Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 20
"உனக்கொரு சர்ப்ரைஸ் அம்மு!!.. என்ன னு சொல்லு பார்ப்போம்!?.." துள்ளலுடன் மகளிடம் கேட்டார் கோமதி..
"என்னவா இருக்கும்!!?.." என்று யோசித்த அமுதா, "என்னாச்சு கோ மாதா?.. அந்த பைய்ய்யன் விசயம் புட்டுக்குச்சா??!.." என்று ஆர்வமாக அவள் கேட்க..
"அப்படியே வாய்ல அடி!.. வாய்ல அடி!.. என்னடி பேச்சு இது?!.."என்று கோமதி கடிந்து கொண்டார்..
"சாந்தம்!.. ப்ரசாந்தம் கோ மாதா!.. சரி என்னனு நீங்களே சொல்லுங்க!.." மகள் சமாதானம் பேச,
"அந்த பையன் வீட்ல.. ச்சே.. ஜிஷ்ணு வீட்ல இருந்து பொண்ணு பார்க்க வர்றாங்க னுட்டு சொல்லி இருக்காங்களே!.." என்று தாய் தலையாட்டி கண்கள் விரித்து ஆர்வமுடன் சொல்லவும்..
மகள் வாய் விட்டே சிரித்து விட்டு, அவரது கன்னங்களை பற்றி, "கல்யாணம் பண்ண போறது எனக்கா?.. இல்ல உங்களுக்கா? ன்னே தெரியல!!.." என்று ஆட்டிக் கொண்டே கூறினாள்..
"ம்ம்ம்.. விடு அம்மு!.. வலிக்குது!.. வர்ற வெள்ளிக்கிழமை வர்றாங்க!.. மௌன ராகம் ரேவதி மாதிரி நீ எதாவது ப்ளான் பண்ணுன.. அவ்ளோ தான் சொல்லிட்டேன்!.." என்று செல்லமாக மிரட்டினார்..
"அப்படி மழைல டான்ஸ் ஆடிட்டு வர்றதுக்கு இது மழை சீசனா இல்லாம போச்சே!!." என்று அமுதா வருத்தமாக கூறவும்..
"அப்போ வெயில்ல காய்ஞ்சுட்டு வர போறியா?.. அப்றம் பொண்ணு ஃபோட்டோ மாத்தி கொடுத்துட்டீங்கனு எங்கள தான் திட்டுவாங்க!.." என்று அன்னை குறும்புடன் கூறினார்..
"விளையாட்டு போதும் டா!.. ஸ்கூல்ல முதல்லேயே இன்பார்ம் பண்ணிடு..ஹாஃப் டே லீவு சொல்லிடு.." என்று கூறி சற்று இடைவெளி விட்டு..
"இல்லைனா.. சூனா பானா, எஃப்.எம் ஆன் பண்ணிடுவாரு பார்த்துக்க!!.." என்று அவள் தந்தை சுதர்சன பாரதியின் அறிவுரை மழையை கூறி எச்சரிக்க..
"தெய்வமே!!.. அதுக்கு நான் கரெக்ட் டைம்க்கே வந்துடுவேன்!.." என்று மகள் அலற, இருவரும் ஹை ஃபை போட்டுக் கொண்டு சிரித்தனர்..
"அப்றம் அம்மா!.. பொண்ணு பார்க்க வர்றதுக்கெல்லாம் வீடு முழுக்க கால் வைக்க இடமில்லாம ஆட்களை நிரப்பி வைக்காதீங்களேன்!.."
"ஜஸ்ட் ஒரு பேமிலி கெட் டுகெதர் மாதிரி இருக்கட்டுமே!.." கோரிக்கை வைத்தாள் ஈஸ்வரி.. அவளது கோரிக்கையை கேட்ட கோமதி கண்கள் விரிய ஆச்சர்யமானார்..
அவரது எதிர்வினை கண்டு, 'நாம அப்படி வியக்கற அளவுக்கு என்னத்த சொல்லிட்டோம்!?..' என்று மண்டை சொறிந்து அவள் யோசிக்க..
"பார்ரா!.. இப்பவே ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிறீங்க!!.." என்று அவர் அதிசயப்பட்டு கூறவும், ஈஸ்வரி விழித்தாள்..
அவள் புரியாமல் விழிப்பதை கண்டு, ஜிஷ்ணுவும் அவ்வாறு கூறியதோடு அல்லாமல், அவனும் அவனது பெற்றோர் மட்டுமே வருவதாகவும்,
சகோதரிக்கு வர முடியாத சூழல் என்றும் கூறி சுதர்சனபாரதியை சமாதானம் செய்ததாக நடந்ததை விளக்கினார்..இருவருக்கும் ஒத்த சிந்தனை இருப்பதில் ஈஸ்வரி சற்று நிம்மதியானாள்..
பணிக்கு சென்ற பின் ஈஸ்வரி, வித்யாவிடம் விசயத்தை கூறியதும் அவள் பெரிதும் மகிழ்ந்தாள்..
ஈஸ்வரி வித்யாவையும் அன்று வருமாறு அழைக்க, அனைத்தும் முடிவாகி நிச்சயத்தன்று வருவதாக வித்யா நாசூக்காக மறுத்துவிட்டாள்..
அவளை மேற்கொண்டு வற்புறுத்தாமல் அவளது விருப்பம் என்று ஈஸ்வரியும் விட்டு விட்டாள்..
அந்த வெள்ளியன்று பெண் பார்க்கும் படலத்திற்கு ஜிஷ்ணுவும், அவனது பெற்றோரும் வந்து சேர்ந்தனர்..
இரு குடும்பங்களின் சந்திப்பு போல இயல்பாக இணைந்தனர்.. ஜிஷ்ணுவின் தாய் தாமரைச் செல்விக்கு, ஜீவகோமதியின் வெகுளித்தனமும் கலகலப்பும் மிகவும் பிடித்து போனது..
ஈஸ்வரியுடன் ஜிஷ்ணு தனியே பேச விரும்புவதாக கூறவும், இரு பெற்றோர்களும் சம்மதிக்க, "அம்மு!.. பால்கனி க்கு கூட்டிட்டு போய் பேசுங்க டா!.. அங்க வ்யூ நல்லா இருக்கும்!.." என்று கோமதி சொன்னதும், பாரதி முறைத்தார்..
'வெளியிருந்து பார்த்தால் சாலையில் செல்லும் அனைவர் கண்ணிலும் படும்படி போய் நின்று பேசச் சொல்கிறாளே!..' என்ற கடுப்பு அவருக்கு..
ஈஸ்வரியுடன் பேச வந்த ஜிஷ்ணு, பேச்சை தொடங்க தடுமாற, "உங்கள இதுக்கு முன்ன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு!!.." என்று இருவரும் ஒருசேர சொன்னார்கள்..
இருவரும் ஒன்றையே கூறியதில், நகைத்து விட்டு, "அக்ச்வலி உங்க ஃபோட்டோ பார்த்ததும் எனக்கு அப்படி தான் தோணுச்சு!.. சரி.. ரொம்ப யோசிச்சா மூளை டயர்ட் ஆகிடும் னு விட்டுட்டேன்.." என்றாள் அவள்..
"ஒருவேளை இந்த தேஜாவு மாதிரி எதாவது இருக்குமோ?!.." என கூறி நகைத்தான் ஜிஷ்ணு..
இருவரும் பொதுவாக பேசி முடிக்க, இருவரது சிந்தனைகளும் ஒத்து போவதில் திருப்தியாக, தங்களது சம்மதத்தை பெற்றோரிடம் உரைத்தனர்..
பிள்ளைகள் சம்மதித்த பின்னர் பெரியவர் கூடி பேசி அந்த மாத இறுதியில் வரும் ஒரு முகூர்த்த நாளில் நிச்சயம் வைத்துக் கொள்வதாக உறுதி செய்யப்பட்டது..
அடுத்து பள்ளிக்கு வந்த ஈஸ்வரி, உணவு இடைவேளையின் போது வித்யாவிடம் நிச்சய தேதி பற்றிய விசயம் சொல்லிவிட்டு பின்,
"இதுக்காவது நீ கண்டிப்பா வரனும் டா!.. இல்லைனா அதுக்கு அப்புறம் உங்கூட நான் பேசவே மாட்டேன்!.." என்று கறாராக சொன்னாள்..
"ட்ரை பண்றேன் அமுதா!.." என்று அவள் பிடி கொடுக்காமல் கூறவும், "அப்ப என்கிட்ட பேசாம கூட உன்னால இருக்க முடியும் னு சொல்ற!.. அப்படிதானே?!.." ஈஸ்வரி கோபமாக கேட்டுவிட்டு..
"உன்னோட இந்த நிலைக்கு நான் தான் காரணம் ங்கற குற்ற உணர்ச்சி என்னை கொல்லுது.. நீயும் கல்யாணமாகி குடும்பமா வாழ்றதை பார்த்த அப்றம் தான் நான் மேரேஜ் பண்ணனும் னு இருந்தேன்!.." அவள் சிறு வருத்தத்துடன் உரைத்தாள்..
"ஹேய்!.. என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்க!.. நீ என்ன பண்ணுன ஈஷு!.. என் வாழ்க்கைல இப்படி எல்லாம் நடக்கனும் இருக்கு!.." என்று வலியுடன் கூறிவிட்டு,
"இப்ப என்ன!.நானும் பாப்பாவும் சந்தோஷமா தானே இருக்கோம்!.. ஏதோ கடவுள் அவளையாவது எனக்கு னு விட்டு வைச்சாரே!.." என தன்னை தேற்றிக் கொள்ள முயன்றாள்..
"உண்மையிலேயே நீ சந்தோஷமா இருக்கியா தியா?!.. உன் மனசிலிருந்து சொல்லு பார்ப்போம்!?.." ஈஸ்வரியின் கேள்வியில் சற்று அலைப்புற்ற அவள் விழிகளினோரம் பயத்தை பிரதிபலித்தன..
"எனக்கு தெரியும் டா!.. நீ சந்தோஷமா இருக்கற மாதிரி நடிக்கிற!.. உன் மனசுல பாப்பாவை பற்றின பயம் இருந்துட்டு தானே இருக்கு!.." அவள் மனதை படித்தது போல ஈஸ்வரி கூறவும்..
"உண்மை தான் ஈஷு!.. இப்ப எல்லாம் அந்த பயம் அதிகமாகிட்டே இருக்கு!.. ஏன் னு தெரியல!!.. இவளையாவது என்னோட வாழ்க்கையில முழுசா கூட இருக்க வை பெருமாளே னுட்டு!.. "
"தினமும் வேண்டிட்டு தான் இருக்கேன்!.. ஆனாலும் சமீப நாளா அந்த பயம் கூடுதே ஒழிய போக மாட்டீங்குது!.." என்று கலக்கத்துடன் உரைக்கும் தோழியை மேலும் சிந்திக்க விடாமல்..
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது!.. நீ தேவையில்லாம பயப்படாதே!.. பாப்பா எப்பவும் உங்கூட தான் இருப்பா!.." என்று ஆறுதல் கூறினாள் ஈஸ்வரி..
"நீ கண்டிப்பா நிச்சயத்திற்கு வரனும்!.. நான் தாரிணி அக்காவையும் கூப்டு இருக்கேன்!.. எக்ஸாம் லீவுல தானே வைச்சு இருக்கு!. அதனால கண்டிப்பா வர்றேன் னு சொல்லி இருக்காங்க!.." என்றாள்..
இது வித்யாவிற்கு புதிய செய்தி!.. 'தாரிணி அக்கா வருவதை பற்றி தன்னிடம் எதுவும் சொல்லவே இல்லையே' என்று யோசித்தாள்..
"ரொம்ப யோசிக்காம ஒழுங்கா இப்பவே அதுக்குண்டான ட்ரெஸ், அசசரீஸ் ரெடி பண்ணிக்கோ!.. பாப்பாவும் நீயும் சும்மா அப்சரஸ் மாதிரி வரனும்!.." கட்டளையாக ஈஸ்வரி சொல்லவும்..
"ஏன்டி நிச்சயம் உனக்கு தானே!.. நான் எதுக்கு அலங்காரம் பண்ணிட்டு வரனும்!?.." என்று வித்யா சிரிப்புடன் கேட்கவும்..
"நம்ம ஸ்கூல் டேஸ்ல ஒரு ஃபங்ஷன்னு சொன்னா எவ்ளோ சூப்பரா வருவ நீ!.. அது மாதிரி தான் சொன்னேன்!.."
"உண்மையிலேயே இந்த விசேஷம் உன் மனசுக்கு சந்தோஷமா இருந்தா நீ கண்டிப்பா அப்படி வருவ!.. இனி உன்னோட விருப்பம்!.." என்று முடித்து விட்டாள் ஈஸ்வரி.
***************
காலாண்டு விடுமுறையில் தாரிணியே சாய் சரணுடன் வித்யாவின் வீட்டிற்கு வந்து விட, நம் குட்டி வாண்டு மிகவும் குஷியானாள்.
இருவர் மட்டுமே இருந்த வீட்டில் இப்போது இவர்களும் சேரவும், அவளை கையில் பிடிக்க முடியவில்லை.
ஈஸ்வரியின் நிச்சயதார்த்த விழாவிற்காக கோமதிக்கு உதவுவதாக கூறி தாரிணி அவளது வீட்டிற்கு சென்றுவிட, பிள்ளைகளை மேய்ப்பது வித்யாவின் கடமையாகி போனது.
முதல்முறையாக சின்னவள் கலந்து கொள்ளும் விசேஷம் என்பதால்
புது உடைகள், அலங்கார பொருட்கள் கண்டு குட்டிக்கு ஏக ஆனந்தம்.
நாளை விசேஷம் என்ற நிலையில் முதல் நாளே சின்னக் குட்டி, தனது உடையை கண்டு,
"அம்மா எக்கு நாளக்கி இந்த க்கிப் போட்டு விவ்வீங்கா?!.. இந்த பொத்து, வையேல் எல்லா போத்து விய்ங்க!.." என்று அட்டவணை போட ஆரம்பித்து விட்டாள்.
மகளது குதூகளிப்பில் வித்யாவின் மனமும் மகிழ்ந்தது இருப்பினும் இனம் புரியா ஏதோ ஒன்று மனதை அழுத்தியது.
மறுநாள் காலையில் குழந்தைகளை எழுப்பி தயார்ப்படுத்தி முடிப்பதற்குள் ஒரு மணப்பெண்ணையே அலங்கரித்து விடலாம் போல என்று தோன்றும் அளவுக்கு இருந்தது இருவருக்கும்.
உச்சியில் தென்னைமர குடுமி!.. அந்த சிண்டை சுற்றி, முல்லை சரம் வைத்து, சிவப்பு சட்டை மற்றும் மஞ்சளில் சிவப்பு நிற கட்டம் போட்ட பட்டுப் பாவாடையில் குட்டி தேவதை, ஒளிரும் நட்சத்திரம் போல் மிளிர்ந்தாள்.
வித்யா, அலங்காரம் செய்ய பெரிதாக விருப்பப்படாமல் தட்டிக் கழிக்கவும், தாரிணி அவளை இழுத்து வைத்து அவளுக்கு லேசான ஒப்பனைகள் செய்தாள்.
"இப்ப எப்படி இருக்க பாரு!.. இப்ப தான் பொண்ணா லட்சணமா இருக்க!..சும்மா இதை விட்டுட்டு அது வேண்டாம், இது வேண்டாம் னுட்டு சொல்லிட்டு இருக்கிற நீ!.." என்ற
தாரிணியின் செல்ல மிரட்டலில், தன்னை கண்ணாடியில் கண்ட போது வித்யாவிற்கே அவள் புதிதாக தெரிந்தாள்.
சில வருடங்களுக்கு பின் தன்னை இவ்வாறு கண்டது அவளுக்குமே மனதில் ஒரு இதம் பிறந்தது.
கல்யாண வரதர் பெருமாள் கோவிலில் அவர்கள் நுழைந்த போது, ஈஸ்வரியும் அவளது பெற்றோரும் முதலிலேயே வந்து, அனைத்தையும் தயார்படுத்திக் கொண்டு இருந்தனர்.
"இன்னும் டைம் இருக்குல ஆன்ட்டி!.. நாங்க சாமி கும்பிட்டுவிட்டு வந்துர்றோம்!.." என்று தாரிணி வித்யாவையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல,
பெருமாளின் திருவுருவை கண்ட வித்யா, கைகூப்பி, கண்கள் மூடி, "பெருமாளே!.. என் வாழ்க்கையில் இதுவரை நீ விளையாண்டதே போதும்!.. இனியாவது நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுங்களேன்." என்று
ஆழ்ந்து மனமுருகி அவள் வேண்டிக் கொண்டிருக்கும் போது அவளது கழுத்துப் பகுதியில் ஏதோ உரசுவது போல் தெரிய, வேகமாக கண் விழித்த போது,
கார்த்திக் அவளது கழுத்தில் மங்கல நாண் பூட்டி மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆக்கினான்.
சரண் கை கொட்டி ஆனந்திக்க, பவிஷ்யா, "ஹைய்யா காத்திப்பா!!.." என்று குதூகளித்தாள்.
அப்போது பெற்றோர் மற்றும் சுற்றம் சூழ கோவிலினுள் நுழைந்த ஜிஷ்ணு, அதனை கண்டு அதிர்ந்து நின்றான்.