• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 26

பரசுராமன் பேசி முடித்ததும் கார்த்திக் அவரிடம், "நான் சொன்னதை நல்ல விதமா புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க சார்." என்று நன்றியுரைத்தான்.

"இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி சார். அவன் பண்ணுனது தப்பு தானே. பசங்க தப்பு பண்ணினா கண்டிச்சு நல்வழிப்படுத்த தானே ஸ்கூலுக்கு அனுப்பறது."

"ஆனா இப்ப இருக்கற சில டீச்சர்ங்களே அரக்கத்தனமா புள்ளைங்களை அடிக்கறதை பார்த்தா தான் கோபமா வரும். அதை தட்டிக் கேட்டா நான் பொல்லாதவன் ஆகிடுறேன். என்ன பண்றது சார்? "

"நான் கட்ட பஞ்சாயத்து பண்றவன் தான். ஆனா அதையும் நியாயமான விசயத்துக்கு தான் செய்வேன். அதெல்லாம் பல பேருக்கு புரியாது." என்று தன் எண்ணத்தையும், ஆதங்கத்தையும் பகிர்ந்தவர்,

வித்யாவிடம் மீண்டும் மகனது செயலுக்கு மன்னிப்பை கேட்டுவிட்டு,
"தப்பு செய்த என் மகனை அடிச்சீங்க. சரி தான் ஒத்துக்கறேன்."

"ஆனா இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல எப்படி எதிர்க்க வேண்டும்னு பெண் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்க மேடம்." என்று அறிவுரைத்து விட்டு சென்றார் அவர்.

அவர் அவளிடம் பேசிய விதத்தில் இயல்புக்கு வந்த வித்யா,"கண்டிப்பா செய்றேன் சார். ஆனா எனக்கு என்ன ஆச்சர்யம் னா இவ்ளோ நியாயமா இருக்கற உங்க புள்ள எப்படி அந்த மாதிரி செய்தான்?"

"அதை கூட ஏதோ ஒரு வேகத்துல செய்தான் னுட்டு நினைச்சு தான் அவன்கிட்ட அவனோட தப்பை எடுத்து சொன்னேன்."

"ஆனா அவன் செய்தது தப்பே இல்லங்கற மாதிரி பேசின அவனோட பேச்சுல வேற வழியில்லாம அடிக்க வேண்டியதா போச்சு." என்று தன் செயலுக்கான விளக்கத்தை கூறினாள் வித்யா.

"அது என்னனு நான் கவனிக்கிறேன்மா. இப்ப நான் கிளம்பறேன். வணக்கம்." என்று விட்டு அவர் கிளம்பிட,

அந்த குமாராகப்பட்டவன், "மன்னிச்சுடுங்கம்மா. தம்பி இப்படி பண்ணும் நினைக்கல. நானும் கொஞ்சம் அத்துமீறிட்டேன்." தனது செயலுக்கு மன்னிப்பைக் கேட்டான்.

"கோபம் வர்றது தப்பில்லங்க. ஆனா ரெண்டு பக்கமும் என்னனு விசாரிச்சுட்டு அப்றம் முடிவு பண்ணுங்க." என்று அவனுக்கும் ஒரு அறிவுரை வழங்கி அனுப்பினாள் வித்யா.

அவர்கள் சென்ற பின், "ஊஃப்ப்ப! கொஞ்ச நேரத்துல ரொம்ப பயந்துட்டேன். தேங்க்ஸ்."என்று கார்த்திக்கிற்கு நன்றியுரைத்தாள் வித்யா.

பதில் இல்லாமல் இருக்கவே, அவள் அவனை திரும்பிப் பார்க்க, அவனது பார்வை வேறு பக்கம் இருப்பதை கவனித்து புரியாமல் அதே போல அவளும் பார்த்தாள்.

அவர்கள் சென்ற பின்னரும் அவனது கைக்குள் கை கோர்த்து நெருங்கி நின்று இருந்தவள் செய்கையை அவன் பார்த்து இருப்பதை புரிந்து, வேகமாக அவனை விட்டு விலகினாள்.

அவள் விலகியதும், "ம்ஹ்ம்!வாடா குட்டிமா. உள்ளே போவோம். " என்று மகளிடம் பெருமூச்செறிந்து விட்டு வீட்டினுள் சென்றான்.

அவன் நகர்ந்த பின் உதட்டில் ஒளிந்த புன்னகையுடன் வித்யாவும் வீட்டினுள் செல்ல,

அப்போது தான் அவனிடம் கோபம் கொண்டதே அவளது நினைவிற்கு வந்தது. அதோடு சேர்த்து உணவை பற்றிய சிந்தனையும்.

அவன் பின்னோடே வந்த வித்யா, "ஆமா,மதியம் எப்படி சாப்பிட்டீங்க?." என்று அவசரத்தில் கேணத்தனமாக கேட்டாள் அவள்.

அவளது கேள்வியில் 'ஙே' என விழித்த கார்த்திக், "ஏன் இப்படி ஒரு கேள்வி? எல்லார் மாதிரியும் கைல எடுத்து வாய்ல போட்டு தான் சாப்பிட்டேன்." என்று விளக்கம் கூறிவிட்டு,

நிலைகண்ணாடி அருகே சென்று, "இப்படி ஒரு கேள்வி கேட்குற அளவுக்கு நாம என்ன ஏலியன் பீஸ் மாதிரி தெரியறோமோ?" மைன்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக யோசித்தான் அவன்.

அவனது யோசனையை கண்ட பவிக்குட்டி, அவனை விட தீவிர யோசனையுடன் கார்த்திக்கை பார்த்தாள்.

கார்த்திக்கின் பதிலில் அவனை முறைத்த வித்யா, சிறிது தாமதித்து தான் தனது கேள்வியின் பொருள் உணர்ந்து அசட்டுச் சிரிப்பு வர உடனே அதை மறைத்து விட்டு,

"மதியம் நான் கொடுத்து விட்ட சாப்பாட்டை என்ன பண்ணுனீங்க?" என மீண்டும் கிறுக்குத்தனமாக கேள்வியை மாற்றினாள்.

"லூசாமா நீ? சாப்பாட்டை எல்லாரும் சாப்பிட தானே செய்வாங்க. நான் மட்டும் என்ன விசித்திர ஜந்து மாதிரியா தெரியறேன்?" என்று அவன் பதிலுக்கு கேள்வியை தர,

அவனை முறைத்து விட்டு, "ஷ்ஷ்ஷப்பா! இந்த இம்சையை தன் தலையில கட்டிட்டு தாரிணிக்கா போயிட்டாங்க. நான் படாதபாடு பட வேண்டி இருக்கு." அவள் முணுமுணுக்க,

இதற்கு மட்டும் காதை தீட்டி கவனமாய் கேட்டவன், "என்னாதேஏஏ! நான் இம்சையா?? அல்ல்லோ மாடம்! உங்களுக்கு கேள்வி ஒழுங்கா கேட்க தெரியலைனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"

"அப்படி தானேடா குட்டிமா?"என்று மகளை கூட்டுக்கு அழைத்த கார்த்திக், "ஹாஹ்! நல்லா கேட்குறாய்ங்கய்யா டீடெய்ல்லு." என்று நக்கலடித்தான்.

குழந்தைக்கும் அவன் சொல்வது என்னவென்று புரியவில்லை என்றாலும் அவனுக்காக வேகமாக தலையசைத்து ஆமோதித்தாள்.

"பெருமாளே! இந்த திருவாழத்தானை கூட வச்சுட்டு, ஐய்யா! சாமி! குழந்தைக்கு மதியம் சாப்பாடு ஊட்டி விட்டீங்க னு சொன்னாள்."

"அதான் மதியம் நான் சாப்பாடு கொடுத்து விட்டும் ஏன் வெளியே வந்தீங்கனு கேட்டேன்?" இப்போது விளக்கமாக கேட்டாள் அவள்.

"ஹான்! அப்படி தெளிவா கேளுங்கோ மேடாம். அப்ப தானே ஒழுங்கா பதில் சொல்ல முடியும். மதியம் ஒரு வேலையா பர்மிஷன் போட்டுட்டு வெளியே வந்தேன்."

"அப்படியே பாப்பாக்கும் சாப்பிட கொடுத்துட்டு போனேன். அடிஷ்னல் இன்பர்மேஷன். அப்றம் நீங்க கொடுத்த சாப்பாட்டையும் முழுங்கிட்டு தான் போனேன்."

"விளக்கம் போதுமா? இல்ல இன்னும் எதாவது வேணுமா? இந்தாங்க நீங்க கொடுத்த பாக்ஸ். சாப்பாடு அருமை."

"அப்றம் நன்றி. என்னையும் மனுசனா மதிச்சு, சாப்பாடு கொடுத்ததுக்கு."என்று நீட்டி முழக்கினான் கார்த்திக்.

"ஒரு விசயத்தையும் நேரடியா சொல்ல தெரியாதா உங்களுக்கு? எப்போ பாரு பிரசங்கம் பண்ற மாதிரியே பேசறது." சலித்துக் கொண்டே அவன் நீட்டிய டிபன் பாக்ஸ் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் அவள்.

"இதென்னடா வம்பா போச்சு! இவங்க கேள்வி கேட்க தெரியாம கேட்டுட்டு நான் நீட்டி முழக்குறேன் னுட்டு போறாங்க. "

"ஏன்டா குட்டிமா உங்கம்மா என்ன ப்ராந்தா??" நெற்றியில் விரலை சுற்றிக் காட்டி குட்டியிடம் கேட்க, அவன் கேட்ட பாணியில் அவள் கிளுக்கி சிரித்தாள்.

"அங்க என்ன சத்தம்?" என்று அவள் சமையலறையில் இருந்து கேட்ட கேள்விக்கு," ஒன்னுமில்ல மா.. பேசிக்கிட்டு இருந்தோம்." என்று பதிலளித்து விட்டு,

"வாடா குட்டி! ரூமுக்கு ஓடி போயிடுவோம்.இல்லைனா உங்கம்மா கிட்ட சிக்கிடுவோம்." சிரிக்கும் பிள்ளையுடன் அறைக்குள் ஓடிட, அதன்பின் அன்றைய பொழுது அமைதியாக முடிந்தது.

அவன் எங்கே சென்றான் என்று அறியும் குறுகுறுப்பு வித்யாவிற்கு இருந்தாலும் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை அவள். அவனை பற்றி அலட்சியம் காட்டுகிறாளாம்!.

இந்த களேபரத்தில் அவள் மதுமதியை பற்றி மறந்தே போனாள்.

நினைவு இருந்தாலுமே அவளை பற்றிக் கேட்டால், அதற்கும் அவன் ஒரு பக்க கட்டுரை வாசிக்க கூடும் என்றெண்ணி பயந்தே விட்டு விட்டாள்.

எப்படியும் ஓர்நாள் தெரிய தானே போகிறது. இப்போதே கேட்டால் அவனை பற்றி அறிய ஆர்வம் காட்டுவதாக எண்ணுவானோ என நினைத்தாள்.

அன்று மாலையே ஈஸ்வரி, வித்யாவிற்கு கைப்பேசியில் அழைத்து அவளது நலம் பற்றி விசாரிக்க, நடந்த அனைத்தையும் வித்யாவும் அவளுக்கு உரைத்தாள்.

கார்த்திக்கின் சமயோசித புத்தியை நினைத்து நிம்மதி அடைந்த ஈஸ்வரி, வித்யாவை அவன் பார்த்துக் கொள்வான் என்றெண்ணி ஆசுவாசமானாள்.

என்ன தான் தோழி அருகிலேயே இருக்கிறாள் என்றாலும், அவள் தனியாக இருப்பதில் ஈஸ்வரிக்கு உடன்பாடில்லை. வித்யாவின் திருப்திக்காக சம்மதித்தாலும்,

ஈஸ்வரியின் மனதில் அவளை எண்ணி கலக்கம் இருக்கவே செய்தது. இப்போது கார்த்திக் வரவினால், அது களையப்பட ஈஸ்வரி நிம்மதியானாள்.

மறுநாள் பள்ளிக்கு கிளம்பிய போது கார்த்திக்கின் போதனையால் சின்னக்குட்டி சமர்த்தாக வித்யாவோடே பள்ளிக்கு செல்ல, வித்யாவின் மனமும் இயல்பானது.

குழந்தையை விட்டு விட்டு, பள்ளி வந்த வித்யாவை, "நேத்து எதுவும் பிரச்சினை இல்லையே ரூபிணி?" என்ற கேள்வியோடு வேகமாக நெருங்கி வந்தார் பிரேமலதா.

"அவனை பற்றி தெரியாம நீ கை வைச்சுட்டியே னு உன்னை நினைச்சு எனக்கு ஒரே கலக்கமா போச்சு. என்னாச்சோ னு மனசு கிடந்து அடிச்சுக்கிட்டே இருந்துச்சு." என்று தன் மனநிலையை கூறினார்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல டீச்சர். உண்மையில் அவனோட அப்பா ரொம்ப நல்லவர் தான். பையன் பண்ணுனது தப்புனு அவரே சொல்றாரே."

"இவன் தான் தெரியாம செய்து இருப்பான். இனிமே மாறிடுவான்."என அவரை சமாதானப்படுத்தினாள் வித்யா.

'அப்படியா!'என ஆச்சர்யமாக அவரைப் பற்றி அறிந்த அந்த டீச்சர் சற்று இலகுவானார்.

அதன்பின் வந்த நாட்கள் கார்த்திக்கின் லொடலொட பேச்சோடும், அதற்கு குழந்தையின் கெக்கே பெக்கே சிரிப்போடும்.

மனதால் அதனை ரசித்து, வெளியில் அவனை முறைக்கும் வித்யாவின் முறைப்புகளோடும் அழகாக சென்று கொண்டிருந்தன.

****************

சுட்டெரிக்கும் அனலில் கால்கள் துவள, தூரத்தில் தெரிந்த கானல் நீரை கண்டு சிரமத்துடன் நெருங்கியவள் கைகளில் அகப்பட்டு, சிறிது தாகம் தணித்த, அந்த சிறிய நீர் குடுவையும் கை நழுவும் வேளையில்,

ஒரு வலிய கரம் அதை தாங்கி பிடித்து அவளை நோக்கி நீட்டிட, அதனைப் பற்றி எழ முயன்று அவள் கரம் நீளும் போதே,

சுழற்றியடித்து வீசிய ஓர் காற்று, அந்த வலியகரத்தோடு குடுவையையும் அடித்துச் செல்ல, மீண்டும் தவிப்புடன் தடுமாறி மூர்ச்சையாகி விழுந்தாள்.

திடுக்கிட்டு விழித்த வித்யா, வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்த அதே கனவில் சற்று பீதியாகி, அருகே இருந்த பிள்ளையை அணைத்தாள்.

சில நொடிகளில் சற்று மனம் சமனப்பட்டதும் மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்தவள்,

ஹாலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் கார்த்திக்கை சஞ்சலமாக பார்த்துச் சென்றதை அவன் அறிய வாய்ப்பிவில்லை.

காலை எழுந்தது முதலே,கலக்கமுடன் காணப்பட்ட அவளது முகத்தை கண்ட கார்த்திக், "என்னாச்சு? உடம்பு சரியில்லையா?" என அவளிடம் வினவிட,

பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டாள் அவள். அவளை யோசனையுடன் பார்த்த கார்த்திக், பின்பு தோள்களை குலுக்கிக் கொண்டு சென்றான்.

வழக்கம் போல் பள்ளி வந்த வித்யாவின் முக வாட்டத்தைக் கண்டு ஈஸ்வரியும் அவளிடம் விசாரிக்க, அதற்கு ஒன்றுமில்லை என்று கூறி விட்டாள்.

உணவு இடைவேளையின் போது, உணவை முடித்துவிட்டு கை கழுவ வந்த வித்யாவின் செவிகளில்.

"ஹேய்! கார்த்திக்! ஹவ் ஆர் யூ மேன்?" என்ற உற்சாக அழைப்பு விழ, வேகமாக திரும்பிப் பார்த்த வித்யா திகைத்தாள்.

அங்கே ஒரு அழகிய இளம்பெண் கார்த்திக்கின் அருகே நெருங்கி, அவனது கையைப் பிடித்துக் கொண்டு ஆரவாரமாக பேச,

"ஹாய் மதுமதி! எப்படி இருக்க? என்ன ரொம்ப நாளா ஆளை காணோம்? உன்னை தான் எல்லாரும் ரொம்ப தேடிட்டு இருந்தாங்க."என உற்சாகமான வரவேற்கும் புன்னகையுடன் கார்த்திக் கூறிக் கொண்டிருந்தான்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top