• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 16

"என்ன சொல்றீங்க கார்த்திக்!!?.. உங்களுக்கு எப்படி அது தெரியும்?!!.." என்று படபடப்புடன் கேட்ட ஈஸ்வரிக்கு,
"நீங்க தானே அமுதா சொன்னீங்க!!.." என்றான் அவன்..

"நானா!!!?..நான் எப்ப உங்க கிட்ட வித்யாவை பற்றி பேசினேன்!!?.." புரியாமல் குழப்பமாக கேட்டாள் ஈஸ்வரி..

"இப்ப தான் அமுதா!!.. குழந்தைக்கு தாயானவங்க னு தான் சொன்னீங்க.. ஆனா கல்யாணம் ஆனவங்க னு சொல்லலையே!!.."

"அதோட இப்பவும் நான் சொன்னதை மறுத்து சொல்லாம உங்களுக்கு எப்படி தெரியும் னு தான் கேட்டீங்க!.." என்ற அவனது விளக்கத்தில் சற்று இயல்புக்கு வந்த அமுதா, அவனை முறைத்தாள்..

பின்பு," விளையாடாதீங்க கார்த்திக்!.. உங்களுக்கு எப்படி தெரியும்!?.. உண்மையை சொல்லுங்க?.. நீங்க யாரு?.. உங்களுக்கு எப்படி அவளை பற்றி தெரியும்?.." என்று கேள்விகளால் அடுக்க..

"என்னங்க நீங்க?!.. இந்த பாட்ஷா படத்துல ரஜினி சார் கிட்ட கேட்குற மாதிரி கேட்கறீங்க!.." என்று கூறி அவன் நகைக்க, அவள் அவனை தீவிரமாக பார்த்து இருந்தாள்..

"சரி கடுப்பாகாதீங்க!.. அன்னிக்கு அவங்க ஹஸ்பண்ட் பற்றி கேட்டப்ப அவங்க முழிச்சாங்க, நீங்க தான் வேகமாக பதில் சொன்னீங்க.."

"அதோட ஒரு கல்யாணமான பொண்ணுக்கு உண்டான எந்த அடையாளமும் அவங்க கிட்ட இல்லை.."

"அப்றம் நீங்க அவங்கள ஓவரா ப்ரொடெக்ட் பண்றது எல்லாம் வைச்சு யோசிச்சா, அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு யூகிச்சேன்!..அவ்ளோ தான் ஸிம்பிள்!.." என்று

அவன் சமாளிப்பாக கூறவும், அவனை நம்பாத பார்வை பார்த்த ஈஸ்வரி பெருமூச்சு விட்டுக் கொண்டு அமைதியாக,

"அவ வாழ்க்கைல ரொம்ப அடிபட்டு இப்ப தான் கொஞ்சம் இயல்புக்கு வந்து இருக்கா கார்த்திக்!.." என்று வேதனையுடன் கூறிய அமுதா,

"அவளோட மனசுல ஆண்கள் மீதான வெறுப்பு இன்னும் முழுசா மறையல!.. நானே சில நேரம் அவளோட பேச்சிலே அதை கவனிச்சு இருக்கேன்!..அப்படி இருக்கறப்ப..." என்று யோசனையுடன் இழுத்தவள்..

"எப்படி உங்கள ஏத்துக்குவா!?.. அதுவும் இந்த காதல் எல்லாம் அவ எப்படி எடுத்துக்குவா னு தெரியல!.."

"ஆண்கள் மீதான வெறுப்பை அவளோட மனசுல ஒரு வேலியா வைச்சு இருக்கா, அதை மீறி அவ மனசு ஏத்துக்கிட்ட ஒருத்தரும் இப்ப உயிரோட இல்ல!.." ஈஸ்வரி அந்த நபரை எண்ணி வேதனையுடன் கூற..

அவள் சொன்ன வார்த்தைகளில் அவனது மனமும் கசங்கியது.. அவள் சொன்னது ஒரு நபரை.. அவன் புரிந்துக் கொண்டது வேறொருவரை..

"உங்களால அவ மனசை ஜெயிக்க முடிஞ்சா உண்மையிலேயே மனசார சந்தோஷப்படற முதல் ஆள் நான்தான்!.."

"ஏன்னா அவளோட இந்த நிலைமைக்கு நான் தான் முதல் காரணம் னு தினமும் என் மனசாட்சி என்னை குற்ற உணர்ச்சில கொல்லுது!.." குற்ற உணர்வுடன் சொன்ன அவளது வார்த்தைகளில் அவளை புரியாமல் பார்த்தான் கார்த்திக்..

அவனது பார்வை உணர்ந்தாலும், வித்யாவின் தனிப்பட்ட விசயத்தை தனக்கு தெரியும் என்பதற்காக, அவளது அனுமதியின்றி அவனிடம் சொல்ல அவளுக்கு மனம் ஒப்பவில்லை..

தோழியின் வாழ்க்கையில் தன்னால் தான் அப்படி நடந்தது என்றும், தான் அவளை வற்புறுத்தாமல் இருந்தால்..

எல்லா வருடமும் போல அவளும் அந்த வருடம் சுற்றுலாவிற்கு வராமல் இருந்தால்..

தான் சிறிது நேரம் அங்கேயே இருந்து, அவளது தந்தை வந்தவுடன் அனுப்பியிருந்தால்..

என்று நிறைய 'இருந்தால்' கள் அவளது மனதை அறுக்க, தோழிக்கு அந்த கொடூரம் நேராமல் இருந்து இருக்கும் என்று தன்னையே வருத்திக் கொண்டாள் ஈஸ்வரி..

வித்யாவும் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ, தன்னால் ஆன மட்டும் அனைத்தையும் செய்ய தயாராக இருந்தாள்..

அதன் விளைவு தான் அவளை மனமார ஏற்றுக் கொள்ள ஒருவன் தயாராக இருக்கும் போது, அதை தடுக்காமல் இருக்க நினைத்தாள்

"ஓகே கார்த்திக்!.. நான் கிளம்பறேன்!.. வந்து ரொம்ப நேரமாச்சு!..அம்மா இப்பவே நேரமாச்சே காணலையே னு பதறிட்டு இருப்பாங்க!.." கிளம்ப எத்தனிக்க, திடுமென நினைவு வந்தவளாக..

"ஆமா!.. உங்களை பற்றி எதுவும் சொல்லவே இல்லயே!!?.." என்று அவனிடம் கேட்டாள்..

இவன் அவளை விரும்பலாம் ஆனால் அவனது குடும்பம் அவளை ஏற்க தயாராக இருப்பார்களா என அறியவே இதனை கேட்டாள்..

"என்னை பற்றி சொல்ல என்னங்க இருக்கு!..என்ன! ஒரு இருபத்தெட்டு முறை பிறந்தநாள் கொண்டாடினேன்!..அதை தவிர பெருசா எதுவும் சாதிக்கலைங்க " என்றான் அவன்..

கடுப்பாகி முறைத்த ஈஸ்வரி, "ஹலோ!..உங்க வயசை நான் கேக்கல!.. உங்க குடும்பம் பற்றி கேட்டேன்!.. என் ப்ரெண்டை வேற லவ் பண்றேன் னு சொல்றீங்க!.." என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே,

"உண்மையாவே அவளை லவ் பண்றீங்க தானே!!?.. அவளை மேரேஜ் பண்ற ஐடியா இருக்கா இல்ல.... சும்மா உல்லுல்லாகாட்டி க்கு சொன்னீங்களா!!?.." சந்தேகத்துடன் கேட்டாள்..

"என்னங்க அமுதா இது?!.. இப்படி எல்லாம் சந்தேகப்படாதீங்க!.. நான் உண்மையா தான்ங்க சொன்னேன்!.."பதறிய கார்த்திக் பதிலளித்தான்..

"பின்னே!.. நீங்க அவளை லவ் பண்றீங்க சரி!.. ஆனா உங்க குடும்பத்துல இருக்கறவங்க குழந்தையோட வர்றவளை ஏத்துக்க தயாரா இருக்கனுமே!!?.."

"அதனால தான் கேட்டேன்.. அதுக்கு இப்படி பதில் சொன்னா வேற எப்படி நினைக்கிறது!!?.." என்று அவளது கேள்விக்கான விளக்கம் கூறியதும்..

"ஸாரிங்க!.. என்னை பற்றி சொல்ல ஒன்னுமில்ல ங்க!.. என் வீட்டுல அம்மா மட்டும் தான்!.. வேற யாரும் இல்ல!.."

"ஊர்ல சொந்த வீடு இருக்கு!.. அது அப்பா வாழ்ந்த வீடு அதனால அங்க இருந்து வர மாட்டீன்றாங்க!..நான் இங்க வீடு எடுத்து தங்கி இருக்கேன்!.."

"இந்த டீடெய்லு போதுமா!?.. இல்ல இன்னும் வேற எதாவது வேணுமா?.."என்று அவன் கேட்கவும்,

"ஆனா அவங்க.. எப்படி!!?...." வித்யாவை ஏற்றுக் கொள்வார்கள் என எப்படி கேட்பது என்று தயங்கினாள்..

"அவங்க ஏத்துக்கறது இருக்கட்டும்ங்க..அவங்கெல்லாம் நான் சொன்னா உடனே சரி னுட்டு சொல்லிடுவாங்க.."

"ஆனா அதுக்கு முதல்ல உங்க டோலி என்னை ஏத்துக்கனும்!.. அது தான் பெரிய விசயமே!!.." என்று மலைப்புடன் கூறினான் கார்த்திக்..

அவனது பாவனையில் குறுஞ்சிரிப்புடன், "அது உங்க சாமர்த்தியம்!!..அதான் ஊர்வாய் உலக வாயடிக்குறீங்களே!!.. அவளையும் அப்படியே சரி பண்ணுங்க!.." என்றாள் ஈஸ்வரி..

"அதுசரி!!..நீங்களும் கொஞ்சம் எல்ப்பு பண்றது!.. உங்க டோலி கிட்ட என்னை பற்றி நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு னு சொல்ல வேண்டியது தானே!!.." கார்த்திக் அவளிடம் உதவி வேண்ட..

"ம்க்கும்!!.. எனக்கு வேற வேலை இல்ல பாருங்க!.. உங்களுக்கு வேணும்னா நீங்க தான் அதெல்லாம் பண்ணனும்!.." என்றாள் சிரிப்புடன்..

"சரி விடுங்க!.. நானே பார்த்துக்கறேன்!..ஆமா யாரோ லேட் ஆகிடுச்சு உடனே கிளம்பனும் னு சொன்னாங்களே!!?.." அவன் நினைவூட்டவும..

பதறிய ஈஸ்வரி, "ஆத்தாடி!!.. நான் கிளம்பறேன் பா!.. அப்றம்..நீ வா போ ன்னே பேசுங்க.. நான் உங்கள விட சின்னவ தான்!.." என்றிட, "அதெப்படிங்க திடீர்னு!!... "என்று அவன் தயங்கிட..

"உங்களுக்கு ஒரு தங்கை இருந்தா எப்படி பேசுவீங்களோ அப்படியே நினைச்சுக்குங்க!.." என்றாள் அவள் இயல்பாக, அவளது கூற்றில் மனம் நெகிழ்ந்த கார்த்திக், கண்கள் பனிக்க சரியென்றிட, அவள் வேகமாக ஓடினாள்..

****************

வீட்டிற்கு திரும்பிய ஈஸ்வரியை அவள் அம்மா கோமதி, பொரிந்து தள்ளினார்..

"வெளியே போனா நேரத்தோட திரும்ப தெரியாதாடி உனக்கு!.. மனுசனுக்கு மனசு எவ்ளோ பதறிடுச்சு தெரியுமா?!!.." என்று கத்திய தாயை அமைதியாக பார்த்தாள்..

வித்யாவின் விசயம் கேள்விப்பட்டதில் இருந்து தாயின் பயம் அதிகமாகி விட்டதை உணர்ந்து வெளியே சென்றால் எப்போது திரும்புவாள் என்பதை அறிவித்து விட்டே செல்வாள்..

அப்படியே வெளியே இருக்கும் போது வேறு வேலையால் தாமதம் ஆகின்றது என்றால் அதையும் அறிவிப்பாள்..

ஆனால் இன்று கார்த்திக்கை சந்தித்து பேசியதில் அம்மாவிற்கு அழைத்து சொல்ல மறந்த மடத்தனத்தை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டாள்..

"ஸாரி ம்மா!!.. அது ஒரு ப்ரெண்டு கூட பேசிட்டு இருந்தேனா.. அதுல கால் பண்ண மறந்துட்டேன்!.." என்று அவள் மன்னிப்பை வேண்ட..

"என்னமோ போ!!.. உன்னைய சீக்கிரமே ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்தா தான் எனக்கு நிம்மதி!.." என்று கோமதி அலுத்துக் கொண்டார்..

"என்னம்மா இது!!?.. ஏதோ புள்ள பிடிக்கறவன் கையில கொடுக்கற மாதிரியே சொல்றீங்க!!.." கூறி 'களுக்'கென்று சிரித்தாள் ஈஸ்வரி..

"உனக்கு எல்லாம் விளையாட்டு தான் அம்மு!.. உனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணனும் ங்கறத தான் அப்படி சொன்னேன்!.." அவர் விளக்கிட..

"உங்களை எல்லாம் டார்ச்சர் பண்ண வேண்டியது எவ்ளோஓஓஓ இருக்கு!!.. அதுக்குள்ள என்னை வீட்டை விட்டு அனுப்ப ப்ளான் பண்றீங்களா?!.." அவரை கட்டிக் கொண்டு அவள் கூற..

மகளது அணைப்பில் கொதிப்பு குறைந்த கோமதி, "அதெல்லாம் நீ பண்ணுன வரை போதும் தாயே!.."

"உனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ண, நேரம் கூடி வந்துடுச்சு!.. போய் உன்னோட ரூம்ல டேபிள் மேல இருக்கற கவரை பாரு!.." என்றார் பூடகமாக..

புரியாமல் முழித்த ஈஸ்வரி, "என்னம்மா சொல்றீங்க?!.. என்ன மறுபடியும் எதாவது அலையன்ஸ் போட்டோவா!!!?.."

"ஏன் ம்மா இப்படி பண்றீங்க!?..நான் இப்போ எனக்கு கல்யாணம் வேணாம் னு சொல்றேனே!!.." என்றாள் அலுப்புடன்..

"இப்ப பண்ணாம வயசாகி பல்லு போன காலத்துலேயா பண்ண போற?!..இல்ல ஔவையார் மாதிரி ஆகலாம் னு ப்ளான் பண்ணி இருக்கியா?!.." என்று விட்டு பின் ஆர்வமாக..

"ஹேய்!!.. அப்ப யாரையாவது லவ் பண்றியா டா அம்மு!!.." என்று அவர் வினவிட, அவளுக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது..

"யம்மா!!..தாயே கோ மாதா!!.. ஒரு பெத்த தாய் மாதிரி பேசுங்க!.. பொண்ணு லவ் பண்றாள் னு சொன்னா, "

"பத்ரகாளி ஆகுற அம்மாங்க இருக்கற உலகத்துல நீங்க மட்டும் எப்படித் தான் பாப்கார்ன் சாப்பிட்டுட்டு படம் பார்க்கற மாதிரி இருக்கீங்களோ!!?.." என சலித்தாள் ஈஸ்வரி.

"ஐய்யய்யே!! நீ என்ன இன்னும் செவன்டீஸ், எட்டீஸ் காலத்துல இருக்க டா!.. அப்டேட் ஆக வேண்டாமா அம்மு?" என்று அவளை வாரிய தாயை விசித்திரமாக பார்த்திருந்தாள்.

"நீ எப்படி லுக் விட்டாலும், உனக்கு மேரேஜ் பண்ண தான் போறோம். அந்த பையனுக்கும் உனக்கும் ஜாதகப் பொருத்தம் அமோகமா பொருந்தி இருக்கு."

"அதனால நீ என்ன பண்ற. அந்த கவர்ல இருக்கற போட்டோவை பார்த்து உன் கருத்துக்களை சொல்லு. ஓடு!.. ஓடு!.." என்று அவளை அறைக்கு தள்ளி விட்டார்.

ஈஸ்வரியின் மனதில் தோழியின் நிலைக்கு தான் முதல் காரணம் என்ற நினைவு அரித்துக் கொண்டு இருக்க, தான் மட்டும் மணம் புரிந்து குடும்பம், குழந்தை என வாழ மனம் ஒப்பவில்லை.

அதனால் இதுவரை ஏதேதோ காரணங்கள் கூறி தட்டி கழித்து வர, இன்று அன்னையின் அதிகப்படி ஆர்வம் அவளை சங்கடமாக உணர வைத்தது.

இருப்பினும், அவரது மன திருப்திக்காக தனது அறைக்கு சென்ற அவள், மேசை மீது இருந்த கவரை சில நொடிகள் வெறித்து விட்டு, அதை கையிலெடுத்து,

திரும்பியிருந்த புகைப்படத்தை, திருப்பிப் பார்க்க, அதில் நேர்த்தியாக உடையணிந்து, சிரிக்கும் கண்களுடன் இதழ்கள் வளைத்து, அழகாக நின்றிருந்தான் ஜிஷ்ணு.


அவனை கண்டதும் அவளது நினைவடுக்குகளில் அவனை எங்கோ பார்த்தது போல் தோன்ற யோசனையானாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top