Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 2
வித்யாவுடன் பேசிக்கொண்டே ஈஸ்வரி எதேச்சையாக திரும்பவும், அந்த இரு கண்களுக்கு சொந்தமானவன்,
ஈஸ்வரியின் பார்வை தன் பக்கம் திரும்பியது கண்டு அரைநொடிக்கும் குறைவான நேரத்தில் தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.
புருவ முடிச்சுடன் யோசித்த ஈஸ்வரி, வித்யாவுடன் இருக்கும் போது இது போன்ற பார்வைகள் வழக்கம் என்பதால் அதை கண்டு கொள்ளாமல் தன் பேச்சை தொடர்ந்தாள்.
இருவரும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டே தங்கள் நிறுத்தத்தில் இறங்கிட,
அதுவரை அவளை ரசித்துக் கொண்டிருந்த ரூபேஷை நெருங்கிய அவன் நண்பன் பாலா, "என்ன மாப்ள, லவ்வா?" எனக் கேட்க, புரியாமல் முழித்தான் ரூபேஷ்.
"என்னடா சொல்ற?" குழப்பமாய் அவன் கேட்க, "இல்லடா, நானும் உன்னை ரொம்ப நாளா கவனிச்சுட்டு தான் இருக்கேன்."
"அந்த புள்ளயை வே எப்போ பாரு உத்து உத்து பார்த்துட்டு இருக்கியே, அதான் லவ் மோடு சார்ட் ஆகிடுச்சோ னு கேட்டேன்?" கேலியுடன் பாலா கேட்டான்.
"ஏன்டா பக்கி! ஒரு பொண்ணை பார்த்தாலே உடனே லவ் தானா? ஏன்டா இப்படி?" என்று ரூபேஷ் காட்டமாக கேட்கவும்,
"அப்றம் நீங்க என்ன கருணை பொங்கி வழியற காருண்ய பார்வை பார்த்தீங்களோ?" நக்கலாக கேட்டான் பாலா.
"அது அப்படி இல்லடா நட்பு, அந்த பொண்ணை நான் சில மாசங்களா தான் பார்க்கிறேன். அவ கிட்ட இருக்க அந்த குழந்தை தனத்தை தான் ரசித்தேன்."
"மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நீயா இப்படி கதை கட்டிவிட்டு தேவையில்லாமல் பிரச்சனையாக்காதே" என்று எச்சரித்தான் ரூபேஷ்.
"சரி விடு மச்சான்!டங்சன் ஆகாதே. ஏதோ தோணுச்சு கேட்டேன்.அதுக்கு போய் இவ்ளோ சீரியஸ் ஆகிட்ட. சரி இன்டர் காலேஜ் மீட் வர போகுதே நீ கலந்துக்கலையா?" என்று பேச்சை மாற்றினான் பாலா.
ரூபேஷ் மற்றும் பாலா, பி.கே. இளங்கலை கல்லூரியில் பி.எஸ்சி பிஸியாலஜி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள்.
"இல்லடா,எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல. நெக்ஸ்ட் இயர் வேணும்னா யோசிக்கலாம்." என்று விட்டேற்றியாக அவன் சொல்ல,
"என்ன மச்சான் இப்படி சொல்ற? இது மாதிரி ஈவன்ட்ஸ் ல கலந்துக்கிட்டா நீ எடுக்க நினைக்கிற ஸ்ட்ரீம் க்கு எக்ஸ்ட்ரா ஸ்கோர் ஆகும்ல." என்று குழப்பத்துடன் கேட்டான் நண்பன்.
"புரியுதுடா பாலா, சரி அதை பற்றி யோசிக்கிறேன்." கூறிய ரூபேஷிற்கு , நண்பனின் தன்மீதான அக்கறையை எண்ணி நெகிழ்ந்தது மனம்..
*****************
பஸ்ஸை விட்டு இறங்கிய தோழிகள் இருவரும் பள்ளியில் நுழையவும், பள்ளி மணியடிக்கவும் சரியாக இருந்தது.
அதன்பின் வகுப்புகளில் மூழ்கி நேரம் விரைய, மதிய உணவு இடைவேளையின் போது, ஈஸ்வரி, "ஏன்டி தியா! உங்க வீட்ல பர்மிஷன் வாங்கிட்டியா?" என்று திடுமென கேட்டாள்.
"பர்மிஷன்ஆ?? எதுக்கு??" என்று குழப்பத்துடன் வித்யா கேட்க, அவளை கொலை வெறியுடன் முறைத்தாள் ஈஸ்வரி.அவளது முறைப்பில் முந்தாநாள் அவள் சொன்னது நினைவிற்கு வர,
"ஸ்ஸ்ஸ்!!.." என்று நாக்கைக் கடித்த வித்யா, "ஸாரி! மறந்துட்டேன்டி. இன்னிக்கு கேட்டு சொல்றேன்."
"ஆனாலும் எப்படியும் அலோவ் பண்ண மாட்டாங்க னு தான் நினைக்கிறேன்டி ஈஷ்!" சந்தேகத்துடன் உரைத்தாள் வித்யா.
"என்ன தியா இது? ஏதோ இந்த வருசம் தான், இந்த புது ஹெச்.எம் ப்ளஸ்டூ ஸ்டூடன்ஸ் மென்டல் ப்ரஷர் குறைக்குறதுக்காக ட்ரிப் அரேன்ஜ் பண்ணலாம்னு ஐடியா பண்ணி இதை சொல்லி இருக்காரு. அதுவும் எக்ஸாம் முடிஞ்ச அப்றம் தானே."
"அதுல என்ன பிரச்சனை உனக்கு?இந்த வருசம் மட்டும் தான் நாம சேர்ந்து இருப்போம். என் அப்பா க்கு ட்ரான்ஸ்பர் வர்றதால காலேஜ் ஸ்டடீஸ் க்கு நான் இங்க இருக்க மாட்டேன்."
"அதனால தானே ஸ்கூலே அரேன்ஜ் பண்ற இந்த ட்ரிப்லேயாவது சேர்ந்து போலாம் னு கேட்டேன்,ஆனா நீ இன்னும் வீட்ல பர்மிஷன் கேட்காம இருக்க." என்று சிறு மனத்தாங்கலுடன் கூறினாள் ஈஸ்வரி.
"நீ சொல்றது புரியுது ஈஷ்! ஆனா எங்க அம்மா என்னை தனியா எங்கேயுமே அலோவ் பண்ண மாட்டேங்கிறாங்க. நான் என்ன பண்றது?" என்று வருத்தத்துடன் வித்யா பதில் உரைத்தாள்.
"அவங்கள எப்படியாவது பேசி கன்வின்ஸ் பண்ணு. உண்மையிலேயே உனக்கு என் கூட வர இஷ்டம் இருந்தா, நீ அவங்கள கன்வின்ஸ் பண்ணி இருப்ப." என சிறு கோபத்துடன் ஈஸ்வரி கூறினாள்.
அவளது இந்த வார்த்தைகளுக்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வேதனைப்படுவாள் என்று தெரிந்து இருந்தால் அப்படி சொல்லி இருக்க மாட்டாளோ, என்னவோ.
" சரி நான் அம்மா கிட்ட பேசி பார்க்கிறேன். கண்டிப்பா என்னால எவ்ளோ முடியுமோ, அவ்ளோ தூரம் அவங்கள கன்வின்ஸ் பண்றேன்டி ஈஷ்!இப்படி எல்லா சொல்லாத, ஹர்டிங்ஆ இருக்கு." என்று வித்யா சிறு வலியுடன் கூறவும்,
"ஸாரிடி தியா, நானும் அவ்ளோ ஹார்ஷ் ஆ சொல்லி இருக்க கூடாது தான். ஓகே நீ கேட்டு சொல்லு."
"ஆனா டீச்சர் சொன்ன டைம் முடியறதுக்குள்ள ஓகே சொல்ல வைச்சுடு என்ன." சமாதானமாக கூறிய ஈஸ்வரி, அவளை தோளோடு அணைக்க, வித்யா முகம் பூவாய் மலர்ந்தது.
இது தான் தோழியின் குணம். இதனால் தான் வித்யாவிற்கு அவளை மிகவும் பிடிக்கும். தனது சொல்லோ, செயலோ பிறரை காயப்படுத்தியது என்று தெரிந்தால், உடனே அதை உணர்ந்து மன்னிப்பு கேட்பாள்.

அவளது பதிலில் சில நொடிகள் வார்த்தைகள் உறைய நின்ற கார்த்திக் கண்டு குழப்பமான ரூபிணி, "என்னாச்சு கார்த்திக் சார்?" என்று கேட்ட பின் தான், நிகழ்விற்கு வந்த அவன்.
"என்ன கேட்டீங்க?" என்று இன்னும் தெளியாமல் கேள்வியையே கேட்டான்.
"இல்ல... என்னமோ சொல்ல வந்தீங்க, திடீர்னு ஸ்டக் ஆகிட்டீங்க? அதான் கேட்டேன்." அவளது விளக்கத்தில் முழுவதும் சுயம் திரும்பிய கார்த்திக்,
"இல்ல ரூபிணி, எனக்கு இப்ப அவசரமா ஒரு வேலை இருக்கு. நான் அப்பறமா பேசுறேன். கிளம்புறேன்." எனக் கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அவன்.
அவள் அந்த பள்ளிக்கு வந்தது முதல்,அவனது ஆர்வமான பார்வையை உணர்ந்த ரூபிணி, என்றாவது ஒரு நாள் இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்த்து இருந்தாள்.
தான் ஒரு குழந்தையின் தாயென்று அறிந்து அதிர்ந்த அவனது முகம் கண்டு சிறு திருப்தி கூட தோன்றியது அவளுக்கு.
அவன் மனதில் தேவையில்லாத எண்ணங்களை வளர விட்டு, பின் வருந்த செய்வதற்கு இது எவ்ளோ பரவாயில்லை. இனி தன்னை தேற்றிக் கொண்டு மாறி விடுவான் என தப்புக் கணக்கு போட்டாள் ரூபிணி.
அந்த நினைவின் மூலம் சற்று நிம்மதியுடன் செல்லும் அவனை பார்த்துக் கொண்டு இருக்க, "அம்மா! வீத்துக்கு போவாம்." என்று அவளது கவனத்தை தன் பக்கம் திருப்பியது அந்த இரண்டரை வயது சின்ன வாண்டு.
"போலாம்டி செல்லம்!" என்று கூறி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு வண்டியில் முன்னால் பாதுகாப்பாக நிற்க வைத்துக் கொண்டு அவள் கிளம்ப,
"இன்னிக்கு லட்டுக்குட்டி என்ன பண்ணுனீங்க? ஒழுங்கா சாப்டீங்களா?" என்று மெதுவாய் விசாரணையை அவள் துவங்க,
கள்ளவிழிப் பார்வையில் முழித்த சின்ன பூவை, ரூபிணி கவனிக்கவில்லை என்று எண்ணி, "ஓஓ!.. சமத்தா சாப்த்தேனே, இன்க்கி ரேம்ஸ் பாதினேனே!" என்று விழி விரிய கதைத்தாள் பவிஷ்யா.
"அப்படியா பவி குட்டி! சூப்பர் டா செல்லம்." என்று ரூபினி பாராட்டிக் கொண்டு இருக்கும் போது மகளோ, "அவங்க யாரும்மா? ஏ அப்பிஇஇ பாத்துத்து இந்தாங்க?" சந்தேகத்தை கேட்க தொடங்கவும்,
மகளிடம் அதை எதிர்பார்த்தே இருந்த தாய், "அவர் அம்மா ஸ்கூல் ல வொர்க் பண்றவருடா ஆனா ஏன் அப்படி பார்த்தாங்கன்னு தெரியலையே டா செல்லம்?" மழுப்பலாக பதில் அளித்தாள்.
"அப்பியா!? உங்க கூத இந்ததால அப்பா தான் ஊருல இந்து வந்துத்துதாங்க னு நெச்சேன்." என்ற மகளது பேச்சில் ஒரு நொடி ரூபிணியின் கைகளில் வண்டி தடுமாறியது.
பின்பு தன்னை சமன் செய்து கொண்டு, "அதெல்லாம் இல்லடா, அந்த அங்கிளே இன்னிக்கு தான் அம்மா கிட்ட பேசுனாங்க" என்று ஒருவாறு சமாளித்தாள்.
இருப்பினும் கார்த்திக்கினால் கிளறப்பட்ட தகப்பனை பற்றிய நினைவால், இனி சில தினங்களுக்கு எழும் மகளின் தொடர் கேள்விகளை சமாளிக்க வேண்டுமே என்று ஆயாசமாக இருந்தது.
தாயும், மகளும் பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர்.
பின்பு குழந்தையை குளிக்கச் செய்து, பாலை கலந்து கொடுத்துவிட்டு, டிவியில் கார்ட்டூனை போட்டுவிட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள சென்றாள் அவள்.
குழந்தையுடன் பேசிக்கொண்டே இரவு உணவையும் சமைத்து முடித்து, குழந்தைக்கும் ஊட்டிவிட்டு, பின்னர் அவளிடம் வரைவதற்கு கலர் பென்சில்களையும் நோட்டையும் கொடுத்தாள்.
தன் வேலைகளை முடித்து படுக்க தயாராகினர் தாயும் மகளும், இனி மகளின் கேள்விகள் தொடருமே என்ற சிறு கலக்கத்துடன் அவளை தூங்க வைக்க படுக்கையில் அவளுடனே படுத்தாள் ரூபிணி.
"அப்பா எங்கம்மா இக்காங்க? எப்ப வவ்வாங்க?" என்ற மகளின் கேள்விக்கு,
"பவி குட்டிக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?" என்று பேச்சை மாற்ற முயன்றாள் தாய்.
"அம்மா பிய்க்கும். எல்லோ கலர் தோஸ் பூ பிய்க்கும். தெதி பிர் நொம்ப பிய்க்கும்.போசன் தெர்ஸ்(ஃப்ரோஸன் ட்ரெஸ்) பிய்க்கும். இன்னும் நெய்ய இக்கே." என்று மழலையில் மிழற்றிய மலரின் பேச்சிற்கு அன்னை முத்தமிட்டாள்.
"பவி பாப்பா க்கு பிடிச்சதெல்லாம் வாங்க நிறைய காசு வேணும் ல, அதனால தான் அப்பா ஃபாரின் போய் நிறைய காசு சேர்த்துட்டு வருவாங்க." என்ற தாயின் பதிலுக்கு
"அப்போ எப்ப தான் அப்பா, பவி பாப்பாவை பார்க்க வவ்வாங்க? சூல் ல ஆதயா அவ ப்பா கூத வண்தில தான் வதுதா."
"எக்கும் அவ மாதி அப்பா கூத வண்தில த்துர்ர்ர்ர் னு அப்பி சூலுக்கு போவ்வும் னு ஆசையா இக்கே." என்று தன் மனதின் ஆசையை குட்டி வெளிப்படுத்த,
மனம் கலங்கிய ரூபிணி தன்னை சமன் செய்து கொண்டு, "அதான் அம்மா கூட்டிட்டு போய் விடுறேனே செல்லம்!. அப்றம் என்ன?." என்று சமாதானம் செய்தாள்.
"இல்ல., அவ பைக் ல முன்னாதி உக்கார்ந்து அவ அப்பாவை கத்திக்கித்து(கட்டிக் கொண்டு) வதுதா. அது த்துர்ர்ர்ர் னு வேகமா போவுது. அந்த மாதி பைக் ல போவேம் எக்கு." என்று மழலை அதை சிலாகித்துப் பேச,
"அப்பா ஏ எங்கித்த பேசக் கூத மாத்திறாங்க?. எப்போ பாரு நா தூங்கும் போதே பேசுதாங்க."
"ஒரு தவ்வ நா முச்சு இக்க அப்ப அப்பாவை பேசச் சொல்லுதீங்கா ம்மா?" என்று ஏக்கத்துடன் கூறிய பிஞ்சின் தந்தைக்கான ஏக்கம் அப்பட்டமாய் தெரிய,
"கண்டிப்பா டா செல்லக்குட்டி!. நான் சொல்றேன். சரியா? இப்போ தூங்கு டா பாப்பா." என்று இயலாமையில் மனம் நோக, பிள்ளையை தட்டி தூங்க வைத்தாள் ரூபிணி.
'கடவுளே!. இன்னும் எத்தனை காலம் தந்தையின் முகம் கூட காட்டாமல், இந்த பிஞ்சை சமாளித்து வளர்க்க போகிறேனோ??.' என்னும் பெரும் கவலை ரூபிணியின் மனதில் மலையென கனக்க,
அடுத்து மகள் கேட்டதில் என்ன சொல்ல எனத் தெரியாமல் விழி பிதுங்கினாள் ரூபிணி.