Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 22
இறைவனிடம் மனதில் அரற்றிக் கொண்டிருந்த வித்யா, குழந்தை அவளை வந்து பற்றியதும்,
அவளுக்கு முத்தமிட்டு, மொத்தமாக அவனிடம் இருந்து அவளை இழுத்து தன்னிடம் வைத்துக் கொண்டாள்.
அவளது மனதை அறிந்த கார்த்திக், புன்சிரிப்புடன் குழந்தையை அவளிடம் விட்டுக் கொடுத்தான்.
அதன்பின் நிச்சய ஓலை வாசிக்கப்பட்டு, மூன்று மாதங்கள் கழித்து திருமணம் என முடிவு செய்யப்பட்டது.
பெரியவர்கள் அதை பற்றி கலந்து ஆலோசித்து முடிவெடுத்து கொண்டிருக்க, சிறியவர்கள் ஒதுங்கி இருந்து பேசிக் கொண்டிருந்தனர்.
"ஆமா அம்மு.. உங்க ஸ்கூலுக்கு அப்றம் நீங்க அந்த ஊர்ல இல்லையா?.. ஏன்னா அதுக்கு அப்புறம் நான் உங்கள பார்க்கவே இல்லையே!!.." வினவினான் ரூபேஷ்.
அவனது கேள்வியில் வித்யாவின் மனதில், அந்த நாளில் நடந்த அந்நிகழ்வு நினைவில் வந்தாட உடல் நடுங்க நிற்க,
அவளது மனதை உணர்ந்த ஈஸ்வரி, வித்யாவின் அருகில் வந்து அவளது கையை பற்றி அவளுக்கு ஆறுதலாக நின்றாள்.
அப்போது," டேய் தம்பி நான் வரதுக்கு முன்னாடி கொசுவத்தி சுருள் எல்லாம் சுத்தி, ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஓட்டுனியாமே!!.."
"நான் தான் மிஸ் பண்ணிட்டேன்!!.." என்று வருத்தப்பட்டு கூறிக்கொண்டு வந்தாள் ஜிஷ்ணுவின் சகோதரி விஷ்ணு பிரியா.
"ஏன்க்கா நீ வேற!!?.. அதெல்லாம் ஒன்னுமில்ல!.. அம்முவோட ஃபோட்டோ காட்டி அம்மா கேட்டப்ப 'எங்கேயோ கேட்ட குரல்' மாதிரி, எங்கேயோ பார்த்த முகம் னு தோணிட்டே இருந்துச்சு.."
"அம்முவுக்கும் அப்படி தான் இருக்குனு சொல்லிட்டு இருந்தா!.. இதோ இந்த வித்யாவை பார்த்த அப்றம் தான் எங்கேனு நினைவு வந்துச்சு!.." என்று கூறி விட்டு,
"அவ்ளோ தான்.. வேற ஒன்னும் இல்ல தாயே!.. நீ பாட்டுக்கு எதையாவது பேசி நல்லா போயிட்டு இருக்கற லைஃப்ல நாயனம் வாசிச்சுறாத ஆத்தா!!.." என்று அவளிடம் கை கூப்பி வேண்டுகோள் போல கூறினான் ரூபேஷ்.
பேச்சு திசைமாறியதில் சற்று இயல்புக்கு வந்தாள் வித்யா.. சரணுடன் விளையாடிக் கொண்டிருந்த பவிஷ்யா திடுமென வித்யாவிடம் ஓடி வந்து கட்டிக் கொள்ள,
அவளை கைகளில் அள்ளியதும் வித்யாவின் மனம் மொத்தமாய் அந்நிகழ்வை மறந்து குழந்தையில் மூழ்கியது.
"என்ன ஆச்சுடா செல்லம்!?.. ஏன் இப்படி ஓடி வர்றீங்க?.."என்று மகளிடம் வினவிட,
"இல்லம்மா!.. காத்திப்பாவும், நாங்களும் கலர் தொத்து வெளாண்தோம்!.. அப்போ காத்திப்பா பிங்க் கலர் தொன்னாங்க.. நா தேதித்து இந்தேனா!.."
"அவங்க தா உங்க தெஸ் காத்தி உங்க கித்த போக தொன்னாங்க!.." என்று மகள், இளஞ்சிவப்பில் புடவை அணிந்திருந்த அன்னையிடம் கூறிக் கொண்டு இருக்கும் போதே, அவர்களை நெருங்கி இருந்தான் கார்த்திக்.
'ஒரு குழந்தையின் தாயாக இருக்கும் வித்யாவையா கார்த்திக் மணம் முடித்தான்!!?' என்று அதிர்ந்தான் ரூபேஷ்.
அதை அவன் வாய்விட்டு கேட்க விழையும் போது, ஆழமான பார்வையோடு 'வேண்டாம்!..' என்ற கார்த்திக்கின் மறுப்பான தலையசைப்பு அவனது வாயை கட்டியது.
ஆனால் அதற்குள் விஷ்ணுபிரியா, "உங்க குழந்தையா?!.. செம்ம க்யூட்டா பேசுறாங்க!!.." குழந்தையின் மழலையை சிலாகித்து விட்டு,
பின்னர், "அப்படியே அவ அப்பா மாதிரி போல!!.." என்று சிரித்துக் கொண்டே கார்த்திக்கை பார்த்தாள்.
அவள் வருவதற்கு முன் அனைத்து களேபரங்களும் முடிந்து இருக்க, அவளுக்கு கார்த்திக்கின் வித்யாவுடனான மணம் பற்றி எதுவும் தெரியாமல் போனது.
அதனால் வித்யாவின் அருகில் பட்டு வேட்டி சட்டையில் நின்ற கார்த்திக்கை அவளது கணவன் என்று இவளாகவே சரியாக யூகித்து கொண்டாள்.
விஷ்ணுப்ரியா வந்தது முதல் கார்த்திக்கின் பேச்சை கேட்டதால் அவ்வாறு உரைக்க,
அதற்கு கார்த்திக் இதழ் பிரியாத ஆமோதிக்கும் புன்னகையுடன் நிற்க, அவனை கண்டு சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தாள் வித்யா.
"அதென்ன க்கா அப்படி சொல்லிட்ட.. அவ அம்மா மட்டும் கம்மியா என்ன!.. அப்பல்லாம் எவ்வளவு பேசுவாங்க தெரியுமா!?.. ஆனால் இப்பதான் ஏனோ அமைதியா இருக்காங்க!?.." என்று ரூபேஷ் கூறவும்,
"வாழ்க்கையில படுற சில அனுபவங்கள் எல்லாத்தையும் மாத்திடும்!.." என்று பொதுவாக வித்யா பதிலளித்தாள்.
அதற்கு விஷ்ணு பிரியா, "ஐய்யய்யே!!. நீ என்ன நூத்துக் கிழவி மாதிரி பேசுற!..அப்படி என்ன உனக்கு வயசு ஆயிடுச்சு.. விழுந்தா எழறது சகஜம் தானே!.. சில நேரம் உடனே எந்திரிச்சிடுவோம்!.."
"சில நேரம் கொஞ்சம் டைம் எடுத்து எழுவோம்!.. அதுக்காக விழுந்ததையே நெனச்சேவா கவலைப்பட்டுட்டா இருப்பாங்க!?.. அடுத்தடுத்து போயிட்டு இருக்க வேண்டியது தான்!.." என்று அவளுக்கு அறிவுரை வழங்கினாள்.
அப்போது அங்கே வந்த கோமதி, "சரி!..சரி!. எல்லாரும் கிளம்புங்க.. குழந்தைங்க எல்லாம் பசியா இருக்கு இல்ல!.. உங்களை அரட்டை அடிக்க விட்டா ,பேசிக்கிட்டே இருப்பீங்க!.." என்று கூற,
அனைவரையும் மதிய உணவிற்காக உணவு விடுதிக்கு அழைத்து செல்ல, அங்கு சில பல அரட்டைகளுடன் உணவை முடித்து விட்டு,ரூபேஷும் அவனது வீட்டாரும் தங்கள் இருப்பிடத்திற்கு கிளம்பினர்.
ஈஸ்வரியும் அவளது பெற்றோரும் புதுமண தம்பதிகளை அழைத்துக் கொண்டு வித்யாவின் வீட்டிற்கு கிளம்பினர்.
கார்த்திக் தங்கி இருப்பது ஒற்றை அறை மட்டுமே என்பதாலும், வித்யாவை இம்சைபடுத்திய வரை போதும் என்றும் கருதி, அவள் இயல்பாக இருக்கும் அவளது வீட்டிற்கே அழைத்து சென்றனர்.
வீட்டிற்கு வந்து அவர்களுக்கான சில சம்பிரதாயங்கள் செய்யும் போதும் தாரிணியின் கட்டாயத்தின் பேரில் அதை ஏற்றாள் வித்யா.
அனைத்தும் முடிந்த பிறகு ஜீவகோமதியின் ஜீவ நதியாக பெருகிய அறிவுரை மழையில் இருந்து, சுதர்சன பாரதியின், "டைம் ஆகுது!.. வீட்டுக்கு போகலாமா!?.." என்ற கேள்வி தடுப்பணையாக மாறி வித்யாவை காப்பாற்றியது.
அவர் கிளம்பிய பின்னர் தான் வித்யாவிற்கு 'அப்பாடா!' என்று இருந்தது. ஈஸ்வரி எதுவும் பேசாமல் அவளது கையை பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்து விட்டு சென்றாள்.
ஈஸ்வரியின் வீட்டினரும் கிளம்பிய பின்னர், விஷேசத்திற்கென உடுத்திய ஆடைகளை மாற்றிக் கொண்டு, வித்யாவிற்கு சிந்திக்க சற்று தனிமை கொடுத்து, தாரிணியை காவலுக்கு வைத்து விட்டு,
கார்த்திக் மற்றும் ஹரிகிருஷ்ணன், பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு சென்றிட,
தனது அறைக்குள் சென்ற வித்யா வெகுநேரமாய் வெளியே வராததால் உள்ளே சென்ற தாரணி அவளது நிலையை கண்டு மனம் வருந்தினாலும்,
எதையோ தொலைத்தது போல் நிற்கும் அவளை அப்படியே யோசிக்க விட மனமில்லாமல் அவளிடம் பேசிவிட்டு, சற்று ஓய்வெடுக்க கூறி சென்றாள்.
ஓய்விற்காக படுத்த வித்யாவின் மனதில் நடந்த நிகழ்வுகள் அத்தனையும் ஓடிக்கொண்டிருக்க,
அதன் இறுதியாய் தாரணி கூறிய வார்த்தைகள், அவளை சிந்தனையில் ஆழ்த்தியது.
கார்த்திக்கின் பின்னணியில் ஏதோ ஒரு விஷயம் இருப்பதாய் அவளுக்கு மனதில் புலப்பட்டது.
நடந்த நிகழ்வுகள் மற்றும் சிந்தனையின் அசதியில் இருந்த வித்யா எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியாது.
கட்டிலின் மேல் கஷ்டப்பட்டு ஏறி வந்து அவள் மேல் விழுந்த குழந்தை, "அம்மா!!.." என்று எழுப்ப,
கண்விழித்த வித்யா, "செல்லக்குட்டி!.. இவ்ளோ நேரம் எங்க டா போய் இருந்தீங்க?!..அம்மா தூங்கிட்டேன்!.."
"ஸாரி டா லட்டு!.. உங்கள கவனிக்கவே இல்ல!.." என்று இத்தனை நேரம் பிள்ளையை பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்ததற்காக வருந்தி அவள் கேட்க,
"ஏன் நாங்க எல்லாம் இல்லையா?!.. ரொம்ப ஓவரா பண்ணாத!.. நானும் பிள்ளை பெத்து வளத்துவ தான் டியம்மா!.."
"நீ தனியா இருந்தா தான் புள்ளையை கவனிக்கலையே வருத்தப்படனும்!.. நாங்க தான் நாலு பேர் இருக்கோமே!.." என்று கேட்டுக் கொண்டே தாரிணி கையில் தேநீர் கோப்பையுடன் நுழைந்தாள்.
அவள் கூறிய நான்கு பேர்கள் என்ற வார்த்தையில் அப்போது தான் அவளுக்கு கார்த்திக்கின் நினைவு வந்தது.
குழந்தையும் சரியாக அதே நேரத்தில," நா, சாய் அண்ணா, பெய்ப்பா, காத்திப்பா எல்லாதும் பாக்கு போனோமே!!.." என்று கூறிவிட்டு,
"நா சமத்தா தோத்துக்கு ஓதவே இல்ல ம்மா!.." என்று அன்றைய நிகழ்வில் அன்னை மயங்கியதால் அரண்ட குழந்தை, ஞாபகமாக அதையும் உரைக்க,
"காத்திப்பா தா அப்பவே தொன்னாங்க.. தோத்தை தெண்டு பக்கமும் பாத்து தாண்டனும் னு.. அதனால நா கவனமா போயித்து வந்தேனே!!.." ஏதோ சாதனை செய்தது போல குழந்தை கூறினாள்.
அவளது பாவனையில் புரியாமல் விழித்த தாரிணி, என்னவென்று விசாரிக்க, அன்று நடந்த நிகழ்வை விளக்கிய வித்யாவின் முகம் அன்றைய சம்பவத்தை நினைத்து இப்போதும் கலவரமானது.
"நல்ல வேளை!.. கார்த்திக் வந்து காப்பாத்திட்டார்!.. இல்லைனா என்ன ஆகி இருக்கும்!? .." என்று தாரிணி அதை நினைத்து சற்று பீதியுடனே கேட்டாள்.
"ம்க்கும்!.. நீங்க தான் மெச்சிக்கனும் அவரை!.. இவ அப்படி ஓடிப் போனதே அவரை பார்த்து தானே!.. அப்படி மயக்கி வைச்சு இருக்கார்!.." என்று கண்களில் சிறு பொறாமை தெரிய கூறினாள் வித்யா.
தாரிணி இங்கு வந்ததில் இருந்து, முதல்முறையாக வித்யாவின் வாயிலிருந்து வரும் கார்த்திக் பற்றிய உரையாடலை கவனித்தவள் மனதில்,
கார்த்திக் எப்படியும் இவளையும் சரி செய்து விடுவான் என்ற நம்பிக்கை துளிர் விட்டது.
கார்த்திக் பற்றி தாரிணி நினைத்ததுமே, "ஹலோ அக்கா!.. உங்கள ரொம்ப நேரமா அண்ணா காணாம தேடிட்டு இருக்காரு!.." என்று கோக்குமாக்கு தனமான உறவுமுறை கூறி அறைக்குள் தலையை நீட்டினான் அவன்.
"எதேஏஏ நான் அக்காவா!.. அண்ணா வா!!.. அது யாரு எனக்கு தெரியாம எனக்கு ஒரு அண்ணன்!?.." தாரிணி விழித்து கேட்க,
"ஹரி அண்ணாவை தான் சொன்னேன்!.." என்று கூலாக அவன் பதிலளிக்க," எது?..நான் அக்கா!.. அவரு உனக்கு அண்ணா!.." என்று தலையிலடித்துக் கொண்டு,
"அடப்பாவி!..என் புருஷனையே எனக்கு அண்ணன் ஆக்கிடுவ போலயே!.." என்று பீதியாகி தாரிணி அலறியதற்கு கார்த்திக் விழித்தான்.
"என்னை அக்கா னு கூப்பிட்டா, காலையிலே தடாலடியே தாலி கட்டுனியே, அவ உனக்கும் தங்கச்சி ஆவாள்!.. பரவால்லயா!?.."என்ற தாரிணியின் கேள்வியில்,
"தெய்வமே!.. ஏன் இந்த கொலவெறி!.. நான் அவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு அடிபடாம தாலி கட்டுனதே பெரிய விசயம்!.. நான்கூட கட்டுனதும் கன்னம் பழுக்க போகுது னு நினைச்சேன்!.."
"அதனால 'அடமழை ஆரம்பிச்சு விடாம வெளுக்க போகுது.. உடம்பை இரும்பாக்கிக்க கிரிகாலா! ' னு வடிவேலு பாணியில் பயந்துட்டு இருந்தேன்!.." என்று சற்று பீதியான முகத்துடன் கூறிவிட்டு,
"அத்தனையும் தாங்கிட்டு உங்க தங்கச்சிக்கு தாலியை கட்டுனா!.. பொசுக்குனு எனக்கும் தங்கச்சி னு சொல்றீங்களே!!?.. இது நியாயமா?!.." என்று புலம்பி தீர்த்தான் அவன்.
"அப்ப ஒழுங்கா அண்ணி னு கூப்பிடு!.. என் புருஷனை அண்ணா தானே சொல்லுற!.." என்று மிரட்டி உறவுமுறை விளக்கினாள் தாரிணி.
"ஜாரி அண்ணி!.. நான் கொஞ்சம் உறவுமுறை வரைபடம் சப்ஜெக்ட் ல வீக்கு!.." என்று தலையை சொறிந்து கொண்டே அவன் சொன்ன பாவனையில், "அது!!.." என்று கெத்தாக தாரிணி கூறினாள்.
இருவரது உரையாடலையும் கேட்ட குழந்தை ஒன்றும் புரியாமல் தன் காத்திப்பாவின் செயலில் கை தட்டி சிரிக்க, வித்யாவின் இதழ்களிலும் இளநகை பிறந்தது.