Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 17
கருஞ்சிவப்பு சட்டை, வெள்ளை வேட்டி கட்டி, நெற்றியில் இட்ட சிறு திருநீற்று கீற்றோடு, இதழ்கள் நகைப்பதற்கு முன் கண்களில் சிரிப்போடு, அழகாக நின்றிருந்தான் ஜிஷ்ணு!..
ஏதோ விசேஷ நாளில், இயல்பாக எடுத்த புகைப்படமாக இருக்க வேண்டும்..போஸ் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் இயல்பாக இருந்தான்..
ஈஸ்வரி அவனையே பார்த்துக் கொண்டு தன் நினைவடுக்குகளில் எங்கே பார்த்தோம் என்று தேடிக் கொண்டிருக்க,
அவளை காண வந்த கோமதி,"என்ன அம்மு!.. பையன் அழகுல மயங்கிட்டியா!!?.." என்றார் சிரிப்புடன்..
அவரை முறைத்து விட்டு, "அதெல்லாம் ஒன்னுமில்ல!.. எனக்கு தான் இப்ப கல்யாணம் வேண்டாம் னு சொன்னேனே!!.. அப்றமும் ஏன்ம்மா இப்படி எல்லாம் செய்றீங்க!?.." அவள் சற்று ஆதங்கத்துடன் சொன்னாள்..
அவளை கூர்ந்து நோக்கிய கோமதி, "சரி இப்ப வேண்டாம்!.. ஆனா எப்ப பண்ணலாம் னு உத்தேசம்?!!.." என்று அவர் கொக்கி போடவும்..
"அது!!.." அவள் சொல்லத் தயங்க,"எதுவானாலும் அம்மா கிட்ட மனசு விட்டு சொல்லு டா அம்மு!!..எதனால உனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு தோணுது!.." என்றார் நிதானமாக..
சற்று யோசித்த ஈஸ்வரி, "வித்யாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்ச அப்றம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேனே!!.." என்றாள் கெஞ்சலாக..
புரியாமல் விழித்த அவர், "இல்ல.. புரியல!.. அவளுக்கு வாழ்க்கை அமையறதுக்கும், நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்!!?.." என்றார்..
"அது வந்து!!...." என்று ஈஸ்வரி இழுக்க, "சொல்ல வந்ததை பட்டென சொல்லு மா!.. ஏன் தயங்குற?!..நான் என்ன சொல்ல போறேன்!!?.." என்று அவளை பதிலளிக்க ஊக்கினார்..
சற்று மூச்சை இழுத்து வெளிவிட்ட ஈஸ்வரி, வித்யாவின் இந்த நிலைக்கு தானும் ஓர் காரணம் என்ற தன் மனதின் உறுத்தலை மெதுவாக உரைத்தாள்..
அவள் சொல்லிய காரணத்தை யோசித்த கோமதி," சரி நீ சொன்ன மாதிரி, அந்த இன்சிடென்ட் க்கு நீயும் ஒரு காரணம் னு வச்சாலும்,"
"அவளோட அக்கா, மாமாவோட இறப்புக்கு யார் காரணம்?!.. உலகம் பார்க்காத அந்த சிசுவோட இறப்புக்கு யார் காரணம்!?.." என்று அவளையே சிந்திக்க செய்தார்..
அவரது கேள்வியில் புரியாமல் அவரை பார்த்த ஈஸ்வரியிடம்," இந்த உலகத்துல எல்லா செயலுக்கும் ஒரு தொடக்கப் புள்ளி தேவைப்படுது.."
"அந்த வகையில பார்த்தா அவளோட வாழ்க்கை எப்படி எல்லாம் போகனும் னு விதி இருக்கோ, அதுக்கான தொடக்கப் புள்ளி தான் நீ!.." என்றதும் அவர் கூற்றை ஆழ்ந்து கவனிக்க தொடங்கினாள் அவள்..
"உன்னோட எண்ணப்படி அப்படி நீ அவளை ஃபோர்ஸ் பண்ணி வர வைக்காம இருந்தாலும், அவ லைஃப்ல இதெல்லாம் நடக்கனும் னு இருந்தா, அதெல்லாம் வேற ஏதோ ஒரு தொடக்கப் புள்ளியால ஆரம்பிச்சு இருக்கும்!.."
"கடந்து போன நிமிஷங்களை நம்மளால திரும்ப கொண்டு வர முடியாது.. அதனால வரப்போற நிமிஷங்களை சீராக்க என்ன பண்ணனுமோ அதை யோசிக்கணும்.."
"அதுக்காக நீ, உன் வாழ்க்கை அப்படினு சுயநலமா இருக்க சொல்லல..அவளுக்கும் ஒரு வாழ்க்கை கடவுள் எழுதி இருப்பார்.."
"தக்க சமயத்தில அவளை தேடி அதுவே வரும்!.." அவர் இவ்வாறு உரைத்ததும் ஈஸ்வரிக்கு, கார்த்திக்கின் நினைவு தான் வந்தது..
"அதனால உனக்கு வர்ற நல்ல வாய்ப்புகளை நீ இழந்துடாத!.. இப்ப என்ன உனக்கு கல்யாணம் ஆனா அவளுக்கு கல்யாணம் பண்ண முடியாதா!?.."
"அவளுக்கும் ஒரு நல்ல பையனா பார்த்து கட்டி வைப்போம் சரியா!!?.." என்று அவளது மனதில் உள்ள குற்ற உணர்ச்சியை களைய முனைந்தார் கோமதி..
தாய் இவ்வாறு கூறியதும், ஈஸ்வரி தயங்கிக் கொண்டே இன்று கார்த்திக்கை சந்தித்து பேசிய அனைத்தையும் சொன்னாள்..
அதைக் கேட்ட கோமதி, "அந்த பையன் எப்படி என்ன னு உனக்கு தெளிவா தெரியுமா டா!?.. தேவையில்லாம அவசரப்பட்டு மறுபடியும் எதாவது சொதப்பிடாத!!.." என்று எச்சரித்தார்..
"அப்படி எல்லா இல்லைம்மா!.. நான் இங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து பார்த்து இருக்கேனே!.. நல்லா கலகலப்பா பேசுவார் ஒழிய எந்த டீச்சர் கிட்டேயும் வரம்பு மீறி பேசுனதில்ல.."
"அவங்க பர்சனல் பற்றி கேட்டது கூட இல்ல.. ஆனா வித்யா கிட்ட மட்டும் அவ ஹஸ்பண்ட் பற்றி கேட்குறாரு.. அவ குழந்தைக்கு ஸ்கூலுக்கு போய் சாப்பாடெல்லாம் ஊட்டி விட்டு இருக்காராம்!.." அவள் சொல்லி முடித்ததும்..
"என்ன டி சொல்ற!!?.. அந்த பையன் உண்மையிலேயே அவளை லவ் பண்றானா?.. இல்ல அவளை அட்ராக்ட் பண்ண ட்ரை பண்ணுறானா?!.." கோமதி சந்தேகமாக கேட்கவும்..
"அதை தான் நான் என்ன கேட்டுட்டு வந்தேன்.. அதான் வீட்டுக்கு வர லேட் ஆகிடுச்சு!..எனக்கென்னமோ அவருக்கு வித்யாவை பற்றின ஏதோ ஒரு விசயம் தெரிஞ்சு இருக்கனும் னு தோணுது!!.." என்று சிந்தனையாக கூறினாள் ஈஸ்வரி..
"இருக்கலாம்!.. பையன் நல்லவன் தானே சொல்லுற!..கொஞ்ச நாள் போகட்டும்!..எதுவரை இது போகுது பார்ப்போம்!.."
"சரி!.. உன் விசயத்துக்கு வருவோம்!.. இந்த பையன் ஃபோட்டோ பார்த்தியே உனக்கு பிடிச்சு இருக்கா?!.. இந்த பையன் புனே ல ஒரு பயோமெடிக்கல் கம்பெனி ல வொர்க் பண்றாப்ல.."
"ஒரு அக்கா மட்டும் தான்.. அவங்களுக்கும் சவுத் சைட் மேரேஜ் பண்ணி கொடுத்து இருக்காங்க..பெத்தவங்க இங்க தான் இருக்காங்க.. எங்களுக்கு எல்லாமே திருப்தியா இருக்கு!.."
"இப்ப உன்னோட முடிவு தான் பாக்கி!.. நீ சொல்லு உனக்கு பிடிச்சு இருக்கா?.. மேற்கொண்டு பேசலாமா?.." என தாய் கூறிய விளக்கத்தில் மலைத்தாள் அவள்..
"என்ன கோ மாதா இது!!?.. கருவேப்பிலை மாதிரி ஒத்த புள்ளையை பெத்து வச்சுட்டு எங்கேயோ வடக்கால கொண்டு போய் தள்ளனும்னு பார்க்கறீங்க?!.."கோபமுடன் கேட்டாள் ஈஸ்வரி..
"அட!.. பையன் இங்க ட்ரான்ஸ்பர்க்கு எழுதி கொடுத்து இருக்காராம்.. சீக்கிரமே கிடைச்சுடும் னு சொன்னாங்க!.." என்று அதற்கு பதில் அளிக்கவும், இனி என்ன சொல்வது என விழித்தாள்..
அவள் விழிப்பை பார்த்து, "என்ன வேற என்ன காரணம் சொல்லலாம் னு யோசிக்கிறியா டா அம்மு!?!..உனக்கு இந்த பையன் கிட்ட எதாவது குறை தெரியுதா?!.." என்று அவள் மனதை அறிய கேட்டார்..
"குறை னுட்டு எதுவும் இல்லை ம்மா!.. பார்க்கவும் நல்லா தான் இருக்கான்!.. ஆனா ஏதோ ஒன்னு பயமா இருக்கு!!.." என்றாள் அவள்..
"கல்யாணம் னு சொன்னாலே எல்லா பொண்ணுங்களுக்கும் வர்ற பயம் தான் இது!..உனக்கு ஓகே தானே!?.. அந்த பையன் வீட்ல இருந்து பொண்ணு பார்க்க வர சொல்லலாம்ல!?.." தாய் கேட்டதும்
"சரி!.. என்னமோ பண்ணுங்க!..ஆமா.. பையன் பையன் னு சொல்றீங்களே!.. அந்த பையனுக்கு பேர் வைக்கலையா?!.." என்று குறும்புடன் கண்ணடித்து கேட்டாள் அவள்..
"நக்கலு!!.. இந்த பையன் பேர் ஏதோ யுனீக் ஆ இருந்துச்சே!!.. "என்று மண்டையை தட்டி யோசனையோடு கூறிய அவர்..
"ஹான்!..ஜிஷ்ணு!!.. அப்றம் ஏதோ சொன்னாரே தரகரு!!.. அது ஞாபகம் இல்ல டா!.. நான் வேணும்னா கேட்டு சொல்றேன்!.." மகளிடம் உரைக்க..
"அதுசரி!!.. நினைவிலேயே நிக்காத மாதிரி ஒரு பேரா!!?.." என்று நகைத்தாள் அவள்..
"போடி!.. வாயாடி!.. இப்பத்த பேர்கள் எல்லாம் எங்க வாய்ல நுழைய மாதிரி இருக்கு!.." என்று அவளது கன்னத்தில் இடித்து விட்டு சென்றார்..
அவர் சென்றதும், அந்த புகைப்படத்தை மீண்டும் பார்த்த ஈஸ்வரி, 'உன்னை அப்படி எங்க பார்த்து இருப்பேன் மிஸ்டர்.ஜிஷ்ணு!' என்று யோசனையில் ஆழ்ந்தாள்..
வெகு நேரம் யோசித்து பார்த்தும் நினைவில் வரவில்லை என்றதும், 'ச்சே!!.. இதை யோசிச்சே நேரம் ஓடி போயிடும் போல..சரி ஞாபகம் வரும்போது பார்த்துக்கலாம்..' என்று விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.
*****************
விடுமுறை நாள் என்பதால் வீட்டை சுத்தப்படுத்தும் வேலைகளோடு பிள்ளையையும் பார்த்துக் கொண்டு இருந்த வித்யா,
பள்ளி, வீடு தவிர குழந்தையை எங்கும் அழைத்து செல்லவில்லையே என்று நினைத்து, இன்றாவது பூங்காவிற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தாள்.
அதன்படி வேலைகள் அனைத்தையும் முடித்து, மதியம் குழந்தையையும் தூங்க வைத்து, மாலை புத்துணர்ச்சியுடன் அவளை, அவர்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றாள்.
வார இறுதியின் இதமான அந்த மாலை வேளையில், அந்தப் பூங்காவில் சின்னஞ்சிறு குழந்தைகள் அங்காங்கே ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவளைப் போன்ற குழந்தைகளை கண்டதும் குஷியான பவிஷ்யா, மகிழ்ச்சியில் குதூகளித்தாள்.
மகளது மகிழ்ச்சி கண்டு இனி வாரம் ஒருமுறையாவது இவ்வாறு குழந்தையை அழைத்து வர வேண்டும் என முடிவெடுத்தாள்.
குழந்தையிடம், "பட்டுக்குட்டி!!.. பாப்பாக்கு இந்த பார்க் ரொம்ப பிடிச்சு இருக்கா?.." என்று வினவ,
"தொம்பஅஅ பிக்கிது!!.." என்று குதூகளித்த சின்ன வாண்டு, "அம்மா!.. நாம பால் ஆவ்வோமா?!.." என்று கண்கள் விரிய ஆர்வத்துடன் கேட்க, மறுக்கவா முடியும்!.
"சரிடா செல்லம்!!.. ஆனா ரொம்ப தூரம் தூக்கி போடக் கூடாது!.. செடிகளுக்குள்ள, பால் போற மாதிரி போடக் கூடாது சரியா!!?.." என்று விதிமுறையோடு தாய் கூற,
"ம்ம்ம்!!.. ஓகே ம்மா!!.." உடனே ஒப்புதல் உடன்படிக்கை செய்தாள் சின்னவள். அதன்படி இருவரும் மகிழ்வாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
குழந்தை விளையாடும் ஆர்வத்தில் சற்று தொலைவாக பந்தை வீசிவிட, "தூரமா போடக் கூடாது னு சொன்னேன்ல செல்லம்!!.." என்ற சிறு முறைப்புடன் வித்யா கூற,
"தாரி ம்மா!!.." என்று கண்கள் சுருக்கி தவறிழைத்த குழந்தை மன்னிப்பு கேட்க, சரி என்று விட்டு அதை எடுக்க சென்றாள் வித்யா.
அப்போது இரவு சமையலுக்கான ஆயத்தங்களுக்காக பொருட்களை வாங்கிக் கொண்டு அந்த பூங்காவின் எதிர்பக்க சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திக்,
"காத்திப்பா!!.." என்ற அழைப்பில் அப்படியே ப்ரேக் போட்டது போல நின்றான்.
குரல் வந்த திசையை திரும்பி பார்த்த கார்த்திக், தன்னை நோக்கி ஓடி வரும் சின்னவளை கண்டு ஆச்சர்யமாகி, அவளை நெருங்குவதற்குள், குழந்தை கேட்டை தாண்டி வெளியே ஓடியது.
அந்த சாலையில் சற்று வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று திடீரென குழந்தை வந்ததும் ப்ரேக் போட முடியாமல் இடிப்பது போல் வர,
குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அவள் எறிந்த பந்தை எடுக்க சென்று இருந்த வித்யா,
குழந்தை திடுமென கேட்டை நோக்கி ஓடுவதை கண்டு, "பவிக் குட்டி!!!.." என்று கத்திக் கொண்டு ஓடி வருவதற்குள் அந்த கார் குழந்தையை நெருங்கிட,
கண் முன் மீண்டும் அரங்கேற இருந்த அதே நிகழ்வில், முன்னர் அவளது வாழ்வில் நேர்ந்த, அந்த கொடூரம் நினைவில் வர, உணர்வுகள் உறைய அங்கேயே மயங்கி சரிந்தாள்.