Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 36
அமைதியாக வரும் தம்பியை கண்டு குழம்பிய தீபிகா, "என்னாச்சு டா கார்த்திக்?" என்று கேட்டதற்கு பதிலே இல்லாமல் இருக்க, மீண்டும் சத்தமாக, "டேய் கார்த்தி!!!?" அவனை அழைத்தாள்.
"ஹான்! என்னக்கா?" என்று அப்போது தான் தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவன் பதிலளித்தான்.
"என்ன டா ஆச்சு??! ஏன் ஒரு மாதிரி இருக்க? நீ என்னை கூப்பிட வந்து ரொம்ப நேரமாச்சா கார்த்திக்?" அவனது அமைதி எதனால் இருக்குமென ஒரு யூகத்தில் கேட்டாள் தமக்கை.
கார்த்திக் அதற்கு, "கொஞ்ச நேரம் இருக்கும்!.. ஏன் கேட்குற?!.." என்றிட,
"லாஸ்ட் பேஷன்ட் கிளம்புன அப்றம் வந்தியா?!.. இல்ல.. அதுக்கு முன்னாடியே வந்துட்டியா? னு தான் கேட்டேன்டா." எதுவும் தெளிவாக சொல்லாமல் மீண்டும் கேள்வி கேட்டாள் தீபிகா.
"அந்த பொண்ணு விசயம் எனக்கு தெரியுமா தெரியாதானு கேட்க வர்ற. அதானே!!?" என்றான் அவளது மனதை படித்தது போல.
"ஆமாடா கார்த்திக்! பாவம் அந்த பொண்ணு சின்ன வயசுடா. எப்படி இந்த மாதிரி எல்லாம் இவனுகளுக்கு மனசு வருதோ! ச்சீ!" என்று அருவருப்புடன் கூறியவள்,
"இந்த மாதிரி நாய்களுக்கு பொண்ணு னு கண்ணுக்கு தெரிஞ்சா போதும் போல. அது ஆறு வயசானாலும் சரி. அறுபது வயசானாலும் சரி. ச்சே!"
"மனுசனுகளே இல்ல. இவங்களை எல்லாம் ஆத்திரம் அடங்கற வரை அடிச்சே கொல்லனும்." என்று கோபத்தில் பொங்கிக் கொண்டு இருந்தாள்.
இவள் கோபத்தில் பேசிக் கொண்டே வர, அவன் எதுவுமே பதிலளிக்காமல் இருக்கவும், மீண்டும் அவனிடம்," நீ ஏன்டா அமைதியா வர்ற?" எனக் கேட்டாள்.
அவள் அப்படி கேட்டதும் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படையாக சகோதரியிடம் பகிர்ந்தான் கார்த்திக்.
அதை கேட்ட தீபிகா, "என்னடா தம்பி சொல்ற??!." என்று அதிர்ச்சி அடைய, "என்னோட மனசுல தோனுனதை சொன்னேன் அக்கா." என்றான் அவன் கூலாக.
"ஆனா எப்படி?? அந்த மாதிரி நிலைல இருக்கற பொண்ணு கிட்ட போய்!?" என்று 'உனக்கு எவ்வாறு தோன்றியது?'என முழுதாக சொல்லாமல் பாதியில் நிறுத்தினாள் தீபிகா.
"ஏன் க்கா ஒரு அப்யூஸ் பண்ணப்பட்ட பொண்ணு நார்மல் வாழ்க்கை வாழ கூடாதா?" என்று எதிர்க்கேள்வி கேட்டான் கார்த்திக்.
"அட லூசு பக்கி! நான் அப்படி சொல்ல வரலைடா. கண்டிப்பா அவளும் ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழனும். ஆனா...." என்ன சொல்வது எப்படி விளக்குவது என தெரியாமல் முழித்தாள் தமக்கை.
"அந்த சந்தோஷமான வாழ்க்கையை என்னோட இருந்து வாழ்நாள் முழுவதும் அவ வாழட்டும் னு நான் நினைக்கிறேன்."
"அவளோட முகத்துல இனிமே எப்பவுமே மகிழ்ச்சியை மட்டும் தான் பார்க்கனும்னு விரும்பறேன். அது தப்பாக்கா?" என்றான் அவனும் தன் மனதை விளக்கி விடும் வேகத்தில்.
"தப்புனு சொல்லலை கார்த்திக். நீயே அவளை இப்ப தான் பார்க்குற அதுவும் இந்த மாதிரி ஒரு நிலையில, "என்று இழுத்து நிறுத்தியவள் பின்பு யோசித்து விட்டு,
"ஒருவேளை அவ மேல இருக்கற பரிதாபத்துல உனக்கு அப்படி தோணுதோ என்னமோடா அதை காதல்னு தப்பா நினைச்சுட்டு இருக்கியோ என்னவோ? நல்லா யோசி தம்பி." என்றாள் தீபிகா.
"பரிதாபம் எல்லாம் இல்லை அக்கா! அவளோட வலி என்னோட உயிர் வரை தாக்குது. உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது தெரியலையே!?" என புரிய வைக்க முடியாமல் தவித்தவன் பின்பு,
"ஏன் ககாநீ மாமா வை ஃபோட்டோல ஒரு தடவை பார்த்து தானே பிடிச்சு இருக்குனு ஓகே சொன்ன!? பார்த்த முதல் பார்வையிலேயே எப்படி நீ அப்படி சொன்ன?"என்று அவளிடம் வினவினான்.
"இதென்ன கேள்வி!? பிடிச்சிருந்தது. அவ்ளோ தான். அதுக்கு காரணம் எல்லாம் எப்படி சொல்றது?" பட்டென்று தீபிகா பதிலளிக்க, "அதே மாதிரி தான் இதுவும்." என்றான் அவன்.
"என்னவோ போடா. நீ ஏதோ முடிவு பண்ணிட்ட. சரி, உன்னோட விருப்பம். ஆனா அம்மாவை பற்றி யோசிச்சியா?" என்று அவள் தாயை நினைத்து சந்தேகத்துடன் உரைத்தாள்.
"அட லூசு சண்முகம்! நான் என்ன அவளை நாளைக்கே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வாசலில் வந்து நிக்கிறேன்னா சொன்னேன்." என்றவன்,
"அவ அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே எத்தனை நாளோ? எத்தனை வருசமோ? அதுவுமில்லாம சின்ன பொண்ணுக்கா."
"நானும் லைஃப் ல ஓரளவு ஸ்டடி ஆன அப்றம் அதை பார்ப்போம்." என்று நெடுநாள் திட்டம் போல கூறினான் கார்த்திக்.
"சண்முகம் சொன்னேனா அம்மா கிட்ட நீ இப்படி எல்லாம் பேசுற னு போட்டு கொடுத்துடுவேன். ஜாக்கிரதை!" என்று மிரட்டியவள்,
"உன்னோட ஐந்தாண்டு திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு தம்பி.ஆனா நீ இன்னும் ஒரு வாரத்துல ஊருக்கு போயிடுவ. அதுவரை அவ எங்க இருப்பா?எப்படி இருப்பா? உனக்கெப்படி தெரியும்?" என
தீபிகா குழப்பத்துடன் வினவிட, "அதுக்கு நம்ம அனுமார் பாலா இருக்கானே. அவங்கிட்ட எல்லாம் கவனிச்சு சொல்லச் சொல்லி இருக்கேன்." என்றான் அவன்.
"பெரிய கேடிடா நீ!" என்று தம்பியை செல்லமாக திட்டியவளை, "நீ என்னை பற்றி கவலைப்படறதை விட்டுட்டு ஜாலியா மாமா கூட டூயட் பாடிட்டு இரு." என்று கூறினான் கார்த்திக்.
இருவரும் உரையாடிக் கொண்டே வீடு வந்து சேர, "ஏன்டி இவ்ளோ லேட்?" என்று ஆரம்பித்த ராஜேஸ்வரி, இடைவிடாத வசவு மழையென பொழிய, அவள் பாவமாக முழித்து நின்றாள்.
வண்டியை நிறுத்தி விட்டு வந்த கார்த்திக், சகோதரி நிற்கும் விதத்தை கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு, "போதும்மா. பாவம் அவளே க்ளினிக் ல இவ்ளோ நேரம் வேலை பார்த்துட்டு பசியோட வர்றா."
"துளியூண்டு சோத்தை கூட கண்ணுல காட்டாம க்ளாஸ் எடுத்துட்டு இருந்தா? பாவம் அக்கா என்ன பண்ணுவா?" என்று சகோதரியை காப்பாற்றினான் தம்பி.
"சரி,சரி வாங்க. நான் போய் சாப்பிட எடுத்து வைக்கிறேன்." என்று தனது உரையை முடித்து விட்டு ராஜேஸ்வரி உள்ளே செல்ல,
தீபிகா கார்த்திக்கை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு நன்றி கூறினாள். அவனும் அபயக்கரம் காட்டி விட்டு, உள்ளே சென்றனர்.
அடுத்து வந்த நாட்களில் கார்த்திக் தீவிரமான சிந்தனையோடே சுற்றிக் கொண்டு இருக்க, என்னவென்று சகோதரி கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று விட்டான்.
அவனிடம், அவ்வப்போது 'வித்யாவை பற்றி தகவல் தெரிந்ததா?' என்று கேட்கவும் மறக்கவில்லை அவள்.
அவன் கிளம்புவதற்கு ஒரு நாள் இருக்கையில், "டேய் கார்த்தி! நாளைக்கு என்னடா சமைக்கிறது சிக்கனா, மட்டனா இல்ல மீன் எதுவும் எடுக்கவா?" என்று
எல்லா தாய்மாரை போல 'அவன் கல்லூரிக்கு சென்றால் நல்ல சாப்பாடு சாப்பிட மாட்டானே' எண்ணிய ராஜேஸ்வரி கேட்டிட, தீபிகா நமட்டுச் சிரிப்புடன்.
"நல்லா சாப்பிட்டுக்கோ தம்பி. இன்னும் கொஞ்ச வருசத்துக்கு அப்றம் உனக்கு வீட்ல இதெல்லாம் கிடைக்காது." என்று அவனை கிண்டல் செய்ய,
அவளை முறைத்தவன், "உங்களுக்கு எது ஈசியோ அதை செய்ங்கம்மா." தாயின் விருப்பத்திற்கு விட்டவன்,
"அதெல்லாம் நாங்களே சமைச்சுக்குவோம்." என்று கெத்தாக அவள் காதருகே சென்று முணுமுணுத்தான்.
கார்த்திக் ஊருக்கு கிளம்பிய பின், தீபிகாவின் பெரும்பாலான நேரம் க்ளினிக்கிலும், அவளது வருங்கால கணவன் சித்தார்த் உடனான அலைபேசி பேச்சிலும் கழிந்தன.
அடுத்த மாதம் திடீரென இடையில் வந்த கார்த்திக்கை கண்டு இருவரும் என்னவென்று விசாரிக்க, வர தோன்றியதால் வந்தாக கூறி விட்டு, வெளியே சுற்றிக் கொண்டு இருந்தான்.
அவனது வித்தியாசமான செய்கையை கண்டு விசாரித்த சகோதரியிடம், "ஒரு ப்ராஜெக்ட் விசயமா கொஞ்சம் பிஸிக்கா." என்று மழுப்பி விட்டு தான், அந்த சம்பவத்தை நடத்தி முடித்தான்.
வித்யாவை பற்றி பாலாவிடம் கார்த்திக் கேட்டு தெரிந்து கொள்ளும் விசயங்களை தன் சகோதரியிடமும் பகிர்ந்து கொள்வான்.
அவ்வாறு தான் அவள் பள்ளி முதல் மாணவியாக வந்ததில் இவனுக்கு பெருமை தாங்க முடியவில்லை.
"டேய்!. போதும்டா. சரியான பெருமை பீத்தக்கலையனா இருப்ப போல, உன்னோட பெருமை பீத்தலை கேட்டுக் கேட்டு காது வலிக்குது." என்று தீபிகா அழும் குரலில் சொல்லவும்,
"உனக்கு பொறாமை. அதான் அவ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்ததை தாங்க முடியல." என்றான் தமையன்.
"ஒரு ஆமையும் இல்ல. ஓரளவுக்கு தான் கேட்க முடியும் ராசா. நீ மூச்சுக்கு முன்னூறு தடவை அதையே பேசுனா காதுல ரத்தமே வந்துடும் போல." செல்லமாக அலுத்துக் கொண்டாள்.
அதன்பின் முன்பொரு முறை போலவே திடீரென வந்த கார்த்திக்கை கண்ட ராஜேஸ்வரி, "என்னப்பா இப்போ எல்லாம் நீ அடிக்கடி வர்ற? வீட்டை ரொம்ப தேடுதா?"
"இதுக்கு தான் இங்கேயே பக்கத்துல எதாவது காலேஜ்ல படினு சொன்னா கேட்காம சென்னைல தான் போய் படிப்பேன் னுட்டு அலுச்சாட்டியம் பண்ணுன." என்று பேசிக் கொண்டே போக,
அவனது சோகமான முகத்தை கண்ட தீபிகா, ஏதோ விசயம் என்றுணர்ந்து, "அம்மா! அவனை சாப்பிட விடுங்க." என்று தாயிடம் கூறினாள்.
இரவு உணவை முடித்துவிட்டு அவனது அறைக்கு வந்த தீபிகா, அவனது கலவரமான முகத்தை கண்டு, "என்னாச்சு கார்த்திக்? வித்யா விசயமா?" என சரியாக கணித்துக் கேட்டாள்.
அவள் கேட்டது தான் தாமதம், கார்த்திக் அவளது மடியில் தன் முகத்தை புதைத்து கண்ணீர் வடித்துக் கொண்டு, "அவளை தொலைச்சுட்டேன்க்கா." என்றான் அழுகையினூடே.
"என்னடா சொல்லுற!?" என்று அதிர்ந்த தீபிகா, நடந்ததை கேட்டறிந்த பின்னர், மனம் உடைந்து போன தம்பியை கண்டு பெரும் வேதனை கொண்டாள்.
அதன் பின்னர் அந்த சோகத்தில் அவனை மூழ்க விடாமல், 'அவ உனக்கு தான் னு எழுதி இருந்தா கண்டிப்பா உன்னை தேடி வருவாள்டா!' என்று அவனை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுத்தாள்.
அதற்கு தீபிகாவின் திருமணமும் ஒரு காரணியாக இருந்தது என்பது மிகையாகாது.
இயல்பாகவே எதையும் கடந்து விடும் கார்த்திக்கினால் வித்யாவின் திடீர் மறைவு, நிலைகுலைய செய்தாலும், தன்னை தானே தேற்றிக் கொள்ள முயன்றான்.
மனதில் அவளுக்கான எண்ணங்கள் இருந்தாலும் 'அந்த இயற்கையே அவளை தன்னோடு கண்டிப்பாக ஓர் நாள் சேர்க்கும்' என்று உறுதியுடன் இருந்தான்.
தீபிகாவின் திருமண பரபரப்பில் சற்று தெளிந்து இருந்தான். திருமணம் அருகில் நெருங்கும் போது தான் தன்மீதான தாயின் பாசத்தை முழுமையாக உணர்ந்தாள் தீபிகா.
அதுவரை கண்டிப்பான முகமூடிக்குள் இருந்த தாயின் உண்மை முகம் கண்டவள் மனம் நெகிழ்ந்து தன் சகோதரனிடம், "டேய் கார்த்திக்! அம்மாவை பத்திரமா பார்த்துக்கடா." என்று கூறினாள்.
"நீ ஒன்னும் கவலைப்படாதே அக்கா. படிப்பு முடிந்து வேலை கிடைச்சதும் அவங்கள எப்படியாவது தாஜா பண்ணி என் கூடவே கூட்டிட்டு போயிடுறேன்!. ஓகே வா!?" என்றான் அவன்.
தீபிகாவின் திருமணம் முடிந்து சென்ற பின், நாட்களும் மாதங்களாய் நகர,
கார்த்திக் 'வித்யாவை பற்றி ஏதாவது விசயம் தெரியாதா?' என்ற ஏக்கத்தில் காத்திருக்க, தீபிகாவின் கருவுற்ற செய்தி அவனை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.