதங்களுக்கு பிறகு அவர்கள் கொடைக்கானல் சாலையில் சென்றது உறுதி செய்யப்பட்டது.
விவரம் தெரிந்த பின் கார்த்திக், தாயிடம் எதுவும் உரைக்காமல் கொடைக்கானல் விரைய, அங்கு அவனுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு நடந்த விபத்தை அறிந்து தாள முடியாமல் மொத்தமாக உடைந்தான். அவர்களின் இறுதி காரியங்கள் கூட செய்ய இயலாமல் போனதே என்று துடித்தவன், குழந்தையை பற்றி விசாரித்தான்.
குழந்தையை தேடி யாரும் வராததால் ஆசிரமத்தில் விட சொன்னதாக காவல்துறை தெரிவிக்க, அங்கு சென்று விசாரித்தவனுக்கு மேலும் அதிர்ச்சி.
குழந்தையை தத்து எடுத்து சென்று விட்டனர் என்று அவர்கள் ஒரு முகவரியை அளிக்க, அதில் சென்று பார்த்த கார்த்திக், அங்கு யாருமில்லாமல் திரும்பினான்.
பித்து பிடித்தாற் போல வீடு திரும்பியவனை கண்டு, "என்னாச்சுடா கார்த்திக்? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று பதட்டத்துடன் வினவினார் ராஜேஸ்வரி.
"அம்மா!அம்மா!" என்று கண்ணீர் பொங்க பேசியவனை கண்டு பதறியவர்,
"என்னப்பா ஆச்சு?என்னனு சொல்லு? மனசெல்லாம் பதறது." தாயின் பதட்டம் கண்டு தன்னை சற்று நிலைப்படுத்திக் கொண்டவன்,
அங்கு நடந்ததை சொல்லி முடிக்கவும், அதிர்ச்சியில் ராஜேஸ்வரி மயங்கி சரியவும் சரியாக இருந்தது.
"அம்மா!!" என்று அலறி தாயை தூக்கிக் கொண்டு மருத்துவமனை செல்ல, மேலும் இரண்டு நாட்கள் மயக்கத்தில் இருந்து சோதித்த பின் கண் விழித்தார் ராஜேஸ்வரி.
மகளது நிலையை எண்ணி கண்ணீர் பொங்க, "கடவுளே! என் உசுரை எடுத்துட்டு அவங்கள வாழ வைச்சு இருக்க கூடாதா?" என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தி கதறினார்.
"ஒன்னும் தெரியாத பச்சை மண்ணை இப்படி யாரோ கொண்டு போக, இழந்து நிக்குறோமே." என்று பிள்ளையை எண்ணி மறுகினார்.
"டேய் கார்த்திக்! பாப்பாவை எப்படியாவது கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாடா." என்று அவனிடம் கண்ணீர் மல்க மன்றாடலுடன் அவர் பேசியதே கடைசி வார்த்தை!
நடந்த நிகழ்வில் நினைவுகள் ஸ்தம்பிக்கப்பட்டு அவர் மீண்டும் மயங்கி விட, மருத்துவரை தேடி ஓடினான் கார்த்திக்.
ராஜேஸ்வரியை சோதித்த மருத்துவர், அவர் அதிர்ச்சியில் கோமா நிலையில் இருப்பதாக கூற, ப்ரமை பிடித்தது போலானது அவனுக்கு.
இந்த நிலையில் அவனது பணிக்கான உத்தரவும் வர, என்ன செய்ய என தெரியாமல் தவித்தவன், தன்னை தேற்றிக் கொண்டு அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தான்.
தாயின் நிலையில் மனமுடைந்தாலும் கண்டிப்பாக ஒரு நாள் எல்லாம் மாறும் என்ற ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையை பற்றிக் கொண்டு இருந்தான்.
மருத்துவ செலவுகளையும், பொருளாதார நிலையையும் சமாளிக்க பணி இன்றியமையாதது என்பதை உணர்ந்து, தாயை பேண நம்பிக்கையான ஆளை அமர்த்தி விட்டு பணிக்கு சேர்ந்தான்.
இடைப்பட்ட காலத்தில் குழந்தையை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொண்டான். ஆனால் பலன் தான் இல்லை.
இயல்பிலேயே எதையும் தாங்கும் மன திடம் கொண்ட கார்த்திக், நாட்கள் செல்ல செல்ல தன்னை ஓரளவு தேற்றிக் கொண்டு யாரிடமும் தன்னை பற்றி கூறி பச்சாதாபத்தை பெற விரும்பாமல், தன் கலகலப்பான இயல்பை கொண்டு தன் மன வேதனைகளை மறைத்தான்.