Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 24
பவிஷ்யா கார்த்திக்கின் பைக்கில் ஏறியதும், வித்யாவின் முகம் காற்று போன பலூனாக மாறியது.
தன் குழந்தை தன்னை விட்டு போனதாக மனமுடைந்து, உடனே வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவளது கோபம் கண்டு பெருமூச்சு விட்ட கார்த்திக், "ஏன்டா குட்டிமா? நான் தான் அம்மா கிட்ட கேட்டுட்டு இருக்கேன்ல, அதுக்குள்ள எதுக்குடா வண்டில ஏறுனீங்க?" என்று குழந்தையிடம் கேட்டான்.
"பைக் ல ஊஊஊஊ னு காத்துல போகும் போது நல்லா இக்கு காத்திப்பா!." என்று குட்டி அதை ரசித்துக் கூறினாள்.
"ம்ஹ்ம்! உனக்கு ஊஊஊஊனு போகும் போது நல்லா இருக்குது. ஆனா உங்கம்மா உர்ர்ர்னுல போறாங்க." என்று சலிப்புடன் கூறினான் கார்த்திக்.
"சரி வா போவோம். இன்னிக்கு சாயந்தரம் வந்ததும் நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கு உங்கம்மா கிட்ட." என்று சற்று பீதியுடன் கூறி விட்டு வண்டியை உசுப்பினான்.
குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு, தனது பணிக்கு கிளம்பினான் கார்த்திக். அன்றைய ஆப்புகள் மகள் மூலம் திவ்யமாக தொடங்கி வைக்கப்பட, அதன் தொடுப்புகள் பள்ளியிலும் தொடர்ந்தது.
பள்ளி வந்த வித்யாவிற்கு முதலில் எதுவும் வித்தியாசமாக படவில்லை.
அதன்பின் அவளது ஓய்வு நேரத்தில் ஆசிரியர்கள் அறையில் இருக்கும் போது, சிலர் அவளை திரும்பி திரும்பி பார்ப்பதும்,
ஏதோ அவர்களுக்குள் ரகசியம் பேசிக் கொள்வதுமாய் இருக்க, 'என்னவோ நமக்கென்ன' என்று அவளும் விட்டு விட்டாள்.
அவளது ஓய்வு நேரம் முடிந்து, வகுப்பிற்கு கிளம்பி அவள் வெளியே செல்ல.. அவள் சென்று விட்டாள் என்றெண்ணி அவர்கள் சற்று சத்தமாக பேசத் தொடங்கினர்.
"பார்த்தீங்களா டீச்சர் இந்த ரூபிணியை அமுக்குனி மாதிரி இருந்துட்டு, வந்ததும் நம்ப பி.டி சாரை வளைச்சுப் போட்டுட்டா!.." என்று ஒரு ஆசிரியை கூற,
அதற்கு, "அட.. அவளுக்கு ஏற்கனேவே கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு. நான் ஒரு தடவை கோவில்ல அவளை குழந்தையோட பார்த்து இருக்கேன்."
"நான் கூட யாராவது சொந்தகாரங்க குழந்தையா இருக்கும்னு நினைச்சேன்.. ஆனா அந்த புள்ள இவளை அம்மானு ல கூப்பிட்டா. அப்றம் தான் எனக்கே அவளோட பிள்ளை னு தெரியும்." என்று விளக்கிக் கொண்டு இருந்தாள்.
"இவளே செகன்ட் ஹான்ட்ஆ இருந்துட்டு.. ஃப்ரெஷ் பீஸ் பி.டி சாரை கரெக்ட் பண்ணிட்டாளே!..இந்த விசயம் மட்டும் ஊருக்கு போயிருக்கற அவளுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்!.." என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,
மறந்து வைத்த புக்கை எடுக்க மீண்டும் உள்ளே வந்த வித்யா, அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்க நேர்ந்தது.
அவளை கண்டதும் அவர்கள் உடனே பேச்சை மாற்றி வேறு பேசவும், அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றவள் மனதில் 'யாரந்த லீவில் இருக்கும் நபர்?' என்ற யோசனை ஓடியது.
அவர்களின் பேச்சு அவளது மனதை காயப்படுத்த, அந்த வலி கோபமாக மாறி கார்த்திக்கின் மீது திரும்பியது.
'நானா இவனை கேட்டேன்?!.. எனக்கு தாலி கட்டுனு.. பேசாம சாமி கும்பிட போனவளை அவனே வந்து தாலியை கட்டிட்டு இப்ப நான் என்னமோ இந்த மன்மதனை மயக்கி கல்யாணம் கட்டுன மாதிரி பேசறாங்க.'
'எல்லாம் அவனால தான்!..' என்று அவள் மனதிற்குள் பொங்கி, அவனுக்கு பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தாள்.
மனதில் குமுறும் அதே கோபத்துடன் வகுப்பறைக்கு அவள் செல்ல, பாடம் எடுக்க தொடங்கியதும் மனம் அதில் மூழ்கியதில், இந்த கோபம் அடியில் அமிழ்ந்தது.
மதிய உணவு இடைவேளையின் போது, ஈஸ்வரி அவளது முக வாட்டத்தை கண்டு என்ன ஆயிற்று என கேட்டாள்.
"நான் கேட்டேனா?.. நீங்களா ஒரு முடிவு பண்ணி எல்லாத்தையும் பண்ணிட்டு.. இப்ப நான் தான் தப்பானவளா தெரியறேன்!.." என்று வித்யா, தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் உரைக்க, ஈஸ்வரி திருதிருத்தாள்.
"இந்தா முதல்ல இதை குடி!.." என்று அவள் கையில் தண்ணீர் பாட்டிலை கொடுக்க, மடமடவென அதை குடித்தவள், வேகமாக பேசத் துவங்கவும்,
"இரு!..இரு!.. முதல்ல மூச்சை நல்லா இழுத்து விடு." ஈஸ்வரி கூறியதை செய்ததும் அவளும் சற்று சமநிலைக்கு வந்தாள்.
"இப்போ சொல்லு.. என்ன நடந்தது?யாரு என்ன சொன்னா?எதுக்கு இவ்ளோஓஓ கோபம்?" என்று கேள்விக் கணைகளை தொடுத்தாள் ஈஸ்வரி. வித்யா நடந்தவற்றை ஒரு பொருமலுடன் கூறியதும்,
"பேசறவங்க பேசத் தான் செய்வாங்க. அவங்க மோட்டிவ்வே உன்னை கோபப்படுத்தறது தான். நீ ஏன் அதுக்கு ரியாக்ட் பண்ற டா தியா?" என்று நிதானமாக அவள் எடுத்து உரைக்கவும்,
வித்யா சிந்திக்க தொடங்கினாள். ஆனாலும் அவள் மனதில் அவன் மீதான கோபம் கனன்று கொண்டு தான் இருந்தது.
"கல்யாணத்துல நல்ல பிள்ளையா சொன்னதெல்லாம் செய்துட்டு தானே இருந்த. இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இவ்ளோ கோபம், கொந்தளிப்பு?!.." என்று யோசனையுடன் ஈஸ்வரி கேட்க,
ஏனென்று யோசித்த வித்யா திடுமென, "அது யாரு ஈஷு ஊருக்கு போயிருக்கற ஆளு?!.." என்றாள் மொட்டையாக.
"ஊருக்கு போயிருக்கற ஆளா?!.. அப்படி யாரு இருக்கறா இங்க!?..நீ யாரை சொல்ற?.." என்றாள் ஈஸ்வரி குழப்பமாக.
"எனக்கென்ன தெரியும்? அவங்க தான் பேசிக்கிட்டாங்க. என்னமோ அவ வந்தா அவ்ளோ தான் னு பயங்கர பில்டப் எல்லாம் கொடுத்தாங்க." என்று ஒரு மாதிரி உதட்டை சுளித்துக் கொண்டே வித்யா கூறினாள்.
அவள் அதை சொல்லும் போது அவளது கண்களில் வெளிப்பட்ட சிறு பொறாமையை உணர்ந்த ஈஸ்வரி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
பின்னர் சற்று யோசித்து விட்டு, "ஹான்!!.. ஞாபகம் வந்துடுச்சு!.. அவங்க பேசுனது மதுமதியை பற்றியா இருக்கும்!.." என்று 'யுரேகா' என்பதை போல படு உற்சாகமாக கூறினாள் ஈஸ்வரி.
"அதாரு மதுஉஉ..மதி!!?.." வித்யா இழுத்துக் கொண்டே கேட்க,
"அட.. நம்ம ஹெட் மிஸ்ட்ரஸ் பொண்ணு!.. அவ ஏதோ ட்ரெயின்ங்கிற்காக ஊருக்கு போய் மூணு மாசத்துக்கு மேல ஆகுது!.. அதான் உனக்கு அவளை பற்றி தெரியல!.." யாரென விளக்கினாள் ஈஸ்வரி.
"இருந்துட்டு போகட்டும். அதுக்கும் கார்த்திக் என்னை கல்யாணம் பண்ணுனதுக்கும் என்ன சம்மந்தம்?அவங்க ஏன் அதை பெரிய விசயமா சொன்னாங்க!!?.." என்று புரியாமல் வினவினாள் வித்யா.
"அவ அப்பப்ப இங்க வருவா. கார்த்திக் கூட சிரிச்சு பேசறதை நானே சில நேரம் பார்த்து இருக்கேன். ஆனா அவள் வந்தாள்னா என்ன ஆகும்னு தெரியலையே!.."
"ஒன்னு அவளை கேட்கனும்!.. இல்ல கார்த்திக்கை கேட்கனும்!.. நீ வேணும்னா இன்னிக்கு வீட்டுக்கு போன அப்றம் கார்த்திக் கிட்ட கேட்டு பாரு!.." என்று குறும்புடன் கூறினாள் ஈஸ்வரி.
"எனக்கென்ன தேவை இருக்கு!.. அவளுக்கும் அவருக்கும் என்னமோ இருந்துட்டு போகட்டும்." என்று விட்டேற்றியாக சொல்வது போல் பாசாங்கு காட்டினாள் அவள்.
"அதுசரி!!.." என்று சிரித்துக் கொண்ட ஈஸ்வரி, அடுத்த வகுப்பிற்கான மணியடிக்கவும் கிளம்பிட, வித்யாவும் தனது வகுப்பிற்கு கிளம்பினாள்.
மனதில் குழப்பமும், சிந்தனையுமாக அவள் பாடம் நடத்த வேண்டிய மூன்றாம் வகுப்பிற்குள் நுழைய, அங்கு அழுது கொண்டிருந்த ஒரு மாணவியும், அவளை சுற்றியும் சில மாணவிகளும் நின்று இருந்தனர்.
அவள் உள்ளே வந்ததும், "என்னாச்சு? ஏன் எல்லாரும் இப்படி கும்பலா நிக்கிறீங்க?கோ டு யுவர் ப்ளேஸஸ்!.." என்று அவர்களை விரட்டி விட்டாள்.
அழுது கொண்டிருந்த அந்த மாணவியை கண்டு, "என்னாச்சு தேவதா!?..ஏன் அழுதுட்டு இருக்க?!.." என்று வினவ, அவள் எதுவும் கூறாமல் தேம்பிக் கொண்டிருந்தாள்.
உடனே இன்னொரு மாணவி வந்து, "மிஸ்!.. தேவதாவை ஒரு பையன் கிஸ் பண்ணிட்டான் மிஸ்!!.." என்று அறிவித்தாள்.
"என்ன!!!?.." என்று அதிர்ந்த வித்யாவிற்கு அவளது சிந்தனைகள் எல்லாம் தூர ஓடின.
"என்ன சொல்றீங்க?!.. யார் அது?.. எப்ப நடந்தது? டீச்சர் யாரும் இல்லையா?!.." என்று பதட்டமாக கேட்டாள்.
"ரீஸஸ் ல இவ என் கூட பேசிட்டு இருந்தா மிஸ்!.. திடீர்னு மணிகண்டன் இவ கிட்ட வந்தான்.."
"என்ன னு இவ திரும்பி பார்க்கும் போது சட்டுனு கிஸ் பண்ணிட்டு ஓடிட்டான் மிஸ்!.." என்று நடந்ததை அந்த மாணவி விளக்க, அதை எண்ணி மீண்டும் அழுகையை அதிகரித்தாள் தேவதா.
அவள் கூறி முடித்ததும், அந்த மாணவனை நோக்கி திரும்பிய வித்யா," டேய் மணி!.. நீ இவளை கிஸ் பண்ணுனியா?!.." என்று வினவினாள்.
அவனோ சற்றும் பயப்படாமல், "ஆமா மிஸ் பண்ணினேன்!.." என்று பதிலளிக்க, செய்வதையும் செய்து விட்டு எத்தனை தெனாவெட்டாக பதிலளிக்கிறான் என்று அவளுக்கு கோபம் வந்தாலும், பொறுமையாக அவனிடம் பேசினாள்.
"எதுக்கு டா அப்படி பண்ணுன?. பெண் பிள்ளையை அவ விருப்பம் இல்லாம தொடக் கூட கூடாது. உங்களுக்கு அப்படி தானே நான் சொல்லி தந்தேன்?."
"தொடவே கூடாது ங்கற போது நீ அவளை கிஸ் பண்ணிட்டு அதை தெனாவெட்டா ஆமா னு பதில் வேற சொல்ற!!.." என்று அவனை திட்டினாள்.
அவனோ தான் செய்தது தவறில்லை என்பது போல், "எனக்கு செய்யனும்னு தோணுச்சு செய்தேன் மிஸ்!.." என்று மீண்டும் அதே போலவே பதிலளிக்க வித்யா அதிர்ந்தாள்.
அவள் இந்த படிப்பையும், பணியையும் தேர்ந்தெடுத்ததே அவளுக்கு நேர்ந்த சம்பவம் வருங்காலத்தில் யாருக்கும் ஏற்படக் கூடாது.
அதனால் பிள்ளைகளின் மனதில் ஒழுக்கத்தையும் நல்ல சிந்தனைகளையும், விதைத்தால் வளரும் சமுதாயம் மாறும் என்ற எண்ணத்தில்,
ஆசிரியப் பணியை தேர்ந்தெடுத்து, அதில் பிள்ளைகளின் மனதில் தன்னாலான அனைத்து நல்லொழுக்கத்தையும் விதைத்துக் கொண்டு இருக்கிறாள்.
எனக்கு பிடித்தது நான் செய்தேன் என்ற ரீதியிலான அவனது பேச்சு, நாளை எத்தகைய செயலையும் செய்ய வைக்குமே.
இதை முளையிலேயே களைய வேண்டும் என்றெண்ணி முதலில் அவனது தவறினை அவனுக்கு உணர்த்த எண்ணினாள்.
ஆனால் அது தவறென்றே உணராமல் பேசிய அவனது எதிர்வினை, அவளது பொறுமையை சோதிக்க, இறுதியில் அவனை அடித்தே விட்டாள்.
"நான் சொல்லிட்டே இருக்கேன். அதை கேட்காம நீ சொன்னதையே சொல்லிட்டு இருக்க.நீ செய்தது தப்புனு உனக்கு புரியலையா?"
என்று கேட்டு அவள் அவனுக்கு வைத்த அடியில் அழுது கொண்டு இருந்தவளும், மற்றவர்களும் அமைதியாகினர்.
இந்த பஞ்சாயத்து முடியும் போது சரியாக வகுப்பு முடிந்த மணியடிக்க, வித்யா அவனை 'இதுபோல இனிமேல் செய்ய கூடாது!' என எச்சரித்து விட்டு வேகமாக வெளியேறி விட்டாள்.
அதே மனநிலையில் தனது இடத்திற்கு திரும்பிய அவளது காதுகளில் மீண்டும் அந்த ஆசிரியர்களின் பேச்சு விழ,
கார்த்திக் அவளுக்கு தாலி கட்டிய செயலும், இந்த மாணவனின் செயலும் ஒன்றெனப்பட்டு அவன் மீதான கோபம், தூபம் போட்டது போலானது.
வித்யா அவனை அடித்தது அந்த வகுப்பிற்கு, அடுத்து வந்த வகுப்பாசிரியைக்கு தெரிந்ததும் அதிர்ச்சியாகி,
'அவள் அடித்த பையனின் பெற்றோரை பற்றி தெரியாமல் கை நீட்டி விட்டாளே!' என்று அவளுக்காக பரிதாபப்பட்டார்.